அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Saturday, March 29, 2014

4 மூன்று முஸ்லிம் பெண்களின் சந்திப்பு...








தற்போது தமிகழத்தில் வாழும் 
குஜராத் முஸ்லிம் பெண்ணும்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெண்ணும்...
மமக பெண்ணும்...
சந்திக்கிறார்கள்...
மூவருமே நல்லவர்கள். நன்கு கற்றவர்கள். எதையும் மிக அருமையாக விவாதிப்பவர்கள். ஆனால், விவாத போக்கில்... கொஞ்சம் உணர்ச்சி வசத்தில் கோபப்பட்டு விடுவார்கள். அதை மட்டும் பொறுத்துக்கொள்ளுங்கள்.


அவர்களிடையே நடந்த விழிப்புணர்வூட்டும் ஓர் உரையாடல்...
இடம் : பிரபல ஒர்க்கிங் விமன்ஸ்' ஹாஸ்டல், சென்னை.


ததஜ பெண் : 
"குஜராத் சகோதரியே, உங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்"

குஜராத் முஸ்லிம் பெண் :
"வ அலைக்கும் ஸலாம் சகோதரி"

மமக பெண் :
"அஸ்ஸலாமு அலைக்கும்... எனதருமை குஜராத் சகோதரியே"

குஜராத் முஸ்லிம் பெண் :
"வ அலைக்கும் ஸலாம் சகோதரி"

"...................................................."

"....................................................."

"என்னுடைய  அம்மா அத்தா அண்ணன் அக்கா தம்பி என்று மொத்த குடும்பத்தையே மோடி ஆளுங்க நடத்திய கொலைகார அக்கிரம கலவரத்தில் இழந்தவள்... என்னையும் அந்த நாய்கள் கூட்டமாக பாலியல் வல்லுறவு நிகழ்த்தி குப்பையாக சாலை ஓரத்தில் நிர்வாணமாக வீசி எறிந்தார்கள்... எக்காரணம் முன்னிட்டும் அந்த மோடியும் அவனுடைய கட்சியும் இந்த தேர்தல்ல ஜெயிச்சி ஆட்சிக்கு வந்துட கூடாது... அதுக்காக... நீங்க யாருக்கு ஓட்டு போட போறீங்க..?"

"நான் அதிமுகவை ஆதரிக்கிறேன் சகோ... ஏன்னா, எங்க மாநில முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்... எங்களை எங்க மாநில முதல்வர் ஏமாத்த மாட்டார் என்ற நம்பிக்கையில்..."

"பாருங்க சகோ... சும்மா வெத்து நம்பிக்கையில் ஓட்டு போடறாங்க... அந்த அதிமுக வெற்றி பெற்றால் தேர்தலுக்கு பிறகு மோடியை ஆதரிக்கும்... ஜெயலலிதா தன் பதவி ஏற்பில் மோடியை விருந்தாளியா கூப்பிட்டது தெரியும்ல... அவங்கல்லாம் அப்பலேருந்தே ஒண்ணக்குள்ளே ஒண்ணு..."

"என்னங்க... சகோதரி... இது உண்மையா... இது உங்களுக்கு தெரியுமா..?"

"ஆமாம் சகோதரி... அவ சொல்றதுல்லாம் நல்லாவே தெரியும்...  எங்களுக்கு தெரியாததை எதுவும் அவளால் சொல்ல முடியாது... உங்க குடும்பத்த கொன்னு உங்களை சீரழிச்ச கொலைகார மோடிக்கு அதிமுக வெற்றி பெற்று ஆதரவு அளிக்க வாய்ப்பு இருக்குத்தான்... நான் மறுக்கவில்லை... ஆனா... எங்களுக்கு அதை பத்திலாம் கவலை இல்ல... எங்க மாநில முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு மட்டுந்தான் எங்களுக்கு முக்கியம்..."

"அதிர்ச்சியா இருக்கு சகோ. என்ன சகோதரி இப்படி குறுகிய சுயநல சிந்தனையோட சொல்றீங்க... சப்போஸ் ஜெயா வின் அந்த எம்பிகள் மூலம் மோடி பிரதமர் ஆனால்... எல்லா மாநில - இந்திய முஸ்லிம்களின்  உயிர், உடமை, தற்போது இருக்கும் இட ஒதுக்கீட்டுக்கும் கூட பிரச்சினை வருமே... அது பத்திலாம் நீங்க சிந்திக்கவே மாட்டிங்களா...? உங்க மாநிலம் என்ற சுயநல பார்வையில்தான் இருப்பீர்களா சகோ..?"

"ம்ம்ம்.... நல்லா நாக்கை புடுங்கற மாதிரி நறுக்குன்னு இப்டி கேளுங்க சகோ... அப்பவாச்சும் அவளுக்கு சூடு சொரணை வருதான்னு பார்ப்போம்..."

"மடத்தனமான கேள்வி..! நாக்கு நீளமான அவ  கிட்டே இந்த கேள்விய கேளுங்க... இல்லைன்னா நீங்க ஒரு 'போலி நடு நிலைவாதி'. ஒத்தை சீட்டை வாங்கிக்கிட்டு, அந்த நன்றிக்கடனுக்காக அவ திமுக கூட்டணிக்கு மீதி எல்லா தொகுதியிலும் ஓட்டு போட போறா... இவ ஓட்டை வாங்கிக்கிட்டு அந்த கருணாநிதி சப்போஸ் ஜெயிச்சாலும்...  வாய்ப்பு வந்தால் மோடி ஆட்சிக்கு வர கண்டிப்பா தன் எம்பிக்கள் மூலம் சப்போர்ட் பண்ணுவார்... 'மோடி எனது நண்பர்' என்று பேட்டி குடுத்தவர்... இப்ப அவளுக்கு அறைகூவல் விடுகிறேன்... எங்கே... இல்லைன்னு சொல்ல சொல்லுங்களேன் அவளை...பார்ப்போம்... அவளை மட்டும் நீங்க கேட்க மாட்டிங்களா..."

"சாந்தம்... சமாதானம்... பொறுமை... அவங்க என்ன செஞ்சாலும் அதை தப்புன்னு சொல்லிக்கிட்டே... அதே தப்பையே நீங்களும் செய்வீங்களா சகோ... இருங்க அவங்ககிட்டே கேட்கிறேன்... 

ஏனுங்க சகோ... நீங்களும் அப்படியா..?"

"என்னிடம் இது தேவையற்ற கேள்வி. 'மதச்சார்பற்ற கூட்டணி'ன்னு நம்பித்தான் திமுக கூட்டணியில் சேர்ந்து இருக்கோம்... சப்போஸ், மோடி ஆதரவு நிலை ஒன்று தேர்தலுக்கு பின் வந்தால்... நாங்க முஸ்லிம் லீக், விசி, புத... எல்லாம் கூட்டணியில் இருந்து விலகிடுவோம்... நாங்க மோடியை ஆதரிக்க மாட்டோம்ன்னு... அவளோட மர மண்டைக்குத்தான் தெரியாது... உங்களுக்குமா புரியாது..? எங்களுக்கு பார்லிமென்டில் சமுதாயத்தின் மானம் காக்கவும் முஸ்லிம்களின் சார்பாக ஓங்கி குரல் ஒலிக்கவும்.... ஒரு ஒத்தை சீட்டு கூட போதும்... அந்த சீடடுதான் நம் சமுதாயத்துக்கு முக்கியம்... அதை தந்த கட்சியை 35 லும் ஆதரிப்போம்... உங்க குடும்பத்த கொன்னு உங்களை சீரழிச்ச கொலைகார மோடியை தேர்தலுக்கு பிறகு ஆதரிப்பது - ஆதரிக்காமல் போவது பற்றிலாம் எனக்கு இப்ப கவலை இல்லை...."

"மீண்டும் அதிர்ச்சியா இருக்கு. என்ன சகோதரி இப்படி சொல்றீங்க... சமுதாய மானம் காப்பது - குரல் ஒலிப்பது எல்லாம் அப்புறம் பேசிக்குவோம்... அதுக்கு முந்தி... இப்ப இருக்கும் மானம் இருக்குமா... குரல் ஒலிக்க குரல்வளை இருக்குமா... என்பது பற்றி நான் பேசிக்கொண்டு இருக்கேன்... இந்திய முஸ்லிம்களின் மானத்தை காக்க, குரல்வளையை பாதுகாக்க இந்த தேர்தலில் நீங்க என்ன செய்ய போறீங்க... அந்த மீதி 35 தொகுதியில்..? அவற்றில் மோடிக்கு ஆதரவளிக்க வாய்ப்புள்ள வேட்பாளர்க்கு ஓட்டு போட்டுற போறீங்களா... சிந்திக்க மாட்டீர்களா..."

"ம்ம்ம்.... நல்லா நாக்கை புடுங்கற மாதிரி இப்டி நறுக்குன்னு கேளுங்க சகோ... நானாவது என் மாநில மக்களின் இட ஒதுக்கீட்டுக்காகத்தான் ஓட்டு போடறேன்...! ஆனா அவ.... நீ, சீட்டுக்காகத்தாண்டி கூட்டணி தாவினே...இப்போ என்னமோ பெரிய நல்லவளாட்டம் பேசுறே..."

"வாயை மூடுடி... நான் சமுதாய குரலுக்காக, மானம் காக்கத்தான் ஓட்டு போடறேன்னு முன்னாடியே சொல்லிட்டேன்லடி..."

"மீண்டும் சாந்தி... சமாதானம்... பொறுமை சகோஸ்.... 
உங்களுக்கு இட ஒதுக்கீடு வாங்கிய இயக்கம்ன்னு பெருமையா சொல்லிக்க மாநில இயக்க சுயநலம்... 
உங்களுக்கு உங்கள் கட்சிக்கு குரல் ஒண்ணு பார்லிமென்டில் வேணும்ன்னு மாநில கட்சி சுயநலம்... 
'தேர்தலுக்கு பின்னரும் மோடி ஆட்சி அமைக்க ஒருக்காலும் உதவமாட்டோம் என்று வெளிப்படையா தம் செயல்களால் மோடியை எதிர்க்கும் ஒரு கட்சியை நீங்க ஆதரிச்சி இருந்திருக்கணும் சகோஸ்... 
தப்பு பண்ணிட்டிங்க சகோஸ்..."

என்ன சொல்றே...? அப்ப என்னோட கேள்விக்கு பதில் சொல்லு... நீ சொல்றாப்பல அந்த மாதிரி கட்சியை மீதி 35 இல் ஆதரிச்சு ஓட்டு போட்டா... அவங்கலாம் ஜெயிப்பாங்களா..?

ஜனநாயகத்தில் இப்படித்தான் தப்பு பண்றீங்க... ரெண்டுமே உருப்படாத கட்சின்னு தெரிஞ்சே... தலைவிதின்னு சொல்லிக்கிட்டு மாத்தி மாத்தி ஓட்டு போடுறீங்க... இப்படி டெல்லி மாநில மக்கள் நினைச்சி இருந்தா மாற்றம் வந்திருக்குமா..? அவங்களை மாதிரி நீங்களும் நினைங்களேன்...எல்லாரும் நல்லது எதுன்னு தெளிவா தெரிஞ்சே... "ஜெயிக்கிற கட்சி"ன்னு மனசாட்சிக்கு எதிரா... மறுமையில் 'எதுக்கு நல்லதை ஆதரிக்கலை?' என்ற கேள்வி கணக்கு வருமேன்னு நினைக்காம... எதுக்கு கெட்டதை ஆதரிக்கிறீங்க..?

"இந்தாம்மா பொண்ணே... நாங்க ஒரு தப்பும் பண்ணலை... இட ஒதுக்கீட்டுக்காக மட்டுமே ஆதரிக்கிறோம்... ஆமா... சப்போஸ் நீ சொல்றாப்பல செஞ்சா... இட ஒதுக்கீடு கிடைக்குமா..?"

"'எங்க கட்சிக்கு ஓட்டு போட்டாத்தான் இட ஒதுக்கீடு தருவேன்'னு உங்க முதல்வர் சொன்னாரா..? நீங்களா சொந்த செலவுலே 'ஓட்டு போட்டா இட ஒதுக்கீடு' ன்னு ஒரு படுகுழிய வெட்டிக்கிட்டு... நீங்களே அதுக்குள்ளே விழுந்துட்டு... 'தூக்கு தூக்கு' ன்னு கத்தினால்..? இடஒதுக்கீடு உங்க மாநில முஸ்லிம்களின் கல்வி பொருளாதார பிரச்சினை. இந்த தேர்தல் இந்திய முஸ்லிம்களின் உயிர் உடமை பிரச்சினை. எது முக்கியம்ன்னு முதல்ல புரிஞ்சிக்கிங்க... நீங்க சட்டப்பேரவை தேர்தல் வரை காத்து இருந்து அதுக்கு ஒரு மாசம் முன்னாடி இந்த கோரிக்கையை வச்சுக்கூட போராடலாம்... ஆனால்... அதுக்கு நாம் இருக்கணுமே.."

"அதெல்லாம் உசுரோட இருப்போம்... தமிழ்நாடு குஜராத் இல்லே..."

"நீ ஓவரா மோடி மோடி ன்னு பயந்து போயிருக்கே... இந்தா தண்ணி குடி..."

ம்ஹூம்... ஆக மொத்தம் நீங்க ரெண்டு பெரும் எங்களை மறந்துட்டிங்க... அல்லது மறக்க விரும்புறீங்க... குஜராத்தில் நான் இழந்த பெண்மை, மானம், குடும்பம், சொந்தம், வீடு, இடம், கல்வி, வேலை, பொருளாதாரம்... எல்லாம் உங்களுக்குல்லாம் ஒரு பொருட்டே இல்லாம போச்சுல்லே...
இன்றிலிருந்து 'நீங்கள் இருவரும் சக மாநிலத்து முஸ்லிமுக்காக கவலைப்படும் இயக்கத்து பெண்கள் இல்லை' என்று நன்றாக புரிந்து கொண்டேன்... நீங்க ரெண்டு பேருமே என்னை பொறுத்த மட்டில் நாட்டின் சுயநலவாதிகளே... அரசியலில் பக்கா சந்தர்ப்பவாதிகளே...."

"ஏய்... மூடுடி வாயை...

ஓடுடி குஜராத்துக்கு...

பொழைக்க வந்தவளுக்கு வந்த இடத்திலே அரசியல் பேச்ச பாரு...

வந்துட்டா... பெருசா... இவளுக்கு.... ரொம்பத்தான் இடம் கொடுத்திட்டோமோ...உனக்காகத்தானே பார்லிமெண்டில் குரல் கொடுக்க ஒத்தை சீட்டுக்காக போராடுறோம்... அது உனக்கு புரியலையே..."

நடுநிலை வாத நயவஞ்சக நட்ட நடு சென்டர் நசுங்கிய சொம்புகளா... நீங்க எங்க இயக்கத்தை எது செஞ்சாலும் குறைதாண்டி சொல்வீங்க... 
உங்களைத்தாண்டி முதல்ல ஒழிக்கணும்...

மா ஸலாமா...!

4 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...