ஆண்களே... இந்த பதிவு உங்களுக்காகத்தான்..! ஆனால்,
பெண்களும் படித்தால் அது அவர்களின் நல்லதுக்குத்தான்..!
இளம் ஆண்களே... நீங்கள் பிறந்தது முதல் குப்புத்துக்கொள்வது, உட்கார்வது, ஊர்வது, நிற்பது, நடப்பது, ஓடுவது... வீடு, பள்ளி, பொதுத்தேர்வு, கல்லூரி, அர்ரியர்ஸ், நேர்முகத்தேர்வு, அலுவலகம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு, போராட்டம், வெளியுலகம், அரசியல், பந்த், கலவரம், விலைவாசி.... என்று இன்றுவரை... எண்ணற்ற பல தடைகளை தகர்த்து எரிந்து, அவற்றை எல்லாம் உடைத்து சாதனை படிக்கட்டுகளாக்கி, ஒவ்வொன்றிலும் வெற்றிக்கொடி கட்டியவாறே ஏறி வந்திருப்பீர்கள்..!
ப்ச்... இதெல்லாம் உங்கள் வாழ்வில் ஒண்ணுமே இல்லை சகோ..! ஜுஜூபி..!
அப்புறம்... வேறு எது ஜேசிபி..?
ம்ம்ம் சொல்றேன்... சொல்றேன்... இனி...திருமணம் என்ற ஒன்று ஆன பின்னால்... ஏகப்பட்ட சோதனைகள் இருந்தாலும்... அவற்றில் எல்லாம் நீங்கள் வெற்றி பெற்றுவிடுவீர்கள் என்றாலும்... அதில் மிக முக்கிய சோதனையாக... "மாமியார்-மருமகள் பனிப்போர்" என்ற ஒன்று ஆரம்பித்து ஜெகஜோராக நடக்குமே... அங்கேதான் உங்கள் நிஜ திறமை தெரியவரும்..!

சப்போஸ் இரண்டு பேரும் ஒரே வீட்டில் இருந்தால்... அப்படி ஒன்று நடக்காமல் எல்லாம் இருக்கவே இருக்காது. நடந்தே தீரும். அப்போதுதான்.... உங்களுக்கு ஆரம்பிக்கிறது... வாழ்வினில்... நான் சொல்ல வரும்... தி ரியல் சேல்லஞ்..!