நமது பள்ளி வரலாற்று பாடநூற்களில், இந்திய சுதந்திரபோராட்ட வரலாற்றில் முஸ்லிம்களின் பெரும்பங்கு வேண்டுமென்றே மறைக்கப்பட்டு உள்ளது என்று கருதுகிறேன்..! ஏதோ எதேச்சையாக நடந்த விபத்து போல தெரியவில்லை..! நிச்சயமாக இது திட்டமிட்ட சதியாகவே எனக்கு படுகிறது..! மனது கனத்தாலும்... மறைக்கப்பட்ட வரலாற்றை இன்று உலகெங்கும் அறியவைக்க எனக்கு நல்வாய்ப்பினை நல்கிய இறைவனுக்கே புகழனைத்தும்..! இதற்கு கருவியாக உதவும்.. இணையம்... கூகுள் பிளாக்கர்... சமூக வலைத்திரட்டிகள்... என அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவிக்கிறேன்..! அத்துடன்... இந்த பதிவு... சிலரின் கடும் உழைப்பு..! முக்கியமாக வரலாற்றினை தேடி எடுத்து எழுதிய பேராசிரியர் மு. அப்துல் சமது, தமிழ்த்துறை, ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி, உத்தமபாளையம்., அவர்களுக்கு மிக்க நன்றி. அன்னாரின் அளப்பறிய பங்குக்கு... அல்லாஹ் இவருக்கு பேரருள் புரிந்து நற்கூலியினை அளிக்க பிரார்த்திக்கிறேன்..! அடுத்து... கீற்றுவில் எழுதிய (திப்பு சுல்தான் பகுதி) சகோ.முத்துப்பேட்டையாருக்கும், சகோ.சுவனப்பிரியன் ('தாதா அப்துல்லாஹ் கம்பெனி' ஜவேரி சகோதரர்கள்) சகோ.அப்துல்லாஹ் (குஞ்சாலி மரைக்காயர் மற்றும் பல) சகோ.யூசுப் கான் (நேதாஜி லிஸ்ட்) அவர்களுக்கும் மிக்க நன்றி..! இவர்களுக்கு இறைவனின் பேரருளும் நற்கூலியும் கிட்டட்டுமாக..! ஆமீன்..!
கப்பல் ஓட்டிய வஉசி -க்கு அந்த கப்பலை ஒரு லட்ச ரூபாய் போட்டு வாங்கித்தந்தது யார்....?
நேதாஜிக்கு இந்திய தேசிய ராணுவம் அமைக்க ஆயுதம் வாங்க எல்லாம்... ஒரு கோடி ரூபாய் பட்ஜெட் ஸ்பான்சர் யார்....?
காந்திஜிக்கு தென் ஆப்ரிக்காவில் வேலை போட்டுக்கொடுத்து... அங்கே போக வர வைத்து அவரை பிரிட்டிஷ் எதிர்ப்புக்கு தூண்டியவர் யார்....?
காங்கிரசின் சுதேசி கதர் ஆடையை கண்டுபிடித்தது யார்...?
ஆங்கிலேயரை எதிர்த்த முதல் இந்தியர் யார்..?
இந்திய தேசிய கோடியை வடிவமைத்தவர் யார்..?
------------எல்லா கேள்விக்கும் விடை... 'முஸ்லிம்'..!
இதுபோல நாம் இதுவரை சிந்திக்காத... நாம் இதுவரை பள்ளி பாட எழுத்து காட்சி ஊடக வரலாறில் அறியாத ஆச்சர்யங்கள் இன்னும் எக்கச்சக்கம்..!
