நாம் இதுவரை கடந்து வந்த கடந்த மூன்று பதிவுகளில், நான் சொன்னதில் இருந்து...
ஒரே கிழமையில் ஒரே தேதியில் உலகம் முழுதும் பெருநாள் வராது... என்பதிலும், இரண்டு கிழமை இரண்டு தேதிகளில்தான் பெருநாள் வந்தே தீரும் என்பதிலும், படித்துணர்ந்த எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது..!
ஒரே கிழமையில் ஒரே தேதியில் உலகம் முழுதும் பெருநாள் வராது... என்பதிலும், இரண்டு கிழமை இரண்டு தேதிகளில்தான் பெருநாள் வந்தே தீரும் என்பதிலும், படித்துணர்ந்த எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது..!
ஆனால், உலகம் முழுக்க எல்லா நாட்டுக்கும் எல்லா ஊருக்கும் ஒரே கிழமையில் ஒரே தேதியில் பிறை தெரிய சாத்தியமே இல்லையா...? ஆம் இருக்கிறது..! விதிவிலக்கு என்று சொன்னேன் அல்லவா..? இது பற்றி பார்போம்..!
சென்ற பதிவில்... "ஒரே ஒரு விதிவிலக்கு தவிர்த்து இஸ்லாமிய பண்டிகை பெருநாள் என்றால்... அது இரண்டு கிழமைகளில் இரண்டு தேதிகளில் வந்தே தீரும்" என்று சொல்லி இருந்தேன். அதென்ன விதிவிலக்கு..?