அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Friday, July 27, 2012

6 பிறை : பார்ப்பது எப்படி..? (Advanced tips)

கண்ணால் காணப்பட்ட 27 மணி நேர பிறை ~Time 8:07 pm EDT Date April 9, 2005 Location: Batsto, NJ, USA
இதற்கு முந்திய பதிவில் பிறை குறித்த Basics பார்த்தோம்..!

அதாவது, பூமியில் பூர்ண அமாவசை எந்த நேரத்தில் ஏற்படுகிறது, அதே இடத்திற்கு பூர்ண பெளர்ணமி எந்த நேரத்தில் ஏற்படுகிறது, வளர் பிறை, பவுர்ணமி & தேய்பிறை ஆகியன எங்கே எப்போது எப்படி உதிக்கின்றன,  எங்கே எப்போது எப்படி மறைகின்றன, சூரிய கிரகணம், சந்திரநாள், சந்திரமாதம், சந்திர சுருள் சுற்றுவட்டப்பாதை, பிறையை உறுதியாக கணிக்க முடிந்த அறிவியலுக்கு பார்ப்பதற்கு உறுதி தர இயலாமை... குறித்தெல்லாம் பார்த்தோம். 

இனி கொஞ்சம் Advanced stage..! இதில் முதலில் பிறை பார்ப்போருக்கான குறைந்தபட்ச அத்தியாவசிய புரிதல்கள் பற்றி பார்த்து விட்டு "எல்லோப் பிறை வரைபடங்கள்" பற்றி பார்ப்போம். ஏனெனில், அந்த முன்னேற்பாட்டோடு சென்றால்தான்... ஒரு தலைப்பிறை, அம்மக்களின் கண்களுக்கு தெரியும் வாய்ப்புகள் பற்றியும், அதை எப்படி பார்க்க வேண்டும் என்றும் இந்த வானியல் ஆய்வாளர் பெர்னார்ட் டேவிட் எல்லோப் கூறுவதை பற்றியும் இன்னும் தெளிவாக விளங்க முடியும்..!


ஒரு மாதத்தின் தலைப்பிறை பார்ப்பவர்கள் அறிந்திருக்க / புரிந்திருக்க வேண்டிய விஷயங்கள் :-


 1. சந்திரமாதம் என்பது 29 நாட்களாகவும் இருக்கலாம், 30 நாட்களாகவும் இருக்கலாம்.
 2. வருடத்துக்கு இரு மாத பிறைகள் மட்டும் பார்ப்பவராக இல்லாது அனைத்து 12 மாத பிறைகளையும் பார்ப்பவராக இருத்தல்.
 3. அப்படி இல்லையேல், அட்லீஸ்ட்... அந்த மாதத்தின் பூர்ண  அமாவாசை எந்த நாட்டில் எந்த இடத்தில் ஏற்பட்டது என்பதை அறிந்திருத்தல்.
 4. மேற்படி அறிதலின்படி, பூரண அமாவாசையிலிருந்து தலைப்பிறை எவ்வளவு மணி நேர வயது ஆகியுள்ளது என்று தெரிந்திருத்தல்.
 5. பிறை பார்க்கும் நாள் - நேரம் என்பது அந்த மாதத்தின் 29-ம் நாள் பகல் முடிந்த 30-ம் நாளின் இரவின் ஆரம்பத்தில் என்பதை அறிந்திருத்தல் வேண்டும்.
 6. பிறக்கக்கூடிய பிறையை எதிர்நோக்க வேண்டிய இடம் சூரியன் மறைந்த மேற்கு அடிவானத்திற்கு தென் அல்லது வடப்பக்கம் நெருங்கி அமையும். இது கோடை/குளிர் காலத்துக்கு தக்க படி தேற்கோ வடக்கோ சற்று தொலைவு இடம் நகரும்..!  
 7. ஒரு கண்ணாடியின் ஊடே செங்குத்தாக 'பளிச்' என்று பார்ப்பதும், அதை சாய்வாக ஓரத்தில் இருந்து தெளிவற்ற நிலையில் கண்களை சுருக்கி கசக்கி ஊடுருவதும் ஒன்றல்ல..! அதேபோல... உச்சிவானம் தெளிவாக இருந்தாலும், அடிவானம் தூசிமண்டலம் செரிவுற்றதன் காரணமாக மேகம் இல்லா விட்டாலும் தெளிவற்றுத்தான் இருக்கும். 
 8. பிறையை சந்திரன் மறையும் நேரம் வரைதான் தேடிக்கொண்டிருக்க வேண்டும்..! அதற்கு மேலே தேடுவது அறிவுக்கு புறம்பானது.
 9. பூமியில் தனக்கு கிழக்கு புறத்து மக்களுக்கு தெரியாத பிறை தன்னிடமிருந்து தெரிய ஆரம்பிக்கலாம். தனக்கு தெரியாத பிறை, பூமியில் இனி தனக்கு மேற்கு புறத்தில் உள்ள மக்களுக்கு தெரியவரும்.
 10. கிழக்கு புறத்து மக்கள் நேரத்தில் அட்வான்ஸ்... ஏனெனில், பூமி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி உருள்கிறது..!
 11. எந்த இடத்தில்-ஊரில் பிறை பார்க்க போகிறோமோ அந்த ஊரின் சூரிய மறைவு நேரமும் சந்திர மறைவு நேரமும் விரல் நுனியில் இருக்க வேண்டும்..! உங்கள் உதவிக்கு... http://www.kwathabeng.co.za/travel/moon/moon-phase-calendar.html  ....இந்த தளம்...! இதில், உங்கள் ஊரிலிருந்து அமாவாசை  எவ்வளவு நேரத்திற்கு முன்னால் நடந்தது போன்ற தகவல்களும் கிடைக்கும்..!

பூரண அமாவாசைக்கு பிறகு 24 மணி நேரம் கழித்தும் மேகமூட்டம் காரணமாக பிறை தெரியாவிட்டால், சுற்றுப்புற பிறை பார்த்த தகவல் அறிய விரும்புவோர் கவனத்திற்கு :-


 1. தனக்கு மேகமூட்டமாக இருக்க, பிறை தென்படாவிட்டால்... அட்சரேகையில்... ஏற்கனவே தன்னுடைய (நேரத்தில்) சீனியர்கலான தனக்கு வெகு அருகே உள்ள கிழக்கு புறத்து மக்களிடம் தென்பட்ட பிறையைத்தான் எடுக்கலாமே அன்றி... தூர தேசத்தில் இனிமேல் பிறை பார்க்கக்கூடிய மேற்கு தேசத்து (நேரத்தில்)  ஜூனியர்களிடம் இனிமேல் தென்படப்போகும் பிறையை எடுக்கலாகாது..! 
 2. ஒரே தீர்க்கரேகையில் இருந்தால்... இரண்டு இடங்களுக்கும் ஒரே சூரிய அஸ்தமனம் ஒரே சூரிய உதயம் என்பதால், அவற்றுக்கு ஓரிடத்தில் பிறை தென்பட்டால் அதை எடுத்துக்கொள்ளலாம் என்பது சரியான புரிதல் அல்ல. காரணம், ஒரே தீர்க்கக்கோட்டில் இருந்தாலும், மார்ச்/செப்டம்பர் போன்ற மிட்-சீசன் காலங்களில் வருடத்தில் இரண்டு மூன்று மாதம் வேண்டுமானால்   ஒரே சூரிய உதயம்-மறைவு இருக்கலாம். ஆனால், மீதி ஒன்பது பத்து மாதங்கள் நேரங்களில் வேறுபாடும், மார்ச்/டிசம்பர் போன்ற சீசன் மாதங்களில்  ஒரே தீர்க்க ரேகை இடங்களில் பெருத்த வேறுபாடு இருக்கும்..!
 3. அப்படியே, மார்ச்/செம்ப்டம்பர் மாதங்களில் சூரிய உதய-மறைவு நேரங்களில் மாற்றம் இல்லாவிட்டாலும், பிறை தெரியும் கோடு எப்போதும் நேர்க்கோடு இல்லை. அது வளைவரை - Parabolic curve..! (இதை இப்பதிவின் கடைசியில் உள்ள 'எல்லோப் வரைபட சுட்டிகள்' காட்டும்) எனவே ஒரே தீர்க்கரேகை இடங்களில் ஒரே நேரத்தில் பிறை பிறக்காது..!
கீழே உள்ள படத்தில், முதல் படத்தில், சீசன் அல்லாத நார்மல் நாட்களில் சூரிய உதயம்/அஸ்தமம்... எவ்வளவு நேர்கோட்டில் உள்ளது பாருங்கள் சகோ..!  


ஜூன்-கோடை & டிசம்பர்-குளிர் சீசனுக்கு தக்க படி சூரிய உதயம்-மறைவு கோடுகள் தீர்க்க ரேகை கோடுகளிலிருந்து எந்த அளவுக்கு... எப்படி சரிவாக வேறுபடுகிறது என்று பாருங்கள் சகோஸ்..!

 (மஞ்சள் ஒளிபுள்ளி - சூரியன் / வெள்ளை வெறும் புள்ளி - சந்திரன்) நிலநடுக்கோட்டு நாட்டு மக்கள் என்றால், வருடம் பூராவும் சூரியன் மறைந்த கிட்டத்தட்ட அதே இடத்தில் சிறிது தெற்கிலோ அல்லது வடக்கிலோ பிறையை காணலாம்..! 

ஆனால், இந்த ரூல்ஸ் கோடையோ குளிரோ இல்லாத மார்ச்-செப்டம்பர் போன்ற இடைப்பட்ட மாதங்களுக்கு மட்டுமே கடகரேகை/மகரரேகை தாண்டிய நாடுகளுக்கு செல்லுபடி ஆகும். காரணம், கோடை/குளிர் மாதங்களில் துருவத்தை நெருங்கிய நாடுகளுக்கு சூரியன் சந்திரன் அஸ்தமிக்கும் இடங்கள் நிலநடுக்கொட்டிலிருந்து சற்று தூரமாகிவிடும்..! 

அடுத்து, இவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டிய மிக முக்கிய விஷயத்துக்கு வருவோம்..! 

பிறை : பார்ப்பது எப்படி..? (Advanced tips)

எல்லா அறிவியல் வானியல் நுட்பங்களையும் கருத்தில் கொண்டு... தன் நீண்ட கால ஆய்வுக்கு பின்னர், அதை 300 முறை சோதனைக்குட்படுத்திய பின்னர், தம் தலைக்கு மேலே நடுப்பகலில் பூரண கிரகண அமாவாசை கண்ட மக்களுக்கும், அடுத்தநாள் அந்திசாய்ந்த நேரத்தில், (6 + 24 மணி நேரம்) சுமார் 30 மணி நேரம் கழிந்த இந்த தலைப்பிறை அம்மக்களின் கண்களுக்கு தெரியும் வாய்ப்புகள் பற்றியும், அதை எப்படி பார்க்க வேண்டும் என்றும், பெர்னார்ட் டேவிட் எல்லோப் என்ற வானசாஸ்த்திர அறிஞர், கடந்த 1997 ஆம் ஆண்டு ஆய்வுகளை முடித்து பலரும் ஏற்றுக்கொள்ளத்தக்க முடிவுகளை மிகவும் அழகிய வரைபடங்கள் மூலம் தெளிவாக கூறினார்..!


"A Method for Predicting the First Sighting of the New Crescent Moon" by B D Yallop


இது ஒரு இந்திய அடிப்படையிலான வழிமுறை. இதன்படி தலைப்பிறையை தொடுவானில் காண ஆக சிறந்த நேரத்தை தருவிக்கிறது. இதில் பிறை தென்படும் இடங்களாக இவ்உலகம் மொத்தம் ஆறு பகுதிகளாக பிரிக்கப்படுகின்றன. 

Lunar visibility test parameter - 'q' that is based on the geocentric difference in altitude (i.e. uncorrected for atmospheric refraction and parallax) between the centre of the sun and the centre of the moon at the ‘best time’ for a given observer and the topocentric width of the lunar crescent. 

A  q > +0.216  easily visible to the unaided eye  
இலகுவாக அனைவர் கண்களுக்கும் எவ்வித உபகரணமுமின்றி பிறை தெரியும்
B  –0.014 < q < +0.216 visible under perfect atmospheric conditions  
தூய வளிமண்டலத்தில் மட்டுமே கண்களுக்கு பிறை தெரியும்
C  –0.160 < q < –0.014 may need optical aid to nd the thin crescent moon before it can be seen with the unaided eye  
முதலில் பிறையை தேட டெலஸ்கோப் தேவை. கண்டுபிடித்த பின்னர் கண்டுபிடித்தவர் மட்டும் கண்ணால் பிறையை காணலாம்.
D  –0.232 < q < –0.160 can only be seen with a telescope  
டெலஸ்கோப்பினால் மட்டுமே எவரும் பிறையை காண இயலும்
E  –0.293 < q < –0.232 below the normal limit for detection with a telescope
டெலஸ்கோப்பினால் கூட ஒருவரும் பிறையை காணவியலாது. 

F  q < –0.293  not visible below the Danjon limit
'டன்ஜோன் லிமிட்'டுக்கு கீழே உள்ளதால் பிறை தெரிய வாய்ப்பே இல்லை.
(7 degrees is the theoretical minimum "Danjon limit" agreed by Astronomers) 


அதென்ன... 'டன்ஜோன் லிமிட்'...?

1930-இல் பிரான்ஸ் நாட்டு வானவியல் ஆய்வறிஞர் அண்ட்ரே டன்ஜோன் என்ன சொன்னார் என்றால், பூமி-சூரியன் சந்திரன்-பூமி இவற்றின் மத்தியை இணைக்கும் கோடுகளின் கோணம் elongation 7° க்கு குறைவு என்றால்... பிறை தெரிய வாய்ப்பே இல்லை என்று. இது விஞ்ஞானிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வானவியல். 

இதை புரியும்படி சொல்வதானால், சூரியன்-சந்திரன்-பூமி ஆகிய அமாவாசை சூரிய கிரகண நேர்க்கொட்டு நேரத்தில் elongation  = 0°. சரிதானே சகோ..?

இதுவே... பூமி-சூரியன் & சந்திரன்-பூமி ஆகிய பெளர்ணமி சந்திர கிரகண நேர்க்கொட்டு நேரத்தில்  elongation = 180° சரிதானே சகோ..?

எனில், ஒரு சந்திர மாதத்தின் (360° யில்) பாதியான, பதினாலேமுக்கால் நாட்களுக்கு உரிய டன்ஜோன் கோணம் 180°, எனில், ஒரு நாளைக்கு...சுமாராக 12.2° என்று கால்குலேட்டரில் வருகிறது.

ஆக, அமாவாசை முடிந்து 24 மணி நேரம் ஆன பிறைக்கு 12.2°..! எனில், பிறை தெரிவதற்கான ஆக குறைந்தபட்ச elongation 'டன்ஜோன் லிமிட்' 7° க்கு பிறை வயது என்ன..? 


கணக்கு போட்டால்... கிட்டத்தட்ட 14 மணி நேரம் அதன் வயது என்று அதே கால்குலேட்டரில் வருகிறது...!!! 

அதாவது, அமாவாசைக்கு அடுத்த நிமிடத்திலிருந்து சுமார் 14 மணிநேரம் கழிந்தால்தான் அது தெரியுமா/தெரியாதா என்ற பஞ்சாயத்தே ஆரம்பம்...! :-))

.
ஓகே... நாம் மீண்டும் மிஸ்டர்.எல்லோப் சொல்வதை இன்னும் கொஞ்சம் கேட்போம். அவர் பிறை பார்க்க ஏதேதோ சூத்திரம் எல்லாம் போட்டு... (அதெல்லாம் ஸ்டெப் பை ஸ்டெப் ஆக புரிந்து கொள்ள எனக்கு மண்டை காயுது) கடைசியில் என்ன சொல்கிறார் என்றால்.... ஒரு சின்ன பின்னம் = 4/9

உதாரணமாக, சூரிய அஸ்தமம் இன்று 18:00 (மாலை ஆறு மணி) என்றால்... சந்திர அஸ்தமம் இன்று 19:30 (மாலை ஏழரை மணி) என்றால்... இந்த பின்ன சூத்திரத்திலிருந்து, பிறை பார்க்க ஆக சிறந்த நேரம் எது என்றால்... 18:40 (மாலை ஆறு நாப்பது) என்று கணிக்கலாம்..! 

அதாவது, இரண்டு அஸ்தம நேரங்களின் வித்தியாசத்தையும் ஒன்பது பங்குகளாக பகுத்துக்கொண்டு...(90 நிமிடங்கள்) அதில்... நான்கு பங்கு (40 நிமிடங்கள்) களை சூரியன் மறைவு நேரத்துடன் கூட்டினால்... அதுதான் பிறை பிரகாசமாகவும், அடிவானத்திலிருந்து அதிகபட்ச உயரத்திலும் தெரியும் ஆகச்சிறந்த நேரமாம்..! இந்த நேரத்தில் பிறையை பார்க்க முயற்சிக்க வேண்டுமாம்..!

இறைநாடினால்....அவசியம் பின்தொடருங்கள் சகோஸ்..! இவ்வருட ஷவ்வால் பிறை பார்த்தலுக்குரிய 'எல்லோப் வரைபடங்கள்'..! சுட்டிகளை "கிளிக்" செய்து 'பரபோலா' படங்களை பாருங்கள்..!

வரக்கூடிய பெருநாள் பிறைக்கான 'எல்லோப் வரைபடங்கள்'

இது, ஆகஸ்ட் - 17, 2012 அன்று மாலைக்காகனது.......!
http://www.staff.science.uu.nl/~gent0113/islam/1433/1433g_10a.pdf

இது, ஆகஸ்ட் - 18, 2012 அன்று மாலைக்காகனது.......!
http://www.staff.science.uu.nl/~gent0113/islam/1433/1433g_10b.pdf

இது, ஆகஸ்ட் - 19, 2012 அன்று மாலைக்காகனது.......!
http://www.staff.science.uu.nl/~gent0113/islam/1433/1433g_10c.pdf

பிறையை காண்பது முஸ்லிம்களுக்கு அழகிய நபிவழி. இந்த நபிவழியை எளிதாகவும், சரியாகவும், துல்லியமாகவும் அறிவியல் வழியில்  செய்து முடிக்க நாம் நம்மாலான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்..!

மேற்கண்ட புகைப்படங்களை, http://moonsighting.com/1433shw.html என்ற சுட்டியிலும் காணலாம்.

டிஸ்கி:-

இதை ஒரு தகவலுக்காக... நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக சொல்கிறேன்...! 


உலகிலேயே சாதனை அளவாக, மிக குறைந்த வயதில் டெலஸ்கோப் மூலம் காணப்பட்ட பிறை எது தெரியுமா சகோ..?

The record with an optical aid presently belongs to Mohsen Mirsaeed, who saw the moon 11 hours and 40 minutes after new moon in 2002.

இதற்கு அடுத்த டெலஸ்கோப் மூலம் காணப்பட்ட பிறை சாதனை.....

The youngest crescent moon sighted with a telescope by YAS was 17 hours old on 25 April 2009 (from 1000 ft above sea level, 1-hr after sunset), as posted on ICOP website (Jumadal-I 1430 AH).  

ஆனால்.... இவ்வருடம், ரமளானில் முதன்முதலில் "கண்ணால் கண்டதாக" (?!) சொல்லப்பட்ட இம்மாத ரமளான் பிறைக்கு வயது 11 மணி நேரம் மட்டுமே..! 'டன்ஜோன் லிமிட்'டுக்கு கீழே..! 

இந்த பிறையையும் ஏற்றுக்கொண்டு இந்தியாவில் நோன்பு நோற்க ஆரம்பித்தோரின் பிறைக்கு அவர்கள் இருப்பிட நேரத்துக்கு... இரண்டரை மணி நேரத்தை கழித்தால்.... எட்டரை மணி நேரம்தான் வருகிறது அவர்களின் தலைப்பிறைக்கு..!?!?!?!?!?!?!?!

இது, ஜூலை- 19, 2012 அன்று மாலைக்காகனது.......! 
http://moonsighting.com/1433rmd.html
அன்று உலகில் நடந்தவற்றை அப்பக்கத்தில் முழுவதுமாக படியுங்கள் சகோஸ்..! உண்மையை நீங்களே எவ்வித விளக்கமும் இன்றி உணர்வீர்கள்...! :-((

இறைநாடினால்... 'பிறை குழப்பத்திற்கு என்ன காரணம்' என்று அடுத்த பதிவில் அலசுவோம்..!

பிற்சேர்க்கை : இதன் தொடர்ச்சியை படிக்க...'கிளிக்' பண்ணுங்க சகோ.

6 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...