அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Wednesday, March 14, 2012

41 தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..? (Photo Gallery)

தொடர்ந்து பல நாட்கள் இரவிலும் பகலிலும் தூங்காமல் கண்விழித்து வேலை செய்பவர்களிடம், வேலையின் தரம் குறையும் என்பது நிரூபிக்கப் பட்டிருக்கிறது. அதுமிட்டுமின்றி, தூக்கமின்மையால்... சோர்வு, மறதி, பதட்டம், கவனமின்மை போன்ற பலவித இன்னல்களுக்கும் மனிதன் ஆளாகிறான் என்பதும் கண்கூடு..!  

தூக்கம் / உறக்கம் / நித்திரை / கண்ணயர்தல்... என எப்பெயரில் அது நடந்தாலும், அது ஒரு மனிதனின் மூளையின் செயல்பாடுகள் கூர்மையடையவும், மூளையின் வளர்ச்சி சீராக இருக்கவும், அம்மனிதனின் உடல்நலனுக்கும் அவசியத்தேவை..!

எனக்கெல்லாம் பகலில் தூங்காமல் சுத்திவிட்டு... அப்படியே... நைட் ஷிப்ட் பார்த்துவிட்டு... வந்து, உடனடியாக காலையில் தூங்காமல் செய்தாக வேண்டிய அத்தியாவசிய அவசிய வேலை ஏதேனும் வந்து... (மதிய சமையலுக்கு தேவையானதை வாங்கிவர மார்க்கெட், குழந்தைக்கு தடுப்பு ஊசி போட மருத்துவமனை, அரசு அலுவலகங்களில் நமது தேவைகள்... என வெளியே சுற்றுதல்... விருந்தினர் வந்துவிடல்...) அதில் நான் ஈடுபட்டால், அப்போது என் கண்களின் ஓரங்களில் வெள்ளை வெள்ளையாக ஏதோ மத்தாப்பு பொறி பொறியாக விழும்; காதுகளில்... 'ங்ஞொய்ய்ய்ய்ய்' என்ற ரீங்கார இரைச்சல் தொடர்ந்து கேட்கும்..! இதெல்லாம் தூங்கி எழுந்தால் காணாமல் போய்விடும்..! (இந்த அனுபவம் உங்களில் யாருக்கேனும் உண்டா..?)

தூக்கம் முக்கியந்தான்..! ஆனால்... அதுக்காக இப்படியெல்லாமா மனிதர்கள் தூங்குவார்கள்..? நீங்களே பார்த்துவிட்டு சொல்லுங்கள் சகோ..!

 
 வலையக்கூடாது... ஆனாலும் வலைஞ்சாச்சு..
சில்ட்ரன்ஸ் பார்க்கா, ஸ்லீபிங் பார்கிங்கா
டிக்கியில் ஒரு டிஸ்கி..!
இதுக்கு இனி, முள்கம்பி பயன்படுத்துவாங்க போல...
நிழல் நகர்ந்தால் வண்டியும் நகருமா..?
கொஞ்சம் பெரிய வண்டியா வாங்குறது..?
அவர் டூட்டியில் இருக்கார்..!
வேலிக்குள் 'பாதுகாப்பு படை' சூழ என்னவொருநிம்மதியான தூக்கம்..!
இந்த மரத்துக்கு பேரு தூங்குமூஞ்சி மரமா..?
குழந்தைங்க மேலே நாம் எதுவும் ஃபோர்ஸ் பண்ணினால், எல்லாம் அவங்க இஷடம்தான்.
நல்ல அணைப்பு சுகம் கத்து வச்சு இருக்கார்.
 
 சேரா...சகதியா... தூக்கம் வந்தால்... எல்லாம் பஞ்சுமெத்தை..!
மூட்டை பூச்சி கடிக்குமா..?
வீட்டில் தூங்கினால் ஃபிளைட்டு மிஸ் ஆகிரும்னு பயம் போல...
டிரைவருக்கு குழந்தை மனசு..!
புரண்டு படுத்தா... டமால்..!
அடப்பாவி மாக்கான்...
கொஞ்சம் லைனில் வெயிட் பண்ண சொல்லி இருப்பாங்க..! அதுக்குள்ளே...
இன்னிக்கு பந்த் ஆக இருக்குமோ..?
நல்ல டெக்னிக்..!
இனி... ஒரு நாற்காலிதாண்டி உன் ஆபீசுக்கு...!
இரும்புப்படுக்கை
(மோசஸ்) மூஸா நபி வரலாறு.... அப்புறம் கர்ணன் கதை... தளபதி சினிமா... இன்னும் இந்த புராண கால டெக்னிக் தொடர்கிறது போல...
ரப்பர் டியூப்பை சுற்றினால், அதில் ஒரு சொகுசு.
அட்டைப்பெட்டி... தெர்மோகோல்... ம்ம்ம்.. சர்தான்...
ஆராரோ பாடியதாரோ... தூங்கிபோனதாரோ...
ஓ..! டை-க்கு இப்படி ஒரு உபயோகம் உண்டா..!
இப்படி முட்டி போட்டுத்தான் தூங்கணுமா..?
சூப்பர் மார்க்கெட்டில் எக்ஸ்பைரி அயிட்டம் போல...
இந்த காரின் பம்பர் செஞ்சவன் பார்த்தால்... நொந்துருவான்..!
பிரிக் பெட் - செங்கல் மெத்தை
சீட்டில் சாய்மானம் உடைந்தால் இப்படி ஒரு வசதி.
சிக்னல் விழ தாமதம் ஆகிறது என்பதற்காக இப்படியா..?
என்னவொரு வித்தியாசமான போஸ்..!
உயர் அதிகாரி வந்து உருட்டி விடப்போறார்..!
 டாய்லட்டுக்கு பாடி ஸ்ப்ரே அடிச்சா... இப்படித்தான்...
 
நடுவே ஒரு கைப்பிடி வைக்கிறதே, யாரும் படுக்கக்கூடாதுன்னுதான்..! ஆனாலும்...
இப்படி சபைக்கு ஒருத்தர் மட்டும் தூங்கினால் அது நல்லாயிருக்கா..?
சீன பார்லிமெண்டை பார்த்து ஒட்டுமொத்தமா தூங்க கத்துக்குங்க...!

********************

ஒருவனுக்கு மரணம் வந்தால்... அவன் எங்கும் எந்த நிலையிலும் எப்படியும் விழுந்து இறந்து கிடப்பதை நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால்... எவரும், எங்கும், எந்த நிலையிலும், எப்படியும் தூங்க முடியுமா..? முடிகிறதே..! ஆக, தூக்கமும் (NREM Sleep stage 3-4) 'ஒருவகை சிறு மரணம்' போல்தான் என்கிறார்கள்..! சரிதான்..!


புஹாரி = 6325.  
அபூ தர் அல்கிஃபாரீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் படுக்கைக்குச் செல்லும்போது... அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா   (இறைவா! உன் பெயர் கூறியே இறக்கிறேன். உயிர் வாழவும் செய்கிறேன்)' என்று கூறுவார்கள். உறக்கத் திலிருந்து விழிக்கும்போது, அல்ஹம்து லில்லாஹில் லதீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந்நூஷூர் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவன் எங்களை இறக்கச்செய்து பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான். மேலும், அவனிடமே செல்ல வேண்டியுள்ளது.) என்று கூறுவார்கள்.

அல்குர்ஆன் = 39:42 
உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத்தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கிற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.  

41 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...