அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Thursday, July 28, 2011

36 தமுஸ்கிபீடியா

நான் முன்பு ஒருமுறை அதிராம்பட்டினத்திலிருந்து காரைக்குடி நோக்கி  ரயிலில் பிரயாணித்தேன். அப்போது, வீரசோழன் எனும் ஊருக்கு... அந்த ஊரின் மதரசாவில் உஸ்தாத் பணிக்கு சென்ற -- என்னுடன் பயணம் செய்த ஒரு மவுலவியிடம் இஸ்லாம் குறித்த கருத்துப்பரிமாற்றம் நிகழ்ந்தது. அவரிடம் இருந்து பல இஸ்லாமிய மார்க்க விஷயங்களை பயணத்தின் போது கற்றுக்கொண்ட நான், ஒரு மார்க்க சட்டத்தில் நான் ஒரு கேள்வி கேட்க அவர் அதற்கு பதில் கூறும் முன் என்னிடம் ஒரு கிளைக்கேள்வி ஒன்றை கேட்டார். 

அந்த கேள்வி யாதெனில்....

"நீங்க 'அத்தா கூட்டமா'... இல்லே... 'வாப்பா கூட்டமா'...?" என்ற கேள்விதான்..!


அதாவது, இதற்கு நான் அளிக்கப்போகும் பதிலை வைத்துத்தான், நான் கேட்ட அந்த கேள்விக்கான பதிலை தயாரித்து சொல்வார். 

"அத்தா கூட்டம்" என்றால் ஒரு பதிலையும்... "வாப்பா கூட்டம்" என்றால் வேறு ஒரு பதிலையும் சொல்ல காத்திருந்தார். ஆனால்... நானோ அவர் எதிர்பார்த்திருந்த இரண்டு பதில்களையும் சொல்லவில்லை..!

மாறாக... நான் சொன்ன பதில்...

"பாப்பு கூட்டம்..!"  (?!)

என்னுடையை இந்த பதிலை கேட்டவர் மீண்டும் மீண்டும் அதையே கேட்க, நான் அதையே திருப்பி திருப்பி சொல்ல... கடைசியாக என்னைப்பார்த்து  "நீங்க எந்தஊரு தம்பி" என்று கேட்டார்..!

"தஞ்சாவூர் பக்கம் பாபநாசம்" என்றேன்...!

"நீங்கள் உங்க வாப்பாவ... இல்லை... அத்தாவ... இல்லை... பெத்த தந்தையை எப்படி கூப்பிடுவீங்க..?" என்றார்..!

" 'பாப்பு' என்றுதான் கூப்பிடுவேன்" என்றேன்..!

"ஆ....! உங்க ஊரில் உள்ள மற்ற முஸ்லிம்கள் எல்லாம் அவரவர் தந்தையை எப்படி கூப்பிடுவார்கள்..?"

"பாப்பு என்றுதான்..."

கடைசியில்  கேட்கவந்ததை தெளிவாக கேட்டே விட்டார், "தம்பி நீங்க, ஹனஃபியா.. இல்லே... ஷாஃபியா" என்று..!

ஆக, இந்த பதிவில்... நான் சொல்லப்போவது... அதென்ன "பாப்பு கூட்டம்" என்பதை பற்றித்தான்..!


தஞ்சை மாவட்டத்தில்... குறிப்பாக... தஞ்சாவூர், வல்லம், அய்யம்பேட்டை, மாங்குடி, சக்கராப்பள்ளி, வழுத்தூர், பண்டாரவாடை, ராஜகிரி, பாபநாசம், கபிஸ்தலம், தாராசுரம், பட்டீஸ்வரம், ஆவூர், சுவாமிமலை, கும்பகோணம், ஆடுதுறை, திருபுவனம், வலங்கைமான், கோவிந்தகுடி, திருப்பந்துருத்தி, கண்டியூர், நடுக்கடை, முஹம்மது பந்தர்... மற்றும் சில தஞ்சை மாவட்ட ஊர்களில் எல்லாம் வாழுகின்ற மிகப்பெரும்பான்மையான  முஸ்லிம்கள் தங்கள் குடும்பத்தினரை தமிழ்நாட்டு புழக்கத்தில் இல்லாத புதிய சொற்களை கொண்டு கூப்பிடுவது முற்றிலும் வித்தியாசமாகத்தான் இருக்கும் மற்றவர்களுக்கு..!

ஏனெனில், அதிராம்பட்டினம், கீழக்கரை, காயல்பட்டிணம் மற்றும் இதற்கு இடையே உள்ள பல கிழக்கு கடற்கரை சாலை ஊர்களில் உள்ள "வாப்பா கூட்டங்களுக்கும்".... 

ஏனைய தமிழ்நாடு முழுதும் பரவியுள்ள "அத்தா கூட்டங்களுக்கும்" மற்றும் பொதுவாக தமிழ்க்கலாச்சார "அப்பா கூட்டங்களுக்கும்".... 

மேலும், தமிழ் எழுதப்படிக்கத்தெரிந்த... வீட்டில் மற்றும் உறவினருடன் தாய்மொழியாக உருது பேசும் "பாவா கூட்டங்களுக்கும்"... 

மற்றும்  'பின்நவீனதத்துவ முற்போக்கு' (?!) கலாச்சார "மம்மி-டாடி" குழுவினருக்கும்...

இப்படி ஒரு "பாப்பு கூட்டம்" என்று ஒரு கூட்டம் தமிழ்நாட்டில் அதுவும் தஞ்சை மாவட்டத்தின் ஒரு பகுதியில் இருப்பது தெரியாமல் கூட இருக்கலாம்..!

பாப்பு கூட்டத்தின் பிரதிநிதியாக... இதை  தமிழ்கூறும் நல்லுலகம் முழுமைக்கும் தெரியப்படுத்தும் 'தார்மீக பொறுப்பை' தன் தலையில் சுமந்தவனாக... இப்பதிவை எழுத நாடினேன்..!

சரி, இந்த "பாப்பு கூட்டம்" எப்படி தங்கள் வீட்டு ரத்த பந்தங்களை தமக்குள் அழைக்கிறார்கள்..? 

(bappu) பாப்பு -father

சின்ன பாப்பு & பெரிய பாப்பு -father's brothers

சின்ன சிச்சாணி & பெரிய சிச்சாணி -father's brother's wives

சின்ன (puppu) புப்பு & பெரிய புப்பு -father's sister

சின்ன மாமு & பெரிய மாமு -father's sister's husbands


(bhuvvaa) புவ்வா -mother

சின்ன/பெரிய ஹாலா -mother's sisters

சின்ன/பெரிய ச்சிச்சா -mother's sisters' husbands

சின்ன/பெரிய மாமா -mother's brothers

சின்ன/பெரிய மாமி -mother's brother's wives

(dhadha) தாதா -father's father

(dhadhi) தாதி -father's mother

அத்தா -mother's father

நன்னி -mother's mother

...இப்படித்தான்.... அழைத்துக்கொள்கி(றோம்)றார்கள்.

அண்ணன், அண்ணி, அக்கா, தங்கச்சி, மச்சான், தம்பி, மச்சி, மச்சினன், மச்சினி, கொழுந்தனார், கொழுந்தியாள், மாமனார், மாமியார், சகலைப்பாடி, ஒப்டியா... etc., இப்படி மற்ற முறைகள் தமிழகத்தில் நீங்கள் அறிந்த பொதுவானவைதான்..!

அப்பாடா..! ஒருவழியா பதிவை எழுதியாச்சு..! 

இனி....தஞ்சை முஸ்லிம்களின் அழைப்பு முறை சொற்களுக்கு விளக்கம் கூறும் இப்பதிவுக்கு என்ன பெயரை தலைப்பாக வைக்கலாம்..?
.
ஞ்சை முஸ்லிம்களின் உறவின்முறை அழைப்பு என்சைக்கிளோபீடியா...?

ம்ஹூம்... ர்ர்ர்ர்ரோம்ப நீளமாக இல்லை....? ஆக, கொஞ்சம் சுருக்கமா...

தமுஸ்கிபீடியா..!

எப்பூடி..?

36 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...