நான் முன்பு ஒருமுறை அதிராம்பட்டினத்திலிருந்து காரைக்குடி நோக்கி ரயிலில் பிரயாணித்தேன். அப்போது, வீரசோழன் எனும் ஊருக்கு... அந்த ஊரின் மதரசாவில் உஸ்தாத் பணிக்கு சென்ற -- என்னுடன் பயணம் செய்த ஒரு மவுலவியிடம் இஸ்லாம் குறித்த கருத்துப்பரிமாற்றம் நிகழ்ந்தது. அவரிடம் இருந்து பல இஸ்லாமிய மார்க்க விஷயங்களை பயணத்தின் போது கற்றுக்கொண்ட நான், ஒரு மார்க்க சட்டத்தில் நான் ஒரு கேள்வி கேட்க அவர் அதற்கு பதில் கூறும் முன் என்னிடம் ஒரு கிளைக்கேள்வி ஒன்றை கேட்டார்.
அந்த கேள்வி யாதெனில்....
"நீங்க 'அத்தா கூட்டமா'... இல்லே... 'வாப்பா கூட்டமா'...?" என்ற கேள்விதான்..!
அதாவது, இதற்கு நான் அளிக்கப்போகும் பதிலை வைத்துத்தான், நான் கேட்ட அந்த கேள்விக்கான பதிலை தயாரித்து சொல்வார்.
"அத்தா கூட்டம்" என்றால் ஒரு பதிலையும்... "வாப்பா கூட்டம்" என்றால் வேறு ஒரு பதிலையும் சொல்ல காத்திருந்தார். ஆனால்... நானோ அவர் எதிர்பார்த்திருந்த இரண்டு பதில்களையும் சொல்லவில்லை..!
மாறாக... நான் சொன்ன பதில்...
"பாப்பு கூட்டம்..!" (?!)
என்னுடையை இந்த பதிலை கேட்டவர் மீண்டும் மீண்டும் அதையே கேட்க, நான் அதையே திருப்பி திருப்பி சொல்ல... கடைசியாக என்னைப்பார்த்து "நீங்க எந்தஊரு தம்பி" என்று கேட்டார்..!
"தஞ்சாவூர் பக்கம் பாபநாசம்" என்றேன்...!
"நீங்கள் உங்க வாப்பாவ... இல்லை... அத்தாவ... இல்லை... பெத்த தந்தையை எப்படி கூப்பிடுவீங்க..?" என்றார்..!
" 'பாப்பு' என்றுதான் கூப்பிடுவேன்" என்றேன்..!
"ஆ....! உங்க ஊரில் உள்ள மற்ற முஸ்லிம்கள் எல்லாம் அவரவர் தந்தையை எப்படி கூப்பிடுவார்கள்..?"
கடைசியில் கேட்கவந்ததை தெளிவாக கேட்டே விட்டார், "தம்பி நீங்க, ஹனஃபியா.. இல்லே... ஷாஃபியா" என்று..!
ஆக, இந்த பதிவில்... நான் சொல்லப்போவது... அதென்ன "பாப்பு கூட்டம்" என்பதை பற்றித்தான்..!
தஞ்சை மாவட்டத்தில்... குறிப்பாக... தஞ்சாவூர், வல்லம், அய்யம்பேட்டை, மாங்குடி, சக்கராப்பள்ளி, வழுத்தூர், பண்டாரவாடை, ராஜகிரி, பாபநாசம், கபிஸ்தலம், தாராசுரம், பட்டீஸ்வரம், ஆவூர், சுவாமிமலை, கும்பகோணம், ஆடுதுறை, திருபுவனம், வலங்கைமான், கோவிந்தகுடி, திருப்பந்துருத்தி, கண்டியூர், நடுக்கடை, முஹம்மது பந்தர்... மற்றும் சில தஞ்சை மாவட்ட ஊர்களில் எல்லாம் வாழுகின்ற மிகப்பெரும்பான்மையான முஸ்லிம்கள் தங்கள் குடும்பத்தினரை தமிழ்நாட்டு புழக்கத்தில் இல்லாத புதிய சொற்களை கொண்டு கூப்பிடுவது முற்றிலும் வித்தியாசமாகத்தான் இருக்கும் மற்றவர்களுக்கு..!
ஏனெனில், அதிராம்பட்டினம், கீழக்கரை, காயல்பட்டிணம் மற்றும் இதற்கு இடையே உள்ள பல கிழக்கு கடற்கரை சாலை ஊர்களில் உள்ள "வாப்பா கூட்டங்களுக்கும்"....
ஏனைய தமிழ்நாடு முழுதும் பரவியுள்ள "அத்தா கூட்டங்களுக்கும்" மற்றும் பொதுவாக தமிழ்க்கலாச்சார "அப்பா கூட்டங்களுக்கும்"....
மேலும், தமிழ் எழுதப்படிக்கத்தெரிந்த... வீட்டில் மற்றும் உறவினருடன் தாய்மொழியாக உருது பேசும் "பாவா கூட்டங்களுக்கும்"...
மற்றும் 'பின்நவீனதத்துவ முற்போக்கு' (?!) கலாச்சார "மம்மி-டாடி" குழுவினருக்கும்...
இப்படி ஒரு "பாப்பு கூட்டம்" என்று ஒரு கூட்டம் தமிழ்நாட்டில் அதுவும் தஞ்சை மாவட்டத்தின் ஒரு பகுதியில் இருப்பது தெரியாமல் கூட இருக்கலாம்..!
பாப்பு கூட்டத்தின் பிரதிநிதியாக... இதை தமிழ்கூறும் நல்லுலகம் முழுமைக்கும் தெரியப்படுத்தும் 'தார்மீக பொறுப்பை' தன் தலையில் சுமந்தவனாக... இப்பதிவை எழுத நாடினேன்..!
சரி, இந்த "பாப்பு கூட்டம்" எப்படி தங்கள் வீட்டு ரத்த பந்தங்களை தமக்குள் அழைக்கிறார்கள்..?
(bappu) பாப்பு -father
சின்ன பாப்பு & பெரிய பாப்பு -father's brothers
சின்ன சிச்சாணி & பெரிய சிச்சாணி -father's brother's wives
சின்ன (puppu) புப்பு & பெரிய புப்பு -father's sister
சின்ன மாமு & பெரிய மாமு -father's sister's husbands
(bhuvvaa) புவ்வா -mother
சின்ன/பெரிய ஹாலா -mother's sisters
சின்ன/பெரிய ச்சிச்சா -mother's sisters' husbands
சின்ன (puppu) புப்பு & பெரிய புப்பு -father's sister
சின்ன மாமு & பெரிய மாமு -father's sister's husbands
(bhuvvaa) புவ்வா -mother
சின்ன/பெரிய ஹாலா -mother's sisters
சின்ன/பெரிய ச்சிச்சா -mother's sisters' husbands
சின்ன/பெரிய மாமா -mother's brothers
சின்ன/பெரிய மாமி -mother's brother's wives
சின்ன/பெரிய மாமி -mother's brother's wives
(dhadha) தாதா -father's father
(dhadhi) தாதி -father's mother
அத்தா -mother's father
நன்னி -mother's mother
(dhadhi) தாதி -father's mother
அத்தா -mother's father
நன்னி -mother's mother
...இப்படித்தான்.... அழைத்துக்கொள்கி(றோம்)றார்கள்.
அண்ணன், அண்ணி, அக்கா, தங்கச்சி, மச்சான், தம்பி, மச்சி, மச்சினன், மச்சினி, கொழுந்தனார், கொழுந்தியாள், மாமனார், மாமியார், சகலைப்பாடி, ஒப்டியா... etc., இப்படி மற்ற முறைகள் தமிழகத்தில் நீங்கள் அறிந்த பொதுவானவைதான்..!
அப்பாடா..! ஒருவழியா பதிவை எழுதியாச்சு..!
இனி....தஞ்சை முஸ்லிம்களின் அழைப்பு முறை சொற்களுக்கு விளக்கம் கூறும் இப்பதிவுக்கு என்ன பெயரை தலைப்பாக வைக்கலாம்..?
.
.
தஞ்சை முஸ்லிம்களின் உறவின்முறை அழைப்பு என்சைக்கிளோபீடியா...?
ம்ஹூம்... ர்ர்ர்ர்ரோம்ப நீளமாக இல்லை....? ஆக, கொஞ்சம் சுருக்கமா...
தமுஸ்கிபீடியா..!
எப்பூடி..?
36 ...பின்னூட்டங்கள்..:
புதிய செய்தி
அறியதந்தமைக்கு நன்றி!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நகைச்சுவை பதிவா சகோ???
ஏகத்துக்கும் காமெடில பின்னி எடுக்குறீங்க??? இல்ல நானா தப்பா புரிஞ்சுட்டு சிரிக்கிறேனா? :))
வீரசோழன் மவுலவி மேட்டர் அதோட முடிஞ்சதா?
எது மாதிரியும் இல்லாம புது மாதிரி இருக்கே......தினுசு தினுசா கூப்பிடுரீங்க இப்டி........
சகோ.முஹம்மத் ஆஷிக்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அட நீங்களும் நம்மகூட்டம்தானா பாப்பு!
@Karikal@ன் - கரிகாலன்
//புதிய செய்தி//---பார்த்தீர்களா..? எவ்வளவு புராதன செய்தி புதிய செய்தியாக இருக்கிறது..! அப்பாடா..! பதிவு தன் பிறவிப்பயனை அடைந்தது..!
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.கரிகாலன்.
@ஆமினாஅலைக்கும் ஸலாம் வரஹ்...
ஏற்கனவே...
ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் வந்ததுக்கே..
என் மீது ஒரு மண்டபம் போலிஸ் ஸ்டேஷனில் "யாரோ ஆமீனான்னு ஒருத்தர்" என் மேல ஒரு கொலைகேஸ் போட்டு...
ராம்நாடு ஜில்லா போலிஸ் என்னை இப்போ உலகம் முழுக்க தேடுதாம்..! :)
நானே கவலைல லைட்டா ஒரு பதிவு போட்டு தனியா சிரிச்சிக்கிட்டு இருக்க...
இங்கேயும் நீங்க வந்து, எனக்கு காமடி வரலைன்னு, இப்படி என்னை தொவச்சு எடுக்குறது உங்களுக்கே பாவமா தெரியலையா சகோ.ஆமினா..?
நான் அந்த "நகைச்சுவை" லேபிளை தூக்கிட்டேன்..!
போதுமா..!
அப்பாடா..!
விட்டுருங்க பிளீஸ்..!
பொழச்சு போறேனே..?
திருப்பந்துருத்தி. கண்டியூர் .முஹம்மது பந்தர் மூன்று ஊர்களையும் விட்டுவிட்டீர்களே நாங்களும் பாப்பு கூட்டம்தான்
@மஸ்தூக்கா
//திருப்பந்துருத்தி. கண்டியூர் .முஹம்மது பந்தர் மூன்று ஊர்களையும் விட்டுவிட்டீர்களே// ---சேர்த்துவிட்டேன் சகோ.மஸ்தூக்கா. வருகைக்கும் மேலும் 'பாப்பு கூட்டம்' ஊர்களை தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.சகோ..!
நீங்களும் பாப்பு கூட்டம்தானா..? நம்ம கூட்டம் பெரிசாகுதே..!
அஸ்ஸலாமு அலைக்கும்
புதிய செய்தி பெரும்பாலான சொற்கள் ஹிந்தி அல்லது உருது விலிருந்து பரிணாம் அடைந்தவைகளாக தெரிகிறது
'' அத்தா -mother's father
நன்னி -mother's mother''
இந்த இரு அழைப்பு முறையில்
எனக்கு ஒரு சந்தேகம்
நானி என்ற உருது சொல் மருகி நன்னி யானது போல் அதன் ஆண்பால் சொல் ஆனா நானா மருகி நன்னா வாக ஏன் இல்லை? அதற்க்கு பதிலாக சம்பந்தமே இல்லாமல் அத்தா எங்கோ லாஜிக் இடிக்குதே
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!
மிகவும் அவசியமான (????) பதிவு.
நான் அத்தா கூட்டத்திலும் உண்டு... பாப்பு கூட்டத்திலும் உண்டு...
//சின்ன/பெரிய ஹாலா -mother's sisters//
ஹாலாபு-னும் கூப்பிடுவாங்க..
@தேவைகளற்றவனின் அடிமைநான் முதன்முதலாக வெளியில்/பள்ளியில் மற்ற வீட்டுப்பையன்கள் உடன் பழக ஆரம்பித்தபோது...
அவர்கள் தன் பெற்றோரை வேறுவிதமாக அழைத்து கண்டபோது...
அவர்களின் முறையை...
//எது மாதிரியும் இல்லாம புது மாதிரி இருக்கே......//---இப்படித்தான்... நினைத்தேன் சகோ.
@மு.ஜபருல்லாஹ்வ அலைக்கும் ஸலாம் சகோ.ஜபருல்லாஹ்...
//அட நீங்களும் நம்மகூட்டம்தானா பாப்பு!//---திருபுவனத்திலுமா நம்ம 'ஆட்சி'...?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... 'தமுஸ்கிபீடியா' நல்லாவே.... இருக்கு சகோ :) எங்க மாமியார் வீட்டு சொந்தங்கள் ஆவூரில் இருக்கிறார்கள். அங்கு சென்றால்தான் இந்த 'பாப்பு', 'புவ்வா' எல்லாம் காதுல கேட்கும். ஒவ்வொரு முறையும் 'அப்படீன்னா யா..ரு..?' ன்னு மீண்டும் மீண்டும் நாங்க டவுட் கேட்பதிலேயே :) அவங்க முடிஞ்ச வரைக்கும் எங்க 'வாப்பா கூட்டத்து' பாஷையில் எங்களிடம் பேச ஆரம்பித்துவிடுவார்கள் :))) இது எப்பூடி? :))
முஸ்லிம்களுக்குள் இத்தனை 'கூட்டம்' ஏன்? எல்லாரும் ஒரே இஸ்லாமிய கலாச்சாரத்தின்படி ஒரே மாதிரி முறை சொல்லி அழைக்கலாமே? இதுபற்றி இஸ்லாம் சொல்லும் சட்டம் அல்லது அறிவுரை என்ன?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
ஹலோ வீரசோழன் எங்க அம்மா பிறந்த ஊர் அதனால தாய் மண் அங்கையே போயி என் சொந்தக்காரவுங்கள ஓட்டுறீங்களா? என்ன தகிரியம்...
எங்க அத்தா கூட்டத்திற்கு ஏற்பட்ட... அடுத்த முறை ஊருக்கு வரும்போது திருப்பாச்சியை தாண்டிதானே வருவீகே பாத்துகிறேன்....
@ஹைதர் அலி
வ அலைக்கும் ஸலாம் வரஹ்..
ஏனுங்க சகோ.ஹைதர் அலி இப்படி...?
ஏற்கனவே உங்க ராம்நாடு மாவட்ட ஆள் ஒருத்தர் ஸ்பெல்லிங் மிஸ்டேக்னால என்னை கொலைகேசில் மாட்டிவிட்டு இருக்கார்..! இப்போ நீங்கள் என்னடான்னா திருப்பாச்சி... வீச்சரிவாள்... வெட்டு... குத்து... கொலைன்னு வந்து நிக்கறீங்க..! உங்க ஜில்லா ஆளுங்க எல்லாரும் இப்படித்தான் இருப்பீங்களா..?
என்னமோ போங்க.. சகோ..! தஞ்சை மாவட்ட ஆட்கள் நாங்கள் எல்லாம் சூது வாது அறியாத சாது..! காய்கறி நறுக்குற கத்தியை கூட அடுப்பாங்கலைய விட்டு வெளிய எடுத்துட்டு வர மாட்டோமாக்கும்..!
சரி... அவர் மவுலவி ஆச்சே... நம்ம அறிவை வளர்த்துக்கொள்ள நல்ல சான்சுன்னு... ஒரு மஸாயில் விளக்கத்தில், முஸ்லிம் என்ன பண்ணனும்னு கேட்டா... பதில் சொல்லாம... 'வாப்பா கூட்டமா, அத்தா கூட்டமா'ன்னு கேட்டா...நான் என்னங்க பண்ணுவேன்..?
ஒங்க 'தகிரியத்தை' முதல்ல அங்க போயி காட்டுங்கத்தா ..! அப்புறம் வாங்க என்கிட்டே..!
@நீதிமான்...
//முஸ்லிம்களுக்குள் இத்தனை 'கூட்டம்' ஏன்? எல்லாரும் ஒரே இஸ்லாமிய கலாச்சாரத்தின்படி ஒரே மாதிரி முறை சொல்லி அழைக்கலாமே? இதுபற்றி இஸ்லாம் சொல்லும் சட்டம் அல்லது அறிவுரை என்ன?//
சகோ.நீதிமான்...
எந்த ஒரு விஷயம் ஆனாலும்... அது தனி ஒரு மனிதனுக்கோ அல்லது பிறருக்கோ அல்லது சமுதாயத்துக்கோ தீங்கு விளைவிக்குமானால் நிச்சயமாக இஸ்லாம் அதை தடுத்துவிடும் என்பது தாங்கள் தெரிந்ததே..!
ஆனால், இங்கே... ஒரு மனிதன் தன் தந்தையை தன் மொழியில் தன் கலாச்சார அடிப்படையில் அப்பா/அத்தா/வாப்பா/பாப்பு/டாடி/father என எப்படி கூப்பிட்டுக்கொண்டாலும்... அதனால், அவனுக்கோ அவன் தந்தைக்கோ அவனைச்சார்ந்த மக்களுக்கோ அல்லது பிற கலாச்சார மக்களுக்கோ ஏதேனும் தீமை நேருமா..? நேராது அல்லவா..?
பிறகு எதற்காக இஸ்லாம் இந்த விஷயத்தில் தன் மூக்கை நுழைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்..?
ஆனால்... இவ்வளவு எழுதிவிட்டு... 'பாப்பு கூட்டம்தான் மற்ற கூட்டத்தைவிட சற்று உயர்ந்தது' என்று நான் சொன்னால் போதும்... இஸ்லாம் ஓடிவந்து என் தலையில் 'நங்' என்று கொட்டி, "நீ சொல்றது தப்புடா... எப்படி கூப்டாலும் அனைவரும் சமம்டா" என்று சொல்லி நீதியை நிலைநாட்டும்.
சகோதரர் முஹம்மது ஆஷிக்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
பாண்டிச்சேரி பக்கம், தந்தையை அத்தா என்போம், பெரியப்பாக்களை பெரியத்தா என்போம்..பெரியம்மாக்களை ஆச்சிமா என்போம். அக்காக்களை பூவா என்போம், அண்ணன்/தம்பி மனைவிகளை மச்சி என்போம். தாத்தாக்களை அப்பா என்போம்....
அப்புறம், கும்பகோணம் பக்கம் போனா, அங்குள்ள பெரிய தந்தைகளை பாப்பு என்று கூப்பிடுவோம்...
அப்படியென்றால் நாங்கள் எந்த அணி?????????
முடிஞ்சா இதுக்கு பதில் சொல்லி பாருங்க...:) :)
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
@Aashiq Ahamedவ அலைக்கும் ஸலாம் வரஹ்..
//பாண்டிச்சேரி பக்கம், தந்தையை அத்தா என்போம்//
ஆஹா... இது போதுமே..!
நீங்க "அத்தா கூட்டம்"..!
சரி.. சரி.. "அத்தா அணி"...!!!!!!!!!!!!!
//முடிஞ்சா இதுக்கு பதில் சொல்லி பாருங்க...:) :)//
---என்னாச்சு சகோ.ஆஷிக் அஹமத்..?
சும்ம்மம்மா... ப்ரீகேஜி கேள்வியெல்லாம் கேட்டுக்கிட்டு....!?!?!?!?
:) :) :)
@அஸ்மாஅலைக்கும் ஸலாம் வர்ஹ்...
//ஒவ்வொரு முறையும் 'அப்படீன்னா யா..ரு..?' ன்னு மீண்டும் மீண்டும் நாங்க டவுட் கேட்பதிலேயே :) அவங்க முடிஞ்ச வரைக்கும் எங்க 'வாப்பா கூட்டத்து' பாஷையில் எங்களிடம் பேச ஆரம்பித்துவிடுவார்கள் :))) இது எப்பூடி? :)) //
---சூதுவாதறியா எம்மக்களுவோ கிட்டே எம்ம்மாம்பெரிய கள்ளாட்டாம் ஆடீக்கிறீக அஸ்மா ராத்தா..!
@Abdul Basith
அலைக்கும் ஸலாம் வரஹ்...
//மிகவும் அவசியமான (????) பதிவு.//--ஆமாம்!!!!
ரொம்ப நாளாய் எழுத எண்ணிய பதிவு, சகோ.அப்துல் பாஸித்.
//நான் அத்தா கூட்டத்திலும் உண்டு... பாப்பு கூட்டத்திலும் உண்டு...//--என் குழந்தைகள் மாதிரி...!
//ஹாலாபு-னும் கூப்பிடுவாங்க..//--கரெக்ட்..!
இரண்டு சின்ன ஹாலாக்கள் இருந்தால், அதில் "பெரியசின்ன ஹாலாவை"...
'ஹாலாபுவ்வா' என்றழைப்பது வழக்கம்தான்.
@bat அலைக்கும் ஸலாம் வரஹ்...
//புதிய செய்தி பெரும்பாலான சொற்கள் ஹிந்தி அல்லது உருது விலிருந்து பரிணாம் அடைந்தவைகளாக தெரிகிறது//
---மராத்தியிலிருந்து இருக்கலாம் என நான் நினைக்கிறேன்.
ஏனெனில் தஞ்சையை ஆண்ட சரபோஜி ராஜா பரம்பரை மராத்தியர்.
அவர்களில் ஒருவர் நாகூரில் அடக்கம் செய்யப்பட்ட (தற்போது தர்ஹா) அப்துல் காதர் அவர்களின் பிரச்சாரத்தால் முஸ்லிம் ஆகினார் என்பது வரலாறு.
ஒருவேளை இந்த மராத்தி-முஸ்லிம் அரசர் மூலமாக அவரால் ஆட்சி செய்யப்பட்ட இடங்களில் இந்த பாப்பு மற்றும் புவ்வா ஊடுருவி இருக்கலாம் என்று நான் யூகிக்கிறேன். காரணம், என்னுடைய பள்ளி கால ஒரு மராத்தி ஹிந்து நண்பர் தன் பெற்றோரை பாப்பு புவ்வா என்றுதான் அழைப்பார்.
//நானி-அத்தா எங்கோ லாஜிக் இடிக்குதே//---வாவ்...! கரெக்ட்.. கரெக்ட்.. மிகச்சரியாக சொன்னீர்கள் சகோ.bat..!
'நன்னா' என்ற சொல் என் சிறு வயதிலேயே அவ்வளவாய் புழக்கத்தில் இல்லை. பிற்பாடு முற்றிலுமாய் வழக்கொழிந்து விட்டது.
ஆனால், நான் விபரம் அறிய நானே வழக்கொழித்த ஒன்று 'நன்னி'..!
எனக்கு 'நன்னி' என்றுதான் சொல்லிக்கொடுத்தனர். ஆனால், நான்தான் என் நன்னியை 'அம்மா' என்று கூப்பிட்டேன்.
காரணம் "அத்தா"வுக்கு "நன்னி" என்பது 'லாஜிக் இடிக்கிறதே' என்று என் அந்தக்கால சிறு அறிவே சொன்னதால்..!
ஹி.. ஹி...
பின்னர், மூத்த பேரனான என்னை பின்பற்றி என் இளைய கசின்கள் அனைவருமே நன்னியை 'அம்மா' என்றனர்..!
ஆனால், இன்னும் பல வீடுகளில் "நன்னி" வழங்கப்படுகிறது. இன்னும் முற்றாக வழக்கொழியவில்லை.
இனி இப்படி சொல்லலாம்...
'நன்னா-நன்னி' old fashion
'அம்மா-அத்தா' new fashion
எப்பூடி..???
வரலாற்று சிறப்புமிக்க இந்த 'தமுஸ்கிபீடியா' ஆய்வில் என்னுடன் பங்குகொண்டமைக்கும் பல அரிய கருத்துக்களை மிகவும் சீரியஸாக பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி சகோ.பத்துஹூர் ரப்பானி.
அஸ்ஸலாமு அலைக்கும்!
நானும் பாப்பு புவ்வா என்றுதான் கூப்பிடுகிறேன். சிறந்த ஆராய்ச்சி! உருது பார்ஸியிலிருந்து மருவி வந்திருக்கலாம் இந்த சொற்கள் என்பது என் கணிப்பு.
அப்பா, அம்மா என்று தூய தமிழில் அழைத்தாலும் இஸ்லாமிய பார்வையில் தவறில்லை.
அஸ்ஸலாமு அழைக்கும் சகோ..
ம்ம்..வித்யாசமான,யாரும் கைவைக்காத பதிவு..
என் நண்பர் ஒருவர் மூலமா தான் முதன் முதலா..இந்த பாப்பு வழக்க மக்களை தெரியும்..அவர் எங்க அத்தாவையும் பாப்புன்னு தா கூப்பிடுவார்...
பை தி வே,மீ அத்தா கூட்டம்ஸ் ....
இன்னும் சில உருது பேசுபவர்கள்...
பா(b) அப்டீன்னும் கூப்டுறாங்க,,எனக்கு இது ரெம்ப புதுசு...
இன்னும் என்னநேன்னல்லா இருக்கோ...
அன்புடன்
ரஜின்
அஸ்ஸலாமு அலைக்கும்,
பின்பு வரும் சந்ததிகள் இந்த 'தமுஸ்கிபீடியா' வை வரலாற்று பாட நூலில் படிக்க நேரிடலாம் ( இன்ஷாஅல்லா) அப்போது இதன் தந்தையாக நீங்கள் அறியப்படலாம் ஆகையினால் தான் மிகவும் சீரியஸாக பகிர்ந்து கொண்டேன் ( ஹா ஹா ஹா ) இது எப்படி இருக்கு ...............
//ஏற்கனவே உங்க ராம்நாடு மாவட்ட ஆள் ஒருத்தர் ஸ்பெல்லிங் மிஸ்டேக்னால என்னை கொலைகேசில் மாட்டிவிட்டு இருக்கார்..!//
என்ன ஆச்சு சகோ? யார் அந்த புண்ணியவான்/புண்ணியவதி :) அவங்களை நான் ரொம்ப விஷாரிச்சதா சொல்லிடுங்க....
//காய்கறி நறுக்குற கத்தியை கூட அடுப்பாங்கலைய விட்டு வெளிய எடுத்துட்டு வர மாட்டோமாக்கும்..!//
நாங்க மட்டும் ஹால்ல கடிகாரத்துக்கு பதிலா மாட்டியா வச்சுருக்கோம்? அல்லது வீட்டுக்கு வர விருந்தாளிகளுக்கு கிப்டா கொடுக்குறோமா? அது சரி அடுப்பாங்கலை அப்படிங்குறது அடுப்பாங்கரைய தானே சொன்னேள்? :)
//ஒங்க 'தகிரியத்தை' முதல்ல அங்க போயி காட்டுங்கத்தா ..! அப்புறம் வாங்க என்கிட்டே..! //
வீரசோழன் ட்ரஸ்ட் போர்ட்ல இருந்து உங்களுக்கு கூடிய சீக்கிரம் கடுதாசி வருமாக்கும் :)
இப்ப பஞ்சாயத்துக்கு வரேன்....
என்ன பிரச்சனை உங்களுக்கு அந்த ஆமினாவுக்கும்? அந்த அப்பாவி ஆமினா என்ன பண்ணுச்சு உங்கள? இதுக்கு நீங்க விளக்கம் அளிக்காவிட்டால் ஆமினாவின் தலைமையில் உங்கள் ப்ளாக்கின் முன் காலவறையற்ற உண்ணாவிரதம் இருக்க போறதா தீர்மானம் போட்டுருக்காங்களாம்..... :)) அப்பறம் ஏன் சகோ நீயாவது எனக்கு சப்போர்ட் பண்ண மாட்டீயான்னு என்கிட்ட வரக்கூடாது சொல்லிபுட்டேன் :))
(இந்த பின்னூட்டத்தை வெளியிட வேண்டாம்... இப்படி எழுதி போடுறது தான் பதிவுலகுல பேஷன்... அப்படியும் நீங்க இந்த கமெண்ட பப்ளீஸ் பன்ணா தான் உங்கள பதிவர்ன்னு ஒத்துக்குவாங்க..... இப்ப சொல்லுங்க இத பப்ளீஸ் பண்ணுவீங்களா மாட்டீங்களா? :))
அஸ்ஸலாமு அழைக்கும்
தமுஸ்கிபீடியா பல தகவல்களை சுவாரஸ்யமான முறையில் அந்தந்த ஊர் வழமையில் அழைக்கபடுவதை சுட்டி காட்டி உள்ளீர்கள்.எங்க ஊரு இளையான்குடி இன்னும்
அம்மா அத்தா என்று பெற்றோர்களையும்
தாத்தா பாட்டியை நன்னா நண்ணி
தந்தை வழி சகோதரியை குப்பி /
மாமன் மனைவியை மாமி என்று கூப்பிடுவது வழமை ஆனால் குப்பியை மாமி என்று சொல்லுவது அதிகரித்து வருகிறது இதனால் அவ்வபோது குழப்பமும் எட்டி பார்பதுண்டு
தாய் வழி சகோதரியை சின்னம்மா /பெரியம்மா
தந்தையுடன் பிறந்தவரை பெரிய அத்தா/சச்சா
நன்னா நன்னி உபயோகத்தில் உண்டு.என் நண்பி ஒருவரும் பாப்பு கூட்டம் தான். ஆக மொத்தத்தில் எல்லோரும் ஒன்னுக்குள்ள ஒன்னு தான் இதை வெளிபடுதவே இந்த பதிவு மிக அருமை சகோதரரே மாஷா அல்லா உங்கள் ஹிக்மாவை அல்லாஹ் இன்னும் விரிவாக்கு வானாக எதாவது உறவு முறைய ஒரே போல கூபிடுறோம்.எங்க ஊர்ல இருந்தும் நெறைய பேர் உங்க ஊர் பக்கம் இருக்குறாங்க ஆனால் வம்ச பெயர சொன்னால் தான் புரியுமுங்கோ.உங்கள் பதிவுகள் அனைத்தையும் படித்துள்ளேன் குறிப்பாக இது எப்படி தேனீக்கள் ஆகய பதிவுகள் என்னை கவர்தவை இவைகளை என் குடும்பத்தினரோடு சுவாரஸ்யமாக சொல்லுவது வழக்கம்.
வஸ்ஸலாம்
அத்தா என்னும் வார்த்தை துர்க்கி மொழியில் தந்தை என்று பொருள் ம.ர.ம. அப்துர்ரஹீம் அவர்களின் இஸ்லாமிய கலை களஞ்சியத்தில் படித்த ஓர்மை.அப்போ அத்தா கூட்டம் துர்க்கி நாட்டை பூர்விகம கொண்டு இருப்பர்களோ? சின்ன சந்தேகம் ஹி ஹி என்ன சொல்லுவது சகோ?!
http://translation.babylon.com/turkish/to-english/
ata(அத்தா)n. ancestor, father, elder, forbear, Ataturk, forebear, forefather, forerunner, predecessor, progenitor, sire
இத்தனை அர்த்தங்கள் சகோ மேலும் பல அர்த்தங்கள் இருந்தன அனால் அத்தா என்னும் சொல்லுக்கு பொருந்தும் அர்த்தத்தை மட்டும் இங்கே தந்துள்ளேன் நீங்கள் இதனை மொழி பெயர்த்து அழகிய தமிழில் தரவும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
வஸ்ஸலாம்.
ASSALAMU ALAIKKUM BROTHER
கலக்கல் பதிவு.
அடெங்கப்பா..இவ்வளவு விசயங்கள் இருக்கிறதா!!!
பாப்புக்கு ஒரு ஆப்பும்.
சிச்சாணிக்கு ஒரு அச்சாணியும்.
புப்புக்கு கொஞ்சம் உப்புவும்.
புவ்வாவுக்கு ஒரு வவ்வாவும்.
ஹாலாவுக்கு ஒரு கோலாவும்.
சிச்சாவுக்கு ஒரு பெரிய அச்சாவும்.
நன்னி..இதை எண்ணி நான் வருந்துகிறேன்.
என்ன கொடுமை இது வாருங்கள் எங்கள் ஏரியாவுக்கு தூய தமிழை போதிக்கிறோம்.
@சுவனப்பிரியன் அலைக்கும் ஸலாம் வரஹ்... //அப்பா, அம்மா என்று தூய தமிழில் அழைத்தாலும் இஸ்லாமிய பார்வையில் தவறில்லை.//---ஆம் தவறில்லை.
வருகைக்கும், //சிறந்த ஆராய்ச்சி!//--கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.சுவனப்பிரியன்.
@RAZIN ABDUL RAHMAN அலைக்கும் ஸலாம் வரஹ்...
//பை தி வே,மீ அத்தா கூட்டம்ஸ்....//
---hi...! glad to meet you sir..! me from bappu koottams..!
:)
(பரஸ்பர கைகுலுக்கல் ஜரூராய் நடந்துகொண்டிருக்க...)
வருகைக்கும் 'அறிமுக'த்திற்கும் நன்றி சகோ,ரஜின்..!
@bat
அலைக்கும் ஸலாம் வரஹ்...
//( ஹா ஹா ஹா ) இது எப்படி இருக்கு ...............//---ஹா ...ஹா ...ஹா ...நீங்க ரொம்ப நல்லா கலாய்க்க கத்து வச்சிருக்கீங்க சகோ.பேட். பட் நாட் டூ பேட்.
@niyma72 அலைக்கும் ஸலாம் வரஹ்...
தங்கள் வருகைக்கும் ஆய்விற்கும் பின்னூட்டங்களுக்கும் அதிகப்படியான ஆர்வத்திற்கும் மிக்க நன்றி சகோ.நியமா.
அத்தா---ancestor / forefather என்பதுபோல... நீங்கள் கொடுத்த அந்த translation சுட்டியில் சென்று... mother என்பதற்கு துர்க்கியில் தேடினால்... ann/anne என்று வருகிறது.
மேலும் அதே துர்க்கி மொழியில்... aunt என்று அடித்தால் "ஹாலா" (அட..! நம்ம ஆளுங்க..!) என்றும் கூட வருகிறது சகோ.நியமா.
ஆனால், bபாbபா என்றால்தான் தந்தையாம். அப்பாவின் அப்பாவுக்கு (அதாவது தாதாவுக்கு) Babanın babası. அம்மாவின் அம்மாவுக்கு (அதாவது நன்னிக்கு) Annenin annesı.
இதுபோல நிறைய பார்த்தேன். ஆங்கில எழுத்துக்கள் கொண்ட வேறு மொழிகளிலும் பார்த்தேன்... இறுதியில்.... ~கிர்ர்ர்ர்ர்ர்ர்~..!
நான் இந்த ஆட்டத்துக்கு வரலை சகோ..! :))
@அந்நியன் 2 அலைக்கும் ஸலாம் வரஹ்...
உங்க கமெண்ட்டை பார்த்து நான்தான் இதை சொல்லணும்...//என்ன கொடுமை இது//-ன்னு..!
என்ன கொடுமை இது..?
//வாருங்கள் எங்கள் ஏரியாவுக்கு தூய தமிழை போதிக்கிறோம்.//---உங்கள் தூ.......................ய தமிழை அறிய ர்ர்ர்ர்ர்ர்ர்ரோம்ம்ம்ம்ம்ம்ப ஆர்வமா இருக்கேன் சகோ.அய்யூப்..!
எப்போ போதிக்க போறீக..?
(அழகன்குளத்தின் ஆழத்தையும் ஒரு தடவை என்னான்னுதான் பார்த்துருவோமே ..!)
@ஆமினா
(இந்த பின்னூட்டத்தை யாரும் படிக்க வேண்டாம்... இப்படி எழுதி போடுறது தான் பதிவுலகுல புது பேஷன்...!?!?! இப்ப சொல்லுங்க இத படிப்பீங்களா மாட்டீங்களா? :)))
//அவங்களை நான் ரொம்ப விஷாரிச்சதா சொல்லிடுங்க....//
---சகோ.ஆமினா... எதுக்கு அவ்ளோ தூரம்...?
இங்கே போய் நீங்களே விசாரிச்சிருங்களேன்..! :) :)
//அடுப்பாங்கலை அப்படிங்குறது அடுப்பாங்கரைய தானே சொன்னேள்? :)//---சமையற்'கலை' அரங்கேறும் 'அடுப்ப'டியை நாங்க 'அடுப்பாங்கலை'ன்னு தான் சொல்வோம் சகோ...! :)
(ஒருத்தனுக்கு எத்தினி வாட்டிதான் ஸ்பெல்லிங் மிஸ்டேக் வர்ரதுன்னு ஒரு விவஸ்தை வேணாம்..!?)
இப்ப நானும் பஞ்சாயத்துக்கு வரேன்....
பாலம் கட்ட கடல்ல எப்படி காங்கிரீட் போடறாங்கன்னு அறிந்து'கொள்ள'(அப்பாடா... சரியா எழுதிட்டேன்) போன ஒரு சின்னப்பையன் மேலே வீண் கொலைப்பழி சுமத்தினது அக்கிரமம் அல்லவா..?
இதுதான் விளக்கம்.
இதுக்கு மேலும் உங்கள் தலைமையில் என் ப்ளாக்கின் முன் காலவறையற்ற உண்ணாவிரதம் இருக்க போறதில் தீவிரமா இருந்தா...
ஒண்ணு சொல்றேன்..! கேட்டுக்குங்க..!
போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாம கொஞ்சம் ரோட்டோரமா உண்ணாவிரதப்பந்தல் போடவும். இல்லைன்னா அப்புறம் போலீஸ் தடியடி, துப்பாக்கிச்சூடு இதெல்லாம் நடந்தா நான் பொறுப்பேற்க மாட்டேன்... ஆமா... சொல்லிட்டேன். ஏன்னா... எங்க ஊரு போலீஸ் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு.
===================================
ஒரு முக்கிய அறிவிப்பு:-
காலவரையற்ற(?) உண்ணாவிரதம் முடிஞ்சவுடன்(!), பின்னூட்டவாதி ~ 'citizen of world' சார்பாக... உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் மகிழ்வுடன் இஃபதார் விருந்து வழங்கப்படும்..!
===================================
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!