அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Thursday, January 17, 2013

44 If prostitution legalised... விளைவு..? ---ஓர் அலசல்.


டெல்லி ஃபிசியோதெராஃபி மாணவிக்கு நேர்ந்த பாலியல் பயங்கரவாத சம்பவத்தை தொடர்ந்து, பாலியல் வல்லுறவு தொடர்பான இந்திய சட்டத்தை கடுமையாக்குவது உள்ளிட்ட பல அம்சங்களை ஆராய்ந்து அறிக்கை அளிக்க நீதிபதி ஜே.ஸ்.ஷர்மா கமிட்டி ஒன்று இந்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியிடம் 'பாரதிய பாட்டிடா' என்றதன்னார்வ தொண்டு நிறுவனம் (!!?!!) ''விபச்சாரத்தை சட்டபூர்வமாக்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்துள்ளது. மேலும் ''நாட்டில் இதுபோன்ற கற்பழிப்புகள் நிகழ காரணம் விபச்சாரத்தை சட்டபூர்வமாக்காததுதான்'' என்றும் கூறியுள்ளது..! 

பொதுவாக உலக அளவில் உள்ள NGO க்கள் எல்லாருமே இதே மாதிரியான புரிதலில்தான் உள்ளனர். இது சரியா, இதனால் raping குறையுமா, வேறு என்ன பக்க விளைவுகள் ஏற்படும்... என்பதை இப்பதிவில் அலசுவோம்.


//பிக்பாக்கெட் திருட்டும், ஆயுதம் காட்டி வழிப்பறியும், பூட்டை உடைத்து கொள்ளையும் நாட்டில் அதிகரிக்கிறது; ஆகையால் திருட்டைசட்டபூர்வமாக்குங்கள்..!//---என்றோ...

//வெட்டு, குத்து, கொலை எல்லாம் அதிகமாகி விட்டது. எனவே, கொலை செய்ய சட்டப்படி அனுமதியுங்கள்..!//---என்றோ...

இவர்கள் கோரிக்கை வைப்பார்களா..? மாட்டார்கள் அல்லவா..?

இதெல்லாம் எவ்வளவு தூரம் அறிவீனமோ அதைப்போன்றதே பாலியல் வன்கொடுமைகளை தடுக்க பாலியல் தொழிலை அங்கீகரிப்பதும்..!

அது எப்படிஎன்றுதான் அலசவுள்ளோம். 

எழுபதுகளின் இறுதியில் எனக்கு கருத்து தெரியும் காலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் இருந்த காலம் அது. எங்கோ... யாரோ... தூரத்தில் முகவரி அறியா ஒருத்தர் குடிப்பவர் எனும் அளவில்தான் குடிப்போர் இருந்தனர். 

பின்னர் என்பதுகளின் துவக்கத்தில் பூரண மதுவிலக்கு சட்டம் அமலில் இருந்தாலும்... அன்றைய அரசின் மெத்தனம், சட்டம் ஒழுங்கில் உள்ள லஞ்ச ஊழல், கள்ளச்சாராயம் காய்ச்சினால் கடத்தினால் கடும் தண்டனை உண்டு' என்ற பயம் இல்லாமை காரணமாக அங்கொன்றும் இங்கொன்றும் கள்ளச்சாராய காய்ச்சுதல்/கடத்தல் செய்திகள் வருவதுண்டு. கள்ளச்சாராய சாவு எப்போவாவது எங்காவது ஒரு காட்டில்தான் விழும். இவை தினசரிகளின்  முதல் பக்கத்தில் செய்தியாக வரும். தலைப்புச்செய்தியாக வானொலியில் ஜெயா பாலாஜியும் சரோஜ் நாராயண சுவாமியும் வாசிப்பார்கள்..!

அப்போதும் நம் ஊரில் எத்தனை பேர் குடிப்பார்கள்..? எண்ணிக்கை மிக அரிதே..!

என்பதுகளின் மத்தியில் 'கள்ளச்சாராயத்தை தடுக்கிறேன் பேர்வழி' என்று அரசே ஏலம் நடத்தி 'நம்பர் போட்ட நல்ல(?)சாராய கடைகளை' திறக்க தனியார்களை அனுமதித்தது.  இப்போது... 'கள்ளச்சாராய சாவு', 'கள்ளச்சாராய கடத்தல் லாரி மாட்டியது'.... என்று அடிக்கடி நியூஸ் வந்தது..! காரணம்...? குடிப்போர் எண்ணிக்கை அதிகரித்தது. கள்ளச்சாராயமும் அதிகரித்தது..! இக்காலத்தில்தான்... குடித்துவிட்டு போதையில் தள்ளாடி நடப்பவர்களை  நான் நேரில் பார்த்து இருக்கிறேன். அவர்களின் மூலம் சாராய துர்நாற்றத்தையும் முதன்முதலாக அறிந்தேன்..! இப்போது நம் ஊரில் குடிகாரர்கள் கண்முன்னே அதிகரித்தார்கள்..! 

அதுவரை வில்லன்கள் மட்டுமே சினிமாவில் குடிப்பார்கள். இப்போது ரஜினி கமல் போன்ற ஹீரோக்களும் சினிமாவில் குடிக்க ஆரம்பித்து இருந்தார்கள். But for only two solid reasons. (காதல் தோல்வி மறக்க, வில்லன்கள் தனது குடும்பத்துக்கு ஏற்படுத்திய உயிர் இழப்புக்கு கொலைப்பழிவாங்க... 'அப்போ... கொலையை அவர் மனசால் அறிஞ்சு செய்யலை... போதையில்தான் செஞ்சார்' என்ற லாஜிக்கிற்காக)

உயர்நிலை பள்ளியில் படிக்கும்போது, 'எதுக்கு அதிக காசு போட்டு கள்ளச்சாராயம் குடிச்சு சாகரே..?'. 'இதோ அரசு மானிய உதவியில் மலிவு விலை மது தருகிறேன்... குடி'.... என்று தமிழக அரசே பாக்கெட் சாராயம் சப்ளை செய்தது..! இப்போது நம்ம ஊரில் மட்டுமல்ல, தெருவிலேயே குடிகாரர்களை என்னால் பார்க்க முடிந்தது..! அப்போது, சினிமா ஹீரோக்கள் அற்ப காரணத்துக்கு எல்லாம் குடிக்க ஆரம்பித்தனர். மகிழ்ச்சி-கொண்டாட்டம் என்றாலும் குடிக்க ஆரம்பித்து இருந்தார்கள்.

பின்னர்... கல்லூரி படிக்கும் போது வெளிநாட்டு ஒயின்ஷாப்க்கு அனுமதி வழங்கியது அரசு. பின்னாடி... அதில் வரும் லாபக்கோடிகளை பாத்துவிட்டு அரசே டாஸ்மாக் திறந்து மதுக்கடை நடத்தும்போது... நம் ஊரில்/நம் தெருவில்/அக்கம்பக்கத்தில் எத்தனை பேர் குடிக்கிறார்கள்... ச்சே... ச்சே... கேள்வியே தப்பு..! எத்தனை பேர் குடிக்காதவர்கள் இருக்கிறார்கள்..? இன்றைய சினிமா நடிகர்கள் எந்த காரணமும் இல்லாமல் சாதாரணமாகவே குடிப்பதை 'இதெல்லாம் தினசரி வீட்டில் நடக்கும் வழக்கமான ஒன்றாக' காட்டுகிறார்கள்.

ஆக, கல்லூரி மட்டுமல்ல... பள்ளியிலும் மாணவர்கள் இப்போது குடிக்கிறார்கள். காரணம்: அரசின் டாஸ்மாக். இது, சென்ற 2012 ஆண்டில்... 18000 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாம். அதாவது, ஒவ்வொருநாளும் சராசரியாக சுமார் 50 கோடி ரூபாய். இந்த பொங்கலில் மட்டும் ஒவ்வொரு நாளும் டாஸ்மாக் வசூல்... 100 கோடியை தொடுகிறதாம்..!

ஆக, குடிப்பது-போதை எல்லாம் ஒரு காலத்தில் கண்ணியமாற்ற-தீய-ஒழுக்கமற்ற-தவறான-பாவமான-குற்றமான, யாரும் செய்ய தயங்கி மறையும் ரகசிய செயலாக இருந்தது. 

இன்று அது அப்படி இல்லை. காரணம், எப்போது ஒரு செயலை அரசே அங்கீகரித்து சட்டப்பூர்வமாக்கி விட்டதோ... அப்போதே அது கண்ணியமான- நல்ல- ஒழுக்கமான- சரியான- நன்மையான- போற்றத்தக்க, யாரும் பகிரங்கமாக தயக்கமின்றி செய்யும் சிறந்த செயலாக ஆகி விடுகிறது..!

இதேபோல... 'கற்பழிப்பை ஒழிக்க விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்கினால்...'
.
இதற்கு உள்ளே போகும் முன்னர்... ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்..! திருமண (ஒப்)பந்தம் இன்றி நடக்கும் கலவியே, விபச்சாரம். எப்போது, ஓர் ஆண் இதனை ஒரு பெண்ணிடம் செய்ய துணிகிறானோ... அப்போது அப்பெண் இச்செயலை எதிர்த்தால் இது 'கற்பழிப்பு' எனப்படும் பாலியல் வல்லுறவு என்றாகிறது.

மனக்கட்டுப்பாடற்ற, சிறந்த ஒழுக்கவியல் மாண்பற்ற, சமூகத்தில் தமக்கேற்படும் அவமானத்துக்கும், எச்சட்டத்துக்கும், தண்டனைக்கும் அஞ்சாத ஓர் ஆண்தான்... இது போன்ற கீழ்த்தர செயலில் ஓர் பெண்ணிடம் ஈடுபடுவான். அரசே... விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்கி விட்டால் இப்படியான ஆண்களின் எண்ணிக்கை மேலே நாம் பார்த்த குடிக்காரர்கள் எண்ணிக்கை போலவே நிச்சயமாக அதிகரிக்கும்..!

அதிகரிக்கும் இந்த விபச்சார ஆண்களின் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு... விபச்சார பெண்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். இதில் டிமாண்ட் ஏற்பட்டால் கள்ளச்சாராயம் போலவே... 'அவசரத்துக்கு கற்பழிப்புகள்' மேலும் அதிகரிக்கும்..! 

காலப்போக்கில்... விபச்சாரம் செய்யாத பெண்களின் மனநிலையிலும் கொஞ்சம் கொஞ்சமாக மாறுதல் ஏற்பட்டுவிடும். ஏனெனில், அரசே குற்றம் காணாத ஒரு செயலில்... 'அந்த ஆண் செய்வதோன்றும் அத்தனை பெரிய குற்றம் அல்லவே' என்று தோன்ற ஆரம்பித்து விடும். 

எனவே, அப்பெண்ணே பாலியல் வல்லுறவுக்கு எதிர்ப்பின்றி ஒப்புதல் அளித்துவிட்டு அதற்கு தக்க பணத்தை வாங்கி விட்டால்... அல்லது வேறொரு பதில் சாதகத்தை அவனிடம் நாடி இச்செயலை செய்தவனை பற்றி புகார் ஏதும் அளிக்கவில்லை என்றால்... raping case என்று ஒன்று இல்லவே இல்லை என்றாகி விடும்... 'கள்ளச்சாராய சாவு' இல்லாமல் போனது போலவே..!

ஆனால்... இதன் அல்டிமேட் ரிசல்ட்.............................? 

'கள்ளச்சாராயத்தை' ஒழித்து எப்படி நாம் ஒவ்வொரு வீட்டிலும் குடிக்காரர்களை உருவாக்கினோமோ... அதேபோல... 'கற்பழிப்பை' ஒழித்து ஒவ்வொரு வீட்டிலும் விபச்சாரர்களை உருவாக்கிவிடும் நிலையில் தான் நம்மை கொண்டு போய் நிறுத்தும்..! கல்லூரியில் மட்டுமல்ல... பள்ளியிலேயே... விபச்சாரம் நடக்கும்..!

......................இதுதான்... benefits (?) of legalized prostitution..!
.
தற்போது, legalized prostitution நாடுகளில் இது போலத்தான் நடக்கிறது. அங்கே மேரேஜ் என்பதே ரேர். அப்டியே நடந்தாலும் டைவோர்ஸ் ஷ்யூர். குழந்தைகள்..? சான்ஸே இல்லை. பாப்புலேஷன் ஆபாயகரமாக குறைந்து விட அரசே அறிவிக்கிறது... "புள்ளை பெத்தா.... இந்தா புடி போனஸ், இந்தா பிரோமோஷன், உன் ஹவுஸ் லோன் கேன்சல், இந்தா வெளிநாட்டுக்காரா... பிடி சிடிசன்ஷிப்..." இதெல்லாம் பல legalised prostitution நாடுககளில் நடந்து வருகிறது..!

Lesotho என்ற ஒரு நாட்டில் prostitution legal. அந்த நாடுதான்... இன்று உலகில் "நம்பர் ஒன்".... in raping. அதுமட்டுமல்ல.... raping இல் இரண்டாவது இடத்தில் உள்ள நியூசிலாந்து, மூன்றாவது இடத்தில் உள்ள பெல்ஜியம் இங்கெல்லாம் prostitution legal தான். இந்த லிங்க்-ல், உள்ள Most Rape case countries (per capita) லிஸ்டில், இருக்கும் பல நாடுகளில் prostitution is legal. இதற்கு NGO களிடம் இருந்து என்ன பதில்..?

'என்னை யாரும் தொடக்கூடாது, கல்யாணம் பண்ணினால்தான் ஆண் தொடலாம்' என்று ஒரு பெண் நினைக்கும் வரைதான்... அங்கே ஆணின் பாலியல் வல்லுறவு. அப்டி எந்த பெண்ணும் ஒரு நாட்டில் நினைக்க வில்லையென்றால்.... அங்கே 'ரேப் கேஸ்' ஜீரோ ஆகிவிடும். அதாவது, லிசாதோ, நியோசிலாந்து, பெல்ஜியம் போன்ற நாட்டு பெண்கள் பாலியல் வல்லுறவை எதிர்க்காமல் இணங்கிவிட்டால் அந்த நாடுகள் Most Rape case countries லிஸ்டில் டாப்பில் இருக்காது. அந்த இடங்களுக்கு வேறு சில legalised prostitution நாடுகள் வந்து விடும். 

ஆனால்... தினம் தினம் அது நடந்து கொண்டுதான் இருக்கும் legalized prostitution என்கிற பேரிலே..! அது பற்றி யாருக்கு கவலை..? இதுதான்... ரேப்பிங்க்ஸ் ஐ ஒழிக்க NGO சொல்லும் தியரியின் இறுதி விளைவு...!
 
அந்த இறுதி விளைவுக்கு... அடுத்த நிலை நமது மாநிலத்தில் எப்படி இருக்கும் தெரியுமா..? 'எயிட்ஸை ஒழிக்க காண்டம் பயன்படுத்துங்கள்' என்று விபச்சாரத்தை ஒழிப்பதற்கு பதில் ஆதரிக்கும் அரசு, தனியார் legalized prostitution செண்டர்களில்... டாஸ்மாக்கை விட அதிகமாக குவியும் கோடிகளை பார்த்துவிட்டு... 'டாஸ்மாக் போலவே பட்ஜெட் போட தேவைப்படும்' என்று , அழகான பெண்களை 'நேர்-உடல்தேர்வு' (!?) மூலம் தேர்ந்தெடுத்து அரசே முன்னின்று 'அரசு விபச்சார விடுதி'யை நடத்தி நிச்சயமாக கோடிகளில் புரளும்..! இந்த 'government employees' இடம், ஒரு 30 வயசு வரை நன்றாக வேலை வாங்கிவிட்டு ரிடயர்மெண்ட் தந்துவிடும். இதெல்லாம் நடக்கட்டும் என்று நம்மில் எவரேனும் விரும்புவோமா..?

ஆக மொத்தத்தில்... நான் எனது அலசலில் சொல்ல வந்தது இதுதான்..!
 .
பூரண மதுவிலக்கு அமலில் இருந்த போது, கள்ளச்சாராய சாவு அங்கொன்றும் இங்கொன்றும் நடந்தது. இதை ஒழிக்க... நம்பர் சாராய கடை, மலிவு விலை மது, ஃபாரின்ஒயின்ஷாப் என்று.... இறுதியாக அரசே நடத்தும் டாஸ்மாக் வந்தது. கள்ளச்சாராய சாவு அல்மோஸ்ட் ஒழிந்ததுதான். 

ஆனால், கடந்த 25 வருடங்களில் 100-க்கு ஒருவர் குடிக்காரர் என்ற நிலை மாறி, 19 பேரில் ஒருவர் குடிக்காரர் என்ற புள்ளி விபர நிலையில் தமிழகம் இப்போது போதையில் தள்ளாடுகிறது சகோஸ்..! Tamil Nadu ranks first among the states of India in alcohol sales by volume..! 

சொல்லுங்க சகோ..! இந்த புள்ளிவிபரங்களினால்... உங்களுக்கு கள்ளச்சாராயத்தை ஒழித்து விட்டோம் என்ற மனதிருப்தி வருகிறதா... அல்லது... இத்தனை குடிக்காரர்களை உருவாக்கிட்டோமே என்ற ஆற்றாமை கோபம் கவலை எல்லாம் தொற்றுகிறதா..?

இதே நிலைதான்.... விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்கினால்... ரேப் கேஸ் அல்மோஸ்ட் இல்லாமல் போய்விடும்தான். ஆனால் விபச்சாரம் செய்யாத மக்களை நம் வீட்டில் கூட காண்பது அறிதாகிவிடும் சகோஸ்..! கல்கத்தா பம்பாயில் மட்டுமே நாம் பார்க்கும் காட்சி, இனி நாட்டின் ஒவ்வொரு தெருவிலும் நடக்கும்..!
.
அப்போது... "ஏனப்பா, நடுத்தெருவில் இதை செய்கிறீர்கள், சற்று மறைவான இடத்தில் போய் செய்யக்கூடாதா?" என்று கேட்பவரே அப்போது இறையச்சத்தில் ஆக சிறந்தவர் என்ற அவல நிலை ஏற்படும் என்றும்... மறுமை நாளின் அடையாளங்களாக குடியும், விபச்சாரமும் பெருகும்... எனவும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் தெளிவாக சொல்லியிருப்பதை ஹதீஸ்களில் படித்தது இப்போது நியாபகத்துக்கு வருகிறது.

ஆக, legalized prostitution கியாமத் நாளை நமக்கு மிக அருகே அழைத்து வரவிருக்கிறது..!

Thanks for Picture :  www.indiatribune.com

44 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...