இன்றைய செய்தி...
Parvez Rassol,
the Jammu and Kashmir allrounder, has been included in the 14-member
India A squad to play the warm-up one-day match against England on
January 6 in Delhi.
மூன்றாண்டுகளுக்கு முன்னர், கர்நாடக காவி அரசால் பெங்களூரு "சின்னசாமி ஸ்டேடிய குண்டுவெடிப்பு" வழக்கில், 'வெடிகுண்டு வைத்த பயங்கரவாதி' என்று பொய்யாக பழி போடப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட காஷ்மீர் ரஞ்சி டிராபி ஆல்ரவுண்டர் "பர்வேஸ் ரசூல்" தான் இவர்..! ஊடகத்தில்அப்போது இவர் 'வெடிகுண்டு(!) பயங்கரவாதி(?)'. பவுலிங் போடும் இந்த காஷ்மீரி கையில் கிரிக்கெட் பந்துக்கு பதில் கிராபிக்சில் வெடிகுண்டு எல்லாம் வரைந்து கேவப்படுத்தினர் ஊடகத்தினர்..!
ஆனால்...
பின்னர் அவர் 'நிரபராதி' என்று நீதிமன்றத்தால் தீர்ப்பு கூறப்பட்டு விடுவிக்கப்பட்டபோது வழக்கம் போல கள்ள மவுனம் காத்தன ஊடகங்கள். ஏன், அதேபோல தலைப்புச்செய்தி அறிவிக்க வில்லை..? அது உங்களுக்கு கசப்பான செய்தியோ..?
ஆனால்...
பின்னர் அவர் 'நிரபராதி' என்று நீதிமன்றத்தால் தீர்ப்பு கூறப்பட்டு விடுவிக்கப்பட்டபோது வழக்கம் போல கள்ள மவுனம் காத்தன ஊடகங்கள். ஏன், அதேபோல தலைப்புச்செய்தி அறிவிக்க வில்லை..? அது உங்களுக்கு கசப்பான செய்தியோ..?
இறை நாடினால்... இதே Parvez Rasool நாளை தலைநகர் டில்லியில் பாலம் மைதானத்தில், இங்கிலாந்து XI அணிக்கு எதிராக களம் கண்டு இந்தியா A அணியின் நட்சத்திர வீரராக வளம் வரவிருக்கிறார்..! மகிழ்வோடு வரவேற்போம்..!
ஆம், பெங்களூரு போலி குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்குள் தள்ளப்பட்டிருந்த அதே "பர்வேஸ் ரசூல்"தான் நடப்பு இங்கிலாந்து சுற்றுலாவில் அதனை எதிர்த்து விளையாடவிருக்கும் இந்தியா-A அணிக்கு தேர்வாகி உள்ளார். அல்ஹம்துலில்லாஹ்.
காஷ்மீரை சேர்ந்த வீரர் ஒருவர், இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெறுவதும் இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக "ரஞ்சி டிராபி" ஆட்டத்தில் காஷ்மீரின் சார்பாக கலந்துக் கொண்ட
பர்வேஸ், அதிரடியாக விளையாடி அனைவரையும்விட அதிகமாக 594 ரன்கள் எடுத்ததுடன்
33 விக்கெட்டுகளையும் கைப்பற்றி லிஸ்டில் டாப் பொசிஷனை எடுத்து தனது ஆல்ரவுண்டர் திறனை நிரூபித்ததுதான் இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழுவினரை இவரை நோக்கி திரும்ப வைத்திருக்கிறது.
அவரின் திறமைக்கு முன்னால் இந்திய ஊடக பயங்கரவாதமும் கர்நாடக காவி அரசு பொய்களும் எடுபடவில்லை..!
வீரர் தேர்வில் இந்த அளவுக்கு நேர்மையாக நடக்கும் இந்திய கிரிக்கெட் தேர்வாணைய குழுவுக்கு மிக்க நன்றி. யாரும் சற்றும் எதிர்பராதது இது..! பாசிஸ ஊடக பயங்கரவாதத்துக்கு நெத்தியடி..!
ஏனெனில், காஷ்மீரி முஸ்லிம் ஒருவர் போலி குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு... பின்னர் 'நிரபராதி' என நீதி மன்றத்தில் நிரூபித்து வெளிவருவது அத்தனை சாதாரணமான விஷயமல்ல நம் நாட்டில்..! இதற்காக அவரும் அவரது குடும்பமும் எதிர்கொண்ட வேதனைகளும்-சோதனைகளும் கொஞ்சநஞ்சமல்ல..! நிச்சயமாக இது இவரைப்போல பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியாகவே இருக்கும் என்றால் மிகை இல்லை..!
இக்கட்டான நேரத்தில் பொறுமையுடன் இருந்து, இன்னல் தந்தோரிடம் சகிப்புத்தன்மை காட்டி, கோபத்தை கட்டுப்படுத்தி, திறமையை நிரூபித்து சாதித்தும் உள்ளார் பர்வேஸ் ரசூல்..! மாஷாஅல்லாஹ்..!
இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான். (குர்ஆன் 8:46)
பிற்சேர்க்கை...!
மிக அருமையான பின்னூட்டம் என்பதால்... பதிவோடு சேர்த்தே வெளியிடுகிறேன்..!
///உதயம் has left a new comment on your post "இந்திய கிரிக்கெட் அணியில் "_வெடிகுண்டு(!) பயங்கரவா...":
குண்டு வெடிப்பு வழக்கில் தான் ஒரு பொய்யாக புனையப்பட்ட குற்றவாளி என்ற நிலையில், ஊடகங்கள் வழமை போல இவரை குற்றவாளி என்று "முஸ்லிம் வெறுப்பில்" தீர்மானித்து ஒரு பொது புத்தியை ஏற்படுத்திய பின், நீதிமன்றம் இவர் மீது குற்றத்தின் நிழல் கூட பதியவில்லை என்று தீர்ப்பு அளிக்கிறது.
எப்பேர்பட்ட அநியாயமும் அராஜகமும் அக்கிரமும் தன்னுடைய வாழ்வில் இந்தியரசால் நிகழ்த்தப்பட்ட பின்னரும் அதே நாட்டிற்காக பற்றோடு விளையாட எத்தனை பெரிய மனம் வேண்டும். எவ்வளவு எளிதாக எடுத்துக்கொண்டு, தன் வாழ்வின் கறுப்பு நாட்களை விளையாட்டில் ஈடுபட்டு மறந்து வருகிறார்.
இத்தனை நாட்டுப்பற்று உள்ள முஸ்லிம்களைத் தான் குண்டு வெடிப்பில் சம்பந்தப்படுத்தி அவர்களின் வாழ்க்கையை அழித்து, இந்து ராஷ்டிரம் அமைக்கத் துடிப்பவர்களின் சார்பாக செயல்பட்டு கரியை பூசிக்கொள்கிறது காவல் துறையும் உளவு துறையும். நாளைய வரலாறு இப்படி சொல்லும் " அரசே நிர்பந்தப்படுத்தி தீவிரவாதத்தோடு முஸ்லிம்களை பிணைத்த போதும், தீவிரவாதத்தை தீவிரமாக எதிர்த்ததோடு அல்லாமல், இந்துத்துவாவின் தீவிரவாதப் பழியையும் சேர்த்தே சுமந்தவர்கள் இந்திய முஸ்லிம்கள்" என்று. ///
பிற்சேர்க்கை...!
மிக அருமையான பின்னூட்டம் என்பதால்... பதிவோடு சேர்த்தே வெளியிடுகிறேன்..!
///உதயம் has left a new comment on your post "இந்திய கிரிக்கெட் அணியில் "_வெடிகுண்டு(!) பயங்கரவா...":
குண்டு வெடிப்பு வழக்கில் தான் ஒரு பொய்யாக புனையப்பட்ட குற்றவாளி என்ற நிலையில், ஊடகங்கள் வழமை போல இவரை குற்றவாளி என்று "முஸ்லிம் வெறுப்பில்" தீர்மானித்து ஒரு பொது புத்தியை ஏற்படுத்திய பின், நீதிமன்றம் இவர் மீது குற்றத்தின் நிழல் கூட பதியவில்லை என்று தீர்ப்பு அளிக்கிறது.
எப்பேர்பட்ட அநியாயமும் அராஜகமும் அக்கிரமும் தன்னுடைய வாழ்வில் இந்தியரசால் நிகழ்த்தப்பட்ட பின்னரும் அதே நாட்டிற்காக பற்றோடு விளையாட எத்தனை பெரிய மனம் வேண்டும். எவ்வளவு எளிதாக எடுத்துக்கொண்டு, தன் வாழ்வின் கறுப்பு நாட்களை விளையாட்டில் ஈடுபட்டு மறந்து வருகிறார்.
இத்தனை நாட்டுப்பற்று உள்ள முஸ்லிம்களைத் தான் குண்டு வெடிப்பில் சம்பந்தப்படுத்தி அவர்களின் வாழ்க்கையை அழித்து, இந்து ராஷ்டிரம் அமைக்கத் துடிப்பவர்களின் சார்பாக செயல்பட்டு கரியை பூசிக்கொள்கிறது காவல் துறையும் உளவு துறையும். நாளைய வரலாறு இப்படி சொல்லும் " அரசே நிர்பந்தப்படுத்தி தீவிரவாதத்தோடு முஸ்லிம்களை பிணைத்த போதும், தீவிரவாதத்தை தீவிரமாக எதிர்த்ததோடு அல்லாமல், இந்துத்துவாவின் தீவிரவாதப் பழியையும் சேர்த்தே சுமந்தவர்கள் இந்திய முஸ்லிம்கள்" என்று. ///
20 ...பின்னூட்டங்கள்..:
மாஷா அல்லாஹ்
மாஷா அல்லாஹ்....அவரின் ஆட்டத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
// வீரர் தேர்வில் இந்த அளவுக்கு நேர்மையாக நடக்கும் இந்திய கிரிக்கெட் தேர்வாணைய குழுவுக்கு மிக்க நன்றி. //
தீவிரவாதி என்ற கண்ணோட்டத்தில் பார்க்காமல், திறமையை பார்த்த கிரிக்கெட் தேர்வாணைய குழு நிச்சயம் பாராட்டுக்கு உரியதே...
MasaAllah
இந்திய நிர்வாகத்தில் இன்னும் நியாயத்தை வரவேற்போர் உள்ளார்கள் என்பதை இவரின் தேர்வு உறுதிப்படுத்தியுள்ளது. தனக்கு பொய்யாக ஏற்படுத்தப்பட்ட களங்கத்தை வென்று சிறந்த வீரராக வலம் வர வாழத்துக்கள்.
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள்,
விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால்
பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! 2:155
அன்றியும், நிச்சயமாக அவனே சிரிக்க வைக்கிறான்,அழச் செய்கிறான். 53:43
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு சகோ...
மாஷா அல்லாஹ் !
காவிகளால் போடப்பட்ட பந்தை சிக்சருக்கு அனுப்பியுள்ளார் பர்வேஸ் ரசூல் ..பாருங்கள் அதுவும் நோ பால் ..அடுத்து ப்ரீ ஹிட் வேற ! பாலையே ஒழுங்க போட முடியல ..இவர்களெல்லாம் விக்கெட் கேட்கின்றனர் பாருங்கள் ......ரொம்பதான் ஆசை :-))
இதெல்லாம் நாட்டுக்கு தேவையில்லாத செய்தின்னு எல்லாரும் ஹோலிவுட், பாலிவுட் கிசுகிசு எழுத போய்ட்டாங்க போல (செய்தி தாள்களும், சேனல்களும்)
பகிர்வுக்கு நன்றி சகோ
முஸ்லிம் ஒருவர் போலி குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு... பின்னர் 'நிரபராதி' என நீதி மன்றத்தில் நிரூபித்து வெளிவருவது அத்தனை சாதாரணமான விஷயமல்ல நம் நாட்டில்..!///
கண்ணீரை வரவழைத்த வரிகள் ...
நன்றி சிட்டிசன்
தள்ளுபடியாகும் தீவிரவாத வழக்குகள்!
கேள்விக்குறியாகும் முஸ்லிம் இளைஞர்களின் வாழ்க்கை!
1 Dec 2012
தீவிரவாத வழக்குகளிலும், குண்டுவெடிப்புகளிலும் குற்றவாளிகளாக சித்தரித்து சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு எதிராக சாதாரண ஆதாரங்கள் கூட இல்லை என்று கூறி நீதிமன்றங்கள் விடுதலைச் செய்யும் பொழுது போலீஸ் மற்றும் புலனாய்வு ஏஜன்சிகள் குறித்த சந்தேகம் வலுக்கிறது.
டெல்லி லஜ்பத் நகர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்ட 2 கஷ்மீர் முஸ்லிம் இளைஞர்களுக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனையை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்துச்செய்தது.
இதனைத் தொடர்ந்து போலீஸாரின் செயல்பாடுகள் குறித்த விவாதம் மீண்டும் சூடு பிடிக்க துவங்கியுள்ளது.
விசாரணை நீதிமன்றத்தால் மரணத் தண்டனை விதிக்கப்பட்ட முஹம்மது அலி மற்றும் மிர்ஸா நிஸார் ஆகியோரின் தண்டனையை கடந்த வாரம் டெல்லி உயர்நீதிமன்றம் ரத்துச் செய்து விடுதலைச்செய்தது.
சாதாரண ஆதாரங்களை கூட தாக்கல் செய்யாத போலீசாரின் நடவடிக்கையை நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது.
முஸ்லிம் சமுதாயத்தினரையும், பழங்குடி-தலித் சமூகத்தினரையும் பொய் வழக்குகளில் சிக்க வைத்து அரசு கொடுமை இழைப்பதாக சிறுபான்மை அமைப்பினரும், மனித உரிமை அமைப்புகளும் கூறிவரும் குற்றச்சாட்டுக்கள் உண்மை என்பதையே இச்சம்பவம் நிரூபிக்கிறது.
போலீஸ், ஊடகங்களால் பரபரப்பாக பரப்புரைச் செய்யப்பட்ட தீவிரவாத-குண்டுவெடிப்புகள் தொடர்பான பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிமன்றங்கள் விடுவித்துள்ளன.
இந்தியாவில் நிகழ்ந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் குற்றம் சாட்டப்பட்டு டெல்லி போலீஸின் ஸ்பெஷல் பிரிவு கைது செய்த ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் பல ஆண்டுகள் சிறையில் அநியாயமாக தங்களது வாழ்க்கையை பாழாக்கிய பிறகு நீதிமன்றங்களால் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தீவிரவாத-குண்டுவெடிப்பு வழக்குகளில் ஆதாரங்களை ஆஜர்படுத்துவதில் போலீசாருக்கு ஏற்பட்ட தோல்வியே விசாரணை நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட நபர்களை உயர்நீதிமன்றங்கள் விடுவிக்க காரணம் என்று டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.எஸ்.சோதி கூறுகிறார்.
மிகவும் இயந்திரத்தனமாக விசாரணை நீதிமன்றங்கள் தீவிரவாத வழக்குகளில் தீர்ப்பு அளிப்பதாக உச்சநீதிமன்ற வழக்கறிஞரான காமினி ஜெய்ஸ்வால் கூறுகிறார்.
பல வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படுவதில்லை.
போலீஸின் கோரிக்கைகளை பரிசோதித்து ஆராயாமல் விசாரணை நீதிமன்ற நீதிபதிகள் பரிசீலிக்கின்றனர்.
இதன் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்களின் கஸ்டடி நீளுகிறது என்று ஜெஸ்வால் கூறுகிறார்.
அதுமட்டுமல்ல, குற்றம் சாட்டப்பட்டோர் மீது சுமத்தும் பல்வேறு குற்றப்பிரிவுகளும் இன்னொரு முடிவை எடுப்பதில் இருந்து நீதிபதிகளை தடுப்பதாக சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
லஜ்பத் நகர் குண்டுவெடிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பால் நீதி ஜெயித்துள்ளது என்று மகிழ்ச்சி அடைந்தாலும், பல வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டவர்களும், அவர்களது குடும்பத்தினரும் எதிர்காலத்தை குறித்து கவலை அடைந்துள்ளனர்.
14-வது வயதில் லஜ்பத் நகர் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்க வைக்கப்பட்ட மிர்ஸா நிஸார், தனது எதிர்காலத்தைக் குறித்த கவலையில் ஆழ்ந்துள்ளார்.
“நீதிமன்ற தீர்ப்புக் குறித்து மகிழ்ச்சியே! ஆனால்,தனது வாழ்க்கையின் முக்கியத்துவம் வாய்ந்த 16 ஆண்டுகளை சிறையில் கழித்த பிறகு நிஸார், இனி என்னச் செய்வார்? ” என்று அவரது மாமா மிர்ஸா முஹம்மது ஹுஸைன் கேள்வி எழுப்புகிறார்.
மிர்ஸா முஹம்மது ஹுஸைன் போன்றோரின் கேள்விக்கு உரிய பதிலை ஆட்சியாளர்களால் அளிக்க முடியுமா?
அல்லது மிர்ஸா நிஸார் போன்ற அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் சிறையில் தொலைத்த வாழ்க்கையை அவர்களுக்கு மீட்டுக் கொடுக்கத்தான் முடியுமா?
எப்பொழுது இந்த துயரங்கள் முடிவுக்கு வரும்?
SOURCE: http://www.thoothuonline.com/the-terrorist-cases-discount-questioned-muslim-youths-life/
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
மாஷா அல்லாஹ்..முதலில் நினைவு படுத்தியதற்கு நன்றி சகோ..
வீரர் தேர்வில் இந்த அளவுக்கு நேர்மையாக நடக்கும் இந்திய கிரிக்கெட் தேர்வாணைய குழுவுக்கு மிக்க நன்றி.///
உண்மை தான் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்பதில் சந்தேகமே இல்லை..நடக்கும் அக்கிரமங்களுக்கு இடையில் இது போல நிகழ்வுகள் தான் மனதை சாந்தப்படுத்துகிறது..
நல்ல பதிவுக்கு நன்றி சகோ..:)
மகிழ்ச்சியான, ஆச்சரியமான விடயம்
குண்டு வெடிப்பு வழக்கில் தான் ஒரு பொய்யாக புனையப்பட்ட குற்றவாளி என்ற நிலையில், ஊடகங்கள் வழமை போல இவரை குற்றவாளி என்று "முஸ்லிம் வெறுப்பில்" தீர்மானித்து ஒரு பொது புத்தியை ஏற்படுத்திய பின், நீதிமன்றம் இவர் மீது குற்றத்தின் நிழல் கூட பதியவில்லை என்று தீர்ப்பு அளிக்கிறது.
எப்பேர்பட்ட அநியாயமும் அராஜகமும் அக்கிரமும் தன்னுடைய வாழ்வில் இந்தியரசால் நிகழ்த்தப்பட்ட பின்னரும் அதே நாட்டிற்காக பற்றோடு விளையாட எத்தனை பெரிய மனம் வேண்டும். எவ்வளவு எளிதாக எடுத்துக்கொண்டு, தன் வாழ்வின் கறுப்பு நாட்களை விளையாட்டில் ஈடுபட்டு மறந்து வருகிறார்.
இத்தனை நாட்டுப்பற்று உள்ள முஸ்லிம்களைத் தான் குண்டு வெடிப்பில் சம்பந்தப்படுத்தி அவர்களின் வாழ்க்கையை அழித்து, இந்து ராஷ்டிரம் அமைக்கத் துடிப்பவர்களின் சார்பாக செயல்பட்டு கரியை பூசிக்கொள்கிறது காவல் துறையும் உளவு துறையும். நாளைய வரலாறு இப்படி சொல்லும் " அரசே நிர்பந்தப்படுத்தி தீவிரவாதத்தோடு முஸ்லிம்களை பிணைத்த போதும், தீவிரவாதத்தை தீவிரமாக எதிர்த்ததோடு அல்லாமல், இந்துத்துவாவின் தீவிரவாதப் பழியையும் சேர்த்தே சுமந்தவர்கள் இந்திய முஸ்லிம்கள்" என்று.
@உதயம்
மிக அருமையான பின்னூட்டம் என்பதால்... பதிவோடு அதனை //பிற்சேர்க்கை...!// என்று சேர்த்து விட்டேன் சகோ.உதயம். மிகவும் நன்றி.
அஸ்ஸலாம் அலைக்கும் சகோ...
இப் பதிவை படித்த பிறகுதான் தெரிகிறது அந்த காஷ்மீர் வீரரை பற்றி இல்லேன்னா தமிழ் இனைய வாசகர்களுக்கு இச்செய்தி தெரிந்தே இருக்காது....என்னத்த சொல்றது நம் நாட்டின் ஊடகங்களைப் பற்றி
தூத்தேரி ........
இச் செய்தியை வேற யாராவது பதிவு போடுறாங்களா பார்ப்போம் ..!!
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ. ஆசிக்
எனது கருத்தையும் உங்கள் பதிவோடு இணைத்தமைக்கு நன்றி.
அஸ் ஸலாமு அலைக்கும் ஆஷிக் பாய்,
உண்மையிலேயே வித்தியாசமான மனிதர்தான். மாஷா அல்லாஹ். தன் நாட்டில் எத்தனை அட்டூழியம் செய்கிறது இந்த அரசு எனத் தெரிந்த பின்னும், தன்னையே இப்படி கண்ணைக்கட்டி காட்டில் விட்ட அரசு எனத் தெரிந்த பின்னும் அதே நாட்டுக்காக இத்தனை வேகமாய் மீண்டும் களமிறங்கும் இவரைப் பாராட்டியே தீர வேண்டும். மாஷா அல்லாஹ். அதற்காக மட்டுமில்லை. இதனால், இந்த தனிமனித முயற்சியால் ஒரு அரசாங்கத்துக்கே பாடம் புகட்டியுள்ள இவரை மாஷா அல்லாஹ் ’பயங்கரவாத’ வீரர் லிஸ்ட்டில்தான் சேர்க்கவேண்டும். :)
அல்லாஹ் இவருக்கு வெற்றியை எளிதாக்குவானாக. பொய்யை மண்ணில் வீழ்ந்து தோல்வியுறச்செய்வானாக. ஆமீன்.
thanks for sharing..
எல்லாம் வல்ல இறைவன் அவரை இந்திய அணியில் முக்கிய வீரராக ஆக்கி காவிகளின் முகத்தில் கரி பூச உதவி செய்வானாக ஆமின்.
வ அலைக்கும் சலாம் வரஹ்...
தங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோஸ்.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!