டிஸ்கி : எனது சென்ற பதிவின் ‘மூன்றாவது பாலினம் என்றால் மூடத்தனமாம்’ தொடரின் இரண்டாவது பாகமான இது... முந்தைய பதிவின் தொடர்ச்சி. இதிலிருந்து ஆரம்பிப்பவர்கள் முதல் பதிவை படித்து விட்டு தொடரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
க்ளைன்ஃபில்ட்டர் சின்ட்ரோமில் 'XXY ஆண்' குழந்தைகள் பிறப்பின் எண்ணிக்கை 1000-ல் 1 அல்லது 2 எனில், நாம் சராசரியாக 750-ல் 1 என்று கொண்டால் கூட, அது ஆச்சரியமாக இருக்கும். "அவ்வளவு பேர்களா? அப்படி தெரியவில்லையே என்று"..! பல ஆய்வுகள், புள்ளிவிபரங்களுக்கு பிறகு நிலைமை என்னவெனில் இவர்களில்பெரும்பான்மையோர் சிண்ட்ரோம் அறிகுறிகள் காட்டுவதே இல்லை. சிலரே பாரிய பாதிப்புகளை காட்டுகின்றனர். இதற்கு காரணம் என்னவென்றால், இந்த XXY ஆண்களில் காணப்படும் ஆன்ட்ரோஜென்கள் (குறிப்பாக டெஸ்ட்டோஸ்டிரோன்கள்) எந்த அளவுக்கு ஈஸ்ட்ரோஜென்களை விட குறைவாக இருக்கிறது என்பதை வைத்து சிண்ட்ரோம் அறிகுறிகள் அதிகரிக்கும். சிலருக்கு ஓரளவுதான் வித்தியாசம் இருக்குமேயானால் பிறந்தபின் சில வருடம் அல்லது பல வருடம் கழித்து கூட வேலையை காட்டும். பலருக்கு நாளடைவில் இந்த டெஸ்டிரோஸ்டோன் ஹார்மோன்கள் தானாகவே மிகைத்து விடுவதும் உண்டு. அதனால் அவர்கள் முழு ஆண்களாகவே வாழ்ந்து திருமணமும் புரிந்து அப்பாவாகவும் ஆகிவிடுவர்.
இன்னும் சிலபேர் கேலிக்குள்ளாகும் வகையில் இருக்க மாட்டார்கள், எனினும் இவர்களுக்கு விஷயம் எப்போது தெரியவரும் எனில் திருமணத்துக்குப்பின்னர் குழந்தையின்மை குறித்து பரிசோதிக்கும் போதுதான். இதற்குப்பின்னர் செய்தாலும் ஹார்மோன் பேலன்ஸ் சிகிச்சை வெகு சிலருக்கு பலனளிப்பதும் உண்டாம்.
வெகு சிலர், தம் கல்லூரி நண்பர்களுடன் பாலின உணர்ச்சிகள் குறித்த தகவல் அனுபவ பகிர்வின் போது, 'தமக்கேன் இதுபோல உணர்ச்சி மாற்றங்கள் நடக்க வில்லை?' என்று சந்தேகம் கொண்டு திருமணத்துக்கு முன்பே சிகிச்சை பக்கம் செல்வதும் உண்டு.
மேற்குறிப்பிட்டவர்கள் அனைவருமே குறைந்த ஹார்மோன் வித்தியாசம் கொண்டவர்கள்... சிண்ட்ரோம் அறிகுறி காட்டாதவர்கள். இவர்கள் ஹார்மோன் பேலன்ஸ் சிகிச்சை எவ்வளவு விரைவாக செய்து கொள்கிறார்களோ அவ்வளவு விரைவாக முழுமையான ஆணாகும் பலன் கிடைக்கும்.
ஆனால், பெரும்பாலோர் நிலை இப்படி இல்லை. இந்த வகை ஆண்குழந்தைகள் பிறந்தது முதல் குப்புறுதல், அமர்தல், தவழ்தல், நிற்றல் என அனைத்தையும் தாமதமாகவே செய்வர். அப்புறம் முதல் வார்த்தை பேசுவதற்கு எப்படியும் நான்கு வயதாகவாவது ஆகிவிடும். இப்போது அவசியம் இது பற்றி ஏன் என்று பெற்றோர்கள் கண்டு கொள்ள வேண்டும்.
பின்னர் பள்ளியில் கொஞ்சம் மெதுவாக ஆரம்பித்தாலும் ஓரளவு மற்ற மாணவர்களுடன் போட்டியிட ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால், வருடங்கள் உருண்டோட மற்ற மாணவர்கள் என்னை பார்த்து கிண்டல் செய்கிறார்கள் என்று பெற்றோர்களிடமோ ஆசிரியர்களிடமோ புகாரிடும்போதாவது கட்டாயம் கண்டுகொள்ள வேண்டும்.
உயர் நிலைப்பள்ளியில் சக மாணவர்களுக்கு மீசை முளைக்கும், குரல் உடையும். ஆனால், இவ்வகை மாணவன் பெண்மை கலந்த குரலில், மிருதுவான தசையுடன் நளினமாக நடக்கும் போதாவது ஆசிரியர்கள் அல்லது பெற்றோர்கள் இவர்களை கண்டு கொள்ள வேண்டும். உடனடியாக ஹார்மோன் பேலன்ஸ் செய்தாக வேண்டிய பருவம் இது. இப்போதும் விட்டால் பிறகு ரொம்ப கஷ்டம்.
///The treatment of Klinefelter's Syndrome patients is aimed towards the replacement of the male sex hormone, testosterone. This becomes all the more important in a patient in whom puberty is delayed or in a post- pubertal individual in whom the secondary sexual features were absent. As KS males are unable to produce sufficient quantities of testosterone, supplementation of this hormone is required.
Testosterone therapy must be initiated early in adolescence. The hormone is usually given through intramuscular injections, once in every 10 - 14 days. It is common for the patients to have mood fluctuations or altered physical abilities during the treatment period. The dosage is started at 50 mg, which may be increased after a specified period.///--என்கிறது ஒரு மருத்துவ தளம்.
இதேநேரம் தெருவிலும் பள்ளியிலும் பலரின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகிக்கொண்டு இருக்கும் இவர்களுக்கு மனநிலை திரிபு ஏற்படும். ஆனால், 'இவன் அம்மாப்பிள்ளை, என் சாயல், என்னை மாதிரி' என்று பெற்றோர்கள் நினைத்து கவனிக்காது விட்டால்... தவறான வழிக்கு அழைத்துச்செல்லவே ஊரில் திரியும் "அவர்கள்-சமூக பாலியல் வியாபாரிகள்" கவனித்து விடுவார்கள். மூளைச்சலவை செய்து மனதில் ஆணா அல்லது பெண்ணா என குழப்பம் ஏற்படுத்தி விடுவார்கள். "சரி, நாம்தான் ஆணாக எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இல்லை, இனி ஆணாக இருப்பதும் வேஸ்ட், அப்புறம் ஏன் பெண்ணாக மாறிவிடக்கூடாது?" என்று பெண்வேஷம் போட்டுக்கொண்டு ஒருநாள் பையன் காணாமல் போய் விடுவான். அப்புறம், அழுது புலம்பி புண்ணியம் இல்லை. எந்த வீட்டிலும் தன் மகன் பெண் போல் உடுத்தி ஒப்பனை செய்து திரிய யாரும் அனுமதிப்பில்லை. இந்த உறுதியும் தெளிவும் இவர்களுக்கான சிகிச்சை மேற்கொள்வதிலும் கட்டாயம் இருக்க வேண்டும்.
///The treatment of Klinefelter's Syndrome patients is aimed towards the replacement of the male sex hormone, testosterone. This becomes all the more important in a patient in whom puberty is delayed or in a post- pubertal individual in whom the secondary sexual features were absent. As KS males are unable to produce sufficient quantities of testosterone, supplementation of this hormone is required.
Testosterone therapy must be initiated early in adolescence. The hormone is usually given through intramuscular injections, once in every 10 - 14 days. It is common for the patients to have mood fluctuations or altered physical abilities during the treatment period. The dosage is started at 50 mg, which may be increased after a specified period.///--என்கிறது ஒரு மருத்துவ தளம்.
இதேநேரம் தெருவிலும் பள்ளியிலும் பலரின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகிக்கொண்டு இருக்கும் இவர்களுக்கு மனநிலை திரிபு ஏற்படும். ஆனால், 'இவன் அம்மாப்பிள்ளை, என் சாயல், என்னை மாதிரி' என்று பெற்றோர்கள் நினைத்து கவனிக்காது விட்டால்... தவறான வழிக்கு அழைத்துச்செல்லவே ஊரில் திரியும் "அவர்கள்-சமூக பாலியல் வியாபாரிகள்" கவனித்து விடுவார்கள். மூளைச்சலவை செய்து மனதில் ஆணா அல்லது பெண்ணா என குழப்பம் ஏற்படுத்தி விடுவார்கள். "சரி, நாம்தான் ஆணாக எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இல்லை, இனி ஆணாக இருப்பதும் வேஸ்ட், அப்புறம் ஏன் பெண்ணாக மாறிவிடக்கூடாது?" என்று பெண்வேஷம் போட்டுக்கொண்டு ஒருநாள் பையன் காணாமல் போய் விடுவான். அப்புறம், அழுது புலம்பி புண்ணியம் இல்லை. எந்த வீட்டிலும் தன் மகன் பெண் போல் உடுத்தி ஒப்பனை செய்து திரிய யாரும் அனுமதிப்பில்லை. இந்த உறுதியும் தெளிவும் இவர்களுக்கான சிகிச்சை மேற்கொள்வதிலும் கட்டாயம் இருக்க வேண்டும்.
இன்னும் சில கல்வி அறிவற்ற குடும்பங்களில் சிகிச்சை அளிப்பதற்கு பதிலாக 'நம்ம குடும்பத்துக்கு போய் இப்படி வந்து வாய்ச்சதே... சனியன்' என்று தூற்றுவார்கள் எனில் இது மன்னிக்க முடியாத கொடுமை. பல இடங்களில் குடும்பத்தினரிலேயே இவர்களை அடித்து விரட்டும் மகா பாவிகளும் உண்டு. இப்படி விரட்டப்படும் அல்லது விரண்டோடும் இவர்கள் கல்வியும் கெட்டு, புத்தியும் கெட்டு இறுதியில் வயிற்றுப்பிழைப்புக்காக சேருமிடம்தான் மகா கொடியது. அங்கே என்னவெல்லாம் நடக்கும்...? படித்தால் நெஞ்சு வலி வரும்.
முதலில் அவனுக்கு Emasculation (ஆண் பாலினப்பெருக்க உறுப்புகளை அறுத்து நீக்கிவிடுதல்). இன்னும் நன்றாக வளரவேண்டி, மார்பகம் மாற்றத்திற்கு ஹார்மோன் ஊசி போட்டுக் கொள்வது. உடன் தன்னை 'அரவாணி' என்பது. இப்போது செந்தமிழில் 'திருநங்கை' என்று சொல்ல வேண்டுமாம். அரசு 'மூன்றாம் பாலினம்' என்கிறது.
அரவாணிகள் 'அறுவை' (சிகிச்சை) தற்போது முறையற்ற மருத்துவர்களால் செய்யப்படுகிறதாம். திண்டுக்கல் மாவட்டத்தில் இது பிரசித்தமாம். இது தவிர கடப்பா, பழமனேரிங்கற ஊர்லயும் செய்யுறாங்களாம். இது முழுக்க முழுக்க ஆண் உறுப்புகளை நீக்கும் அறுவை"சிகிச்சை(!?)" மட்டுமே. இதனால 6 மாசத்துக்குள்ள சிறுநீரகப் பகுதியில பிரச்சன ஏற்படுதாம். புண் ஆறாமல், சீழ் பிடித்து பின்னர் பெரும்பாலும் இறந்து விடுவார்களாம். இதையும் தாண்டி தப்பிப்பிழைத்தால்... வாழ காசு வேண்டுமே..? இவர்களுக்கு யாரும் எந்த வேலையும் கொடுப்பதும் இல்லையாம். ஆதலால் உடல் தேறிய பின்னர் பாலியல் தொழிலில்தான் இவர்களால் செய்ய முடியுமாம். வேறு வழியே இல்லையம்.
அதெப்படி இவர்களால் 'பாலியல் தொழில்..'? விபச்சாரம் செய்யும் பெண்களிடம் செல்ல பணம் தர முடியாதவர்களுக்கு இவர்கள் ஓரினச்சேர்க்கை மூலம் வடிகால் தருகிறார்களாம். அப்படிப்பட்ட மிருகங்களும் தமிழ் நாட்டில் நிறைய உள்ளனர் போலும்... //Clients who came to their quarters, she said, were often heterosexual men who could not afford a female prostitute. The rest were closet gays for whom hijras (வடநாட்டில் அரவாணிகளுக்கு இதுதான் பெயர்) were the only source of release for pent-up frustrations.// இவர்கள் வாழ்க்கை இப்படித்தான் ஓடுகிறது... என்கிறது இந்த நேரடி ரிப்போர்ட்.
///அரவாணிங்க வேறு தொழில் இல்லாம பெரும் பகுதி பாலியல் தொழிலாளர்களா இருப்பது என்னவோ உண்மைதான்..!///--தமிழ்நாட்டின் ஒரு 'நன்கு அறியப்பட்ட பிரபல அரவாணி' ஒரு பேட்டியில் கூறியதுதான் இது.
அப்புறம், சென்ற பதிவில் இதையும் சொல்லி குழப்ப வேண்டாமே என்று விட்டிருந்த (turner syndrome) "X0 குரோமோசோம் பெற்ற பெண் இயல்புகள் குறைவான பெண்கள்" பற்றி இப்போது பார்ப்போம். இவர்கள் 5000-ல் ஒன்று என்ற வீதம்தான் பிறப்பார்கள். இவர்களையும், குடும்பத்தார் மற்றும் ஆசிரியர்கள் கவனித்து பருவ வயதில் ஹார்மோன் பேலன்ஸ் செய்திடல் வேண்டும். ஆனால், பலருக்கு அறிகுறிகள் தெரியாமலேயே இருந்து விடுவார்கள். அறிகுறிகள் தெரியாவிட்டாலும் பெண்கள் விஷயத்தில் விடலைப்பருவத்தில் அவ்வளவு லேசாக பெற்றோர்கள் விட்டுவிட மாட்டார்கள். 'ஏன் இன்னும் என் மகள் வயதிற்கு வரவில்லை...' என்று மருத்துவரிடம் விரைவாகவே அழைத்துச்சென்று விடுவார்கள்.
பொதுவாக இவர்கள் மிக உயராமாக இருப்பார்களாம். இவர்களுக்கான treatment பற்றி இத்தளம் என்ன சொல்கிறதென்றால்... ///Estrogen replacement therapy is often started when the girl is 12 or 13 years old. This helps trigger the growth of breasts, pubic hair, and other sexual characteristics. Women with Turner syndrome who wish to become pregnant may consider using a donor egg.///
இவர்களுக்கு ஈஸ்ட்றோஜென் ஹார்மோன் அளவு ஆண்டோரோஜெனை (குறிப்பாக டெஸ்ட்டோஸ்டீரோன்) ஹார்மோனை விட குறைவாக இருக்கும். இந்த 'குறைவு' என்ற வித்தியாசம் எந்த அளவு அதிகமாக உள்ளதோ அந்த அடிப்படையில் அப்பெண்களின் வெளிப்புறத்தோற்றதில்... முகத்தில் முடி, ஆண் குரல், சிறிய மார்பகம் கொண்டிருப்பார்கள். ரொம்ப ரொம்ப அரிதாகவே இவர்கள் கவனிக்கப்படாமல் போவதெல்லாம். அப்போது இவர்கள் வளர்ந்த குடும்ப சூழ்நிலை கல்வியறிவு சுற்றுப்புற மக்களின் ஏளனம் கேலிப்பேச்சு திருமணம் நடக்காத விரக்தி இவை எல்லாமே இவர்களை அலைகழிக்கும். இவர்களையும் வீட்டை விட்டு ஓட வைக்கும்... பெண்ணாகவே...! அங்கே "அவர்கள்-சமூக பாலியல் வியாபாரிகள்" இவர்களை கவனித்துக்கொள்வார்கள். ஆண் போல தோற்றம் காட்டும் இவர்களை "ஆணாக மாற" ஏனோ அக்கூட்டம் அனுமதிப்பதில்லை...!? இவர்களையும் மூன்றாம் பாலினம் என்று அழைப்பது மூடத்தனமாம்..! அறிவியல் சொல்கிறபடி, நாம் "45X0-Female" என்றே அழைப்போம்.
///அரவாணிகளோட பாலின மாற்று அறுவை சிகிச்சை இன்னும் இந்தியாவுல நடைமுறைப்படுத்தப்படல. இங்கு “Castration” அப்படிங்குற ஆண் உறுப்பு நீக்கும் அறுவை சிகிச்சை மட்டுமே இருக்குது. ஆனா பாலின மாற்று அறுவை சிகிச்சையை சட்டபூர்வமா ஆக்கணும், அதுபோல அறுவை சிகிச்சை முடிஞ்ச அப்புறம் மேலை நாடுகள்ல உள்ளதுபோல இனிமேல் பெண் என்ற மருத்துவ சான்றிதழ் தேவை.///----தமிழ்நாட்டின் ஒரு 'நன்கு அறியப்பட்ட பிரபல அரவாணி' அதே பேட்டியில் கூறியதுதான் இது.
இதனால் பெரும்பாலும் யாரும் "பாலினம் மாற்று அறுவை சிகிச்சை(?)" செய்வதில்லை. அப்படியே யாராவது செய்ய நாடினால்... வெளிநாடுதான் செல்ல வேண்டும். சில லட்சங்கள் செலவு செய்ய தயாராக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு... இந்த தாய்லாந்து மருத்துவர் செய்யும் SRS ( Sex Reassignment Surgery) அறுவை சிகிச்சை சில லட்சங்கள் ஆவது அடுத்த விஷயம்... அந்த அறுவை சிகிச்சை செய்முறையும்... ஆறுமாதம் என்ன செய்ய வேண்டும் என்பதும்... படித்தால் ரத்தக்கண்ணீர்தான் வரும். கொடுமை. மகா கொடுமை.
இதனால் பெரும்பாலும் யாரும் "பாலினம் மாற்று அறுவை சிகிச்சை(?)" செய்வதில்லை. அப்படியே யாராவது செய்ய நாடினால்... வெளிநாடுதான் செல்ல வேண்டும். சில லட்சங்கள் செலவு செய்ய தயாராக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு... இந்த தாய்லாந்து மருத்துவர் செய்யும் SRS ( Sex Reassignment Surgery) அறுவை சிகிச்சை சில லட்சங்கள் ஆவது அடுத்த விஷயம்... அந்த அறுவை சிகிச்சை செய்முறையும்... ஆறுமாதம் என்ன செய்ய வேண்டும் என்பதும்... படித்தால் ரத்தக்கண்ணீர்தான் வரும். கொடுமை. மகா கொடுமை.
சரி... இவ்வளவு கஷ்டப்பட்டு செலவு செய்து ஏன் பெண் உறுப்பை தனக்குள் பொருத்திக்கொள்ள வேண்டும்? ஏனெனில், இந்த SRS-ல் இதுமட்டும்தான் செய்யப்படுகிறது. ஆனால், ஓவரியோ, கர்ப்பப்பையோ பொருத்தப்படுவதில்லை. கூடவே சரியான அளவிற்கு மார்பகம் பொருத்தப்படுகிறது. இதற்கு பெயர்தான் பெண்ணாக மாறுவதா?!? பெண்ணாக மாறுவது என்றால் மகப்பேறுக்கு அவசியப்படும் உறுப்புகள் தேவை இல்லையா? இதெல்லாம் அப்போ குடும்ப வாழ்க்கை வாழ்வதற்காக இந்த அறுவை சிகிச்சை இல்லையா? எனில், இவர்கள் ஆணாக இருந்து பெண்ணாக மாறுவதில்லை.,! இங்கே, இவர்கள் பெரும்பாலும் ஓரினச்சேர்க்கை வாதியிலிருந்து விபச்சாரியாக மாற்றப்படுகிறார்கள். இனிதான் வியாபாரம் களைகட்டும். ம்ம்ம்ம்.... அந்த தாய்லாந்து சுட்டியில்... வரும் பேஷன்ட் எயிட்ஸ் நோயாளியாக இருந்தால் மற்றவர்களை விட 60% ஃபீஸ் அதிகமாக கட்டியாக வேண்டுமாம்... தூத்தேறி..! எங்கே போகிறது நம் உலகம்?
இந்த அரவாணிகள் எதற்கு அரசிடம் 'கடுமையாக போராடி' இ.பி.கோ-377-வது சட்டத்தை கடந்த வருடம் (ஓரினச்சேர்க்கையில் ஈடு படுவோர்க்கு தண்டனை சட்டம்) நீக்க வைத்தார்கள் என்று?
இப்போது புரிகிறதா..?
இந்த அரவாணிகள் எதற்கு 'கடுமையாக போராடி' இலவசமாக தமிழக அரசு மருத்துவமனையிலேயே "பாலின மாற்று அறுவை சிகிச்சை"(!?) பெறும் வசதியை சென்ற ஆண்டு பெற்றுக்கொண்டார்கள் என்று?
இப்படி போனால் நிலைமை என்னாகும்...? எயிட்ஸ் வராதா? ஆம்... வரும். அதோடு...சிபிலிஸ், கோனாரியா, ஹெர்பிஸ், ஜெனிட்டல் வார்ட்ஸ், அமீபியாசிஸ், சியார்டியாசிஸ், ஹெப்படைடிஸ் பி... என்று நிறைய வரும் என... இந்த அரவாணிகள் செய்யும் ஓரினச்சேர்க்கை குறித்து ஒரு விரிவான மருத்துவ (Dr.S.ஜீவராஜன் M.D.,D.V.,) அலசல் ஒன்றை இங்கே சென்று படித்து வாருங்கள்.
இந்த நோய்களுக்கெல்லாம் மருந்து மாத்திரை எடுத்துக்கொண்டு இவர்களின் மிகப்பெரும்பாலோரின் 'தொழிலை' தொடர்ந்து நடத்தி தமிழகத்தில் இவ்வியாதிகளை பரப்ப என்ன வழி..? ஹி..ஹி..ஹி... அதற்குத்தான் இருக்கவே இருக்கே... "தமிழக அரவாணிகள் நலவாரியம்" மக்கள் பணத்திலிருந்தே நிதி கறக்க...!? (இதில் பல குளறுபடிகள் உள்ளன... யார் அரவாணிகள் என்பதிலேயே குழப்பம்..!? இதற்கு யார் இறுதித்தீர்வு சொல்வது, யாருடைய ஒப்புதலின் அடிப்படையில் கலெக்டர் அலுவலகத்தில் 'இவர் அரவாணிதான்' என்று பெயர் பதியப்படுகிறது... என்றால்... அவர்-'ஒப்புதல் அளிப்பவர்', அரசு மருத்துவரோ, கலெக்டரோ அல்லவாம்..!? 'அவர்களின் குழுமத்தலைவர்' "நாயக்"-தானாம்...!? வீட்டைவிட்டு ஓடிப்போய் 'இக்குழுமத்தில்' இனையாதவர்கள் கதி? அதோகதிதானாம்..! மேலும் விபரங்கள் இங்கே.) இப்போது... இந்த 'நலவாரியம்' மீதே சந்தேகம் எழுகிறது... "இது யாருடைய நலத்துக்கான வாரியம்" என்று..! Tehalka போன்ற investigative journalist-கள் அதை கவனித்துக்கொள்ளட்டும்.
மேற்படி சாதகமான சூழ்நிலைகளின் விளைவு என்ன தெரியுமா...?
HIV/AIDS நோயாளிகள் அதிகம் கொண்ட நாடுகளில் உலகிலேயே இந்தியாவிற்குத்தான் தற்போது "கிட்டத்தட்ட... முதலிடம்"..!
உதாரணாமாக... சர்க்கரை நோயாளிகளுக்கு 'இன்சுலின் ஹார்மோன்' குறைந்தால் சர்க்கரை அளவு அவர்களிடம் கூடி விடும். இதற்கு என்ன செய்கிறார்கள்?
அவர்கள், "மனதும் /உடம்பும் விரும்பும்படி(!?)..."கிலோ கிலோவாய் இனிப்பு சாப்பிடுவதா சிகிச்சை?
உச்சநீதி மன்றம், "இவர்கள் இனிப்பு சாப்பிடுவது இவர்களின் தனிமனித உரிமை" என்றா தீர்ப்பு அளிக்கிறது?
தமிழகஅரசு... இவர்களுக்கு ரேஷன் கடையில் "இனி இலவச சீனி வழங்கப்படும்" என்றா அறிவிக்கிறது?
இல்லையே...! அறிவியல் கூறும், "இன்சுலின் இஞ்சக்சனே சரி" என்று அல்லாவா இவர்கள் அனைவருமே ஏற்றுக்கொள்கிறார்கள்...?! மனதும் உடம்பும் சொல்வதை ஏற்றுக்கொள்ள வில்லையே..?
வெட்டப்பட்டதால்... ஒரு காலை இழந்த எட்டுக்கால் பூச்சியை...'ஏழுக்கால் பூச்சி' என்று பாஸ்போர்ட் அலுவலக விண்ணப்ப படிவம்/நீதிமன்றம்/அரசு என யார் அழைத்தாலும் நான் அப்படி அழைக்க மாட்டேன். "ஒரு கால் வெட்டப்பட்ட எட்டுக்கால் பூச்சி" என்றுதான் நான் அழைப்பேன்...! அப்படித்தான் அறிவியலும் அழைக்க சொல்கிறது..!
இதுவரை 'இவர்களில்' பெரும்பாலானவரை பற்றி பார்த்துவிட்டோம். இவர்கள் அனைவருமே 1-மரபணு பால் (Genetic Sex) அடிப்படையில் 3-புறத்தோற்ற பால் (Phenotype Sex) -ல் ஹார்மோன் குளறுபடியால் உண்டானவர்கள். (குறிப்பு... 'இஸ்லாம் தரும் தீர்வு', 'இவர்களுக்கு என்னதான் முடிவு' ஆகியன மொத்தமாய் இன்ஷாஅல்லாஹ் கடைசி பகுதியில்..!)
இனி, மிக மிக மிக அரிதாக... சிறு சிறுபாண்மையாக ஒரு சிலர் "இவர்களில்" மிச்சம் இருக்கின்றனர்..! இவர்கள் யாரெனில் 1-மரபணு பால் (Genetic Sex) அடிப்படையில் அல்லாமல் 2-இன உறுப்புகள் பால் (Gonadal Sex)-ல் ஏற்படும் இன உறுப்புக்கள் குளறுபடியால் உண்டாகிறவர்கள்... 'transgender' என்ற பெயருக்கு ஓரளவு தகுதியானவர்கள் --ஆனாலும்..,'மூன்றாம் பாலினம்' அல்ல--...
.....இவர்களைப்பற்றியும்...
=>தங்களைப்பற்றி ‘அவர்கள்’ என்ன நினைக்கிறார்கள்?
=>'இவர்கள்' பற்றி மக்கள் கருத்து என்ன?
=>'அவர்களுக்கு' அரசு என்ன சொல்கிறது?
=>இதில் இஸ்லாம் தரும் தீர்வு என்ன?
=>'இவர்களுக்கு' என்னதான் முடிவு
....என இன்ஷாஅல்லாஹ் அடுத்தடுத்த பதிவுகளில் தொடர்வோம்.
டிஸ்கி:
இது,'மூன்றாவது பாலினம் என்றால் மூடத்தனமாம்' தொடரின் இரண்டாம்பதிவு..! இந்த பதிவை படித்தோர் தொடரின் அடுத்த 4 பதிவுகளான...
இது,'மூன்றாவது பாலினம் என்றால் மூடத்தனமாம்' தொடரின் இரண்டாம்பதிவு..! இந்த பதிவை படித்தோர் தொடரின் அடுத்த 4 பதிவுகளான...
ஆகியவற்றையும் தொடர்ந்து படித்து விடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் சகோ..!
18 ...பின்னூட்டங்கள்..:
அதிர்ச்சிகரமான தகவல்கள்.. ஒரு சுட்டியை (கீற்று) வாசித்ததே அருவெறுப்பாய் இருக்கிறது!! இறைவன் காப்பாற்றி, நல்புத்தி தரட்டும்.
@ஹுஸைனம்மாசகோ.ஹுசைனம்மா... ஒரு சுட்டிக்கே இப்படி என்றால்..?
எனக்கோ, இந்த தலைப்பை 'ஏன்தான் எடுத்துக்கொண்டோமோ' என்று நான் நொந்து கொள்ளும் அளவிற்கு ஆகிவிட்டது. அவ்வளவு அக்கிரமம் நடக்கிறது சமூகத்தில்.
//இறைவன் காப்பாற்றி, நல்புத்தி தரட்டும்.//--ஆமீன்... சரியாக சொன்னீர்கள்... இனி இறைவன்தான் நம் நாட்டை காப்பாற்ற வேண்டும்.
அதற்கு முன் இனி இந்த கூட்டம் பெருகாவண்ணம் ஒவ்வொரு பெற்றோரிடமும் மனமாற்றம் ஏற்பட வேண்டும். அதற்கு சிந்தித்து நம்மாலான முயற்சிகளை எடுக்க வேண்டும்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
நல்ல பகிர்வு, அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் உள்ளது.
ஆஷிக்,
எனக்கு ஒரு சின்ன டவுட்டு. முடிஞ்சா கிளியர் பண்ணுங்க. இந்த மூணாம் பாலினத்த (???) உருவாக்கினது ஆண், பெண் என்ற பாலினம் தானே???
இல்ல ஆண் பெண் இல்லாம இவங்க உருவாக முடியுமா?
சரி, அப்படி தான் இல்ல. இவங்களால இவங்கள போன்ற இனத்த தான் உருவாக முடியுமா? முடியாதுன்னா அப்புறம் எப்படி இவங்கள வேறு ஒரு இனமா பாக்க முடியும்? மனிதர்களில் குறைபாடுள்ள மனிதர்களா தானே பாக்க முடியும்? மாற்று திறனாளிகள் போல தானே இவங்க?
இதுலயும் அரசியல் பண்ணும் மனுசங்கள நெனச்சா வெறுப்பு தான் வருது
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு!
சிறப்பான ஆய்வு சகோ, எளிய நடையில் எல்லோரும் புரியும் வண்ணம் அதே சமயம் தேவையில்லாத முகம் சுழிக்கும் வார்த்தைகளை தவிர்த்து கொடுத்திருப்பது மிகவும் சிறப்பு, நமது இந்த ஊனமுற்ற சகோதரர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் படித்து சிந்திக்கும் வண்ணம் இங்கு உலவும் நண்பர்கள் அவர்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும். இறைவன் தங்களுக்கு இரு உலக வாழ்கையிலும் நன்மையை வழங்குவானாக! ஆமீன்!
salaam nanbare....
good post
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
நான் 13 வருடங்கள் பள்ளப்பட்டி காரர்கள் நடத்தும் ஜவுளிக்கடையில் வேலை பார்த்திருக்கிறேன் கும்பகோணம் சீமாட்டி மயிலாடுதுறை சீமாட்டி இங்கேல்லாம் வேலை பார்த்திருக்கிறேன் பொதுவாக பள்ளபட்டிகாரர்களின் ஜவுளிக்கடையில் சமையல் பண்டாரிகளாக இந்த திருநங்கைகள் தான் இருப்பார்கள்
கடையில் வேலை செய்கிற 150 தொழிலாளர்களுக்கும் மூன்று வேலையும் முதலாளிகள் கொடுக்கிற லொ பட்ஜெட் பணத்திலும் ருசியாக சமையல் செய்யத்தெரிந்தவர்கள் நல்ல உழைப்பாளிகள் இவர்களிடம் 13 வருடங்கள் நட்பாக பழகியிருக்கிறேன் அப்படிப்பட்ட ஒருவர் ஆரம்பத்தில் என்னிடம் இழுத்து இழுத்து பேசினார் நான் அவரிடம் கண்டிஷனாக என்னிடம் இழுத்து இழுத்து பேசதே என்னை போல நர்மலாக பேசு உனக்கு விபச்சாரம் செய்ய வேண்டிய தேவையில்லை ஜவுளிக்கடையில் கவுரமாக உழைத்து மாதம்4000 சம்பாதிக்கிறாய் எனக்கு நண்பானாக இரு சரியாக நடந்துக் கொள் என்று சொன்னபிறகு என்னிடம் சரியாக பேசுவார் அடுத்தவரிடம் வேறு மாதிரி நடித்து பேசுவார் இது சம்பந்தமான அனுபவப்பூர்வமான பதிவு தேவைப்பட்டால் எனது ப்ளாக்கில் எழுத தயராகயிருக்கிறேன்.
சகோ முஹம்மது அஷிக் தொடர்ந்து எழுதுங்கள்
ஆங்கிலத்தில் படிக்க முடியாத என்னை போன்றவர்களுக்கு நிறைய விஷயங்கள் தெரிய வரும்
நன்றி சகோ
@இளம் தூயவன் அலைக்கும் ஸலாம் வரஹ்... சகோ.இளம்தூயவன்,
வருகைக்கும் கருத்துப்பகிவுக்கும் நன்றி.
@Atheist
//எனக்கு ஒரு சின்ன டவுட்டு. முடிஞ்சா கிளியர் பண்ணுங்க.//--நீங்க கேட்டது எல்லாமே டவுட்டு இல்லீங்கோ சகோ. அவையெல்லாமே தவறானா புரிதல்களுக்கு வைத்த அதிர்வேட்டு..!
//இந்த மூணாம் பாலினத்த (???) உருவாக்கினது ஆண், பெண் என்ற பாலினம் தானே???//---அடி சக்கை... அதிர்வேட்டு நம்பர் ஒன்.
"ஆமாம்"
//இல்ல ஆண் பெண் இல்லாம இவங்க உருவாக முடியுமா?//--அதிர்வேட்டு நம்பர் டூ.
"முடியாது..."
//இவங்களால இவங்கள போன்ற இனத்த தான் உருவாக முடியுமா?//---அதிர்வேட்டு நம்பர் த்ரீ.
"முடியவே முடியாதுங்கோ... ஆனால், தக்க நேரத்தில் தக்க சிகிச்சையை தக்கவாறு எடுத்துக்கொண்டால் வாய்ப்பிருக்கிறது..!? ஹி.. ஹி.. அதுகூட மூன்றாம் பாலினத்தை உருவாக்க அல்லங்கோ...! முதலிரண்டு பாலினத்தை உருவாக்கத்தான்..!"
//முடியாதுன்னா அப்புறம் எப்படி இவங்கள வேறு ஒரு இனமா பாக்க முடியும்?//--அதிர்வேட்டு நம்பர் ஃபோர்.
"எப்படி முடியும்?" (நான் இவ்வளவு கஷ்டப்பட்டு மாங்கு மாங்குன்னு இரண்டு பதிவு போட்டிருக்கவே வேண்டாம் போலிருக்கே...)
//மனிதர்களில் குறைபாடுள்ள மனிதர்களா தானே பாக்க முடியும்? மாற்று திறனாளிகள் போல தானே இவங்க?//--அதிர்வேட்டு நம்பர் ஃபைவ்.
"புட்டு புட்டு வச்சிட்டீங்க... இனி நான் என்னத்த எழுத..?"
//இதுலயும் அரசியல் பண்ணும் மனுசங்கள நெனச்சா வெறுப்பு தான் வருது//--"கடும் வெறுப்பு எனக்கு..!"
இந்த விழிப்புணர்வையாவது இந்த தவறான புரிதல்காரர்களிடம் ஏற்படுத்த நம் பதிவுகள் உதவினால் போதும் என்ற ஒரு மன ஆறுதல்.
@M. Farooq அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு!
சகோ.ஃபாருக்,
//தேவையில்லாத முகம் சுழிக்கும் வார்த்தைகளை தவிர்த்து கொடுத்திருப்பது//--அந்த எல்லையை தாண்டினால் ஆபாசம்... இந்த எல்லையை தாண்டினால் பொருள் இருக்காது. இதற்குத்தான் ரொம்ப மெனக்கெட வேண்டி இருந்தது சகோ.
//இறைவன் தங்களுக்கு இரு உலக வாழ்கையிலும் நன்மையை வழங்குவானாக!//--ஆமீன்!
தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சகோ.
@ரஹீம் கஸாலி Salaam be on you too...
//good post//--Thanks sako.kasaali.
@ஹைதர் அலிஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//இது சம்பந்தமான அனுபவப்பூர்வமான பதிவு தேவைப்பட்டால் எனது ப்ளாக்கில் எழுத தயராகயிருக்கிறேன்.//---அடி தூள்..!
இங்கே பலரிடம் பல தவறான புரிதல்கள் இருப்பதை அவர்களின் பதிவுகள் பின்னூட்டங்கள் மற்றும் விவாதங்கள் மூலம் அறிந்து கொண்டேன். இதுபோன்ற விழிப்புணர்வு பதிவுகள்... அதுவும் 'அனுபவப்பூர்வமான பதிவு' என்றால் விழிப்புணர்வூட்டலுக்கு இன்னும் 'ஸ்ட்ராங்'தான்.
தங்கள் கருத்துக்கும் உறுதுணைக்கும் மிக்க நன்றி சகோ.ஹைதர்..!
அரவாணி !!!
யார் இவர்கள் ? எங்கிருந்து வந்தார்கள் என்று கேள்வி எழுப்பினால் இவர்களின் பூர்வீகம் தெரிந்து விடும்.
நினைத்துப் பார்க்கவே பிரமிப்பாக இருக்கின்றது !
இவர்களுக்கு ஆதரவாக அரசும் மக்கள்களும் இருப்பது வெட்க்கத்தர்க்குரிய செயல்.
நல்லதொரு ஆதங்கம் சகோ வாழ்த்துக்கள் !
ஒரு வாரம் கொஞ்சம் வேலையாக வெளியூர் சென்றிருந்தேன் வலைப் பகுதிக்கு வரமுடியவில்லை
@அந்நியன் 2//இவர்களுக்கு ஆதரவாக அரசும் மக்கள்களும் இருப்பது வெட்க்கத்தர்க்குரிய செயல்.//--சரியாக சொன்னீர்கள் சகோ.
ஆனால் ஒன்றை நாம் தெளிவாக்கிக்கொள்ள வேண்டும்.
வீட்டை விட்டு-குடும்ப அமைப்பை உதறித்தள்ளி ஓடிப்போகும் இவர்கள் மிக அசிங்கமான வாழ்க்கை வாழ்ந்து அதன் பலனை சமுதாயத்திற்கு நோயாக தருவதை அரசும் மக்களும் உணர்ந்து உடனடியாக இத்தீமைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.
இவர்கள் இப்படி வீட்டை விட்டு ஓட வைக்கும் காரணிகள் எதுவாக இருப்பினும் அவற்றை பெற்றோரும் சமூகமும் அரசும் களைய முற்படல் வேண்டும்.
பெரும்பான்மை நல்லவர்களின் வாழ்வுரிமையா...? மிகச்சிறுபாண்மை தீயவர்களின் வாழ்வுரிமையா...? எது மனித உரிமை என்பதில் தெளிவு பிறத்தல் வேண்டும்.
அந்த 'கேடுகெட்ட குழுமத்தில்' உறுப்பினர்களாக உள்ள தீயவர்கள் மட்டுமே தமிழக அரசின் நலவாரியத்தின் நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பதும்... இதேபோல பிறவிக்குறைபாட்டில் பாதிக்கப்பட்ட அக்குழுமத்தில் இணையாத நல்லவர்கள் ஒதுக்கப்படுவதும் எதிர்க்கப்பட வேண்டும்.
மக்களும், அரசும், நீதிமன்றமும் 'தனி மனித ஒழுக்கம்' சமூகத்திற்கு மிக மிக இன்றி அமையாதது என்று புத்தி பெற வேண்டும்.
ஏனெனில், வகுப்பில் பாடத்தை கவனிக்காமல் காட்டுக்கத்தல் கத்துவது மாணவரின் தனி மனித உரிமை அல்ல.
போக்குவரத்து விதிகளை ஏற்காமல் இஷ்டத்திற்கு சாலைகளில் வாகனத்தை ஒட்டுதல் என்பது ஒரு ஓட்டுனரின் தனி மனித உரிமை அல்ல.
சமூகத்திற்கு நோய் கொடுத்து கேடுதரும் ஓரினப்புனர்ச்சியும், விபச்சாரமும் அவற்றை செய்யும் கயவாளிகளின் தனி மனித உரிமை அல்லவே அல்ல.
குற்றவாளிகள் தாங்கள் தண்டனை பெறாமல் தப்புவது அவர்களின் தனிமனித உரிமை என்று எவரேனும் சொல்வாரா?
'நன்மை எது', 'தீமை எது' என்று பிறித்தறியும் புத்தி அனைவருக்கும் வந்து விட்டால் அதுதான் சமுதாயத்தின் பொற்காலம்.
டிஸ்கி:
நான் 'இவர்களுக்கு' எதிரானவன் அல்ல. இவர்களில் உள்ள தீயவர்களுக்கே எதிரி. அவர்களே என் இந்த இரண்டு பதிவிலும் காணப்பட்டவர்கள்...
அவர்களில் ஓரிரு சதவிகிதம் நல்லவர்களும் உள்ளார்கள். திருமணமே செய்யாமல் நல்லொழுக்கம் மிக்கோராய் பெற்றோருடன் வாழ்பவர்கள். அவர்களை பற்றி அடுத்த பதிவில் இன்ஷாஅல்லாஹ் காண்போம்...
நலவாரியம் என்று ஏதேனும் ஒன்று இருந்தால் அது அவர்களுக்காகத்தான் இருக்க வேண்டும்.
சலாம்! சகோ..ஆஷிக்!
மிகுந்த சிரமம் எடுத்து ஆதாரங்களுடன் அதுவும் இலவசமாக பதிவு தருவது பாராட்டுக்குரியது. உங்களைப் போன்றவர்கள் எல்லாம் ஊடகத்துறையில் நுழைந்து கலக்க வேண்டும். பாராட்டுக்கள்.
@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,
//இலவசமாக//--என்னது இலவசமாகவா...? யார் தருவார்கள் பதிவு இலவசமாக..? நல்ல கதை..!
எந்த வித இவ்வுலக ஆதாயங்களுக்காகவும் இன்றி பொது நல நோக்குடன், 'நன்மையை ஏவி தீமையை தடுக்க' நாம் எழுதுவதன் நோக்கம் எல்லாம்... மறுமையில் அதற்கான நற்கூலியை இறைவனிடமிருந்து பெற்று சுவனம் வென்றிடத்தானே அன்றி வேறென்ன காரணம், சகோ.சுவனப்பிரியன்?
ஆக, நாம் இலவசமாகவெல்லாம் எழுதவில்லையே சகோ. ஆதாயத்திற்காகத்தானே சிரமப்படுகிறோம்..!
---உங்களைப்போலவே இன்னொரு சுவனப்பிரியன்.
(என் பிளாக்கின் கீ......ழே கடைசி [ஆங்கில] வரியை படித்திருக்கிறீர்களா சகோ?)
ஆ..... நீங்கள் சொன்னவுடன்தான் சென்று பார்த்தேன். மரம் நடும் விஷயத்தில் இருவரின் எண்ணங்களும் ஒத்திருப்பது கண்டு மகிழ்ச்சி!
//ஆக, நாம் இலவசமாகவெல்லாம் எழுதவில்லையே சகோ. ஆதாயத்திற்காகத்தானே சிரமப்படுகிறோம்..!//
உண்மைதான். வாழ்த்துக்கள்.
அல்ஹம்துலில்லாஹ் இந்த உண்மையை வெளிப்படுத்திய உங்களுக்கு நன்றிகள்
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!