அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Sunday, October 23, 2011

49 அறுந்து விழும் லிஃப்டுக்குள் நீங்கள் இருந்தால்... உடனே செய்ய வேண்டியவை..!

நேற்று  இரவு... ஒரு "ஜீவ-மரண போராட்டமாக" கழிந்தது. இறைவன் அருளால் நான் பிழைத்து இருப்பதால் இன்று இந்த பகிர்வு..! நேற்று 'நைட் ஷிஃப்டி'ல் நான் பணிபுரியும் பவர் ப்ளாண்டில் பணி ஆரம்ப ரீடிங் போட லிஃப்டில் டாப் ஃப்ளோர் (12-th floor) சென்று, running equipments' reading எடுத்துக்கொண்டே படிகளில் இறங்கி வருதல் வழக்கம் (150 படிகள்)..!

அப்படி நான் லிஃப்டில் டாப் ஃப்ளோர் சென்றபோது... 11-வது தளத்துக்கும் 12-வது தளத்துக்கும் இடையில் லிஃப்ட் 'ஸ்ட்ரக்-அப்' ஆகி ஏதோ... 'பூகம்பம் வந்த பூமி' போல குலுங்கி ஆடி 'தடால்' என்று நகராமல் பயங்கர சப்தத்துடன் நின்று விட்டது..! உள்ளே பேனலில் எந்த பட்டனும் வேலை செய்யவில்லை. லிஃப்ட் நகரவே இல்லை. அப்போது சோதனையாக நான் மட்டுமே லிப்ஃட்டின் உள்ளே..! அப்புறம் என்ன செய்ய..? அப்போது மணி 22:15.

பொதுவாகவே... பல மாடிக்கட்டடங்களின் லிஃப்ட்டில் சர்ர்ர்ரென மேலே ஏறும்போதோ... சர்ர்ர்ரென கீழே இறங்கும்போதோ நம்மில் பலருக்கு இந்த பயம் ஏற்பட்டிருக்கலாம்... "இந்த லிஃப்ட் அறுந்து 'தடால்' என்று கீழே விழுந்தால்?"...என்று..!

கல்லூரி காலத்தில் ' SPEED ' என்ற ஒரு ஆங்கில திரைப்படம் பார்த்தது முதல் எனக்கும் இந்த பயம் ஏற்பட ஆரம்பித்தது. தற்போது பணி நிமித்தம் உயரமான பனிரெண்டு அடுக்குகளில் தினம் லிஃப்ட்டில் ஏறி இறங்கும் போதும் அவ்வப்போது அந்த பயம் வரும். "இறைவா..! இந்த லிப்ஃட் அறுகாம நல்லபடியா காப்பாத்து" என்றுதான் மனதுக்குள் எண்ணம் ஓடும்.


ம்ம்ம்... அப்புறம் என்ன செய்தேன்..?!

உடனடியாக லிப்ஃட் உள்ளே உள்ள தொலைபேசி (அடடா... இது எவ்ளோ அவசியம் பாருங்க சகோ..?) வாயிலாக ஷிப்ஃட் இன் ச்சார்ஜ்-க்கு தகவல் சொன்னேன். அவர் 'சுவிட்ச் போர்ட் ஆப்பரேட்டருக்கு' தகவல் கொடுத்து கூப்பிட்டு, 12th floor எமெர்ஜென்சி லாக் ரிலீஸ் முறையில் வெளிப்புறமாக அடுத்தடுத்த இரு கதவுகளையும் திறந்தார். திறந்தால்... அடப்பாவமே..! அவர் நிற்கும் 12-வது தளம் என் தலைக்கும் மேலே... மிக உயரத்தில்..! அவர் கையை கூட தொட்டுப்பிடித்து ஏற முடிய வில்லை. அப்படியே ஏறினாலும், அந்த கேப்பில் புகுந்து வெளியே போக முடியுமா..? டவுட்டு..!

ஆனால், 11-வது தளம் முழங்கால் உயரத்தில் இருந்தது. எனவே, நானே 11-வது தளத்தின் வெளிக்கதவை திறக்குமாறு கேட்டேன். எவ்வளவோ முயற்சித்தார்கள். முடியவில்லை. சுமார் ஒரு மணிநேர போராட்டத்துக்கு பின்னர், கதவை உடைத்து விடலாம் என்று முடிவு செய்து விட்டனர்.

இதற்குள், ஷிஃப்டில் இருந்த வேறு சிலர்  உதவிக்கு வர... ஒரு சிலர், லிஃப்ட்டின் 'மெயின் கண்ட்ரோல் சிஸ்டம்' சென்று அதை வெளியிலிருந்து 'மேனுவல் மோடுக்கு' மாற்றி செயல்படுத்த முனைய... ஏதோ வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல... அந்த லிஃப்ட், 'தடால்' என்று... கிட்டத்தட்ட கீழே  விழுந்தது எனலாம். அதேநேரம், உள்ளே நான் நிலை குலைந்து விழுந்தேன். இரண்டே வினாடிகள் தான். மீண்டும் நிலநடுக்கம்..! சடன் பிரேக்..! சுத்தமாக பயந்தே விட்டேன். 'இன்றுதான் என் இறுதி நாளோ' :) என்று..!  "இனி இதுபோல ரிஸ்க் எடுக்க வேண்டாம்" என்று வெளியில் உதவிக்கு நின்றவர்களிடம் அலறினேன்.

இப்போது லிஃப்ட் 10-வது தளத்தில் மேல் பாதியில் நின்றது. அந்த கதவையும் வெளியிலிருந்து திறக்க முடியவில்லை. இந்நிலையில், அந்த 10-வது தளத்தின் வெளிப்புற கதவின் டாப்பில் உட்புறமாக இருக்கும் 'இன்ஸ்ட்ருமென்ட் பாக்ஸ்' கவர் இல்லாமலேயே திறந்தே கிடந்தது... எனக்காகவா..? இறைவனின் அருள்..! அதில் உள்ள லிமிட் ச்விட்சுகளை... எல்லாம் இறைவனை வேண்டிக்கொண்டே... இழுத்தேன்... தள்ளினேன்... அழுத்தினேன்... தட்டினேன்... திருகினேன்... அல்ஹம்துலில்லாஹ்... கதவு திறந்தது..! உடனே, இடுப்பு உயரம் என்பதால், வெளியே குதித்து ஒருவழியாக 23:50 மணிக்கு 'விடுதலை' ஆனேன்..!

அப்போதுதான் தோன்றியது... "இனி, லிப்ஃட் ஸ்ட்ரக் ஆகாமல்... அறுந்து விழுந்தால்..? அந்த சூழ்நிலையை கையாள்வது பற்றி நாம் அவசியம் அறிந்து கொள்ள வேண்டுமே" ...என்று தோன்றியது. ஷிஃட் முடிந்து வந்து கூகுளில் தேடினேன். சில ஆங்கில தளங்கள் கிடைத்தன. அவற்றை படித்தபோது விஷயத்தின் முக்கியத்துவம் கருதி பொதுவில் இப்போது பகிர்கிறேன்..!

இதோ... அதற்கான 'நெருக்கடி கால' அறிவுரைகள்.

உங்கள் லிஃப்ட் பத்தாவது மாடியில் செல்லும் போது அறுந்து விடுகிறது என்று வைத்துக்கொள்வோம். (என்னவொரு கொலவெறி..?) சரி...சரி, 'நாம் பயணிக்கும் லிஃப்ட்' என்றே வைத்துக்கொள்வோம். அறுந்து சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று விழுந்து கொண்டு இருக்கிறது..! சில வினாடிகள்தான். நம் உயிரை காப்பாற்றிக்கொள்ள அதற்குள் நாம் சில முயற்சிகள் செய்தாக வேண்டுமாம். அவை என்னென்ன..?

  • 1 கைகளில் இருக்கும் பத்து விரல்களைக்கொண்டும் அங்கே போர்டில் உள்ள எல்லாதளத்தின் பட்டன்களையும் அழுத்த வேண்டும். சும்மா... ஒரு விரலால் ஒவ்வொரு பட்டனாக ஒத்தி ஒத்தி எடுத்தால்... ஸாரி, அந்தோ பரிதாபம்...! நீங்கள் உண்மையிலேயே உயிர் மீது ஆசை இல்லாத ரொம்ப ஜாலி டைப் மனிதர் என்று அர்த்தம். இப்படி செய்தால் என்னவாகும்..? "லிஃப்ட் 'கண்ஃபியுஸ்' ஆகி 'தடால்' என்று பிரேக் போட்டு நின்று விடுமா" என்றால்...ஆமாம்..! இதனை, டெக்னிக்கலாக சொன்னால்... emergency stop system உடனே செயல்பாட்டுக்கு வந்து லிஃட் உடனே நின்று விடுமாம்.
  • 2 ஒருவேளை அந்த சிஸ்டம் அந்த லிஃப்ட்டில் இல்லை என்றால்..? டோன்ட் ஒர்ரி சகோ..! உடனே நாம் நம் முதுகையும் தலையையும்  நேர்க்கோட்டில் லிஃப்ட்டின் சுவரோடு சேர்த்து வைத்து செங்குத்தாக ஒட்டிக்கொள்ள வேண்டும். சுவரை ஒரு பாதுகப்பாக்கி முதுகுத்தண்டு அதிர்ச்சியடையாமல் இருக்கத்தான். 
  • 3 பின்னர், உள்ளே ஏதும் கைப்பிடி என்று ஏதும் இருந்தால் அதையும் படத்தில் காட்டி இருப்பது போல கைகளால் பிணைத்து கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும் சகோ..! ஏனெனில், பேலன்ஸ் தவறி தூக்கி வீசப்படாமல் உடம்பு அடிபடாமல் ஒரு சப்போர்ட்டுக்காக.
  • 4 அப்புறம், முக்கியமாக நாம் நிற்காமல், முழங்கால்கள் சற்றே மடியும்படி அமர்ந்தும் அமராமல் நின்றும் நிற்காமல் படத்தில் உள்ளவாறு இருக்க வேண்டும். காரணம்... அறுந்து விழும் லிஃப்ட் முழு வேகத்தில் பயங்கர அழுத்தத்தில் எடையுடன் தரையை மோதும்போது... நின்று கொண்டு இருந்தால் மூட்டு எலும்புகள் உடைந்து அதன் அதிர்வில் வரிசையாக முதுகெலும்பும் எல்லா எலும்புகளும் சிதைந்து நொறுங்கி வி(டக்கூ)டும். அப்படியானால், உயிர் பிழைக்க வாய்ப்பு இருக்காது. எனவே, இந்த ஆபத்திலிருந்து நம்மை காப்பாற்ற ஒரு ஷாக் அப்சார்பர் மாதிரி ஒரு நம் எலும்பு மண்டலத்துக்கு ஒரு குஷநிங் கொடுக்கிறோம்..! 
  • 5 அப்புறம் இன்னொரு பாதுகாப்பு அம்சமும் பொதுவாக லிஃப்டில் உண்டு. அதாவது, லிஃப்ட்டின் அடிப்பாகத்தில் "எதற்கும் இருக்கட்டுமே" என்று ஸ்ப்ரிங் குஷன் ஷாக் அப்சார்பர் இருக்கும். இதன் பீரியாடிக் மெயின்ட்ட்டனன்ஸ், பழுதில்லாமை, விழும் லிஃப்ட்டின் மொத்த ஓவர்லோட் எடை, அதன் விழும் அசுரவேகம்... என இதெல்லாம் ஸ்ப்ரிங்கின் பாதுகாக்கும் திறனை பாதிக்கும் காரணிகள் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும் சகோ..! இதற்காக சில தளங்களில் எழுதி இருப்பது போல, தரையில் மோதும்போது நாம் எம்பிக்குதிக்க வேண்டியதில்லை. அறிவியல் ரீதியாக அது தவறு. ஏனெனில், எப்படி இருந்தாலும் ஒரே வேகத்தில்தான் மோதுவோம்.

அவ்வளவேதாங்க சகோ..! என்ன ஒன்று..! இந்த "வாழ்வா..? சாவா..?" போராட்டத்திலே... மேலே சொன்னவற்றை எல்லாம் நாம் செய்வதற்குரிய அவகாசம் சில நொடிகள்தான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சரியாகவும் பதற்றம் இன்றி முறையாக செய்ய வேண்டும். 'உயிர் பிழைப்போம்' என்ற மனஉறுதி, போராடிப்பார்ப்போம் என்ற உத்வேகம், முயற்சியில் நம்பிக்கை எல்லாம் இருக்க வேண்டும். 

எல்லாம் நடந்து முடிந்து... பிழைச்சுக்கிடந்தால்... வெளியே வந்து 'எப்படி பிழைத்தோம்' என்று ஜம்பமாக பாயின்ட் பை பாயின்ட் ஆக நிருபர்களுக்கு பேட்டி கொடுப்போம் சகோ..! இல்லையேல்... நம்மை பொறுத்த மட்டில் 'இதுதான் இறைவனின் விதி' என்று இவ்வுலகிற்கு ஒரு குட்பை சொல்ல வேண்டியதுதான்..! முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்..!

டிஸ்கி:- 
லிஃப்ட் -இதற்கு யாரும் இன்னும் தமிழ்ச்சொல் கண்டுபிடிக்கலையா சகோ..? தெரிஞ்சா சொல்லுங்க சகோ..!

Our sincere thanks to the following reference sources:- 
http://www.lifeslittlemysteries.com/how-survive-falling-elevator-1935/
http://science.howstuffworks.com/science-vs-myth/everyday-myths/question730.htm
http://www.millionbabyboomers.com/2011/05/boomers-wisdom---actions-that-may-save-life-in-a-falling-lift-accident.html

49 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...