நேற்று இரவு... ஒரு "ஜீவ-மரண போராட்டமாக" கழிந்தது. இறைவன் அருளால் நான் பிழைத்து இருப்பதால் இன்று இந்த பகிர்வு..! நேற்று 'நைட் ஷிஃப்டி'ல் நான் பணிபுரியும் பவர் ப்ளாண்டில் பணி ஆரம்ப ரீடிங் போட லிஃப்டில் டாப் ஃப்ளோர் (12-th floor) சென்று, running equipments' reading எடுத்துக்கொண்டே படிகளில் இறங்கி வருதல் வழக்கம் (150 படிகள்)..!
அப்படி நான் லிஃப்டில் டாப் ஃப்ளோர் சென்றபோது... 11-வது தளத்துக்கும் 12-வது தளத்துக்கும் இடையில் லிஃப்ட் 'ஸ்ட்ரக்-அப்' ஆகி ஏதோ... 'பூகம்பம் வந்த பூமி' போல குலுங்கி ஆடி 'தடால்' என்று நகராமல் பயங்கர சப்தத்துடன் நின்று விட்டது..! உள்ளே பேனலில் எந்த பட்டனும் வேலை செய்யவில்லை. லிஃப்ட் நகரவே இல்லை. அப்போது சோதனையாக நான் மட்டுமே லிப்ஃட்டின் உள்ளே..! அப்புறம் என்ன செய்ய..? அப்போது மணி 22:15.
அப்படி நான் லிஃப்டில் டாப் ஃப்ளோர் சென்றபோது... 11-வது தளத்துக்கும் 12-வது தளத்துக்கும் இடையில் லிஃப்ட் 'ஸ்ட்ரக்-அப்' ஆகி ஏதோ... 'பூகம்பம் வந்த பூமி' போல குலுங்கி ஆடி 'தடால்' என்று நகராமல் பயங்கர சப்தத்துடன் நின்று விட்டது..! உள்ளே பேனலில் எந்த பட்டனும் வேலை செய்யவில்லை. லிஃப்ட் நகரவே இல்லை. அப்போது சோதனையாக நான் மட்டுமே லிப்ஃட்டின் உள்ளே..! அப்புறம் என்ன செய்ய..? அப்போது மணி 22:15.
பொதுவாகவே... பல மாடிக்கட்டடங்களின் லிஃப்ட்டில்
சர்ர்ர்ரென மேலே ஏறும்போதோ... சர்ர்ர்ரென கீழே இறங்கும்போதோ நம்மில்
பலருக்கு இந்த பயம் ஏற்பட்டிருக்கலாம்... "இந்த லிஃப்ட் அறுந்து 'தடால்' என்று கீழே
விழுந்தால்?"...என்று..!
கல்லூரி காலத்தில் ' SPEED ' என்ற ஒரு ஆங்கில திரைப்படம் பார்த்தது முதல் எனக்கும் இந்த பயம் ஏற்பட ஆரம்பித்தது. தற்போது பணி நிமித்தம் உயரமான பனிரெண்டு அடுக்குகளில் தினம் லிஃப்ட்டில் ஏறி இறங்கும் போதும் அவ்வப்போது அந்த பயம் வரும். "இறைவா..! இந்த லிப்ஃட் அறுகாம நல்லபடியா காப்பாத்து" என்றுதான் மனதுக்குள் எண்ணம் ஓடும்.
கல்லூரி காலத்தில் ' SPEED ' என்ற ஒரு ஆங்கில திரைப்படம் பார்த்தது முதல் எனக்கும் இந்த பயம் ஏற்பட ஆரம்பித்தது. தற்போது பணி நிமித்தம் உயரமான பனிரெண்டு அடுக்குகளில் தினம் லிஃப்ட்டில் ஏறி இறங்கும் போதும் அவ்வப்போது அந்த பயம் வரும். "இறைவா..! இந்த லிப்ஃட் அறுகாம நல்லபடியா காப்பாத்து" என்றுதான் மனதுக்குள் எண்ணம் ஓடும்.
ம்ம்ம்... அப்புறம் என்ன செய்தேன்..?!
உடனடியாக லிப்ஃட் உள்ளே உள்ள தொலைபேசி (அடடா... இது எவ்ளோ அவசியம் பாருங்க சகோ..?) வாயிலாக ஷிப்ஃட் இன் ச்சார்ஜ்-க்கு தகவல் சொன்னேன். அவர் 'சுவிட்ச் போர்ட் ஆப்பரேட்டருக்கு' தகவல் கொடுத்து கூப்பிட்டு, 12th floor எமெர்ஜென்சி லாக் ரிலீஸ் முறையில் வெளிப்புறமாக அடுத்தடுத்த இரு கதவுகளையும் திறந்தார். திறந்தால்... அடப்பாவமே..! அவர் நிற்கும் 12-வது தளம் என் தலைக்கும் மேலே... மிக உயரத்தில்..! அவர் கையை கூட தொட்டுப்பிடித்து ஏற முடிய வில்லை. அப்படியே ஏறினாலும், அந்த கேப்பில் புகுந்து வெளியே போக முடியுமா..? டவுட்டு..!
உடனடியாக லிப்ஃட் உள்ளே உள்ள தொலைபேசி (அடடா... இது எவ்ளோ அவசியம் பாருங்க சகோ..?) வாயிலாக ஷிப்ஃட் இன் ச்சார்ஜ்-க்கு தகவல் சொன்னேன். அவர் 'சுவிட்ச் போர்ட் ஆப்பரேட்டருக்கு' தகவல் கொடுத்து கூப்பிட்டு, 12th floor எமெர்ஜென்சி லாக் ரிலீஸ் முறையில் வெளிப்புறமாக அடுத்தடுத்த இரு கதவுகளையும் திறந்தார். திறந்தால்... அடப்பாவமே..! அவர் நிற்கும் 12-வது தளம் என் தலைக்கும் மேலே... மிக உயரத்தில்..! அவர் கையை கூட தொட்டுப்பிடித்து ஏற முடிய வில்லை. அப்படியே ஏறினாலும், அந்த கேப்பில் புகுந்து வெளியே போக முடியுமா..? டவுட்டு..!
ஆனால், 11-வது தளம் முழங்கால் உயரத்தில் இருந்தது. எனவே, நானே 11-வது தளத்தின் வெளிக்கதவை திறக்குமாறு கேட்டேன். எவ்வளவோ முயற்சித்தார்கள். முடியவில்லை. சுமார் ஒரு மணிநேர போராட்டத்துக்கு பின்னர், கதவை உடைத்து விடலாம் என்று முடிவு செய்து விட்டனர்.
இதற்குள், ஷிஃப்டில் இருந்த வேறு சிலர் உதவிக்கு வர... ஒரு சிலர், லிஃப்ட்டின் 'மெயின் கண்ட்ரோல் சிஸ்டம்' சென்று அதை வெளியிலிருந்து 'மேனுவல் மோடுக்கு' மாற்றி செயல்படுத்த முனைய... ஏதோ வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல... அந்த லிஃப்ட், 'தடால்' என்று... கிட்டத்தட்ட கீழே விழுந்தது எனலாம். அதேநேரம், உள்ளே நான் நிலை குலைந்து விழுந்தேன். இரண்டே வினாடிகள் தான். மீண்டும் நிலநடுக்கம்..! சடன் பிரேக்..! சுத்தமாக பயந்தே விட்டேன். 'இன்றுதான் என் இறுதி நாளோ' :) என்று..! "இனி இதுபோல ரிஸ்க் எடுக்க வேண்டாம்" என்று வெளியில் உதவிக்கு நின்றவர்களிடம் அலறினேன்.
இப்போது லிஃப்ட் 10-வது தளத்தில் மேல் பாதியில் நின்றது. அந்த கதவையும் வெளியிலிருந்து திறக்க முடியவில்லை. இந்நிலையில், அந்த 10-வது தளத்தின் வெளிப்புற கதவின் டாப்பில் உட்புறமாக இருக்கும் 'இன்ஸ்ட்ருமென்ட் பாக்ஸ்' கவர் இல்லாமலேயே திறந்தே கிடந்தது... எனக்காகவா..? இறைவனின் அருள்..! அதில் உள்ள லிமிட் ச்விட்சுகளை... எல்லாம் இறைவனை வேண்டிக்கொண்டே... இழுத்தேன்... தள்ளினேன்... அழுத்தினேன்... தட்டினேன்... திருகினேன்... அல்ஹம்துலில்லாஹ்... கதவு திறந்தது..! உடனே, இடுப்பு உயரம் என்பதால், வெளியே குதித்து ஒருவழியாக 23:50 மணிக்கு 'விடுதலை' ஆனேன்..!
அப்போதுதான் தோன்றியது... "இனி, லிப்ஃட் ஸ்ட்ரக் ஆகாமல்... அறுந்து விழுந்தால்..? அந்த சூழ்நிலையை கையாள்வது பற்றி நாம் அவசியம் அறிந்து கொள்ள வேண்டுமே" ...என்று தோன்றியது. ஷிஃட் முடிந்து வந்து கூகுளில் தேடினேன். சில ஆங்கில தளங்கள் கிடைத்தன. அவற்றை படித்தபோது விஷயத்தின் முக்கியத்துவம் கருதி பொதுவில் இப்போது பகிர்கிறேன்..!
இதற்குள், ஷிஃப்டில் இருந்த வேறு சிலர் உதவிக்கு வர... ஒரு சிலர், லிஃப்ட்டின் 'மெயின் கண்ட்ரோல் சிஸ்டம்' சென்று அதை வெளியிலிருந்து 'மேனுவல் மோடுக்கு' மாற்றி செயல்படுத்த முனைய... ஏதோ வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல... அந்த லிஃப்ட், 'தடால்' என்று... கிட்டத்தட்ட கீழே விழுந்தது எனலாம். அதேநேரம், உள்ளே நான் நிலை குலைந்து விழுந்தேன். இரண்டே வினாடிகள் தான். மீண்டும் நிலநடுக்கம்..! சடன் பிரேக்..! சுத்தமாக பயந்தே விட்டேன். 'இன்றுதான் என் இறுதி நாளோ' :) என்று..! "இனி இதுபோல ரிஸ்க் எடுக்க வேண்டாம்" என்று வெளியில் உதவிக்கு நின்றவர்களிடம் அலறினேன்.
இப்போது லிஃப்ட் 10-வது தளத்தில் மேல் பாதியில் நின்றது. அந்த கதவையும் வெளியிலிருந்து திறக்க முடியவில்லை. இந்நிலையில், அந்த 10-வது தளத்தின் வெளிப்புற கதவின் டாப்பில் உட்புறமாக இருக்கும் 'இன்ஸ்ட்ருமென்ட் பாக்ஸ்' கவர் இல்லாமலேயே திறந்தே கிடந்தது... எனக்காகவா..? இறைவனின் அருள்..! அதில் உள்ள லிமிட் ச்விட்சுகளை... எல்லாம் இறைவனை வேண்டிக்கொண்டே... இழுத்தேன்... தள்ளினேன்... அழுத்தினேன்... தட்டினேன்... திருகினேன்... அல்ஹம்துலில்லாஹ்... கதவு திறந்தது..! உடனே, இடுப்பு உயரம் என்பதால், வெளியே குதித்து ஒருவழியாக 23:50 மணிக்கு 'விடுதலை' ஆனேன்..!
அப்போதுதான் தோன்றியது... "இனி, லிப்ஃட் ஸ்ட்ரக் ஆகாமல்... அறுந்து விழுந்தால்..? அந்த சூழ்நிலையை கையாள்வது பற்றி நாம் அவசியம் அறிந்து கொள்ள வேண்டுமே" ...என்று தோன்றியது. ஷிஃட் முடிந்து வந்து கூகுளில் தேடினேன். சில ஆங்கில தளங்கள் கிடைத்தன. அவற்றை படித்தபோது விஷயத்தின் முக்கியத்துவம் கருதி பொதுவில் இப்போது பகிர்கிறேன்..!
இதோ... அதற்கான 'நெருக்கடி கால' அறிவுரைகள்.
உங்கள் லிஃப்ட் பத்தாவது மாடியில் செல்லும் போது அறுந்து விடுகிறது என்று வைத்துக்கொள்வோம். (என்னவொரு கொலவெறி..?) சரி...சரி, 'நாம் பயணிக்கும் லிஃப்ட்' என்றே வைத்துக்கொள்வோம். அறுந்து சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று விழுந்து கொண்டு இருக்கிறது..! சில வினாடிகள்தான். நம் உயிரை காப்பாற்றிக்கொள்ள அதற்குள் நாம் சில முயற்சிகள் செய்தாக வேண்டுமாம். அவை என்னென்ன..?
- 1 கைகளில் இருக்கும் பத்து விரல்களைக்கொண்டும் அங்கே போர்டில் உள்ள எல்லாதளத்தின் பட்டன்களையும் அழுத்த வேண்டும். சும்மா... ஒரு விரலால் ஒவ்வொரு பட்டனாக ஒத்தி ஒத்தி எடுத்தால்... ஸாரி, அந்தோ பரிதாபம்...! நீங்கள் உண்மையிலேயே உயிர் மீது ஆசை இல்லாத ரொம்ப ஜாலி டைப் மனிதர் என்று அர்த்தம். இப்படி செய்தால் என்னவாகும்..? "லிஃப்ட் 'கண்ஃபியுஸ்' ஆகி 'தடால்' என்று பிரேக் போட்டு நின்று விடுமா" என்றால்...ஆமாம்..! இதனை, டெக்னிக்கலாக சொன்னால்... emergency stop system உடனே செயல்பாட்டுக்கு வந்து லிஃட் உடனே நின்று விடுமாம்.
- 2 ஒருவேளை அந்த சிஸ்டம் அந்த லிஃப்ட்டில் இல்லை என்றால்..? டோன்ட் ஒர்ரி சகோ..! உடனே நாம் நம் முதுகையும் தலையையும் நேர்க்கோட்டில் லிஃப்ட்டின் சுவரோடு சேர்த்து வைத்து செங்குத்தாக ஒட்டிக்கொள்ள வேண்டும். சுவரை ஒரு பாதுகப்பாக்கி முதுகுத்தண்டு அதிர்ச்சியடையாமல் இருக்கத்தான்.
- 3 பின்னர், உள்ளே ஏதும் கைப்பிடி என்று ஏதும் இருந்தால் அதையும் படத்தில் காட்டி இருப்பது போல கைகளால் பிணைத்து கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும் சகோ..! ஏனெனில், பேலன்ஸ் தவறி தூக்கி வீசப்படாமல் உடம்பு அடிபடாமல் ஒரு சப்போர்ட்டுக்காக.
- 4 அப்புறம், முக்கியமாக நாம் நிற்காமல், முழங்கால்கள் சற்றே மடியும்படி அமர்ந்தும் அமராமல் நின்றும் நிற்காமல் படத்தில் உள்ளவாறு இருக்க வேண்டும். காரணம்... அறுந்து விழும் லிஃப்ட் முழு வேகத்தில் பயங்கர அழுத்தத்தில் எடையுடன் தரையை மோதும்போது... நின்று கொண்டு இருந்தால் மூட்டு எலும்புகள் உடைந்து அதன் அதிர்வில் வரிசையாக முதுகெலும்பும் எல்லா எலும்புகளும் சிதைந்து நொறுங்கி வி(டக்கூ)டும். அப்படியானால், உயிர் பிழைக்க வாய்ப்பு இருக்காது. எனவே, இந்த ஆபத்திலிருந்து நம்மை காப்பாற்ற ஒரு ஷாக் அப்சார்பர் மாதிரி ஒரு நம் எலும்பு மண்டலத்துக்கு ஒரு குஷநிங் கொடுக்கிறோம்..!
- 5 அப்புறம் இன்னொரு பாதுகாப்பு அம்சமும் பொதுவாக லிஃப்டில் உண்டு. அதாவது, லிஃப்ட்டின் அடிப்பாகத்தில் "எதற்கும் இருக்கட்டுமே" என்று ஸ்ப்ரிங் குஷன் ஷாக் அப்சார்பர் இருக்கும். இதன் பீரியாடிக் மெயின்ட்ட்டனன்ஸ், பழுதில்லாமை, விழும் லிஃப்ட்டின் மொத்த ஓவர்லோட் எடை, அதன் விழும் அசுரவேகம்... என இதெல்லாம் ஸ்ப்ரிங்கின் பாதுகாக்கும் திறனை பாதிக்கும் காரணிகள் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும் சகோ..! இதற்காக சில தளங்களில் எழுதி இருப்பது போல, தரையில் மோதும்போது நாம் எம்பிக்குதிக்க வேண்டியதில்லை. அறிவியல் ரீதியாக அது தவறு. ஏனெனில், எப்படி இருந்தாலும் ஒரே வேகத்தில்தான் மோதுவோம்.
அவ்வளவேதாங்க சகோ..! என்ன ஒன்று..! இந்த "வாழ்வா..? சாவா..?" போராட்டத்திலே... மேலே சொன்னவற்றை எல்லாம் நாம் செய்வதற்குரிய அவகாசம் சில நொடிகள்தான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சரியாகவும் பதற்றம் இன்றி முறையாக செய்ய வேண்டும். 'உயிர் பிழைப்போம்' என்ற மனஉறுதி, போராடிப்பார்ப்போம் என்ற உத்வேகம், முயற்சியில் நம்பிக்கை எல்லாம் இருக்க வேண்டும்.
எல்லாம் நடந்து முடிந்து... பிழைச்சுக்கிடந்தால்... வெளியே வந்து 'எப்படி பிழைத்தோம்' என்று ஜம்பமாக பாயின்ட் பை பாயின்ட் ஆக நிருபர்களுக்கு பேட்டி கொடுப்போம் சகோ..! இல்லையேல்... நம்மை பொறுத்த மட்டில் 'இதுதான் இறைவனின் விதி' என்று இவ்வுலகிற்கு ஒரு குட்பை சொல்ல வேண்டியதுதான்..! முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்..!
டிஸ்கி:-
லிஃப்ட் -இதற்கு யாரும் இன்னும் தமிழ்ச்சொல் கண்டுபிடிக்கலையா சகோ..? தெரிஞ்சா சொல்லுங்க சகோ..!
Our sincere thanks to the following reference sources:-
http://www.lifeslittlemysteries.com/how-survive-falling-elevator-1935/
http://science.howstuffworks.com/science-vs-myth/everyday-myths/question730.htmOur sincere thanks to the following reference sources:-
http://www.lifeslittlemysteries.com/how-survive-falling-elevator-1935/
http://www.millionbabyboomers.com/2011/05/boomers-wisdom---actions-that-may-save-life-in-a-falling-lift-accident.html
49 ...பின்னூட்டங்கள்..:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
படிக்க படிக்க ரொம்பபே படபடப்பா இருந்தது. இறைவன் அருளால் மீண்டு வந்ததற்கு அவனே நன்றிக்குரித்தானவன்.
லிப்ட் பத்தி பேசும் போது “எங்கேயாவது லிப்ட் ஆக்சிடண்ட் நடந்து கேள்விபட்டுருக்கீயா? அந்த அளவுக்கு இரும்பு ரோப் போட்டு பக்காவா எல்லா முன்னெச்சரிக்கையோடு பண்ணுவோம்”னு லிப்ட் தயாரிக்குற கம்பெனி சகோதரர் சொன்னார். ஆகா............ இத நம்பி தானே ரொம்ப காலமா லிப்ட் பயணம் :-(
இனி ஏறவே மாட்டேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்
லிஃப்ட் - மின் தூக்கி.
நீங்கள் பெரிய ஆபத்திலிருந்து இறைவனால் காப்பாற்றபட்டிருக்கிறீர்கள். அல்ஹம்துலில்லாஹ். ஆனால் இதை வெறுமனே சொல்லாமல், எப்படி தப்பிக்கலாம் என்று இணையத்தில் தேடி கண்டுபிடித்து, அதை எல்லோருக்கும் தெரிவிக்க வேண்டும் என்ற உங்களின் முயற்சி இன்ஷா அல்லாஹ் பலருக்கு பிரையோஜனமாக இருக்கும் சகோ.
நல்ல உபயோகமான பதிவு சகோ...
ஆனால் அந்த இறுதி நிமிடங்களில் இந்தளவுக்கு நம்மால் செயல் பட முடிந்தால் பெரிய விசயம்தான்..
லிஃப்ட்க்கான தமிழ் வார்த்தை - மின் தூக்கி
அஸ்ஸலாமு அலைக்கும்
படிக்கும் போது நானும் பயந்துவிட்டேன் சகோ.! நீங்கள் நலமாக இருப்பதற்கு இறைவனுக்கு நன்றி சொல்கிறேன். இனி லிஃப்டில் பயணிக்கும் போதெலாம் நீங்கள் தான் நினைவிற்கு வருவீர்கள்.
//லிஃப்ட் -இதற்கு யாரும் இன்னும் தமிழ்ச்சொல் கண்டுபிடிக்கலையா சகோ..?//
தூக்கி என்று சொல்லலாம்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
படித்ததும் பதறிவிட்டேன்.வல்ல இறைவனுக்கு நன்றி சொல்வோம் .
//தமிழ்ச்சொல் கண்டுபிடிக்கலையா சகோ..? தெரிஞ்சா சொல்லுங்க சகோ..!//
ஏன் இல்லை இதோ
மின் ஏணி
மின் உயர்த்தி
மின் தூக்கி
மின் இறக்கி
இதை விளக்கி
அஷிக் பதிவு போட்டுயிருக்கார் கலக்கி
இனி என் வாழ்க்கையில் மின்ஏணியை வைக்கிறேன் விலக்கி
ஏய் டன்டே நக்கா டனக்கு நக்கா
அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவோம்.
நல்லதொரு விழிப்புணர்வுப் பதிவு..
///லிஃப்ட் - மின் தூக்கி.///
கீழே வரும் போதும் மின் தூக்கிதானா????
வணக்கம்!ஒரு பெரிய ஆபத்திலிருந்து உயிர் தப்பிய தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்!இறைவன் உங்கள் மூலமாக இன்னும் பல நல்ல பணிகளை எதிர்பார்க்கிறான்.சில பிறமொழிச் சொற்களை (நம்மிடம் இல்லாதவைகளை)அப்படியே பயன்படுத்துவதுதான் நல்லது.இனி மேல் “லிஃப்ட்” உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று.
**************
எல்லாம் வல்ல நாயகனுக்கு நன்றி.
**************
.
அஸ்ஸலாமு அலைக்கும்..
உயிரைக்காத்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்,, அவசியமான தகவல்களும் கூட இங்கே பல மாடிக்கட்டடங்களில் லிப்ட இல்லாமல் பயணம் செய்வது கடினம்,,
என்நேரமும் ஆபத்து வரலாம்!
@Mohamed Faaique
///லிஃப்ட் - மின் தூக்கி.///
கீழே வரும் போதும் மின் தூக்கிதானா????
வேனும்னா.. மேல போகும் போது மின் தூக்கி, கீழே வரும் போது மின் இறக்கி.. அப்பிடின்னு வெச்சுக்கலாம்.. நம்ம தமிழ்தானே எப்பிடிவேனும்னாலும் மாத்திக்கலாம் ஹா ஹா..
அஸ்ஸலாமு அலைக்கும்!
பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றிய இறைவனுக்கே புகழ் அனைத்தும்! அறிவியல் முன்னேற்றம் மனிதனுக்கு சௌகரியங்களைக் கொடுப்பதுபோல் சில அசௌகரியங்களையும் தந்து விடுகிறது. விழிப்புணர்வு ஊட்டும் பதிவு.
அல்லாஹ்வின் துணை தங்களுக்கு என்றும் உண்டாகட்டும் ஆமீன்.
அஸ்ஸலாமு அலைக்கும்
தாங்கள் மிக பெரிய ஆபத்திலிருந்து தப்பிததற்கு அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவோம்
அஸ்ஸலாமு அலைக்கும்தாங்கள் மிக பெரிய ஆபத்திலிருந்து தப்பிததற்கு அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவோம்
useful post
என்னுடைய அலுவலகத்தில் மொத்தமே மூன்று தளங்கள் தான் என்பது ஆறுதல் தருகிறது... இருப்பினும் அதுவும் ஆபத்துதான்... உங்கள் ஆலோசனைகள் எனக்கும் உதவக்கூடும்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
திகில் படம் பார்த்ததுபோல் படபடப்பு.
படித்துவிட்டு சகஜ நிலைக்கு வரமுடியவில்லை.
எனக்கும் ஒரு சம்பவம்.
லிப்ட் இடையில் அப்படியே மின்சாரம் துண்டிக்கப்பட்டு நின்றுவிட,
அரைமணி நேரம் மண்ணரை வாழ்க்கைதான்!
அவசர கால அறிவுரைகளை அவசர அவசரமாக தந்தது பாராட்டுக்குரியது.
வல்ல பேரருளாளன் உங்கள் வாழ்நாளை நீட்டித்தருள்வானாக!
அஸ்ஸலாமு அழைக்கும். சகோ. நிச்சயம் மறு பிறப்பு எடுத்ததை போல் ஓர் உணர்வு படிக்கும் போதே. அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே.
இறைவன் அருளால் பெரும் ஆபத்தில் இருந்து காப்பற்ற பட்டுள்ளீர்கள் . அதற்காக இறைவனுக்கு நன்றி .
பயனுள்ள பதிவினை தந்துள்ளீர்கள் .
நல்ல பதிவு
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
@ஆமினாஅலைக்கும் ஸலாம் வரஹ்...
அந்த சகோதரர் சொல்றது சரிதான். ஆனால், அன்னைக்கு ஏனோ சிலர் மேனுவல் மோடில் போட்டு சர்ட் என்று சருக்க வைத்து என்னை கதிகலக்கி விட்டனர். //இனி ஏறவே மாட்டேன்//---அப்போ... இறங்குவீங்க..? அவ்வ்வ்வ்வ்வ்வ்
@ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) //லிஃப்ட் - மின் தூக்கி.//---நன்றி சகோ.
@mcp chennai.//அந்த இறுதி நிமிடங்களில் இந்தளவுக்கு நம்மால் செயல் பட முடிந்தால் பெரிய விசயம்தான்..//--ஆம் சகோ.
//மின் தூக்கி//--நன்றி சகோ.
@Abdul Basithஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//இனி லிஃப்டில் பயணிக்கும் போதெலாம் நீங்கள் தான் நினைவிற்கு வருவீர்கள்.//--கூடவே, பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹ்.
//தூக்கி//---மின்-ஐ தூக்கி விட்டீர்களே..! நன்றி சகோ.
@இளம் தூயவன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//இறைவனுக்கு நன்றி சொல்வோம்//---அஃதே.
@ஹைதர் அலி
(மின் உயர்த்தி+மின் இறக்கி)=மின் தூக்கி
//இனி என் வாழ்க்கையில் மின்ஏணியை வைக்கிறேன் விலக்கி//---ஆமா... சகோ, இந்த 'மின் ஏணி' என்றால் என்ன..?
//ஏய் டன்டே நக்கா டனக்கு நக்கா//--உங்களையே யாரோ 'ஹேக்' பண்ணிட்டாங்களா..?
@Mohamed Faaiqueஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//கீழே வரும் போதும் மின் தூக்கிதானா????//
---ஆங்...
அதாவது...
வந்து...
நம்மை தூக்கிக்கொண்டே ஏறிப்போன மின்தூக்கி...
நம்மை தூக்கிக்கொண்டே இறங்கிகியும் வருகிறதா..?
"டொக்" "டொக்" "டொக்"
ஆர்டர்.. ஆர்டர்.. ஆர்டர்..!
ஆகவே, citizen of world சமன்பாட்டின் படி... {(மின் உயர்த்தி+மின் இறக்கி)=மின் தூக்கி} மேலே போனாலும் மின்தூக்கி தான் ... கீழே இறங்கினாலும் மின் தூக்கிதான்..!
@தி.தமிழ் இளங்கோநம் வணக்கம் ஏக இறைக்கே.
///சில பிறமொழிச் சொற்களை (நம்மிடம் இல்லாதவைகளை)அப்படியே பயன்படுத்துவதுதான் நல்லது.///---தங்கள் கருத்தை நூறு சதம் வழிமொழிகிறேன். இதையே அனைவரும் பின்பற்றினால் பல குழப்பங்கள் தீரும் சகோ.இளங்கோ.
@VANJOORஅல்ஹம்துலில்லாஹ்.
@Riyasஅலைக்கும் ஸலாம் வரஹ்... //இங்கே பல மாடிக்கட்டடங்களில் லிப்ட இல்லாமல் பயணம் செய்வது கடினம்...என்நேரமும் ஆபத்து வரலாம்!//--ஆம் சகோ.
@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//காப்பாற்றிய இறைவனுக்கே புகழ் அனைத்தும்!//--ஆமீன்.
@நண்பன்//அல்லாஹ்வின் துணை//---நமக்கு என்றும் உண்டாகட்டும் சகோ.நண்பன்.ஆமீன்.
@ஹாஜா மொஹைதீன்அலைக்கும் ஸலாம் வரஹ்... //அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவோம்//---அல்ஹம்துலில்லாஹ்.
@s.jaffer.khanஅலைக்கும் ஸலாம் வரஹ்... //அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவோம்//---அல்ஹம்துலில்லாஹ்.
@நிலா//useful post//---thanks சகோ.நிலா.
@Philosophy Prabhakaran//உங்கள் ஆலோசனைகள் எனக்கும் உதவக்கூடும்...//---நியாபகத்தில் என்றும் இருக்கட்டும்...
ஆனால், அதுபோன்ற "உதவக்கூடும்-சூழல்" தங்களுக்கு வரவே வேண்டாம் என்றே இறைவனிடம் இறைஞ்சுகிறேன் சகோ.பிரபா.
@மு.ஜபருல்லாஹ்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//லிப்ட் இடையில் அப்படியே மின்சாரம் துண்டிக்கப்பட்டு நின்றுவிட,
அரைமணி நேரம் மண்ணரை வாழ்க்கைதான்!//---ஆமாம் சகோ.ஜபருல்லாஹ். வெளிச்சமும் வேண்டிலேஷணும் இல்லை என்றால்... மண்ணறை போலத்தான்.
@Ferozஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே.//--நிச்சயமாக.
@Mahan.Thamesh//இறைவன் அருளால் பெரும் ஆபத்தில் இருந்து காப்பற்ற பட்டுள்ளீர்கள் .இறைவனுக்கு நன்றி.//---ஆம் சகோ.
@வைரை சதிஷ்தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகள் சகோ.சதீஷ்.
e-mail from Jaleela Kamal Jaleela to me
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ஆஷிக்,
இரண்டு ஆஷிக் இருபப்தால் கொஞ்சம் குழப்பமாவே இருக்கு
லிஃப்ட் பதிவு பட்ச்சிட்டு ரொம்ப பீதியாகிவிட்டது,
அல்லா கருனை மிக்கவன் என்பதை இங்கு நிருபிச்சிட்டான்.
அல்ஹம்து லில்லாஹ், அப்பரம் பார்க்கிறேன் பதிவில் கமெண்ட் ோட முடியுதான்னு.
JaleelaKamal
Dubai,U.A.E
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அவசர வேலையிலும் இதைப் படித்துவிட்டே நகரவேண்டும் என்று உட்கார்ந்துவிட்டேன் படிக்க. கிட்டத்தட்ட 1¾ மணி நேரமா எப்படிதான் இந்த திடீர் குலுக்கல், அதிர்ச்சிகளோடு உள்ளே இருந்தீர்களோ சகோ..?!!
//"இனி இதுபோல ரிஸ்க் எடுக்க வேண்டாம்" என்று வெளியில் உதவிக்கு நின்றவர்களிடம் அலறினேன்.//
:((( இதில் மின் கசிவு, அதனால் தீ விபத்துகூட ஏற்படும். இந்தளவுக்கு உங்களை காப்பாற்றிய அல்லாஹ்வுக்குதான் அதிகமதிகம் நன்றி செலுத்தவேண்டும். கண்டிப்பாக உங்களால் (இப்போதைய தகுதிக்கு) முடிந்த அளவு ஸதகா கொடுத்துவிடுங்க சகோ.
//மேலே சொன்னவற்றை எல்லாம் நாம் செய்வதற்குரிய அவகாசம் சில நொடிகள்தான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சரியாகவும் பதற்றம் இன்றி முறையாக செய்ய வேண்டும்.//
மாட்டிக்கொண்ட அந்த சில நொடிகளில் ஆண்களே தடுமாறும்போது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சாத்தியமா என்பது சந்தேகமே! வல்ல நாயன் அதுபோன்ற ஆபத்துகளிலிருந்து நம்மைக் காப்பானாக! அனுபவ பாடத்தோடு, இணையத்திலும் தேடி சொன்ன விஷயங்களுக்கு நன்றி சகோ.
@ சகோ.அஸ்மா.
அலைக்கும் ஸலாம் வரஹ்...
//முடிந்த அளவு ஸதகா கொடுத்துவிடுங்க சகோ.//--ஆம் சகோ.அஸ்மா.
//வல்ல நாயன் அதுபோன்ற ஆபத்துகளிலிருந்து நம்மைக் காப்பானாக!//--ஆமீன்.
சகோதரர்களே..!
தங்கள்
அனைவர்
வருகைக்கும்
வாசிப்பிற்கும்
கருத்தையும்,பாசத்தையும் பகிர்ந்தமைக்கும்
நான்...
உள்ளம் நெகிழ்ந்து
மகிழ்வுடன்
அனைவருக்கும்
நன்றி சொல்லிக்கொள்கிறேன் சகோஸ்.
சம்பவம் மறக்கிறது.
தங்கள் பாசம் மட்டுமே மனதில் நிற்கிறது இப்போது..!
லிப்ட் அனுபவம் எல்லாமே ஓகே தன அனா லிப்ட் அறுத்து கிலே விழ வைப்பே இல்லை லிப்ட் பரசுடே என்ற ஒரு சிஸ்டம் rope கட் அனாலும் லிப்ட் move ஆஹா விடாது
@p.m.kader nainar//லிப்ட் பரசுடே என்ற ஒரு சிஸ்டம்//---எனக்கு இது பற்றி தெரியவில்லை சகோ.நைனார்.
இது எல்லா லிப்ட்களிலும் இருக்குமா..?
இதனை விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏதேனும் டெக்னிகல் சுட்டி இருந்தாலும் பகிருங்கள் சகோ.
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.நைனார்.
நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
நன்றி
யாழ் மஞ்சு
Asalamu alikum actually there is no scientific evidence for this method could help you to survive and this is one among the myth which were consider as fact as as for your kind knowledge this myth is busted by several science people
With regards
Atheeque Ahmed.M.Tech
IIT Kharagpur
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!