அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Tuesday, January 3, 2012

36 இங்கிலாந்தின் இஸ்லாமோஃபோபியா..!


இங்கிலாந்து பாராளுமன்ற வெஸ்ட்மினிஸ்டர் பேலஸ் வளாகத்தினுள்ளே  23 உணவகங்கள் உள்ளன. அங்கே இஸ்லாமிய விதிமுறைப்படி அறுக்கப்பட்ட 'ஹலால்' இறைச்சிகள் உண்ணக்கிடைத்து வந்தன. இந்நிலையில், "பாராளுமன்ற வளாகத்தினுள் உணவு உண்ணும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இனி எந்த உணவு விடுதிகளிலும்... 'ஹலால்' உணவை உண்ண முடியாது என்றும், 'ஹலால்' முறையில் விலங்கு அறுக்கப்படுவது முஸ்லீம் அல்லாத உறுப்பினர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது" என்றும் லண்டனில் வெளியாகும் டெய்லி மெயில் தன்னுடைய பத்திரிகையில் அரசு சார்பாக வெஸ்ட் மினிஸ்டர் அரசு மாளிகை அறிவிப்பை மேற்கோள் காட்டி இச்செய்தியை புத்தாண்டு தினத்தன்று வெளியிட்டுள்ளது.

இவ்வறிக்கை, பிரிட்டிஷ் எம்.பிக்களுக்கு, குறிப்பாக முஸ்லீம் எம்.பிக்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 'இதற்கான காரணம் என்ன' என்று கேட்டறிந்த போது, "முஸ்லிம் அல்லாத மற்ற எம்.பி.க்களுக்கு 'ஹலால்' முறையில் அறுக்கப்பட்ட இறைச்சி சாப்பிட பிடிக்க வில்லை..! இதை ஓர் 'இஸ்லாமிய திணிப்பு' போல பார்க்கின்றனர்..! இதனால், 'ஹலால்' அல்லாத இறைச்சி உண்ணும் வாய்ப்பு தங்களுக்கு மறுக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். அவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்து, இனி இங்கிலாந்து பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் 'ஹலால்' அல்லாத இறைச்சியே பரிமாறப்படும்" என்று முடிவு செய்யப்பட்டு விட்டதாம்..!

Lord Ahmad எனும் ஒரு இங்கிலாந்து முஸ்லிம் எம்.பி. இது குறித்து செய்தியாளர்களிடம் கூறும் போது, “ஹலால் உணவை உண்ணாதவர்களுக்கு மட்டும் அப்படி ஒரு வாய்ப்பிருப்பது போல்... ஹலால் உணவு மட்டுமே உண்ண விரும்புவோர்க்கும் ஒரு வாய்ப்பு இருக்க வேண்டாமா..?” என்றார்..! இக்கேள்விக்கு சரியான பதிலை எவரும் இறுதிவரை  தரவில்லை..! இப்படி, 'ஹலால்' உணவுக்கு அனைத்து கதவுகளையும் அடைத்தது தவறு என்கிறார்..! ஆனால்.... 'இங்கிலாந்து சர்ச்'சின் உறுப்பினர் அலிசான் ரூப்போ என்ற கிருஸ்துவர், “நாட்டின் மற்ற உணவகங்களில், பள்ளியில், மருத்துவமனைகளில் எல்லாம் ஹலால் உணவை பரிமாற அனுமதிக்கும் பாராளுமன்றம், தன் வளாகத்தில் மட்டும் ஹலால் உணவை பரிமாற தடை விதிப்பது இரட்டை நிலைப்பாடாக உள்ளது” என்று கூறி, மறைமுகமாக இந்த முடிவை இங்கிலாந்து முழுக்க விரிவுபடுத்த நச்சுச்சாவி கொடுத்து விட்டார், அண்ணாச்சி..! சரியான... சுப்ரமணிய சுவாமி..!

தமக்கு எவ்வித தேவையுமின்றி எந்த ஓர் உயிரையும் கொல்ல முஸ்லீம்களை இறைவன் அனுமதிக்கவில்லை. அதேநேரம், தம் உயிரைக்காக்க கொடிய விலங்குகளை, நச்சுப்பூச்சிகளை கொல்லலாம். அல்லது... தம் உணவுத்தேவைக்காக அதற்குரிய உயிருள்ள பிராணிகளை, 'இறைவா, என்னை நீ அனுமதிதத்தன் பேரிலேயே இந்த பிராணியை என் உணவுத்தேவைக்காக அறுக்கிறேன்' என்று மனதில் நினைத்தவராக... "இறைவனின் பெயரால்" என்று கூறி, மிகக்கூர்மையான கத்தி கொண்டு கழுத்தின் இரத்த நாளத்தை மட்டும் நொடியில் அறுத்து, இரத்தைத்தை எல்லாம் ஓட்டிவிட்டு (இரத்தம் சாப்பிடக்கூடாது) இறைச்சியை சாப்பிடலாம் இதுதான் ஹலால் முறையிலான அறுப்பு..!

இதுவல்லாத முறைகளில் அறுத்து சாப்பிடுவது, அல்லது ஏதேனும் ஆயுதம் கொண்டு அடித்து கொன்று சாப்பிடுவது, அல்லது ஒரே வெட்டில் தலை-உடம்பு தனித்தனியாக போகும்படி வெட்டிக்கொன்று சாப்பிடுவது, அல்லது தலையை பிடித்து கழுத்தில் திருகி நெரித்து கொன்று சாப்பிடுவது, அல்லது ஓங்கி தரையில்/சுவரில் மோதி அடித்துக்கொன்று சாப்பிடுவது, இதெல்லாம்... முஸ்லிம்களுக்கு அனுமதி - ஹலால் இல்லை..!

மேற்படி முஸ்லிம் அல்லாத இங்கிலாந்து எம்.பி.க்களின் கோரிக்கை இங்கே என்ன சகோ..?

'உயிரினங்களை கொல்லக்கூடாது' என்பதா..? இல்லை..! 
'அசைவம் சாப்பிடக்கூடாது' என்பதா..? அதுவும் இல்லை...!

...வேறென்ன..?

"எந்த முறையில் விலங்கை கொல்வது" எனபதில்தான் அங்கே பிரச்சினை..!!!

இஸ்லாமிய 'ஹலால்' முறைப்படி அல்லாமல் நான் மேற்சொன்ன அல்லது வேறு ஏதோ ஒரு முறைப்படி கொன்றால்தான் சாப்பிடுவார்கள் போல..!

சரிங்கப்பா... அது உங்கள் உரிமை. ஹலால் அல்லாத இறைச்சியை சாப்பிடுவது உங்கள் உரிமைதான். அதுதான்  23 உணவகங்கள் அங்கே உள்ளனவே..? அதில் சிலவற்றில்  ஹலால் பிரியர்களுக்காக ஹலால் இறைச்சி விற்றால் என்னவாகும்..? முஸ்லிம் எம்.பி.க்களும்... ஹலால் முறையை விரும்பும் மற்ற எம்பிக்களும் அங்கே மட்டும் சென்று சாப்பிட்டுக்கொள்ளட்டுமே..! மற்ற எம்பிக்களுக்கு உள்ள அதே உரிமையை உங்கள் சக குடிமகனான முஸ்லிம் எம்பிக்களுக்கும் தந்தால் என்ன..? ஏன் தரமாட்டீர்கள்..? இதைத்தானே... இந்த உரிமையைத்தானே... லார்ட் அஹமது எம்.பி.யும் கேட்கிறார்..!

புரியவில்லையா..? புரியாதுதான்..! எப்படி புரியும்..?

நிர்வாணமாக திரிவது பெண்ணுரிமை என்பீர்கள்...முழுக்க உடை அணிய வேறொரு பெண்ணுக்கு பெண்ணுரிமை மறுத்து சட்டம் இயற்றுவீர்கள்..!

மது குடிப்பது உங்கள் பிறப்புரிமை என்பீர்கள்... யாரேனும் குடிக்காமல் விலகி சென்றால்... 'பார்ட்டிக்கு அது அவமரியாதை' என்று கூறி மதுகுடிக்காத அடுத்தவர் பிறப்புரிமையை சாகடிப்பீர்கள்..!

ஆண்-ஆண், பெண்-பெண், ஆண்-பெண் என எவ்வித வரைமுறையும்  திருமணபந்தமுமின்றி விபச்சாரத்தை உரிமை என்பீர்கள்... திருமண உறவுடன் கணவன் மனைவியாக அனைத்து உரிமைகளையும் தந்து ஒன்று அல்லது அதிக பட்சம் நான்கு மனைவி மட்டும் என்றால்... "ச்சீ..ச்சீ.. இதுதான் கேவலம்" என்பீர்கள்...!

கொடுத்த கடனுக்கு அநியாய வட்டி வசூலிப்பீர்கள்... வட்டி அல்லாமல், இஸ்லாமிய வங்கி கடன் கொடுக்க முன்வந்தால் எதிர்ப்பீர்கள்...!

'ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டுவது'தான் எம் கொள்கை என்பீர்கள்... யாரோ முகம் தெரியாத ஒரு சிலர் செய்த பயங்கரவாதத்துக்காக... அவர்களை பிடித்து விசாரித்து தண்டிப்பதை விடுத்து... வேறெங்கோ சென்று... மில்லியன் கணக்கில் அப்பாவி மக்களை கொன்று ஊரையே... நாட்டையே... மொத்தமாக அழிப்பீர்கள்...!

'பயங்கரவாதத்துக்கு எதிரான போர்' நடத்துவீர்கள்... உலகிலேயே மிக மிக அதிகமாக அதிபயங்கர ஆயுதங்கள் தயாரித்து நீங்கள்தான் 'யாராருக்கோ' விற்றுக்கொண்டே இருப்பீர்கள்..!

இப்படிப்பட்ட நீங்கள்தான்... ஹலாலான முறையில் கொல்லப்பட்ட விலங்கின் இறைச்சியை முஸ்லிம்களுக்கு மறுக்கின்றீர்கள்...! எங்களுக்கு எங்களின் முறைப்படி கொல்லப்பட்ட விலங்கின் இறைச்சிதான் வேண்டும் என்று ஒரு குடிமகனாக எம்.பி.யாக கேட்பது கூட தவறா..? 'ஆம்' என்றால்... இதுதானேப்பா கருத்துத்திணிப்பு..? உரிமை மறுப்பு..! மதவெறி..! இஸ்லாமோஃபோபியா..! ச்சே... இவ்வுலகில், ஒரு மனிதன்... கொலைகாரனாக, கொள்ளைக்காரனாக, விபச்சாரியாக, பாலியல் காமுகனாக, குடிகாரனாக, சூதாடியாக... இப்படி சமூகத்துக்கும் அடுத்தவருக்கும் தீங்குதரும் தொல்லையாக... எப்படி வேண்டுமானாலும் வாழலாம் போல, அரசு அனுமதியுடன்..! ஆனால், தூய இஸ்லாமை பின்பற்றி முஸ்லிமாக பிறருக்கும் சமூகத்துக்கும்  தொல்லை இன்றி அமைதியாக நன்மை செய்து வாழ மட்டும் ஆயிரம் தடைகள்..! எப்படியெல்லாம் வருகிறது பாருங்கள் சகோ..! ஏன் இப்படி..?  

36 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...