General என்ற ஆங்கில வார்த்தைக்கு ஒன்றுக்கு
மேற்பட்ட அர்த்தம் உள்ளது. பொதுமை, முழுமை, பெரும்பாண்மை என்ற பொருள் மட்டுமின்றி, தனித்துவ உயர்நிலை அல்லது உச்சம் என்றும் பொருள் உண்டு..! ஆனால், நாம் பொதுவாக இந்த ஆங்கில வார்த்தைக்கு 'பொது' என்ற ஒரே அர்த்தத்தையே எல்லா இடங்களிலும் கொடுத்து விடுகிறோம். இது நிச்சயம் தவறான புரிதல். சில இடங்களில் சரியாக இருக்கும்; எல்லா இடங்களுக்கும் சரியாக இல்லை. மேலும் இது, 'தவறு' என்று அறிந்தவுடன், உடனே சரியான பொருளுக்கு நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டிய தவறுங்கூட..!

உதாரணமாக.....,
ஒரு நிறுவனம் என்றால்... அங்கே (உதவி)Deputy Manager / (இணை)Joint Manager /
(துணை)Assistant Manger / (கூடுதல்)Additional Manager என்றெல்லாம் பல Junior Managers இருப்பார்கள். அதில் ஒருவர் பதவி உயர்வு பெற்று
(மேலாளர்) Manager ஆவார். சில ஆண்டுகள் கழித்து அவர், அடுத்த பதவி உயர்வு பெற்று Senior Manager ஆவார். பின்னர், Chief Manager ஆவார். அப்புறம் ஒருநாள்... இவரின் 'சிறப்பான செயல்பாட்டை' பாராட்டி அந்த நிறுவனம் GM என்ற பதவியை அளிக்கும்..!
அதாவது General Manager என்று..! இப்போது இவருக்கு 'தனித்தமிழ்ப்பெயர்' என்ன தெரியுமா...? "பொது மேலாளர்"..!
ஏன்..? திடீரென்று எப்படி இவர் நிறுவனத்தின் பொதுச்சொத்தாக மாறினார்..? யாருக்கு இவர்
'பொது' என்றானார்..? நீங்கள் என்றைக்காவது இப்படி யோசித்தது உண்டா... என்னருமை 'தனித்தமிழ் ஆர்வளர் சகோஸ்'..?
பின்னர், அவர் அந்நிறுவன இயக்குனர்களில் ஒருவராக (Joint/Dputy
Director) ஆவார். பின்னர், Director ... அப்புறம் Senior.. Chief... என்றாகி
Executive Director ஆகி இறுதில் அந்நிறுவனத்தின் Managing Director (மேலாண் இயக்குனர்) ஆகி விடுவார். இதே போல இன்னொரு நிறுவனம்... அதில் இன்னொரு MD... எனில், இந்த இரு MD-க்கும் மேலே ஒரே ஒருத்தர்தான் இருப்பார்..!
அவர்... Director General..! இவரை "பொது இயக்குனர்" என்று "தனித்தமிழ் ஆர்வளர்கள்" அழைக்கின்றனர்..! அந்நிறுவவனங்களின் இயக்குனர்களுக்கு எல்லாம் தன்னிகரில்லா தலைவரான இவர், திடுமென எப்படி...
யாருக்கு பொதுவாகிப்போனார் இப்படி..? அந்த இரண்டு நிறுவனத்துக்கும் பொதுவானவர் என்றா..? அதுதான் இல்லை..!
இதேபோலத்தான்...
IG : Inspector General. DeputyIG யாக இருந்து பதவி உயர்வு பெற்று IG ஆன இவர் ஆய்வாளர்களுக்கெல்லாம் தர நிலையில் மிகவும் உயர்ந்தவர். ஆனால், நம் தனித்தமிழர்கள் இவரை... 'பொது ஆய்வாளர்' என்கின்றனர்..! எனில், மற்ற இன்ஸ்பெக்டர்கள் எல்லாம் பொதுவானவர்கள் இல்லையா..? இவர்மட்டுமே பொதுவா..? யாருக்கு பொது..? எதற்காக பொது..?
DGP ======<<<======= IG ========<<======= DIG |
DGP : Director General of Police. இவர்தான் ஒரு மாநில காவல் துறையிலேயே ஆக உச்சநிலையில் உள்ள காவலர்..! இவரை "காவல்துறை பொது இயக்குனர்" என்கிறார்களே "தனித்தமிழர்கள்"..! இது சரியா..?
இல்லை... இல்லை... இப்படி உயர்ந்த இடத்தில் தலைமை பொறுப்புக்கு சென்றவர்கள் எல்லாரும்... தனக்குக்கீழே பணியாற்றும் மற்ற சாதாரண ஊழியர் அனைவருக்கும் 'பொதுவானவர்' என்பதால் இப்படி அழைக்கப்படலாம்..... என்று நினைக்கிறீர்களா..?
இந்தியாவில் 13 GPO (General Post Office) இருந்தாலும், தமிழகத்தில் சென்னையில் மட்டுமே உள்ளது, ஒரு GPO..! இதை, "பொது தபால் நிலையம்" என்கின்றனர். எனில், இது மட்டும்தான் 'பொது'வானதா..? ஏனைய தலைமை அஞ்சல் நிலையங்கள் (HPOs), கிளை அஞ்சல் நிலையங்கள் (Branch POs) எல்லாம் மக்களுக்கு 'பொது'வானவை இல்லையா..? தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டவையா..? மேலும், மற்ற அஞ்சல் நிலையங்களில் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் Postmasters ~ Chief Postmasters (அஞ்சல் அதிகாரி ~ தலைமை அஞ்சல் அதிகாரி) என்றால், அந்த 13 GPO-க்களில் உள்ளவர்கள் மட்டும் Chief Postmaster General எனப்படுகின்றனர். இவர்களை 'தனித்தமிழ் ஆர்வளர்கள்' "பொது தலைமை அஞ்சல் அதிகாரி" என்று 'பொது'வானவர்களாக்கி விடுகிறார்கள்..! இவர்கள் எந்த அடிப்படையில் 'பொது'வாகிறார்கள்..? சிந்திக்கவும் சகோ..!
ஆங்காங்கே பல ஊர்களில் 'அரசு மருத்துவமனை' (GH) என்றும், கிராமங்களில் 'அரசு ஆரம்ப சுகாதார நிலையம்' என்றெல்லாம் பார்த்து இருப்பீர்களே சகோ..! ஆனால், சென்னையில் மட்டும், Govt. General Hospital (GGH) என்று இருக்கிறது..! இதை "அரசு பொது மருத்துவமனை" என்கின்றனர். மாநிலத்தின் மற்ற மருத்துவமனைகளைவிட எல்லாம் உயர்வான... இதற்கு மட்டும் "பொது" என்ற புதிய அடைமொழி எதற்கு..? இது பொதுமக்களுக்கானது எனில், மற்ற அரசு மருத்துவமனைகளும் பொதுமக்களுக்கு பொதுவானதுதானே..? அவற்றுக்கு எல்லாம் ஏன் இல்லை, "பொது" என்ற அடைமொழி..?
சரி...., இந்த General என்ற வார்த்தை எப்போது... எங்கிருந்து முளைத்தது...?
பிரிட்டிஷ் ஆட்சியின் போது..!
அப்போது, கிழக்கிந்திய கம்பெனியின் மூலம் கைப்பற்றப்பட்ட மாநிலங்களில் எல்லாம் ஒரு பிரிட்டிஷ் கவர்னர் இருந்தார். இவர்கள் அனைவரையும் கட்டுப்படுத்தும் தலைவராக கல்கத்தாவில் ஒரு கவர்னர் இருப்பார். தலைமை ஆளுநர் போன்று..! அவரை Governor General என்று பிரிட்டிஷ் அரசு அழைத்தது..! நம்மவர்களும் அப்போது அவரை அதேபெயரை சொல்லி "கவர்னர் ஜெனரல்" என இப்படித்தான் அழைத்தனர்...!
இவர்களை, "பொது ஆளுநர்" (?) என்று எந்த தமிழ் மீடிய வரலாற்று புத்தகத்திலாவது நீங்கள் படித்ததுண்டா...! At-least கேள்விப்பட்டதாவதுண்டா..?
பிரிட்டிஷ் ஆட்சியின் போது..!
அப்போது, கிழக்கிந்திய கம்பெனியின் மூலம் கைப்பற்றப்பட்ட மாநிலங்களில் எல்லாம் ஒரு பிரிட்டிஷ் கவர்னர் இருந்தார். இவர்கள் அனைவரையும் கட்டுப்படுத்தும் தலைவராக கல்கத்தாவில் ஒரு கவர்னர் இருப்பார். தலைமை ஆளுநர் போன்று..! அவரை Governor General என்று பிரிட்டிஷ் அரசு அழைத்தது..! நம்மவர்களும் அப்போது அவரை அதேபெயரை சொல்லி "கவர்னர் ஜெனரல்" என இப்படித்தான் அழைத்தனர்...!
இவர்களை, "பொது ஆளுநர்" (?) என்று எந்த தமிழ் மீடிய வரலாற்று புத்தகத்திலாவது நீங்கள் படித்ததுண்டா...! At-least கேள்விப்பட்டதாவதுண்டா..?
சில... "பின் நவீனத்துவ தனித்தமிழ் முற்போக்குகள்..." இஸ்லாமை... இசுலாம் என்று தமிழ்ப்பெயராக்கியது(?)போல... நைசாய்... "வைசுராய்" என்று தமிழில் எழுதுவது போல நம்மை அவர்களது பதிவுகளில் எழுதி ஏமாற்றுவார்கள்..! அவர்களை விடுங்கள்..!
இதனை இன்னும் தெளிவாக அறிய நாம் இதன் மூலமான பிரிட்டிஷ் நடைமுறையை அறிந்து கொள்ளவேண்டும்..!
இந்த பிரிட்டிஷ் நடைமுறை என்னவென்றால்... ஆகக்கூடிய உயர்ந்த தலைமை பொறுப்பில் உள்ளவர்களை 'ஜெனெரல்' என்று அடைமொழி கொடுத்து அழைப்பது அவர்களின் வழக்கம்..!
இந்த 'ஜெனெரல்' என்ற வார்த்தை வேறொன்ரோடு சேர்ந்து வந்தால்தானே நம்மை "பொது" என்று கூறவைத்து குழப்புகிறார்கள்..? தனியே வந்தால்..? இப்போது என்ன சொல்கிறார்கள் நம் தனித்தமிழர்கள்..?
இதோ... நம் இந்திய இராணுவத்தின் தரைப்படைக்கு தலைமை பொறுப்பில் இருப்பவர் யார்..? General..! (A General is an officer of high military rank, usually in the army) இவரை 'தனித்தமிழ் விரும்பி'கள் எப்படி அழைக்கிறார்கள்..?
![]() |
பொது(?)முஷரஃப் |
"பொது" என்றா..?
ஹி..ஹி.. இல்லையே..!
ஹி..ஹி.. இல்லையே..!
அப்புறம்...?
'ஜெனரல்' என்றுதான்..!
அவ்வ்வ்வ்....
அவ்வ்வ்வ்....
சிலர் 'இராணுவ ஜெனரல்' என்பர்..!
ஓஓஓ..... தெளிவாம்..! :-))
ஓஓஓ..... தெளிவாம்..! :-))
.
ஆனால்............
எந்தத்தனித்தமிழ் மொழிபெயர்ப்பாளரும் இவரை "பொது"(!?!?!?) என்றோ "இராணுவப்பொது" (!?!?!) என்றோ அழைத்தது இல்லையே...? ஹா..ஹா...ஹா... ஏன்..? பர்வேஸ் முஷரஃப் இந்தியா வந்தபோதுகூட, "ஆக்ரா சென்றார், 'ஜெனரல்' முஷரஃப்..." என்றனரா... அல்லது 'ஆக்ரா வந்தார், "பொது" முஷரஃப்' (!?!) என்றனரா..? மண்டையை பிய்த்துக்கொண்டு கடைசியில் 'எதுக்குடா வம்பு...' என்று General-ஐ 'ஜெனரல்' என்றே மொழிபெயர்த்தார்கள் அல்லவா..?
ஆனால்............
எந்தத்தனித்தமிழ் மொழிபெயர்ப்பாளரும் இவரை "பொது"(!?!?!?) என்றோ "இராணுவப்பொது" (!?!?!) என்றோ அழைத்தது இல்லையே...? ஹா..ஹா...ஹா... ஏன்..? பர்வேஸ் முஷரஃப் இந்தியா வந்தபோதுகூட, "ஆக்ரா சென்றார், 'ஜெனரல்' முஷரஃப்..." என்றனரா... அல்லது 'ஆக்ரா வந்தார், "பொது" முஷரஃப்' (!?!) என்றனரா..? மண்டையை பிய்த்துக்கொண்டு கடைசியில் 'எதுக்குடா வம்பு...' என்று General-ஐ 'ஜெனரல்' என்றே மொழிபெயர்த்தார்கள் அல்லவா..?
அடி சக்கை..! General என்பதற்கான தங்களின் 'பொது' என்ற தவறான தமிழாக்கத்தால், 'தனித்தமிழ் ஆர்வளர்கள்' வசமாக மாட்டிக்கொண்ட இடம் இந்த வார்த்தை ஒற்றையாக வரக்கூடிய இங்கேதான்..! இந்த இடத்தில் மட்டும்தான் அது தவறு என்று உங்களுக்கும் நன்கு விளங்கி இருக்கும் என்று நினைக்கிறேன்..!
இப்போது புரிகிறதா சகோ..?
நான் இப்பதிவில் சுட்டிய மேற்கண்ட இடங்களில் "General" என்பதற்கான மொழியாக்கம் "பொது அல்ல" என்று...?
ஆகவே.... General என்ற ஆங்கில வார்த்தைக்கு...
பொதுமை (general election),
முழுமை (general body check up),
பெரும்பாண்மை (general opinion of the people) என்ற அர்த்தங்கள்
மட்டுமின்றி...
நாம் இப்பதிவில் பார்த்த உதாரணங்கள் மூலம்...
'தனித்துவ உயர்நிலை' அல்லது 'உச்சம்'
என்ற அர்த்தமும் உண்டு..! (http://www.thefreedictionary.com/general) (General - Highest or Superior in rank is another meaning)
இப்பதிவில் நான் சுட்டிய அனைத்து இடங்களிலும்... தனித்துவ உயர்நிலை அல்லது உச்சம் போன்ற பொருளே வரும் என்று உறுதியாக கூறுகிறேன்..!
அதாவது இப்படி....
General Manager -- உயர் மேலாளர் (இவருக்கு மேலே பலர் அதிகாரத்தில் உள்ளதால் 'உச்ச' சேர்க்கவில்லை)
Director General -- உச்ச இயக்குனர் (இவருக்கு மேலே யாரும் அதிகாரத்தில் இல்லாததால் 'உச்ச' சேர்த்திருக்கிறேன்)
Inspector General -- உயர் ஆய்வாளர்
Director General of Police -- காவல்துறை உயர் இயக்குனர் (இவருக்கு மேலேயும் ஒரே ஓர் உச்ச IPS அதிகாரி... (DIB) Director of Intelligence Bureau இருக்கிறார் என்பதால் உயர் போட்டுள்ளேன்)
General Post Office -- உயர்நிலை அஞ்சல் அலுவலகம் (Head Post Office -- "தலைமை அஞ்சல் அலுவலகம்" என்று அழைக்கப் படுவதாலும், மேலும் 12 GPO-க்கள் இந்தியாவில் இருப்பதாலும்... உச்சம் அல்லாமல் உயர் சேர்க்கப்பட்டுள்ளது...)
Chief Postmaster General -- உயர் தலைமை அஞ்சல் அதிகாரி
Chief Postmaster General -- உயர் தலைமை அஞ்சல் அதிகாரி
Govt.General Hospital -- அரசு உயர் மருத்துவமனை
Governor General -- உச்ச ஆளுநர்
General --உச்சராணுவத்தார்

General-க்கான மேற்படி 'பொது' எனும் மொழிபெயர்ப்பு 'தவறு' என்பது மட்டும் என் அறிவுக்கு நன்கு எட்டிவிட்டது.
மற்ற எனது புதிய மொழிபெயர்ப்புகள் குறித்து :
இதெல்லாம்... ஏதோ என் சிற்றறிவுக்கு எட்டியவை மட்டுமே..!
'தனித்தமிழ் மொழிபெயர்ப்பு ஆர்வளர்கள்'... தங்களுக்கு இதைவிட சிறந்த மொழியாக்கங்கள் தெரிந்து இருந்தால் அவசியம் கூறுங்கள் சகோ.
எனது பதிவில் விமர்சனம் அல்லது பொருட்குற்றம் இருந்தாலும் மறக்காமல் பின்னூட்டத்தில் பலரும் அறிந்துகொள்ள ஏதுவாக அவசியம் தெரிவியுங்கள் சகோ..!
தமிழ் - கற்றது கைமண் அளவு..!
27 ...பின்னூட்டங்கள்..:
மாப்ள குறிப்புகளுடன் புரிய வைத்தற்க்கு நன்றிய்யா!
/* ஒரு நிறுவனம் என்றால்... அங்கே (உதவி)Deputy Manager / (இணை)Joint Manager / (துணை)Assistant Manger / (கூடுதல்)Additional Manager என்றெல்லாம் பல Junior Managers இருப்பார்கள். அதில் ஒருவர் பதவி உயர்வு பெற்று (மேலாளர்) Manager ஆவார். சில ஆண்டுகள் கழித்து அவர், அடுத்த பதவி உயர்வு பெற்று Senior Manager ஆவார். பின்னர், Chief Manager ஆவார். அப்புறம் ஒருநாள்... இவரின் 'சிறப்பான செயல்பாட்டை' பாராட்டி அந்த நிறுவனம் GM என்ற பதவியை அளிக்கும்..! அதாவது General Manager என்று..! இப்போது இவருக்கு 'தனித்தமிழ்ப்பெயர்' என்ன தெரியுமா...? "பொது மேலாளர்"..! ஏன்..? திடீரென்று எப்படி இவர் நிறுவனத்தின் பொதுச்சொத்தாக மாறினார்..? யாருக்கு இவர் 'பொது' என்றானார்..? நீங்கள் என்றைக்காவது இப்படி யோசித்தது உண்டா சகோ..? */
சலாம் சகோ ஆசிக்,
நிச்சயமா இப்படி எல்லாம் எங்களுக்கு யோசிக்க தெரியாது சகோ. யோசிச்சு சொல்லத்தான் நீங்க இருக்கீங்களே???? ஹி.. ஹி....
நீங்க யோசிச்சு யோசிச்சு சொல்லுங்க, நாங்க பின்பற்றோம்....
@விக்கியுலகம்புரிய வேண்டியவ அர்களுக்கு புரிந்து, தவறை சரி செய்ய வேண்டும் என்பதே நம் விருப்பம்ய்யா..! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.விக்கி.
@சிராஜ்அலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.சிராஜ்....//நிச்சயமா இப்படி எல்லாம் எங்களுக்கு யோசிக்க தெரியாது சகோ. யோசிச்சு சொல்லத்தான் நீங்க இருக்கீங்களே???? ஹி.. ஹி....
நீங்க யோசிச்சு யோசிச்சு சொல்லுங்க, நாங்க பின்பற்றோம்....//---அச்சச்சோ...
நான் உங்களை(படிப்போரை) சொல்லலை சகோ... பெயரிட்டோரை சொன்னேன். ஒவ்வொரு இடத்திலும் கேள்வி அவர்களுக்குத்தான்.
நீங்கள் சுட்டியவுடன்தான் அதன் வேறு விதமான புரிதல் தென்படுகிறது. இது எனது கவனக்குறைவே.
இப்போது....
//நீங்கள் என்றைக்காவது இப்படி யோசித்தது உண்டா... என்னருமை 'தனித்தமிழ் ஆர்வளர் சகோஸ்'..?//...இப்படி தெளிவாக மாற்றிவிட்டேன்.
வருகைக்கும் குட்டுக்கும் நன்றி சகோ.சிராஜ்.
ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக (தமிழ பற்றிய பதிவு என்பதால்...:-))
சிறந்த இடுகை சகோ.... இன்னும் யோசித்துக் கொண'டிருக்கிறேன். புதிய வார்த்தைகள் கிடைத்தால் பகிருகிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
ஒரேஒரு வார்த்தையை மட்டும் மையப்படுத்தி ஒரு பதிவை தரலாம் அதும் தரமாக என்பது இப்பதிவு மூலம் உணரமுடிகிறது மாஷா அல்லாஹ்.......
General என்ற வார்த்தைக்கு அதிகப்படியான அர்த்தங்கள் இருந்தும் பொது என்ற ஒரே ஒரு வார்த்தையை மட்டும் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் பிடித்து தொங்கு கிறார்கள் என்பதை உணர்த்திய விதம் அருமை
ஆனால் இவ்வார்த்தைக்கு அரேபியர்களும்العامة என்ற ஒரே ஒரு வார்த்தையை பயன் படுத்துகிறார்கள் என நினைக்கிறேன் இந்த வார்த்தையும் பொது என்ற அர்த்தத்தில் தான் பயன் படுத்துகிறார்கள் அதனால் தமிழர்கள் மட்டும் தவறு செய்கிறார்கள் என்பதை ஏற்றுகொள்ள இயலவில்லை ஒரு வேளை அனைத்து மொழிகளிலும் இந்த தவறு இருக்க வாய்ப்பு உள்ளது இறைவனே மிகவும் அறிந்தவன்
சரியா சொல்லி இருக்கீர். இதை பதிவா மட்டும் போட்டுட்டா போதுமா? மாற்றம் வரணும்னாக்க சம்பத்தப்பட்ட அதிகாரியாக்களுக்கு மெய்ல் அனுப்பிரலாமே.
சைக்கிள் கேப்பிலே @@@@@சில... "பின் நவீனத்துவ தனித்தமிழ் முற்போக்குகள்..." இஸ்லாமை... இசுலாம் என்று தமிழ்ப்பெயராக்கியது(?)போல... நைசாய்... "வைசுராய்" என்று தமிழில் எழுதுவது போல நம்மை அவர்களது பதிவுகளில் எழுதி ஏமாற்றுவார்கள்..! அவர்களை விடுங்கள்..!@@@@@
'அவங்களுக்கும்' ஆப்பு வைச்சது சூப்பரப்பு. இன்னும் அவங்களை மறக்கலையா?
சலாம் சகோ ஆசிக்,
ஜெனரல் தொடர்பாக நீங்கள் கூறிய கருத்தக்கள் சரி போலத்தான் தோன்றுகிறது. ஆனால் அதற்க்கு நீங்கள் கொடுத்த புதிய பெயர்களிலும் சிக்கல் வரும் போல் தான் என் மனதிற்கு படுகிறது.
உதாரணத்திற்கு, "General Manager -- உயர் மேலாளர்" இதில் உயர் மேலாளர் என்பதற்கு மேலாளர்களில் உயர்ந்தவர் என்றும் அர்த்தம் கொள்ளலாம். அப்படி என்றால் மற்ற மேலாளர்கள் எல்லாம் உயரம் கம்மியாக(ஹா.. ஹா..) இருக்கும் பொழுது இவர் மட்டும் எப்படி உயர்ந்தார்? என்ற கேள்வி எழும். இது உங்களின் பெற மொழி பெயர்ப்புகளுக்கும் பொருந்தும் என்றே நினைக்கிறேன். இதையெல்லாம் யோசித்துதான் "பொது மேலாளர்" என்றே இருந்து விட்டு போகட்டும் என்று விட்டு விட்டார்களோ????
இதை தான் தமிழ் 'படுத்துதல்' என்கிறார்கள் போல!
அஸ்ஸலாமு அலைக்கும்
சகோ சிராஜ் உயர் மேலாளர் என்றால் அதிகாரத்தில் உச்சமானவர் என்றுதான் வரும் இதில் அவரின் உயரத்தை இழுப்பது வேடிக்கை சகோ முஹமத் ஆஷிக் யின் கருத்து முற்றிலும் சரியே
Mr. MOHAMED ASHIK
ASSALAMU ALAIKKUM (W.R.B.)
MY HATS OFF TO YOU!!!
FOR THE GENERAL EXPLANATION ABOUT "GENERAL" TO THE GENERAL READERS IN A GENERAL POSTING
WHICH I HOPE IN GENERAL YOUR POST BE APPRECIATED BY THE GENERALCOMMUNITY WITHIN THE GENERAL UNDERSTANDING.
REGARDS
VANJOOR.
P.S. IN GENERAL MANY GENERAL SPELLING / GRAMMAR MISTAKES ARE EXPECTED FROM ME BY THE GENERAL READERS .
@சுவனப்பிரியன்ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக.
//புதிய வார்த்தைகள் கிடைத்தால் பகிருகிறேன்.//---வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.சுவனப்பிரியன்.
@Rabbaniஅலைக்கும் சலாம் வரஹ்...
//இவ்வார்த்தைக்கு அரேபியர்களும் العامة என்ற ஒரே ஒரு வார்த்தையை...//---நான் இருக்கும் ஜுபைல் என்ற ஊரில் 'அரசு பொது( العامة )மருத்துவமனை' என்றே உள்ளது. இதற்கு பொருள் என்னவென்றால்... இது கண் சிகிச்சை, எலும்பு முறிவு, இதய அறுவை... போன்ற குறிப்பிட்ட specific treatment/specialised என்றில்லாமல்... 'அனைத்து சிகிச்சையும் கொண்ட மருத்துவமனை' என்ற பெயரிலும், சவூதிகளுக்கு மட்டுமின்றி 'அனைவருக்கும் பொதுவாக இலவச சிகிச்சை' என்ற அளவில் இந்த பெயர் சரிதான்.
இதே பெயரில் மேலும் பல ஊர்களிலும், தலைநகரிலும் உள்ளது.
ஆனால், 'தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும், மாநகரத்திலும் உள்ள நமது அரசு மருத்துவமனைக்கும் இதே நியதி பொருந்தும் என்றாலும், அது ஏன் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனை மட்டும் 'பொது' என்ற பெயரை சூட்டிக்கொண்டது?' என்பதே எனது கேள்வி சகோ.ரப்பானி.
அதேநேரம், பொது மேலாளர் (முதீர் அல்ஆம்) என்றே தவறாக சவூதியிலும் அழைக்கின்றனர்..!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.ரப்பானி.
@தட்டச்சன் //மாற்றம் வரணும்னாக்க சம்பத்தப்பட்ட அதிகாரியாக்களுக்கு மெய்ல் அனுப்பிரலாமே.//---தங்கள் பின்னூட்டம் கண்டபிறகு, சென்னை Poat Master General (GPO)-க்கு மெயில் அனுப்பிட்டேன். GGH-க்கு மெயில் ஐடி கிடைக்கவில்லை. தேடிக்கொண்டு இருக்கிறேன். கிடைத்தால் அனுப்பிவிடலாம்.
மற்றபடி, வேறு பல பெயர்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், ஊழியர்கள், செய்தியாளர்கள் புரிந்து தெளிய வேண்டும். அவ்ளோதான்.
//சைக்கிள் கேப்பிலே...//...நீங்க கப்பலே ஓட்டறீங்களே சகோ..! :-))
வருகைக்கும் ஆக்கப்பூர்வமான யோசனைக்கும் மிக்க நன்றி சகோ.தட்டச்சன்.
@சிராஜ்அலைக்கும் சலாம் வரஹ்...
இதுமாதிரி யாரும் காமடி கீமடி பண்ணிட கூடாதுன்னுதான்.... குறிச்சொல் //சீரியஸ் பதிவு//--ன்னு முன்னாலேயே கொடுத்து இருந்தும், இப்படீன்னா... ம்ஹூம்... ஒன்னும் சொல்றதுக்கில்லை... சகோ.சிராஜ்...! நடத்துங்க :-) நடத்துங்க... :-)
@bandhu//இதை தான் தமிழ் 'படுத்துதல்' என்கிறார்கள் போல!//---ஆமாம்..சகோ.பந்து, ரொம்பத்தான் படுத்துது நம்மை..!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.பந்து
@Rabbaniஅலைக்கும் சலாம் வரஹ்...
தங்கள் சீரியஸ் ரிப்லைக்கு நன்றி சகோ.ரப்பானி..!
ஆனால்.... சகோ.சிராஜ் சொல்றதை வச்சு பார்த்தால்....
"இந்திய உச்ச நீதி மன்றத்தை எவரெஸ்ட் சிகரத்தில் கொண்டு போய் வைக்கணும்...."
....என்ற கோரிக்கையை பிரதமர்.மன்மோகன் சிங்குக்கும்.....
"பிராட்வேயில் உள்ள சென்னை உயர்நீதி மன்றத்தை பரங்கிமலை மேலே கொண்டு போய் வைக்கணும்"
"மேலூர் ரோட்டில் உள்ள மதுரை கிளை உயர் நீதி மன்றத்தை திருப்பரங்குன்றரத்து மலை மேலே ஏற்றி வைக்கணும்"
....என்ற கோரிக்கையை முதல்வர் ஜெ.வுக்கும் வைத்து...
அடுத்தடுத்து பரபரப்பு பதிவுகளை...
சகோ.சிராஜின்... 'வடைபஜ்ஜி' தளத்தில் விரைவில் எதிர்பார்க்கிறேன்....!
நீங்கள் எப்படி எதிர்பார்க்கிறீர்கள் சகோ.ரப்பானி..?
@VANJOORஅலைக்கும் சலாம் வரஹ்...
இத்துனூண்டு பின்னூட்டத்திலேயே பத்து GENERAL-ஆ..? யப்பா.... கலக்குறீங்கப்பா.... வருகைக்கும் வார்த்தைஜால பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.வாஞ்சூர்.
MY HATS OFF TO YOU TOO...!!!
சகோ ஆசிக் மற்றும் ரப்பானி,
இல்ல..இல்ல.. நான் கிண்டல் செய்யவில்லை. நான் வேற சீரியஸ் அர்த்தத்தில் தான் சொன்னேன். பரவாயில்லை விட்டுவிடலாம். குழப்பம் செய்ததற்கு மன்னிக்கவும்.
@சிராஜ்
அடாடா....
சகோ.சிராஜ்,
ஒரு நிமிஷம்...இருங்க...
நீங்க சீரியசாத்தான் சொன்னீங்களா...?
ச்சே... இது தெரியாம போச்சே....
நான் செம காமடியால்ல பதில் சொல்லிட்டேன்....! :-))
சரி..சரி... சகோ.சிராஜ்,
நான் இப்போ சீரியஸாவே சொல்றேன்...
உண்மையிலேயே அந்த பதில் காமடியாத்தான் சொன்னேன் சகோ..! அகப்பையிலே அள்ளும்போது காமடி வரலைன்னா அது என் தப்பு இல்லை...! என் சட்டியிலே மேட்டர் அவ்ளோதான்னு அர்த்தம்..!:-))
@ சிராஜ்//குழப்பம் செய்ததற்கு மன்னிக்கவும்.//----no need as there is no issue. :-)
சலாம் ஆசிக்,
இப்பொழுதெல்லாம் நீங்கள் நிறைய எழுதுவது போல் தெரியவில்லை. நிறைய எழுதுங்கள் சகோ. FB online ளையும் பார்க்க முடியவில்லை. பிஸி????
சிராஜ்
அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோ. ஆஷிக் General என்ற ஒரே சொல்லை விளங்க விரிவாக தமிழில் பாடம் எடுத்தமைக்கு மிக்க நன்றி.
profileல் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கேன், பதிலுக்காக காத்திருக்கிறேன்.
அஸ்ஸலாம் அலைக்கும் ,
எப்புடி எப்புடி, விதவிதமா, நுணுக்கமா யோசிக்கறாங்கப்பா !!!
// "பிராட்வேயில் உள்ள சென்னை உயர்நீதி மன்றத்தை பரங்கிமலை மேலே கொண்டு போய் வைக்கணும்"
"மேலூர் ரோட்டில் உள்ள மதுரை கிளை உயர் நீதி மன்றத்தை திருப்பரங்குன்றரத்து மலை மேலே ஏற்றி வைக்கணும்"
....என்ற கோரிக்கையை முதல்வர் ஜெ.வுக்கும் வைத்து...//
ஆஷிக் பாய் , "பொது கழிப்பறை" இன்னு ஆங்காங்கே ரோட்டுலே வைத்து இருக்காங்களே ,
அங்கெல்லாம் மனிதர்களுடன் சேர்ந்து ஆடு, மாடுங்க வருதா ?!! இல்லையே ....அப்போ ஏன்
அதுமாதிரியான பெயர் வைக்கணும் ?? உங்க கோரிக்கைகளுடன் அப்படியே என் நியாயமான
கோரிக்கையையும் சேர்த்து முதல்வர் "பாப்பாதியம்மாவுக்கு" வைத்து அனுப்புங்க .....
--
@Nasarஅலைக்கும் ஸலாம் வரஹ்..
சகோ.நாஸர்,
அது... 'உயர்/உச்ச' என்பதை உயரத்தோடு தொடர்பு படுத்திய சகோ.சிராஜை, அது தப்புங்கிறதுக்காக ஜாலியா கலாய்ச்சது..!
அப்புறம், "பொது கழிப்பறை" என்பதை 'General Toilet' என்று சொல்ல மாட்டார்கள் சகோ.
Public Toilet என்றுதான் சொல்வார்கள்.
Public Exam(பொதுத்தேர்வு),
Public Library (பொது நூலகம்),
Public (பொதுமக்கள்)... இப்படி..!
ஆகவே, உங்கள் பின்னூட்டம் என் பதிவுக்கு out of syllabus சகோ..! :-)
So, your petition to CM is rejected..!
:-)
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.நாஸர்.
@தாஜுதீன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.தாஜுதீன். பதில் மின்னஞ்சல் கிடைத்து இருக்குமே சகோ..?
@சிராஜ்அலைக்கும் ஸலாம் வரஹ்...
எனக்கு எட்டு நாளைக்கு இரண்டு நாட்கள் வார விடுமுறை சகோ.சிராஜ். இதில் ஒரு பதிவு எழுத முடிகிறது.
அப்புறம்,
2 நாள் evening shift, (2pm - 10pm)
2 நாள் morning shift, (6am - 2pm)
2 நாள் night shift... (10pm - 6pm)
இதில் morning முடிந்து night செல்லும்போது கிடைக்கும் 32 மணி நேரத்தில் ஒரு பதிவு போட நேரம் இருக்கிறது.
நிறைய எழுத ஆசைதான் சகோ.சிராஜ். ஆனால், குடும்பத்திற்கு நேரம் செலவழிப்பது பதிவு எழுதுவதை விட முக்கியம் அல்லவா சகோ..?
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!