அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Sunday, January 29, 2012

31 'மதஎதிர்வாதி' -- ஓர் ஆபத்து அறிமுகம்..!

இவ்வுலகில் மனிதனை தம் சுய அறிவுடன் காரியமாற்றும் படி படைத்த இறைவன் அவனை சும்மா வெறுங்கையுடன் விட்டுவிடவில்லை ..! 'எப்படி இவ்வுலகில் வாழவேண்டும்' என்று தான் படைத்த முதல் மனிதனுக்கே அறிவுறுத்தும் வண்ணம் 'இஸ்லாம் எனும் நேரிய வாழ்வியல் நெறி' ஒன்றை அவருக்கு அருளிய இறைவன், அவரை தம் இறைத்தூதராகவும் ஆக்கி அவரின் மனைவிக்கும் அனுப்பி அந்த வாழ்வியல் நெறியை பகிரவும், தம் சந்ததிக்கும் தொடர்ந்து பிரச்சாரம் செய்யவும் வைத்தார். காலப்போக்கில் சிலர் இந்த இறைவழியை புறக்கணித்து தம் மனம் விரும்பிய வழியில் செல்லத்துணியும்போது, வாழ்வியல் நெறியை அப்போதும் பேணுவோர், ஓரிறை நெறி பிரழ்ந்தவோர் மீது பிரச்சாரம் செய்வதும், அவர்களில் ஒரு சாரார் மீள்வதும் மற்றொரு சாரார் அதனை புறக்கணிப்பதும் அன்றிலிருந்து தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், "நம் பணி இறைச்செய்தியை தெளிவாக இவர்களிடம் சொல்வது மட்டுமே... சொல்லியாயிற்று... இனி இவர்களுக்கு இறைவன் விட்ட வழி" என்று இந்த ஆத்திக இறைப்பற்று கொண்டவர்கள் எண்ணினால்... அவர்களை 'மதப்பற்று' கொண்டவர்கள் எனலாம்.

அவ்வாறின்றி, 'நான் சொல்வதை கேட்காத உன்னை விட்டேனா பார்' என்று இறைநெறி மறுப்பாளர்களுக்கு தொல்லை கொடுப்பதும், கொடுமை புரிவதும், கொலை செய்வதும்  'மதவெறி' ஆகிவிடுகிறது.

இதேபோலவே, "எப்படிய்யா எனது விருப்பத்துக்கு எதிரான கருத்தை எனக்கு நீ ஆத்திக பிரச்சாரம் எனச்செய்யலாம்..?" என்று சில நாத்திகர்கள்... மதப்பற்றாளர்களுக்கு தொல்லை கொடுப்பதும், கொடுமை புரிவதும், கொலை செய்வதும்  'மதஎதிர்வெறி' ஆகிவிடுகிறது.

இறையச்சமும் இறைவிருப்பும் ஆத்திக மதப்பற்றாளர்களை தோற்றுவிக்கிறது.

இவர்களில்...

இறையச்சமும் இறைவிருப்பும் பின்னுக்கு தள்ளப்பட்டு மதப்பற்றும் மதவிருப்பும் மட்டுமே முக்கியம் ஆகும்போது .... ஆத்திக 'மதவெறி'யர்களை தோற்றுவிக்கிறது.

அதேபோல...

இறைமறுப்பும் மத நிராகரிப்பும் நாத்திகப்பற்றாளர்களை தோற்றுவிக்கிறது. அவர்களில் தங்கள் கொள்கைகளை பிரச்சாரம் செய்யும் 'மதஎதிர்வாதி'கள் சிலர் உள்ளனர்.

இந்த 'மதஎதிர்வாத' நாத்திகர்களில்,

இறைமறுப்பும் மத நிராகரிப்பும் பின்னுக்கு தள்ளப்பட்டு 'நான் என்னும் சுயஅகங்காரம்(ஈகோ)' மட்டுமே தன் கருத்தில் மேலோங்குதலும், அதீத மதவெருப்பும் 'மதஎதிர்வெறி'யர்களை தோற்றுவிக்கிறது. ஒரு கட்டத்தில் தங்கள் வாதங்கள் தோற்றுப்போன நிராசையால் இவர்கள் தன்னையே 'இறைவன்' என்றும் கூறிக் கொள்வார்கள்..! தம் கையில் ஆட்சி அதிகாரம் கிடைத்தால் எதிர்கருத்து கொண்டோரை கொல்லத்துனிவர். உதாரணம்: மூஸா நபி (அலை..) காலத்திய ஃபிர்அவ்ன்..! (Pharaoh of Moses Period in ancient Egypt)

---'மதவெறியர்', 'மதஎதிர்வெறியர்' ஆகிய இந்த இரண்டு பிரிவினருமே மனித சமூகத்துக்கு நல்லதில்லை..!

ஜனவரி.30-1948, 
அன்று காந்தியை சுட்ட 'மதவெறியன்' நாதுராம் கோட்சே யின் மந்திரமும் 'ஹே ராம்' தான்.
மதப்பற்றாளர் அல்லது மதவாதி எனப்படும் காந்தியின் மந்திரமும் 'ஹே ராம்' தான்.

சுட்டவன் - சுடப்பட்டவர் ஆகிய இருவரின் மதமும் ஒன்றுதான்..! 

'மதப்பற்றாளர்' காந்தியால் எவருடைய உயிருக்கும் உடைமைக்கும் எந்தக்கேடும் நேர்ந்ததில்லை. ஆனால், 'மதவெறியன்' கோட்சேவின் கும்பல் அன்று முதல் இன்றைக்கும் நாட்டில் செய்து வரும் ரத்த யாத்திரை கொலைகளும், மசூதி இடிப்பு அட்டூழியமும், ஆர்.டி.எக்ஸ் குண்டுவெடிப்புகளும்... இதனால் நம் நாடு இப்பொழுது அடைந்து கொண்டு இருக்கும் பெருங்கேடும் நாம் அனைவரும் நன்கு அறிந்த ஒன்றே..!

'மதப்பற்றுடையவர்கள்' என்றுமே 'மதவெறியர்கள்' ஆகமாட்டார்கள்..!

உலகில் பெரும்பாலானவர்கள் 'மதப்பற்றாளர்கள்'தான். இவர்கள் தமக்கு சரி என்று பட்டதை, இதை மற்றவர்களுக்கு எழுத்தின் மூலமோ, வாய் வார்த்தை மூலமோ சொன்னால், கேட்கும் மற்றவர்கள் அதில் சரிகானும் பட்சத்தில், அதை ஏற்றுக்கொண்டால், 'தாம் சொன்னது அவர்களுக்கும் உபயோகமாக இருக்கிறது' என்று மனம் மகிழ்வர். அவ்வளவுதான் இவர்கள்.

இப்படி சொல்லியும் ஏற்றுக்கொள்ளாதவர்களை... அவர்கள் 'இருக்கவே கூடாது' என்று நினைப்போர்தான் 'மதவெறியர்' ஆவார். அரை அல்லது அதிகப்படியாய் ஒரு சதவிகிதம் பேர் உள்ள இவர்களுக்கு எதிராக மதப்பற்றாளர்கள் தங்கள் கருத்தை கூறினால்...
காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே போலவே... 
பாகிஸ்தான் பஞ்சாப் கவர்னர் சல்மான் தசீரை  சுட்டுக்கொன்ற மாலிக் மும்டஸ் காதிரி மாதிரி...
சக கிருத்துவர்களை சுட்டுக்கொன்று குவித்த நார்வே படுகொலையாளன் ஆண்ட்ரூஸ் ப்ரீவிக் போன்று...

தம் மதத்தை பின்பற்றும் நல்லோரையே சுட்டுக்கொல்லும் 'மதவெறியர்கள்' ஆக மாறக்கூடும்.  

இதேபோலவே, 

'மதஎதிர்வெறி' கொண்ட 'சிலர்' இஸ்லாம் மீது பயங்கர 'எதிர்ப்புவெறி' பிடித்து அலைகின்றனர். காரணம் என்னவென்றால்... மற்ற மத எதிர்ப்புகளுக்கு தக்க ஆதாரம் மற்றும் வாதங்கள் கொண்டு விவாதிக்க முடிந்த இவர்களுக்கு இஸ்லாமிய மதப்பற்றாளர்களுக்கு மட்டும் தக்க பதில் வாதங்கள் வைக்க முடிவதில்லை. 

மேலும், எந்த சரியான கொள்கைகளை கொண்டு அவர்கள் பிற மதங்களை புறக்கணிக்கின்றனரோ அதே சரியான கொள்கைகளை கொண்ட இஸ்லாமை எதிர்க்க முடிவதில்லை. 

உதாரணம்... பல/சில தெய்வக்கொள்கை, உடன்கட்டை, விதவை மறுமணம் ரத்து, பெண்ணடிமைத்தனம், தேவதாஸி, சமூக சமநீதி, பகுத்தறிவுக்கு ஒவ்வாத புராணக்கதைகள், பிறப்பு முதல் திருமணம் ஊடாக இறப்பு வரை ஒரு மனிதனுக்கு உண்டாக்கப்பட்ட அறிவுக்கு ஏற்கவே முடியாத கேள்விக்குறிய மத மூடநம்பிக்கை சடங்குகள், வர்ணாசிரம ஏற்றத்தாழ்வுகள்..! மேற்படி விஷயங்களை எதிர்க்கும் இஸ்லாமை எப்படி எதிர்ப்பது என்ற உண்மை புரிந்தவர்கள் இஸ்லாம் பக்கம் வந்து விடுகின்றனர். உதாரணம், இந்திய முஸ்லிம்கள்..! சமீபத்தில் பிரபல உதாரணம்... நாத்திகராக இருந்து முஸ்லிம் ஆகிய அதாவது, அப்துல்லாஹ்வாகிய பெரியார் தாசன்..!

ஒருவர், 'தனக்கு மதம் வேண்டாம்' என்று விரும்பினால் அது அவர் விருப்பம். கூடவே, 'இறைவனும் இல்லை' என்றால் நாத்திகர் என்போம். இவர்கள் நாம் மேலே கண்ட 'மதப்பற்றாளர்கள்' போன்ற தங்கள் கொள்கையின் பற்று காரணமாக 'நாத்திக பற்றாளர்கள்'..! இவர்கள், 'தாம் கொண்ட கொள்கை சரியா' என்பதில் சந்தேகம் கொண்டால்... அவர்கள் மதஅடிப்படைவாதிகளிடம் தாமாக முன்வந்து தம் சந்தேகங்களை விவாதிப்பார்கள். மாறாக, மதஅடிப்படை வாதிகளின் பேச்சுரிமை/எழுத்துரிமை இவற்றை எதிர்க்க மாட்டார்கள். விவாதம் மூலம், இந்த நாத்திகர்கள் மத அடிப்படை வாதிகளாக ஒருகால் மாறவும் செய்வார்கள். இவர்களால் சமூகத்துக்கு எவ்வித கேடும் இல்லை.

ஆனால், இது போன்ற விவாதத்தில்... 'தான் இத்தனை நாள் கொண்ட நாத்திக நம்பிக்கை செத்து விடப் போகிறதே' என்ற அகங்காரத்துடன் கூடிய தம் மீதான கழிவிரக்கம்... இவர்களை 'மதஎதிர்வாதி'களாக பரிணாமம் கொள்ள வைக்கிறது..! அதனால், அறிவுக்கு ஒவ்வாத வகையில் ஆனாலும்... 'எதையாவது சொல்லி இஸ்லாமை எதிர்த்தே ஆகவேண்டும்' என்ற பரிதாப கட்டாய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். 'தம் நாத்திக நிலையை புரட்டிப்போடும் இந்த இஸ்லாம் கூறும் மதப்பற்றாளர்கள் இருக்கவே கூடாது' என்ற ...  தம் ஃபாசிஸ கொள்கையினால் இஸ்லாமிய பற்றாளர்களை 'மதவாதி' என்று ஏதோ 'தீவிரவாதி' போல திரித்து விளித்து வருகிறார்கள்..!

'அவர்களுக்கு மிகச்சரியான எதிர் கருத்து கொண்டவர்களான முஸ்லிம்கள்  எவருமே, தம் பதிவை பகிரும் திரட்டிகளில் கூட இருக்க கூடாது' என்ற ஃபாசிஸ சித்தாந்தம் நடுநிலை எண்ணம் கொண்ட நல்லோர் எவராலும் ஏற்றுக்கொள்ள இயலாதது..!

இந்த  'மதஎதிர்வாதி'களின் முந்தய 'மதஎதிர்ப்பு' என்பது சிறிது சிறிதாக 'மதஎதிர்வெறி'யாகும் போது அது 'மதவெறி'யைவிட கொடுமையானதாய் கூட ஆகலாம்.

எப்படியெனில், தம் விருப்பத்துக்கு மாறாக எழுதுவோரை இன்று திரட்டியில் இருந்து நீக்க நினைக்கும் இவர்கள் போகப்போக... "உலகத்தில் இருந்தே இவர்களை நீக்கினால்(?) என்ன?" என்றும் கூட குரூரமாக நினைக்க ஆரம்பிக்கலாம்..!

இப்படி ஒருவர் 'மதஎதிர்வெறி' கொண்டால்... மன வக்கிரம் கொண்ட பிறகு 'மதவெறியனுக்கும்', 'மதஎதிர்வெறியனுக்கும்' எந்த வித்தியாசமும் இல்லையே..! இந்த 'மதவெறியர்'களிடம் இருக்கும் வக்கிரமும், இந்த 'மதஎதிர்வெறியர்'களிடம் இருக்கும் வக்கிரமும் ஒரேமாதிரியானதுதான். 

எந்த வெறியாயினும் அந்த வெறி அழிக்கப்படவேண்டிய ஒன்று..!

சமூகத்துக்கு ஆபத்தானவர்களான இவர்கள் போன்ற 'வெறிநிலை'யில் உள்ளவர்களுக்கு, நமது இஸ்லாமிய நல்லுபதேசம் மூலம் சாராசரி சிந்தனை கொண்ட... நல்ல 'நார்மல் நிலை' மனிதர்களாக இவர்களை மாற்ற நாம் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்..! மதஎதிர்வெறி அழிப்பு மருந்து யாதெனில் அவர்களிடம் நாம் தொடர்ந்து வரும் மத அடிப்படைவாத பிரச்சாரம்  மட்டுமே..! மத வெறியர்களிடம் சரியான மத அடிப்படை புரிதலை ஏற்படுத்தினால்தான் அவர்கள் மதவெறியிலிருந்து மீண்டு 'மிதவாதிகளான மதப்பற்றாளர்களாக' மாறக்கூடும். 

ஏனெனில், மதங்கள் பொதுவாக பிறருக்கு அநீதி இழைக்க சொல்வதில்லை. அதிலும், இஸ்லாம் மட்டும் ஒரு படி அதிகம் சென்று, 'அநீதி இழைக்கப்பட்டவரின் சாபத்துக்கும் இறைவனுக்கும் இடையே திரையே இல்லை' என்று சொல்கிறது. 

இன்னும் ஒரு படி மேலே போய், 'அநீதி இழைக்கப்பட்டவன் தனக்கு அநியாயம் செய்தவனை மன்னிக்காவிட்டால்... அந்த பாவத்தை மன்னிக்க இறைவனிடம் எவ்வளவு மன்றாடினாலும் இறைவன் மன்னிப்பதில்லை' என்றும் இஸ்லாம் மனிதவுரிமையை தெளிவாக அறிவிக்கிறது.

இன்றைய தமிழ்ப்பதிவுலகில் 'மதஎதிர்வாதி'கள் வெகு சிலர் 'நாத்திகர்' என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு உள்ளனர். அவர்கள் 'மதஎதிர்வெறி'யர்கள் ஆவதற்குள் அவர்களை சரியாக பிரித்தறிந்து, அன்பு சகிப்புத்தன்மை போன்ற  நல்லுபதேசங்களை செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.

இவர்கள் 'யார் யார்' என்பதனை அவர்களின் ஆதாரமற்ற வெற்று குற்றச்சாட்டு பதிவுகள், மொக்கை பின்னூட்டங்கள் ஆகிய இவற்றில் உள்ள ஆபாச- அமங்கல- அசிங்க- வார்த்தைகள் சுலபமாக நமக்கு காட்டிக்கொடுத்து விடும். ஆகவே, இவர்களை பிரித்தறிவது மிகவும் எளிமையான ஒன்றுதான்..!

31 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...