அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Monday, January 23, 2012

79 போலி நாத்திகம் எனும் நடுநிலை முக்காடு

பொதுவாக  நாத்திகர்கள் என்போர்... RSS-சங் பரிவார-ஹிந்துத்வா பாசிஸ கொள்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். தீண்டாமை-வர்ணாசிரம சாதி பாவிக்காத சக ஆத்திக மனிதர்களுடன் அன்போடு பழகுவார்கள். தம் திருமணத்தில் கூட  ஆத்திக/மத நம்பிக்கையை அனுமதிக்க மாட்டார்கள். ஒருவன் செய்த தீய செயலுக்காக ஒட்டுமொத்த  சமூகத்தையே  இழிவாக ஏச மாட்டார்கள். இந்த நான்கு பண்புகளும் இல்லாதவர்களே நம் பதிவின் 'போலி நாத்திகம் எனும் நடுநிலை முக்காடு' போட்டவர்கள். தங்களை இவர்கள் நாத்திகர்கள் என்று அழைத்துக்கொண்டாலும் இவர்களின் இலக்கு இஸ்லாம் & முஸ்லிம்கள் மட்டுமே. (கூடவே சவூதியும்..!) :-((

நாம் சாந்தியை, சமாதானத்தை முன்னிறுத்தி கைகுலுக்க பின்னூட்டினால், நடுநிலை முகமூடி அணிந்த இந்த போலி நாத்திகர்கள் ஒரு சிலர் காந்தியை சுட்ட  கோட்சேயாய் மாறி, உண்மைக்கு புறம்பான விஷயங்களையும், தவறான திரிபு ஒப்பீடுகளையும் கூறி வஞ்சினப்பதிவு இடுகிறார்கள். இவர்களிடம் போய் நமது உண்மையை சொல்லவும் கூடாது, அவர்களின் பதிவில் உள்ள பொய்யை எதிர்க்கவும் கூடாது என்கிற அவர்களின் 'தான்சொல்வது மட்டுமே சரி' என்ற நிலை நமக்கு புரிவதுமில்லை. இதனால் நமது எதிர்வாதம் கூட விழலுக்கு இரைந்த நீராய்... வீணாய்ப்போகிறது.

உதாரணத்திற்கு சில : 'குடித்து விட்டு வருவதும் பெத்தடின் போதை மருந்துட் கொள்வதும் தவறு' என்று விளங்கி இருக்கும் இவர்கள், குடி/போதையை மிகக்கடுமையாக எதிர்க்கும் இஸ்லாமை பின்பற்றுவோருக்கு மேற்கண்டவற்றை பொருந்தா உவமானமாக சொல்வதற்கு காரணம் அவர்களின் 'போலி நாத்திகம் எனும் நடுநிலை முக்காடு'தானே..? இதுதானே இவர்களின் சிந்தை நேரிய பாதையில் செல்வதை தடுத்து, திக்கு தெரியாமல் தறிகெட்டு ஓட வைக்கிறது..?


'போலி நடுநிலை பேணும் போலி நாத்திகர்களே'... நீங்கள் பொது விமர்சனம் செய்வதில் தவறில்லை..! ஆனால், சுயமாக சிந்திக்காமல், "யாரோ எனக்கு சொன்ன என் முன் முடிவுகளோடு மட்டுமே விமர்சிப்பேன்" என்பதுதான் சரியாகப்படவில்லை. இப்படியே நீங்கள் இருப்பதால்... உங்களின் சுய கோபத்தை வெளிப்படுத்தும் போது அறிவுக்கு பொருந்தா சில தவறான ஒப்பீடுகளை செய்து விடுகிறீர்கள். "உனக்கு வந்தா தக்காளி ரசம்..! எனக்கு வந்தாதான் அது ரத்தம்"ங்கிற மாதிரி இருக்கிறது, உங்கள் பொது உலக 'போலி நாத்திக நடுநிலை முக்காட்டு' வாதங்கள்..!

ஈழமுஸ்லிம்களின் மீதான விடுதலைப்புலிகளின் கொலைபாதக அக்கிரமங்களை, போலி நாத்திக நடுநிலை முக்காடு போட்டு இருப்பதால் நீங்கள் அதை எழுத முடியாத நிலையில் உள்ளீர்கள். இந்நிலையில், அந்த புலிப்பாசிஸங்களை பாதிக்கப்பட்ட அந்த முஸ்லிம்கள் கூட எழுதக்கூடா தென்றால் வேறு எவர்தான் எழுதப்போகிறார்கள்..?

'புலி படுத்தால் எலியும் ஏறி விளையாடும்' என்ற உங்களின் இந்த  உவமான துயர்நிலையே... புலிகள் எந்த அளவுக்கு இஸ்லாமிய தமிழர்களின் பேச்சுரிமை/ எழுத்துரிமை/ வாழ்வுரிமை ஆகியவற்றை  பாசிச வன்மத்துடன் சிறைப்பிடித்து இருந்திருக்கிறார்கள் என்பதை தெள்ளத்தெளிவாக பிரதிபலிக்கிறதே..!?

'அதெல்லாம் முடிந்து போன ஒரு விஷயம் ஆதலால், இனி குறைந்தபட்சம் மௌனம் கொள்ளலாமே' என்கிறீர்கள்..! புலிபடுத்த பின்னும் எலியின் உரிமையை பறிக்க நீங்கள் என்ன புலிக்குட்டியா..? அவர்கள் எழுத்தில் குரூரம் இருப்பதாக இப்போது குதிக்கும் நீங்கள், நிஜத்தில் நடந்த புலிக்குரூரத்தை இதுவரை எழுதாமல் உங்களை தடுத்ததும் அந்த முக்காடுதானே..?

"விடுதலைப்புலிகள் இலங்கையில் வாழும் சிலரை (கேட்டுக்குங்க... சிலராம்..!?) அந்நியப்படுத்தியதில் மொத்த மதக்கோபம் கொள்ளும் பதிவுலக பத்தி!ஜீவிகள் காஷ்மீரிகளையும்  மதம் என்ற பெயரால் இடமாற்றம் செய்ததை விமர்சிப்பதில்லை" என்று சொல்லும் நீங்கள்... 'காஷ்மீர் பண்டிட்களை இடமாற்றம் செய்தது யார்' என்றும் சொல்லாமல் "அவர்கள் தற்போது எந்தெந்த(?) ஊரில், எத்தனை(?) முகாம்களில், எவ்வித உரிமைகளும்(?)  அற்று நம் இந்தியாவில் அகதிகளாக(?) அடைக்கப்பட்டு உள்ளார்கள்" என்றும் சொல்லாமல் நழுவியதற்கு காரணம் அந்த முக்காடுதானே..? கொல்லப்பட்ட இலங்கை முஸ்லிம்களுக்கு ஆயிரக்கணக்கில் எண்ணிக்கை இருப்பதை போல... காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு எண்ணிக்கை ("?சிலர்?")சொல்லாததும் ஏனோ..?

"விடுதலைப்புலிகளின் சுதந்திரப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தினால் நீங்கள் பாலஸ்தீனியர்களின் விடுதலைப் போராட்டத்தை மதமென்ற பெயரில் ஆதரிக்கும் தகுதிகள் இழந்து விடுகிறீர்கள்" என்று எப்படி திரிக்கிறீர்கள்..? புலிகளின் இன சுத்திகரிப்பை மட்டுமே அல்லவா எதிர்த்து எழுதுகிறார்கள்..? அவர்களின் சுதந்திர போராட்டத்தை யார் கொச்சை படுத்தியது..?

புலிகளையும் பாலஸ்தீன போராளிகளையும் தவறான ஒப்பீடு செய்யும் முன்னர், எந்த(?)எந்த உலக வல்லரசுகளின் ஆதரவோடு எந்த(?)எந்த நாடுகளில் இருந்தெல்லாம் சிங்களர்கள் இலங்கையில் குடியேறி(?)  அங்கே வாழ்ந்து வந்த  பூர்வகுடிகளான புலிகளை அவர்களின் இருப்பிடத்திலிருந்து(?) வெளியேற்றினார்கள் என்று சொல்லுங்களேன்..? உங்கள் 'ஒப்பீடு' முழுமை அடையட்டுமே..? மாறாக, இங்கே பூர்வகுடிகளை வெளியேற்றியவர்கள் புலிகள் அல்லவா..? எனில், புலிகளையும் இஸ்ரேலியர்களையும் அல்லவா நீங்கள் ஒப்பிட வேண்டும்..?  ஹே...ஹே...ஹே...

இப்படியாக.... புலி ஆதரவாளர்கள் சொல்லும் இனசுத்திகரிப்பு என்ற ஒன்று முக்கியமே இல்லையென்ற வாதத்திற்கு ஆதரவு தருபவர்கள் இலங்கையில் ஈழத்தமிழர் இனப்படுகொலை நிகழவேயில்லை என்ற ராஜபக்சே வாதத்திற்கு துணை போகிறீர்கள் என்றுதானே அர்த்தம்..!?

"ராஜபக்சேக்களை விமர்சிக்கும் அதே வேளையில் தலிபான்கள் பாமியன் புத்தர் சிலைகளை (ஒருமைதானே?) இடித்ததை சுட்டிக்காட்டும் கலாச்சார விமர்சன புத்தியே சமூகம் சார்ந்த பார்வையாக இருக்க முடியும். மாறாக அத்வானி குழுக்கள் பாபர் மசூதியை இடித்ததில் மட்டுமே உங்கள் கோபக் கண்கள் நிலைகுத்தி நிற்கும்..." என்ற இந்த ஒப்பீடும் தவறல்லவா..?

ஆப்கான் மக்கள் வறுமையில் செத்துக்கொண்டு இருக்க, உதவிக்கு ஐநாவிடம் தாலிபான் அரசு பணம் கேட்டால், அது கொடுக்க மறுத்து விட்டது. ஆனால், அதுவரை தாலிபான்கள் கண்டுகொள்ளாத பாமியான் சிலையை 'world heritage center' என்று அறிவித்து அதனை காப்பாற்றி பாதுகாக்க பல மில்லியன் டாலர் கொடுக்க முன் வந்தது.

"மனிதனுக்கு இல்லாத பணம் ஒன்றுக்கும் உதவாத கல்லுக்கா" என்று... 'குடிமகன் என்ற பெயரில் அந்த புத்தர் சிலைக்கு உரிமை கோர ஒரு ஆப்கானிய பவுத்தர் கூட இல்லாத நிலையில்' எத்தனையோ நூற்றாண்டு பாதுகாப்பாக இருந்த பாமியான் புத்த சிலையை தாலிபான் இடிப்பதாக அப்போதுதான் அறிவித்தார்கள்..!

அச்சமயம் ஜப்பான் போன்ற பவுத்த அரசுகள் கூட இடிப்பதற்கு பதிலாக அவர்கள் கேட்கும் ஈட்டுத்தொகை கொடுத்து அதனை தன்னகத்தே இடம் பெயர்த்துக்கொள்ள முன்வந்தும் கூட...

பாமியன் சிலையை தாலிபான் காட்டுமிராண்டிகள் இடித்ததுக்கு எனது வன்மையான கண்டனங்கள், உங்களுக்காக இதோ மீண்டும்..!

அடுத்து... பாமியான் சிலை இடிப்பையும் பாபர் மசூதி இடிப்பையும் இணைக்கும் 'அறிவார்ந்த' உங்களிடம் இந்த கேள்வியை வைக்கிறேன்..!

பாமியான் புத்த சிலையை உடைப்பதற்கு பலத்த எதிர்ப்பு ஆப்கானிய எல்லைக்கு வெளியே இருந்துதானே வந்தது..? ஏனெனில், அப்போது(ம் இப்போதும்) ஆப்கானில் அந்த இடிப்பை எதிர்க்க ஒரு பவுத்தர் கூட இல்லை..!

ஆனால்,

பாபர் மசூதி இடிக்கப்படும்போது... அதுபோன்ற நிலைமையா இந்தியாவில்..? எத்தனை கோடி இந்திய முஸ்லிம்களின் உள்ளங்கள் அன்று மறைமுக அரசு ஒப்புதலுடன் இடிக்கப்பட்டன..?

இந்த இடத்தில் ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். ஒரு பேச்சுக்கு... இந்தியாவில் ஒரு முஸ்லிம் கூட இல்லாத ஒரு நிலை இருப்பதாக வைத்துக்கொள்வோம்; அச்சமயம், ஐநா பாபர் மசூதியை world heritage center என்று அறிவித்து RSS சங் பரிவார ஹிந்துத்துவா அரசை பராமரிக்க சொல்லி இருந்து, அது இடிக்கப்பட்டால்... இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் பாமியான் அளவுக்கு இதற்கு கண்டனம் வந்திருக்காது..! மேலும், 'இந்தியாவில் ஒரு முஸ்லிம் கூட இல்லை' என்றான பிறகு RSS சங் பரிவார ஹிந்துத்துவா அரசின் ஆட்சியில் முழு இந்தியாவில் ஒரு மசூதியாவது இருந்திருக்குமா..? :-) அடுத்த நொடியே 'அகில இந்திய கரசேவை' ஆரம்பித்து இருந்திருக்காது..? அப்போது... முஸ்லிம்களே நாட்டில் இல்லாவிட்டாலும், அவர்களின் மசூதிகள் இருக்கட்டும் என்பீர்களா..?
.
ஆக, கண்டனத்துக்குரிய இந்த இரண்டு இடிப்பும் ஒன்றெனும் உங்களின் தவறான ஒப்பீட்டுக்கு காரணம் அதே முக்காடுதானே..?

பாமியான்-தாலிபான் பற்றி எல்லாம் நன்கு பேசும் இந்த முக்காடுகள்... 

சைவ மன்னனை வைணவ மன்னன் வெற்றி கொண்ட பிறகு சைவக்கோவில்களை இடித்து வைணவக்கோவில்களாக மாற்றியது...  

வைணவ மன்னனை சைவ மன்னன் வெற்றி கொண்ட பிறகு வைணவக்கோவில்களை  சைவக்கோவில்களாக மாற்றியது... 

இந்த இரண்டு சைவ/வைணவ மன்னர்களும் பவுத்த மன்னனை வெற்றி பெற்றால்... புத்த கோவில்களையும், புத்த சிலைகளையும் இடித்தது... எல்லாம் வரலாற்றில் இருக்க...

ஒரு 'பாமியானு'க்கே நம்மை கேள்வி கேட்டு பொங்கும் இவர்களை 'இத்தனை பாமியான் இடிப்புகளை' கண்டும்காணாமல் இருக்கும் //கலாச்சார விமர்சன புத்தியே சமூகம் சார்ந்த பார்வையாக// இல்லையே..? இதற்கும் உங்களின் அந்த முக்காடுதானே காரணம்..? 

9/11 "இரட்டைக்கோபுரம் இடிந்தது கூட இஸ்ரேலின் சதியென்ற  கான்ஸ்பைரசி தியரிக்கு ஆமாம் போடுவதெல்லாம் மதம் என்ற ஒற்றை நோக்கால் மட்டுமே" என்று சொல்லும் நீங்கள்... வீடியோ ஆதாரங்களுடன் நிரூப்பிக்கப்பட்ட அந்த உண்மைக்கு, 'இல்லை' போடுவதற்கு காரணம் இந்த முக்காடுதானே..? இராக்கில் WMD இருப்பதாக போரை துவங்கினார்களே... அங்கே WMD இருந்ததா..? 9/11 பற்றி ஜார்ஜ் புஷ்ஷே உங்கள் காதில் வந்து ரகசியம் சொன்னாலும் நீங்கள் நம்பப்போவதில்லை..! பலமான முக்காடு..!

உங்களின் போலி நாத்திகம் என்ற சட்டங்கள் அற்ற கொள்கைக்கு... பொய் மற்றும் ஆதாரமற்ற இட்டுக்கட்டலுடன் அவதூறு எழுதாதிருத்தல் போன்ற 'இப்படித்தான் எழுத வேண்டும்' என்ற குறைந்தபட்ச வாழ்வியல் நெறி ஏதேனும் இருக்கிறதா..? 

தோன்றியதை எல்லாம் இஷ்டத்துக்கு எழுதும் உங்கள் மீதுமட்டும் பதிவுலக கோபத்தின் வெறுப்பு மேகம் மெல்லப்படர்வதை உணர்ந்தும் உணராது இருக்கிறீர்களா..? இதற்கும் காரணம் இந்த முக்காடுதானே..? 

இதனால் சமூக கலந்துரையாடலில் ஒன்றுக்கும் உதவாத இந்த நடுநிலை நாத்திக முக்காட்டை பிடித்து தொங்கிக்கொண்டு பதிவுலகில் வெறுப்புக்களை கொண்டு வந்து உங்களை நீங்களே அந்நியப்படுத்திக் கொள்கிறீர்கள். இந்த முக்காடுதானே உங்கள் //தட்டைப்பார்வைகளுக்கு// எல்லாம் காரணம்..?  தேவையற்ற பயனற்ற அந்த முக்காட்டை கிழித்து எறிந்துவிட்டு போலி வேலியை உடைத்து விட்டு வெளியே வந்து பாருங்களேன்..!


அடுத்து.... போலி நாத்திகத்தில் உள்ளோரில் உங்களைவிட இன்னும் கேவலமான சிலர்... போலி ஐபி, ப்ராக்சி ஐபி, பெயரிலி, முகவரிலி, மெயிலிலி, ஃபோனிலி, ப்ரோஃபைளிலி... என்று இஷ்டத்துக்கு அசிங்கமாக அர்ச்சித்து பதிவுகள் போட்டுகொண்டு இருக்கிறீர்கள். அதில் சிலர் அப்பதிவுகளைவிட மோசமான எழுத்துக்களில் பின்னூட்டம் போடுகிறீர்கள். இதனால்... என்னால் பின்னூட்ட பெட்டியில் இவர்களுக்காக மட்டுறுத்தல் வைக்காமல் இருக்க முடியவில்லை.

உங்களுக்கு பெண்களின் ஆபாச புகைப்பட காணொளி பதிவு, மொக்கை அரட்டை, வெட்டி அரசியல் சண்டை, சினிமா விமர்சன கூத்து,  கிசுகிசு, சமயங்கள் சம்பந்தமான ஆதாரமற்ற பொய்ப்பிரச்சார அவதூறு தனிமனித தாக்குதல் பதிவுகள் எழுதுவோர் மீதெல்லாம் கொஞ்சம் கூட கோபம் வருவதில்லை. அங்கே ஆதரவு தெரிவிக்கிறீர்கள். அல்லது அமைதியாக இருக்கிறீர்கள். இவற்றை பொதுவில் சிலர் வைப்பதை என்றைக்காவது எதிர்த்து உள்ளீர்களா..? இதற்கும் காரணம் இந்த முக்காடுதானே..? 

இதுபோன்ற பதிவுகளை மிகப்பெரும்பாலான 'முகவரியுள்ள முஸ்லிம் பதிவர்கள்' எழுதுவதில்லையே..? எதனால்..? இப்படி, தமக்கென்று ஒரு வாழ்வியல் நெறி கண்டு, சரியான சத்திய பாதையில் கட்டுப்பாடுகளோடு சமூக நலனுக்காக மட்டுமே பதிவுகள் எழுதுவோர் மீது மட்டும் உங்களுக்கு கடுங்கோபம் வருகிறதே..? ஏன்..?

இப்படியெல்லாம்  இவர்களிடம் நாம் கேட்டால்... "எதைப் படிக்க வேண்டும் படிக்கக்கூடாதென்று தீர்மானிப்பது எனது உரிமை என நினைக்கிறேன். நீங்கள் அதையேன் படிக்கவில்லையென்று எதிர்க்கேள்விகள் போடுகிறீர்கள்." என்கிறீர்கள்..!

எதை எழுத வேண்டும் எழுதக்கூடாதென்று தீர்மானிப்பது எனது உரிமை என நானும் நினைக்கலாம்தானே..? 'நீங்கள் அதையேன் எழுதவில்லை' யென்றும், 'இதையேன் எழுதுகின்றீர்கள்' என்றும் கேட்டுள்ளீர்களே..? இதற்கும் காரணம் அதே முக்காடு தானே..?

இஸ்லாம் தொடர்பான பதிவுகளை பொதுவில் ஏன் வைக்கிறீர்கள்? என்கிறீர்கள். 'எனது வாழ்வில் நன்மை பயக்கும் ஒன்றை பிறருக்கும் நன்மை பயக்கட்டுமே' என்று விரும்புவதும் கூட ஒரு குற்றமா..? அது உங்களுக்கு நன்மை என்றால் எடுத்துக்கொள்ளுங்கள். வேண்டாம் என்றால் விட்டுவிடுங்களேன்..?

இஸ்லாம் பற்றி தவறாக/அவதூறாக பொதுவில் நீங்கள் எழுதினால் குர்ஆன், ஹதீஸ் ஆதாரத்தையும் பொதுவில் தந்துதானே மறுக்க முடியும்..? அல்லது அது தொடர்பான விளக்க சுட்டி தரவேண்டி இருக்குமே..? அப்போது, 'எதற்கு சுட்டி போட்டு என் பின்னூட்ட பெட்டியில் மதத்தை நுழைக்கிறீர்கள்?' என்ற உங்களின் கேள்வி எங்ஙனம் சரியாகும்..? குட்டக்குட்டக்குனிய வேண்டுமா நாம்..?

பரிணாமத்துக்கு எதிரான இந்த நூற்றாண்டு அறிவியல் உண்மைகளை அடுக்கடுக்காக பதிவுகள் போட்டு படிக்க கூப்பிட்டால், அதனை கண்டுகொள்ளாமல், அதை ஏற்றுக்கொண்டால், எங்கே உங்கள் நாத்திக முக்காடு கலைந்துவிடும் என்று பயந்து, இன்னும் பதினெட்டாம் நூற்றாண்டு கட்டுக்கதைகளில் மூழ்கி கிடப்பது ஏனோ..?

முஸ்லிம்கள் மீது மட்டுமே குற்றம் சுமத்தப்பட்ட ஈழத்தமிழ் போர் விதவை பெண்களின் விபச்சாரத்துக்கு அக்கறையாக தீர்வு என்று பதில் பதிவு போட்டால் கோபம் வருவது ஏனோ..?

நீர்வளம், நிலவளம் இல்லாத சவூதிக்கு இருக்கும் விவசாய வேட்கை, விளைநிலங்களை பிளாட் போட்டு 'விலை'நிலங்களாக்கி விற்கும் நமக்கும் வர வேண்டுமே என்ற ஆதங்கத்தில் பதிவு போட்டால்... 'கடல் நீரை குடிநீராக்க வேண்டாம்',  'அயல்நாட்டிடம் மண் வாங்க வேண்டாம்', 'இது பாலைவனமா, சோலைவனமா?' போன்ற பினாத்தல் எல்லாம் ஏன்மா ..?

நாத்திகர் என்று சொல்லிக்கொள்ளும் நீங்கள், சூரியனை வணங்கி, பொங்கலை படையல் செய்யும் பண்டிகையை, (ஒரே இறைவனை வணங்கும்) "முஸ்லிம்களும் எதற்கு கொண்டாடவில்லை..? தமிழர் இல்லையா, நீங்கள்..?" என்று 'இந்துக்கள் மட்டுமே தமிழர்கள்' என்ற ஈழத்தில் ஊற்றிய விஷத்தை தமிழகத்திலும் ஊற்ற முயல்வது ஏனோ..?

இரண்டு ஆத்திகர்கள் தமக்குள் விவாதித்தால், நேர்மையானவர்களான நீங்கள், அவர்களின் விவாதம் முடிந்தவுடன், இரண்டு பேரிடமும் சென்று விவாதிக்க வேண்டுமே அன்றி, கேவலமான அவதூறு பதிவும் ஆபாச பின்னூட்டங்களும் இட்டு... இதெல்லாம் ஏனோ..?

சிலமாதம் முன்னர், பெண்கள் மீது ஆசிட் ஊற்றிய குடிமகனை கொண்ட ஒரு 'தேசம்' முஸ்லிம்கள் ஆள்வதால், இஸ்லாமை தூற்றினீர்கள்.   அதே 'தேசத்தை' சேர்ந்தவர்கள், இன்னொரு முஸ்லிம்கள் ஆளும் நாட்டில் தொழிலாளர்களாக சென்று வஞ்சிக்கப்படும்போது, பணத்தின் மீது மட்டுமே வெறி கொண்ட இறையச்சம் இல்லாத முதலாளிகள் உலகெங்கும் தொழிலாளிகளை சுரண்டுவார்கள் என்ற பொது நியதியை மறந்து, மீண்டும் ஆசிட் ஊற்றியவர்கள் சார்பாக இஸ்லாமிய தூற்றல் தலைப்பு ஏனோ..? அதே சவூதியில் இறைவாக்குப்படி தொழிலாளிகளிடம் நடக்கும் நல்ல முதலாளிகளை நாம் அடையாளம் காட்டினால் என்ன சொல்வீர்களோ..? சவூதி மட்டுமா இறைவனின் தேசம்..?

உங்கள் கோபங்களை மொத்தமாக குறிப்பிட்ட சமூகத்தின் மீது மட்டுமே சுமத்துவது ஏன்..? இனியும் உங்கள் எதிரிகள் முஸ்லிம்கள் அல்லர். போலி நாத்திக முக்காடு போட்டு ஹிந்துத்துவா யுத்தம் செய்யாதீர்கள். வருங்காலம் வரலாற்றை எழுதும்போது நல்லவர் கூட்டத்தில் இருக்க ஆசைப்படுங்கள்.

பதிவுலகில் ஒருவர் முகம் ஒருவர் அறியாதவர்கள் அதிகம். நாளை பொழுதொரு தினம் ஒரு வேளை நேரில் சந்திக்கும் சூழலில் உங்களுக்கு புன்முறுவல் காட்டும் நட்பை உங்கள் எழுத்துக்கள் பதிவு செய்யவேண்டும். அப்படி நிகழாவிடில் உங்கள் பதிவுகள் இணையத்தில் இருந்தும் இல்லாதது நன்றே..!

உங்கள் முகத்தில் தக்காளி ரசமே வடிந்தாலும் 'அது ரத்தம்தான்' என்று எண்ணி ஓடிவந்து வாஞ்சையுடன் சுத்தம் செய்து ஒத்தடப்பதிவு எழுத நான் தயார். அதேநேரம், எனது மண்டை பிளந்து வழிந்தோடும் ரத்தத்தை... 'தக்காளி ஜூஸ்' என்று திரித்து பதிவிடாமலாவது நீங்கள் இருங்களேன்..! ப்ளீஸ்..!
 .
எனில், இனி வேண்டாம் உங்களுக்கு அந்த போலி நாத்திக நடுநிலை முக்காடு. அகக்கண்ணை திறந்து பாருங்கள். சக மனிதனின் சிறு உரிமையைக்கூட பறிக்காமல், 'இவ்வுலகில் இப்படித்தான் வாழ வேண்டும்', 'எப்படியும் எல்லாம் வாழக்கூடாது' என்ற இஸ்லாமிய வாழ்வியல் நெறியை என்னவென்று இறைமொழி & இறைத்தூதர்வழி கொண்டு திறந்த மனதுடன் ஆராயுங்கள். பிடித்திருந்தால் உங்கள் வாழ்விலும் அவற்றை பேணுங்கள். இல்லையேல்... அதை பேணுவோரையும் பேணச்சொல்வோரையும் உங்கள் எழுத்துக்களால் தயவு செய்து ஹிம்சிக்காதீர்கள்..! இறைநாடினால் ஈருலக வாழ்வின்  தித்திப்பு உங்களுக்கும் நிரந்தரமாக உரித்தாகட்டும்..!


டிஸ்கி:- ஒட்டுமொத்த சமூக தாக்குதலுக்கு எதிரானவன் நான். இந்தப்பதிவு முன்பு ஒரு கை ஓசையாய் பின்னூட்ட விவாதங்கள் செய்து நொந்த இரு தரப்பு சகோதரர்கள் சார்ந்தோ எதிரானதோ அல்ல. போலி நாத்திகர்கள் சிலருக்கு மட்டுமே பொதுவானது. பதிவின் பின்ணணி அவலத்தில் இருக்கும் சமூகத்தை இனியும் அடுத்தவர் வேண்டுமென்றே கொச்சை படுத்துவதை தவிர்க்கவே. கற்ற பொது மானுடத்தை பதிவுலகிலும் காக்க எனக்கு ஒரு கை கொடுங்கள் சகோ..!

79 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...