அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Friday, January 27, 2012

27 citizen of world : இந்திய எதிர்ப்பா..?


citizen of world  - எனக்கு நான் இப்படி பெயர்சூட்டி பல மாதங்கள் ஆகியும் ஒருவருமே இதைப்பற்றி கேட்டதில்லை. முதன்முதலாக சகோ. அஸ்மாவின் 'பொங்கல் பொதுவான திருநாளா?' பதிவில் பின்னூட்டமிட்ட ஒருவரின் பெயருக்கு நான் விளக்கம்  கேட்கப்போய், பதிலுக்கு அவர் என்னுடைய citizen of world-ற்கான பெயர்க்காரணத்தை கேட்டார். 10 நாள்கூட பொறுக்க முடியாதவர், என் பெயருக்கான வேறு பொருளை தன் இஷ்டத்துக்கு இட்டுக்கட்டி, தவறான கருத்தை இன்னொரு தளத்தில் பரப்புகிறார். இதுபோன்ற அநாகரிக செயல்களை நல்லோர் செய்யார்..!
.
இனி... எனது citizen of world பெயருக்கான பின்னணி விளக்கம்...

***************************
'அக்னி நட்சத்திரமாக' தமக்குள் சண்டை இட்டுக்கொள்ளும் ஒரே வீட்டில் உடன்பிறந்த இரு சகோதரர்கள், எதிர்த்த வீட்டுக்காரன் தன் அப்பாவை அநியாயமாய் திட்டிவிட்டால்... இருவரும் ஒன்று சேர்ந்து போய் அந்த எதிர்வீட்டுக்காரனை கேள்வி கேட்டு சண்டை போடுவார்கள். ஏன்...? They unite as citizen of home..!

ஓர் ஊரில் ஒரே ஒரு தெருவுக்கு வேண்டுமென்றே சற்று ஆழம் குறைவாக பள்ளம் தோண்டி மற்ற தெருக்களை விட உயரமாக குடிநீர் குழாயை பதித்து, "குறைந்த அழுத்தத்தில் சிறிது நேரம் மட்டுமே அந்த தெரு காரர்களுக்கு  தண்ணீர் வரட்டும்" என்று இவர்கள் மீது வஞ்சகமாக வார்ட் கவுன்சிலர் நடந்து கொண்டால்... மேலே சண்டையிட்ட அந்த இரண்டு குடும்பமும் ஒன்று சேர்ந்து வார்ட் கவுன்சிலரை கேள்வி கேட்கும்..! ஏன்...? citizen of street..!

இதேபோலத்தான்... ஓர் ஊருக்கு மட்டும் இன்னொரு ஊரால் அராஜகமான வாய்க்கால் வரப்பு பிரச்சினை வந்தால் எல்லா தெரு மக்களும் ஓரணியில் ஒன்றிணைவார்கள்..! ஏன்...? citizen of city..!

அதுவே, ஒரு மாவட்டம் மட்டும் மாநில அரசால் வளர்ச்சிப்பணிகளில் வஞ்சிக்கப் படும்போது அனைத்து ஊர் மக்களும் பகை மறந்து ஒன்றிணைவார்கள்..! ஏன்...? citizen of district..!

அப்போது... கர்நாடகா-காவிரி பிரச்சினை ஆகட்டும், பின்பு ஆந்திரா-பாலாறு பிரச்சினை ஆகட்டும், இப்போது முல்லை பெரியாறு பிரச்சினை ஆகட்டும்... அண்டை மாநிலத்தவர் நமக்கு தண்ணீரில் அநியாயம் இழைக்கும் போது... we are the citizens of state..! "நாம் எல்லோரும் தமிழர்கள்..!" என்று நமக்குள் எத்தனை வேற்றுமை இருப்பினும் ஒருமித்த குரலில் ஒற்றுமையாக போராடுகிறோம்..!

இதுவே, பாகிஸ்தான் (கார்கில் போன்று...), சீனா (லடாக்/அக்சாய் சின் & அருணாஞ்சல் பிரதேஷ் போன்று...) ஆகிய நாட்டவர்களின் அத்துமீறிய அநியாய படையெடுப்புகள் மூலம் இந்தியமண் ஆக்ரமிக்கப்படும் போது... we are all citizens of india - jai hinth..! "இந்தியன்" என்று, நாம் முன்னர் முட்டிக்கொண்ட கர்நாடகா, ஆந்திரா, கேரளா, போன்றவர் களுடன் கைகோர்த்து குரல் கொடுக்கிறோம்... எதிரிகளுடன் போராடுகிறோம்..! Unity in Diversity..! 
***************************

நான் அப்போது பணியாற்றிக்கொண்டு இருந்த தூத்துக்குடி மற்றும் அதையொட்டிய நெல்லை-இராம்நாடு மாவட்டத்தில் காவல்துறையின் கடுமையான நடவடிக்கைகளினால் சாதிக்கலவரம் கட்டுப்படுத்தப் பட்டுக்கொண்டிருந்த சமயம்... 

அருகே ஒரு கிராமத்தில், ஒரு சாதியினரின் உப தலைவர்களில் ஒருவர் யாரோ சில அடையாளம் தெரியாத விஷமிகளால் கொல்லப்பட, கொன்றவர்கள் 'தவறவிட்டு சென்றதாக' கிடைத்த ஒரு 'துப்பை' வைத்து... பக்கத்து கிராம எதிர் சாதியினர்தான் இந்த வன்செயலுக்கு காரணம் என்று உடனே கொல்லப்பட்டவர் தரப்பில் அறிவிக்கப்பட- "அந்த 'துப்பு' உண்மையா/ போலியா, யாருடையது" போன்ற காவல்துறை விசாரணை, நீதி மன்ற தீர்ப்பு, சிறை தண்டனை -இதையெல்லாம் மறந்து அல்லது மதிக்காமல், சுற்று வட்டார மூன்று நான்கு ஊர்காரர்களின் 'நேசப்படை'கள் ஒன்று சேர்ந்து கொண்டு... நேரே போய் அந்த கிராமத்து மக்களை (அவர்கள்தான் கொலை காரர்களாம்..!) தாக்க... இரத்தக்களறி... 'தென் தமிழகத்தில் சாதிக்கலவரம்' என்று சென்னை தினசரிகளில் சிம்பிளாக படித்திருப்பீர்கள்..!

அப்போது, "நாமெல்லாம் ஒரே மாவட்டம்யா..." என்று மாவட்ட ஆட்சியரும்... "நாமெல்லாம் தமிழர்கள்..." என்று முதல்வரும் இவர்களுக்கு ஒற்றுமை பாடம் நடத்தினர்..!

இதே காலகட்டத்தில்தான்... அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்ட 9/11 இரட்டை கோபுரம் தகர்ப்பு பயங்கரவாதமும் நடந்தது..!  

மனிதாபிமானமுள்ள உலகின் சகமனிதர்கள் என்ற அடிப்படையில் நாம் நமது கண்டனத்தை பதித்தோம். பிறருடன் பகிர்ந்தோம். ஆனால், அதற்கான குற்றவாளிகள் 'இன்னார்தான்' என்று அன்றே கண்டுபிடித்து(?), அவர்கள் ஆப்கானில் ஒளிந்து இருப்பதையும் உடனே கண்டுபிடித்தவுடன்(?), Interpol... UN Security Council... ஆகியவற்றை எல்லாம் வசதியாக மறந்து அல்லது மதிக்காமல்... 'war against terrorism' என்று அறைகூவி, ஆப்கானிஸ்தானை நோக்கி... அங்கே பதிலுக்கு பதிலாக தேடுதல் என்ற பெயரில் 'war against afghans' நடத்தி அப்பாவி மக்கள் தலையில் குண்டு போட அமெரிக்கா தலைமையில் நேட்டோ படைகள் விரைந்தபோது... 

ஏனோ அன்றிலிருந்து அது ஒரு குறிப்பிட்ட மதத்தினரை குற்றவாளியாக்கும் கருத்துருவாக்க முனைப்புகள்   கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் திட்டமிடப்பட்டு அரங்கேறின. "இவனுங்களுக்கு நல்லா வேனும்யா... பயங்கரவாதிகள் செத்து தொலையட்டும்..." என்றே மக்கள் சொல்லும்படியாக பொதுஜன மனங்களில் ஆழமாக பதிய வைக்கப்பட்டது.

அதனால்... நம்மில் பெரும்பாலோர் ஏதோ 'we are the citizen of USA' என்பது போல அமெரிக்க மக்களுக்காக மட்டுமே முழு ஆதரவு குரல் கொடுக்க... அப்போது, ஆப்கானில் அப்பாவி மக்களின் மீது நடந்த அநியாய தாக்குதலில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் பற்றி ஏனோ  "மனிதாபி மானமுள்ள உலகின் சகமனிதர்கள்"... என்ற அதே அடிப்படையில்... 9/11 போன்று கூட வேண்டாம்... அட்லீஸ்ட், அதில் கால்வாசி அளவுக்காவது இவர்களுக்காகவும் உலகமும் ஊடகமும் குரல் கொடுக்கவில்லை.

(நமது மீனவர்களை கொல்வது இலங்கை ராணுவம்தான் என்பதை ஆதாரபூர்வமாக நன்கு அறிந்திருந்தும், சிங்களர்களை பயங்கரவாதிகள் என்று அறிவித்து நாம் இதுபோல இலங்கை மீதான போர் நடவடிக்கைகளில் ஈடு படுவதில்லை, என்பதை இங்கே இடையில் எழுதிக்கொள்கிறேன்

இவ்வாறு, பற்பல உலக நாடுகளுக்கு எதிரான மோனோபோலி சர்வாதிகாரம், பல நிர்பந்த ஒப்பந்தங்கள் மூலம் பொருளாதார சுரண்டல், கட்டாய ஆயுத வியாபாரம், சந்தை அடக்குமுறை, 'தான் மட்டுமே நலம் வாழ்ந்தால் போதும்' என்ற மனப்பாங்கு ஆகிய இவற்றை தன்னகத்தே கொண்டு நடைமுறை படுத்தும் அமெரிக்காவுக்கு எதிராக, (மேலே...அந்த தூத்துக்குடி ஆட்சியர் மற்றும் தமிழக முதல்வர் சொன்னது போல...) மனிதாபிமானமுள்ள  நாமும் மற்ற பாதிக்கப்பட்ட நாட்டு மக்களுடன் இணைந்து 'உலக ஒற்றுமையை' சமநீதியுடன் அனைவருக்கும் வலியுறுத்தும் ஒரு வாக்கியம்தான்... 'be a citizen of world'


அந்த நேரத்தில்... நம் தமிழகத்தில், அப்போதைய புதிய பைக்குகளில் ஹெட் லைட்டுக்கு மேலே/அதனை சுற்றி உள்ள 'head light visor' -ல் ஏதேனும் ஒரு சில வார்த்தைகளில் 'நச்' என தனிச்சிறப்பான ஒரு கருத்தை ஸ்ட்ரிக்கரில் ஒட்டுவது என்பது ஒரு ட்ரெண்ட..! என் YAMAHA YBX-ற்காகவே நான் சிந்தித்து கண்டுபிடித்த ஒரு வாசகம்தான்... 'citizen of world'

என் வலையில் தலைப்பில் இதனை சேர்த்து இருப்பதற்கு காரணம்... உலகம் முழுதும் நடக்கும் நல்ல விஷயங்களை ஆதரித்தோ, தீய விஷயங்களை  எதிர்த்தோ எழுதும் என்னுடைய பார்வை... எனது வீடு, தெரு, ஊர், மாநிலம், நாடு, கண்டம், மொழி, இனம், சமயம் சார்ந்த மக்களையும் கடந்து பொதுவானதாகவும் நீதியாகவும் நியாயமாகவும் இருக்க வேண்டும் என்பதே..!

"நான் வடக்குத்தெரு காரனாக்கும்" என்று மீசை முறுக்கி வீர வசனம் பேசும் ஒருவனிடம்... அவன் வீட்டார், "பு.எண்: 147 / ப.எண்: 18 வீட்டுக்காரன் என்று சொல்" என்றெல்லாம் சொல்ல மாட்டார்கள் அல்லவா..? :-)) 

இதேபோல... "நான் இந்தியன்" என்பவரிடம் "தமிழன் என்று சொல்" என்று குறுகிய கண்ணோட்டத்தில் கூறுவோரை.. 'பரந்த மனப்பான்மை அற்ற சுயநல பிரிவினைவாதிகள்' ஆக இந்தியப்பார்வையில் பார்க்கிறோமா இல்லையா..?

இதே கண்ணோட்டத்தில், எனது "citizen of world" என்பதை 'இந்திய தேச எதிர்ப்பாக' பார்ப்பதை விடுத்து... 'பரந்த உலகப்பொதுநல சமநீதி தூரநோக்கு பார்வை'யாக பொருள் கொள்ள வேண்டும் என்று அனைவரையும் பொதுவாக கேட்டுக்கொள்கிறேன்..!

.

27 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...