அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Tuesday, February 19, 2013

20 சவூதி மன்னர் தந்த 4 கோடி ரூபாய் நஷ்டஈடு..!நான் சவூதிக்கு அடிமை அல்லன். சவூதிக்கு ஆதரவாளனும் அல்லன். ஆனால்...

சவூதியில் குறையாக தெரிவதை மட்டும் ஒரு விஷயத்தில் பூதாகரபடுத்தி சொல்வோர், அதே போன்றதொரு மற்றொரு விஷயத்தில் அதன் எளிதாக தெரியும் நிறையையும் அதேபோல சொல்லத்தான் வேண்டும் அல்லவா..? அதுதானே நியாயம்..? ஆனால், அப்படி சொல்வது இல்லை என்பது அவர்களின் அப்பட்டமான நேர்மையின்மையைத்தான் காட்டுகிறது..! இது அநீதியன்றோ..? அராஜமன்றோ..?

ஆனால், நான் நியாயஸ்தன். நீதி வழுவாதவன்.  இங்கே... இதற்கு முன்னர் சவூதி பற்றி ஒரு சில விமர்சன பதிவுகள் எழுதியவன் என்ற வகையில், இதையும் எழுதுகிறேன்..! இதெல்லாம் அவ்வப்போது சவூதியில் நடப்பவைதான். ஆனால், இந்தியர்களின் கவனத்துக்கு நமது ஊடகம் வேண்டுமென்றே (?) வடிகட்டி கொண்டு வராதவை..!

இலங்கை சகோதரி ரிசானா நஃப்பீக்கிற்கு கொலைக்குற்றத்திற்கான மரண தண்டனையை சவூதி வழங்கிய விஷயத்தில் அப்பெண்ணுக்காக பொங்கியவர்கள் இப்போது எங்கே போனார்கள்..? அவர்களுக்காகவே... இந்த போஸ்ட்டின் முதல் பகுதி..!  
  


ஃபிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ரொடெலியொ செலெஸ்டினொ லானுசா என்ற கிறித்தவர், முஹம்மத் பின் ஸைத் அல் கத்தானி என்ற அரேபியரை விரோதம் கொண்டு திட்டமிட்டு 2000 ஆம் ஆண்டில் கொலை செய்த குற்றம் 2002 ஆம் ஆண்டு நிரூபிக்கப்பட்டு அவருக்கு, 3,000,000 சவூதி ரியால் ( சுமார்.... நாலேகால் கோடி ரூபாய்..!) குறுதிப்பணமாக கொல்லப்பட்டவர் குடும்பத்துக்கு  தர வேண்டும் என்றும் அல்லது மரண தண்டனையை ஏற்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது..!  

உடனே,  ஃபிலிப்பைன்ஸ் நாட்டினர் சவூதி கோர்ட்டில் அவகாசம் கோரிவிட்டு... சவூதியிலும் தனது நாட்டிலும் இதற்கான தோகையை பம்பரமாக சுற்றி வசூலிக்க ஆரம்பித்தனர். பத்து வருஷமாக வசூலித்தும் சொத்தை எல்லாம் வித்தும் அவர்கள் சேர்த்தது 700,000 ரியால்தான்.  (சுமார் ஒரு கோடி ரூபாய்) 

இப்போது, சவூதி அரசிடம் கொலை குற்றவாளியின் தாய், பிலிப்பைனின் சவூதி அரேபிய தூதரகம் மூலம்... இந்த உதவி செய்ய கோரிக்கை வைத்தார். இதனை ஏற்ற சவூதி மன்னர் பாதிக்கப்பட்ட சவூதி  குடும்பத்திடம் பேசி அந்த பிலிப்பைணி செய்த கொலையை மன்னித்து விடுமாறு கோரிக்கை வைத்து, கொலைக்கு ஈடாக குறுதிப்பணத்தில் மீதி 2,300,000 சவூதி ரியாலை (இந்திய ரூபாயில் சுமார் மூன்றே கால் கோடிக்கும் மேல்) சவூதி அரசு மூலமாக கொடுத்து அந்த கிறித்தவரை மரண தண்டனையில் இருந்து விடுதலை பெற வைத்திருக்கிறார்.  

ஒரு பிலிப்பைணியை காப்பாற்றிய மன்னர் இலங்கை பெண்ணான ரிஷானா மரணத்தை மட்டும் விரும்புவாரா என்ன..? நாட்டை ஆளும் மன்னராக இருந்தால் கூட தலையிட முடியாத சட்டம் இஸ்லாமிய குற்றவியல் சட்டம். பாதிக்கப்பட்டவர்கள் குறுதிப்பணத்தை ஏற்று மன்னிக்காத வரை, மன்னர் உட்பட எவருக்கும் குற்றாவாளியின் தண்டனையில் தலையிட அனுமதி இல்லை. ரிஷானாவின் மரண தண்டனையை குறித்து கருத்திட்ட சகோதர சகோதரிகள் உண்மை நிலையை அறிந்து கொள்ள வேண்டும்.

அடுத்து...சவூதி சிறுமி லாமாவுக்கு நீதி கிடைக்க கதறியவர்களுக்கு இந்த போஸ்டின் இரண்டாம்பகுதி..!2006 ஆம் ஆண்டு சவூதியில் டிரக் ஒன்று, ஒரு பள்ளி மினி வேனின் மீது மோதி சாலைவிபத்து. அதில், எட்டு சவூதி ஆசிரியைகளும் அவ்வேனின் எகிப்திய டிரைவரும் கொல்லப்பட்டு விட்டனர்.

பொறுப்பின்றி வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது நிரூபிக்கப்பட்டதால், பெங்களூரை சேர்ந்த டிரக் டிரைவர் சலீம் பாஷா என்ற அந்த இந்தியருக்கு அதற்குரிய தண்டனையாக சுமார் 653,000 சவூதி ரியால் குறுதிப்பனத்தை அந்த ஒன்பது குடும்பங்களுக்கும் நஷ்டஈடாக பகிர்ந்தளிக்க சவூதி கோர்ட் உத்தரவிட்டது.

அந்த ஃபிலிப்பைணிகாரர்கள் போலல்லாம் இந்தியர்கள் எந்த வசூலிலும் இறங்கவில்லை. சவூதி சிறுமி லாமாவுக்கு ஏக குரலில் அலறிய நம் இந்திய ஊடகம் ஏதும் இதற்காக எம்முயற்சியிலும் ஈடுபடவில்லை. 

நம்முடைய தூதரகம்..? -- ம்ஹூம்... எந்த நடவடிக்கையும் இல்லை..! 
நம் நாட்டு அரசு..? -- இந்த மேட்டரே தெரியுமோ தெரியாதோ..! 
நம் நாட்டு மனிதஉரிமை அமைப்புகள் செய்தவை..? --நோ கமெண்ட்ஸ்..! 
தன்னார்வ தொண்டுஅமைப்புகள் என்ன பங்காற்றினர்..? --மூச்..!

வெறும் 1200 ரியால் மாச சம்பளகாரரான அந்த இந்திய டிரக் டிரைவரால் அவ்வளவு பெரிய தொகையை  (தம் நாட்டு கொலைக்குற்றவாளிக்காக அந்த ஃபிலிப்பைணிகள் வசூலித்த தொகையை விட இது கம்மிதான்) அதை தர முடியாமல், இந்திய உதவி இன்றி ஏழாண்டுகள் சிறையில் வாடியருக்காக, நேற்று சவூதி மன்னரே தாமே முன்வந்து தம் சொந்த காசில் இருந்து... 653,000 சவூதி ரியால்கள் குருதிப்பணத்தை சலீம் பாஷா சார்பாக செலுத்தியதால் அந்த இந்தியர் உடனே சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

மன்னருக்கு மிகவும் நன்றி தெரிவித்துள்ளார். அவர் நேற்றே மக்கா சென்று, இறைவனுக்கு நன்றி செலுத்தி ஓர் உம்ரா செய்துவிட்டு, அதில் சவூதி மன்னருக்காக பிரார்த்தனை புரிந்துள்ளார்.

சவூதியின் இலங்கை பெண் ரிசானாவுக்கான மரண தண்டனையை பற்றி மிகக்கடுமையாக இஸ்லாமை விமர்சித்தவர்கள், சவூதி சிறுமி லாமா கொலையை பற்றிய பொய்யான செய்திகளை இஸ்லாம் மீது விஷக்கருத்துக்களை விதைத்து முதல் பக்கத்தில் தலைப்புச்செய்தியாக போட்டு விவாதமாக்கிய 'இந்திய ஊடகங்கள்' எல்லாம்... மேற்படி செய்திகளை மட்டும் மறைத்து கள்ள மெளனம் சாதிப்பதேனோ..!

டியர் மீடியா..! சவூதி பற்றி  நீங்கள் செய்தி சொன்னால் எல்லாவற்றையும் சொல்லுங்களேன்..! Why such  Isalamophobia Partisan Journalism..? 

20 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...