அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Monday, February 25, 2013

4 அடுத்து, பீஹாரில் குண்டுவெடிப்பு - 8 பேர் பலி


இன்னாலில்லாஹி....
சில நாள் முன்பு ஹைதராபாத்தில் தொடர் குண்டு வெடிப்பு - பலியானோருக்கும் காயமடைந்தோருக்கும் எனது இரங்கலும் வருத்தமும் தெரிவிக்கிறேன்.

இந்த பயங்கரவாதத்துக்கு எனது கடும் கண்டனம். மிகச்சரியாக துப்பு துலங்கி இதில் ஈடுபட்டோரை கண்டு பிடித்து, நீதி விசாரணையின் அடிப்படையில் சட்டப்படி மரண தண்டனை தர அரசை கோருகிறேன்.

"அஜ்மல் கசாப், அப்சல் குரு தூக்குக்கு பழிவாங்கும் நடவடிக்கையா?" என்று பாஜக வெங்கையா நாயுடுவுக்கு குண்டு வெடித்த உடனேயே சந்தேகமாம்..! உண்மையில் பழி வாங்குபவனாயின் வெடி குண்டை யார் யாரின் காலுக்கு கீழே வைப்பான் என்று கூட இவருக்கு தெரியாதா..? தெரியும்..!

இதுபோன்ற ஆதாரமற்ற அவதூறுகளை இப்படியான ஒரு குழப்பமான 'Crime Scene Do Not Cross' சூழலில் சுய கற்பனையை இட்டுக்கட்டி உடனேயே ஒரு பிரஸ் மீட் போட்டு, ஏதோ துப்பறிந்தவர் போல ஸிபீச் தருவதும், அதனை சிறிதும் பொறுப்பற்ற முறையில் ஊடகத்தில் வெட்கமின்றி வெளியிடுவோரையும் குண்டர் சட்டத்தில் மொத்தமாக அள்ளிப்போட்டு கொண்டு போய்... (சந்தேகத்தில் கைதாவோருக்கு தரப்படும் 'விருந்து' போல) ரெட் ரூமில் வைத்து தலை கீழே தொங்கவிட்டு முட்டிக்கு முட்டி தட்டி அனுப்ப வேண்டும் என்று அரசுக்கு நான் பணிவுடன் கோரிக்கை வைக்கிறேன்..!

என்னத்த கோரிக்கை வச்சு..! அதை நிறைவேற்ற வேண்டியவரே இப்போது இதைத்தான் சொல்கிறார்..! 'யார் காங்கிரசில் உள்ளார்கள் யார் பாஜகவில் உள்ளார்கள் என்றே புரிய மாட்டேங்க்குது..! எல்லாரும் ஒரே காவி குட்டையில்..!

இப்படியாக, ஊடகப் பயங்கரவாதிகளும், காவிப்பயங்கரவாதிகளும், நாத்திக வேஷம் போட்ட இஸ்லாமோஃபோபியா பதிவர்களும் முஸ்லிம்களுக்கு எதிராக ஹைதராபாத்... குண்டு வெடிப்பு சம்பவத்தை திசை திருப்ப முயலுகிறார்கள்..!

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக, படிப்போராலேயே நம்பமுடியாத அளவுக்கு,
ஏகப்பட்ட குழப்படி செய்திகள். விதவிதமான கோணங்களில் விசாரணைகள் என்று இரண்டு நாள் நல்லவர்கள் போல வேஷமிட்டு போக்கு காட்டிவிட்டு அடுத்து வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாகிவிட்டது. இவர்கள் மீண்டும் எடுத்திருக்கும் பழைய கோப்பு **இந்தியன் முஜாஹிதீன்** என்ற 'இல்லாத ஓர் அமைப்பு'...! அதில் இருப்பதாக கூறி மீண்டும் சந்தேகத்தின் பேரில் சரியான ஆதாரம் இல்லாமல் முஸ்லீம்கள் கைது படலம் ஆரம்பித்து விட்டது..! எப்பவோ செத்துப்போனவனை எல்லாம் குண்டுவைத்ததாக குற்றம் சாட்டி... அதுக்கு பாகிஸ்தானிடம் மன்னிப்பு கேட்டு... இப்படி போகிறது... டுடே'ஸ் வெடி குண்டு விசாரணை டிரண்டு..!


அதை முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு இப்படி Indian Mujahideen created by Paid Indian Media - Justice Katju  'ஊடக கூலிகளின் உருவாக்கம்' என்று சொல்கிறார்..! இவர், தற்போது... இந்தியன் பிரஸ் கவுன்சில் சேர்மன் எனபதால் இவரின் அறிக்கை அதி முக்கியத்துவம் வாய்ந்தது..!

நம்மில் சில ஒண்ணும் தெரியாத அப்பாவிகளும் "இந்தியன் முஜாஹிதீன்" என்ற ஓர் அமைப்பு இருப்பதாக தவறான புரிதலில் இன்னும் உள்ளார்கள்..!

சென்ற ஆண்டு,

இந்தியன் முஜாஹிதீன் அலுவலகம் எங்கே இருக்கிறது........???
அதன் நிர்வாகிகள் யார் யார் ....??? என்று சொல்ல முடியுமா..???
என்பது உள்ளிட்ட கேள்விகளால் பிரதமரை துளைத்தெடுத்தனர் எம்.பி.க்கள். அன்று, அப்பாவிகளின் விடுதலைக்கு அணிதிரண்ட எம்பிக்கள் சுமார்  40 நிமிட சந்திப்பில் பிரதமரை பார்த்து சரமாரி கேள்வி கேட்டனர்......! பதில்.......???


ஆகவே சூழ்ச்சியாளர்களை அடையாளப் படுத்த வேண்டிய தருணம் இது....! இந்த கொலைபாதக கூட்டணியிலிருந்து இந்திய சமூகத்தை இறைவன் பாதுகாப்பானாக...! தம் உயிரை துச்சமாக மதித்து, ஏகப்பட்ட குண்டுவெடிப்புகளில் ஈடுபட்ட ஹிந்துத்துவா பயங்கரவாதிகளை கண்டு பிடித்து சிறையில் அடைத்த மாவீரன் அஞ்சாநெஞ்சன் ஹேமந்த் கர்கரேவை அவரால், பயங்கரவாதியென உலகறியப்பட்டோர் வஞ்சகமாக கொன்று விட்டனர். அதன் விளைவு... அவரால் அப்போது ஒழிக்கப்பட்ட "இந்தியன் முஜாஹிதீன்கள்" இப்போது மீண்டும் உயிர்தெழுந்து வந்து விட்டனரா..!? ஆனால், நீண்ட நாள் ஆகி டச்சு விட்டு போனதால்... வழக்கம் போல சரியான நேரத்தில் 'பொறுப்பேற்பு ஈ மெயில்' அனுப்ப மட்டும் ஏனோ மறந்து போய் விட்டனர் போலும்..! இந்நிலையில்..................

 ///Dr Manmohan Singh @PMOIndia
Prime Minister: "This is a dastardly attack, the guilty will not go unpunished".///

------------பிரதமர் இப்படி ட்விட்டுகிறார்...!


கண்ணுக்கு தெரியாத இந்த கில்டியை புலனாய்ந்து தேடிப்பிடித்து விசாரித்து தண்டிப்பது எல்லாம் ஒருபுறம் அதுபாட்டுக்கு நடக்கட்டும். ஆனால்... அதற்கு முன்... முந்திய பத்துக்கும் மேற்பட்ட இந்திய குண்டு வெடிப்புகளில் நம்மீது 'dastardly attack' களில் ஈடுபட்டு 'கையும் குண்டுமாக' பக்காவாக கர்மவீரர் கார்கரேயால் கைது செய்யபட்டு வருஷக்கணக்காய் ஜெயிலில் நம் கண் முன்னே மூனுவேளை நம் காசில் ஓசி சோறு திண்ணுக்கிட்டு இருக்கும் காவி பயங்கரவாதி guiltyகளை என்ன செய்ய போவதாக உத்தேசம் பிரதமர் ஜி..?

இந்த 'கோட்சேயின் குமாரர்களுக்கு' எப்போது தீர்ப்பு..? என்ன தீர்ப்பு..? இவர்களுக்கு தண்டனை வழங்கும் ஐடியா கிய்டியா ஏதும் அரசிடம் உண்டா..? 
.
 
 .
இனி, வேறு வழியே இல்லை, நினைவூட்டுகிறேன்..!
இதுவரை இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டு வெடிப்புகளில்...

மும்பை & கோவை குண்டு வெடிப்புகளில் மட்டுமே தீர்ப்பும் வந்து குற்றவாளிகளுக்கு தண்டனையும் தந்தாகி விட்டது..! கலவரங்களில் 26/11 மும்பை & பாராளுமன்ற தாக்குதல் ஆகியவற்றுக்கு மட்டுமே தீர்ப்பும் தண்டனையும் வந்துள்ளது..!

இரண்டு முறை இதே ஹைதராபாத்தில் நடந்தது உட்பட... கிட்டத்தட்ட மீதி அனைத்து குண்டு வெடிப்புகளிலும்... குண்டு வைத்த குற்றவாளிகள்... கைது செய்யப்பட்டு ஆதாரத்துடன்-சாட்சியுடன்-ஒப்புதல் வாக்குமூலத்துடன் சிறையில் மூன்று வேளை வயிறார நமது காசில் ஓசியில் சாப்பிட்டு வயிறு வளர்த்துக்கொண்டு உள்ளார்கள். ஏகப்பட்ட மதக்கலவரத்துக்கான விசாரணை கமிஷன் அறிக்கைகள் ஹிந்துத்துவாக்களை குற்றவாளிகளாக சுட்டுகிறது. அதில் கவ்ஸர் பானு கொலை வழக்கு தவிர மீது அனைத்துக்கும் இன்ன்ன்ன்ன்ன்ன்னும் ஒரு தீர்ப்பும் வந்த பாடில்லை..! 


விரைந்து தீர்ப்பளித்து இவர்களை எல்லாம் உடனடியாக தூக்கில் தொங்க போட்டால்தானே... நம் நாட்டில் குண்டு வைப்பவர்களுக்கும் அப்பாவிகளை கொல்வோருக்கும் உள்ளூர இனி ஒரு வித பயம் வரும்..?  நம் நாடும் பயங்கரவாத பயம் இன்றி நிம்மதி அடையும்..? இதற்கு நேர்மையாக உதவி செய்வார்களா... நம் அரசும் நீதிமன்றமும்..?


அடுத்து, பீஹாரில் குண்டுவெடிப்பு - 8 பேர் பலி

இப்படி ஹைதராபாத்தில் ஒரு தொடர் குண்டு வெடிப்பு வெடித்த மறுநாளே... பீகாரில் நடந்த ஒரு குண்டு வெடிப்பில்.... எட்டு பேர் கொல்லப்பட்டனர்..! இன்னாலில்லாஹி..! அதில், ஆறு பேர் போலீஸ்..! இது பெரும்பாலான ஊடகங்களில் தலைப்புச்செய்தியாக வரவில்லை. அவ்வளவு ஏங்க..! சாதாரண ஒரு செய்தியாக கூட வரவில்லை சகோ..! இனி வரவும் வராது..!

காரணம்...? 'குண்டு வைத்தது யார்' என்று உடனேயே தெரிந்து விட்டது..! ஜீப்பில் சென்று கொண்டிருந்த எட்டு பேரை கன்னி வெடி வைத்து கொன்றது மாவோயிஸ பயங்கரவாதிகள்..!

Times of India எனும் ஒரே ஒரு செய்தி தளத்தில் மட்டும் நான் இந்த அதிர்ச்சியான செய்தியை கண்டதால்...   சந்தேகத்துடன், 'இந்த செய்தி உண்மையா' என்று புத்த கயாவில் வாழும் எனது பிஹாரி நண்பர் குடும்பத்தினர் மூலம் தொலைபேசியில் அப்போதே உறுதி செய்து கொண்டேன். ஆமாம், செய்தி உண்மைதான்..! 

ஆனால், ஹைதராபாத் குண்டு வெடிப்புக்கு இருந்த "உலகளாவிய ஊடக பரபரப்பு" , "வானளாவிய கண்டனங்கள்", "லோக்கல் எம் எல் ஏ முதற்கொண்டு பிரதமர் வரை நிகழ்விடத்தை சென்று பார்த்தல்",  "இறந்தவர்களுக்கு இழப்பீடு", "இந்தியன் முஜாஹிதீன்", "லஷ்கர் இ தொய்பா", "பாகிஸ்தான் சதி" இத்யாதி இத்யாதி எல்லாம்  இதில் ஏன் இல்லை என்பதைத்தான் நான் ஆச்ச்சரியத்துடன் உற்று நோக்கி அதிர்ச்சியுறுறேன்..! 

மொத்தமாக அரசால் ஊடகத்தால் மூடி மறைக்கப்பட்ட மாவோயிஸ்டுகளின் இந்த பயங்கரவாதத்துக்கு எனது கடும் கண்டனம்..! எத்தனை பேர் இவர்களை பயங்கரவாதிகளாக ஏற்பார்கள் என்று எனக்கு தெரியவில்லை. எத்தனை பேர் இக்கொலைகளை  'பயங்கரவாதம் இல்லை' என்று என்னோடு சண்டைக்கு வர போகிறார்களோ தெரியவில்லை. 

பயங்கரவாதத்தில் இத்தனை பாரபட்சமா..? பீஹாரும் இந்தியாவில் தானே உள்ளது..? மனித உயிர்களில் இத்தனை உயர்வு தாழ்வா..? கிராமத்தில் குண்டுவெடிப்பு நடந்தால் அது நியூஸ் இல்லையா..? போலீசும் கிராமத்தானும் பலியானால் அவை இந்திய உயிர்கள் இல்லையா..? அவர்தம் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு அறிவிப்பு இல்லையா..? ஒரு சிறு கண்டன அனுதாப முக்கியத்துவம் கூட இதற்கு இல்லையா..? குண்டு வெடிப்புகளுக்குள் இத்தனை ஆதாய அரசியலா..??? ஓட்டு வேட்டைகளா..??? எங்கே போகிறோம் நாம்..!!!

4 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...