அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Monday, February 11, 2013

18 பதிவருள் பத்தரைமாற்றுத்தங்கம் சகோ.மாயன்:அகமும் புறமும்


மீடியாவை பொருத்தமட்டில் பொதுவாக இஸ்லாம் என்றாலே உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புவதிலும், உண்மைகளை  மறைப்பதிலும், நடந்ததை திரிப்பதிலும் ஊடகங்களுக்கு அப்படி ஓர் அதீத ஆர்வம். காரணம், உலக அளவில் அமெரிக்க யூத ஜியோனிச அரசியல் சார்பு ஊடகங்களும், இந்திய அளவில் அவர்களை அப்படியே அடியொற்றி செயல்படும் ஹிந்துத்துவா அரசியல் சார்ந்த ஃபாஸிச ஊடகங்களும். ஆனால் இவற்றில் மிகவும் சிறு அளவில் நேர்மையான விதிவிலக்குகள் உள்ளன. அவற்றின் மூலமாக உண்மைகள் அவ்வப்போது சிறு வாய்க்காலாக வெளியே வந்தாலும் அவை மேற்கண்ட ஊடக சுனாமியில் இருப்பிடம் தெரியாமல் அடித்து செல்லப்பட்டு விடுவதுண்டு.

இதொன்றும் நமக்கு புதிது அல்ல..! ஏகாதிபத்தியத்தில் முன்னர் காலணி நாட்டினருக்கு எதிராக,  பின்னர் நம் நாட்டு ஜனநாயகத்தில் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு எதிராக, அமெரிக்க ஐரோப்பிய வல்லதிகத்தில் ஒடுக்கப்பட்ட நிறத்தினருக்கு எதிராக நடப்பதுதான் என்றாலும்... முஸ்லிம்களுக்கு - அவர்களின் மார்க்கமான இஸ்லாத்துக்கு எதிராக என்றால்மட்டும்... ஒட்டுமொத்த உலகமே உடனடியாக ஒன்றுபட்டு கைகோர்த்துக்கொள்வதை நாம் நன்கு அறிவோம்.

ஆக, அப்படியான அது போன்ற சர்ச்சைக்குரிய செய்திகளை படித்து அவற்றை உண்மை என்று நம்புவதும், 'இது உண்மையாக இருக்குமா' என்று நடுநிலையுடன் ஆய்வு நடத்துவதும் மட்டுமே நம்மால் இன்றைய சூழலில் செய்ய முடியும். 

எப்போது அச்செய்திகளை உண்மை என்று நாம் நம்புவோம்..? 

அந்த செய்தியால் நாமோ நம்மை சார்ந்த சமூகமோ நமது மார்க்கமோ பாதிக்கப்பட மாட்டோம் என்றால்..! 

எப்போது அச்செய்திகளை பொய்யாக இருக்குமோ என்று நாம் ஆய்வு செய்வோம்..?

அந்த செய்தியால் நாமோ நம்மை சார்ந்த சமூகமோ நமது மார்க்கமோ பாதிக்கப்படுவோம் என்றால் மட்டுமே..!

அப்படித்தான், அந்த சவூதி டிவி இஸ்லாமிய பிரச்சாரகர்(?) தனது 5 வயது மகளை வன்புணர்ந்து(?) கொன்றதாக வந்த செய்தியில் அவரை சவூதி நீதிமன்றம் மன்னித்து(?) வெறும் நான்கு மாதம்(?) சிறை தண்டனையுடன் அல்லது அவரின் மாஜி மனைவிக்கு தரப்படும் இரத்த பணத்துடன்(?) விடுவித்தது(?) என்று படிக்கும்போது... இதுவரை இந்த செய்தியில் எந்த பொய்யும் இருப்பதாக நான் புரிந்து கொள்ள முடியவில்லை. காரணம் இது நடந்திருக்கலாம் என்றே நம்பினேன். இதுபோன்ற செய்திகள் பல நம் நாட்டில் படித்தும் இருக்கிறேன். 

ஆனால், இதனை தொடர்ந்து வந்த ஒரு செய்திதான்... இது மொத்தமாகவே தவறாக இருக்குமோ... இஸ்லாமோஃபோபியா ஊடக தகிடுதத்தம் உள்ளே புகுந்து இருக்குமோ... என்ற உள்ளுணர்வு உணர்த்தியது. அது என்ன..?

கொலைக்கு மரண தண்டனை என்றும், வன்புணர்வுக்கு மரண தண்டனை என்றும் மிக தெளிவாக இஸ்லாமிய சட்டம் தெறிந்து வைத்திருக்கும் ஒரு சாதாரண முஸ்லிமுக்கு, அப்படி அந்த கொலையாளி மரண தண்டனை இன்றி விடுவிக்கப்பட்டதற்கு அச்செய்திகளில் சொல்லப்பட்ட காரணம்... இஸ்லாத்தில் உள்ள ஒரு ஹதீஸ்... அதாவது, "ஒரு முஸ்லிம் தந்தை, தன் மகளை கொல்லலாம். (!?) அதற்கு இஸ்லாத்தில் தண்டனை இல்லை(!?)" என்பதை படிக்கும் போதுதான்.... "அடடா... அதில் ஏதோ தவறு இருக்கிறதே" என்று புத்திக்கு பொறி எட்டியது. 

ஹதீஸ்களில்  உண்மையானது, அழகானது, அழகற்றது, பொய்யானது, குர்ஆனுக்கு மாறான கருத்துடையது, இட்டுக்கட்டப்பட்டது, அறிவிப்பாளர் தொடர்பு அறுந்தது, அறிவிப்பாளர் யாரென்றே அறியாதது என்று ஏகப்பட்ட உள் விஷயங்கள் உள்ளன. குர்ஆனை பொருளோடு அறிந்திருக்கும் சாதாரண முஸ்லிமுக்கே ஹதீஸில் உள்ள இவ்விஷயம் எளிதாக புரியும் எனும்போது... ஒரு கற்றறிந்த நீதிபதி, அதுவும் சவூதியில் உள்ள ஒரு நீதிபதி எப்படி இதைக்கூட அறியாமல் இருப்பார்... இல்லை, அந்த அளவுக்கா சவூதி நீதியில் ஊழல் மலிந்து விட்டது... என்றெல்லாம் சிந்திக்க வைத்தது. விளைவ, மெய்ப்பொருள் தேட வைத்தது.

ஏன்..? ஓர் அப்பாவி உயிரை கொல்வதற்கு இஸ்லாத்தில் தடை. அவ்வளவு ஏன், தனது உயிரையே ஒருவருக்கு கொல்ல இஸ்லாத்தில் அதிகாரம் இல்லை. தற்கொலை புரிந்தால் நேரடி நரகம்தான். காரணம், அவரின் கொலைச்செயலுக்கு அவர் பாவமன்னிப்பும் கேட்க முடியாது, நீதி மன்றத்தில் தண்டனையும் பெற வழி இல்லை எனபதால்..! இதெல்லாம் குர்ஆனில் தெளிவாகவே உள்ளதை சாதாரண முஸ்லிமும் அறிவர். 

அது மட்டுமின்றி குர்ஆனில் 'உங்கள் குழந்தையை கொல்லாதீர்கள்' என்று தெளிவாகவே உள்ளதே. 'பெற்றவரே கொன்றுவிட்டு பெற்றவருக்கே நஷ்டஈடு தருவது சாத்தியமில்லையே' 'ஒரு கொலை என்பது ஒட்டுமொத்த மனித சமூகத்தை கொன்றதற்கு சமம்' என்றும் குர்ஆனில் இறைவன் சொல்லி இருக்க அந்த செய்தியில் உள்ள உண்மைக்கு மாறான விஷயம் எளிதாகவே அறிவுக்கு எட்டியது.

பிறகு அந்த செய்திகளை எல்லாம் இணையத்தில் என்னை ஆய்வு செய்ய வைத்தது.

ஜனவரி 31 ம் தேதி அன்று பிபிசி தான் முதலில் இந்த செய்தியை வெளியிட்டது. அதில் கற்பழிப்பு தவிர மீதி அத்தனை பொய்களும் இடம் பெற்று இருந்தன. (மகளை டார்ச்சர் செய்து கொன்றது மட்டுமே உண்மை) அவர்கள் அதற்கு ஆதாரமாக காட்டியது ஒரு டிவிட்டர் பக்கம். எத்தனையோ செய்தியாளர்களை நிருபர்களை வைத்திருக்கும் பிபிசிக்கு போயும் போயும் ஏதோ ஒரு ட்விட்டர் பக்கம் ஆதாரம்..!

அந்த ட்விட்டர் பக்கத்தில் பிப்ரவரி 2 ம் தேதி கற்பழிப்பையும் சேர்த்து விட்டார்கள். அதன் பிறகுதான் கற்பழிப்பு என்பதும் விடுதலைக்கு காரணமாக ஷரியா சட்டத்தில் ஒரு ஹதீஸ் இருப்பதாகவும் மேற்கத்திய ஊடகங்கள் தொடர்ந்து பெரிதாக முழங்க ஆரம்பித்தன. 

அந்த  டிவிட்டர் தளம்தான் எல்லா பொய்யான செய்திகளுக்கும் பிரச்சினைக்கும் மூல காரணம் என்று நான் இணையத்தில் தேடிய வரை அறிகிறேன்..!

இதை நமது தமிழ் ஊடகங்களும் தமிழில் இஸ்லாமோஃபோபியா பதிவர்களும் அப்படியே நம்பி தங்கள் பதிவுகளில் ஆராயாமல் வெளியிட்டனர்.

அப்படி வெளிவந்த பல்வேறு பதிவுகளில், எனது புரிதலில் 'இவர்களிடம் சொன்னால் எடுபடும்' என்று நான் நினைத்த இரண்டில் மட்டுமே எதிர்வினை ஆற்றி இருந்தேன். ஒன்று அமரர் டோண்டு ராகவன். இன்னொருவர் பதிவர் மாயன். 

சகோ.டோண்டு அப்பதிவு போட்ட அடுத்த இரு தினங்களில் இறந்து விட்டது மிகவும் அதிர்ச்சியான செய்தி. அன்னாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும் அவரின் குடும்பத்தாருக்கு கவலையான அனுதாபங்களையும் ஏற்கனவே தெரிவித்தோம். 

ஆனால், சகோ.மாயன்...?

தவறு செய்வது இயற்கை. தவறை உணர்ந்து திருத்திக்கொள்வது..? தற்போதைய ஊடக உலகில் , நிச்சயமாக இயற்கையான விஷயமாக அது இல்லை..!

எனவே அப்படி ஒருவர், தனது தவறை ஆய்வு செய்து உண்மையை விளங்கி அறிந்து அதை உணர்ந்து தம்மை திருந்திக்கொள்வதும், அதை பகிரங்கமாக சமூகத்துக்கு அறிவித்து, மன்னிப்பு கேட்பதும்.... மாஷாஅல்லாஹ்....  மிகவும் சிறப்பானது...! மகோன்னதமானது..! அரிதானது..! அப்படி ஒன்று நடப்பது தற்போதைய ஊடக உலகில், அதுவும் இஸ்லாத்துக்கு எதிரான விஷயத்தில் நடப்பது என்பது இயற்கைக்கு முற்றிலும் புறம்பான மிகப்பெரிய அதிசயம்..! 

இதை செய்வோர் யாராக இருந்தாலும் அவர் சான்றோர்..! 

அப்படி ஒரு சாதனையை செய்த அந்த சகோதர பதிவர் : 'அகமும் புறமும்' திரு.மாயன் அவர்கள்..! 

தமிழ்ப்பதிவுலகில் நிச்சயமாக இவர் ஒரு 'மனிதருள்  மாணிக்கம்', 'பதிவருள் பத்தரைமாற்றுத்தங்கம்'... என்றால் அது மிகை அல்ல..! 

தமிழ்ப்பதிவுலகில் மற்றவர்களுக்கு உதாரணமாக திகழும் இவர், அரிதாக வாழும் ஊடக நேர்மையாளர்களுக்கு ஒரு சிறந்த முன்னோடி..!

அவர் செய்த செயல் என்ன..?

ஷரியா சட்டம் பற்றிய தனது முந்தைய தவறான பதிவுக்கு இன்று ஒரு மறுப்பு பதிவும் போட்டு... அதில் அழகிய முறையில் மன்னிப்பும் கோரி உள்ளார்..! என்ன ஓர் உயர்ந்த நேர்மையாளர் இவர்..! 

கண்கள் பனிக்க உள்ளத்தின் ஆழத்தில் இருந்து  நெகிழ்வோடு கூறுகிறேன்...  

...மிகவும் நன்றி சகோ.மாயன்..!

இன்றைய தமிழ் இணைய/ஊடக‌ உலகில் இவ்விஷயத்தில் நான் அறிந்து, உலகில் வேறு எவருமே செய்யாத செயல் இவருடையது..! எனவே இது தனிச்சிறப்பு வாய்ந்தது. தனிப்பதிவு போட்டு பாராட்டத்தக்க செயல் அது..!

இவருக்கு எனது மனம் திறந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும் மட்டிலா மகிழ்வோடு உரித்தாகுக..!

அப்புறம்,

அந்த  சவூதிகாரரின் மகள் கொலை விசாரணை மற்றும் ஷரியா சட்ட விஷயத்தில் பல திருக்கிடும் உண்மை விபரம் அறிய நாடினால்....


....இங்கே சென்று நடந்ததை சற்று ஆழமாக படித்தறிந்து கொள்ளுங்கள் சகோஸ்..!

18 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...