அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Saturday, February 23, 2013

69 இது 'திராவிட பயங்கரவாதம்' இல்லையா..?


ஒரு தனி மனிதர் செய்யும் தவறுக்காக அல்லது அவர் சார்ந்த சமூகத்தின் தவறான கொள்கைக்காக அவரின் ஒட்டுமொத்த சமூகத்தையே குற்றப்பார்வை பார்த்தலும் அதற்கு தண்டனையாக அந்த சமூகத்தின் பிற அப்பாவி மக்கள் மீது தாக்குதல் தொடுத்தலும் பயங்கரவாதம். 

இதைத்தான் ஹிட்லர் அன்று ஒட்டுமொத்த ஜெர்மானிய யூதர்கள் மீது நடத்தினார். ஜார்ஜ் புஷ் ஒட்டுமொத்த ஆப்கானியர் மீது நடத்தினார்.  ராஜபக்சே ஒட்டுமொத்த ஈழத்தமிழர்கள் மீது நடத்தினார். மோடி ஒட்டுமொத்த குஜராத் முஸ்லீம்கள் மீது பொய்ப்பழிபோட்டு நடத்தினார். ஆனால், இவர்கள் செய்த செயலை உலகரிய நல்லிதயம் கொண்ட நன்மக்கள், நடுநிலை சான்றோர் அனைவருமே குற்றம் என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டனர். ஆனால், இந்த கொடுங்கோளர்கள் எல்லாம் விஷச்செயல்களில் காட்டியதை ஒருவர் விஷக்கருத்தாக மக்கள் மனதில் பதிய வைத்தார். அவர்... 'தந்தை'(?) பெரியார்..! 


"பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் முதலில் பார்ப்பானை அடி" என்ற ஓர் உலகமகா பயங்கரவாத விஷக்கருத்தை ஓர் ஒட்டுமொத்த சமூகத்தார் மீது சொன்னவர் ஈ.வே.ரா.பெரியார் மட்டுமே..! இந்த வாதம் எப்படி பயங்கரமாகாது..? 

சப்போஸ்... ஜஸ்ட்... ஒரு வாதத்துக்கு... மட்டும்ம்ம் இதை சொல்கிறேன்..! யாரோ ஒரு தேவர் சமூக வன்முறை எண்ணம் கொண்டவரால் பாதிக்கப்பட்ட ஒரு தலித் சமூக தலைவர், "தேளையும் தேவரையும் கண்டால் முதலில் தேவரை அடி" என்று இன்று சொன்னால் அவரின் கதை என்னாகும்..?  ('தே-தே' மோனை நயத்துக்காக இங்கே தேவர் உதாரணம் காட்டியுள்ளேன், அவ்வளவுதான்..! தேவர் சமூக சகோதரர்கள் மன்னிக்கவும்.) 

நாட்டின் ஒட்டுமொத்த யூத சமூகத்தையே வஞ்சக நோக்கில் லட்சக்கணக்கில் கொன்ற ஹிட்லர் கூட சொல்லாத ஒரு ஹிம்சைக்கருத்து இது. அமெரிக்கா கூட சொல்லாத அக்கிரமக்கருத்து இது. ராஜபக்சே கூட சொல்லாத ரணப்படுத்தும் கருத்து இது. மோடி கூட சொல்லாத மோசமான கருத்து இது.  ஆனாலும் முஸ்லீம்கள் உட்பட ஆங்காங்கே பலரால் இந்நச்சுக்கருத்து எடுத்தாளப் படுத்தப்படுவதை காண்கிறேன். இது தவறு இல்லையா..?

'மனிதகுலத்துக்கு பார்ப்பனியம் விஷம்தான்' என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அதை சொல்லும் சமூகத்தில் பிறந்த ஒரே காரணத்துக்காக எல்லா பார்ப்பனர்களும் பாம்பாகி விடுவார்களா..? அப்படி சொல்லுதல் முறையா..? இன்று பார்ப்பனீயத்தை கடுமையாக எதிர்க்கும் பல கம்யூனிஸ பிரிவு தலைவர்கள் பார்ப்பனர்கள் அல்லவா..? ஆக, பார்ப்பனியத்தை அந்த ஜாதியில் பிறந்த எல்லா பார்ப்பனர்களும் சரிகாண்பர் என்றோ பிற சாதியினர் மீது நடைமுறை படுத்துவர் என்றோ சொல்வதற்கில்லை எனும்போது, இப்படி பார்ப்பனரை நச்சுப்பாம்பாக உருவகிப்பது சமூக நல்லிணக்கமா..? 

இக்கருத்தை போற்றி, சரிகண்டு... அவ்வப்போது அங்காங்கே  பொது மேடையிலும் பேசுகின்ற திராவிட இயக்கத்தினருக்கு இது "திராவிட பயங்கரவாத" சொற்றொடராக தோன்றவில்லையா..? தம்மிடம் எவ்வுத வம்புதும்புக்கும் வராதா ஒரு சாமானியன் மீதான போர்ப்பிரகடனமாக தோன்றவில்லையா..? இதில் ஏதும் நீதி உள்ளதா..? அச்சமூகத்தில் எவரோ என்றோ எழுதி வைத்தவைகளுக்கு இன்று பிறந்தவர்களுடன் பாம்பு எனக்கூறி போர் தொடுத்தல் நியாயமா..? 

அதேவேளையில்... பார்ப்பனர், நாத்திகர், யூதர், கிருத்தவர், ஹிந்து, ஜைனர், பவுத்தர்... எவர் ஆயினும்... தமக்கு தீங்கிழைக்க வரும் தனி மனிதர்கள் தவிர்த்து அவர்களின் சமூகத்தாரோடு இணங்கி சுமுகமாக வாழ தம் இறை வேததத்தில் இறைவனால் கட்டளை போடப்பட்டிருக்கும் ஒரே மார்க்கம் நான் அறிந்தவரை, இவ்வுலகில் இஸ்லாம் ஒன்று மட்டுமே..!
உங்களுக்கும், நீங்கள் யாரைப் பகைத்தீர்களோ அவர்களுக்குமிடையே அல்லாஹ் அன்பை ஏற்படுத்திடக் கூடும். அல்லாஹ் ஆற்றலுடையவன்; அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (குர்ஆன் 60:7)
மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும் உங்கள் வீடுகளில் இருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்கு தடை செய்யவில்லை.நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். (குர்ஆன் 60:8)
தம்மிடம் போருக்கு வராதோர் மீது தாமாக சென்று போரிட முஸ்லிம்களுக்கு அனுமதி இல்லை..! (குர்ஆன் 22:39) அந்த போரில் கூட பிற மதத்தினரின் வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் தொடுக்க முஸ்லிம்களுக்கு அனுமதி இல்லை..! (குர்ஆன்22:40)

அப்படியான ஓர் உக்கிரமான போர் நடக்கும்போது எதிரிகளில் எவரேனும் போரை விட்டுவிட்டு அபயம் தேடி முஸ்லீம்கள் பக்கம் வந்து விட்டால்...?
(நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக! அதன்பின் அவரை பாதுகாப்பு கிடைக்கும் வேறு இடத்திற்கு (பத்திரமாக) அனுப்புவீராக. ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்."(குர்ஆன் 9:6)
அப்போது, மதீனாவில் தம்மை கொல்லவும் எத்தனித்த சமூகத்தவர்கள் யூதர்கள் என்றாலும் அதில் உள்ள ஒரு யூதரின் இறுதி ஊர்வலத்தில்கூட முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தும் பண்பாட்டை கற்றுத்தந்த மார்க்கம் இஸ்லாம்..! 

அண்டை வீட்டார் எந்த சமயத்தவராயினும், `அடுத்த வீட்டுக்காரர் பசித்துக் கொண்டிருக்கும் போது தான் மட்டும் புசிக்கின்றவன் என்னைச் சார்ந்தவனல்ல" - என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்)..!

ஆகவே, எனக்கு பார்ப்பநியம் பிடிக்காதுதான். ஆனால், அச்சமூகத்தார் மீது நீதியான பார்வையை செலுத்தாமல் இருக்க முடியாது. எனவே, அவர்கள்  மீதான பெரியாரிஸ நச்சுத்தாக்குதல் தவறு என்று என் மனதுக்கு பட்டாலும், முஸ்லீம்கள் மீது பெரியார் ஆதரவாளர்கள் பாசமானவர்கள் என்பதற்காக, அவர்களிடம் உள்ள தவறுகளை அவர்களிடம் சொல்லாமல் என்னால் அதை வேண்டுமென்றே மறைத்துக்கொண்டு இருக்கவும் முடியாது. காரணம்.....
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (குர்ஆன் 5:8)
ஆகவே, தயவு செய்து இனிமேல்... பெரியார் சொன்ன அந்த சமூக நல்லிணக்கத்துக்கு எதிரான வாக்கியத்தை யாரும் சொல்லாதீர்கள். முக்கியமாக முஸ்லீம்கள் சொல்லவே சொல்லாதீர்கள்..!

டிஸ்கி  (ஒருநாள் கழித்த பின்னர் பிற்சேர்க்கை)
நான் சொன்னதெல்லாம் சுருக்கமாக இதுதான்..!
-------------------------------------------------------------------------------------
'குறிப்பிட்ட ஒரு சாதியில் பிறந்தார்' என்பதற்காக ஒருவர் பாம்பை விட முன்னுரிமை தரப்பட்டு அடிக்கப்பட வேண்டியவராகி விடுவாரா..? குறைந்த பட்ச மனிதாபிமான அடிப்படையில் கூட அமையாத பெரியாரின் இக்கருத்தைத்தான் 'பயங்கரவாத கருத்து' என்கிறேன்..! மற்றபடி, நான் இப்படி சொல்வதொன்றும் பார்ப்பனியத்தை ஆதரிப்பதாகிவிடாது. அவ்வாக்கியத்தை சொன்னவரை பயங்கரவாதியாகவும் ஆக்கிவிடாது. 'இனி யாரையும் நாம் அப்படி சொல்ல வேண்டாம்' என்பதே சமூகத்தின் மீது எனது தாழ்மையான அறைகூவல்..! இதை ஏனோ, சிலர் புரிந்து கொள்ளவில்லை..!!! ஓரிரு இஸ்லாமிய விரோதிகள் வேண்டுமென்றே விஷமமாக எதிர்பதிவு போட்டு நான் சொன்ன கருத்தை திரிக்கிறார்கள்..!!! அவை மிக மிக மலிவான பதிவரசியல்..!!!

69 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...