ஒரு தனி மனிதர் செய்யும் தவறுக்காக அல்லது அவர் சார்ந்த சமூகத்தின் தவறான கொள்கைக்காக அவரின் ஒட்டுமொத்த சமூகத்தையே குற்றப்பார்வை பார்த்தலும் அதற்கு தண்டனையாக அந்த சமூகத்தின் பிற அப்பாவி மக்கள் மீது தாக்குதல் தொடுத்தலும் பயங்கரவாதம்.
இதைத்தான் ஹிட்லர் அன்று ஒட்டுமொத்த ஜெர்மானிய யூதர்கள் மீது நடத்தினார். ஜார்ஜ் புஷ் ஒட்டுமொத்த ஆப்கானியர் மீது நடத்தினார். ராஜபக்சே ஒட்டுமொத்த ஈழத்தமிழர்கள் மீது நடத்தினார். மோடி ஒட்டுமொத்த குஜராத் முஸ்லீம்கள் மீது பொய்ப்பழிபோட்டு நடத்தினார். ஆனால், இவர்கள் செய்த செயலை உலகரிய நல்லிதயம் கொண்ட நன்மக்கள், நடுநிலை சான்றோர் அனைவருமே குற்றம் என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டனர். ஆனால், இந்த கொடுங்கோளர்கள் எல்லாம் விஷச்செயல்களில் காட்டியதை ஒருவர் விஷக்கருத்தாக மக்கள் மனதில் பதிய வைத்தார். அவர்... 'தந்தை'(?) பெரியார்..!
"பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் முதலில் பார்ப்பானை அடி" என்ற ஓர் உலகமகா பயங்கரவாத விஷக்கருத்தை ஓர் ஒட்டுமொத்த சமூகத்தார் மீது சொன்னவர் ஈ.வே.ரா.பெரியார் மட்டுமே..! இந்த வாதம் எப்படி பயங்கரமாகாது..?
சப்போஸ்... ஜஸ்ட்... ஒரு வாதத்துக்கு... மட்டும்ம்ம் இதை சொல்கிறேன்..! யாரோ ஒரு தேவர் சமூக வன்முறை எண்ணம் கொண்டவரால் பாதிக்கப்பட்ட ஒரு தலித் சமூக தலைவர், "தேளையும் தேவரையும் கண்டால் முதலில் தேவரை அடி" என்று இன்று சொன்னால் அவரின் கதை என்னாகும்..? ('தே-தே' மோனை நயத்துக்காக இங்கே தேவர் உதாரணம் காட்டியுள்ளேன், அவ்வளவுதான்..! தேவர் சமூக சகோதரர்கள் மன்னிக்கவும்.)
நாட்டின் ஒட்டுமொத்த யூத சமூகத்தையே வஞ்சக நோக்கில் லட்சக்கணக்கில் கொன்ற ஹிட்லர் கூட சொல்லாத ஒரு ஹிம்சைக்கருத்து இது. அமெரிக்கா கூட சொல்லாத அக்கிரமக்கருத்து இது. ராஜபக்சே கூட சொல்லாத ரணப்படுத்தும் கருத்து இது. மோடி கூட சொல்லாத மோசமான கருத்து இது. ஆனாலும் முஸ்லீம்கள் உட்பட ஆங்காங்கே பலரால் இந்நச்சுக்கருத்து எடுத்தாளப் படுத்தப்படுவதை காண்கிறேன். இது தவறு இல்லையா..?
'மனிதகுலத்துக்கு பார்ப்பனியம் விஷம்தான்' என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அதை சொல்லும் சமூகத்தில் பிறந்த ஒரே காரணத்துக்காக எல்லா பார்ப்பனர்களும் பாம்பாகி விடுவார்களா..? அப்படி சொல்லுதல் முறையா..? இன்று பார்ப்பனீயத்தை கடுமையாக எதிர்க்கும் பல கம்யூனிஸ பிரிவு தலைவர்கள் பார்ப்பனர்கள் அல்லவா..? ஆக, பார்ப்பனியத்தை அந்த ஜாதியில் பிறந்த எல்லா பார்ப்பனர்களும் சரிகாண்பர் என்றோ பிற சாதியினர் மீது நடைமுறை படுத்துவர் என்றோ
சொல்வதற்கில்லை எனும்போது, இப்படி பார்ப்பனரை நச்சுப்பாம்பாக உருவகிப்பது சமூக நல்லிணக்கமா..?
இக்கருத்தை போற்றி, சரிகண்டு... அவ்வப்போது அங்காங்கே பொது மேடையிலும் பேசுகின்ற திராவிட இயக்கத்தினருக்கு இது "திராவிட பயங்கரவாத" சொற்றொடராக தோன்றவில்லையா..? தம்மிடம் எவ்வுத வம்புதும்புக்கும் வராதா ஒரு சாமானியன் மீதான போர்ப்பிரகடனமாக தோன்றவில்லையா..? இதில் ஏதும் நீதி உள்ளதா..? அச்சமூகத்தில் எவரோ என்றோ எழுதி வைத்தவைகளுக்கு இன்று பிறந்தவர்களுடன் பாம்பு எனக்கூறி போர் தொடுத்தல் நியாயமா..?
அதேவேளையில்... பார்ப்பனர், நாத்திகர், யூதர், கிருத்தவர், ஹிந்து, ஜைனர், பவுத்தர்... எவர் ஆயினும்... தமக்கு தீங்கிழைக்க வரும் தனி மனிதர்கள் தவிர்த்து அவர்களின் சமூகத்தாரோடு இணங்கி சுமுகமாக வாழ தம் இறை வேததத்தில் இறைவனால் கட்டளை போடப்பட்டிருக்கும் ஒரே மார்க்கம் நான் அறிந்தவரை, இவ்வுலகில் இஸ்லாம் ஒன்று மட்டுமே..!
உங்களுக்கும், நீங்கள் யாரைப் பகைத்தீர்களோ அவர்களுக்குமிடையே அல்லாஹ் அன்பை ஏற்படுத்திடக் கூடும். அல்லாஹ் ஆற்றலுடையவன்; அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (குர்ஆன் 60:7)
மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும் உங்கள் வீடுகளில் இருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்கு தடை செய்யவில்லை.நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். (குர்ஆன் 60:8)
தம்மிடம் போருக்கு வராதோர் மீது தாமாக சென்று போரிட முஸ்லிம்களுக்கு அனுமதி இல்லை..! (குர்ஆன் 22:39) அந்த போரில் கூட பிற மதத்தினரின் வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் தொடுக்க முஸ்லிம்களுக்கு அனுமதி இல்லை..! (குர்ஆன்22:40)
அப்படியான ஓர் உக்கிரமான போர் நடக்கும்போது எதிரிகளில் எவரேனும் போரை விட்டுவிட்டு அபயம் தேடி முஸ்லீம்கள் பக்கம் வந்து விட்டால்...?
(நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக! அதன்பின் அவரை பாதுகாப்பு கிடைக்கும் வேறு இடத்திற்கு (பத்திரமாக) அனுப்புவீராக. ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்."(குர்ஆன் 9:6)
அப்போது, மதீனாவில் தம்மை கொல்லவும் எத்தனித்த சமூகத்தவர்கள் யூதர்கள்
என்றாலும் அதில் உள்ள ஒரு யூதரின் இறுதி ஊர்வலத்தில்கூட முஹம்மத் நபி (ஸல்)
அவர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தும் பண்பாட்டை கற்றுத்தந்த
மார்க்கம் இஸ்லாம்..!
அண்டை வீட்டார் எந்த சமயத்தவராயினும்,
`அடுத்த வீட்டுக்காரர் பசித்துக் கொண்டிருக்கும் போது தான் மட்டும்
புசிக்கின்றவன் என்னைச் சார்ந்தவனல்ல" - என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்)..!
ஆகவே, எனக்கு பார்ப்பநியம் பிடிக்காதுதான். ஆனால், அச்சமூகத்தார் மீது நீதியான பார்வையை செலுத்தாமல் இருக்க முடியாது. எனவே, அவர்கள் மீதான பெரியாரிஸ நச்சுத்தாக்குதல் தவறு என்று என் மனதுக்கு பட்டாலும், முஸ்லீம்கள் மீது பெரியார் ஆதரவாளர்கள் பாசமானவர்கள் என்பதற்காக, அவர்களிடம் உள்ள தவறுகளை அவர்களிடம் சொல்லாமல் என்னால் அதை வேண்டுமென்றே மறைத்துக்கொண்டு இருக்கவும் முடியாது. காரணம்.....
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (குர்ஆன் 5:8)
ஆகவே, தயவு செய்து இனிமேல்... பெரியார் சொன்ன அந்த சமூக நல்லிணக்கத்துக்கு எதிரான வாக்கியத்தை யாரும் சொல்லாதீர்கள். முக்கியமாக முஸ்லீம்கள் சொல்லவே சொல்லாதீர்கள்..!
டிஸ்கி (ஒருநாள் கழித்த பின்னர் பிற்சேர்க்கை)
நான் சொன்னதெல்லாம் சுருக்கமாக இதுதான்..!
-------------------------------------------------------------------------------------
'குறிப்பிட்ட ஒரு சாதியில் பிறந்தார்' என்பதற்காக ஒருவர் பாம்பை விட முன்னுரிமை தரப்பட்டு அடிக்கப்பட வேண்டியவராகி விடுவாரா..? குறைந்த பட்ச மனிதாபிமான அடிப்படையில் கூட அமையாத பெரியாரின் இக்கருத்தைத்தான் 'பயங்கரவாத கருத்து' என்கிறேன்..! மற்றபடி, நான் இப்படி சொல்வதொன்றும் பார்ப்பனியத்தை ஆதரிப்பதாகிவிடாது. அவ்வாக்கியத்தை சொன்னவரை பயங்கரவாதியாகவும் ஆக்கிவிடாது. 'இனி யாரையும் நாம் அப்படி சொல்ல வேண்டாம்' என்பதே சமூகத்தின் மீது எனது தாழ்மையான அறைகூவல்..! இதை ஏனோ, சிலர் புரிந்து கொள்ளவில்லை..!!! ஓரிரு இஸ்லாமிய விரோதிகள் வேண்டுமென்றே விஷமமாக எதிர்பதிவு போட்டு நான் சொன்ன கருத்தை திரிக்கிறார்கள்..!!! அவை மிக மிக மலிவான பதிவரசியல்..!!!
டிஸ்கி (ஒருநாள் கழித்த பின்னர் பிற்சேர்க்கை)
நான் சொன்னதெல்லாம் சுருக்கமாக இதுதான்..!
-------------------------------------------------------------------------------------
'குறிப்பிட்ட ஒரு சாதியில் பிறந்தார்' என்பதற்காக ஒருவர் பாம்பை விட முன்னுரிமை தரப்பட்டு அடிக்கப்பட வேண்டியவராகி விடுவாரா..? குறைந்த பட்ச மனிதாபிமான அடிப்படையில் கூட அமையாத பெரியாரின் இக்கருத்தைத்தான் 'பயங்கரவாத கருத்து' என்கிறேன்..! மற்றபடி, நான் இப்படி சொல்வதொன்றும் பார்ப்பனியத்தை ஆதரிப்பதாகிவிடாது. அவ்வாக்கியத்தை சொன்னவரை பயங்கரவாதியாகவும் ஆக்கிவிடாது. 'இனி யாரையும் நாம் அப்படி சொல்ல வேண்டாம்' என்பதே சமூகத்தின் மீது எனது தாழ்மையான அறைகூவல்..! இதை ஏனோ, சிலர் புரிந்து கொள்ளவில்லை..!!! ஓரிரு இஸ்லாமிய விரோதிகள் வேண்டுமென்றே விஷமமாக எதிர்பதிவு போட்டு நான் சொன்ன கருத்தை திரிக்கிறார்கள்..!!! அவை மிக மிக மலிவான பதிவரசியல்..!!!
69 ...பின்னூட்டங்கள்..:
salam sago!
well said....!
மாஷா அல்லாஹ். ஒரு நல்ல பதிவு. இதை பற்றி நானே பதிவு எழுதலாம் என்றிருந்தேன். இன்ஷா அல்லாஹ் இதை பற்றி வேறோரு பதிவு வேறொரு கண்ணோட்டத்தில் எழுதுகிறேன்.
கிழிஞ்சது போங்கள்! இனி பாம்பையும் முஸ்லீமையும் கண்டால் முசுலீமை அடி என்றுதான் சொல்லவேண்டும் போல. பார்ப்பான் இங்கு அடக்கிவாசிப்பதற்கு அந்த வசனம்தான் அய்யா பெரும் பங்காற்றியது. இல்லேன்னா இங்க ஒரு லேடிமோடி ருத்ரதாண்டவம் ஆடியிருப்பார். என்னவோ போங்க pj என்னவோ சொல்லுறாருன்னு நீங்களும் சொல்றாப்போல தெரியுது. எனக்கென்னவோ பீஜேவினால தமிழக முசுலீம்களுக்கு நேரம் சரியில்லைன்னு எனக்கு தோணுது
சலாம் சகோ.
//"பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் முதலில் பார்ப்பானை அடி"//
நானும் இதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். விளையாட்டாக, சிரிப்புக்காககூட சொல்லும் சிலர் அதன் விபரீதத்தை இஸ்லாம் கண்டிக்கிறது என்பதை அறிந்திராதவர்களே :( யாரும் அப்படி செயல்படுத்தாவிட்டாலும், அவசியம் சொல்லவேண்டிய செய்தி!
o-:)
சலாம்,
பயங்கரவாதம் ஆபத்தானது. வெறுமனே வார்த்தைகள் என்று ஒதுக்கி விட முடியாது. பகிர்வுக்கு நன்றி காக்கா !!!
பூனைக்கு மணி கட்டியுள்ளீர்...நியாயமான கேள்விகள் ! இது போன்ற கண்ணியமான..ஆரோக்யமான விவாதங்கள் நம்மை பண்படுத்தும்..! அதுதான் பகுத்தறிவு..!
இதே போல்..ஒரு காலகட்டத்தில் சொல்லப்பட்டது..தொடரப்பட்டது எல்லாமே..என்றைக்கும் பொறுந்துவதில்லை..! அது நமக்கு தெரிவதில்லை..! மற்றவர் சுட்டிக் காட்டும் போது..அவரைக் கோபிக்காமல்..உள்ளீடு வாங்கி செம்மை படுத்துவதே அழகு !
hmm.. கண்ணாடி வீட்டிலிருந்து கொண்டு கல்லெறிகிறார் முஹம்மது ஆஷிக்.. :)
//அமெரிக்கா- அக்கிரம
ராஜபக்சே- ரணப்படுத்தும்
மோடி -மோசமான
//
:) :)
@jaffer khanalaikkum salaam sago. welcome.
@ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)//வேறொரு கண்ணோட்டத்தில்//---அவசியம் எழுதுங்க சகோ.
@சந்தானம்சகோ.சந்தானம், எந்த ஒரு கொள்கையும் ஆள் சேர்ப்பு & அடி பலத்தால் புஜவலிமை கொண்டு அடக்கி வைத்தல் என்பது நீண்ட காலம் நிலைக்காது. நினைத்த நேரத்தில் நினைத்த இடைவெளியில் வீறுகொண்டு எழுந்து பழி வாங்கும். அப்படித்தான் தற்போது நடப்பதை பார்க்கிறோம்.
பார்ப்பனியத்தை எதிர்க்க பார்ப்பானை அடிப்பது அக்கிரமம். பார்பனியத்தை மட்டுமே அடிக்க வேண்டும். அது அடிதடியால் முடியாது. உறுதியான கொள்கை கொண்டு அன்பான அறிவுரையால் சத்திய மார்க்கத்தால் மட்டுமே சாத்தியம்.
அப்படி பெரியார் செய்ய தவறியதைத்தான், பெரியாரின் மறைவுக்கு பின்னர் அடக்கி வைக்கப்பட்டிருந்த பார்ப்பனியம் மீண்டும் தமிழகத்தில் துளிர்விட்டதை கண்கூடாக பார்த்து வருகிறோம்.
எப்படி... எப்படி....
நான் எவனோ ஒரே ஒருவன் இப்படி தவறை சுட்டிக்காட்டி சொன்னதற்காக...
//இனி பாம்பையும் முஸ்லீமையும் கண்டால் முசுலீமை அடி //
---என்று ஒட்டு மொத்த சமூகத்தையும் எதிர்ப்பீர்களா சகோ..?
இது அநியாயம் இல்லையா ஸகோ..?
இதைத்தான் தவறு என்று பதிவில் சொல்லி இருக்கிறேன் சகோ.சந்தானம்..!
நிதானம்..!
@அஸ்மாஅலைக்கும் சலாம் சகோ.அஸ்மா. சரியாக சொன்னீர்கள் சகோ.
@Dr.Anburaj//நன்று பாராட்டுக்கள். நல்ல பதிவு//---நன்றி.
@புரட்சி தமிழன்:-)
@Peer Mohamedஅலைக்கும் சலாம்
//வெறுமனே வார்த்தைகள் என்று ஒதுக்கி விட முடியாது.//---அஃதே..!
"பாம்பையும் பார்ப்பனியத்தையும் கண்டால் முதலில் பார்ப்பனியத்தை அடி" என்று ஓர் உருவகமாக சொல்லி எதிர்த்திருந்தால் எவ்வித பயங்கரவாதமும் அதில் இருந்திருக்காது சகோ.பீர்.
@ரமேஷ் வெங்கடபதியாராவது மணி கட்டித்தானே ஆகணும் சகோ.ரமேஷ். மிக அழகிய பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி சகோ.
@viyasanசில நேரம் கண்ணாடி வீட்டுக்குள் 'glass house effect' மூலம் உஷ்ணமும் கூடி,
ஆக்ஸிஜன் பற்றாக்குறையும் ஏற்படுமானால் நமது உயிர் காக்கும் பொருட்டு கையில் கல் இருந்தால்
எறியத்தான் வேண்டும் சகோ.வியாசன்..!
இங்கே உயிர் என்பது நியாயம்..!
கல் - எனது வலைப்பூ..!
எனக்கு பிடித்தவர்கள் பிடிக்காதாவர்களிடம் அநியாயம் காட்டினாலும் அதை சுட்டித்தான் ஆக வேண்டும் சகோ..!
இவ்வுலக வெற்று ஆதாயங்களுக்காக, கூட்டாளிகள் செய்யும் தவறுகளை கண்டும் காணாமல் போக நானொன்றும் அரசியல்வாதி அல்லவே..!
புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன் சகோ.வியாசன்.
@Kamal balanஅடடே..!
//ஹிட்லர் கூட சொல்லாத ஹிம்சை கருத்து//
---மாத்திட்டேன்..!
ஓகே..? :)) :))
நன்றி சகோ.
திரு.ராவணன்,
இப்பதிவுக்கு சிறிதும் சம்பந்தமே இல்லாமல் கருணாநிதி, ஓட்டு, குண்டு வெடிப்பு என்று ஏதேதோ சொல்கிறீர்கள்.
என்னை ஒருமையில் விளிக்கும் அளவுக்கு இப்பதிவில் அப்படி என்ன தவறு உள்ளது..?
அதனால் உங்கள் இரு பின்னூட்டங்களையும் மட்டுறுத்தி விட்டேன்.
@சந்தானம்அப்புறம்.....
சம்பந்தமே இல்லாமல் மவ்லவி பீஜே பற்றி இங்கே எதற்கு..?
அவர் இக்கருத்தை ஏற்கனவே சொல்லி இருந்தாரா என்பது பற்றி எல்லாம் எனக்கு தெரியாது.
இது நானாக சிந்தித்து எழுதியது தான்..! மேலும், பல மாதங்கள் முன்பு ஒரு முறை முகநூல் விவாதத்தில் இதை எழுதியும் உள்ளேன்.
நேற்று சிலர், சுப்பிரமணிய சுவாமியை பற்றி அவரின் கருத்தை விமர்சிக்காமல் அவரை இப்படி முகநூலில் கூறிய போதுதான் இது பற்றி பிளாக்கில் எழுத வேண்டும் என்று தோன்றியது..! எழுதி விட்டேன்..!
எனக்கு அந்த ஆளின் நடவடிக்கை அறவே பிடிக்காது.
ஆனால், கட்டி அணைக்கும்படியான அருமையான ஆருயிர் நண்பர்கள் அந்த பார்ப்பன ஜாதியில் ஒண்ணாம் வகுப்பில் இருந்து பலர் இன்று வரை என்னை சுற்றி உண்டு..! அவர்களை அடிப்பது பற்றி நான் கனவிலும் நினையேன்..!
இந்த விடயத்தில் முஸ்லீம்கள் கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிகிறார்கள். மனிதநேயத்தைப் பற்றி முஸ்லீம்கள் அதிலும் வஹாபிஸ்டுக்கள் பேசுவதைப் பார்த்தால் எங்கேயாவது முட்டிக் கொள்ளத்தான் தான் தோன்றுகிறது.
திருக்குரான் வாசகங்கள்
8:12! இதோ! நிராகரிப்பாளர்களின் உள்ளங்களில் பீதியை ஏற்படுத்தி விடுகின்றேன். எனவே, நீங்கள் அவர்களுடைய பிடரிகளில் தாக்குங்கள்; அவர்களின் ஒவ்வொரு விரல் மூட்டுகளிலும் அடியுங்கள்!”
.... I will cast terror into the hearts of those who have disbelieved, so strike them over the necks, and smite over all their fingers and toes." This is the torment, so taste it, and surely for the disbelievers is the torment of the Fire
@viyasanசகோ.வியாசன்,
பத்ரு என்ற மதீனாவின் வெளிப்புறத்தில் உள்ள ஓர் இடத்டில் ஒரு போர் நடந்தது.
அதில்,
ஆயுதங்களுடன் மதீனா நோக்கி படை எடுத்து வரும் பலமிக்க மக்கா எதிரிகள்... ஆயிரம் பேர்..!
ஆரம்ப காலம் என்பதால்... முஸ்லீம்களோ வெறும் மூன்னூத்தி பதிமூனு பேர்தான். அது போன்ற ஆயுதமோ இல்லை.
எனவே,
'எப்படிடா இவர்களை வெல்லுவோம்' என்று மலைத்துப்போய் இறைவனிடம் உதவி வேண்டுவார்கள். வேறு வழி..?
இறைவனின் உதவி மலைக்கத்தக்க வகையில் மலக்குகள் (வானவர்கள்) மூலம் வரும்.
அராபிய வரலாற்றில் வரலாற்று ஆசிரியர்களுக்கு இன்றும் கூட இந்த வெற்றி ஓர் அதிசயம்தான்..!
பத்ர் என்றவுடனே 313 நிராயுதபாணிகள்... பலம் கொண்ட 1000 இராணுவத் துருப்புக்களை வெற்றிவாகை சூடிய வீர வரலாறு தான் முஸ்லிம்களுக்கு நினைவுக்கு வரும்.
அது எப்படி சாத்தியம்..?
வேறொரு போரில் சில வருடம் கழித்து பிற்காலத்தில் இறைவன் அந்த ஆரம்ப போரை முஸ்லிம்களுக்கும் நபிக்கும் நினைவூட்டிக்காட்டும் வசனங்கள் அவை..!
அந்த அத்தியாயத்தை ஆரம்பத்தில் இருந்து படியுங்கள் சகோ.வியாசன்.
ஸூரத்துல் அன்ஃபால்(போரில் கிடைத்த வெற்றிப்பொருள்கள்)
மதனீ, வசனங்கள்: 75
8:9. (முஸ்லிம்களே நினைவு கூறுங்கள்:) உங்களை இரட்சிக்குமாறு உங்கள் இறைவனின் உதவியை (நீங்கள்) நாடியபோது: “(அணி அணியாக உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்” என்று இறைவன் உங்களுக்கு பதிலளித்தான்.
அதன்படி...
அப்போரில்...
வானவர்கள் - மலக்குகள் முஸ்லிம்களின் உதவிக்கு வந்தனர்..!
அவர்களுக்கான இறைவனின் கட்டளைதான் நீங்கள் குறிப்பிட்ட வசனம்....
8:12. (நபியே!) உம் இறைவன் மலக்குகளை நோக்கி: “நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன்; ஆகவே, நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துங்கள்; நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன்; நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள்; அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்” என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும்.
ஆக, இது சாதாரண நாளில் முஸ்லிம்களுக்கு சொல்லப்பட்ட வசனம் இல்லை.
ஆக...........
ஒரு போர் உக்கிரமாக நடந்து கொண்டு இருக்கும்போது... அதில் இறைவனே முஸ்லீம்கள் சார்பாக போரிட அனுப்பிய தனது வானவர்களுக்கு... இட்ட கட்டளை வசனம்தான் அது..!
அது வேறு எப்படி இருக்கும்...?
போர்க்களத்தில்... 'அங்கே போயி அவங்களுக்கு தலை முடியை கோதி விடுங்க... கை கால் பிடிச்சி விடுங்க' என்றா இருக்கும்..?
போர்... சகோ.. போர்...!
ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்பாஆஆஆ....
பெட்டர் லக் நெக்ஸ் டைம் சகோ..!
//' போர்... சகோ.. போர்...!//
Let me get this straight. நம்பிக்கையுயற்றவர்களை அதாவது காபீர்களின் பிடரிகளில் தாக்குங்கள் அவர்களின் விரல் மூட்டுக்களில் அடியுங்கள் என்பதெல்லாம் இக்காத்துக்கு ஏற்றதல்ல அது மதீனாவின் வெளிப்புறத்தில் போர் நடந்து கொண்டிருக்கும் போது கூறப்பட்டது அதனால் அவ்வாறு குரானில் கூறப்பபட்டிருந்தாலும் கூட அது இக்காலத்துக்கு உதவாது, அதன்படி முஸ்லீம்கள் இக்காலத்தில் ஒழுகத் தேவையில்லை, எந்த சந்தர்ப்பத்தில், என்ன காரணத்துக்காக குரான் வாசகங்ககள் கூறப்பட்டன என்பதை உணர்ந்து இக்காலத்துக்கு ஒவ்வாத கருத்துக்களை ஒதுக்கலாம் அது தானே உங்களின் கருத்து?
@viyasan
அதே மாதிரி வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீது
அதே மாதிரி ஒரு போரில்
அதே மாதிரி முஸ்லிம்களின் இறைஞ்சுதலுக்கு
அதே மாதிரி இறைவன் மலக்குகள் அனுப்பி
அதே மாதிரி அந்த மலக்குகளுக்கு கட்டளையும் அனுப்பி
அதே மாதிரி அந்த மலக்குகள் முஸ்லிம்களின் எதிரிகளை அப்போரில்
அதே மாதிரி முஸ்லிம்களுக்கு ஆதரவாக
அதே மாதிரி துவம்சம் செய்ததால்
அதே மாதிரி முஸ்லீம்கள் வெற்றி ஈட்டினால்......
குர்ஆன் அக்காலத்திலும் பொருந்தும் தானே..?
//இக்காலத்துக்கு ஒவ்வாத கருத்துக்களை ஒதுக்கலாம்//---என்றால்...
அது உங்கள் கைகளில்தான் உள்ளது சகோ.வியாசன்..!
எப்படி...?
முஸ்லிம்களுடன் பாசமாக அன்பாக நேசமாக நட்புடன் உதவி செய்து தொல்லை தராது இன்முகத்துடன் பேசுங்கள், பழகுங்கள், கமெண்ட் போடுங்கள்..!
இப்படி..!
வெறும் ஆம் அல்லது இல்லை என்ற பதில் போதுமானது. வழக்கம் போல் உங்களின் மதபரப்புக் கூட்டங்க்களில் சுற்றி வளைத்து, புரியாத அரபு மொழியில் சுலோகங்கள் சொல்லி கேள்வி கேட்டவரைக் குழப்புவது போல் செய்யாமல், நேரடியான பதில் வரவேற்கத்தக்கது.
//இக்காலத்துக்கு ஒவ்வாத கருத்துக்களை ஒதுக்கலாம்//---என்றால்...
அது உங்கள் கைகளில்தான் உள்ளது சகோ.வியாசன்..! //
எனக்கு குரானில் நம்பிக்கையில்லை, அதை நான் ஒட்டுமொத்தமாக ஒதுக்குகிறேன்.
உங்களிடம் நான் கேட்ட கேள்வி. குரானில் உள்ள வாசகங்கள் கூறப்பட்ட காலகட்டம், சந்தர்ப்பம், எதற்காக அக்காலத்தில் கூறப்பட்டது என்பதையுணர்ந்து, இக்காலத்துக்கு ஒவ்வாதவற்றை முஸ்லீம்கள் ஒதுக்கலாமா என்பது தான் கேள்வி. ஒரு கேள்விக்குப் பதிலளளிப்பதற்கு இவ்வளவு விளக்கம் தேவைப்பபடும் முதல் ஆள் நீர் தான் ஐயா. :)
@viyasanசகோ.வியாசன்,
அது மலக்குகள் எனப்படும் வானவர்களுக்கு இறைவன் போட்ட போர்க்கால கட்டளை வாக்கியங்கள். போரில் ஈடுபட்ட மனிதர்களுக்கு அன்று..! ப்ளீஸ், புரிந்து கொள்ளுங்கள்.
அது நடக்குமா, ஒதுக்கலாமா என்றால்...?
அப்டி அதேபோல ஒரு காலகட்டம் வருமாயின், இறைவன் நாடினால் அது நடக்குமாயின்,
நாம் ஒரு மனிதனாக எப்படி அதை ஒதுக்க முடியும்..?
சும்மா கையகட்டிக்கிட்டு வேடிக்கை மட்டும் பார்த்துட்டு இருக்கலாம்..!
அப்போ உள்ளவங்க கிட்டே இல்லை.. இப்போ நம்ம கையில் வீடியோ கேமரா இருக்குமே... அதை எடுத்து சூட்டிங் எடுத்துட்டு அந்த அதிசயத்தை உலகம் முழுக்க லைவ் ரிலே போட்டும் காமிக்கலாம்..!
வழக்கம் போல் வெறும் சளாப்பல் தான், நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் தரவில்லை.நான் குறிப்பிட்ட வாசகத்தை அது மலக்குகளுக்குக் கூறியதாக ஒதுக்கி விட்டீர்கள். அந்த குரான் வாசகத்தின் படி நீங்கள் ஓழுகினால் , உங்களின் ஆருயிர் பார்ப்பன நண்பர்களின் பிடரியை முறித்து அவர்களின் கை நகங்களைப் பிடுங்க வேண்டும்,. அப்படிச் செய்வது மனதுக்குக் கஷ்டமாகத் தானிருக்கும். என்னுடைய கேள்வி என்னவென்றால், குரான் வாசகம் 8:12 போர்க்காலத்தில் கூறப்பட்டது இக்காலத்துக்கு ஒவ்வாதது என ஒதுக்கியது போன்று, குரானில் உள்ள வாசகங்கள் கூறப்பட்ட காலகட்டம், சந்தர்ப்பம், எதற்காக அக்காலத்தில் கூறப்பட்டது என்பதையுணர்ந்து, இக்காலத்துக்கு ஒவ்வாதவற்றை முஸ்லீம்கள் ஒதுக்கலாமா என்பது தான். தயவு செய்து சுற்றி வளைக்காமல் நேரடியாக பதிலளிக்கவும். ஓதிப்படிச்ச உங்க்களுக்கு இது மிகவும் இலகுவான கேள்வி, எதற்காக இப்படி தலையைச் சுற்றி மூக்கைத் தொடுகிறீர்கள்?
@viyasan//ஆருயிர் பார்ப்பன நண்பர்க//ளுக்கான வசனம் இது அல்ல..! அவர்களோடு எப்படி அன்னியோன்னியமாக இணங்கி வாழ வேண்டும் என்று பதிவிலும் மேலும் நிறையவும் உள்ளது.
எனது //ஆருயிர் பார்ப்பன நண்பர்க//ளாயின் என்னோடு எப்படி போருக்கு வருவார்கள்..?
லாஜீக் இடிக்கிதே தொரை..!
//போர்க்காலத்தில் கூறப்பட்டது இக்காலத்துக்கு ஒவ்வாதது என ஒதுக்கியது//---இக்கிகிகிகி.... யாருங்க ஒதுக்கியது..? போருக்கு வரும் எதிரிகளோடு போரிடவேண்டும். அப்போது அதற்குரிய வசனங்கள் உயிர்பெறும்..!
பாகிஸ்தான் இந்தியாவுடன் போருக்கு வந்தால்... பார்டர் பக்கம் போயி... எல்லா இந்திய வீரர்களும் துப்பாக்கிய கீழே போட்டுட்டு பூப்பரிங்க... பாகிஸ்தானியரை சுடாதீங்க... காத்து அடிக்குது பட்டம் விடுங்கன்னு சொல்வீர்களா..?
இனிமேல் முஸ்லிம்களுடன் எவரும் போர் புரிய மாட்டோம் என்று ஏகமனதாக ஒட்டுமொத்த உலகமும் உறுதி மொழி தந்து அதன்படி உலகம் அழியும் நாள் வரை பின்பற்றி நடந்தால் மட்டுமே...
போருக்கான குர்ஆன் நெறிமுறை வசனங்கள் செயலற்று போகும்..!
முஸ்லீம்கள் விரும்புவதும் அதுதான்..!
"பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் முதலில் பார்ப்பானை அடி" என்று பெரியார் கூறியதற்கும் இந்த ஹாடித்துக்கும் பெரிய வேறுபாடிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Bukhari (52:177) - Allah's Apostle said, "The Hour will not be established until you fight with the Jews, and the stone behind which a Jew will be hiding will say. "O Muslim! There is a Jew hiding behind me, so kill him."
@viyasanஐயா வியாசன் அவர்களே...
முன்னர் குர்ஆனில் கேள்வி கேட்ட உங்களுக்கு அது என்ன கேள்வி என்றே தெரியாமல்... மண்டபத்தில் யாரோ எழுதி தந்ததை தூக்கி வந்து வாங்கி கட்டிக்கொண்டீர்கள்..!
இப்போது ஒரு ஹதீஸை எடுத்து வந்து அதைப்பற்றி நீங்களே ஒரு முடிவும் சொல்லுகிறீர்கள்..!
முதலில் ஆங்கிலத்தில் உள்ள அதற்கு சரியான பொருள் கூறுங்கள்..! அப்புறம், அந்த ஹதீஸ் எந்த சூழலில் நபி அவர்கள் யாரிடம் இதை சொன்னார்கள், அதை யார் புகாரியிடம் சொன்னது என்றும் சொல்லுங்கள்.
சும்மா இப்படி வெட்டியாக ஜல்லி அடித்தால் எல்லாம் ஒண்ணும் வேலைக்காக்காது வாத்தியாரே..!
இன்னும் நான் கேட்ட கேள்விக்குப் பதில் தரவில்லை. சரியாக வாகாபிகளின் பிரச்சாரக் கூட்டத்தில் இருப்பது போன்ற உணர்வு தான் ஏற்படுகிறது. முடிந்தால் என்னுடைய இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கவும்.
-குரானில் உள்ள வாசகங்கள் கூறப்பட்ட காலகட்டம், சந்தர்ப்பம், எதற்காக அக்காலத்தில் கூறப்பட்டது என்பதையுணர்ந்து, இக்காலத்துக்கு ஒவ்வாதவற்றை முஸ்லீம்கள் ஒதுக்கலாமா என்பது தான். தயவு செய்து சுற்றி வளைக்காமல் நேரடியாக பதிலளிக்கவும். --
போர்க்கால கட்டத்தில் தான் காபீர்களின் பிடரிகளை முறிக்கவும் என்று குரானில் சொல்லப்பட்டிருந்தால், பெரியார் பார்ப்பனர்களை அடி என எந்தக் காலகட்டத்தில் கூறினார் என்பதை சிந்தித்துப் பார்த்திருந்தால் இந்தப் பதிவையே போட்டிருக்க மாட்டிருக்கிறீர்கள் அல்லவா. அக்காலகட்டத்தில் பெரியாரும் பார்ப்பனர்களுடன் எழுத்து, கொள்கை, சாதி எதிர்ப்புப் போரில் தான் ஈடுபட்டிருந்தார். அந்த லாஜிக் உங்க்களுக்குப் புரிகிறதா?
@viyasan//பெரியார் பார்ப்பனர்களை அடி என எந்தக் காலகட்டத்தில் கூறினார் என்பதை சிந்தித்துப் பார்த்திருந்தால் இந்தப் பதிவையே போட்டிருக்க மாட்டிருக்கிறீர்கள் அல்லவா. அக்காலகட்டத்தில் பெரியாரும் பார்ப்பனர்களுடன் எழுத்து, கொள்கை, சாதி எதிர்ப்புப் போரில் தான் ஈடுபட்டிருந்தார். அந்த லாஜிக் உங்க்களுக்குப் புரிகிறதா? //
அப்படி என்றால்...
அப்படி என்றால்...
இக்காலத்தில் பார்ப்பனியம் இல்லை.
மனுதர்மம் இல்லை.
வர்ணாசிரமம் இல்லை.
சாதிகள் இல்லை.
சம நிலை சமூகம் எங்கும் மலர்ந்து விட்டது.
எனவே, பெரியாரிய கொள்கைகள் தேவை இல்லை.
அட, இதுதானா நீங்கள் சொல்வது..!
ஆம், என்றால்...
இது உண்மை என்றால்...
இப்படித்தான் இன்றைய உலகம் உள்ளது என்றால்...
அப்ப்டித்தான்
காஞ்சி, சு.சுவாமி, சோ, ராம கோபாலன் உட்பட எல்லா பார்ப்பனர்களும் தங்கள் பார்ப்பனியத்தை துறந்து தலித்தொடு தலித் ஆகி விட்டனர் என்றால்....
இப்பதிவை நான் உடனே டெலிட் பண்ண தயார்..! இது தேவை இல்லை..!
அதற்கு முன்னர்...
இப்படி ஒரு 'புரட்சிக்கருத்தை' கூறும் நீங்கள் எதற்கு ஒரு பினாமி ப்ரோபிளில் வருகிறீர்கள் என்று சொல்லவும்..!
//முன்னர் குர்ஆனில் கேள்வி கேட்ட உங்களுக்கு அது என்ன கேள்வி என்றே தெரியாமல்... மண்டபத்தில் யாரோ எழுதி தந்ததை தூக்கி வந்து வாங்கி கட்டிக்கொண்டீர்கள்..!//
கடைசியில் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் மழுப்புவதற்கு உங்களுக்கும் திருவிளையாடல் புராணம் தான் கைகொடுத்திருக்கிறது என்பதைப் பார்ப்பதில் எனக்கு மகிச்சியே.:)
//இப்போது ஒரு ஹதீஸை எடுத்து வந்து அதைப்பற்றி நீங்களே ஒரு முடிவும் சொல்லுகிறீர்கள்..!//
நான் முடிவைச் சொல்லவில்லை, better luck next time என்று எனக்கு முதலில் ஆங்க்கிலத்தில் பதில் சொன்னவரக்ள் நீங்க்கள் தான் அதனால் தான் ஆங்க்கிலத்தில் அப்படியே பதிவு செய்தேன். அந்த ஹாடித்து க்கும் பெரியார் சொன்னதற்கும் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா? என்னுடைய முதல் கேள்விக்கும் நீங்கள் இன்னும் பதிலளிக்கவில்லை.
@viyasan-குரானில் உள்ள வாசகங்கள் கூறப்பட்ட காலகட்டம், சந்தர்ப்பம், எதற்காக அக்காலத்தில் கூறப்பட்டது என்பதையுணர்ந்து, இக்காலத்துக்கு ஒவ்வாதவற்றை முஸ்லீம்கள் ஒதுக்கலாமா என்பது தான். தயவு செய்து சுற்றி வளைக்காமல் நேரடியாக பதிலளிக்கவும். --
பதில் கூறிவிட்டேன்.
அது முஸ்லீம்களை எதிர்க்கும் உங்கள் கைகளில் மட்டுமே உள்ளது.
@viyasanஉங்ககளுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதை அறிந்து கொண்டேன். அது ஒன்றும் கேவலமானது அல்ல சகோ. வருத்தம் வேண்டாம்.
@viyasan//நான் முடிவைச் சொல்லவில்லை//
//பெரியார் கூறியதற்கும் இந்த ஹாடித்துக்கும் பெரிய வேறுபாடிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.//----------இது உங்கள் முடிவு.
//நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?//-------உங்கள் ஆங்கில அறிவு பற்றி வருத்தம் கொள்கிறேன். நீங்கள் இன்னும் கொஞ்சம் முயற்சி செய்யணும்.
//பதில் கூறிவிட்டேன்.///
Nice Try. வெறும் ஆம் அல்லது இல்லை என்ற பதில் போதுமானது. வழக்கம் போல் உங்களின் மதாபரப்புக் கூட்டங்க்களில் சுற்றி வளைத்து, புரியாத அரபு மொழியில் சுலோகங்க்கள் சொல்லி கேள்வி கேட்டவரைக் குழப்புவது போல் செய்யாமல், நேரடியான பதில் வரவேற்கத்தக்கது. :)
//அது முஸ்லீம்களை எதிர்க்கும் உங்கள் கைகளில் மட்டுமே உள்ளது.//
குரானுக்கும் என்னைப் போன்ற முஸ்லீம் அல்லாதவர்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது அப்படியிருக்க, குரானிலுள்ள வாசகங்கள் இக்காலத்துக்கு ஏற்றதா இல்லையா என்பதை நாங்கள் எப்படைத் தீர்மானிக்க முடியும். உங்க்களின் மழுப்பலுக்கு எல்லையே கிடையாதா? :)
அப்படியென்றால்
இக்காலத்தில் காபீர்கள் இல்லை
இணைவைப்பவர்கள் இல்லை'
முஸ்லீம்கள் போரிலீடுபடவில்லை
முஸ்லீம்களுக்கு எதிரிகள் இல்லை
அதனால் அவர்கள் அந்த குரான்
வாசகம் 8-12 ஐ தேவையாற்றவாசகம் என ஒதுக்கலாம்
இது தானா நீங்கள் சொல்வது? :))
@viyasanநீங்கள் கேட்கும் கேள்வியில்...
முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவருக்கும் தான் போர் நடக்கிறது.
அப்புறம் சம்பந்தம் இல்லை என்று நழுவினால் என்ன அர்த்தம்..?
எதற்கு இந்த மழுப்பல்..?
நான் நேரடியாக கேட்கிறேன்..!
முஸ்லீம்கள் மார்க்க விஷயத்தில் பின்பற்ற விடாது தடுத்து அவர்களை வீடுகளில் இருந்து நாட்டில் இருந்து வெளியேற்றி அவர்களோடு நீங்கள் போர் தொடுப்பீர்களா..?
ஆம் எனில்...
உங்கள் கேள்விக்கு பதில் "இல்லை"
அப்படி எல்லாம் இல்லை என்றால்...
உங்கள் அளவில் பதில் "ஆம்"
அப்புறம் நான் கேட்ட கேள்விகளுக்கு ஒன்றுக்கு கூட நீங்கள் பதில் சொல்லாமல் நழுவிடாதீங்க சார்..!
@viyasan//இது தானா நீங்கள் சொல்வது? :))//
அப்பாடா... இப்போதான் பாயிண்டை புடிச்சுட்டீங்க. கரீக்டா சொல்லிட்டீங்க. அதுதாங்க நான் அம்புட்டு நேரமா சொல்லிட்டு இருக்கேன்..! :-)))
//உங்ககளுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதை அறிந்து கொண்டேன். அது ஒன்றும் கேவலமானது அல்ல சகோ. வருத்தம் வேண்டாம்.//
பரவாயில்லை, எனக்கு ஆங்கிலம் தெரியாது, நீங்க்கள் சொன்னால் சரி. . தயவு செய்து தமிழில் விளக்குங்கள். எனக்கு ஆங்கிலம் தெரியாததற்கும், தமிழில் நீங்கள் அதை விளக்குவதற்கும் தொடர்பிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
///அப்பாடா... இப்போதான் பாயிண்டை புடிச்சுட்டீங்க. கரீக்டா சொல்லிட்டீங்க. அதுதாங்க நான் அம்புட்டு நேரமா சொல்லிட்டு இருக்கேன்..! :-))) ///
கேட்ட கேள்விக்குப் பதிலளிக்க நழுவ விரும்புகிறவர்களின் கடைசி ஆயுத்ம் நகைச்சுவை என்பது எல்லோருக்கும் தெரியும். நகைச்சுவையுணர்வு நல்லது ஆனால் பதில் சொல்லாமல் நழுவுவதற்காக நீங்கள் உங்களைக் கோமாளியாக்கிக் கொள்வதைப் பார்க்க எனக்கு வருத்தமாக இருக்கிறது. ஏதோ ஓதிப்படிச்ச மனுஷன், இவரிடாம் போய் இல்லாத்தைப் பற்றி அறிந்து கொள்லாளம் என்று வந்ததை நினைக்க சிரிப்பு தான் வருகிறது. இன்னும் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. :))LOL
@viyasan//Bukhari (52:177)//
இப்படி நம்பர் வராது.
ஒன்று முதல் நாலு டிஜிட்டில் வரும்.
வலது பக்கம் கொஞ்சம் டாப்பில் பாருங்க... ஒரு புகாரி லிங்க் இருக்கும். அங்கே போயி நீங்க தந்த நம்பர் இருக்கான்னு பாருங்களேன்.
52:177 இப்படி ஒரு நம்பர் இருக்கவே இருக்காது.
புகாரியில் ஒவ்வொரு ஹதீசுக்கும் ஒரு நம்பர் உண்டு. ஒன் டு 7510.
இது ஏதோ குர்ஆன் வசன எண் போல இருக்குதுன்னு அங்கே போனா... 52 : 49 உடன் அந்த அத்தியாயம் ஓவர்..!
இப்போ நீங்க தான் இது எங்கே இருக்குனு எனக்கு கண்டு பிட்ச்சி சொல்லணும்..!
திருக்குறளில் 1812 வது குறள் ண்ணா சிரிப்பிங்களா மாட்டீங்களா..?
ஆஷிக் காக்கா என்னுடைய இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் மழுப்புகிறார். வேறு யாராவது தயவு செய்து பதிலளியுங்கள்.
என்னுடைய கேள்வி என்னவென்றால், குரான் வாசகம் 8:12 போர்க்காலத்தில் கூறப்பட்டது இக்காலத்துக்கு ஒவ்வாதது என ஒதுக்கியது போன்று, குரானில் உள்ள வாசகங்கள் கூறப்பட்ட காலகட்டம், சந்தர்ப்பம், எதற்காக அக்காலத்தில் கூறப்பட்டது என்பதையுணர்ந்து, இக்காலத்துக்கு ஒவ்வாதவற்றை முஸ்லீம்கள் ஒதுக்கலாமா என்பது தான். தயவு செய்து சுற்றி வளைக்காமல் நேரடியாக பதிலளிக்கவும்.
@viyasanஅடடா...! பொய்யை பாரேன்..!
எப்போ... 'ஆம்' ,
எப்போ 'இல்லை'ன்னு
அவ்ளோ தெளிவா தமிழில் பதில் சொல்லியும் அதை புரிஞ்சிக்காத ஒரு ஞானசூனியமா..!
அட ஆண்டாவா..!
என்னை காப்பாத்து..!
ஒரு கேள்விக்கும் பதில் சொல்லாத வியாசருண்ணெ, உங்க மீசையில் மண்ணு ஒட்டலைண்ணே... ஒட்டவே இல்லைண்ணே..!
இதுக்கு மேலே உங்க கிட்டே பேசினா என்னை யாரும் தப்பா நினைக்க போறாங்க..!
மத்தவங்களை கூபிட்டுட்டீங்க இல்லே. நல்லது. வரட்டும்.
அவங்க வந்து உங்களுக்கு டின்னு கட்டட்டும்..!
[52:177 இப்படி ஒரு நம்பர் இருக்கவே இருக்காது.]
உங்களுக்கு புகாரி என்றால் என்னவென்றே தெரியாது போலிருக்கிறது, அல்லது ஆங்கிலத்தில் அறிவு மட்டோ? கீழேயுள்ளா Link ஐ பார்க்கவும். அங்கிருந்து தான் நான் அந்த ஹாடித்தை எடுத்தேன். பெரிய இஸ்லாமிய உலமா என்று நினைத்தேன். அடச்சீ இவ்வளவு தானா?:))
http://www.shariahprogram.ca/Hadith/Sahih-Bukhari/052.sbt.html
@viyasan லிங்க் தந்தமைக்கு நன்றி.
இதுவரை இந்த தளம் சென்றது இல்லை. அரபி மூலத்தில் உள்ளதுபோலவே தமிழில் மொழி பெயர்த்து எண்ணிட்டுள்ளனர். அந்த ஆங்கில தளத்தில் நம்பரிங்க் வித்தியாசமா இருக்கு. இருந்தும் எனது அனுபவத்தில்... பத்து நிமிஷத்தில் உங்களுக்கு சிரமம் இன்றி தேடி எடுத்துட்டேன்..!
இதோ... தமிழாக்கம்.
http://islamkural.com/home/?p=854
---------------------------------
புஹாரி
பாகம் 3,
அத்தியாயம் 56,
எண் 2926
நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். நீங்கள் யூதர்களுடன் போரிடாதவரை இறுதி நாள் வராது. எந்த அளவிற்கென்றால கல்லின் பின்னால் யூதன் ஒருவன் (ஒளிந்து கொண்டு) இருப்பான். அந்தக் கல், ‘முஸ்லிமே! இதோ, என் பின்னே ஒரு யூதன் (ஒளிந்து கொண்டு) இருக்கிறான். அவனை நீ கொன்று விடு” என்று கூறும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
------------------------------
இப்போ நீங்கதான் உங்க முடிவை பத்தி மறுபடி சரிக்கண்டு சொல்லணும்..! ரெண்டும் ஒண்ணான்னு..!
:-))
///இப்போ நீங்கதான் உங்க முடிவை பத்தி மறுபடி சரிக்கண்டு சொல்லணும்..! ரெண்டும் ஒண்ணான்னு..!//
தமிழ் வாகாபிஸ்டுகளால் மொழிபெயர்க்கப்பட்டு இஸ்லாம் குரல்.கொம் இல வெளியிடப்பட்டதை விட ஆங்கிலப் புலமை மிக்க அரபு உலமாக்களால் மொழிபெயர்க்கப்பட்ட புகாரியை நான் மட்டும் அல்ல எவருமே நம்புவாராக்ள் என்று நான் சொல்லித் தான் ஆஷிக் காக்காவுக்குக்குத் தெரிய வேண்டியதில்லை. அவர் தான் ஆங்க்கிலத்தைக் கரைத்துக் குடித்தவாராச்சே. கீழேயுள்ள Link இல் 52-177 ஐயும் தமிழிலுள்ளதையும் ஒப்பிட்டுப் பார்க்கவும். என்னக்கென்னமோ தமிழில் வாகபிஸ்டுகள் கொஞ்சம் அதிகமாகவே சேர்த்து மூடி மழுப்பியிருக்கிறார்கள் போல் தெரிகிறது. :)
http://www.sahih-bukhari.com/Pages/Bukhari_4_52.php
இப்படி ஒரு இஸ்லாமிய அன்பர் சொல்வதே வியப்பாக இருக்கிறது. உங்கள் கூற்று மிகவும் உண்மை. தமிழ் தாத்தா என்று அழைக்கப்படுபவரே ஒரு பிராமண வகுப்பை சேர்ந்தவர்தான். நீங்கள் சொன்னதற்கு உங்கள் சமூகதிலிருந்தே காட்டமான எதிர்ப்புகள் வரலாம். இருப்பினும் நடுநிலையோடு எழுதி இருப்பதற்கு என் ஆதரவு.
முஹம்மது ஆஷிக் ,உங்கள் வாதம் அர்த்தம் அற்றது .பெரியார் ஒரு போதும் பயங்கரவாதம் பக்கம் நின்றதில்லை .இன்று இஸ்லாமிய தீவிரவாதம் என்ற நிலை பரப்படுவதற்கு சூழ்நிலை உருவாகுவதற்கு அவர் போன்ற சத்தியவான்கள் இல்லாமையே காரணம் .மற்றமாநிலங்களை விட பிற்படுத்தப்பட்ட ,தாழ்த்தப்பட்ட மக்கள் தமிழகத்தில் முன்னேறுவதற்கு அவர் ஒரு காரணம்..தமிழகத்தில் மதகலவரம் நடை பெறாமல் இந்து முஸ்லிம்கள் சகோதரத்துடன் உலவியது அவரது காலத்தில் ..எம்ஜியார் ஆட்சிக்கு வந்த பிறகே இந்து முன்னணி ராமகோபாலன் தனது ஆட்டத்தை கோயமுத்தூரில் 1979 இல் துவங்கினார் .பெரியார் இல்லாத காரணத்தினாலே எம்ஜியாரை கண்டிக்க ஆள் இல்லாமற் போயிற்று
***"பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் முதலில் பார்ப்பானை அடி" என்ற ஓர் உலகமகா பயங்கரவாத விஷக்கருத்தை ஓர் ஒட்டுமொத்த சமூகத்தார் மீது சொன்னவர் ஈ.வே.ரா.பெரியார் மட்டுமே..! இந்த வாதம் எப்படி பயங்கரமாகாது..?***
பெரியார் தொண்டர்கள் யாரும் பயங்கரவாதம் செய்ததாக எனக்குத் தெரிய யாரும் இல்லை. உங்களுக்கு தெரிந்து அப்படி யாரும் தீவிரவாதம் செய்து, குண்டு வைத்து ஏழை பார்ப்பனர்களை கொன்னதாக ஏதாவது "டேட்டா" இருந்தால் தரவும்.
பயங்கரவாதம், தீவிரவாதம் செய்வதெல்லாம் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தான். பயங்கரவாதம் செய்து குண்டு வைக்கிறவன், அப்பாவிகளை கொல்றவன் எல்லாம் கடவுள் பக்தன்கள் தான் ஒரு லிஸ்டே தரமுடியும்!
அதனால பாம்பை விட்டுப்புட்டு பார்ப்பானை அடினு சொன்னவன் எல்லாம் பயங்கரவாதியும் இல்லை அப்படி சொல்லாதவன் எல்லாம் பார்ப்பானை வணங்குறவனும் இல்லை, யோக்கியனுளும் இல்லை!
@viyasan
//என்னுடைய கேள்வி என்னவென்றால், குரான் வாசகம் 8:12 போர்க்காலத்தில் கூறப்பட்டது இக்காலத்துக்கு ஒவ்வாதது என ஒதுக்கியது போன்று, குரானில் உள்ள வாசகங்கள் கூறப்பட்ட காலகட்டம், சந்தர்ப்பம், எதற்காக அக்காலத்தில் கூறப்பட்டது என்பதையுணர்ந்து, இக்காலத்துக்கு ஒவ்வாதவற்றை முஸ்லீம்கள் ஒதுக்கலாமா என்பது தான். தயவு செய்து சுற்றி வளைக்காமல் நேரடியாக பதிலளிக்கவும்.//
இது தொடர்பாக நான் சகோ.புரட்சிமணி தளத்தில் கொடுத்த பதில் இதற்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.
--
குர்ஆன் வெறும் அறிவுரைகள் மட்டும் கொண்ட புத்தகம் அன்று, அதில் வரலாறுகள், அறிவியல் உண்மைகள், மனிதர்களுக்கு வழிகாட்டும் வாழ்வியல் நெறிமுறைகள், சட்ட திட்டங்கள், இஸ்லாமியர்கள் செய்ய வேண்டிய கடமைகள் என அனைத்தும் உள்ளது. உங்களுக்கு வரலாறு வேண்டாம் என்றால், பள்ளிக்கூடத்தில் வரலாறு பாடத்தை நீக்கிவிட சொல்வீர்களா?
வரலாறை வரலாறாக பாருங்கள், அறிவியல் உண்மையை ஆய்வுக்கு உட்படுத்துங்கள், அறிவுரையை அறிவுரையாக பாருங்கள், அதை விடுத்து வரலாறை அறிவுரையாகவும், அறிவியல் உண்மையை வரலாறாகவும், அறிவுரையை அறிவியல் ஆய்வுக்கும் உட்படுத்தி உங்கள் "அறிவை(!?)" உலகிற்கு பறைசாட்டாதீர்கள்.
--
மற்றபடி, சகோ.ஆஷிக், உங்களின் இந்த பதிவின் சாரம்சத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. அது திராவிட பயங்கரவாதம் அல்ல, பன்நெடுங்காலமாக ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் குரலாகவே நான் பார்க்கிறேன். பார்பனீயத்தை அந்த அளவிற்கு வீரியத்துடன் எதிர்க்க வேண்டிய அவசியம் நிலவி வந்த காலகட்டம் அது. ஒடுக்கப்பட்ட சமுதாய பெண்கள் தமது மார்பை கூட மறைக்க அனுமதிக்கப்படாத கால கட்டம் அது. தோள் சீலை போராட்டம் தெரியும் தானே, இன்னும் பல உதாரணங்களை கூறமுடியும்.
ஒரு இனத்தின் விடுதலைக்கான போராட்டத்தை தயவுசெய்து தீவிரவாதம் என்று கொச்சை படுத்தாதீர்கள், மேற்கத்திய ஊடகங்கள் பாலஸ்தீன் விவகாரத்தில் நடந்துகொள்வது போன்று.
பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பார்ப்பானை அடி என்று பெரியார் எங்கும் எப்போதும் சொன்னதில்லை. அது ஒரு மிகைப்படுத்தப்பட்ட சொல்லாடல். இதுகுறித்து எந்த ஆவணப் பதிவும் இல்லை.
மேலும் PJ என்பவர் தமிழக இஸ்லாமியர்கள் மேல் பிற தமிழர்கள் வெறுப்படையச் செய்யும் வேலையை செய்துகொண்டிருக்கிறார். மனுஷ்யபுத்திரன், ஸ்ருதிஹாசன், திராவிடம் என அவர் அநாகரீக அபத்தங்களை விதைத்துக்கொண்டே இருக்கிறார். பலகாலமாக இணக்கமாக இருக்கும் இஸ்லாமியர்களை தமிழ் வெகுஜன சமூகத்தில் இருந்து பிரித்தெடுக்கும் வேலையாகவே இதை நான் பார்க்கிறேன். இஸ்லாமிய சகோதரர்கள் கவனமாய் இருங்கள் கவனமாய் இருங்கள் சதி வலையில் விழாதீர்கள். நன்றி
@viyasan//தமிழ் வாகாபிஸ்டுகளால் மொழிபெயர்க்கப்பட்டு//-----ஹா...ஹா....ஹா.... உங்கள் அறியாமையை இதிலும் வெளிப்படுத்திவிட்டீர்கள்.
கியாமத் சமயம் நடக்கப்போகும் போர் பற்றிய சூழலில் உள்ள ஹதீசின் கருத்தை... போரற்ற நிகழ்கால சூழலில் அமைந்த பெரியாரின் வரிகளை எப்படி மெய்யப்படுத்த போகிறீர்களோ..! அந்தோ பரிதாபம்..!
@காரிகன் மிகச்சரியாக நான் சொல்லவரும் கருத்தை உள்வாங்கி புரிந்தமைக்கும் தங்கள் ஆதரவுக்கும் மிகவும் நன்றி சகோ.காரிகன்.
@wahithசகோ.தாங்கள் சொல்வதை எல்லாம் நான் மறுக்கவில்லையே..? ஆமாம் என்று தலையை பலமாக ஆடுகிறேன்.
நான் சொன்னதெல்லாம் இதுதான்..!
@வருண் நல்லவேளை சகோ.வருண், அதாவது பெரியாரின் வரிகளை அப்படியே பின்பற்றாமல் இருந்து... யாரும் அந்த வரிகளின்படி அப்பாவி பார்ப்பனர்கள் மீது கை வைக்கவில்லை என்றால்... மெய்யாலுமே பெரியார் ஆதரவார்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்தான்..! மிக்க மகிழ்ச்சி சகோ.வருண்.
//சொன்னவன் எல்லாம் பயங்கரவாதியும் இல்லை//---நான் இப்படியா சொன்னேன் சகோ.வருண். இது கருத்து திரிபு இல்லையா..?
நான் சொன்னதெல்லாம் இதுதான்..!
------------------------------
'குறிப்பிட்ட ஒரு சாதியில் பிறந்தார்' என்பதற்காக ஒருவர் பாம்பை விட முன்னுரிமை தரப்பட்டு அடிக்கப்பட வேண்டியவராகி விடுவாரா..? குறைந்த பட்ச மனிதாபிமான அடிப்படையில் கூட அமையாத பெரியாரின் இக்கருத்துதான் 'பயங்கரவாத கருத்து' என்கிறேன்..! மற்றபடி, நான் இப்படி சொல்வதொன்றும் பார்ப்பனியத்தை சப்போர்ட் பண்ணுவது ஆகிவிடாது. சொன்னவரை பயங்கரவாதியாகவும் ஆக்கிவிடாது. இதை ஏனோ, நீங்கள் புரிந்து கொள்ளவில்லை..!!! ஆச்சரியம்தான்..!!! :-))
@Saha, Chennai//அது திராவிட பயங்கரவாதம் அல்ல, பன்நெடுங்காலமாக ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் குரலாகவே நான் பார்க்கிறேன்.//
அப்படியா சகோ.சஹா..???
நல்லது..!!!
இன்று உலக அளவில் அமெரிக்க வெளியுறவு கொள்கை நம்மை பன்நெடுங்காலமாக ஒடுக்கப்பட்ட சமூகமாக வைத்து இருக்கிறது அல்லவா..?
அமெரிக்கக்காவை வீரியமாக எதிர்க்க வேண்டிய அவசியம் இப்போது இருக்கல்லவா..?
முஸ்லிம் என்றாலே உலக அளவில் எவ்வளவு பெரிய ஒடுக்குமுறை..?
முஸ்லிம் பெண் முழுக்க மூடிய ஆடை அணிய இன்று மேலை நாடுகளில் சுதந்திரம் உண்டா..!
எனவே...
இனி
நாமும்
சொல்வோமா...
இப்படி....................
"அமெரிக்கனையும்
அனகோண்டாவையும்
கண்டால்
முதலில்
அமெரிக்கனை
சுட்டுத்தள்ளு...!" ன்னு...???
இதுதான் நாம் இஸ்லாத்தில் கற்ற மனிதாபிமானமா...?
இதைத்தானே...
9/11 பயங்கரவாதம் என்று
உலகமே எதிர்த்தது..!
உலகமே கண்டித்தது..!
உலகமே வெறுத்தது..!
நீங்களும் இப்பதிவை எதிர்ப்பதுதான் வேதனை அளிக்கிறது..!
@டான் அசோக் //இதுகுறித்து எந்த ஆவணப் பதிவும் இல்லை.//---புதிய மறுப்பு, சகோ.டான் அசோக்..!
'off the record' ஆகத்தான் இதை சொல்ல முடியும் என்று நினைத்தேன்..! ஆனால், இதை பெரியார் சொன்னதாக பல திராவிட இயக்கத்தினர் சொல்லவும் எழுதவும் கேட்டிருகிறேன்; படித்து இருக்கிறேன். பலரும் அறிந்த மறுக்காத ஒன்று..!
மேலும், கூகுளில் தேடியதில் புத்தக ஆதாரம் இதோ..!
‘‘பாம்பையும், பார்ப்பானையும் கண்டால், பாம்பைவிட்டுவிடு பார்ப்பானை அடி என்றார் பெரியார்’’
(நூல்:- இந்துத்துவாவின் படையெடுப்பு)
ஆதார சுட்டி :
http://www.facebook.com/notes/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-11-13/10150235517427968
மேலே... சகோ.வருணுக்கு சொன்ன பதிலில் உள்ளவைதான் நான் சொல்ல வந்தது..!
சகோ.பீஜே பற்றி எதற்கு இங்கே தொடர்பின்றி எழுதுகிறீர்கள் என்று புரியவில்லை. இதற்கும் பதில் அளித்துள்ளேன். 21 வது பின்னூட்டம் காணுங்கள்.
பதிவின் நோக்கம் பற்றிய தவறான புரிதலில் உள்ளீர்கள். ஸாரி..!
ungal paarvai mutrilum marukka mudiyaatha nadunilai kondathaakavey therikirathu.
epporul yaar yaarvaai ketpinum
apporulil meipporul kaanbatharivu
@AZAD R.PURAMநாம் மெய்ப்பொருள் காண்கிறோம் சகோ. மற்றவரையும் இறைநாடினால் காண வைப்போம்..! நன்றி சகோ.ஆஸாத்.
தமிழ் நேசன் MohamedAshik Bin HabibMohamed
...நன்பரே பெரியாருக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை....ஆனால் அவர் சொன்ன கருத்தில் எனக்கு முழு உடன்பாடு என்கிறேன்.
இன்றைய ஊடகங்கலும் அரசியலும் பார்ப்பனியர்களின் கையில் தான் உள்ளன..இன்று எத்தனை அப்பாவி முச்லிம்கள் தனது வாழ்க்கயை சிறையில் கழித்துக்கொண்டிருக்கிறார்கள்..எத்தனை எத்தனை குண்டுவெடிப்ப்குக்கள்..இப்படி ப்ல்லாயிறம் உயிர்கள் பலியாவதர்கு பின்னனி என்ன ? அந்த பார்ப்பனர்களின் பிரித்தாலும் சூழ்ச்சி தான் ...ஒரு நாட்டையும் அன்னாட்டின் மக்களயும் காப்பதை கருத்தில் கொண்டுதான் ,பெரியார் அந்த கருத்தை சொல்லியிருக்கிறார் என்பது என் கருத்து.
40 minutes ago · Like
MohamedAshik Bin HabibMohamed
// அவர் சொன்ன கருத்தில் எனக்கு முழு உடன்பாடு//-----அப்படியா சகோ..???
நல்லது..!!!
இன்றைய உலக ஊடகங்கலும் அரசியலும் அமெரிக்கர்களின் கையில் தான் உள்ளன..இன்று எத்தனை அப்பாவி முச்லிம்கள் தனது வாழ்க்கயை அமெரிக்க ஆதரவு சிறையில் கழித்துக்கொண்டிருக்கிறார்கள்..அமெரிக்காவால் எத்தனை எத்தனை குண்டுவெடிப்ப்குக்கள்..இப்படி ப்ல்லாயிறம் உயிர்கள் பலியாவதர்கு பின்னனி என்ன ? அந்த அமெரிக்கர்ர்களின் சூழ்ச்சி தான் ...
எனவே...இஸ்லாமிய நாட்டுகளையும் அன்னாட்டின் மக்களயும் காப்பதை கருத்தில் கொண்டு இனி நாமும் சொல்வோமா... இப்படி....................???
"அமெரிக்கனையும்
அனகோண்டாவையும்
கண்டால்
முதலில்
அமெரிக்கனை
சுட்டுத்தள்ளு...!"
---ன்னு...???
அதன்படி, உலக வர்த்தக கட்டிடத்தில் நுழைந்து உள்ளே உள்ள எல்லா அமெரிக்கர்களையும் சுடுவோமா..?
இந்த கருத்தில் உங்களுக்கு உடன்பாடா..?
about a minute ago · Like
சமூக அக்கறை கொண்டு தாங்கள் பதிய வேண்டிய செய்திகள் எவ்வளவோ இருக்க பாப்பானைப் பற்றியும் பாம்பையும் பற்றியும் பதிய வேண்டியதன் அவசிம் என்ன? லைக் வாங்குவதற்கா?! யாரை திருப்திப்படுத்த இந்த கொடுஞ்செயல்..
"பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பார்ப்பானை அடி" என்று பெரியார் சொன்னதில்லை. Pls dont spread wrong things
ஸலாம் சகோ.
கடவுள் கொள்கையில் பெரியாருரோடு நான் உடன்படவில்லை என்றாலும் தமிழகத்தில் தாடிக்கார் செய்தது என்னை பொறுத்தவரை பெரிய புரட்சியே.
அந்த காலம்தொட்டு பார்ப்பான்களின் மூலம் தீண்டாமையால் தமிழகத்தில் தலைமுறையாக தலைமுறையாக தலித்துக்கள் பாதிக்கப்பட்டர்கள். பெரியார் இது போன்று பேசி தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒரு தைகிரியம் வாரவேண்டும் என்பதற்காக பேசினார். நீங்கள் சொல்லுவது போல் பெரியால் பேசினாது தீவிரவாத பேச்சகாக இருந்தால் இதன் மூலம் எத்தனை பேர் பாம்பை விட்டு பார்ப்பான்களை அடித்தார்கள் என்று ஓர் சம்பவம் ஆதராம் தரமுடியுமா உங்களால்???
@dhilநல்ல பார்ப்பானும் நம் சமூகத்தில் உள்ளார்களே சகோ.தில். யாரையும் திருப்தி படுத்த இல்லை, என் ஆத்ம திருப்திக்கான நற்செயல் இது..!
@guru nathanநானே அவர்களின் பல மீட்டிங்கில் கேட்டு இருக்கேன். திக காரர்கள் சுவரில், சுவரொட்டியில், நோட்டீஸில் எழுதி போட்டு இருப்பதை பலமுறை படித்து இருக்கிறேன். பலரும் பலமுறை பல இடங்களில் சொல்ல கேள்விப்பட்டு இருக்கிறேன். மேலே, 60 வது பின்னூட்டத்தில் ஆதாரமும் தந்து இருக்கிறேன். இத்தனையும் பொய் எனில் நான் அதை ஒருபோதும் இதை இங்கே எழுதி இருக்கவே மாட்டேன்..!
I don't want any wrong ideology spreading in my society from some good people..! That's all..!
@Nizamஅலைக்கும் ஸலாம் சகோ.நிஜாம்,
நீங்கள் சொல்லும் தீண்டாமை தலித் பாதிப்பு என்று எதையாவது நான் மறுத்துள்ளேனா இப்பதிவில்..?
//பெரியார் இது போன்று பேசி தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒரு தைகிரியம் வாரவேண்டும் என்பதற்காக பேசினார்.//
---அமைதிக்காலத்தில் அவரால் சொல்லப்பட்ட இதே சப்பைக்கட்டை போர்க்காலத்தில் போரிடும் சமயம் அல்லாஹ் முஸ்லிம்களுக்கு சொல்லும் அறிவுரையை பிடித்துக்கொண்டு "இஸ்லாமிய பயங்கரவாதம்" "குர்ஆனில் பயங்கரவாதம்" என்று கூப்பாடு போடுகிறார்களே..? இதோ இங்கும் ஒருத்தர் வியாசன் என்ற பெயரில் சொல்லிக்கொண்டு உள்ளாரே..!
அது சரியா என்பதை அவர்கள் உணருமாறு இங்கு எவரேனும் எனது சார்பாக கூறினார்களா..?
அவர்கள் தளங்களுக்கு சென்று நம்மை கூற அனுமதிக்கிறார்களா..?
கூறினாலும் அதில் உள்ள நேர்மையை ஏற்கிறார்களா..?
விஷக்கருத்தை விதைக்கும் விஸ்வரூபம் எடுத்த பார்ப்பான் கமல்ஹாசனை ஆதரித்தார்கள் திராவிட கழகத்தினர் கருத்து சுதந்திரம் எனும் பெயரால்..!
ஆனால்....
குமுதம் ரிப்போர்ட்டரை அன்னை மணியம்மையாரையும் கலைஞரையும் அவமதித்து விட்டதாக கடுமையாக கோர்ட் வரை சென்று எதிர்கிக்கிறார்கள்.
நம் விஷயத்தில் அவர்கள் கண்ணில் கண்ட 'கருத்து சுதந்திரம்', அவர்கள் விஷயத்தில் மட்டும் எங்கே போச்சு இப்போது..? கேட்டீர்களா எவராவது அவர்களிடம்..?
சகோ.
நான் ஒரு அரசியல்வாதி எனில், இந்த பதிவு தவறானதே..! நான் அரசியல்வாதி அல்லன்..!
ஆனால்,
நான் ஓர் இஸ்லாமிய அடிப்படைவாதி..! அந்த அடிப்படையில் இந்த பதிவு சரியானதே..!
எவரோ ஒருவர்/சிலர் வர்ணாஷிரம் எழுதி வைத்து விட்டு சென்ற குற்றம், மற்றவர்களையோ அவர்களின் சமூகத்தையோ அவர்களின் தலைமுறையையோ எவ்வாறு பொறுப்புக்குள்ளாக்கும்..?
எனது நண்பன் ஆயினும் அவனிடம் உள்ள தவறான கொள்கையை சொல்லத்தான் வேண்டும். அதனால்தான் இப்பதிவு..!
எனது எதிரி ஆயினும் அவனுக்கான நீதியை நான் நிலைநாட்டியாகனும்..! அதற்காகவும் இப்பதிவு..!
இஸ்லாமிய அடிப்படையில் சிந்தியுங்கள் சகோ.நிஜாம்..!
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!