நான் சவூதிக்கு அடிமை அல்லன். சவூதிக்கு ஆதரவாளனும் அல்லன். ஆனால்...
சவூதியில் குறையாக தெரிவதை மட்டும் ஒரு விஷயத்தில் பூதாகரபடுத்தி சொல்வோர், அதே போன்றதொரு மற்றொரு விஷயத்தில் அதன் எளிதாக தெரியும் நிறையையும் அதேபோல சொல்லத்தான் வேண்டும் அல்லவா..? அதுதானே நியாயம்..? ஆனால், அப்படி சொல்வது இல்லை என்பது அவர்களின் அப்பட்டமான நேர்மையின்மையைத்தான் காட்டுகிறது..! இது அநீதியன்றோ..? அராஜமன்றோ..?
ஆனால், நான் நியாயஸ்தன். நீதி வழுவாதவன். இங்கே... இதற்கு முன்னர் சவூதி பற்றி ஒரு சில விமர்சன பதிவுகள் எழுதியவன் என்ற வகையில், இதையும் எழுதுகிறேன்..! இதெல்லாம் அவ்வப்போது சவூதியில் நடப்பவைதான். ஆனால், இந்தியர்களின் கவனத்துக்கு நமது ஊடகம் வேண்டுமென்றே (?) வடிகட்டி கொண்டு வராதவை..!
இலங்கை சகோதரி ரிசானா நஃப்பீக்கிற்கு கொலைக்குற்றத்திற்கான மரண தண்டனையை சவூதி வழங்கிய விஷயத்தில் அப்பெண்ணுக்காக பொங்கியவர்கள் இப்போது எங்கே போனார்கள்..? அவர்களுக்காகவே... இந்த போஸ்ட்டின் முதல் பகுதி..!
ஃபிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ரொடெலியொ செலெஸ்டினொ லானுசா என்ற கிறித்தவர், முஹம்மத் பின் ஸைத் அல் கத்தானி என்ற அரேபியரை விரோதம் கொண்டு திட்டமிட்டு 2000 ஆம் ஆண்டில் கொலை செய்த குற்றம் 2002 ஆம் ஆண்டு நிரூபிக்கப்பட்டு அவருக்கு, 3,000,000 சவூதி ரியால் ( சுமார்.... நாலேகால் கோடி ரூபாய்..!) குறுதிப்பணமாக கொல்லப்பட்டவர் குடும்பத்துக்கு தர வேண்டும் என்றும் அல்லது மரண தண்டனையை ஏற்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது..!
உடனே, ஃபிலிப்பைன்ஸ் நாட்டினர் சவூதி கோர்ட்டில் அவகாசம் கோரிவிட்டு... சவூதியிலும் தனது நாட்டிலும் இதற்கான தோகையை பம்பரமாக சுற்றி வசூலிக்க ஆரம்பித்தனர். பத்து வருஷமாக வசூலித்தும் சொத்தை எல்லாம் வித்தும் அவர்கள் சேர்த்தது 700,000 ரியால்தான். (சுமார் ஒரு கோடி ரூபாய்)
இப்போது, சவூதி அரசிடம் கொலை குற்றவாளியின் தாய், பிலிப்பைனின் சவூதி அரேபிய தூதரகம் மூலம்... இந்த உதவி செய்ய கோரிக்கை வைத்தார். இதனை ஏற்ற சவூதி மன்னர் பாதிக்கப்பட்ட சவூதி குடும்பத்திடம் பேசி அந்த பிலிப்பைணி செய்த கொலையை மன்னித்து விடுமாறு கோரிக்கை வைத்து, கொலைக்கு ஈடாக குறுதிப்பணத்தில் மீதி 2,300,000 சவூதி ரியாலை (இந்திய ரூபாயில் சுமார் மூன்றே கால் கோடிக்கும் மேல்) சவூதி அரசு மூலமாக கொடுத்து அந்த கிறித்தவரை மரண தண்டனையில் இருந்து விடுதலை பெற வைத்திருக்கிறார்.
ஒரு பிலிப்பைணியை காப்பாற்றிய மன்னர் இலங்கை பெண்ணான ரிஷானா மரணத்தை மட்டும் விரும்புவாரா என்ன..? நாட்டை ஆளும் மன்னராக இருந்தால் கூட தலையிட முடியாத சட்டம் இஸ்லாமிய குற்றவியல் சட்டம். பாதிக்கப்பட்டவர்கள் குறுதிப்பணத்தை ஏற்று மன்னிக்காத வரை, மன்னர் உட்பட எவருக்கும் குற்றாவாளியின் தண்டனையில் தலையிட அனுமதி இல்லை. ரிஷானாவின் மரண தண்டனையை குறித்து கருத்திட்ட சகோதர சகோதரிகள் உண்மை நிலையை அறிந்து கொள்ள வேண்டும்.
அடுத்து...சவூதி சிறுமி லாமாவுக்கு நீதி கிடைக்க கதறியவர்களுக்கு இந்த போஸ்டின் இரண்டாம்பகுதி..!
2006 ஆம் ஆண்டு சவூதியில் டிரக் ஒன்று, ஒரு பள்ளி மினி வேனின் மீது மோதி சாலைவிபத்து. அதில், எட்டு சவூதி ஆசிரியைகளும் அவ்வேனின் எகிப்திய டிரைவரும் கொல்லப்பட்டு விட்டனர்.
பொறுப்பின்றி வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது நிரூபிக்கப்பட்டதால், பெங்களூரை சேர்ந்த டிரக் டிரைவர் சலீம் பாஷா என்ற அந்த இந்தியருக்கு அதற்குரிய தண்டனையாக சுமார் 653,000 சவூதி ரியால் குறுதிப்பனத்தை அந்த ஒன்பது குடும்பங்களுக்கும் நஷ்டஈடாக பகிர்ந்தளிக்க சவூதி கோர்ட் உத்தரவிட்டது.
அந்த ஃபிலிப்பைணிகாரர்கள் போலல்லாம் இந்தியர்கள் எந்த வசூலிலும் இறங்கவில்லை. சவூதி சிறுமி லாமாவுக்கு ஏக குரலில் அலறிய நம் இந்திய ஊடகம் ஏதும் இதற்காக எம்முயற்சியிலும் ஈடுபடவில்லை.
நம்முடைய தூதரகம்..? -- ம்ஹூம்... எந்த நடவடிக்கையும் இல்லை..!
நம் நாட்டு அரசு..? -- இந்த மேட்டரே தெரியுமோ தெரியாதோ..!
நம் நாட்டு மனிதஉரிமை அமைப்புகள் செய்தவை..? --நோ கமெண்ட்ஸ்..!
தன்னார்வ தொண்டுஅமைப்புகள் என்ன பங்காற்றினர்..? --மூச்..!
வெறும் 1200 ரியால் மாச சம்பளகாரரான அந்த இந்திய டிரக் டிரைவரால் அவ்வளவு பெரிய தொகையை (தம் நாட்டு கொலைக்குற்றவாளிக்காக அந்த ஃபிலிப்பைணிகள் வசூலித்த தொகையை விட இது கம்மிதான்) அதை தர முடியாமல், இந்திய உதவி இன்றி ஏழாண்டுகள்
சிறையில் வாடியருக்காக, நேற்று சவூதி மன்னரே தாமே முன்வந்து தம் சொந்த
காசில் இருந்து... 653,000 சவூதி ரியால்கள் குருதிப்பணத்தை சலீம் பாஷா சார்பாக
செலுத்தியதால் அந்த இந்தியர் உடனே சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
மன்னருக்கு மிகவும் நன்றி தெரிவித்துள்ளார். அவர் நேற்றே மக்கா சென்று, இறைவனுக்கு நன்றி செலுத்தி ஓர் உம்ரா செய்துவிட்டு, அதில் சவூதி மன்னருக்காக பிரார்த்தனை புரிந்துள்ளார்.
சவூதியின் இலங்கை பெண் ரிசானாவுக்கான மரண தண்டனையை பற்றி மிகக்கடுமையாக இஸ்லாமை விமர்சித்தவர்கள், சவூதி சிறுமி லாமா கொலையை பற்றிய பொய்யான செய்திகளை இஸ்லாம் மீது விஷக்கருத்துக்களை விதைத்து முதல் பக்கத்தில் தலைப்புச்செய்தியாக
போட்டு விவாதமாக்கிய 'இந்திய ஊடகங்கள்' எல்லாம்... மேற்படி செய்திகளை மட்டும் மறைத்து கள்ள
மெளனம் சாதிப்பதேனோ..!
டியர் மீடியா..! சவூதி பற்றி நீங்கள் செய்தி சொன்னால் எல்லாவற்றையும் சொல்லுங்களேன்..! Why such Isalamophobia Partisan Journalism..?
20 ...பின்னூட்டங்கள்..:
அஸ்ஸலாமு அழைக்கும் சகோ !
//சவூதியில் குறையாக தெரிவதை மட்டும் ஒரு விஷயத்தில் பூதாகரபடுத்தி சொல்வோர், அதே போன்றதொரு மற்றொரு விஷயத்தில் அதன் எளிதாக தெரியும் நிறையையும் அதேபோல சொல்லத்தான் வேண்டும் அல்லவா..? அதுதானே நியாயம்..? ஆனால், அப்படி சொல்வது இல்லை என்பது அவர்களின் அப்பட்டமான நேர்மையின்மையைத்தான் காட்டுகிறது..! இது அநீதியன்றோ..? அராஜமன்றோ..?//
எப்படி நிறையை சுட்டிக்காட்டுவார்கள் . முஸ்லிம்கள் பக்கம் குறைகள் மடு போல சிறிதாக இருந்தாலும் அதை மலைப்போல பெரிதாக காட்டுவார்கள். அதே நேரம் நிறைகள் அதனை கண்டுக்கொள்ளவே மாட்டார்கள்.
ஒரு தவறை ஒரு பெயர்தாங்கி முஸ்லிம் செய்தால் அதற்கு இஸ்லாம்தான் பொறுப்பு என்பார்கள். நான் இஸ்லாத்தில் கணவனை இழந்த பெண்கள் என்று ஒரு பதிவிட்டேன் அதற்கு இஸ்லாத்தை முழு நேர குறை சொல்லும் ஒருவர் அதனை இப்படி கூறுகிறார் ." இது இஸ்லாத்திற்கு முன்னிருந்த ஒரு செயல்தாம் . இவர்களை என்ன சொல்வது?
ஒரு மனிதருக்கு (சவுதி மன்னர்) இருக்கும் இரக்கம் இஸ்லாம் மார்கத்தில் இல்லையா. தெரிந்தோ தெரியாமலோ செய்த கொடுஞ் செயலுக்கு பணத்தால் மாற்று செய்ய முடியுமானால், ஏன் மனத்தால் செய்ய முடியவில்லை? இஸ்லாத்தில் பணமுள்ளவன் கொலையை செய்துவிட்டு குருதிப் பணத்தை கொடுத்து தப்பலாமேன்றால் இஸ்லாம் எளியவர் வறியவர்களுக்கு ஆகாததா? சிந்தியுங்கள்!
@Vatsan Yuvan
//ஒரு மனிதருக்கு (சவுதி மன்னர்) இருக்கும் இரக்கம் இஸ்லாம் மார்கத்தில் இல்லையா.//
--------அவர் இஸ்லாத்தில் இருந்த காரணத்தால் தான் இந்த அளவுக்கு இறக்கப்படுகிறார். மார்க்கத்தின் கிரிமினல் சட்டத்தில் இரக்கம் எல்லாம் இருக்க கூடாது. நீதி நியாயம் நேர்மை மட்டுமே இருக்க வேண்டும்.
//தெரிந்தோ தெரியாமலோ செய்த கொடுஞ் செயலுக்கு//
--------தெரியாமல் செஞ்சால் அது குற்றமே இல்லை. தெரிஞ்சி செஞ்சால்தான் கொடுஞ்செயல்..!
// பணத்தால் மாற்று செய்ய முடியுமானால்,//
---------'நீதி' என்பது.... பாதிக்கப்பட்டவன், அதை 'நீதிதான்' என்று ஏற்க வேண்டும். அதில் ஒன்றுதான்... குருதிப் பணத்தை பெற்றுக்கொண்டு அதன் மூலம் பொருளாதார பலம் பெற்று மன்னிப்பது.
எனது உங்கள் மற்றும் ஊரான் வீட்டு பணத்தால் ஆயுசு முழுக்க சோறு போடுவதால் யாருக்கு என்ன இலாபம்... குற்றவாளியை தவிர..!அவனுக்கு அது மாற்று..!
இதை 'யாருக்கோ யாரோ யாராலோ' என்று நீங்கள் பார்த்தால் புரிய முடியாது. பாதிக்கப்பட்டவனாக உங்களை சம்பந்தப்படுத்தி பார்த்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.
//ஏன் மனத்தால் செய்ய முடியவில்லை?//
-----------புரியவில்லை. யாரின் மனத்தால்..?
//இஸ்லாத்தில் பணமுள்ளவன் கொலையை செய்துவிட்டு குருதிப் பணத்தை கொடுத்து தப்பலாமேன்றால் இஸ்லாம் எளியவர் வறியவர்களுக்கு ஆகாததா?//
----------மிக நல்ல கேள்வி..! இங்கே நஷ்ட ஈட்டு குருதிப்பணத்தை நிர்ணயிப்பவன் பாதிக்கப்பட்டவனே.
ஏழை குற்றவாளி ஒருவன் பணக்காரன் கேட்ட குருதிப்பணம் தர இயலாமல் அவனது மன்னிப்பை பெற முடியாமல் மரணத்தை தழுவினால்... அவனுக்கான தண்டனையை அவன் பெற்றான்..! அவ்ளோதான்...!
மாறாக, பணக்கார குற்றவாளி ஒருவன் அதுவும் உலகின் நம்பர் ஒன் பணக்காரன், ஒரு பரம ஏழையின் இரத்த பந்தத்தை கொலை செய்து மரண தண்டனை தீர்ப்பு பெற்றுவிட்டால்.....(நம்புங்க, தம் உயிரை துச்சமாக மதித்து இறையச்சம் மட்டுமே கொண்ட நீதிபதியால் மட்டுமே பணத்துக்கும் உயிருக்கும் அஞ்சாமல் இத்தீர்ப்பை அளிக்க முடியும்) ......தம் உயிரை காப்பாற்றிக்கொள்ள அந்த உலகின் முதல் நிலை பணக்காரன் தன் முழு சொத்தையும் அந்த ஏழையின் மன்னிப்புக்கு பகரமாக தர தயாராக இருப்பான். அதன் மூலம் அவனை மன்னித்து அந்த பரம ஏழை உலகின் நம்பர் ஒன் பணக்காரன் ஆகலாம். அல்லது, அவனை மன்னிக்காமல், மரண தண்டனையை தழுவ வைக்கலாம். ஆக, அங்கே குருதிப்பனத்தால் ஏழைக்கும் பெருவாழ்வு உண்டு..!
//சிந்தியுங்கள்!//
-----தயவு செய்து பாதிக்கப்பட்டவன் இடத்தில் நீங்கள் இருந்து அவனது சார்பாக சிந்தியுங்கள். மாறாக, குற்றவாளியோடு கைகோர்த்து அவன் சார்பாகவே சிந்தித்துக்கொண்டு இருப்பது.... மிகவும் கொடுமையான சிந்தனை வறட்சி ஆகும்..!
பத்துக்கு பன்னிரண்டு மைனஸ் ஒட்டா..?
ஆஹா... பலே..!
சிறுபான்மையோரின் 'கருத்து சுதந்திரம்' காப்பதில் தமிழ்மணம் தாங்க நம்பர் ஒண்ணு..!
அல்ஹம்துலில்லாஹ்..!
எனது இப்பதிவு சேர்க்க வேண்டிய முக்கிய கருத்தை, சரியாக சென்று சரியான இடத்தில் ஆழமாகவே சொருகி இருப்பதை தெளிவாக கண்டு கொண்டேன். பேருவகை பூக்கிறேன். நன்றி சகோஸ்.
அருமையான பகிர்வு ஜெஸக்கல்லாஹ் ஹைர்
சௌதி மன்னன் மணதளவில் உயர்ந்து நிற்கிறான். கவிழ்ந்த பொத்தனை அழுத்திய அவிழுந்த கோவனங்கள் எங்கே???
ஒரு வேலை இந்திய அரசங்கம் பெர்யரிவளன் விரப்பன் கூட்டாளிக்கு ரத்த பணம் கொடுத்தால் விடுதலை செய்யப்படும் என்று அறிவிப்பு செய்தால். இந்த மைனஸ் ஓட்டு கும்பால் முதல் அளுலாக வருவார்கள். எதற்க்காக?? எல்லாம் கலெக்ஷனுக்குத்தான். அப்படியே கலெக்ஷன் செய்து டாஸ்மார்களில் புண்ணியத்தைகட்டிக்கத்தான்.
தலைப்பு செய்திகள் படித்து விட்டு ஓலமிடும் அரைவேக்காடுகளை பற்றி நாம் கவலைப்படவேண்டியதில்லை சகோதரரே ,இவர்கள் எல்லாம் காளான்கள் முளைத்தது போலவே காணாமல் போய் விடுவார்கள் . நல்ல பதிவு .நன்றி .
நான் பின்னூட்டமிட்டால் அதைப் போடுவதில்லை என்று முன்பே முடிவெடுத்து விட்டீர்கள் என்றே நினைக்கிறேன். அப்படியானால் உங்கள் மயில்கள் எனக்கு வருவதும் நாகரீகமல்ல. இனி நாகரீகமாகுங்களேன்.
@~முஹம்மத் ஆஷிக் citizen of world~
//அவர் இஸ்லாத்தில் இருந்த காரணத்தால் தான் இந்த அளவுக்கு இறக்கப்படுகிறார். //
மற்ற மதங்களில் இரக்கம் உள்ளவர்களே இல்லைஎன்று நீங்கள் சொல்லித்தான் தெரிந்து கொண்டேன்!
ஆமாம், திட்டமிட்டு கொலை செய்தவனுக்கு ஏன் மன்னர் இரக்கப் பட்டார்?
ரிசானா போன்ற பெண்கள் எத்தனை பேர் சவுதி குவைத் போன்ற இஸ்லாமிய நாடுகளில் உடல் மற்றும் மனச் சித்திரவதைக்கு ஆளாகிறார்கள் தெரியுமா? அதை அங்கே ஒருவரும் பொருட்படுத்துவதில்லை! இதனால் பலர் மன நோய்க்கு ஆளாகி குற்றம் செய்தால் அது அவர்களை அந்த நிலைக்கு கொண்டு வந்தவர்களைத்தான் சாரும்.
//குற்றவாளியோடு கைகோர்த்து அவன் சார்பாகவே சிந்தித்துக்கொண்டு இருப்பது//
குற்றவாளிகள் பணத்தை கொடுத்து தப்பிப்பது சரியல்ல என்று சொல்வது எங்கே அவர்களுக்கு சார்பாக சிந்திப்பதாக உங்களுக்கு படுகிறது?
இறைவன் கொடுத்த உயிரின் விலையை மற்ற மனிதர்கள் (உற்றாரோ உறவினரோ) எப்படி தீர்மானிக்க முடியும்? அல் காம்தி போன்றவர்கள் சொந்த மகளையே கொன்றிருக்கிறார்கள். அப்படி ஒரு எண்ணம் இருப்பவனின் மகளை வேறொருவன் கொன்றிருந்தால் அந்தத் தந்தை, தான் செய்ய நினைத்ததை இன்னொருவன் செய்து முடித்துவிட்ட மகிழ்ச்சியில், கொலை செய்தவனை மன்னித்து விட்டானென்றால் எப்படியான அநீதியாயிருக்கும்? இப்படி நடப்பது சாத்தியமா இல்லையா - சிந்தியுங்கள்!
@Vatsan Yuvan//அவர் இஸ்லாத்தில் இருந்த காரணத்தால் தான் இந்த அளவுக்கு இறக்கப்படுகிறார். // என்றால்... இல்லாவிட்டால் இந்த அளவுக்கு இறக்கப்பட்டு இருந்திருக்க மாட்டார் என்கிறேன். உங்களிடம் பெட்ரோல் கிணறு உள்ளது. அதில் இருந்து 100 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறீர்கள். அந்த வருமானத்தில் இருந்து 20 கோடி ரூபாயை ஏழைகளுக்கு அளிப்பீர்களா..? முஸ்லிமாக இருந்தால் அளிப்பீர்கள். அளித்தாக வேண்டும் என்பது இஸ்லாமிய சட்டம்..! இதைத்தான் //இந்த அளவுக்கு// என்ற ஒரு வார்த்தையை போட்டு சொன்னேன்.
நீங்கள் மீண்டும் அதை குதர்க்கமாகவே புரிகிறீர்கள்.
// திட்டமிட்டு கொலை செய்தவனுக்கு ஏன் மன்னர் இரக்கப் பட்டார்?//----அவரின் தாயின் கோரிக்கை தூதரகம் மூலமாக வந்த பின்னரே... அதாவது பத்து வருஷம் கழித்து... இரக்கப்பட்டார். இது எனக்கு தவறாக தோன்றவில்லை.
அவருக்கு மன நோய் என்று உங்களுக்கு சொன்னது யார்..? ஆதாரம்..?
//குற்றவாளிகள் பணத்தை கொடுத்து தப்பிப்பது//----நீங்கள் என்னை கொலை பண்ணிவிட்டு போலீசுக்கு அல்லது நீதிபதிக்கு லஞ்சம் தந்துட்டு விடுதலை பெற்றால்... அதுதான் தப்பிப்பது.
மாறாக, எனது பிரிவால் வாடும் குடும்பம் கேட்கும் தொகையை உங்கள் சொத்தை எல்லாம் வித்து தந்து விட்டு மன்னிப்பை மட்டும் பெற்று உங்கள் தலையை உயிருடன் அரசு தண்டனை யிலிருந்து காப்பாற்றி கொள்வது என்பது 'தப்பிப்பது' ஆகாது.
//இறைவன் கொடுத்த உயிரின் விலையை மற்ற மனிதர்கள் (உற்றாரோ உறவினரோ) எப்படி தீர்மானிக்க முடியும்?//-----முதலில் கொன்றானே, அவன் எப்படி தீர்மானித்தான்..? அதற்கான சரியான தண்டனையை அனுபவிக்க வேண்டாமா..?
வினோதினி தனக்கு ஆசிட் வீசியவன் மீது அதேபோல ஆசிட் ஊற்ற வேண்டும் என்றார். அவரிண் குடும்பம் அவனுக்கு மரண தண்டனை கோருகிறது.
ஒருவேளை வீசிய சுரேஷை இவர்கள் மன்னிப்பதாக இருந்தால் அதற்கு பகரமாக மன ஆறுதலாக தரப்படும் நஷ்ட ஈட்டை யார் நிர்ணயிப்பது சரி..? சுரேஷ்..?
//அல் காம்தி போன்றவர்கள் சொந்த மகளையே கொன்றிருக்கிறார்கள்.//----இவன் கொலைக்குற்றவாளி என்ற தீர்ப்புவரின் இவனின் தலை கூடிய சீக்கிரம் சவூதியில் வெட்டப்படலாம்..! தீர்ப்பு இன்னும் வரவில்லை.
//அப்படி ஒரு எண்ணம் இருப்பவனின் மகளை வேறொருவன் கொன்றிருந்தால் அந்தத் தந்தை, தான் செய்ய நினைத்ததை இன்னொருவன் செய்து முடித்துவிட்ட மகிழ்ச்சியில், கொலை செய்தவனை மன்னித்து விட்டானென்றால் எப்படியான அநீதியாயிருக்கும்? இப்படி நடப்பது சாத்தியமா இல்லையா - சிந்தியுங்கள்!//-----------மீண்டும் குறை மதியோடு ஒரு சிந்தனை.
அப்டி செய்தால் எளிதாக அது அவனின் மனைவி, சகோதரன், சகோதரி, அப்பா, அம்மா, சித்தப்பா, பெரியப்பா, சின்னமா, பெரியமா, மாமா, மாமி, அத்தை, எல்லாருக்கும் ஈஸியா தெரிஞ்சிரும். இவனையும் கோர்ட்டில் நிறுத்தி விடுவார்கள். 'கொலையில் உடந்தை' என்று..! ஹா... ஹா...ஹா...!
@தருமி//நான் பின்னூட்டமிட்டால் அதைப் போடுவதில்லை என்று முன்பே முடிவெடுத்து விட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.//
----------பதிவுக்கு தொடர்புள்ள பின்னூட்டம் போட்டால் நான் ஏன் நீக்க போகிறேன்..?
இதுவும் கூட பதிவுக்கு தொடர்பில்லாததுதான். :-))
இருந்தும் இதை வெளியிட்ட காரணம்...
//உங்கள் மயில்கள் எனக்கு வருவதும் நாகரீகமல்ல//
-------சென்ற வருடம் டிசம்பர் மாதம் நமக்குள் நடந்த மெயில் பரிவர்த்தனையில் ஓரிரு மெயிலுடன் நம் விவாதம் முற்றுப்பெற்று விட்டதே..! அதற்கு முன்னரோ பின்னரோ வேறு மெயில்கள் நான் உங்களுக்கு அனுப்பியது இல்லியே..?!
அன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் (22.02.2013) உங்கள் வலைப்பதிவினைப் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுகிறேன். நாளைய 22.02.2013 வலைச்சரம் கண்டு தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி!
@~முஹம்மத் ஆஷிக் citizen of world~
//இஸ்லாத்தில் இருந்த காரணத்தால் தான் இந்த அளவுக்கு இறக்கப்படுகிறார். .. இல்லாவிட்டால் இந்த அளவுக்கு இறக்கப்பட்டு இருந்திருக்க மாட்டார் என்கிறேன்.//
அமெரிக்கரான Warren Buffet தனது 50 பில்லியன் டாலர் சொத்தில் 72% மற்றவர்களுக்கு உதவுவதற்கு கொடுத்திருக்கிறார். Bill Gates 50% கொடுத்திருக்கிறார். இதெல்லாம் அவர்கள் சொந்தமாக உழைத்ததிலிருந்து! குதர்க்கம் உங்களிடம்தான் தெரிகிறது!
ஒரு கேள்வி: நாட்டின் சொத்தை ஒரு சிலர் ஆண்டு அனுபவிபதைப் பற்றியும், குடியரசு பற்றியும் இஸ்லாத்தில் ஏதும் சொல்லப்ட்டிறுக்கிறதா?
//அவரின் தாயின் கோரிக்கை தூதரகம் மூலமாக வந்த பின்னரே... அதாவது பத்து வருஷம் கழித்து... இரக்கப்பட்டார். இது எனக்கு தவறாக தோன்றவில்லை.//
தாயார் கேட்டால் கொலையாளிக்கு இரக்கப்படலாமென்று இஸ்லாத்தில் சொல்லப்பட்டிருக்கிறதா? அது என்ன பத்து வருஷம் கழிந்தால் குற்றம் குறைந்துவிடுகிறதா? உங்களுக்கு தவறாக தோன்றவில்லையென்றால் அது சரியாகி விடுமா?
//அவருக்கு மன நோய் என்று உங்களுக்கு சொன்னது யார்..?//
நான் எழுதியதை திரும்ப படியுங்கள். ரிசானா போன்ற துன்புறுத்தலுக்கு உள்ளான பெண்கள் மன நோய்க்கு ஆளாகி இருக்கலாம் என்பது சாத்தியம். இந்த ரீதியில் சவுதி போன்ற நாடுகளில் சட்டம் அணுகுவதில்லை.
//முதலில் கொன்றானே, அவன் எப்படி தீர்மானித்தான்..? அதற்கான சரியான தண்டனையை அனுபவிக்க வேண்டாமா..?//
இதைத்தானே நானும் சொல்லுகிறேன்! உறவினருக்கு பணத்தைக் கொடுத்து தண்டனையிலிருந்து விலக்குப் பெறுவது சரியல்ல.
//அப்டி செய்தால் எளிதாக அது அவனின் மனைவி, சகோதரன், சகோதரி, அப்பா, அம்மா, சித்தப்பா, பெரியப்பா, சின்னமா, பெரியமா, மாமா, மாமி, அத்தை, எல்லாருக்கும் ஈஸியா தெரிஞ்சிரும். //
உலகத்தை சரியாக நீங்கள் புரியவில்லையோ? மனைவி மற்றும் கிட்டிய சொந்தத்துக்கே தெரியாமல் எத்தனை குற்றங்கள் நிகழ்கின்றன தெரியுமா? நான் முந்தைய இடுகையில் சொன்னது சாத்தியம் என்பது தேடினால் தெரியும்.
@Vatsan Yuvan//அமெரிக்கரான Warren Buffet தனது 50 பில்லியன் டாலர் சொத்தில் 72% மற்றவர்களுக்கு உதவுவதற்கு கொடுத்திருக்கிறார். Bill Gates 50% கொடுத்திருக்கிறார். இதெல்லாம் அவர்கள் சொந்தமாக உழைத்ததிலிருந்து! //
-------நான் மற்றவர்கள் தர மாட்டார்கள் என்றா சொன்னேன்..? அவர்களுக்கு எந்த சட்டமும் தர சொல்லவில்லை. தராவிட்டால் அது குற்றமாகவும் இல்லை. ஆனால், முஸ்லிம்கள் நிலை வேறு. அதைத்தான் சொன்னேன். அந்த இரண்டு பேரை மட்டுமே உதாரணம் காட்ட முடிந்த உங்களுக்கு, நான் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் உதாரணம் காட்டுவேன். நான் சொல்வதை தவறாகவே புரிந்து கொள்வதில் குதர்க்கம் உங்களிடம்தான் தெரிகிறது!
//ஒரு கேள்வி: நாட்டின் சொத்தை ஒரு சிலர் ஆண்டு அனுபவிபதைப் பற்றியும், குடியரசு பற்றியும் இஸ்லாத்தில் ஏதும் சொல்லப்ட்டிறுக்கிறதா?//
-------அப்படி எல்லாம் பிறரின் சொத்தை அனுபவிக்க தடைதான் உள்ளது. ஆனால், ஆளுபவன் சுயமாக பொருள் ஈட்ட தடை இல்லை. முடியரசு அல்லது குடியரசு என்று இதுதான் சிறப்பானது என்று சொல்லப்படவில்லை. எந்த வகையான ஆட்சி என்றாலும், அதில் லஞ்ச ஊழல் சுரண்டல் இன்றி வாய்மையுடன் நீதி நெறியுடன் நேர்மையாக பிறர்நலன் நாடி ஆட்சி அமைய வேண்டும். அவ்ளோதான்.
//தாயார் கேட்டால் கொலையாளிக்கு இரக்கப்படலாமென்று இஸ்லாத்தில் சொல்லப்பட்டிருக்கிறதா? அது என்ன பத்து வருஷம் கழிந்தால் குற்றம் குறைந்துவிடுகிறதா? உங்களுக்கு தவறாக தோன்றவில்லையென்றால் அது சரியாகி விடுமா?//
--------மீண்டும் புரிந்து கொள்ளவில்லை. இதில் கொலையாளியின் குடும்பம் மன்னரின் நஷ்டஈட்டை தூக்கி அவரின் மூஞ்சியில் விட்டெறிஞ்சு இருந்திருந்தால்... அந்த பிலிப்பைனி தலை துண்டாகி இருந்திருக்கும்..! ஆனால், அந்த குடும்பம் நஷ்ட ஈட்டை ஏற்றுக்கொண்டு மன்னிப்பை அளித்தது. பிளிப்பைனிகள் சேகரித்த அமவுண்டை கூட 'பரவாயில்லை இது போதும், இந்தாங்க மன்னிப்பு' என்றோ... அல்லது 'அதுகூட வேண்டாம், மன்னிப்பு இலவசம்' என்றோ சொல்ல உரிமை படைத்தவர்கள் கொலை செய்யப்பட்டவரின் குடும்பம் தான். மன்னர் அல்ல.
//ரிசானா போன்ற துன்புறுத்தலுக்கு உள்ளான பெண்கள் மன நோய்க்கு ஆளாகி இருக்கலாம் என்பது சாத்தியம். இந்த ரீதியில் சவுதி போன்ற நாடுகளில் சட்டம் அணுகுவதில்லை.//
-------ரிசானா போன்ற பெண்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாகாமலும் மன நோய் இன்றி தெளிவாகவும் கொலை செய்து இருந்திருக்கலாம் என்பது சாத்தியம். இந்த ரீதியில் சவுதி போன்ற நாடுகளை எதிர்ப்பவர்கள் வேண்டுமென்றே அணுகுவதில்லை. ரிசானா இடத்தில்... அஜ்மல் கசாப்/அப்சல் குரு வை கொண்டு வந்து வைத்தால்... அதே சட்டம் கூறாமல் கடுப்பாகி விடுகிறார்கள்.
//உறவினருக்கு பணத்தைக் கொடுத்து தண்டனையிலிருந்து விலக்குப் பெறுவது சரியல்ல.//
---------வேறு யாருக்கு தர வேண்டும்..? 'கொல்லப்பட்ட வரின் அக்கவுண்டில் போட வேண்டும்' என்று ஜோக் அடிக்காமல்...நீங்களே சொல்லுங்கள்..!
//உலகத்தை சரியாக நீங்கள் புரியவில்லையோ? மனைவி மற்றும் கிட்டிய சொந்தத்துக்கே தெரியாமல் எத்தனை குற்றங்கள் நிகழ்கின்றன தெரியுமா? நான் முந்தைய இடுகையில் சொன்னது சாத்தியம் என்பது தேடினால் தெரியும்.//
--------எந்த நாட்டிலும் சட்டங்கள் விதிவிலக்குகளுக்காக இயற்றப்பட மாட்டாது, என்பதை புரிந்து கொள்ளுங்கள்..!
பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் அதன் வலி தெரியும். பாதிக்கப்படாதவர்கள் வெளியில் நின்றுக்கொண்டு வளைச்சி வளைச்சி கருணையோடு நியாயம் பேசலாம். மனித நேயம் பேசலாம். இவர்கள் பேச்சு கொலையாளிக்கும் மற்ற பாதிக்கப்படாதவர்களிடத்திலும் பரரிதாபத்தை ஏற்படுத்தலாம். ஆனால் பாதிக்கப்பட்டவனுக்கு நிவாரணம் கொடுக்குமா ? திருப்தி கொடுக்குமா ? பாதிக்கப்பட்டவன் நிலையிலிருந்து நாம் பார்க்க வேண்டும்.என் மகனை ஒருவன் கொலை செய்துவிடுகிறான்.குற்றவாளிக்கு மரணதண்டனை கொடுத்தாலும் என் மகனுடைய இழப்புக்கு ஈடாகுமா என்றால் ஈடாகாது. ஓரளவு திருப்திக்கிடைக்கும் அவ்வளவுதான். என் மகன் என்னுடன் இருந்த சந்தோஷம் எனக்கு கிடைக்கவே கிடைக்காது. உன் மகனை கொன்னுட்டான் இவனையும் கொலை பண்ணியாச்சி சந்தோசமா வாழ்க்கைய கொண்டாடுன்னு சொல்ல முடியுமா ? காலத்திற்கும் இந்த வலியை நானும் என் குடும்பமும் அனுபவித்துக்கொண்டே இருக்கணும்.எந்த காரணத்திற்காக என் குடும்பம் வாழ்நாள் முழுவதும் இந்த தண்டனை அனுபவிக்கனும் ? இன்றைக்கு நாட்டில் கொலைக்கு கொலை எவ்வளவு நடக்குது? ஏன் நடக்குது ? பாதிக்கப்பட்டவனுக்கு தீர்ப்பில், நியாயத்தில் திருப்திக்கிடைக்கவில்லை என்பதற்காகத்தான். ஒரு கொலை குற்றவாளிக்கு அரசாங்கமே மரண தண்டனை கொடுத்திருந்தால் நியாயமாக அவன் செய்த குற்றத்திற்க்கு அத்தண்டனை அவனோடு முடிந்திருக்கும். அதை தொடர்ந்து பத்து கொலைகள் பலிக்கு பலியாக நடந்திருக்காது.பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் அதன் வலி தெரியும். வேதனை புரியும். பாதிக்கப்பட்டோர் நிலையில் இருந்துத்தான் இஸ்லாம் பார்கிறது. மற்றப்படி அறிவு ஜீவிகள் வக்கனையா பேசிக்கொண்டே இருப்பார்கள் தான் பாதிக்கப்படாதவரை. சுவாரசியமாக பொழுது போகணும்ல...
@Adirai Iqbalஅலைக்கும் சலாம் சகோ.
//முஸ்லிம்கள் பக்கம் குறைகள் மடு போல சிறிதாக இருந்தாலும் அதை மலைப்போல பெரிதாக காட்டுவார்கள். அதே நேரம் நிறைகள் அதனை கண்டுக்கொள்ளவே மாட்டார்கள்.//----- ஊடக நேர்மையில் நமக்கு மிகவும் வருத்தம் தரும் விஷயம் இதுதான் சகோ.இக்பால்.
@Nizam //சௌதி மன்னன் மணதளவில் உயர்ந்து நிற்கிறான்//---ஒத்துக்கொள்ள மனம் உயர மாட்டேன் என்கிறது சிலருக்கு.
@அஜீம்பாஷா//இவர்கள் எல்லாம் காளான்கள் முளைத்தது போலவே காணாமல் போய் விடுவார்கள்//---இன்ஷாஅல்லாஹ், நன்றி சகோ.
@தி.தமிழ் இளங்கோமிக்க நன்றி சகோ. அங்கும் பின்னூட்டமிட்டிருக்கிறேன்.
@Jaffar Nadheem//அறிவு ஜீவிகள் வக்கனையா பேசிக்கொண்டே இருப்பார்கள் தான் பாதிக்கப்படாதவரை.//-----ஆமாம் சகோ. பாதிக்கப்பட்டால்... பேச்சு அப்படியே உல்ட்டா ஆகி விடுகிறது..!
@Dr.Anburaj//சவுதி எனற ஒரு நாட்டிற்கு வக்காலத்து வாங்க வேண்டிய அவசியமா? அது அவ்வளவு முக்கியமா ?//--------இக்கேள்விக்கு விடையை தெளிவாக பதிவில் சொல்லி இருக்கிறேன்.
அப்புறம், இதன்பிறகு நீங்கள் கேட்ட எந்த கேள்வியும் பதிவுக்கு சுத்தமாக சம்பந்தமே இல்லாதது..!
ஏன்தான் இப்படியோ..! ஹூம்..!
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!