அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Sunday, December 18, 2011

7 முல்லை பெரியாறு: அமைச்சர் ப.சிதம்பரம் வலுக்கட்டாய வாபஸ்..!

நேற்று.....

சென்னை காமராஜர் அரங்கில், நேற்று "முல்லைப் பெரியாறு, கூடங்குளம் பிரச்சினை -- ஒரு விளக்கம்" என்ற பெயரில் நடந்த கூட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "முல்லைப் பெரியாறு பிரச்னை, கேரளாவில் நடக்க உள்ள 'பிரவோம்  (PIRAVOM) தொகுதி' இடைத்தேர்தலுக்காக கிளப்பப் பட்டுள்ளது" என்றார்..! வார்ரே வ்வா..! இதே கருத்தைத்தான் இவருக்கும் முன்னாடியே நானும் என்னுடைய சென்ற வார பதிவிலேயே... (முல்லை பெரியாறு - கேரளாவின் ராமஜென்மபூமி..!) மிகத்தெளிவாக புகைப்படங்களுடனும், கேரள அரசியல் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை எல்லாம் வைத்து லாஜிக்கலாகவும், முந்திய ராமஜென்மபூமி, ஒகேனக்கல் இவற்றுடன் ஒப்பிட்டு விளக்கமாக எழுதி இருந்தேன்..! எனது கருத்துக்கு வலுவூட்டும் விதமாக அமைச்சர் சொன்னது மட்டும் முக்கிய விஷயம் அல்ல..! இன்னொன்றும் உள்ளது..!

அதாவது.... பொதுவாக எதிர்க்கட்சியினர்தான் இப்படி புகார் சொல்வார்கள். ஆனால், இம்முறை அங்கே கேரளாவில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் தேசிய கட்சிகள் என்பதால் இக்கருத்தை எவரும் எவருக்கும் எதிராகவும் சொல்லவில்லை. மறைத்தார்கள். காரணம், இதன் ஓட்டு அறுவடையை அனைவருமே பெற விரும்பினர். ஆனால், தன் தெளிந்த அரசியல் பார்வையின் மூலம் தம் கட்சியே ஆயினும் இந்த கருத்தை மிக தைரியமாக தெரிவித்து இருந்தார் அமைச்சர்.ப.சிதம்பரம். அவரது நேர்மை குறித்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 

மேலும், அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில்.... "அணை பாதுகாப்பு குறித்து, கேரள மக்கள் அச்சப்படத் தேவையில்லை. அணை குறித்தான, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு, தமிழகத்திற்கு சாதகமாக தான் வரும் என நம்புகிறேன்"....என்றார். இதிலும் ஒன்றும் தவறில்லை. அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு.  சென்றமார்ச், ஏப்ரலில் கேரள தேர்தலின் போது எழுந்த இந்த சர்ச்சை, இப்போது மீண்டும் தலை தூக்கியது இந்த பிரவோம் இடைத்தேர்தலினால்தான் என்று இந்த கேரள அரசியலை நோக்கும் எவருக்கும் இந்த சந்தேகம் வந்தே தீரும். ஒரு தமிழராக மட்டுமின்றி நியாயமாகவே பேசியுள்ளார்அமைச்சர்.ப.சிதம்பரம்."

ஆனால்..... இதையறிந்த, கேரளாவிலுள்ள காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பா.ஜ.க., உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மத்திய அமைச்சருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

முன்னாள் முதல்வரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் கூறுகையில், "மத்திய அமைச்சர் சிதம்பரம் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவேண்டும்' என்றார்.    

"அவரது பேச்சு துரதிர்ஷ்டவசமானது. இவ்விஷயத்தில், பிரதமர் தலையிட்டு பிரச்னையை தீர்ப்பார்' என, கேரள மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்தார்.    

இதேபோல், மாநில நீர்வளத்துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப், மாநில சட்டசபை எதிர்க்கட்சித் துணை தலைவர் கோடியேறி பாலகிருஷ்ணன், முன்னாள் மாநில நீர்வளத்துறை அமைச்சர் என்.கே.பிரேமசந்திரன், பா.ஜ., மாநில தலைவர் முரளிதரன் உட்பட பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
  
"மத்திய அமைச்சர் சிதம்பரம், இவ்வாறு பேசியிருக்க மாட்டார் என்று தான் முதலில் நினைத்தேன். பிறகு தான் அதை நம்பினேன். அவர் மீது, காங்கிரஸ் கட்சி தலைமையிடம் புகார் செய்யப்படும்" என, கேரளாவின் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் உம்மன்சாண்டி, நேற்று கோட்டயத்தில் தெரிவித்தார். (என்ன ஒரு வில்லத்தனமான மிரட்டல்..?)

யாருடைய கண்ட்ரோலில் காங்கிரஸ் மேலிடம் உள்ளது என்று தெளிவாகிவிட்டது இப்போது..! மத்திய அரசின் மீதான "கேரள லாபி"யின்  அடக்குமுறை சக்தியும் தெளிவாகிவிட்டது இப்போது..! எப்படி...?
.

இன்று....

கேரளத்தைச்சேர்ந்த மலையாளக்கட்சிகள், அரசியல்தலைவர்கள் ஆகியோர் கடும் எதிர்ப்பு மற்றும் நெருக்குதலைத்தொடர்ந்து முல்லை பெரியாறு அணை விவகாரம் குறித்து தான் கூறிய கருத்தை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வாபஸ் பெற்றுள்ளார். 'தேவையில்லாமல் தான் பேசி விட்டதாகவும்' அவர் கூறியுள்ளார். (கவனியுங்கள் சகோ..! தவறாக பேசிவிட்டேன் என்று கூறவில்லை. ஆகவே சொன்ன கருத்து சரிதான்..!)

அவர் செய்தியாளர்களுக்கு கூறியதாவது....

"மற்ற பேச்சாளர்கள் சுட்டிக்காட்டியது போல நானும் அங்கு (கேரளாவில்) இடைத்தேர்தல் நடக்க இருப்பதால், இந்த பிரச்சினை பெரிதாக்கப்படுவதாக கூறினேன். அந்த கருத்தை திரும்பப்பெறுகிறேன். அப்படி நான் கூறியது தேவையற்ற கருத்து. யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு கிடையாது. இரண்டு மாநில மக்களின் ஒத்துழைப்பு, மற்றும் சகோதரத்துவம் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார் ப.சிதம்பரம்.

ஹா....ஹா....ஹா.... டியர் மிஸ்டர் ப.சிதம்பரம்..!

உங்களுக்கு கேரளாவில் உள்ள உங்கள் காங்கிரஸ் கட்சியின் வெற்றி முக்கியம். அல்லது 'கேரளலாபி'யின் எதிர்ப்பினால் 'போனாலும் போய்விடுமோ' என்ற உங்கள் அமைச்சர் பதவி முக்கியம். தமிழர்களுக்கோ தமிழர்களின் வாழ்க்கை முக்கியம். அதைவிட.... நமது நியாயம் ரொம்ப ரொம்ப முக்கியம்..! அதை மட்டுமாவது அவர்களிடம் இழந்து விடாதீர்கள்..!

ஆளும் மத்திய அமைச்சரான இவருக்கே இந்த கதி என்றால்...

அதே கூட்டத்தில் கலந்து கலந்து கொண்டு பேசிய, காங்கிரசின் முன்னாள் அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கேரள அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ஆவேசமாக கூறினார். இவரின் கதி என்னாகுமோ..!

ஒரு சமூகத்தாருக்கு மட்டும் உரிமையும் நீதியும் மறுக்கப்படும்போது.... "முஸ்லிம் என்பதால் நம்மளை மட்டும் நாட்டுலே இருந்து தனியா தள்ளி வச்சிட்டா மாதிரி" எனக்கு ஒரே ஃபீலிங்க்ஸ் உண்டு..! ஆனால்.... இப்போ... அந்த ஃபீலிங்க்ஸ் தமிழன் என்பதாலும் இன்னும் அதிகரிக்கிறது..!

7 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...