அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Tuesday, December 20, 2011

54 இலங்கை முஸ்லிம் ஆண்கள் @ ஈழத்தமிழ்ப்பெண்கள் : தீர்வு..?

முஸ்லிம் ஆண்களின் காம வெறிக்கு இரையாகும் தமிழ் பெண்கள் என்ற தலைப்பில் 'சந்ருவின் பக்கம்' என்ற வலைப்பூவில் சகோ.யோகராஜா சந்ரு என்ற பதிவர், இலங்கை முஸ்லிம்கள் சிலர் குற்றங்களில் ஈடுபட்டதாக புதிய சில குற்றங்களை தகவல்களாக பகிர்ந்து இருந்தார். "ஒரு சில நன்னெறி தவறிய தீய முஸ்லிம்களின் குற்றச்செயல்களால், இலங்கையின் மொத்த முஸ்லிம் ஆண்களையும் குற்றம் சாட்டுவதாக உள்ளது இந்த தலைப்பு" என்ற விமர்சனம் பலரிடம் இருந்து வரவே அந்த தலைப்பில் உள்ள முதல் வார்த்தையை மட்டும் நீக்கிவிட்டார். எனினும் தமிழ்மணத்தில் பதிவிட்ட தலைப்பை மாற்ற இயலாது என்பதால் தொடர்ந்து ஹிட்ஸ் மழை அந்த தலைப்புக்கு குவிந்தது. இந்த சூடான தலைப்பால் அந்த பதிவு தமிழ்மணத்தின் சூடான இடுகையின் உச்சத்தில் போய் உட்கார்ந்து கொண்டுவிட்டது. 

முஸ்லிம்கள் தீயவர்களாக இருப்பது என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி மிகவும் தவறானது. பொதுவாக  தற்போது இவ்வுலகில் மற்ற பிற சமுதாயத்தவர் ஒரு குற்றத்தை செய்ய... அதே குற்றத்தை முஸ்லிம்கள் செய்தால் மட்டும்... அது மிகப்பெரிய செய்தியாவது மட்டுமின்றி பொதுப்பார்வையில் அது அஜீரணத்தை ஏற்படுத்துகிறது. முஸ்லிம்கள் மீது கோபம் அடைய வைக்கிறது.

உதாரணமாக, இவ்வுலகில் ஏனைய பிற சமூக, சமய, நாத்திக, சித்தாந்த தீவிரவாதிகள் பயங்கரவாதங்களில் ஈடுபட்டால் அவர்களின் சமயம் சேர்த்து குற்றம் சாட்டப்படுவது இல்லை. ஆனால், 'இஸ்லாமிய பயங்கரவாதம்' என்ற பதம் மட்டும் ஊடகத்தில் மிகவும் பிரபலம் என்பதை அறிவீர்கள்.

இதே அடிப்படையில், எத்தனையோ கேவலமான ஆபாச பின்னூட்டங்கள் அனுப்பப்பட்டு இந்த பதிவுலகில் பிரசுரம் ஆகியுள்ளன. ஆனால், முஸ்லிம் பதிவர் ஒருவர் அப்படி செய்துவிட்டால்... "எனக்கு அநாகரிக பின்னூட்டம் போட்ட முஸ்லிம் அன்பர்" என்று தனிப்பதிவு போட்டு அவரை தாளிப்பது நடக்கிறதா இல்லையா..? (அந்த முஸ்லிம் பதிவர் தன் தவறுக்கு மனம் வருந்தி அந்த பதிவரிடம் மன்னிப்பு கேட்டபின் அந்த பதிவு நீக்கப்பட்டது)

இதுபோன்று முஸ்லிம்களுக்கு மட்டும் தனிக்கண்ணோட்டம் என்றால் ஒரு நோக்கில் அது  அநீதிதான் என்றாலும்... இதை இன்னொரு நோக்கில் நான் வரவேற்கிறேன்..!?! 

முஸ்லிம்கள் என்றால் மிகவும் நல்லவர்களாக வாழ வேண்டும் என்று மற்றவர்கள் எதிர்பார்க்கிறார்கள். முஸ்லிம்களிடம் இறைவன் எதிர்பார்ப்பதும் இதைத்தான்..! :-))

இதுபோல 'கெடுபிடி கடிவாளம்' இருந்தால் தான் குற்றம் செய்ய எத்தனிக்கும் ஓரிரு தீய முஸ்லிம்கள் கூட அதனை செய்ய தயங்குவார்கள். இந்த அடிப்படையில் சகோ.சந்ரு பதிவின் தலைப்புக்கு எனக்கு எவ்வித வருத்தமும் இல்லை. மாறாக வினவு போன்றவர்கள் போல அதே பதிவுக்கு "இஸ்லாத்தின் காமவெறிக்கு இரையாகும் ஈழத்தமிழ்ப்பெண்கள்" என்று முஸ்லிம்கள் செய்யும் குற்றத்துக்கு இஸ்லாமின் மீது அவர் பழிபோட்டிருந்தால் நிச்சயம் நான் கண்டனம் தெரிவித்திருப்பேன்.

சரி..., அந்த பதிவில் சகோ.சந்ரு எழுதி இருக்கும் முக்கியமான சில விஷயங்கள் கீழே சிகப்பு எழுத்துக்களில் தரப்பட்டு உள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்திலே நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகள் இருக்கின்றனர். இவர்களில்  அதிகமானவர்கள் இளம் விதவைகள். இரண்டு பிள்ளைகளுக்கு தாயாக இருக்கும் விதவைகளும் அதிகமாக இருக்கின்றனர். மிகவும் இளம் வயதில் திருமணம் முடித்து கணவனை இளந்த இளம் பெண்களைப் பொறுத்தவரை. பலரால் தமது உணர்ச்சிகளை இளம் வயதில் கட்டுப்படுத்த முடியாத வயதில் இருக்கின்றனர். (இவர்களுக்கான வடிகால் என்ன என்ற தீர்வை சகோ.சந்ரு சொல்லவில்லை) இதனைப் பயன்படுத்தி பலர் காம வேட்டையாடி வருகின்றனர்.
மறு புறத்திலே குடும்ப சுமையை தாமே சுமக்க வேண்டிய நிலையில் பல பெண்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்களைப் பொறுத்தவரையில் வருமானம் என்பது இல்லை. இதன் காரணமாக தமது கஸ்ரங்களை, வறுமையை போக்க உழைப்புக்கான வழியாக விபச்சாரங்களை பல பெண்கள் நாடிச் செல்கின்றனர். (இதை ஏனோ தவறாகவோ ஒழுக்க குறைபாடாகவோ கேவலமாகவோ அறிவித்து கண்டிக்கவில்லை சகோ.சந்ரு)
இவ்வாறான விடயங்களுக்கு, விபச்சாரத்துக்கு, தமது காம இச்சைகளை தீர்த்துக் கொள்வதற்கு தமிழ் பெண்களை பயன் படுத்துவது. முஸ்லிம் ஆண்களாக இருக்கின்றனர். இவ்வாறான தமிழ் பெண்களுக்கு பணம் கொடுத்து வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று தமது காம இச்சைகளை தீர்த்துக் கொள்கின்றனர். இவற்றில் பரவலாக முஸ்லிம் வர்த்தகர்கள் பலர் ஈடுபட்டு வருகின்றனர். (இதை எப்படி தடுப்பது என்பது குறித்து ஒன்றும் கூறவில்லை சகோ.சந்ரு) அவர்கள் பற்றிய விடயங்களையும். ஆதாரங்ளுடன் வெளியிட நாம் தயங்கப் போவதில்லை.
இவ்வாறான சமூக சீர்கேடுகளை தொடர விடுவது எமது சமூகத்தின் எதிர்கால நிலையை கேள்விக்குறியாக்கிவிடும். சின்னச்சின்ன பிரச்சினைகளை எல்லாம் பெரிது படுத்தி அறிக்கையிட்டுக் கொண்டிருக்கின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் மௌனம் சாதிப்பது ஏன்? ஆனாலும் சமூக அக்கறை கொண்ட நாம் இவ்வாறான சமூக சீர் கேடுகளை இனிமேலும் தொடர விடக்கூடாது. (சகோ.சந்ருவினது எல்லாமே நியாயமான ஆதங்கங்கள்..! இவர் கூறாவிட்டாலும் நாம் சில தீர்வுகளை முன்வைக்கிறேன்.)
இதனைத்தொடர்ந்து,  நடந்த மூன்று குற்றச்சம்பவங்களை விவரித்தபின்னர் பதிவை முடிக்கிறார்.

சகோ.சந்ருவின் குற்றச்சாட்டுக்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில்,

முதற்கண், முஸ்லிம் ஆண்களின் காம வெறிக்கு எனது வன்மையான கண்டனங்கள்..!

விபச்சாரத்தில் ஈடுபடும் ஈழத்தமிழ்ப் பெண்களுக்கும் எனது கடும் கண்டனங்கள்..!

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

இப்படி குற்றம் செய்யும் இந்த இரு தரப்பினருக்கும் நாம் கண்டனம் தெரிவிப்பதோடும் பாதிக்கப்பட்டோருக்கு அனுதாபமும் வருத்தமும் தெரிவிப்பதோடு நின்று விடுவதால் பலன் ஒன்றுமே இல்லை.

இறையச்சம் இல்லாத நன்னெறி தவறிய இந்த முஸ்லிம் ஆண்களின் பயங்கரமான குற்றங்களுக்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது..?

அடுத்து கணவனை இழந்த ஈழ விதவைப்பெண்களை  விபச்சாரத்திலிருந்து மீட்பது எப்படி..?

ஈழப்பெண்கள் இனியாரும் புதிதாக விபச்சாரம் பக்கம் போகாமல் தடுப்பது எப்படி..? 

இதற்கு எல்லாம் சரியான நிரந்தர தீர்வுதான் என்ன..?

இந்த கோணத்தில் சகோ.சந்ரு பயணிக்கவில்லை என்றாலும் நாம் தீர்வு பற்றி சிந்திப்போம்.

இது ஒன்றும் புதிய தீர்க்க முடியாத விடை சொல்லப்படாத பிரச்சினை அல்ல என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.

தீர்வு-1 

முஸ்லிம் ஆண்கள் இதுபோன்ற பாலியல் பலாத்கார வல்லுறவு குற்றங்களில் ஈடுபட்டாலோ அல்லது விபச்சாரம் போன்ற குற்றங்களுக்கு தரகர் மாதிரி செயல்பட்டாலோ கடும் தண்டனை வழங்கப்படல் வேண்டும். சும்மா ஒருவருஷம்... ஏழு வருஷம்.. எல்லாம் வேலைக்காகாது. இலங்கையில் முஸ்லிம்களுக்கு என்று "தனி சிவில் சட்டம்"  இருப்பது போன்று முஸ்லிம்களுக்கு என்று  "தனி கிரிமினல் சட்டம்" கொண்டுவரச் சொல்லி ஈழமக்கள் இலங்கை அரசிடம் விண்ணப்பித்து, அதுபோன்ற நெறிதவரும் முஸ்லிம் ஆண்களுக்கு  இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் குற்றங்களுக்கு ஏற்றவகையில் மரணதண்டனை கொடுக்க வைத்தால்... ஈழப்பெண்கள் தப்பலாம்..!

சகோ.சந்ரு தன் பதிவில் சுட்டிக்காட்டிய அந்த மூன்று தீய முஸ்லிம் ஆண்களின் குற்றம் ஐயத்துக்கிடமின்றி நீதிமன்ற விசாரணையில் நிரூபிக்கப்பட்டு  நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டு விட்டால்... அந்த மூன்று பேருக்கு மரணதண்டனை விதித்தாலே போதும்..! இனி அது போன்ற குற்றத்தை இனியொரு... ஒரே ஒரு தீய முஸ்லிம் கூட செய்ய... இல்லை... இதுபற்றி சிந்திக்கக்கூட மாட்டான். நல்ல முஸ்லிம் என்பவன் சட்டம் என்ற ஒன்றே இல்லாவிட்டாலும்கூட இறையச்சம் கொண்டு இன்னொரு பெண்ணை  தீய பார்வை கொண்டு நிமிர்ந்து கூட பார்க்க மாட்டானே..?

தீர்வு-2

விபச்சாரம் புரியும் ஈழத்தமிழ்ப்பெண்களுக்கு... 'அது தவறு' என்றும், 'குற்றம்' என்றும் அறிவுறுத்தி, அதனால் மருந்தில்லாத  தீராத எயிட்ஸ் போன்ற பால்வினை நோய்கள் பரவும் என்றும் விழிப்புணர்வூட்டிய பின்னர், அதில் ஈடுபடும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கடும் தண்டனை வழங்கப்படல் வேண்டும். சும்மா 'பெட்டி கேஸ்' போல அபராதம் எல்லாம் வேலைக்கு ஆகாது. நீண்டகாலம் சிறைத்தண்டனை நன்று. சோற்றுக்காத்தானே இதை செய்கிறார்கள்..? சிறையில் மூன்றுவேளை சோறு கிடைக்கும் அல்லவா..? 

தீர்வு-3

விபச்சாரத்தின் பக்கமே செல்லாத விதவைகளுக்கு வாழ வழி..? இலங்கை போன்ற ஒரு நாட்டில், திடீரென லட்சக்கணக்கில் வேலைவாய்ப்பை ஏற்படுத்த இயலாது. அதுவும் இனவாதப்பார்வை கொண்ட சிங்கள அரசால், தமிழர்களுக்கு பாரிய நன்மை செய்ய இயலுமா..? அப்படியே அதிசயமாக இயன்றாலும், அவை வயிற்றுப்பசிக்கு மட்டுமே தீர்வாக அமையும். எனவே, விதவை மறுமணம் ஊக்குவிக்கப்படல் வேண்டும். ஆனால், சகோ.சந்ருவின் பதிவின் அடிப்படையில், மட்டக்களப்பு என்ற ஒரே ஒரு மாவட்டத்திலேயே 40,000க்கும் மேல் விதவைகள் இருந்தால்... ஈழம் முழுவதும் எத்தனை பேர் இருக்க வேண்டும்..? அத்தனை பேருக்கும் எப்படி தனித்தனி மாப்பிள்ளை கிடைப்பார்கள்..? இதுதான் இப்பிரச்சினையின் ஆணிவேர்..!

ஆக, இதுபோன்று பலவருடங்கள் போர் நடந்து முடிந்த ஒரு நாட்டில் ஆண்மக்கள் எண்ணற்றோர் மடிந்து ஆண்கள் எண்ணிக்கையில் வெகுவாக குறைந்து... விதவைகளும் முதிர்கன்னிகளுமாக பெண்மக்கள் மிகுதியாகி... இப்படியான ஒரு குழப்ப சூழல் ஏற்படுவது இயல்பே..! இதொன்றும் புதிய சூழல் இல்லை. 1400 ஆண்டுகால பழசுதான்..! இப்போது, மாப்பிள்ளை பற்றாக்குறை என்று இளம் விதவைகளை திருமணத்திலிருந்து தள்ளி வைக்க முடியாது. இந்நிலையில் விதவை மறுமணம் என்பதும் ஒரு  பெண்ணுரிமை.

இப்படியான கட்டத்தில், "இந்த குழப்ப நிலைமையில் இதற்கு என்ன தீர்வு" என்றுதான் நாம் சிந்திக்க வேண்டும். போரில்லாத சகஜ நிலையில் உள்ள வாழ்க்கையின் வாழ்வியல் தீர்வை இங்கே சட்டமாகவோ மதச்சடங்காகவோ வலுக்கட்டாயமாக திணிக்கக்கூடாது. அது இயங்கியல் ரீதியாக நடவாது. அப்படிச்செய்வதால்தான் சகோ.சந்ரு தன் பதிவில் குறிப்பிட்டிருந்த குற்றங்கள் நடந்தன. நடக்கின்றன. நடந்தே தீரும். 

இதற்கு என்ன செய்யலாம்..? தமக்கு இன்னும் இளம் வயதும், செல்வமும், சம்பாரிக்கும் ஆற்றலும், உடல்திடமும், தாராள மனமும் கொண்ட ஈழத்து ஆண்கள் நிறைந்த மனதோடு தாமாக முன்வந்து வரதட்சினை சீர் போன்ற ஏதுமின்றி ஈழத்தமிழ் விதவைகளை அவர்களின் குழந்தைகளோடு எவ்வித நிபந்தனையுமின்றி முதல் தாரமாகவோ, இரண்டாம் தாரமாகவோ, மூன்றாம் தாரமாகவோ மணக்க முன்வரவேண்டும்..!

இதொன்றும் புதிய தீர்வு இல்லை. 1400 ஆண்டுகால பழசுதான்..! இதில் வரக்கூடிய ஒரே ஒரு பெரிய எதிர்ப்பு முதல் மனைவியிடமிருந்து வரலாம். தன் கணவனை போரில் இழக்காத அதிர்ஷ்டசாலிகளான அவர்கள், சமூகத்துக்காக பெருந்தன்மையுடன் தம் ஈழ சகோதரிகளுக்காக தம் வாழ்வை பகிர்ந்தளித்து விட்டுக்கொடுக்க வேண்டும்.!

அதாவது... ஈழப்பெண்களும் சமூகமும் மதத்தலைவர்களும் சட்டமும் பல 'சிலதார மணம்' செய்துகொள்ள பல ஆண்களை அனுமதிக்க வேண்டும்..!

ஈழத்தைவிட பன்மடங்கு பாதிக்கப்பட்ட நாடு இராக் என்பதை அறிவீர்கள். பல 'சிலதாரமணம்' இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதாயினும், 1959-ம் வருடம் முந்தைய ஆட்சியாளர் அப்துல் கரீம் அல் காசிம் என்பவரால் இராக்கில் சட்டப்படி அது (polygamy) தடை செய்யப்பட்டு இருந்து வந்தது..!!! ஆனால், அந்த தடை இவ்வருடம் வேறு வழியே இன்றி நீக்கப்பட்டதோடு மட்டுமின்றி, ஒரு மனைவிக்கு மேல் விதவைகளை திருமணம் செய்யும் ஆண்களுக்கு எக்கச்சக்கமாக பொருளாதார நிதியுதவியை செய்ய இராக் அரசே முன்வந்துள்ளது..!!! காரணம்: அங்கே போரின் விளைவால் பத்து லட்சத்திற்கும் அதிகமான இளம் விதவைகள் உள்ளனர்.

Years of conflict in Iraq have left the country with more than one million war widows and a shortage of young unmarried men – pressures that may be bringing about the return of polygamy. Politicians have suggested financial incentives for men who marry widows.


Polygamy Returns to Iraq ; Half a man is better than none?

"I used to feel vulnerable with no support, afraid that anyone could attack me and anyone could harass me," she says.
"A man's protection is like a shelter. And this is what a woman needs from a man." she, the war widow adds.

 இந்த இராக்கின் தீர்வு ஈழத்துக்கும் பொருந்தும்தானே..?

டிஸ்கி:
தற்போது சகோ.சந்ரு, என்ன நினைத்தாரோ  தெரியவில்லை..! அதே இடுகையை வேறொரு தலைப்பில்... விபச்சார விடுதியாக மாறும் மட்டக்களப்பு பேருந்து தரிப்பிடம் என்று... அடுத்த பதிவாக வெளியிட்டு, அங்கே முந்திய அதே இடுகைக்கு சுட்டி மட்டும் கொடுத்து இருக்கிறார்...!

அறைகூவல் :
அனைத்து போர்விதவைகளின் திருமணம் உட்பட்ட மறுவாழ்வுக்கு இப்பதிவில் சொல்லப்பட்ட சிலதாரமணம் தவிர்த்து வேறு தீர்வு ஏதேனும் உங்களிடம் இருந்தால் தாராளமாக இங்கு பின்னூட்டத்தில் முன்மொழியலாம்..!

54 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...