முஸ்லிம் ஆண்களின் காம வெறிக்கு இரையாகும் தமிழ் பெண்கள் என்ற தலைப்பில் 'சந்ருவின் பக்கம்' என்ற வலைப்பூவில் சகோ.யோகராஜா சந்ரு என்ற பதிவர், இலங்கை முஸ்லிம்கள் சிலர் குற்றங்களில் ஈடுபட்டதாக புதிய சில குற்றங்களை தகவல்களாக பகிர்ந்து இருந்தார். "ஒரு சில நன்னெறி தவறிய தீய முஸ்லிம்களின் குற்றச்செயல்களால், இலங்கையின் மொத்த முஸ்லிம் ஆண்களையும் குற்றம் சாட்டுவதாக உள்ளது இந்த தலைப்பு" என்ற விமர்சனம் பலரிடம் இருந்து வரவே அந்த தலைப்பில் உள்ள முதல் வார்த்தையை மட்டும் நீக்கிவிட்டார். எனினும் தமிழ்மணத்தில் பதிவிட்ட தலைப்பை மாற்ற இயலாது என்பதால் தொடர்ந்து ஹிட்ஸ் மழை அந்த தலைப்புக்கு குவிந்தது. இந்த சூடான தலைப்பால் அந்த பதிவு தமிழ்மணத்தின் சூடான இடுகையின் உச்சத்தில் போய் உட்கார்ந்து கொண்டுவிட்டது.
முஸ்லிம்கள் தீயவர்களாக இருப்பது என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி மிகவும் தவறானது. பொதுவாக தற்போது இவ்வுலகில் மற்ற பிற சமுதாயத்தவர் ஒரு குற்றத்தை செய்ய... அதே குற்றத்தை முஸ்லிம்கள் செய்தால் மட்டும்... அது மிகப்பெரிய செய்தியாவது மட்டுமின்றி பொதுப்பார்வையில் அது அஜீரணத்தை ஏற்படுத்துகிறது. முஸ்லிம்கள் மீது கோபம் அடைய வைக்கிறது.
உதாரணமாக, இவ்வுலகில் ஏனைய பிற சமூக, சமய, நாத்திக, சித்தாந்த தீவிரவாதிகள் பயங்கரவாதங்களில் ஈடுபட்டால் அவர்களின் சமயம் சேர்த்து குற்றம் சாட்டப்படுவது இல்லை. ஆனால், 'இஸ்லாமிய பயங்கரவாதம்' என்ற பதம் மட்டும் ஊடகத்தில் மிகவும் பிரபலம் என்பதை அறிவீர்கள்.
இதே அடிப்படையில், எத்தனையோ கேவலமான ஆபாச பின்னூட்டங்கள் அனுப்பப்பட்டு இந்த பதிவுலகில் பிரசுரம் ஆகியுள்ளன. ஆனால், முஸ்லிம் பதிவர் ஒருவர் அப்படி செய்துவிட்டால்... "எனக்கு அநாகரிக பின்னூட்டம் போட்ட முஸ்லிம் அன்பர்" என்று தனிப்பதிவு போட்டு அவரை தாளிப்பது நடக்கிறதா இல்லையா..? (அந்த முஸ்லிம் பதிவர் தன் தவறுக்கு மனம் வருந்தி அந்த பதிவரிடம் மன்னிப்பு கேட்டபின் அந்த பதிவு நீக்கப்பட்டது)
இதே அடிப்படையில், எத்தனையோ கேவலமான ஆபாச பின்னூட்டங்கள் அனுப்பப்பட்டு இந்த பதிவுலகில் பிரசுரம் ஆகியுள்ளன. ஆனால், முஸ்லிம் பதிவர் ஒருவர் அப்படி செய்துவிட்டால்... "எனக்கு அநாகரிக பின்னூட்டம் போட்ட முஸ்லிம் அன்பர்" என்று தனிப்பதிவு போட்டு அவரை தாளிப்பது நடக்கிறதா இல்லையா..? (அந்த முஸ்லிம் பதிவர் தன் தவறுக்கு மனம் வருந்தி அந்த பதிவரிடம் மன்னிப்பு கேட்டபின் அந்த பதிவு நீக்கப்பட்டது)
இதுபோன்று முஸ்லிம்களுக்கு மட்டும் தனிக்கண்ணோட்டம் என்றால் ஒரு நோக்கில் அது அநீதிதான் என்றாலும்... இதை இன்னொரு நோக்கில் நான் வரவேற்கிறேன்..!?!
முஸ்லிம்கள் என்றால் மிகவும் நல்லவர்களாக வாழ வேண்டும் என்று மற்றவர்கள் எதிர்பார்க்கிறார்கள். முஸ்லிம்களிடம் இறைவன் எதிர்பார்ப்பதும் இதைத்தான்..! :-))
இதுபோல 'கெடுபிடி கடிவாளம்' இருந்தால் தான் குற்றம் செய்ய எத்தனிக்கும் ஓரிரு தீய முஸ்லிம்கள் கூட அதனை செய்ய தயங்குவார்கள். இந்த அடிப்படையில் சகோ.சந்ரு பதிவின் தலைப்புக்கு எனக்கு எவ்வித வருத்தமும் இல்லை. மாறாக வினவு போன்றவர்கள் போல அதே பதிவுக்கு "இஸ்லாத்தின் காமவெறிக்கு இரையாகும் ஈழத்தமிழ்ப்பெண்கள்" என்று முஸ்லிம்கள் செய்யும் குற்றத்துக்கு இஸ்லாமின் மீது அவர் பழிபோட்டிருந்தால் நிச்சயம் நான் கண்டனம் தெரிவித்திருப்பேன்.
முஸ்லிம்கள் என்றால் மிகவும் நல்லவர்களாக வாழ வேண்டும் என்று மற்றவர்கள் எதிர்பார்க்கிறார்கள். முஸ்லிம்களிடம் இறைவன் எதிர்பார்ப்பதும் இதைத்தான்..! :-))
இதுபோல 'கெடுபிடி கடிவாளம்' இருந்தால் தான் குற்றம் செய்ய எத்தனிக்கும் ஓரிரு தீய முஸ்லிம்கள் கூட அதனை செய்ய தயங்குவார்கள். இந்த அடிப்படையில் சகோ.சந்ரு பதிவின் தலைப்புக்கு எனக்கு எவ்வித வருத்தமும் இல்லை. மாறாக வினவு போன்றவர்கள் போல அதே பதிவுக்கு "இஸ்லாத்தின் காமவெறிக்கு இரையாகும் ஈழத்தமிழ்ப்பெண்கள்" என்று முஸ்லிம்கள் செய்யும் குற்றத்துக்கு இஸ்லாமின் மீது அவர் பழிபோட்டிருந்தால் நிச்சயம் நான் கண்டனம் தெரிவித்திருப்பேன்.
சரி..., அந்த பதிவில் சகோ.சந்ரு எழுதி இருக்கும் முக்கியமான சில விஷயங்கள் கீழே சிகப்பு எழுத்துக்களில் தரப்பட்டு உள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்திலே நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகள் இருக்கின்றனர். இவர்களில் அதிகமானவர்கள் இளம் விதவைகள். இரண்டு பிள்ளைகளுக்கு தாயாக இருக்கும் விதவைகளும் அதிகமாக இருக்கின்றனர். மிகவும் இளம் வயதில் திருமணம் முடித்து கணவனை இளந்த இளம் பெண்களைப் பொறுத்தவரை. பலரால் தமது உணர்ச்சிகளை இளம் வயதில் கட்டுப்படுத்த முடியாத வயதில் இருக்கின்றனர். (இவர்களுக்கான வடிகால் என்ன என்ற தீர்வை சகோ.சந்ரு சொல்லவில்லை) இதனைப் பயன்படுத்தி பலர் காம வேட்டையாடி வருகின்றனர்.
மறு புறத்திலே குடும்ப சுமையை தாமே சுமக்க வேண்டிய நிலையில் பல பெண்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்களைப் பொறுத்தவரையில் வருமானம் என்பது இல்லை. இதன் காரணமாக தமது கஸ்ரங்களை, வறுமையை போக்க உழைப்புக்கான வழியாக விபச்சாரங்களை பல பெண்கள் நாடிச் செல்கின்றனர். (இதை ஏனோ தவறாகவோ ஒழுக்க குறைபாடாகவோ கேவலமாகவோ அறிவித்து கண்டிக்கவில்லை சகோ.சந்ரு)
இவ்வாறான விடயங்களுக்கு, விபச்சாரத்துக்கு, தமது காம இச்சைகளை தீர்த்துக் கொள்வதற்கு தமிழ் பெண்களை பயன் படுத்துவது. முஸ்லிம் ஆண்களாக இருக்கின்றனர். இவ்வாறான தமிழ் பெண்களுக்கு பணம் கொடுத்து வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று தமது காம இச்சைகளை தீர்த்துக் கொள்கின்றனர். இவற்றில் பரவலாக முஸ்லிம் வர்த்தகர்கள் பலர் ஈடுபட்டு வருகின்றனர். (இதை எப்படி தடுப்பது என்பது குறித்து ஒன்றும் கூறவில்லை சகோ.சந்ரு) அவர்கள் பற்றிய விடயங்களையும். ஆதாரங்ளுடன் வெளியிட நாம் தயங்கப் போவதில்லை.
இவ்வாறான சமூக சீர்கேடுகளை தொடர விடுவது எமது சமூகத்தின் எதிர்கால நிலையை கேள்விக்குறியாக்கிவிடும். சின்னச்சின்ன பிரச்சினைகளை எல்லாம் பெரிது படுத்தி அறிக்கையிட்டுக் கொண்டிருக்கின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் மௌனம் சாதிப்பது ஏன்? ஆனாலும் சமூக அக்கறை கொண்ட நாம் இவ்வாறான சமூக சீர் கேடுகளை இனிமேலும் தொடர விடக்கூடாது. (சகோ.சந்ருவினது எல்லாமே நியாயமான ஆதங்கங்கள்..! இவர் கூறாவிட்டாலும் நாம் சில தீர்வுகளை முன்வைக்கிறேன்.)இதனைத்தொடர்ந்து, நடந்த மூன்று குற்றச்சம்பவங்களை விவரித்தபின்னர் பதிவை முடிக்கிறார்.
சகோ.சந்ருவின் குற்றச்சாட்டுக்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில்,
முதற்கண், முஸ்லிம் ஆண்களின் காம வெறிக்கு எனது வன்மையான கண்டனங்கள்..!
விபச்சாரத்தில் ஈடுபடும் ஈழத்தமிழ்ப் பெண்களுக்கும் எனது கடும் கண்டனங்கள்..!
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படி குற்றம் செய்யும் இந்த இரு தரப்பினருக்கும் நாம் கண்டனம் தெரிவிப்பதோடும் பாதிக்கப்பட்டோருக்கு அனுதாபமும் வருத்தமும் தெரிவிப்பதோடு நின்று விடுவதால் பலன் ஒன்றுமே இல்லை.
இறையச்சம் இல்லாத நன்னெறி தவறிய இந்த முஸ்லிம் ஆண்களின் பயங்கரமான குற்றங்களுக்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது..?
அடுத்து கணவனை இழந்த ஈழ விதவைப்பெண்களை விபச்சாரத்திலிருந்து மீட்பது எப்படி..?
ஈழப்பெண்கள் இனியாரும் புதிதாக விபச்சாரம் பக்கம் போகாமல் தடுப்பது எப்படி..?
இந்த கோணத்தில் சகோ.சந்ரு பயணிக்கவில்லை என்றாலும் நாம் தீர்வு பற்றி சிந்திப்போம்.
இது ஒன்றும் புதிய தீர்க்க முடியாத விடை சொல்லப்படாத பிரச்சினை அல்ல என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.
தீர்வு-1
முஸ்லிம் ஆண்கள் இதுபோன்ற பாலியல் பலாத்கார வல்லுறவு குற்றங்களில் ஈடுபட்டாலோ அல்லது விபச்சாரம் போன்ற குற்றங்களுக்கு தரகர் மாதிரி செயல்பட்டாலோ கடும் தண்டனை வழங்கப்படல் வேண்டும். சும்மா ஒருவருஷம்... ஏழு வருஷம்.. எல்லாம் வேலைக்காகாது. இலங்கையில் முஸ்லிம்களுக்கு என்று "தனி சிவில் சட்டம்" இருப்பது போன்று முஸ்லிம்களுக்கு என்று "தனி கிரிமினல் சட்டம்" கொண்டுவரச் சொல்லி ஈழமக்கள் இலங்கை அரசிடம் விண்ணப்பித்து, அதுபோன்ற நெறிதவரும் முஸ்லிம் ஆண்களுக்கு இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் குற்றங்களுக்கு ஏற்றவகையில் மரணதண்டனை கொடுக்க வைத்தால்... ஈழப்பெண்கள் தப்பலாம்..!
சகோ.சந்ரு தன் பதிவில் சுட்டிக்காட்டிய அந்த மூன்று தீய முஸ்லிம் ஆண்களின் குற்றம் ஐயத்துக்கிடமின்றி நீதிமன்ற விசாரணையில் நிரூபிக்கப்பட்டு நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டு விட்டால்... அந்த மூன்று பேருக்கு மரணதண்டனை விதித்தாலே போதும்..! இனி அது போன்ற குற்றத்தை இனியொரு... ஒரே ஒரு தீய முஸ்லிம் கூட செய்ய... இல்லை... இதுபற்றி சிந்திக்கக்கூட மாட்டான். நல்ல முஸ்லிம் என்பவன் சட்டம் என்ற ஒன்றே இல்லாவிட்டாலும்கூட இறையச்சம் கொண்டு இன்னொரு பெண்ணை தீய பார்வை கொண்டு நிமிர்ந்து கூட பார்க்க மாட்டானே..?
தீர்வு-2
விபச்சாரம் புரியும் ஈழத்தமிழ்ப்பெண்களுக்கு... 'அது தவறு' என்றும், 'குற்றம்' என்றும் அறிவுறுத்தி, அதனால் மருந்தில்லாத தீராத எயிட்ஸ் போன்ற பால்வினை நோய்கள் பரவும் என்றும் விழிப்புணர்வூட்டிய பின்னர், அதில் ஈடுபடும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கடும் தண்டனை வழங்கப்படல் வேண்டும். சும்மா 'பெட்டி கேஸ்' போல அபராதம் எல்லாம் வேலைக்கு ஆகாது. நீண்டகாலம் சிறைத்தண்டனை நன்று. சோற்றுக்காத்தானே இதை செய்கிறார்கள்..? சிறையில் மூன்றுவேளை சோறு கிடைக்கும் அல்லவா..?
விபச்சாரத்தின் பக்கமே செல்லாத விதவைகளுக்கு வாழ வழி..? இலங்கை போன்ற ஒரு நாட்டில், திடீரென லட்சக்கணக்கில் வேலைவாய்ப்பை ஏற்படுத்த இயலாது. அதுவும் இனவாதப்பார்வை கொண்ட சிங்கள அரசால், தமிழர்களுக்கு பாரிய நன்மை செய்ய இயலுமா..? அப்படியே அதிசயமாக இயன்றாலும், அவை வயிற்றுப்பசிக்கு மட்டுமே தீர்வாக அமையும். எனவே, விதவை மறுமணம் ஊக்குவிக்கப்படல் வேண்டும். ஆனால், சகோ.சந்ருவின் பதிவின் அடிப்படையில், மட்டக்களப்பு என்ற ஒரே ஒரு மாவட்டத்திலேயே 40,000க்கும் மேல் விதவைகள் இருந்தால்... ஈழம் முழுவதும் எத்தனை பேர் இருக்க வேண்டும்..? அத்தனை பேருக்கும் எப்படி தனித்தனி மாப்பிள்ளை கிடைப்பார்கள்..? இதுதான் இப்பிரச்சினையின் ஆணிவேர்..!
ஆக, இதுபோன்று பலவருடங்கள் போர் நடந்து முடிந்த ஒரு நாட்டில் ஆண்மக்கள் எண்ணற்றோர் மடிந்து ஆண்கள் எண்ணிக்கையில் வெகுவாக குறைந்து... விதவைகளும் முதிர்கன்னிகளுமாக பெண்மக்கள் மிகுதியாகி... இப்படியான ஒரு குழப்ப சூழல் ஏற்படுவது இயல்பே..! இதொன்றும் புதிய சூழல் இல்லை. 1400 ஆண்டுகால பழசுதான்..! இப்போது, மாப்பிள்ளை பற்றாக்குறை என்று இளம் விதவைகளை திருமணத்திலிருந்து தள்ளி வைக்க முடியாது. இந்நிலையில் விதவை மறுமணம் என்பதும் ஒரு பெண்ணுரிமை.
இப்படியான கட்டத்தில், "இந்த குழப்ப நிலைமையில் இதற்கு என்ன தீர்வு" என்றுதான் நாம் சிந்திக்க வேண்டும். போரில்லாத சகஜ நிலையில் உள்ள வாழ்க்கையின் வாழ்வியல் தீர்வை இங்கே சட்டமாகவோ மதச்சடங்காகவோ வலுக்கட்டாயமாக திணிக்கக்கூடாது. அது இயங்கியல் ரீதியாக நடவாது. அப்படிச்செய்வதால்தான் சகோ.சந்ரு தன் பதிவில் குறிப்பிட்டிருந்த குற்றங்கள் நடந்தன. நடக்கின்றன. நடந்தே தீரும்.
இதற்கு என்ன செய்யலாம்..? தமக்கு இன்னும் இளம் வயதும், செல்வமும், சம்பாரிக்கும் ஆற்றலும், உடல்திடமும், தாராள மனமும் கொண்ட ஈழத்து ஆண்கள் நிறைந்த மனதோடு தாமாக முன்வந்து வரதட்சினை சீர் போன்ற ஏதுமின்றி ஈழத்தமிழ் விதவைகளை அவர்களின் குழந்தைகளோடு எவ்வித நிபந்தனையுமின்றி முதல் தாரமாகவோ, இரண்டாம் தாரமாகவோ, மூன்றாம் தாரமாகவோ மணக்க முன்வரவேண்டும்..!
இதொன்றும் புதிய தீர்வு இல்லை. 1400 ஆண்டுகால பழசுதான்..! இதில் வரக்கூடிய ஒரே ஒரு பெரிய எதிர்ப்பு முதல் மனைவியிடமிருந்து வரலாம். தன் கணவனை போரில் இழக்காத அதிர்ஷ்டசாலிகளான அவர்கள், சமூகத்துக்காக பெருந்தன்மையுடன் தம் ஈழ சகோதரிகளுக்காக தம் வாழ்வை பகிர்ந்தளித்து விட்டுக்கொடுக்க வேண்டும்.!
அதாவது... ஈழப்பெண்களும் சமூகமும் மதத்தலைவர்களும் சட்டமும்பல 'சிலதார மணம்' செய்துகொள்ள பல ஆண்களை அனுமதிக்க வேண்டும்..!
இதொன்றும் புதிய தீர்வு இல்லை. 1400 ஆண்டுகால பழசுதான்..! இதில் வரக்கூடிய ஒரே ஒரு பெரிய எதிர்ப்பு முதல் மனைவியிடமிருந்து வரலாம். தன் கணவனை போரில் இழக்காத அதிர்ஷ்டசாலிகளான அவர்கள், சமூகத்துக்காக பெருந்தன்மையுடன் தம் ஈழ சகோதரிகளுக்காக தம் வாழ்வை பகிர்ந்தளித்து விட்டுக்கொடுக்க வேண்டும்.!
அதாவது... ஈழப்பெண்களும் சமூகமும் மதத்தலைவர்களும் சட்டமும்
ஈழத்தைவிட பன்மடங்கு பாதிக்கப்பட்ட நாடு இராக் என்பதை அறிவீர்கள்.
26 January 2011
Years of conflict in Iraq have left the country with more than one million war widows and a shortage of young unmarried men – pressures that may be bringing about the return of polygamy. Politicians have suggested financial incentives for men who marry widows.Polygamy Returns to Iraq ; Half a man is better than none?
By Will Offensicht | March 4, 2011
"I used to feel vulnerable with no support, afraid that anyone could attack me and anyone could harass me," she says.
"A man's protection is like a shelter. And this is what a woman needs from a man." she, the war widow adds.
இந்த இராக்கின் தீர்வு ஈழத்துக்கும் பொருந்தும்தானே..?
டிஸ்கி:
தற்போது சகோ.சந்ரு, என்ன நினைத்தாரோ தெரியவில்லை..! அதே இடுகையை வேறொரு தலைப்பில்... விபச்சார விடுதியாக மாறும் மட்டக்களப்பு பேருந்து தரிப்பிடம் என்று... அடுத்த பதிவாக வெளியிட்டு, அங்கே முந்திய அதே இடுகைக்கு சுட்டி மட்டும் கொடுத்து இருக்கிறார்...!
அறைகூவல் :
அனைத்து போர்விதவைகளின் திருமணம் உட்பட்ட மறுவாழ்வுக்கு இப்பதிவில் சொல்லப்பட்ட சிலதாரமணம் தவிர்த்து வேறு தீர்வு ஏதேனும் உங்களிடம் இருந்தால் தாராளமாக இங்கு பின்னூட்டத்தில் முன்மொழியலாம்..!
அறைகூவல் :
அனைத்து போர்விதவைகளின் திருமணம் உட்பட்ட மறுவாழ்வுக்கு இப்பதிவில் சொல்லப்பட்ட சிலதாரமணம் தவிர்த்து வேறு தீர்வு ஏதேனும் உங்களிடம் இருந்தால் தாராளமாக இங்கு பின்னூட்டத்தில் முன்மொழியலாம்..!
54 ...பின்னூட்டங்கள்..:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
விபச்சாரம் புரியும் ஆண்கள் மீதும் பெண்கள் மீதும் இறைவனின் சாபம் உண்டாகட்டும்.
எனது கடுமையான கண்டங்ங்கள்
அஸ்ஸலாமு அலைக்கும்
சகோ.சந்ரு அவர்கள் சமுக அக்கரையில் எழுத வில்லை. மத வெறுப்பின் காரணமாக எழுதப்பட்டது.
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...
மிக அருமையாக பதிவை ஹேண்டில் செய்திருக்கின்றீர்கள். மாஷா அல்லாஹ்.
///முஸ்லிம்கள் என்றால் மிகவும் நல்லவர்களாக வாழ வேண்டும் என்று மற்றவர்கள் எதிர்பார்க்கிறார்கள். முஸ்லிம்களிடம் இறைவன் எதிர்பார்ப்பதும் இதைத்தான்..! :-))இதுபோல 'கெடுபிடி கடிவாளம்' இருந்தால் தான் குற்றம் செய்ய எத்தனிக்கும் ஓரிரு தீய முஸ்லிம்கள் கூட அதனை செய்ய தயங்குவார்கள்.///
சரிதான்...
வஸ்ஸலாம்,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
அஸ்ஸலாமு அலைக்கும் சகா ஆஷிக்!
ஈழப்பிரச்னைக்கு இளம் விதவைகளுக்கு இஸ்லாம் காட்டிய பலதார மணமே ஒரு நிரந்தர தீர்வு. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையை இங்கு பயன்படுத்தினால் விபச்சாரம்தான் பெருகும். எல்லா நாட்டுக்கும் எந்த சந்தர்ப்பத்திலும் பயன் படுத்த ஏற்ற சட்டங்களே இஸ்லாமிய சட்டங்கள் என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது.
இது போன்ற முஸ்லிம்கள் நிச்சயமாக தண்டிக்க பட வேண்டியவர்களே.
தோழர்,
ஒரு வகையில் இந்த கட்டுரை சந்ரு போன்றவர்களுக்கு பதிலாக இருந்தாலும்... இந்த பிரச்சினையை நீங்கள் இருவருமே மதம் சார்ந்த நபர்களின் பார்வையிலேயே பார்க்கிறீர்கள்... இஸ்லாமிய ஆண்களுக்கு என்று தனி சட்டம் வர வேண்டும் என்று கூறுகிறீர்கள்... இது வேடிக்கையானது.. தவறு செய்யாதவன் எந்த மதமாக இருந்தாலும் அவன் மனிதன்.. தவறு செய்பவன் எந்த மதமாக இருந்தாலும் அவன் மிருகம் என்ற பார்வையில் பார்த்தீர்களேயானால் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்...
காமவெறியர்கள் அணைத்து மதத்திலும் இருக்கிறார்கள்.அங்கு நடப்பது விபச்சாரம். விபசாரன் விபசாரியிடத்தில் போகிறான்.இதில் ஒரு மதத்தை சேர்ந்தவரை மட்டும் குற்றம் சொல்வது உள்நோக்கம் உள்ள செயல் அல்லவா ?
நண்பரே உங்கள் சமூக அக்கறைக்கு நன்றிகள். நான் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை மட்டுமே எழுதி வருபவன். என்னுடைய பதிவுகள் அனைத்தையும் பாருங்கள் இவ்வாறான பெண்கள் தொடர்பாகவும் தடுக்கும் வழிகள் தொடர்பாகவும். வாழ்வாதாரத் திட்டங்கள் தொடர்பாகவும் முன்னரே பல இடுகைகளை இட்டிருக்கின்றேன். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பாக பல வாழ்வாதாரத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். நாட்டில் இடம் பெற்ற கோர யுத்தத்தின் காரணமாகவே மட்டக்களப்பில் 40000 அதிகமான விதவைகள். மட்டக்களப்பில் மட்டும்தான் இவ்வளவு அதிகம் காரணம் யுத்தத்தில் நேரடியாகப் பங்கு கொண்டவர்கள் மட்டக்களப்பு இளைஞர் யுவதிகளே. 40000 மேற்பட்ட விதவைகளுக்கு உடனடியாகவே நாம் வாழ்வாதாரத் திட்டங்களை செயற்படுத்த முடியாது. இருந்தபோதும் பல வாழ்வாதாரத் திட்டங்கள் எதிர்காலத்தில் செயற்படுத்தப்பட இருக்கின்றன. என்னுடைய பதிவுகளைப் பாருங்கள் மறுமணம் தொடர்பாகவெல்லாம் பல தடவை எழுதி இருக்கின்றேன். விதவைகள் தொடர்பாகவும் அவர்களின் தீர்வுத் திட்டங்கள் தொடர்பாகவும் பல தடவை பதிவிட்டிருக்கின்றேன்.
நான் முஸ்லிம் என்று எழுதியதற்காக போர்க்கொடி தூக்குகின்றீர்களே. உசனமலையைச் சேர்ந்த சிறுமியை வேலை பெற்றுத் தருவதாக அழைத்துச் சென்று வயிற்றில் பிள்ளையை கொடுத்திருக்கின்றார் ஏறாவூரைச் சேர்ந்த இஸ்மாயில். அந்தப் பிள்ளையின் எதிர்காலம் பற்றிச் சிந்திக்கின்றீர்களா? அந்தப்பிள்ளையின் நிலை என்ன? முஸ்லிம் என்று எழுதிவிட்டேன் என்று போர்க்கொடி தூக்குவதனை விடுத்து பாதிக்கப்பட்டவர்கள் பற்றியும் சிந்தியுங்கள். இன்று பலரும் வாய் மூடி இருப்பது தமிழ் முஸ்லிம் பிரச்சினை வந்துவிடும் என்பதற்காகத்தான். அதற்காக என்னால் எழுதாமல் இருக்க முடியாது. நாம் குறித்த நபர்கள்மீது கடும் நடவடிக்கை எடுத்தால் தமிழ் முஸ்லிம் பிரச்சினையாக்ககூட குறித்த நபர்கள் திட்டமிட்டிருந்தனர். மட்டக்களப்பு பேருந்து தரிப்பிட போன் கடை உரிமையாளரை கையும் மெய்யுமாக பிடித்தபோது. எங்களால் அடிக்க முடியாமல் இல்லை. அவர் தமிழ் முஸ்லிம் பிரச்சினையாக்க முயற்சி செய்தார். எழுதிய என்னை மட்டும் குற்றம் சொல்லாமல் மனிதாபிமானத்துடன் எழுதுங்கள். குற்றம் செய்பவர்களை திருத்த நினையுங்கள். பாதிக்கப்பட்ட சிறுமி உங்கள் தங்கையாக இருந்தால் சும்மா விடுவீர்களா? எங்கே ஐயா உங்கள் நியாயம் இருக்கிறது.
சொல்ல வந்த விஷயத்தை தெளிவாகவும் உணர்த்த வேண்டியதை நயமாக ஊடே சொருகியும் உணர்த்தி உள்ளீர்கள். நன்று. முஸ்லிம் நாடான ஈராக்கில் எதற்காக பலதாரமணத்தை தடை செய்தார்கள்? குரானுக்கு மாற்றமில்லையா இந்த தடை? செய்தி புதிதாக உள்ளது.
இதுபோன்ற பிரச்சினைக்கு 'Polygamy is the one and only solution' என்பதில் எனக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், பெருவாரியான இந்துக்களை கொண்ட ஈழத்தில் இதனை நடைமுறைப்படுத்த சாத்தியம் இல்லையே. முஸ்லிம்களுக்கு தனி சிவில் சட்டத்தையே எதிர்க்கும் நிலையில் நீங்கள் தனி கிரிமினல் சட்டம் கேட்க ஆரம்பித்து விட்டீர்கள். பலே. மற்றபடி, இடுகை நல்ல நோக்கத்தின்படியே இயற்றப்பட்டுள்ளது. weldone citizen of world.
//நான் முஸ்லிம் என்று எழுதியதற்காக போர்க்கொடி தூக்குகின்றீர்களே. உசனமலையைச் சேர்ந்த சிறுமியை வேலை பெற்றுத் தருவதாக அழைத்துச் சென்று வயிற்றில் பிள்ளையை கொடுத்திருக்கின்றார் ஏறாவூரைச் சேர்ந்த இஸ்மாயில். அந்தப் பிள்ளையின் எதிர்காலம் பற்றிச் சிந்திக்கின்றீர்களா? அந்தப்பிள்ளையின் நிலை என்ன?//
திரு சந்ரு அவர்களே! முஸ்லிம்கள் தவறு செய்தால் அதை சுட்டிக் காட்ட வேண்டாம் என்று யாரும் இங்கு கூறவில்லை, அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை, மேலும் இஸ்லாமிய நம்பிக்கைப்படி இந்த உலகில் கிடைக்கவில்லை என்றாலும் மறுமையில் நிச்சயம் இறைவனின் தண்டனையில் இருந்து தப்ப முடியாது. இது இஸ்லாத்தின் மிக முக்கிய நம்பிக்கைகளில் ஒன்று.
நீங்கள் முஸ்லிம்கள் மட்டும் தவறு செய்வதாக இங்கு எழுதியிருப்பதால் மற்ற மதத்தினர் அனைவருமே நல்லவர்கள் என்ற அர்த்தம் தானாகவே வந்து விடுகிறது, ஒருவேளை அது உண்மையாக கூட இருக்கலாம் யார் கண்டது?
உங்கள் பழைய தலைப்பாகிய "முஸ்லிம் ஆண்களின் காம வெறிக்கு இரையாகும் தமிழ் பெண்கள் " என்று எழுதியிருப்பதன் மூலம் முஸ்லிம்கள் யாரும் தமிழர்கள் இல்லை என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது, ஒருவேளை இலங்கையில் அது போன்ற சூழ்நிலை நிலவலாம்.
அனால் இங்கு தமிழ்நாட்டில் அப்படியில்லை, இங்கு முஸ்லிமாக இருந்தாலும் அவன் தமிழன்தான்,
நீங்கள் தலைப்பிடும் பொழுது இந்திய தமிழ் முஸ்லிம்களின் நிலையையும் நினத்திருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இந்த தலைப்பின் மூலம் மீண்டும் (தமிழ்) முஸ்லிகள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றனர், இது இப்பொழுதெல்லாம் சாதாரண நிகழ்வாக ஆகிவிட்டது பரவாயில்லை.
இதே போன்ற வருத்தம் உங்களுக்கும், எம் சகோதரிகளின் கற்பு சூறையாட படும் பொழுது ஏற்பட்டிருக்கும் என்பது சிறிதளவும் சந்தேகம் இல்லை.
மேலும், இலங்கை அகதிகள் (தமிழ் நாட்டில்)மண்டபம் அகதிகள் முகாம்களில் விபசாரத்தில் ஈடுபட்ட பொழுது அங்கு மத வித்தியாசம் இல்லாமல் அனைவருமே சென்று வந்தனர், இது உண்மையிலும் உண்மை,
இது சரி என்று வாதிடுவதல்ல என் நோக்கம், தவறு நடக்க காரணிகள் யாது என்பதை கொஞ்சம் எண்ணிப்பார்க்க வேண்டும் என்பதே என் அவா. (சிங்கள வெறியர்களின் இன வெறிதான் உண்மையான காரணம் என்பது நான் சொல்லி விளங்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்). காரணம் எதுவாக இருந்தாலும், விபசாரம் செய்பவரையும், விபசாரம் செய்ய தூண்டுபவரையும் சட்டத்தின் மூலமோ அல்லது சுயமாகவோ தண்டியுங்கள் இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.
தயவு செய்து இதை தவறு செய்யும் அந்த முஸ்லிம் பெயர்தாங்கிகளுக்கான வக்கலத்தாக கருத வேண்டாம். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
நீங்கள் உங்கள் தமிழ் பெண்களை மட்டும் நினைத்து கவலைப்படுகிறீர்கள், அனால் சகோ. முகமது ஆஷிக் உலக பெண்களுக்கான தீர்வை இப்பதிவு மூலம் வைத்திருக்கிறார். நன்றி
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
// இந்த இராக்கின் தீர்வு ஈழத்துக்கும் பொருந்தும்தானே..? //
இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக! அதன் தாக்கம் தான் பதிவு முழுக்க எதிரொலிக்கிறது.,
ஜஸாகல்லாஹ் கைரன்
பகிர்ந்த பதிவிற்கு நன்றி! சகோ
எழுதிய என்னை மட்டும் குற்றம் சொல்லாமல் மனிதாபிமானத்துடன் எழுதுங்கள். குற்றம் செய்பவர்களை திருத்த நினையுங்கள். பாதிக்கப்பட்ட சிறுமி உங்கள் தங்கையாக இருந்தால் சும்மா விடுவீர்களா? எங்கே ஐயா உங்கள் நியாயம் இருக்கிறது.///
சகோ.சந்ரு தன் பதிவில் சுட்டிக்காட்டிய அந்த மூன்று தீய முஸ்லிம் ஆண்களின் குற்றம் ஐயத்துக்கிடமின்றி நீதிமன்ற விசாரணையில் நிரூபிக்கப்பட்டு நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டு விட்டால்... அந்த மூன்று பேருக்கு மரணதண்டனை விதித்தாலே போதும்..!
----------------------
@சகோ சந்ரு
விவாதம் பண்ண வரவில்லை. தெளிவு பெறவே!!!
ஒரு சின்ன சந்தேகம் மட்டுமே.
//அவர் தமிழ் முஸ்லிம் பிரச்சினையாக்க முயற்சி செய்தார்.//
பிரிவினை ஏற்பட கூடாது என இந்தளவுக்கு மெனக்கிட்டதற்கு நன்றி சகோ. இந்த எண்ணம் "முஸ்லீம் ஆண்கள்" என தலைப்பில் குறிப்பிடும் போது பிரிவினை ஏற்படுத்தாதா :-) ஏன் அதை நீங்கள் யோசிக்கவில்லை??
மிகவும் நாசுக்காக விஷயத்தினை கையாண்டு பதிலுரை கொடுத்தமை சிறப்பு. மிகவும் ஆக்கப்பூர்வமான கருத்துக்கள். நன்றித் தோழரே!
நல்ல கருத்தைக்கொடுத்திருக்கிறீர்கள்.
ஆனால்,ஆண்கள் பலதார மணம் என்று வரும்போது பெண்களின் சமவுரிமை பாதிக்கப்படுகிறதே?... என்றும்,
எதிர்காலத்தில் ஏதேனுமொரு சூழலில் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்தால் -பெண்கள் பலதார மணம்.. என்று அனுமதிக்முடியுமா? என்றும் மனதில் கேள்வி எழுகிறது.
இதை எதிர்ப்பதிவாக இடவில்லை.சந்தேகமாக கேட்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்க்கும்..
மிக அருமையான பதிவு சகோ.. நானும் சந்துருவின் பதிவின் தலைப்பை பார்த்து கடுப்பாகி போனேன்..
அதற்கு பதில் சொல்லும் விதமாக நிறைய விடயங்களை சொல்லியிருக்கிறீர்கள் நன்றி..
சந்துருவின் பதிவில் முஸ்லிம்கம் மட்டும்தான் அப்படி செய்கிறார்கள் என்ற தோரனையில் எழுதப்பட்டது கண்டிக்கத்தக்கது. விபச்சாரத்தை தொழிலாக கொண்டவர்கள் காசு கொடுத்தால் யாருடன் வேண்டுமானாலும் ஏன் சிங்களவர்கள் கூடனும் செல்லலாம்..
சந்துரு சொல்வது போல் முஸ்லிம் இளைஞ்சர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவார்களாயின் அதற்கு தகுந்த தண்டனை அளிக்க வேண்டும்..
மேலும் சும்மா சொல்வதை விட பெயர் ஆதாரங்களுடன் முடிந்தால் புகைப்படத்துடனாவது சந்துரு அந்த தகவல்களை வெளியிடட்டும்.. சும்மா எங்களிடம் ஆதாரம் இருக்கு என்று பூச்சாண்டி காட்டுவது வேலைக்காவது! எங்களுக்கும் தேவை காமவெறியர்களுக்கு தண்டனேயே அது யாராக இருப்பினும் சரியே..
//சோற்றுக்காத்தானே இதை செய்கிறார்கள்..? சிறையில் மூன்றுவேளை சோறு கிடைக்கும் அல்லவா..?//
சபாஷ்!
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்
தமிழ்ப்பெண்களுக்கு எதிரான வன்முறை நீடிப்பு
சர்வதேச மனித உரிமைகள் குழு தகவல்
கொழும்பு, டிச.22-
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழ்ப் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருவதாக சர்வதேச மனித உரிமைகள் குழு தெரிவித்து உள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறை
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் இடையே இறுதிக்கட்ட போர் நடைபெற்ற போது மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும், அப்பாவி தமிழர்கள் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாகவும் ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளது.
போர் முடிந்த பின்னரும் அங்கு தொடர்ந்து மனித உரிமைகள் மீறப்பட்டு வருகின்றன. போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதாக பிரசல்ஸ் நகரைச் சேர்ந்த சர்வதேச மனித உரிமைகள் குழு ஒன்று தெரிவித்து உள்ளது.
இதுபற்றி அந்த குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தனிமையில் பெண்கள்
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நடந்து வருவதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்து உள்ளன. போரில் கணவர் இறந்ததாலோ அல்லது பெற்றோர் இறந்ததாலோ பல பெண்கள் தனியாக வசிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு உள்ளது.
சில பெண்களின் கணவர்களை விசாரணைக்காக ராணுவத்தினர் பிடித்து வைத்து இருப்பதால் அந்த பெண்கள் தனிமையில் வசிக்கிறார்கள். சில பெண்கள் குழந்தைகளுடன் வசிக்கிறார்கள்.
பாலியல் பலாத்காரம்
அப்படி வசிக்கும் பெண்கள் தாங்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படலாம் என்ற அச்சத்திலேயே வாழ்கிறார்கள். சில பெண்கள் பாலியல் பலாத்காரமும் செய்யப்படுகிறார்கள்.
தங்களுடைய கணவர் அல்லது குடும்பத்தில் உள்ள மற்ற ஆண்கள் என்ன ஆனார்கள் என்பது பற்றி விசாரிப்பதற்காக ராணுவத்தினரிடம் செல்லும் சமயங்களில் அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். அந்த பகுதிகளில் ராணுவத்தினரை கட்டுப்படுத்தவும் முடியாது.
அச்சம்
பாலியல் பலாத்கார கொடுமைக்கு ஆளாகும் பெண்கள் அதுபற்றி யாரிடமும் புகார் செய்வதும் இல்லை. அப்படி புகார் செய்தால் ராணுவத்தின் பிடியில் இருக்கும் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று அஞ்சுகிறார்கள்.
SOURCE: http://www.dailythanthi.com/article.asp?NewsID=696519&disdate=12/22/2011
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ.
அருமையாக பதிலை கொடுத்துள்ளீர, நன்றி சகோதரரே
//யோகராஜா சந்ரு said... 9
நான் முஸ்லிம் என்று எழுதியதற்காக போர்க்கொடி தூக்குகின்றீர்களே.//
நிங்கள் உண்மையாளராக இருந்தல் யாரவது பெயரை பயணபடுத்தினால் பெயர்க்கு முன்னால் மததை பயன்படுத்த வேண்டும், உதாரணம் (கிறிஸ்துவர்: ஜார்ஜ் புஸ்) (இந்து: யோகராஜா சந்ரு) (புத்தமதம்: ராஜே பக்சே) Etc...., முஸ்லிமகளுக்கு மட்டும் பயண்படுத்தினால் நீங்கள் எந்த நிலைன் நீங்களே தேர்வு செய்ங்கா
@ஹைதர் அலிஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//விபச்சாரம் புரியும் ஆண்கள் மீதும் பெண்கள் மீதும் இறைவனின் சாபம் உண்டாகட்டும்.//---ஆமீன்..!
@சாதிக்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//மத வெறுப்பின் காரணமாக எழுதப்பட்டது.//---இந்த பதிவுக்கும்கூட அவரின் பதிலாக பின்னூட்டம்#9-ஐ கண்டவுடன் எனக்கும் இப்படித்தான் எண்ணத்தோன்றுகிறது, சகோ.சாதிக்.
@Aashiq Ahamedஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//மிக அருமையாக பதிவை ஹேண்டில் செய்திருக்கின்றீர்கள்.//---நன்றி சகோ.ஆஷிக் அஹமத்.
@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//எல்லா நாட்டுக்கும் எந்த சந்தர்ப்பத்திலும் பயன் படுத்த ஏற்ற சட்டங்களே இஸ்லாமிய சட்டங்கள் என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது.//
---ஆமாம் சகோ.சுவனப்பிரியன். 100% நிரூபணம் ஆகிறது..!
@suryajeeva//இஸ்லாமிய ஆண்களுக்கு என்று தனி சட்டம் வர வேண்டும் என்று கூறுகிறீர்கள்...//---இப்படி கூறுவதற்கு காரணம் உண்டு சகோ.சூர்யாஜீவா. "ஒண்ணுமே இல்லாத விபச்சார மற்றும் பாலியல் வல்லுறவு கேசுக்கெல்லாம் மரணதண்டனையா..?" என்று மற்றவர் பொங்கியெழுந்து எதிர்த்தாலும், முஸ்லிம்கள் வாயை மூடிக்கொண்டு அப்படியே எதிர்ப்பில்லாமல் ஏற்றுக்கொள்வார்கள் என்பதால் "உரிமையோடு" அப்படி சொன்னேன்.
//இது வேடிக்கையானது..//---இல்லை... இல்லை...வேடிக்கையே இதற்கு அப்புறம்தானே சகோ வரப்போகிறது..!
எல்லா தரப்பினரும் இதே சட்டத்தை தங்களுக்காகவும் கேட்கும்போது..!
@Barari///விபசாரன் விபசாரியிடத்தில் போகிறான்.இதில் ஒரு மதத்தை சேர்ந்தவரை மட்டும் குற்றம் சொல்வது உள்நோக்கம் உள்ள செயல் அல்லவா ?///---ஆமாம் சகோ.பராரி. இருவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.
@யோகராஜா சந்ரு@பின்னூட்டம்#8
மிக அருமையான கருத்துக்களை கூறியுள்ளீர்கள் சகோ.சந்ரு. வரவேற்கிறேன்.
ஆனால்,நான் இங்கே தீர்வாக முன்வைத்து இருப்பவை :
1-பாலியல் வல்லுறவு செய்யும் விபச்சாரனுக்கு (அவன் உங்கள் பதிவின் படி முஸ்லிம் என்பதால்) தனி கிரிமினல் சட்ட (இஸ்லாமிய) தண்டனை.
2-விபச்சாரிக்கு (அவள் முஸ்லிம் இல்லை என்பதால்) நீண்ட காலம் மூன்று வேலை சோறுபோட்டு சிறைத்தண்டனை.
3-நீங்கள் சொன்ன 'விதவை மறுமணம்' எல்லாருக்கும் சாத்தியப்படாது என்று லாஜிக்கலாக சுட்டிக்காட்டி அதற்கு தீர்வாக... 'சிலதாரமணம்'.
இவை மூன்றையும் நீங்கள் அந்த பதிவில் எழுதி இருந்தாலோ...
அல்லது அதற்கு முன்பே எழுதி இருந்தாலோ...
அந்த சுட்டியை அந்த பதிவில் தொடர்புள்ள இடுகை என்று இட்டிருந்தாலோ...
இந்த பதிவுக்கு வேலை இல்லை.
இவை மூன்றையும் எழுதி இருக்கிறீர்களா..?
மேலும்,
இவை மூன்றில் ஏதேனும் ஒன்றைக்கூட நீங்கள் "இது சரியான தீர்வல்ல" என்று மறுக்கவோ ... "இதோ என் மாற்றுத்தீர்வு" என்று முன்மொழியவோ இல்லை என்பதை இங்கே நான் கூறிக்கொள்கிறேன் சகோ.சந்ரு.
@யோகராஜா சந்ரு//நான் முஸ்லிம் என்று எழுதியதற்காக போர்க்கொடி தூக்குகின்றீர்களே.//
இதோ எனது வெள்ளைக்கொடி..!
--->>>இந்த அடிப்படையில் சகோ.சந்ரு பதிவின் தலைப்புக்கு எனக்கு எவ்வித வருத்தமும் இல்லை<<<---
///எழுதிய என்னை மட்டும் குற்றம் சொல்லாமல் மனிதாபிமானத்துடன் எழுதுங்கள். குற்றம் செய்பவர்களை திருத்த நினையுங்கள். பாதிக்கப்பட்ட சிறுமி உங்கள் தங்கையாக இருந்தால் சும்மா விடுவீர்களா? எங்கே ஐயா உங்கள் நியாயம் இருக்கிறது.///
இதோ எனது மனிதாபிமானம் & நியாயம்..!
--->>>நெறிதவரும் முஸ்லிம் ஆண்களுக்கு இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் குற்றங்களுக்கு ஏற்றவகையில் மரணதண்டனை கொடுக்க வைத்தால்... ஈழப்பெண்கள் தப்பலாம்..!<<<---
பதிவை முழுமையாக படிக்காமல் குறை சொன்னால் நான் என்ன சொல்வது சகோ.சந்ரு..?
@சிந்தனை செய்//முஸ்லிம் நாடான ஈராக்கில் எதற்காக பலதாரமணத்தை தடை செய்தார்கள்?//--->>>பெண்ணுரிமையை காப்பதற்காகவாம்..!
:-)
"அப்புறம் எதற்கு மறுபடியும் கொண்டுவந்தார்களாம்?"---என்று கேளுங்கள்..!
--->>>பெண்களை காப்பதற்காகவாம்..!
:-)))))
//குரானுக்கு மாற்றமில்லையா இந்த தடை?//---ஆமாம், இறைவன் அனுமதித்த ஒன்றை தடை போட இவர்கள் யார்..? நிலையில் தலை முட்டியது..! இப்போது குனிந்து செல்கிறார்கள்..! படிப்பினை..!
@இறைநேசச்செல்வன்///பெருவாரியான இந்துக்களை கொண்ட ஈழத்தில் இதனை நடைமுறைப்படுத்த சாத்தியம் இல்லையே.///
இதற்கான பதில்...
///இதுபோன்ற பிரச்சினைக்கு 'Polygamy is the one and only solution' என்பதில் எனக்கும் மாற்றுக்கருத்து இல்லை.///---நன்றி.
///முஸ்லிம்களுக்கு தனி சிவில் சட்டத்தையே எதிர்க்கும் நிலையில் நீங்கள் தனி கிரிமினல் சட்டம் கேட்க ஆரம்பித்து விட்டீர்கள். பலே.///---அப்படி ஒன்று இந்தியாவில் வந்தால் வரவேற்போம்..!
@sibramsha///தயவு செய்து இதை தவறு செய்யும் அந்த முஸ்லிம் பெயர்தாங்கிகளுக்கான வக்கலத்தாக கருத வேண்டாம். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
நீங்கள் உங்கள் தமிழ் பெண்களை மட்டும் நினைத்து கவலைப்படுகிறீர்கள், அனால் சகோ. முகமது ஆஷிக் உலக பெண்களுக்கான தீர்வை இப்பதிவு மூலம் வைத்திருக்கிறார். நன்றி///
---அருமையான பல கருத்துக்கள கொண்ட நீண்ட விளக்கத்துக்கு நன்றி சகோ.சிப்ரம்ஷா.
@G u l a mஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக!//---சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்கட்டும் சகோ.குலாம்.
@ நிஸாம்,
//நிங்கள் உண்மையாளராக இருந்தல் யாரவது பெயரை பயணபடுத்தினால் பெயர்க்கு முன்னால் மததை பயன்படுத்த வேண்டும், உதாரணம் (கிறிஸ்துவர்: ஜார்ஜ் புஸ்) (இந்து: யோகராஜா சந்ரு) (புத்தமதம்: ராஜே பக்சே) Etc...., முஸ்லிமகளுக்கு மட்டும் பயண்படுத்தினால் நீங்கள் எந்த நிலைன் நீங்களே தேர்வு செய்ங்கா///
ரிப்பீட்டு...
@ ஆஷிக்,
நாம் எழுதியிருக்க வேண்டிய பதிவு, நம் சார்பில் எழுதியமைக்காக எம் நன்றிகள்
@முஸ்லிம்அருமையாக விளக்கியமைக்கு மிக்க நன்றி சகோ.முஸ்லிம்.
@ஆமினா//"முஸ்லீம் ஆண்கள்" என தலைப்பில் குறிப்பிடும் போது பிரிவினை ஏற்படுத்தாதா :-) ஏன் அதை நீங்கள் யோசிக்கவில்லை??//---இதே கேள்வியை அவருடைய பதிவின் பின்னூட்டத்தில் பலர் கேட்டிருக்கிறார்கள் சகோ.ஆமினா.
அதற்கு இவரின் பதில்,
"குற்றம் செய்தவர்கள் முஸ்லிம்கள் என்பதால் முஸ்லிம்கள் என்றுதானே போட முடியும்?" என்பதாக..! இதையும் மக்கள் எதிர்த்து கேட்டனர்.
அதனால்தான் அடுத்தநாள் அடுத்த தலைப்பில் மீண்டும் அதே பதிவுக்கு லிங்க்...
டிஸ்கியை பாருங்கள்..!
அங்கே ///விபச்சார விடுதியாக மாறும் மட்டக்களப்பு பேருந்து தரிப்பிடம்///---இதில் இந்த விபச்சாரிகள் யார் என்றோ.. எந்த மதத்தவர் என்றோ... எந்த மொழியினர் என்றோ போட வில்லை..!
இப்போது ஒன்று கேட்க முடியும்... அந்த பெண்கள் முஸ்லிம்கள் என்றால்... தலைப்பு எப்படி இருந்திருக்கும் என்று..!
(இதற்குத்தான் டிஸ்கி வைத்தேன்)
இதுதான் மதவெறி/இனவெறி எனப்படுவது..!
அதாவது குற்றம் இழைப்போர் தம் இனம்/மதம்/மொழி என்றால் மறைப்பது..!
@atchaya///மிகவும் நாசுக்காக விஷயத்தினை கையாண்டு பதிலுரை கொடுத்தமை///---மிகவும் நன்றி சகோ.அட்சயா. சென்சிடிவ் மேட்டர் சகோ. நாமும் எப்படி இதில் அவசப்பட முடியும்..?
@எஸ்.பி.ஜெ.கேதரன்//ஆண்கள் பலதார மணம் என்று வரும்போது பெண்களின் சமவுரிமை பாதிக்கப்படுகிறதே?//---எப்படி சகோ.கேதரன்..?
இரண்டாம் மனைவி
ஒன்றுமே இல்லாமல் இருந்த ஒரு விதவை, கணவர் என்ற ஒரு உரிமையை பெறுகிறார்.
முதல் மனைவி
கணவரிடத்தில் தன் முழு உரிமையை தன் பெண்ணினத்தை சார்ந்த இன்னொரு பாதிக்கப்பட்ட விதவை பெண்ணுக்கு பகிர்கிறார்.
கணவர்
முன்பு... ஒரே ஒரு மனைவி, ஒரு குழந்தை என்று சிறு குடும்பமாக ஜாலியாக இருந்தவனுக்கு... இப்போது இரண்டு மனைவி, அவரோடு வந்த அவரின் குழந்தைகள் மற்றும் தன் குழந்தை என்று கூடுதல் பொறுப்புகள். கூடுதல் உழைப்பு... கூடுதல் செலவு... கூடுதல் பிரச்சினை... கூடுதல் சுமை...
இப்பொது சொல்லுங்கள் சமஉரிமையை இழப்பது யார்..?
இது போன்ற சூழலில் 'சிலதாரமணம்' என்பது வார்த்தைகளால் சொல்லவியலாத தம்பதிகள் மூவருக்குள் பரஸ்பரம் செய்யப்படும் மிகப்பெரிய தியாகம்.
அதனை உடல்சுகத்துக்காக செய்பவர்கள் கொச்சை செய்து வைத்துள்ளார்கள்.
@எஸ்.பி.ஜெ.கேதரன்///எதிர்காலத்தில் ஏதேனுமொரு சூழலில் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்தால் -பெண்கள் பலதார மணம்.. என்று அனுமதிக்முடியுமா?///---மிக நல்ல கேள்வி சகோ. ஆனால், பலகாலமாக கேட்கப்பட்ட கேள்விதான் சகோ.
ஆண்:பெண் பிறப்பு விகிதம் அதிசயத்தக்க விஷயமாக ஏறக்குறைய 50:50 தான் உலக அளவில் மொத்தமாக இருந்து வருகிறது.
ஆனால், ஆபத்தான குறும்பு விளையாட்டுக்கள், வாகன விபத்துக்கள், போர்உயிரிழப்பு, புகை/பான்-பீடா/மது/போதை மருந்து போன்ற தீய விஷயங்களினால் உயிரிழப்பு, பயங்கரவாதம், கடல் பயணம் என... இப்படி ஏகப்பட்ட காரணிகளினால் பாதிக்கப்பட்ட நாடுகளில்-சமூகத்தில் ஆண்கள் குறைந்து பெண்களே ஆங்காங்கே மிகுந்து விடுகின்றனர்.
எனவே, ஆண்கள் மிகுதியாகும் காலம் இதுவரை வரவில்லை... இனி அப்படி வருவதற்கு உரிய அறிகுறியும் எனக்கு தென்படவில்லை. ஒருவேளை எங்காவது ஓரிடத்தில் அப்படி வந்தால், அங்கே 'ஒருத்திக்கு ஒருவன்'தான் சரியாக வரும். ஒருத்திக்கு இருவர் என்றாலும், இயங்கியல் ரீதியாக சரியாக வராது.
@Riyasஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//விபச்சாரத்தை தொழிலாக கொண்டவர்கள் காசு கொடுத்தால் யாருடன் வேண்டுமானாலும் ஏன் சிங்களவர்கள் கூடனும் செல்லலாம்..//---அருமையான கருத்துக்களை கூறினீர்கள் சகோ.ரியாஸ். இப்படி சிந்திக்கவில்லை அவர்.
@UNMAIKALசெய்திப்பகிர்விற்கு நன்றி சகோ.உண்மைகள். இதன்மூலம் சகலரும் செய்யும் ஒரு குற்றத்தை ஒரு சமூகம் செய்வது போல தோற்றுவிக்க முயற்சி செய்யப்படுகிறது புரிகிறது.
நாம், எவராக இருந்தாலும் கடும் தண்டனை வழங்கப்படல் வேண்டும் என்கிறோம். குற்றம் செய்வதில் 'விரும்பத்தகாத சமநீதி' நிலவுவது போல குற்றம் சாட்டுவதிலும் சமநீதி வேண்டும் என்றே விரும்புகிறோம்..!
@Nizamஅலைக்கும் ஸலாம் வரஹ்...
///நிங்கள் உண்மையாளராக இருந்தல் யாரவது பெயரை பயணபடுத்தினால் பெயர்க்கு முன்னால் மததை பயன்படுத்த வேண்டும்///---அதற்குத்தான் டிஸ்கியை இணைத்துள்ளேன். பின்னூட்டம்#35 -ஐ படியுங்கள் சகோ.நிஜாம்.
@Mohamed Faaique//நாம் எழுதியிருக்க வேண்டிய பதிவு, நம் சார்பில் எழுதியமைக்காக எம் நன்றிகள்//---நீங்கள் எழுதி இருந்தால் நிச்சயமாக இன்னும் பொருத்தமாகவும் இதைவிட இன்னும் உறுதியாகவும் இருந்திருக்கும், சகோ.ஃபாயிக்.
ஆனாலும், தலைப்பு "ஈழமுஸ்லிம் ஆண்கள்..." என்று இல்லாமல் பொது குற்றச்சாட்டாகிவிட்டதால் நான் இறங்கிவிட்டேன். :-))
வருகை புரிந்தமைக்கும்....
பின்னூட்டம் இட்டு....
மிக அருமையான கருத்துக்களை உரைத்தமைக்கும்...
தங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி சகோதரர்களே..!
அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்லிம் சகோதர சகோதரிகளே.. ஒரே ஒரு சிறிய வேண்டுகோள் மாற்று மத நண்பர்களை நாம் சகோதரர் என்று அழைப்பதைவிட நண்பரே என்று குறிப்பிடலாமே.. மேலும் நான் சொல்ல நினைப்பது எல்லாம் இந்த கட்டுரையில் மிகத்தெளிவாக சொல்லப்பட்டுள்ளது மிக்க nantril
நல்ல பதிவு ....இனியும் இது தொடரட்டும் இன்ஷா அல்லாஹ்......அன்பு நண்பர்களே இஸ்லாத்திற்கு எதிரான பதிவுகளுக்கு tvpmuslim.blogspot.com பாருங்கள்.அந்த தளத்தில் இணையுங்கள்.
புதியக் கட்டுரை:இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம்..பின்னூட்டங்கள் வரவேற்கபடுகின்றது.
@முஹம்மத் மபாஸ்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//நான் சொல்ல நினைப்பது எல்லாம் இந்த கட்டுரையில் மிகத்தெளிவாக சொல்லப்பட்டுள்ளது//---அல்ஹம்துலில்லாஹ்.
----நமது கருத்தை ஒருவர் கூட மறுக்கவோ... மாற்றுத்தீர்வு சொல்லவோ இல்லை என்பதே.... இதற்கான ஆதாரம்..!
வருகைக்கும்....
பின்னூட்டத்துக்கும்...
மிக்க நன்றி சகோ.முஹம்மத் மபாஸ்..!
@திருவாளப்புத்தூர் முஸ்லீம்///நல்ல பதிவு ....இனியும் இது தொடரட்டும் இன்ஷா அல்லாஹ்......///---துவா செய்யுங்கள் சகோ.
வருகைக்கும்....
பின்னூட்டத்துக்கும்...
மிக்க நன்றி சகோ.திருவாளப்புத்தூர் முஸ்லீம்.
வணக்கம் நண்பரே! யோகராஜா சந்ரு இப்படி எழுதியது முற்றிலும் தவறே! ஒரு சிலர் செய்த தவறுக்கு தமிழர்களுக்கு இடையே பிளவை உண்டாக்குவது போல் இவரது பதிவு அமைந்துள்ளது. தமிழகத்தில் ஹிந்து முஸ்லிம்கள் இணைந்து தமிழர் போராட்டங்களை செய்து வருகிறார்கள். இந்த ஒற்றுமையை குலைக்கும் வண்ணம் இவர் பதிவிட்டிருப்பது இவரை பற்றிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஒரு வேலை இவர் இலங்கை அரசிடம் இருந்து அதாவது கருணா கூட்டத்திடம் இருந்திருந்து பணம் பெற்று கொண்டு இது போல் செயல்படுகிறாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் தமிழர்கள் ஒன்று சேர்ந்து போராட ஆரம்பித்திருப்பது ஹிந்துதுவாவின் கண்களை சில காலமாக உறுத்தி வருகிறது அதன் வெளிப்பாடாக கூட இது இருக்கலாம். சராசரியாக நல்ல சிந்தனை படைத்தவர் இப்படி எழுத மாட்டார்.
sabash sariyana teervu... congrats
சிலர் ஹிந்து முஸ்லிம் பிரச்சினை கிளப்புவதர்க்கவே வருகின்றனர். மிக்க கவனமாக இருக்கவும். congrats
சகோ.தமிழ் மாறன்,
தமிழகத்தில் தமிழ் பேசும் அனைவரும் தமிழர்கள்தான். இந்த நிலை இலங்கையில் இல்லாம இருப்பது வருத்தமளிக்கிறது.
சகோ.சந்த்ரு பற்றி தாங்கள் கூறிய சந்தேகங்களை என்னால் அப்படியே ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
மற்றபடி, //தமிழகத்தில் தமிழர்கள் ஒன்று சேர்ந்து போராட ஆரம்பித்திருப்பது ஹிந்துதுவாவின் கண்களை சில காலமாக உறுத்தி வருகிறது அதன் வெளிப்பாடாக கூட இது இருக்கலாம்.//---சில நாத்திக முகமூடி அணிந்த ஹிந்துதுவாக்கள் சிறுபான்மையினரை பார்த்து "நீங்கள் பொங்கல் கொண்டாடாமல் இருப்பதால் தமிழரல்ல" என்று விஷத்தை காக்க ஆரம்பித்து உள்ளதை பார்த்தால்... நீங்கள் சொன்னவை என்னை யோசிக்க வைக்கிறது.
வருகைக்கும்....
பின்னூட்டத்துக்கும்...
மிக்க நன்றி சகோ.தமிழ் மாறன்.
@abdul
வருகைக்கும்....
பின்னூட்டத்துக்கும்...
நல்லதொரு எச்சரிக்கைக்கும்
மிக்க நன்றி சகோ.abdul.
இதில் என்னமோ தன்மானமுள்ள பெண் நிலை பற்றி எண்ணம் கொள்ளும் போது வருத்தமாக உள்ளது. நாலு மனைவிகள் உள்ள இஸ்லாம் வீட்டில் ஒவ்வொரு பெண்ணும் கணவனை சந்திக்க நேரம் எப்படி ஒதுக்குவார்கள். ஒரே குழப்பம். இதை விடுத்து உலகம் எங்கும் பரவியுள்ள ஈழ சகோதர்கள் பாதிக்கப்பட்ட பெண்களை தன் சகோதரிகளாக எண்ணி மானமுடன் வாழ நல்ல வேலையை வாழ்வாதாரத்தை ஏற்ப்படுத்தி கொடுக்கலாம். திருமணம் பிரச்சனைக்கு தீர்வு என்பது அவலம்!
@J.P Josephine Babaசகோ.ஜோசப்பின்,
பதிவு மற்றும் பின்னூட்டங்களில் தேவையான அளவுக்கு நானும் பலரும் விவாதித்து விளக்கிவிட்டோம்.
'நான்கு குழந்தை இருந்தால் பரஸ்பர பாசத்துக்கு நேரம் ஒதுக்க முடியாது, ஒன்று இருந்தால் நல்லது... இல்லையேல் குழப்பம்' என்று... எவரும் நினைப்பதில்லை.
மேலும், ஒவ்வொரு ஆணும் நான்கு பெண்களை திருமணம் செய்ய சொல்லி இஸ்லாம் சொல்லவில்லை. சில சூழல்களில் நான்கு வரை அனுமதிக்கிறது. தட்ஸ்ஆல்..!
வருகைக்கும், பின்னூட்டத்துக்கும்...
மிக்க நன்றி சகோ.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!