கிபி 632-ம் வருடம்
முஸ்லிம்களின் இறுதி இறைத்தூதர் முஹம்மத் நபி ஸல்... அவர்கள் ஹிஜ்ரி 11ம் வருடதின் மூன்றாம் மாதமான ரபீஉல் அவ்வல் மாதம் கடும் காய்ச்சல் காரணமாக சிலநாட்கள் கஷ்டப்பட்டார்கள்.
முஸ்லிம்களின் இறுதி இறைத்தூதர் முஹம்மத் நபி ஸல்... அவர்கள் ஹிஜ்ரி 11ம் வருடதின் மூன்றாம் மாதமான ரபீஉல் அவ்வல் மாதம் கடும் காய்ச்சல் காரணமாக சிலநாட்கள் கஷ்டப்பட்டார்கள்.
அன்று வாழ்வின் இறுதிநாள்...
முற்பகல் நேரம் வந்தவுடன் நபி (ஸல்) அவர்கள் தன் அருமை மகள் ஃபாத்திமாவை (ரலி..) அவர்களை அருகே வரவழைத்து அவரிடம் சிலவற்றை இரகசியமாக பேசினார்கள். அதைக்கேட்டவுடன் ஃபாத்திமா (ரலி) அழலானார்கள். மீண்டும் அழைத்து சிலவற்றை இரகசியமாகக்கூறவே ஃபாத்திமா (ரலி) சிரித்தார்கள்.
இதைப்பற்றி நபி(ஸல்)அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி..) கூறுவதாவது:
"இந்நிகழ்ச்சி பற்றி பின்பு ஒரு நாள் ஃபாத்திமாவிடம் விசாரித்தோம். 'எனக்கு ஏற்பட்ட இதே வலியினாலே நான் இறந்து விடுவேன்' என நபி (ஸல்) கூறியபோது நான் அழுதேன். 'அவர்களது குடும்பத்தாரில் நான்தான் முதலில் அவர்களை சென்றடைவேன்' என்று நபி (ஸல்) கூறியபோது நான் சிரித்தேன்” என்று ஃபாத்திமா (ரழி) பதில் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
மேலும், “அகில உலக பெண்களின் தலைவி ஃபாத்திமா” என்று நபி (ஸல்) அப்போது நற்செய்தி கூறினார்கள். (ரஹ்மத்துல் லில் ஆலமீன்)
மேலும், “அகில உலக பெண்களின் தலைவி ஃபாத்திமா” என்று நபி (ஸல்) அப்போது நற்செய்தி கூறினார்கள். (ரஹ்மத்துல் லில் ஆலமீன்)
குழந்தைகள் ஹசன், ஹுசைனை வரவழைத்து அவர்களை முத்தமிட்டு அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்கள். மனைவிமார்களை அழைத்து அவர்களுக்கும் உபதேசமும் அறிவுரையும் நல்கினார்கள். அனைத்து முஸ்லிம்களுக்கும் அப்போது முக்கியமான அறிவுரைகள் கூறினார்கள்.
பின்னர் மரணிக்கும் அத்தருணத்தில்... நபி (ஸல்) அப்போது.... இப்படி சொன்னார்கள்...
"இறைத்தூதர்கள், வாய்மையாளர்கள், இறைப்போர் தியாகிகள், நல்லோர்கள் ஆகிய நீ அருள் செய்தோருடன்... அல்லாஹ்வே! என்னை மன்னிப்பாயாக! என்மீது கருணை காட்டுவாயாக! உயர்ந்த நண்பனுடன் என்னைச்சேர்த்து வைப்பாயாக! அல்லாஹ்வே! உயர்ந்த நண்பனை..." (ஸஹீஹுல் புகாரி)
---கடைசி வார்த்தையை மட்டும் மூன்று முறை நபி (ஸல்) கூறினார்கள். உயர்த்திய அவர்களுடைய கை சாய்ந்தது. உயர்ந்தோனிடம் சென்றார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ஹிஜ்ரி 11, ரபீஉல் அவ்வல் பிறை 12, திங்கட்கிழமை முற்பகல் முடியும் நேரத்தில் அவர்களுக்கு மரணம் ஏற்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு 63 வயது, 4 நாட்கள் ஆகியிருந்தன.
தம் தந்தையான நபியவர்களின் முன்னறிவிப்பை உண்மைப்படுத்தும் விதமாக, அதே ஹிஜ்ரி வருடம் ஆறுமாதம் கழித்து, ஒன்பதாம் மாதமான ரமலான் மாதத்தின் 3ம் நாள் அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்கள் தன் 29ம் வயதில் மரணித்தார்கள்.
அன்னை ஃபாத்திமா (ரலி..) அவர்களின் மரணத்தின்போது அவரின் மகன்கள் ஹசன் மற்றும் ஹுசைன் இருவரும் அப்போது முறையே சுமார் 8 மற்றும் 7 வயது சிறுவர்கள்..!
கிபி 669-ம் வருடம்
தன் தாயார் பாத்திமா (ரலி) அவர்கள் காலமான பின்னர் சுமார் 37 வருடம் கழித்து... ஹிஜ்ரி 50ல் சபர் மாதம் 28ம் நாள் ஹசன் (ரலி) அவர்கள் தன் 47ம் வயதில் மதினாவில் மரணிக்கிறார்கள்.
கிபி 680-ம் வருடம்
தன் தாயார் பாத்திமா (ரலி) அவர்கள் காலமான பின்னர் சுமார் 48 வருடம் கழித்து... ஹிஜ்ரி 61ல் முஹர்ரம் மாதம் 10ம் நாளில் ஹுசைன் (ரலி) தன் 57ம் வயதில் இராக்கில் உள்ள கர்பாலா நகரில் போரில் கொல்லப்படுகிறார்கள்.
'உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள்' (குர்ஆன்-4:29) என்று... தற்கொலை புரிவது தடுக்கப்பட்டு வெறுக்கப்பட்டு பெரும்பாவமாக அறிவிக்கப்பட்டு ஹராம் ஆக்கப்பட்டுள்ளது... இஸ்லாமிய மார்க்கத்தில்..! தற்கொலை புரிவோரை, அது நேரடி நரகில் இட்டுச்செல்லும் மிகவும் கேவலமான செய்யத்தகாத ஒரு செயல். எந்த ஒரு உண்மையான முஸ்லிமும் அதை நினைக்கவும் மாட்டார்..!
இப்படிப்பட்ட ஹராமான செயலைத்தான்... "அகில உலக பெண்களின் தலைவி" எங்கள் அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்கள்... செய்ததாக மிகப்பெரிய அபாண்டமான அவதூறை அள்ளிவாரி எறிந்திருக்கிறது இந்த அவலமான நாளிதழ் தினமலர் எனும் தினமலம்.
நம் அன்னையவர்கள் தீக்குளித்து தற்கொலையாம்..! --தினமலர்..!
இந்த 'தீக்குளித்து தற்கொலை' ஏனாம்..? என்ன காரணமாம்.?
தன் மகன் ஹசன் மற்றும் ஹுசைன் இருவரும் போரில் இறந்த செய்தி கேட்டாம்..! --தினமலர்..!
(மேலே... நீல நிறத்தில் உள்ளவற்றை மீண்டும் ஒருமுறை வாசித்துக்கொண்டு, நன்றாக உள்வாங்கிக்கொள்ளுங்கள் சகோ..! )
தினமலர் 07/12/11 வியாழன் இணையதள பக்கத்தின் ஸ்நிப் ஷாட் |
11 வருட இடைவெளியில் மரணித்த தன் மகன்களின் இறப்புக்கு சுமார் 37 & 48 வருடங்களுக்கு முன்னரே மரணித்துவிட்ட ஒரு தாய்க்கு, அதெப்படி மகன்கள் இறந்த விஷயம் தெரிந்து... மரணித்தவர் தீக்குளித்து.... அடப்பாவி தினமலரே..! பொய் சொல்ல அளவில்லையா..? இதுவா நீ செய்தி தரும் லட்சணம்..?
தொடர்ந்து இஸ்லாம் பற்றியும், இறைத்தூதர் பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும், அவதூறு பொய்களை செய்திகளாக இட்டுக்கட்டி அள்ளி விட்டுக்கொண்டே இருக்கும் நீ திருந்துவதாக தெரியவில்லையே..? எத்தனை முறைதான் உன்னை வன்மையாக கண்டிப்பது..? அப்புறம் மன்னிப்பது..?
உலகப்பெண்களின் தலைவி அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்களை அவமதிக்கும் வண்ணம், இஸ்லாமிய வரலாற்றை அசிங்கமாக திரித்துக்கூறும் உன்னை... என்னுடைய அரசும், சட்டமும், காவலும்... கண்டுகொள்ளாததால்.... நான் இனி நம் இறைவனிடம் முறையிடுகிறேன்..!
தொடர்ந்து இஸ்லாம் பற்றியும், இறைத்தூதர் பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும், அவதூறு பொய்களை செய்திகளாக இட்டுக்கட்டி அள்ளி விட்டுக்கொண்டே இருக்கும் நீ திருந்துவதாக தெரியவில்லையே..? எத்தனை முறைதான் உன்னை வன்மையாக கண்டிப்பது..? அப்புறம் மன்னிப்பது..?
உலகப்பெண்களின் தலைவி அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்களை அவமதிக்கும் வண்ணம், இஸ்லாமிய வரலாற்றை அசிங்கமாக திரித்துக்கூறும் உன்னை... என்னுடைய அரசும், சட்டமும், காவலும்... கண்டுகொள்ளாததால்.... நான் இனி நம் இறைவனிடம் முறையிடுகிறேன்..!
41 ...பின்னூட்டங்கள்..:
ஸலாம்
இஸ்லாத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லீம்கள் செய்யும் அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தில் இருப்பது போல் காட்டுகின்றனர் ...
//அல்லாஹ்வின் ஒளியைத்(மார்க்கத்தை அதாவது இஸ்லாத்தை ) தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை (மார்க்கத்தை அதாவது இஸ்லாத்தை ) முழுமைப்படுத்துபவன். இணை கற்பிப்போர் வெறுத்த போதிலும் அனைத்து மார்க்கங்களை விட மேலோங்கச் செய்வதற்காக அவனே தனது தூதரை நேர் வழியுட னும், உண்மை மார்க்கத்துடனும் அனுப்பினான். (அல்குர்ஆன் 61:8,9)//
என்னுடைய கண்டனத்தை இங்கு பதிவு செய்கிறேன் ..
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரர் முஹம்மத் ஆஷிக்,
இந்த தினமலத்தை, அதன் ஆசிரியர்களை மனித மலம் கொண்டு அடித்தாலும் அதை அவர்கள் வாயில் ஊற்றினாலும் திருந்த மாட்டார்கள். சட்டப்போராட்டத்தின் மூலமாக கூட இவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்பது தான் நிதர்சனம். எனவே வேறு வகையில் அடித்தால் தான் அவர்கள் திருந்துவார்கள்.
முதலில் அவர்களின் விற்பனையை தடுக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் தினமலருக்கு எதிராக மக்களிடம் எடுத்து சொல்லி அதை வாங்க வேண்டாமென்று பிரச்சாரம் செய்ய வேண்டும்.
இரண்டாவது தினமலர் பத்திரிக்கையை கொண்டு வரும் வாகனத்தை முற்றுகையிட்டு விற்பனையாளர்களுக்கு சென்று சேராமல் மக்கள் திரள் போராட வேண்டும். இரண்டு நாள் பத்திரிகை சரியாக போகாவிட்டால் தானே வழிக்கு வரும் தினமலர். அடிமடியில் கை வைத்தால் தான் அவர்கள் திருந்துவார்கள்.
விரைவில் தினமலர் தன்னுடைய பார்வையாளர்களை இழக்கும்.
ஸலாம்...
தீ மிதிக்கும் மூடநம்பிக்கைகளுக்கு இஸ்லாத்தில் இடமில்லை. இது போன்றவற்றை இஸ்லாம் கடுமையாக எதிர்க்கின்றது. யாரோ சில மார்க்கம் தெரியாத அறியாமை மனிதர்கள் செய்யும் முட்டாள்தனங்களை ஒற்றுமை நிகழ்வாக கூறி தன் சிண்டு முடித்துவிடும் வேலையை மறுமடியும் செய்திருக்கின்றது தினமலர்.
@Aashiq Ahamedஅலைக்கும் ஸலாம் வரஹ்... புகைப்பட ஆதாரமற்ற தினமலரின் தீமிதி செய்தியை நான் நம்பவே இல்லை..! அது நிச்சயமாக பொய்யாக இருக்கும் என்று எனக்குத்தெரியும்.
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஆஷிக் அஹமத்.
@கார்பன் கூட்டாளி//விரைவில் தினமலர் தன்னுடைய பார்வையாளர்களை இழக்கும்.//---இன்ஷாஅல்லாஹ் ...நிச்சயமாக...சந்தேகமே இல்லை.
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.கார்பன் கூட்டாளி.
@பி.ஏ.ஷேக் தாவூத்அலைக்கும் ஸலாம் வரஹ்...
இனி தினமலருக்கு அழிவு காலம் உறுதி சகோ.ஷேக்தாவூத்.
இறைவனிடம் விட்டாயிற்று .
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஷேக்தாவூத்.
@இலக்கை நோக்கிஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//இஸ்லாத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லீம்கள் செய்யும் அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தில் இருப்பது போல் காட்டுகின்றனர் ...//
====புகைப்பட ஆதாரமற்ற தினமலரின் தீமிதி செய்தியை நான் நம்பவே இல்லை..! அது நிச்சயமாக பொய்யாக இருக்கும் என்று எனக்குத்தெரியும்.
////என்னுடைய கண்டனத்தை இங்கு பதிவு செய்கிறேன்..////
---ஏற்கனவே முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் கார்ட்டூன் போட்டபோதே.. இன்னும் பல விஷயங்களில் பலமுறை தினமலரை முஸ்லிம்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் அவர்களின் பொய்ச்செய்திகளுக்காக கண்டனம் தெரிவித்தாயிற்று சகோ.
இனி...கண்டனத்துக்கு அடுத்த கட்டம்...
'தினமலர் நாசாமா போகட்டும்' என்பதே..!
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.இலக்கை நோக்கி.
வரலாற்றை பொய்யாக்கும் தினமலருக்கு என் கண்டனங்கள்....
கேவலம் இப்படி தான் உன் பிழைப்பை நடத்த வேண்டுமா தினமலரே....
//தினமலர் மீது இறைவனின் சாபம் இறங்கட்டும்// ஆமின்! முன்பு இருந்தது போல் நம் சமுதாய மக்கள் இன்றும் இருப்பார்கள் என நினைத்து கொண்டுள்ளது தினமலம்.
நாம் ஒன்றுபட்டு கண்டனத்தை தெரிவிப்போம்.
//தினமலர் மீது இறைவனின் சாபம் இறங்கட்டும்// ஆமின்! முன்பு இருந்தது போல் நம் சமுதாய மக்கள் இன்றும் இருப்பார்கள் என நினைத்து கொண்டுள்ளது தினமலம்.
நாம் ஒன்றுபட்டு கண்டனத்தை தெரிவிப்போம்.
ஆசிக் ஜீ..அஸ்ஸலாமு அலைக்கும்..சரியான நெத்தியடி..எல்லா பத்திரிக்கைகாரனும் இஸ்லாமியர் என்றாலே தீவிரவாதி என்றுதான் விலாசம் காட்டுவான்...தினமலர் ஒருபடி மேலே போய் பொய் கூட சொல்ல ஆரம்பிச்சிட்டாங்கையா!ஆரம்பிச்சிட்டாங்க!
அவர்களின் முகமூடியை கிழித்தெரிந்தமைக்கு நன்றி சகோ!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ஆரம்பத்திலிருந்தே இவகளின் கயமைத்தனம் வெளிப்பட்டுக் கொண்டே வருகிறது
தினமலரை நடுநிலையாளர்கள் புறக்கனிக்க வேண்டும்
தினமலத்திற்கு எப்பவல்லாம் பிசினஸ் குறைவு ஏற்பாடுதோ அப்பவெல்லா இஸ்லாத்தை சொரிவனுங்க..
பி.ஏ.ஷேக் தாவூத், அவர்கள் சொன்னாதை போன்று செய்யவேண்டும்.
எவ்வளவுதான் சொன்னாலும் திருந்தாத ஜென்மம் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக்காட்டும் தினமலரைப் புறக்கணிப்போம்! இறைவனின் தண்டனை அவர்கள் மீது இறங்காதவரை அவர்களின் விஷம் இறங்காது.
அஸ்ஸலாமு அலைக்கும்! சகோ ஆசிக்!
எவ்வளவுதான் திட்டினாலும் அனைத்தையும் உதறி விட்டு மறுபடியும் பழைய இடத்திலேயே நிற்கும் இந்த கூட்டத்தை நீங்கள் சொல்வது போல் இறைவனின் சாபம் அவர்கள் மேல் இறங்க வேண்டும்.
அஸ்ஸலாமு அலைக்கும் brother
எவ்வளவு நாசூக்காக விசக்கருத்துகளை அப்பாவி வாசகர்களிடம் புகுத்துகின்றனர்!!
இவ்வாறு வரலாற்றை திரிக்கும் கும்பல்களின் அடாவடிகள் என்றுதான் அடங்கும்?????
என்னுடைய கண்டனத்தை பதிவு செய்கிறேன்
தின மலரை வெறுத்து ஒதுக்குவோம்.
சகோ அது தினமலர் இல்ல தினமலம் ....
முக்கிய அறிவிப்பு...!
தற்போது தன் இணைய செய்தியை மாற்றி விட்டது தினமலர்.
பாத்திமா (ரலி) அவர்கள் குறித்து வெளியிட்டிருந்த வரலாற்று திரிபையும் காணோம்.
தீமிதி விழாவை பள்ளிவாசல் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது போல முன்பு கூறிய செய்தியையும் காணோம்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=363074
இன்று முழுவதும் முஸ்லிம்களின் கடுமையாக கண்டனங்களுக்கு தினமலர் ஆளாகி இருப்பதாக தெரிகின்றது. அவரகளது மொபைல் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. landline ஃபோன்களை பிக்-அப் செய்யவில்லை.
(செய்திப்பகிர்விற்கு நன்றி: சகோ.ஆஷிக் அஹமத்)
assalamualikkum
இந்த தினமலம் அடிக்கடி முஸ்லீம்கைள சீன்டிப்பார்ப்பதும் எதிர்ப்பு வரும்போது மண்ணிப்பு கேட்பதும் அந்தப்பகுதியை நீக்கிவிட்டோம என்பதும் வாடிக்கையாகிவிட்டது இதற்க்ு ஒரே தீர்வு சமுதாயஇயக்கங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாளாக இவர்களின் அலுவலகத்தில்போய் உள்ளிருப்புப் போராட்டம் செய்து ஒருவாரம் பத்திரிக்கை வௌியிடுவதை ஸ்தம்பிக்கச் செய்தால்தான் இவர்கள் வழிக்கு வருவார்கள் மற்றமீடியாக்களுக்கும் அது பாடமாக அமையும்
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ஆஷிக்.
தின மலம் திறுந்தவேண்டும் என்பதே எனது கோரிக்கை இஸ்லாத்தை சாராத சியாக்களை காரணம் காட்டி தினமலம் தினமும் சில செய்திகளை வெளியிடுவதை அனைத்து இஸ்லாமியனரும் கண்டிக்க வேண்டும்.
இறைவனின் கோபம் உண்டாகட்டுமாக...
அஸ்ஸலாமு அலைக்கும்.
பயனுள்ள பதிவு.அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். முஸ்லிம்கள் தின மலத்தை புறக்கணிக்க வேண்டும்.
@ஆமினா//கேவலம் இப்படி தான் உன் பிழைப்பை நடத்த வேண்டுமா தினமலரே....//---அதுதான் அது..!
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஆமினா.
@M.Thameem Ansariவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.தமீம் அன்சாரி.
@ஷேக் முஹைதீன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஷேக் முஹைதீன்.
@ஹைதர் அலிஅலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஹைதர் அலி.
@Nizamவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.Nizam.
@அஸ்மா வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.அஸ்மா.
@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
///எவ்வளவுதான் திட்டினாலும் அனைத்தையும் உதறி விட்டு மறுபடியும் பழைய இடத்திலேயே நிற்கும்....///---வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.சுவனப்பிரியன்.
@Rabbaniஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//நாசூக்காக விசக்கருத்துகளை அப்பாவி வாசகர்களிடம் புகுத்துகின்றனர்//---ரொம்ப டேஞ்சரான ஆளுங்க...
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.சுவனப்பிரியன்.
@மு.ஜபருல்லாஹ்
//தின மலரை வெறுத்து ஒதுக்குவோம்//---Done..!
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஜபருல்லாஹ்.
@stalin wesley//அது தினமலர் இல்ல தினமலம்//---அடடா... Sorry for the spelling mistake சகோ..!
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.stalin wesley.
@abdul hakkimஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//இந்த தினமலம் அடிக்கடி முஸ்லீம்கைள சீன்டிப்பார்ப்பதும் எதிர்ப்பு வரும்போது மண்ணிப்பு கேட்பதும் அந்தப்பகுதியை நீக்கிவிட்டோம என்பதும் வாடிக்கையாகிவிட்டது...//---இனி தினமலருக்கு அழிவு காலம் உறுதி சகோ.அப்துல் ஹக்கீம்.
இறைவனிடம் விட்டாயிற்று .
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.அப்துல் ஹக்கீம்.
@ அந்நியன் 2 அலைக்கும் ஸலாம் வரஹ்...
//தின மலம் திறுந்தவேண்டும் என்பதே எனது கோரிக்கை//---திருந்தாவிடில்...???
அதன்மீது...//இறைவனின் கோபம் உண்டாகட்டுமாக...//--ஆமீன்.
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.அய்யூப்.
@shahul hameedஅலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.அப்துல் ஹமீத்.
பத்திரிகை என்பதை
சொல்பிரித்து
புரிந்து கொண்டது
தினமலர்.
மொத்தச் செய்தியில்
பத்து திரிகை...
மொழுகிச் சொல்வதில்
பார்ப்பனத் தூரிகை
தினசரி இதழ் என்பது
உனக்கு மட்டும் எப்படி
தினபிழை இதழ்
என்றானது?
தீக்குளிப்பதும்
தினமும் சாணிப் பீ குடிப்பதும் - சத்தியத்தைத்
திரித்துச் சொல்தும் எழுத்தரின்
தினமலர் கலாச்சாரத்தில்
தினசரி அலுவலாக இருக்கலாம்.
குளிநீரையும் கழிநீரையும்
குடிநீராகவே உங்கள் உலகம்
கொண்டிருந்த காலையில்
தினம் குளிக்கும் மரபை
திக்கெட்டுக்கும் பரப்பிச் சென்ற
தீர்க்கதரிசியின்
திருநிறைச் செல்வியின் மீதா
தேவையற்ற அபாண்டம்?
உன் விசிரிகளைக் கூட்டிட
நாளோரு காவியும்
பொழுதொரு பொய்யுமென
பணம் பண்ணும் பன்னி நீ
”தினமலர்” உன்பெயரின்
முதல் விசிறியை நீக்கிட்டு
”தனமலர்” என்று மாற்றிடு
வாய்திறந்த பிணமாகிடு
பச்சைப் பொய்யும்
ஒருநாள் உன்னிடம்
பிச்சைக் கேட்கும்
இஸ்லாம் என்பது உனக்கு
இஸ்டமில்லை என்பதற்கு
எம்மானபி மகளுனக்கு
என்னபாவம் தெய்திருக்கு?
சுட்ட சாணி இட்டு
சட்டும் உன் நெற்றி
சன்மார்க்கம் சுமக்கும்
சுவை தான் அறியுமா?
@ilangaiபிரம்மாதமான பின்னூட்டம் சகோ.இலங்கை.
எதைச்சொல்ல...
எதைவிட...
பட்டையை கிளப்புகின்றன...
வரிகள் அனைத்தும்...
வருகைக்கும் அதிரடி வேட்டுக்கும் நன்றி சகோ.இலங்கை.
சீன்டிப்பார்ப்பதும் எதிர்ப்பு வரும்போது மண்ணிப்பு கேட்பதும் அந்தப்பகுதியை நீக்கிவிட்டோம என்பதும் வாடிக்கையாகிவிட்டது இதற்க்ு ஒரே தீர்வு சமுதாயஇயக்கங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாளாக இவர்களின் அலுவலகத்தில்போய் உள்ளிருப்புப் போராட்டம் செய்து ஒருவாரம் பத்திரிக்கை வௌியிடுவதை ஸ்தம்பிக்கச் செய்தால்தான் இவர்கள் வழிக்கு வருவார்கள் மற்றமீடியாக்களுக்கும் அது பாடமாக அமையும்
@Venkatஅவர்களிடம் ஆளும் அதிகாரபலம் உள்ளது. மேலும், இதுபோன்ற விற்பனை அடக்குமுறையில் நாம் இறங்கினால் அது இன்னும் அவர்களுக்கு விளம்பரம் மற்றும் வருவாயாகவே மாற வாய்ப்பிருக்கிறது.
ஏற்கனவே செய்த பற்பல எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பின்னருங்கூட, இன்னும் இன்னும் அவர்கள் தாங்கள் செய்து வருவதையே வாடிக்கையாக்கி தொடர்வதால்,
புறக்கணித்து வரும் நிலையிலும்,
வேறுவழியின்றித்தான்... வெருப்புற்றுத்தான்... இறைவனிடம் முறையிட்டுவிட்டோம். இனி இறைவன் பார்த்துக்கொள்ளட்டும்.
வருகைக்கும், சகோ.அப்துல் ஹக்கீமின் கருத்தை ஆமோதித்து பின்னூட்டமிட்டதற்கும் மிக்க நன்றி சகோ.வெங்கட்.
எதிரியையும் மன்னிக்கும் மார்க்கத்தில் இருந்து
கொண்டு நீங்கள் மற்றவருக்கு சாபம் கொடுக்கலாமா?
இறைவன் தன்னை இகழ்ந்தவர்களையும் வாழ வைப்பவன்
ஆயிற்றே? அவனை நீங்கள் சாபம் கொடு என்று எப்படி
சொல்லலாம்? மன்னித்துவிடு என்றுதானே கேட்டுக்கொள்ள வேண்டும்.?
“If you feel uncomfortable about something, then leave it alone.”
“Forgive the one who does you wrong.”
“Control your tongue, let your house be enough for you, and weep for your sins.”
“The good believer is one who is best in attitude.”
இவையெல்லாம் இஸ்லாம் சொல்வது தானே?
உங்கள் மதத்தையே நீங்கள் இழிவு படுத்தலாமா
இப்படி தேவையில்லாமல் கோபப்பட்டு?
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!