அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Wednesday, December 7, 2011

41 தினமலர் மீது இறைவனின் சாபம் இறங்கட்டும்


07/12/11 பொய்மையின் உரைகல்
கிபி 632-ம் வருடம்
முஸ்லிம்களின் இறுதி இறைத்தூதர் முஹம்மத் நபி ஸல்... அவர்கள் ஹிஜ்ரி 11ம் வருடதின் மூன்றாம் மாதமான ரபீஉல் அவ்வல் மாதம் கடும் காய்ச்சல் காரணமாக சிலநாட்கள் கஷ்டப்பட்டார்கள். 

அன்று வாழ்வின் இறுதிநாள்... 

முற்பகல் நேரம் வந்தவுடன் நபி (ஸல்) அவர்கள் தன் அருமை மகள் ஃபாத்திமாவை (ரலி..) அவர்களை அருகே வரவழைத்து அவரிடம் சிலவற்றை இரகசியமாக பேசினார்கள். அதைக்கேட்டவுடன் ஃபாத்திமா (ரலி) அழலானார்கள். மீண்டும் அழைத்து சிலவற்றை இரகசியமாகக்கூறவே ஃபாத்திமா (ரலி) சிரித்தார்கள். 

இதைப்பற்றி நபி(ஸல்)அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி..) கூறுவதாவது:

"இந்நிகழ்ச்சி பற்றி பின்பு ஒரு நாள் ஃபாத்திமாவிடம் விசாரித்தோம். 'எனக்கு ஏற்பட்ட இதே வலியினாலே நான் இறந்து விடுவேன்' என நபி (ஸல்) கூறியபோது நான் அழுதேன். 'அவர்களது குடும்பத்தாரில் நான்தான் முதலில் அவர்களை சென்றடைவேன்' என்று நபி (ஸல்) கூறியபோது நான் சிரித்தேன்” என்று ஃபாத்திமா (ரழி) பதில் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

மேலும், “அகில உலக பெண்களின் தலைவி ஃபாத்திமா” என்று நபி (ஸல்) அப்போது நற்செய்தி கூறினார்கள். (ரஹ்மத்துல் லில் ஆலமீன்)

குழந்தைகள் ஹசன், ஹுசைனை வரவழைத்து அவர்களை முத்தமிட்டு அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்கள். மனைவிமார்களை அழைத்து அவர்களுக்கும் உபதேசமும் அறிவுரையும் நல்கினார்கள். அனைத்து முஸ்லிம்களுக்கும் அப்போது முக்கியமான அறிவுரைகள் கூறினார்கள்.

பின்னர் மரணிக்கும் அத்தருணத்தில்... நபி (ஸல்) அப்போது.... இப்படி சொன்னார்கள்...

"இறைத்தூதர்கள், வாய்மையாளர்கள், இறைப்போர் தியாகிகள், நல்லோர்கள் ஆகிய நீ அருள் செய்தோருடன்... அல்லாஹ்வே! என்னை மன்னிப்பாயாக! என்மீது கருணை காட்டுவாயாக! உயர்ந்த நண்பனுடன் என்னைச்சேர்த்து வைப்பாயாக! அல்லாஹ்வே! உயர்ந்த நண்பனை..." (ஸஹீஹுல் புகாரி)

---கடைசி வார்த்தையை மட்டும் மூன்று முறை நபி (ஸல்) கூறினார்கள். உயர்த்திய அவர்களுடைய கை சாய்ந்தது. உயர்ந்தோனிடம் சென்றார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

ஹிஜ்ரி 11, ரபீஉல் அவ்வல் பிறை 12, திங்கட்கிழமை முற்பகல் முடியும் நேரத்தில் அவர்களுக்கு மரணம் ஏற்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு 63 வயது, 4 நாட்கள் ஆகியிருந்தன.

அதே.... கிபி 632-ம் வருடம்
தம் தந்தையான நபியவர்களின் முன்னறிவிப்பை உண்மைப்படுத்தும் விதமாக, அதே ஹிஜ்ரி வருடம் ஆறுமாதம் கழித்து, ஒன்பதாம் மாதமான ரமலான் மாதத்தின் 3ம் நாள் அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்கள் தன் 29ம் வயதில் மரணித்தார்கள்.

அன்னை ஃபாத்திமா (ரலி..) அவர்களின் மரணத்தின்போது அவரின் மகன்கள் ஹசன் மற்றும் ஹுசைன் இருவரும் அப்போது முறையே சுமார் 8 மற்றும் 7 வயது சிறுவர்கள்..!

கிபி 669-ம் வருடம்
தன் தாயார் பாத்திமா (ரலி) அவர்கள் காலமான பின்னர் சுமார் 37 வருடம் கழித்து... ஹிஜ்ரி 50ல் சபர் மாதம் 28ம் நாள் ஹசன் (ரலி) அவர்கள் தன் 47ம் வயதில் மதினாவில் மரணிக்கிறார்கள்.

கிபி 680-ம் வருடம்
தன் தாயார் பாத்திமா (ரலி) அவர்கள் காலமான பின்னர் சுமார் 48 வருடம் கழித்து... ஹிஜ்ரி 61ல்  முஹர்ரம் மாதம் 10ம் நாளில் ஹுசைன் (ரலி) தன்  57ம் வயதில் இராக்கில் உள்ள கர்பாலா நகரில் போரில் கொல்லப்படுகிறார்கள்.

இன்னொரு முக்கிய விஷயம் ஒன்று உள்ளது..!
 
தினமலர் 07/12/11 வியாழன் நாளேட்டின் பேப்பர் கட்டிங்
 'உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள்' (குர்ஆன்-4:29) என்று... தற்கொலை புரிவது தடுக்கப்பட்டு வெறுக்கப்பட்டு பெரும்பாவமாக அறிவிக்கப்பட்டு ஹராம் ஆக்கப்பட்டுள்ளது... இஸ்லாமிய மார்க்கத்தில்..! தற்கொலை புரிவோரை, அது நேரடி நரகில் இட்டுச்செல்லும் மிகவும் கேவலமான செய்யத்தகாத ஒரு செயல். எந்த ஒரு உண்மையான முஸ்லிமும் அதை நினைக்கவும் மாட்டார்..!

இப்படிப்பட்ட ஹராமான செயலைத்தான்... "அகில உலக பெண்களின் தலைவி" எங்கள் அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்கள்... செய்ததாக மிகப்பெரிய அபாண்டமான அவதூறை அள்ளிவாரி எறிந்திருக்கிறது இந்த அவலமான நாளிதழ் தினமலர் எனும் தினமலம்.

நம் அன்னையவர்கள் தீக்குளித்து தற்கொலையாம்..! --தினமலர்..!

இந்த 'தீக்குளித்து தற்கொலை' ஏனாம்..? என்ன காரணமாம்.?

தன் மகன் ஹசன் மற்றும் ஹுசைன் இருவரும் போரில் இறந்த செய்தி கேட்டாம்..! --தினமலர்..! 

(மேலே... நீல  நிறத்தில் உள்ளவற்றை மீண்டும் ஒருமுறை வாசித்துக்கொண்டு, நன்றாக உள்வாங்கிக்கொள்ளுங்கள் சகோ..! )

தினமலர் 07/12/11 வியாழன் இணையதள பக்கத்தின் ஸ்நிப் ஷாட்
11 வருட இடைவெளியில் மரணித்த தன் மகன்களின் இறப்புக்கு சுமார் 37 & 48 வருடங்களுக்கு முன்னரே மரணித்துவிட்ட ஒரு தாய்க்கு, அதெப்படி மகன்கள் இறந்த விஷயம் தெரிந்து... மரணித்தவர் தீக்குளித்து.... அடப்பாவி தினமலரே..! பொய் சொல்ல அளவில்லையா..? இதுவா நீ செய்தி தரும் லட்சணம்..? 

தொடர்ந்து இஸ்லாம் பற்றியும், இறைத்தூதர் பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும், அவதூறு பொய்களை செய்திகளாக இட்டுக்கட்டி அள்ளி விட்டுக்கொண்டே இருக்கும் நீ திருந்துவதாக தெரியவில்லையே..? எத்தனை முறைதான் உன்னை வன்மையாக கண்டிப்பது..? அப்புறம் மன்னிப்பது..? 

உலகப்பெண்களின் தலைவி அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்களை அவமதிக்கும் வண்ணம், இஸ்லாமிய வரலாற்றை அசிங்கமாக திரித்துக்கூறும் உன்னை... என்னுடைய அரசும், சட்டமும், காவலும்... கண்டுகொள்ளாததால்.... நான் இனி நம் இறைவனிடம் முறையிடுகிறேன்..!

இவ்விஷயத்தில், உன் மீது இறைவனின் சாபம் இறங்கட்டும் தினமலரே..! 

41 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...