ஒரு தனி மனிதர் செய்யும் தவறுக்காக அல்லது அவர் சார்ந்த சமூகத்தின் தவறான கொள்கைக்காக அவரின் ஒட்டுமொத்த சமூகத்தையே குற்றப்பார்வை பார்த்தலும் அதற்கு தண்டனையாக அந்த சமூகத்தின் பிற அப்பாவி மக்கள் மீது தாக்குதல் தொடுத்தலும் பயங்கரவாதம்.
இதைத்தான் ஹிட்லர் அன்று ஒட்டுமொத்த ஜெர்மானிய யூதர்கள் மீது நடத்தினார். ஜார்ஜ் புஷ் ஒட்டுமொத்த ஆப்கானியர் மீது நடத்தினார். ராஜபக்சே ஒட்டுமொத்த ஈழத்தமிழர்கள் மீது நடத்தினார். மோடி ஒட்டுமொத்த குஜராத் முஸ்லீம்கள் மீது பொய்ப்பழிபோட்டு நடத்தினார். ஆனால், இவர்கள் செய்த செயலை உலகரிய நல்லிதயம் கொண்ட நன்மக்கள், நடுநிலை சான்றோர் அனைவருமே குற்றம் என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டனர். ஆனால், இந்த கொடுங்கோளர்கள் எல்லாம் விஷச்செயல்களில் காட்டியதை ஒருவர் விஷக்கருத்தாக மக்கள் மனதில் பதிய வைத்தார். அவர்... 'தந்தை'(?) பெரியார்..!








