அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Monday, November 14, 2011

34 புன்னகையே வாழ்க்கை

"புன்னகையே வாழ்க்கை" வலைப்பூ அதிபர் சகோ.முஹம்மத் ஃபைக் நேற்று எழுதிய வெளிநாட்டு வாழ்க்கை என்ற பதிவில்... எழுதப்பட்டு உள்ளவைக்கு வரிக்கு வரி பதில் எழுத விழைந்து அதனால் விளைந்ததுதான் இந்த பதிவு..! இதை 'எதிர்ப்பதிவு' என்பதோ 'பக்கத்துவீட்டுப்பதிவு' என்பதோ உங்கள் விருப்பம்..! ஆனால், அதில் சொல்லப்பட்ட மற்றும் இதில் சொல்லப்படும் விஷயங்கள்தான் முக்கியம்..!




அந்தப்பதிவில் எழுதப்பட்டு இருந்தது போலத்தான் நானும் முன்பு கூறிக்கொண்டு இருந்தேன். பலரும் அதேபோல சொல்வதை இங்கே சவூதியில் கேட்டுமிருக்கிறேன். இதற்கெல்லாம் என்ன காரணமாக இருக்கலாம்..? சரி... இனி அந்த பதிவுக்கு வரிக்கு வரி...


//வேலை செய்யப் பிடிக்கவில்லை 
உடன் வேலை செய்பவர்களையும் பிடிக்கவில்லை//
வெளிநாடுகளில் இருந்து இங்கே வந்து அதிக கல்வித்தகுதி மற்றும் அதிக திறமை மற்றும் அதிக சிரத்தையுடன் வேலை செய்யும் நம்மைப்போன்ற வெளிநாட்டவர்(அஜ்னபி)களுக்கு... அதே வேலையை செய்யும் உள்நாட்டு குடிமகன்களை காட்டிலும் இரு மடங்கு அல்லது மும்மடங்கு சம்பளம் கம்மி என்பதால் இருக்கலாம்.


//தங்குமிடமும் பிடிக்கவில்லை 
உடன் தங்குபவர்களையும் பிடிக்கவில்லை//
குடும்பம், சொந்தம், அண்டைவீட்டார், ஊர்மக்கள், தாய்மொழி பேசும் மாநிலத்தோர், ஒரே கலாச்சார நாட்டினர் என்று எல்லாவற்றையும் தாண்டி... புதிய இடம், புதிய சூழல், புதியவர்கள் என்பதால் இருக்கலாம்.


//பிரயாணம் செய்யவும் பிடிக்கவில்லை 
உடன் பிரயாணம் செய்பவர்களையும் பிடிக்கவில்லை//
ஒருமாசம் அல்லது மூன்று மாசம் வரை மகிழ்ச்சியாக இருந்துவிட்டு அதாவது லீவு முடிந்துபோய் ஊரிலிருந்து திரும்ப வேலைக்கு வருவதால் மனம் வெறுத்துப்போய் இருப்பதால் அப்படி இருக்கலாம். மற்றபடி, ஊருக்கு போகும்போதுதான் அந்த மகிழ்ச்சியில் எல்லாரையும் ஒவ்வொன்றையும் பிடிக்குமே..!


//சாப்பாடும் பிடிக்கவில்லை 
சமைக்கவும் பிடிக்கவில்லை//
சமைக்கத்தெரியாதவராக இருக்கலாம். அல்லது அப்படியே திறமையாகவும் சுவையாகவும் சமைக்கத்தெரிந்து விட்டாலோ... "இவ்வளவு அருமையாக சமைக்கிறோம்... இதை நமக்கு பிடித்த குடும்பத்தாருடன் உற்றாருடன் உறவினருடன் பால்ய நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பரிமாறி சாப்பிட நமக்கு கொடுத்துவைக்க வில்லையே.." என்ற ஆற்றாமை காரணமாக இருக்கலாம்.

//காலநிலையும் பிடிக்கவில்லை//
நிலநடுக்கொட்டுக்கு அருகிலேயே 25-40 டிகிரி செல்சியஸ் சீதோஷ்ணத்திலேயே வருஷம் பூரா ஹியுமிடிட்டி என்றால் என்னவென்றே தெரியாமல் வாழ்ந்திருந்துவிட்டு... இங்கே ஒற்றை இலக்கத்தில் அதிக குளிரையும், 50 டிகிரி வரை அதிக வெயிலையும் கூடவேதொப்பி முதல்  சாக்ஸ் வரை வியர்வையில் நழைக்கும் ஹியுமிடிட்டியையும் எப்படித்தான் யாருக்குத்தான் பிடிக்கும்..? இவை காரணமாக இருக்கலாம்.

//இங்குள்ள அரசியலும் பிடிக்கவிலலை
ஆட்சி செய்வோரையும் பிடிக்கவில்லை//
ஆயிரம் சொன்னாலும் மக்களாட்சி ஜனநாயகம் போல வருமா..? அதில் உள்ள மக்களுக்கான உரிமைகள் பற்றி அறிந்தவருக்கு அவற்றை அனுபவித்தோருக்கு மன்னராட்சி... ஷேக் ஆட்சி... எல்லாம் பிடிக்குமா..? ஆளும் அந்த ஒருத்தர் நாட்டிலேயே மிக மிக நல்லவராக மற்றவரை விட எல்லாம் அதிக இறையச்சம் கொண்டவாராக இருந்தால் மட்டுமே மன்னராட்சி மக்களுக்கு இனிக்கும்..! அப்படி தற்போது இல்லை என்பதே காரணமாக இருக்கலாம்.

//இந்த நாட்டையே பிடிக்கவில்லை//
அதாவது இப்படி ஒரு நாடு, இப்படி ஒரு ஆட்சியாளர், இதை கண்டுக்காத மக்கள் என்று இதையெல்லாம் பொறுக்க முடியாது கோபத்தில் வெடித்த வாக்கியமாக இது இருக்கலாம். ஒரு மருத்துவருக்கு நோயாளியின் நோயைத்தான் பிடிக்காது இருக்கவேண்டுமே அன்றி, நோயாளியை அல்லவே..! நோயைத்தான் ஒழிக்க வேண்டும். நோயாளியை அல்ல.  (அவர் ஃபீஸ் கொடுக்காதவரா, கொடுத்தவரா என்பது அல்ல இங்கே பிரச்சினை..! :-))

//இத்தனையும் பிடிக்காவிட்டாலும் 
 வருடக் கணக்காக இங்கே குப்பை கொட்டுகிறேன் 
 காரணம் திர்ஹம்களை ரொம்பப் பிடித்திருக்கிறது//
ஊரில் உள்ள பொருளாதார சுமைகளும் குடும்பப்பொருப்புக்களுமே காரணமாக இருக்கலாம். மற்றபடி இதே சம்பளத்தில் சொந்த ஊரில் அலல்து சொந்த மாநிலத்தில் அல்லது சொந்த நாட்டில் ஒரு வேலை கிடைத்து விட்டால் கண்டிப்பாக ரூபாயைத்தான் பிடிக்கும்..! திர்ஹமையோ ரியாலையோ பிடிக்காது.

சரி, இதற்கெல்லாம் என்ன தீர்வு..? 


  • முடிந்தவரை குடும்பத்தை அப்பா, அம்மா சகோதரர்கள் நண்பர்களை முடியாவிட்டாலும்(!) அட்லீஸ்ட்... மணமாகி இருந்தால் மனைவி குழந்தைகளையாவது அழைத்து வந்து தம்முடன் தங்க வைப்பது.
  • அது தம் விசாவில் முடியாது என்றால்... அது போன்ற வசதி தரும் வேறு வேலையை அங்கேயே தேடிக்கொள்வது.
  • அதுவும் முடியாது என்றால் அவ்வப்போது விசிட் விசா அல்லது (சவூதி என்றால்) உம்ரா விசா எடுத்தாவது குடும்பத்தினரை அழைத்து வருவது.
  • இதுவும் முடியாது என்றால் கூடிய விரைவில் வெளிநாட்டில் தனிமையில் கஷ்டப்பட்டு சம்பாரித்ததை சேமித்து விட்டு ஊரில் நல்ல வியாபாரம் அல்லது  வேறு நல்ல வேலை பார்ப்பது. இப்போது ஏற்படும் பொருளாதார குறைபாட்டுக்கு ஏற்ற வகையில் தம் தேவையை சுருக்கி, செலவை குறைத்துக்கொள்வது.
  • அதுவரை, தன் பால்யகால ஊர் சிநேகிதர்கள், தான் வேலைபார்க்கும் நாட்டில் இருந்தால் அவ்வப்போது அவர்களை சந்தித்து மகிழ்ச்சியாக பழைய நினைவுகளுடன் இருத்தல். (அந்த நண்பர்கள் சற்று சமைக்கத்தெரிந்த மற்றும் கொஞ்சம் செலவழிக்கத்தெரிந்த பார்ட்டியாகவும் இருக்க வேண்டும்..! :-) ஹி..ஹி..)
  • 'புன்னகையே வாழ்க்கை'யாக அமைய வேண்டுமெனில், நாம் கஷ்டத்தோடு குறைவாக சம்பாரித்தாலும் அதை நிறைவாக மகிழ்வோடு செலவழிக்க வேண்டும் சகோ..! 

அவ்ளோதான் சகோ நமக்குத்தெரிந்தது..! மேலும் இதுபற்றி பின்னூட்டங்களில் கருத்துக்கள் பகிர்ந்தால் எனக்கும் பலருக்கும் உபயோகமாக இருக்கும் சகோ..!

34 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...