"புன்னகையே வாழ்க்கை" வலைப்பூ அதிபர் சகோ.முஹம்மத் ஃபைக் நேற்று எழுதிய வெளிநாட்டு வாழ்க்கை என்ற பதிவில்... எழுதப்பட்டு உள்ளவைக்கு வரிக்கு வரி பதில் எழுத விழைந்து அதனால் விளைந்ததுதான் இந்த பதிவு..! இதை 'எதிர்ப்பதிவு' என்பதோ 'பக்கத்துவீட்டுப்பதிவு' என்பதோ உங்கள் விருப்பம்..! ஆனால், அதில் சொல்லப்பட்ட மற்றும் இதில் சொல்லப்படும் விஷயங்கள்தான் முக்கியம்..!
அந்தப்பதிவில் எழுதப்பட்டு இருந்தது போலத்தான் நானும் முன்பு கூறிக்கொண்டு இருந்தேன். பலரும் அதேபோல சொல்வதை இங்கே சவூதியில் கேட்டுமிருக்கிறேன். இதற்கெல்லாம் என்ன காரணமாக இருக்கலாம்..? சரி... இனி அந்த பதிவுக்கு வரிக்கு வரி...
//வேலை செய்யப் பிடிக்கவில்லை
உடன் வேலை செய்பவர்களையும் பிடிக்கவில்லை//
வெளிநாடுகளில் இருந்து இங்கே வந்து அதிக கல்வித்தகுதி மற்றும் அதிக திறமை மற்றும் அதிக சிரத்தையுடன் வேலை செய்யும் நம்மைப்போன்ற வெளிநாட்டவர்(அஜ்னபி)களுக்கு... அதே வேலையை செய்யும் உள்நாட்டு குடிமகன்களை காட்டிலும் இரு மடங்கு அல்லது மும்மடங்கு சம்பளம் கம்மி என்பதால் இருக்கலாம்.
//தங்குமிடமும் பிடிக்கவில்லை
உடன் தங்குபவர்களையும் பிடிக்கவில்லை//
குடும்பம், சொந்தம், அண்டைவீட்டார், ஊர்மக்கள், தாய்மொழி பேசும் மாநிலத்தோர், ஒரே கலாச்சார நாட்டினர் என்று எல்லாவற்றையும் தாண்டி... புதிய இடம், புதிய சூழல், புதியவர்கள் என்பதால் இருக்கலாம்.
//பிரயாணம் செய்யவும் பிடிக்கவில்லை
உடன் பிரயாணம் செய்பவர்களையும் பிடிக்கவில்லை//
ஒருமாசம் அல்லது மூன்று மாசம் வரை மகிழ்ச்சியாக இருந்துவிட்டு அதாவது லீவு முடிந்துபோய் ஊரிலிருந்து திரும்ப வேலைக்கு வருவதால் மனம் வெறுத்துப்போய் இருப்பதால் அப்படி இருக்கலாம். மற்றபடி, ஊருக்கு போகும்போதுதான் அந்த மகிழ்ச்சியில் எல்லாரையும் ஒவ்வொன்றையும் பிடிக்குமே..!
//சாப்பாடும் பிடிக்கவில்லை
சமைக்கவும் பிடிக்கவில்லை//
சமைக்கத்தெரியாதவராக இருக்கலாம். அல்லது அப்படியே திறமையாகவும் சுவையாகவும் சமைக்கத்தெரிந்து விட்டாலோ... "இவ்வளவு அருமையாக சமைக்கிறோம்... இதை நமக்கு பிடித்த குடும்பத்தாருடன் உற்றாருடன் உறவினருடன் பால்ய நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பரிமாறி சாப்பிட நமக்கு கொடுத்துவைக்க வில்லையே.." என்ற ஆற்றாமை காரணமாக இருக்கலாம்.
//காலநிலையும் பிடிக்கவில்லை//
நிலநடுக்கொட்டுக்கு அருகிலேயே 25-40 டிகிரி செல்சியஸ் சீதோஷ்ணத்திலேயே வருஷம் பூரா ஹியுமிடிட்டி என்றால் என்னவென்றே தெரியாமல் வாழ்ந்திருந்துவிட்டு... இங்கே ஒற்றை இலக்கத்தில் அதிக குளிரையும், 50 டிகிரி வரை அதிக வெயிலையும் கூடவேதொப்பி முதல் சாக்ஸ் வரை வியர்வையில் நழைக்கும் ஹியுமிடிட்டியையும் எப்படித்தான் யாருக்குத்தான் பிடிக்கும்..? இவை காரணமாக இருக்கலாம்.
//இங்குள்ள அரசியலும் பிடிக்கவிலலை
ஆட்சி செய்வோரையும் பிடிக்கவில்லை//
ஆயிரம் சொன்னாலும் மக்களாட்சி ஜனநாயகம் போல வருமா..? அதில் உள்ள மக்களுக்கான உரிமைகள் பற்றி அறிந்தவருக்கு அவற்றை அனுபவித்தோருக்கு மன்னராட்சி... ஷேக் ஆட்சி... எல்லாம் பிடிக்குமா..? ஆளும் அந்த ஒருத்தர் நாட்டிலேயே மிக மிக நல்லவராக மற்றவரை விட எல்லாம் அதிக இறையச்சம் கொண்டவாராக இருந்தால் மட்டுமே மன்னராட்சி மக்களுக்கு இனிக்கும்..! அப்படி தற்போது இல்லை என்பதே காரணமாக இருக்கலாம்.
//இந்த நாட்டையே பிடிக்கவில்லை//
அதாவது இப்படி ஒரு நாடு, இப்படி ஒரு ஆட்சியாளர், இதை கண்டுக்காத மக்கள் என்று இதையெல்லாம் பொறுக்க முடியாது கோபத்தில் வெடித்த வாக்கியமாக இது இருக்கலாம். ஒரு மருத்துவருக்கு நோயாளியின் நோயைத்தான் பிடிக்காது இருக்கவேண்டுமே அன்றி, நோயாளியை அல்லவே..! நோயைத்தான் ஒழிக்க வேண்டும். நோயாளியை அல்ல. (அவர் ஃபீஸ் கொடுக்காதவரா, கொடுத்தவரா என்பது அல்ல இங்கே பிரச்சினை..! :-))
//இத்தனையும் பிடிக்காவிட்டாலும்
வருடக் கணக்காக இங்கே குப்பை கொட்டுகிறேன்
காரணம் திர்ஹம்களை ரொம்பப் பிடித்திருக்கிறது//
ஊரில் உள்ள பொருளாதார சுமைகளும் குடும்பப்பொருப்புக்களுமே காரணமாக இருக்கலாம். மற்றபடி இதே சம்பளத்தில் சொந்த ஊரில் அலல்து சொந்த மாநிலத்தில் அல்லது சொந்த நாட்டில் ஒரு வேலை கிடைத்து விட்டால் கண்டிப்பாக ரூபாயைத்தான் பிடிக்கும்..! திர்ஹமையோ ரியாலையோ பிடிக்காது.
சரி, இதற்கெல்லாம் என்ன தீர்வு..?
- முடிந்தவரை குடும்பத்தை அப்பா, அம்மா சகோதரர்கள் நண்பர்களை முடியாவிட்டாலும்(!) அட்லீஸ்ட்... மணமாகி இருந்தால் மனைவி குழந்தைகளையாவது அழைத்து வந்து தம்முடன் தங்க வைப்பது.
- அது தம் விசாவில் முடியாது என்றால்... அது போன்ற வசதி தரும் வேறு வேலையை அங்கேயே தேடிக்கொள்வது.
- அதுவும் முடியாது என்றால் அவ்வப்போது விசிட் விசா அல்லது (சவூதி என்றால்) உம்ரா விசா எடுத்தாவது குடும்பத்தினரை அழைத்து வருவது.
- இதுவும் முடியாது என்றால் கூடிய விரைவில் வெளிநாட்டில் தனிமையில் கஷ்டப்பட்டு சம்பாரித்ததை சேமித்து விட்டு ஊரில் நல்ல வியாபாரம் அல்லது வேறு நல்ல வேலை பார்ப்பது. இப்போது ஏற்படும் பொருளாதார குறைபாட்டுக்கு ஏற்ற வகையில் தம் தேவையை சுருக்கி, செலவை குறைத்துக்கொள்வது.
- அதுவரை, தன் பால்யகால ஊர் சிநேகிதர்கள், தான் வேலைபார்க்கும் நாட்டில் இருந்தால் அவ்வப்போது அவர்களை சந்தித்து மகிழ்ச்சியாக பழைய நினைவுகளுடன் இருத்தல். (அந்த நண்பர்கள் சற்று சமைக்கத்தெரிந்த மற்றும் கொஞ்சம் செலவழிக்கத்தெரிந்த பார்ட்டியாகவும் இருக்க வேண்டும்..! :-) ஹி..ஹி..)
- 'புன்னகையே வாழ்க்கை'யாக அமைய வேண்டுமெனில், நாம் கஷ்டத்தோடு குறைவாக சம்பாரித்தாலும் அதை நிறைவாக மகிழ்வோடு செலவழிக்க வேண்டும் சகோ..!
அவ்ளோதான் சகோ நமக்குத்தெரிந்தது..! மேலும் இதுபற்றி பின்னூட்டங்களில் கருத்துக்கள் பகிர்ந்தால் எனக்கும் பலருக்கும் உபயோகமாக இருக்கும் சகோ..!
34 ...பின்னூட்டங்கள்..:
சலாம் சகோ ...
நல்லா இருக்கீங்களா ..
ரொம்ப நாளா எங்கும் வரவில்லை ...இங்கும் வரவில்லை ....
ரொம்ப சரியாக வரிக்குவரி பதில் சொல்லி இருக்கீங்க. உண்மைதான் எல்லாமே.
சமைக்கத்தெரியாதவராக இருக்கலாம்///
இது தான் அவருட சிங்கபூர் நூடில்ஸ் ல சொல்லி இருக்காரே........................
ஒவ்வொரு கருத்தும் நச்சுன்னு பொருந்துது... இதுக்கு பாயிக் இன் பதில் என்னவோ ?
இங்கு வந்து நிறைய பேச்சுலர்கள் புலம்புவதை அப்படியே எழுuதி ுக்கீஙக்.
என்ன செய்வது கடைசியில் இங்கே சிலபேருக்கு வாழ்க்கை முழுவதும் கழிந்து விுகிற்து. எல்லாம் மன நி்றைவுக்கு ஒன்ற்ை விட்ட்ு கொ்டுத்தால் த்ான் என்ற நிலைக்கு மாறிவிடுகின்றனர் நானும் பேச்சில்ர்ாகம் 3 பதிவு எழ்தி இருக்ேன்
முட்ிண்டt் நேரம்hந்தuு பார்கக்வும்
ellamee panam thaan enRaakividdthu.
சலாம் சகோ....
உண்மையான விடயம்தான்.....
அவற்றை அனுபவிப்பவர்களின் வலியும் வேதனையும் கொஞ்சநஞ்சமல்ல....
அதற்கு மாற்றீடு செய்துகொண்டோமானால் கொஞ்சமாவது ரிலெக்ஸாகலாம்தான்....
அஸ்ஸலாமு அலைக்கும்! சகோ ஆசிக்!
நம் நாட்டில் பணி செய்வதற்கு நிகர் வேறு நாட்டில் கிடைக்காததுதான். ஆனால் முழுக்க முழுக்க நேர்மையாகவும் லஞ்சம் கொடுக்காமலும் ஓரளவு அதிக சம்பளத்தையும் நம் நாட்டில் பார்ப்பது கொஞ்சம் சிரமம். ஒன்றை இழந்தால்தான் மற்றொன்றை பெற முடிகிறது. எனவே வெளிநாட்டில் வாழ்வோர் கூடிய வரை மனைவி மக்களோடு வாழ முயற்ச்சிக்க வேண்டும். சேமிப்பு இல்லா விட்டாலும் பரவாயில்லை. நிம்மதியான வாழ்வு கிட்டும்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரிக்கு வரி அருமையாக சொல்லியிருக்கிங்க...
கடைசியாக சொன்ன அறிவுரை அருமை சகோ..,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
எதிர்பதிவிலும் நல்ல எதிர்பதிவு
ஆமா இருக்கலாம் இருக்கலாமுன்னு எத்தனை இருக்கலாம் அதற்கப்புறம் பிடிக்குமோ,
செய்யலாமே இறுதியாக நீங்கள் தீர்மானமாக சொன்ன ஐடியாக்கள்.
இந்த இருக்கலாம் பிடிக்குமோ செய்யலாமே இது போன்ற அனுமனங்கள் சாத்தியமாகிறவரை அந்த இடைவேளியில் சில புலம்பல்கள் இருக்குமல்லவா
அதுதான் அந்த கவிதை.
தண்ணீர் இல்லாத குவளையை(தீனார்) காற்று அடைத்து இருப்பது போல்
எப்போது(ரூபாய்) தண்ணீர் குவளையில் ஊற்றப்படுகிறதோ,நிரப்படுமோ அப்போது
காற்று வெளியேறி விடும்.
அருமையான அலசல் சகோ!இதிலிருந்து புரிபடுவது என்னவென்றால் ஒன்றினைப்பெற வேண்டுமாயின் மற்றொன்றை இழந்து ஆக வேண்டும்.இருப்பதைக்கொண்டும் திருப்தியுற்றலே இதற்கு வழி.சரிதானே!
@ரியாஸ் அஹமதுஅலைக்கும் ஸலாம் வரஹ்...
அல்ஹம்துலில்லாஹ்,
நலமாக உள்ளேன் சகோ.ரியாஸ்.
ஏன் ரொம்ப நாளா பதிவு எழுதுவே காணோம்..? வருகைக்கும் நலம் விசாரிப்புக்கும் மிக்க நன்றி சகோ.
@Lakshmiவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.லக்ஷ்மி.
@HajasreeN//அவருட சிங்கபூர் நூடில்ஸ் ல சொல்லி இருக்காரே.//---அடடே.. அப்படியா..? நிறைய சமையல் குறிப்பு பதிவுகளை படித்து கற்றுக்கொள்ள வேண்டியதுதானே..?
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஹாஜாஸ்றின்
@Jaleela Kamalவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஜலீலா கமால். தங்களின் அந்த பேச்சுலர் பதிவுகளை நிச்சயம் படிக்க வேண்டும். அப்புறம், "Money is not everything" என்பார்கள்.
@F.NIHAZAஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//மாற்றீடு செய்துகொண்டோமானால் கொஞ்சமாவது ரிலெக்ஸாகலாம்தான்....//---ஆமாம் சகோ. தற்காலிகமாக..!
இதுதான் என்கருத்தும்.
அங்கே, தங்களின் "ஆயாவை கூட பிடித்துவிடும்"---பின்னூட்டம் மறக்க முடியாதது. :-)
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.நிஹாசா.
@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//ஆனால் முழுக்க முழுக்க நேர்மையாகவும் லஞ்சம் கொடுக்காமலும் ஓரளவு அதிக சம்பளத்தையும் நம் நாட்டில் பார்ப்பது கொஞ்சம் சிரமம்.//---உண்மைதான்..!
// ஒன்றை இழந்தால்தான் மற்றொன்றை பெற முடிகிறது. //---இதில்... அந்த 'இழப்பும்'... அந்த 'பெறுதலும்' ஒரே வகையாக சரிக்கு சமமாக இருந்தால் ஓகே. ஆனால்... இழந்த இளமை திரும்பாதே சகோ..!?!
//எனவே வெளிநாட்டில் வாழ்வோர் கூடிய வரை மனைவி மக்களோடு வாழ முயற்ச்சிக்க வேண்டும். சேமிப்பு இல்லா விட்டாலும் பரவாயில்லை. நிம்மதியான வாழ்வு கிட்டும்.//---சரியான கருத்து..!
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.சுவனப்பிரியன்.
@சிநேகிதிஅலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.சிநேகிதி.
@thariq ahamed//அறிவுரை// எல்லாம் இல்லை சகோ.தாரிக். ஜஸ்ட் கருத்துப்பகிர்வு. அவ்ளோதான்.
மற்றபடி,
நாம் சம்பாரிப்பதே செல்வழிக்கத்தானே சகோ..?
அதை, தேவைக்குமட்டும் செலவழித்தால் அதுவே நம் வாழ்வில் நிறைவு&மகிழ்வு.
ஆனால், தனித்தனியாக வாழ்ந்துகொண்டு செலவழித்தால் நிறைவு&மகிழ்வு இவற்றை பெற இயலாது என்பது என் கருத்து.
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.வடகரை தாரிக்.
@ஹைதர் அலிஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//அந்த இடைவேளியில் சில புலம்பல்கள்//---ஓகே ஓகே... "வருடக்கணக்காக" என்றாலும் 'இது தற்காலிகமானதுதான் நிரந்தரமல்ல' என்றும் சொல்லப்பட்டிருக்க வேண்டும் அல்லவா..?
குவளை-காற்று-தண்ணீர்-எல்லாம் சரிதான்..! ஆனால், இங்கே தண்ணீரை விட காற்று அல்லவா மிகவும் 'கனமாக' உள்ளது..? :-)
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஹைதர் அலி.
@ஸாதிகா//ஒன்றினைப்பெற வேண்டுமாயின் மற்றொன்றை இழந்து ஆக வேண்டும்.//---இதில்... அந்த 'இழப்பும்'... அந்த 'பெறுதலும்' ஒரே வகையாக சரிக்கு சமமாக இருந்தால் ஓகே. ஆனால்... இழந்த இளமை திரும்பாதே சகோ..!?!
//இருப்பதைக்கொண்டும் திருப்தியுற்றலே இதற்கு வழி.சரிதானே!//---சரியாக சொன்னீர்கள் சகோ.ஸாதிகா.
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஸாதிகா.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
ம்ம்ம் .என்னத்த சொல்ல. பிரிந்து இருப்பவர்களுக்கு தான்
அந்த வேதனை புரியும் . ஒன்றை இழந்தால் மற்றொன்றை பெற முடியும்
இதை நாம் ஏற்படுத்தி கொண்டது தானே சகோ.
அனைத்து சகோதரர்களும் அவர்களுடைய குடும்பத்தாருடன் சேர்ந்து
வாழ துஆ செய்வோம். என் கணவருக்கும் ...இறைவன் நாடுவானாக !
நம் எண்ணம் போல் தான் இறைவன் செயலும் .
அனுபவத்தில் அருமையாக எழுதி இருக்கிறீர்கள் சகோ.
@ஆயிஷா அபுல்.அலைக்கும் ஸலாம் வரஹ்...
//ஒன்றை இழந்தால் மற்றொன்றை பெற முடியும்//---இதில்... அந்த 'இழப்பும்'... அந்த 'பெறுதலும்' ஒரே வகையாக சரிக்கு சமமாக இருந்தால் ஓகே. ஆனால்... இழந்த இளமை திரும்பாதே சகோ..!?!
//அனைத்து சகோதரர்களும் அவர்களுடைய குடும்பத்தாருடன் சேர்ந்து வாழ துஆ செய்வோம். என் கணவருக்கும் ...இறைவன் நாடுவானாக !//--ஆமீன்.
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஆயிஷா அபுல்.
ஸலாம்
நானும் எதாவது சொல்றேன்..
நீங்கல்லாம் வாழ்கைய தேடுறீங்க ...
நான் வாழ்கைய ரசிக்கிறேன் ...
ப்ணம் என சொன்னது,கொமர் கல்யாண்ம், மகன்கள் படிப்புu, தாய்் தந்தaைய ர் மருத்தhுவ செலவு இது ப்ோல்
அபீஸ்’ல 5,6 நாளா இ.நெட் இல்ல... கிடைத்ததும் என் கருத்தை சொல்கிறேன்....
மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம்! please go to visit this link. thank you.
சலாம்!
இஸ்லாமிய சூழலில் வளர்ந்தவன் என்பதால் இது குறித்து நிறையவே பேசியிருக்கிறோம்., விவாதித்திருக்கிறோம்... இருந்தபோதும் பொதுவெளியில் இந்த விஷயத்தை உங்கள் இடுகையின் மூலம்தான் படிக்கிறேன்! நன்றாக இருக்கிறது!
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!
எதிர்பதிவேன்றதும் எதிரான கருத்துகளை சொல்லியுல்லீர்களோ? என நினைத்தேன். ஆனால் வரிக்கு வரி சகோ. ஃபாயிக் அவர்களின் கவிதைக்கு (கவிதை தானே?) விளக்கமிளித்துள்ளது நன்றாக உள்ளது. வேண்டுமானால் இதனை விளக்கவுரை என வைத்துக் கொள்ளலாம்.
தாங்கள் கூறிய தீர்வுகளில் நான் உடன்படுகிறேன். பகிர்வுக்கு நன்றி சகோ.!
@sulthanஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//நான் வாழ்கைய ரசிக்கிறேன் ...//---தேடிவிட்டதால்..? :-)
கரீக்டா..?
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.சுல்தான்.
@Jaleela Kamalவருகைக்கும் விளக்கத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஜலீலா.
@PUTHIYATHENRAL
க்ளிக்கினேன்...
///சிந்திக்கவும்: தமிழகத்தின் மின்சாரத்தை மற்றைய மாநிலங்களுக்கு வாரி வழங்கிவிட்டு தமிழக மக்களை மின்வெட்டில் ஆழ்த்துவதும், தமிழக வளங்களை எல்லாம் சுரண்டி விட்டு தமிழக மேன்பாட்டுக்கு உதவாமல் தமிழகத்தை புறக்கணிப்பதும் ஆண்டாண்டு காலமாக நடந்து வருபவை. வெள்ளையன் தமிழகத்தை கொள்ளையடித்ததை விட இந்தியா தமிழகத்தில் நடத்தியே கொள்ளையே அதிகம். மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்தை நடத்தி இந்தியாவின் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்டாள் மட்டுமே நாம் வளம் பெற முடியும். தமிழர்கள் சிந்திப்பார்களா? ///
படித்தேன்...
வருகைக்கும் நல்ல சிந்தனை பகிர்விற்கும் மிக்க நன்றி சகோ.புதியதென்றல்.
@ஷர்புதீன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஷர்புதீன்.
@Abdul Basithஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//இதை 'எதிர்ப்பதிவு' என்பதோ 'பக்கத்துவீட்டுப்பதிவு' என்பதோ உங்கள் விருப்பம்..!//
=
///வேண்டுமானால் இதனை விளக்கவுரை என வைத்துக் கொள்ளலாம்///
இப்படியும் வைத்துக்கொள்ளலாம்.
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.அப்துல் பாஸித்.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!