அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Sunday, November 20, 2011

23 கைவாளேந்திய காரிகை..!

ஃபுளோரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale) - இவரைப்பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் சகோ. நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்து நாட்டைச்சார்ந்த தாதி. அதாவது 'நர்ஸ்'..! பின்னாளில் தாதிகளுக்கான பயிற்சிப்பள்ளியையும் இவரே முதலில் துவங்கினார். இரவென்றும் பாராமல் கையில் ஒரு அரிக்கேன் விளக்கை ஏந்திக்கொண்டு ஓடியோடி ஓய்வின்றி போரில் காயம்பட்ட வீரர்களுக்கு மருந்திட்ட காரணத்தினால் "கைவிளக்கேந்திய காரிகை" (The Lady with the Lamp) என்று அன்போடு மக்களால் அழைக்கப்பட்டார்.

மன்னிக்கவும் சகோ..! இப்பதிவு 'இவரைப்பற்றி அல்ல' என்பதுதான் வருத்தமான செய்தி. பின் யாரைப்பற்றி..? 

நமக்கெல்லாம் நன்கு தெரிந்த நம் ஒவ்வொரு இந்தியருடைய வாழ்க்கையையும் பாதித்துக்கொண்டு இருக்கும் ஒரு நவீன காரிகை நம்மோடு வாழ்ந்துகொண்டு இருக்கிறார்...! அவரைப்பற்றித்தான்..! அவர் தமிழ்நாட்டு முதல்வாராகவும் இருக்கிறார்..! அவர்தான் இந்த பதிவின் தலைப்புக்குறியவர் என்பது இன்னும் மோசமான செய்திதான். இருந்தாலும் பகிர வேண்டியுள்ளது. வேறு வழி இல்லை சகோ..!

முதலில், இதெல்லாம்  தமிழகத்தில் சூடான செய்திகள்.... 

"ஏதோ உள்நாட்டில் வேலை பார்ப்போருக்குத்தான்... தமிழகத்தில் வாழ்வோருக்குத்தானே இந்த கஷ்டம் எல்லாம்..!? இந்த கொடுமையெல்லாம் பார்க்க கூடாதுன்னு சவுதில உட்கார்ந்திருக்கும் இவன் ஏன் இந்த விலையேற்றம் பற்றி எல்லாம் கவலைப்படுகிறான்..?" --என்று பலர் நினைக்கலாம்.
.
இங்கே வளைகுடா மற்றும் வெளிநாட்டில் வேலை பார்ப்போரில் பெரும்பாலோர் ஊரில் வேலை பார்த்துக்கொண்டு இருப்போரை - ஒருவேளை அவர்கள் தம்மைவிட குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருப்போராகவே இருந்தாலும்கூட - அவர்களை பொறாமையோடுதான் அல்லது ஒருவித ஆற்றாமையோடுதான் பார்ப்பார்கள். நெய்வேலி, கல்பாக்கம், தூத்துக்குடி இங்கிருந்தெல்லாம் வேலையை ராஜினாமா செய்துவிட்டு என்னுடன் இங்கே சவூதி மின் ஆலையில் வந்து வேலை பார்ப்போரில், "ச்சே... கூடுதல் சம்பளத்துக்கு ஆசைப்பட்டு நல்ல அரசு வேலையை விட்டுட்டு இப்படி வந்துட்டோமே..!" என்று புலம்புவோர் பலரை எனக்குத்தெரியும்.

இவர்கள் போன்றோர் மட்டுமின்றி ஊரில் வேறு எந்த வேலையும் கிடைக்காமல் வந்தவரோ அல்லது என்னைப்போன்று கூடிய சீக்கிரம் மூடப்படும் நிலையில் இருந்த SICK UNIT -இல் வேலையில் இருந்தபோது, கிடைத்த வேறொரு நல்ல வேலையை நோக்கி தப்பித்துக்கொள்ள வேண்டி வந்தவரோ... என இப்படி எவராக இருந்தாலும் அவருக்குள் ஓர் எண்ணம் இருக்கும். 

அதாவது, ஓரளவு நல்ல பொருளாதார பலம் தன் சேமிப்பில் அல்லது வேறு லாபகரமான ஒரு தொழிலில் நல்ல முதலீடோ போட்டு இருந்தால் ஊரில் போய் கூடிய விரைவில் செட்டில் ஆகிவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன்தான் வெளிவாடுவாழ் இந்தியர் பலர் இருப்பர்.

அந்த சேமிப்பு இலக்கை அடைய, இங்கே 'வாயைக்கட்டி, வயித்தைக்கட்டி' மேலும்... 'கையைக்கட்டி, காதைக்கட்டி, கண்ணைக்கட்டி' படு எளிமையாக வாழ்க்கையை நடத்தி... அதில் சேமிப்பும் செய்து, ஊருக்கு குடும்பத்தார் கேட்கும் பணத்தை மாதாமாதம் செலவுக்கும் அனுப்பி தன் ஒரே இலக்கை நோக்கி விரைவதிலேயே குறியாக இருப்பர்..!

பணி  நிமித்தம் வெளிநாடு வந்து தனியாக  வேலை பார்ப்போர், விரைவில் தம் மனைவி குழந்தைகளுடன் இன்பமாக வாழவே விரும்புவர். 

அதேபோல நல்ல வேளைகளில் இருப்போர்- வெளிநாடுகளில் குடும்பத்துடன் வாழ்வோர்கூட, தன் வயதான அப்பா அம்மாவை அவர்கள் எப்படி தம்மை குழைந்தையாக இருக்கும் போது கவனித்தார்களோ அதுபோல் முடியா விட்டாலும் அவர்களின் வோயோதிக சிரமங்களை குறைக்க தாம் பக்கத்தில் இருந்து கவனித்தாக வேண்டியது அவசியம் என்ற பாச உணர்வில் தம் பெற்றோருடன் வாழவே விரும்புவர். 

நீண்ட நாள் வெளிநாட்டில் குப்பை கொட்டிவிட்ட வேறுசிலர், "தம் குழந்தைகளைத்தான் கொஞ்சி விளையாட கொடுத்து வைக்கவில்லை..! அட்லீஸ்ட் தன் பேரக்குழந்தைகளுடனாவது கொஞ்சி விளையாடுவோமே" என்றும் கூட ஆசைப்படுவர்.

ஆக மொத்தம் இவர்கள் அனைவருமே... "எப்போடா சொந்த ஊருக்கு போயி செட்டில் ஆவோம்" என்றுதான் அல்லாடுவர்.

இப்போது இவர்களுக்கெல்லாம் நம்ம ஜெ. வைத்திருக்கிறார் செமை ஆப்பு..! இவர்கள் எண்ணத்தில் மண்ணள்ளி போட்டிருக்கிறார். எப்படி..? 

நான் முன்பு சொன்னதுபோல, ஒவ்வொரு இந்தியருடைய வாழ்க்கையையும் ஜெ. எப்படி பாதிப்பார் என்றும்கூட பலர் நினைக்கலாம். உதாரணமாக, சென்னை TO பாண்டிச்சேரி செல்லும் தமிழ்நாடு அரசு பேருந்து கட்டணம் ரூபாய் 55-லிருந்து 97-ரூபாய்க்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், இப்போது இதை சாக்காக வைத்து பாண்டிச்சேரி அரசின் PRTC யும் இதே அளவுக்கு விலையை ஏற்றுகிறது. இதேபோல... தமிழகத்துக்கு வந்து செல்லும் கேரள, கர்நாடக மற்றும் ஆந்திர அரசுப்பெருந்து கட்டணங்களும் ஜெ.வை காரணம் காட்டி ஏற்றப்படும். அந்த மாநிலங்களுக்கு வந்து செல்லும் மற்ற மாநில அரசுப்பேருந்துகளும் அதைக்காரணம் காட்டி கட்டணத்தை ஏற்றும். இப்படியே... ஆகமொத்தத்தில் அடுத்தமாதம் நாடு முழுக்க எல்லா மக்களையும் ஜெ. பாதிப்பார்.

மற்ற விலையேற்றத்தில் இனி என்னாகும்..? பால்விலை ஏறியதால் டீ-காபி, தயிர், மோர், வெண்ணை, பாலாடைக்கட்டி, பால்பவுடர்... இவையும், இவற்றில் செய்யப்பட்ட அல்லது செய்முறையில் இவையும் சேர்க்கப்பட்ட உணவுப்பொருட்கள் விலை எல்லாமே ஏறும். 'இவைகளை சாப்பிட்டுத்தான் வேலை பார்ப்போம்' என்போரின் சம்பளமும் ஏறும். அல்லது ஏற்றவேண்டி போராட்டம் நடக்கும். ஊழியர் சம்பளத்தை ஏற்றும் அந்த நிறுவனம் அதன் ஏற்றத்தை தம் உற்பத்தி பொருளின் தலையில்தான் கட்டும். அதாவது நம் தலையில். இதுவும் நாடு முழுக்க பரவும்.

பேருந்து கட்டணம் ஏறிவிட்டால், பேருந்தில் பயணித்து எந்தெந்த தோழிலெல்லாம் நடைபெறுகிறதோ அதெல்லாமே விலை ஏறும். மின்சார இயந்திரம் இயங்கி எந்தெந்த தொழில் எல்லாம் நடைபெறுகிறதோ அந்தந்த உற்பத்தி பொருளின் விலையெல்லாம் ஏறும். ஆகவே, பெரும்பாலும் எல்லா பொருட்களின் விலையும் ஏறும். நாடு முழுக்க..!

கடைசியில், இப்படித்தான் முடியும்..! "கணவா... / மகனே... / சகோதரா... / அப்பா... நீங்கள் மாசா மாசம் அனுப்பி வைக்கும் பதினஞ்சாயிரம் குடும்ப செலவுக்கு பத்தலை. விலைவாசி ஏறிடுச்சு. அதானால், இனிமேல் மாசாமாசம் குடும்ப செலவுக்கு இனி இருபத்தி அஞ்சாயிரம் அனுப்பிருங்க..!" இதைத்தான் நான் சொன்னேன்..! ஒவ்வொரு வெளிநாடுவாழ் இந்தியரின் வாழ்வையும் ஜெ. பாதிக்கிறார் என்று..!

ஆக, நம்ம ஜெ. ... நம்மிடம் இப்படி சொல்லாமல் சொல்றார்... 

"வந்துருவியாடா..? 
அவ்ளோ சீக்கிரம் உன் குடும்பத்தோடு இங்கே ஜாலியா வாழ வந்துருவியாடா..? 
சுலபமா காசு சேர்க்க விட்டுருவேனாடா நான்..? 
இன்னும் கொஞ்ச வருஷம்... இன்னும் கொஞ்ச வருஷம்... அல்லது காலம்பூரா ஒண்டியா பாலை வனத்துல ஒட்டகம் மேய்ச்சுட்டே இருடா..! 
அப்படியே சாகுடா..." 
---என்று...!

நாம் கொடுத்த 'முதல்வர்' என்ற பாதுகாப்பு கேடயத்தை ஒரு கையில் ஏந்தியவராக, மற்றொரு கையில்... 'வரிகள் / விலைவாசியேற்றம்' என்ற அவர் உருவாக்கிய பெரிய வாள் ஒன்றை ஏந்தி வெளிநாட்டில் வேலை பார்க்கும் எம்மைப்போன்றவர்களின் குறிக்கோளுக்கு ஒரே வெட்டு..! பெரிய தடையை போட்டு இருக்கிறார்...!  செம கழுத்தறுப்பு ஆட்சி..!

"ஒரு கோடியே எழுபத்தெட்டு லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பை ஊழல் மூலம் செய்திருந்தாலும், ஒரு ரூபாய்க்குத்தான் நாடு முழுக்க பேசினோம்..? (இல்லேன்னா இந்த ரேட் இன்னும் கம்மியா இருந்திருக்கும்..! நாம இன்னும் அதிகமா பேசி இருப்போம்..! அவ்வ்வ்வ்வ்வ்...) ஆனா... இந்த ஆட்சிக்கு அந்த ஆட்சியே மேல் போல தெரியுதே...!?!" என்று (ஒவ்வொருமுறையும்..!) எண்ணி... இப்போதே இவர் ஆட்சிக்கு ஓட்டுப்போட்ட மக்களின் 'கவுண்ட்  டவுன் ஸ்டார்ட்ஸ்'..! ஓட்டுக்கேட்கும்போது "சாதனைகள் பல செய்வேன்" என்று ஜெ. சொன்னாரா... அல்லது "சோதனைகள் பல செய்வேன்" என்றாரா என்று புரியாமல் மக்கள் விழிக்கிறார்கள்..!

இன்னும் நாலரை வருஷம் இருக்கு..! ச்சே... இது ரொம்ப அதிகம். யப்பா தேர்தல் கமிஷன்..! இலவச லேப் டாப் வந்தப்புறம்... இனி வருஷா வருஷம் எலெக்ஷன் ஆன்லைனில் செலவில்லாம சிம்பிளா வருமா..? யோசிச்சு நல்ல பதிலா சொல்லுங்க சகோ..!

23 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...