அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Tuesday, November 1, 2011

31 Traffic ராமசாமி-நீதி மன்றம்-CMDA-ஆக்ஷன் சீ(ல்)ன்..!


சென்னை தி.நகரில் உள்ள உஸ்மான் சாலையிலும், ரங்கநாதன் தெருவிலும் பல வருடங்களாக உள்ள மிகவும் பிரபலமான ஏகப்பட்ட வர்த்தக நிறுவனங்களில்... சரவணா ஸ்டோர்ஸ், தி சென்னை சில்க்ஸ், ரத்னா ஸ்டோர்ஸ், குமரன் தங்க மாளிகை, ஜெயச்சந்திரன், காதிம்ஸ்... உள்ளிட்ட 61 வர்த்தக நிறுவனங்களை நேற்று காலை தி.நகருக்கு வந்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும (CMDA) அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர்.

என்ன காரணமாம்..? முறையான கட்டட வரைபட அனுமதி இல்லாமல் கட்டியது, பார்க்கிங் வசதி செய்யப்படாதது, தீயணைப்பு வாகனங்கள் சென்று வர வசதியில்லாத இடங்களில் பல அடுக்கு மாடிக் கட்டடங்களைக் கட்டியது, பல்வேறு விதிமுறை மீ்றல்கள், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக என்று செய்திகள் கூறுகின்றன.

ஏற்கனவே... இந்த நிறுவனங்களுக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டும், எவ்வித உரிய நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எடுக்காது கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும், இதுதொடர்பாக வழக்குகளும் பெருமளவில் தொடரப்பட்டிருந்ததாகவும், இப்போதுதான் அவை எல்லாம்  "பூட்டி சீல்"வைக்கும் அளவுக்கு செய்வல்வடிவம் எடுத்திருப்பதாகவும் செய்திகளை படிப்போர் மேலும் அறியலாம்.

சகோ..! ஒரு நிமிஷம்..! இப்போது நம்முள் எழும் சில முக்கிய வினாக்கள்.

 • அரசுத்தரப்பு கூறும் மேற்படி குற்றங்களுக்காக ஒரு புதிய கட்டத்துக்கு எடுக்கப்படும் இதுபோன்ற நடவடிக்கை மிகவும் சரியானதே. ஆனால், உஸ்மான் சாலையிலும், ரங்கநாதன் தெருவிலும் பூட்டி சீல் வைக்கப்பட்ட மேற்படி 61 வணிக நிறுவனங்கள் பல வருடங்களாக அங்கே இருப்பதை நாம் அறிவோம். அவை ஒன்றும் நேற்று புதிதாக முளைத்தவை அல்லவே..?
 • ஏன்... இந்த நிறுவனங்கள் கட்டப்படும் போதே... இவர்களிடம் "முறையான கட்டட வரைபட அனுமதி" இல்லை என்று தெரியாதா..?
 • ஏன்... இந்த நிறுவனங்கள் கட்டப்படும் போதே... இவற்றில் "பார்க்கிங் வசதி செய்யப்படவில்லை" என்று தெரியாதா..?
  • ஏன்... இந்த நிறுவனங்கள் கட்டப்படும் போதே... அவைகள் இருக்கும் 'சந்து'களில் தீயணைப்பு வாகனங்கள் சென்று வர வசதியில்லாதது குறித்தும், அதற்காக மாநகராட்சி எவ்வித "சாலைவிரிவாக்க முயற்சியோ-திட்டமோ" இல்லாத நிலையில்...அது போன்ற இடங்களில் பல அடுக்கு மாடிக் கட்டடங்களை கட்ட ஆரம்பிப்பது... கட்டுவது... கட்டி முடித்து கிரஹப்பிரவேசம் செய்வது எல்லாம் தவறென்றும் தெரியாதா..?
  • ஏன்... இந்த நிறுவனங்கள் கட்டப்படும் போதே... பல்வேறு விதிமுறை மீ்றல்கள், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் எல்லாம் யார் கண்ணிலும் படவே இல்லை..?
  • மேலேயுள்ள நியாயமான கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு காரணமான அப்போதைய கவனக்குறைவு அதிகாரிகள் யார் என்று கண்டுபிடித்து  அவர்கள் மேல் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா..? அரிசி வேகவில்லை என்றால் அரிசிக்கு மட்டும் எதற்கு தண்டனை..? எரியாத அடுப்புக்கு ஏன் தண்டனை இல்லை..?
  • ஏதோ, சென்னையில் மொத்தமே இந்த 61 கடைகளை மட்டுமே மக்கள் நம்பி இருப்பது போல... "தீபாவளி முடியட்டும்" என்றும் "மக்களுக்கு பாதிப்பு வரக்கூடாது" என்றும்  'காத்திருந்து'(?) நேற்று CMDA நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்திகள் கூறுவது எல்லாம் செம காமடி..! மெய்யாக, "யாருக்கு இதனால் ரொம்ப ரொம்ப நன்மை" என்று சிறு குழந்தையும் சொல்லுமே..?
  • தீபாவளிக்காக காத்திருந்தோர் ஏன் இவ்வாரம் வரக்கூடிய பக்ரீத் வரை காத்திருக்க வில்லை..? பக்ரீத் கொண்டாடும் மக்கள் பாதிக்கப்படலாமா..?
  • தீபாவளி முடிந்தும் ஐந்து நாள் வரை "மக்களுக்கு பாதிப்பு வரக்கூடாது" என்று காத்திருந்து "கவலைப்பட்ட மஹாத்மாக்கள்" எல்லாரும்... அந்நிறுவனங்களில் சிறு ஊதியங்களில் வேலை செய்யும் கடைநிலை ஊழியர்களின் சம்பள நாளான இன்றைய நவம்பர் ஒண்ணாம் தேதி வரை காத்திருந்தார்களா..? 
  • ஆயிரக்கணக்கான அந்த ஊழியர்களின் தற்போதைய நிலை பற்றி என்ன கவலை பட்டார்கள்..? அவர்களின் ஊதியத்துக்கும் கால்வயித்து கஞ்சிக்கும் என்ன வித மாற்று ஏற்பாடுகள் செய்துவிட்டு சீல் வைத்தனர் இந்த உத்தம மஹாத்மாக்கள்..?
  • இந்த சீல் வைப்பிற்காக முன்னர் வழக்கு தொடுத்திருந்தவரும் நேற்று ராஜ் நியூசில் பேசியவருமான திரு.Traffic ராமசாமி உட்பட, சீல் வைக்கப்பட்ட வணிக நிறுவன உரிமையாளர்கள் தரப்பில் பலரும்... "சரியாய்-நேர்மையாய் செயல்பட்டு சீல் வைத்தவர்களை" சாடுகிறார்களே..! எப்படி தெரியுமா..? "அது ஏன் பொருக்கி எடுத்து, குறிப்பிட்ட 61 கடைகள் மட்டும் சீல் வைக்கப்பட்டன..? அதே குற்றங்களை செய்திருக்கும் மற்ற கடைகள் எல்லாம் என்னாச்சு..?" ...என்று ராஜ் தொலைகாட்சி செய்தி பேட்டியில் கேட்கின்றனரே..?
  வழக்கு போட்டே பிரபலமான... திரு.Traffic ராமசாமி
  • ஆக, இந்த நிறுவன முதலாளிகள் தரப்பில் குற்றம் இருப்பதை ஒப்புக்கொள்கிறார்கள் எனில், அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை சரிதான் என்ற நிலையில், இனி இந்த வணிக நிறுவனங்கள் மீண்டும் ஒருநாள் இதேநிலையில் எவ்வித மாற்றமும் இன்றி இயங்க ஆரம்பிக்கும்கால்... நமக்கு அப்போது என்ன தோன்றும்..? "கேட்டது கிடைக்க வில்லை; எனவே, சீல் வைத்தனர்; உடனே கிடைத்து விட்டது; எனவே மீண்டும் திறக்கப்பட்டன"... என்றுதானே..?
  • அப்படி என்றால் இதே குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்படும் சீல்வைக்கப்படாத மற்ற வணிக நிறுவனங்கள் எல்லாம் "கேட்டதை கொடுத்தவர்களா..?" அல்லது "கேட்பதை கொடுக்கும் அளவுக்கு பசை அற்ற பார்ட்டிகள் என்று விடப்பட்டவர்களா..?" ...என்ற ஐயம் வருகிறதே..!
  • மேற்படி அதே காரணங்களுடன் பல அடுக்குமாடி குடி இருப்புகள் பல அதே சென்னை தி.நகரில் சந்து பொந்துக்குள் எல்லாம் உள்ளனவே..? அவைகள் மீது சீல் வைக்கவில்லையே..? இந்த 'சீல் சட்டங்கள்' எல்லாம் பலகோடி ரூபாய் இலாபம் பார்க்கும் வணிக நிருவனங்களுக்கு மட்டும்தானா..? எங்கே "கிடைக்குமோ" அதை நோக்கியே "அரக்கும், சீலும்" செல்வது போல புரிகின்றதே..!?
  • ஒருவேளை அந்த 61 வணிக நிறுவனங்களும் 'எல்லாம் சரியாத்தான் இருக்கின்றன.. இவர்கள் குற்றமற்றவர்கள்' என்று வழக்கில் இருந்து நீதிமன்றம் மூலமாகவே மீண்டுவந்து தம் வணிகத்தை ஜெக ஜோதியாக ஆரம்பித்தால்... அப்போதைய விமர்சனம் எப்படி இருக்கும்..?
  • சரி, இதுபோன்று அங்கொன்றும் இங்கொன்றுமாய் சாலையில் குறிப்பிட்ட 61 கடைகளுக்கு மட்டும் சீல் வைத்துவிட்டால் போதுமா..? உடனே, அந்த சாலை நெடுக தானாகவே தீ அனைப்பு வண்டி சென்றுவரும் அளவுக்கு "திடும்" என்று அகலமாகி... அப்புறம்... சாலையின் இருமருங்கிலும் பார்க்கிங் வசதிகளும் 'தொபுக்கடீர்' என்று தாமாக முளைத்து விடுமா..?
  • டிஸ்கி: சிரிக்காதீர்கள் சகோ..! இந்த கேள்வி உட்பட மற்ற கேள்விகள் அனைத்துமே சீரியசாகத்தான் கேட்டு இருக்கிறேன்.
  இறைநாடினால், மேற்கண்ட அனைத்து வினாக்களுக்கும் காலம் நிச்சயம் பதில் சொல்லி விடும். அப்போது... யார் யார்... எப்படி எப்படி; எங்கே எங்கே என்ன என்ன... நடந்திருக்கும்; என்றெல்லாம் தெளிவாக அறியும்போது... 

  The Govt. and Law are  for  the people... of  the people... and  by  the people 
  ....என்றா... அல்லது.... 

  The Govt. and Law are  far  the people... off  the people... and  buy  the people
  ....என்றா... என்று,
  ர்ர்ர்ர்ர்ரோம்ப நல்ல்ல்ல்ல்லாவே நமக்கு வெ...ள...ங்...கி...ரு...ம் சகோ..!

  31 ...பின்னூட்டங்கள்..:

  பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

  தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

  தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

  Next previous home
  Related Posts Plugin for WordPress, Blogger...