(பொறுப்பற்ற மற்றும் எதிர்மறையான கருத்துகள் சொன்னதற்காக தொலைக்காட்சி செய்தி ஆசிரியர்கள் கட்ஜுவை சாடினர்)
***************************
(இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் நீதிபதி மார்கண்டேய கட்ஜுவிற்கு "எடிட்டர்ஸ் கில்டு ஆஃப் இந்தியா" கண்டனம்)
***************************
(ஊடகங்களுக்கு எதிராக நீதிபதி கட்ஜுவின் தரம்தாழ்த்தும் கருத்துக்களை 'ஒலிபரப்பு எடிட்டர்கள் சங்கம்' கண்டிக்கிறது)
***************************
(கட்ஜு அறிக்கைக்கு பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்)
***************************
(செய்தி ஒலி/ஒளிபரப்பாளர்கள் சங்கம் கூட, ஊடக செயல்பாடுகளை பாதுகாக்கும் பொருட்டு கட்ஜு கருத்துக்கு கண்டனம்)
***************************
(செய்தி அமைப்பு மற்றும் தினசரி உரிமையாளர்களின் கூட்டமைப்பு ஆகியன கட்ஜுவின் கருத்துக்கு கண்டனம்)
***************************
இந்த ஊடகத்துறையினர் எல்லோரும் இப்படி ஒட்டுமொத்தமாக வாயிலும் வயிற்றிலும் 'லபோ திபோ' என்று அடித்து அலறிக்கொண்டு... எதற்கு இதுபோல காட்டமாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி திரு.மார்கண்டேய கட்ஜுவுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்..? ஊடகத்தினர் பற்றி அவர் அப்படி என்னதான் சொன்னார்..?
காரணம் இருக்கின்றது சகோ..! "ஊடகம்" என்ற இந்த காட்டுப்பூனைக்கு, இதுவரை சரியான ஒரு மணியை கட்ட முக்கிய உயர்ந்த அரசுப்பணியில் இருந்தவர்கள் எவரும் ஒரு சிறு முயற்சி எடுத்ததாகக்கூட எனக்கு நியாபகம் இல்லை. ஆனால், இவரோ... செய்தியாளர் திரு.கரன் தாப்பர்க்கு சென்ற வாரம் அளித்த CNN-IBN தன் பேட்டியில், பொதுவாக ஊடகங்களை சவுக்கை எடுத்து அடித்து விளாசி தோலை உரித்து தொங்கப்போட்டு இருக்கிறார், தன்னுடைய காட்டமான உண்மை வார்த்தைகள் மூலம்..!
.
.
விடுவார்களா ஊடகத்தினர்..? அதன் விளைவுதான் மேற்படி கண்டனங்கள்..! ஆனா, உண்மையில் இந்த ஊடகத்தினரின் கண்டனங்கள்தான் கண்டிக்கப்பட வேண்டியன. நீதிபதி கட்ஜுவின் கருத்துக்கள் போற்றப்பட வேண்டியன. அப்படி என்னதான் காரசாரம் இருந்தது அவரின் அந்த பேட்டியில் என அறிய விருப்பமா சகோ..?
இதோ... நமக்காக தினகரன் நாளிதழ் அந்த பேட்டியின் மொழியாக்கத்தை இவ்வாரம் நவம்பர்-2 அன்று வெளியிட்டுள்ளனர். நீங்களும் இதை படித்துப்பாருங்கள் சகோ..! அப்படி அவர் என்ன தவறாக சொல்லிவிட்டார் கண்டனம் தெரிவிப்பதற்கு..? --என்று விளங்கும்..!
நன்றி :-
தினகரன் நாளிதழ் (2 நவம்பர் 2011-திருச்சி) & தினகரன் இணையதளம்
=========================================================
பத்திரிகைகளும் டெலிவிஷன் சேனல்களும் செயல்படும் விதம் குறித்து முன்னாள் நீதிபதியும் தற்போதைய பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ள கருத்துக்கள் மீடியா வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சி.என்.என் & ஐபிஎன் சேனலில் கரன் தாப்பர் நடத்தும் டெவில்ஸ் அட்வகேட் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது கட்ஜு கூறிய விஷயங்கள் சர்வதேச அளவில் பத்திரிகையாளர்களின் கடும் விமர்சனத்துக்கு இலக்காகியுள்ளது.
அந்த கேள்வி & பதில் நிகழ்ச்சியின் முக்கியமான பகுதிகள் இங்கே:
செய்தியாளர் கரன் தாப்பர் :சமீபத்தில் சில பத்திரிகை மற்றும் டீவிஆசிரியர்களை சந்தித்தபோது, ‘மீடியா பொறுப்பில்லாமல் செயல்படுகிறது‘ என்று வருத்தப்பட்டீர்கள். மீடியாவின் செயல்பாடு உங்களுக்கு ஏமாற்றம் தருகிறதா?
நீதிபதி மார்கண்டேய கட்ஜு : ரொம்ப ஏமாற்றம் அளிக்கிறது.
உங்களுக்கு மீடியா பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லையா?
நிச்சயமாக இல்லை.
உண்மையாகவா சொல்கிறீர்கள்?
உண்மையாகவே எனக்கு மீடியா பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை. மக்கள் நலனுக்காக மீடியா பணியாற்ற வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி இல்லை. சிலநேரங்களில் மக்கள் நலனுக்கு எதிராக செயல்படுவதையும் பார்க்கிறேன்.
உண்மையான தகவல்களை பாரபட்சம் இல்லாத முறையில் வழங்குவது மீடியாவின் கடமை என்று அந்தசந்திப்பில் குறிப்பிட்டீர்கள். மீடியா நேர்மையாக செயல்படவில்லையா, அல்லது அது போதுமானதாக இல்லையா?
ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் வரலாற்றில் ஒரு மாற்றம் நேர்ந்து கொண்டிருக்கிறது. நில பிரபுத்துவ வேளாண் சமூகமாக இருந்த இந்தியா இன்றைக்கு நவீன தொழில்சார் சமுதாயமாக மாறும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். இது வலிகள் மிகுந்த காலகட்டம். முன்பு ஐரோப்பா இதே மாற்றத்தை சந்தித்த நேரத்தில், மக்களுக்கு அந்த வலியை குறைக்கும் வகையில் அங்குள்ள மீடியா செயல்பட்டது.
இந்தியாவில் அப்படி நடக்கவில்லை என்கிறீர்களா?
இங்கே அதற்கு தலைகீழாக நடக்கிறது. ஐரோப்பாவில் ரூசோ, தாமஸ் பய்ன், திதரோ மாதிரி எழுத்தாளர்கள் மக்களை மாற்றத்துக்கு தயார் செய்தார்கள். ‘இந்த நாட்டிலுள்ள கடைசி சாமியாரின் குடலை உருவி அதை கடைசி மன்னனின் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கவிடும் வரையில் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்காது‘ என்று முழங்கினான் பிரஞ்சு சிந்தனையாளன் திதரோ.
அவர்களோடு ஒப்பிட்டால் இந்தியாவின் வரலாற்று மாற்றத்துக்கு நமது மீடியாவின் பங்களிப்பு எப்படி?
இந்திய மீடியா பெரும்பாலான நேரங்களில் மக்களுக்கு எதிரான நிலை எடுப்பதை பார்க்கிறேன். மூன்று விஷயங்களை உதாரணம் காட்டலாம். முதலாவது, பற்றி எரியும் உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை மீடியா திசை திருப்புகிறது. இங்கே பிரச்னைகள் எல்லாமே பொருளாதார அடிப்படையிலானவை. நம் மக்களில் இன்னமும் 80 சதவீதம் பேர் வறுமை,வேலையின்மை, விலைவாசி, நோய்களால் பாதிக்கப்பட்டு வாழ்க்கை நடத்துகின்றனர். அந்த பிரச்னைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து தீர்வு காண தூண்டாமல்,பிரச்னைகளில் இருந்து திசை திருப்புகிறது மீடியா. சினிமா நட்சத்திரங்கள், அழகி போட்டி, கிரிக்கெட் மாதிரியான சமாசாரங்களை பெரிதுபடுத்தி நாட்டுக்கு அத்தியாவசியமானது அந்த விஷயங்கள்தான் என்பதுபோல் ஒரு பிரமையைஉண்டாக்குகிறது.
ஃபேஷன், சினிமா, கிரிக்கெட் மேட்டரை மக்களுக்கு போதையேற்ற மீடியா பயன்படுத்துகிறது என்கிறீர்கள்?
ஆமாம். கிரிக்கெட் நமது ஜனங்களுக்கு ஒரு போதைப்பொருள் & ஓப்பியம் & மாதிரி. ரோமாபுரி பேரரசன் சொல்வானாம், ‘மக்களுக்கு ரொட்டி கொடுக்கவழியில்லை என்றால் சர்க்கஸ் பார்க்க ஏற்பாடு செய்‘ என்று. இந்தியாவில் மக்களுக்கு தேவையானதை கொடுக்க முடியாவிட்டால் அவர்களை கிரிக்கெட் பார்க்க வைக்கிறோம். நிறைய சேனல்களில் இரவு பகல் எந்த நேரமும் ஏதாவது கிரிக்கெட் மேட்ச் ஓடிக் கொண்டே இருக்கிறது & அதுதான் நாட்டின் ஒரே பிரச்னை மாதிரி.
மக்கள் விரோதமாக மீடியா செயல்படுவதை காட்டும் இன்னும் இரண்டு விஷயங்கள் என்னென்ன?
இரண்டாவது, அநேக நேரங்களில் மக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. இங்கே பலதரப்பட்ட மக்கள்வாழ்கிறார்கள். ஒருவரை ஒருவர் மதித்தால்தான் ஒற்றுமையாக நிம்மதியாக வாழ முடியும். ஆனால் என்ன நட க்கிறது? ஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் ‘குண்டு வைத்தது நாங்கள்தான் என்று இந்தியன்முஜாஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘ என்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன. அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்ததுஎன்று காட்டுகிறார்கள். எஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும். யாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது?முஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள்என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா. எந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.
மீடியா இந்த விஷயத்தில் கேர்லசாக நடக்கிறது, தகவல் உண்மையா என்பதை செக் பண்ணாமல் செய்திவெளியிடுகிறது என்கிறீர்களா அல்லது வேண்டுமென்றே அப்படி செய்வதாக நினைக்கிறீர்களா?
மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன். நிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.
மீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்?
குண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்தது என்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும் போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்?
மீடியாவின் மக்கள் விரோத நிலைப்பாடுக்குமூன்றாவது உதாரணமாக எதை சொல்ல போகிறீர்கள்?
ஒரு ஃபியூடல் சொசைட்டி மாடர்ன் சொசைட்டியாக மாறுகிற கால கட்டத்தில் அந்த மக்களும் நாடும்முன்னேற்ற பாதையில் செல்வதற்கு அறிவியல் சிந்தனை பரவ வேண்டும். அதற்கு மீடியா உதவ வேண்டும். ஐரோப்பாவில் நடந்ததை சொன்னேன். இங்கே என்ன நடக்கிறது? அறிவியல் சிந்தனையை தூண்டுவதற்கு பதில் ஜோசியம், மூடநம்பிக்கை போன்ற அறிவியலுக்கு எதிரான விஷயங்களை பரப்புகிறது மீடியா. ஏற்கனவே நமது நாட்டில் 80 சதவீத மக்கள் ஜாதி, மதம், மூடநம்பிக்கை போன்ற விஷயங்களில் சிக்கி மனரீதியாக பின்தங்கி நிற்கிறார்கள்.
அவர்களை அந்த மாயைகளில் இருந்து விடுவித்து ஒரு மேம்பட்ட சிந்தனை வட்டத்துக்கு கொண்டுவர, முற்போக்கானஎண்ணங்கள் உருவாக மீடியா தூண்டுதலாக இருக்க வேண்டுமா, வேண்டாமா? ஆனால் மக்களை இன்னும் மடையர்களாக்கும் வேலையை நமது மீடியா செய்கிறது. பல சேனல்களில் பெரும்பாலான நேரம் ஜோசியம் ஓடுகிறது. இன்றைக்கு நீங்கள் இந்த கல் மோதிரம் போட வேண்டும், இன்ன கலர் சட்டை அணிந்தால் நீங்கள் இறங்கும் காரியம் வெற்றி என்றெல்லாம் அபத்தமாக சொல்லி மக்களின் மூளையை மழுங்கடிக்கிறார்கள். என்ன பேத்தல் இது!
ஆக, மீடியா என்ன செய்ய வேண்டும் என சமுதாயம் எதிர்பார்க்கிறதோ அதை செய்யவில்லை என்கிறீர்கள்.தன்னை நம்பிய இந்தியாவை மீடியா கைவிட்டு விட்டதாக எடுத்துக் கொள்ளலாமா?
ஒரு பெரிய சமுதாய மாற்றத்தில் மீடியாவின் பங்களிப்பு அபாரமானதாக இருக்க வேண்டும். ஏனென்றால் மீடியா என்பது ஏதோ சாமான் உற்பத்தி செய்து சந்தையில் விற்கும் ச £தாரணமான பிசினஸ் கிடையாது. அறிவு சம்பந்தப்பட்டது. சிந்தனை சம்பந்தப்பட்டது. மக்களுக்கு அறிவியல் அடிப்படையிலான புதிய சிந்தனைகள் உருவாக தூண்டுகோலாக செயல்படும் புனிதமான பணி மீடியாவுக்கு தரப்பட்டிருக்கிறது. அந்த பொறுப்பை அது செய்ய தவறினால் நாட்டை மக்களை கைவிட்டு விட்டதாகத்தானே அர்த்தம்?
இந்தியாவை இன்னும் மோசமாக்குகிறது மீடியா என்றா சொல்கிறீர்கள்?
அதுதான் என் மதிப்பீடு. ஒரு ஜோசியர் உட்கார்ந்துகொண்டு ‘இது அந்த ராசி, அது அணிந்தால் உங்களுக்கு ராசி‘ என கதைஅளந்து கொண்டிருப்பதை எத்தனை சேனல்களில் பார்க்கிறோம்.
‘செய்தியை சரியாக சொல்வதில்லை;உண்மைகளை இஷ்டத்துக்கு திரித்து கூறுகிறது; கருத்தையும்வார்த்தைகளையும் வெட்டி ஒட்டி வேறு அர்த்தம் கொடுக்கிறது’என்பது மீடியா பற்றிய மக்களின் எண்ணம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அதேதான் என் கருத்தும். 2009 தேர்தலில் பார்த்தோம். முன்னெல்லாம் செய்தியாளர்கள் வேட்பாளரைபார்த்து, ‘எனக்கு பத்தாயிரம் கொடு; உனக்கு சாதகமாக செய்தி போடுகிறோம்‘ என்று பேரம் பேசினார்கள். அதை பார்த்து பத்திரிகை உரிமையாளர்களுக்கு வேறு ஐடியா உதித்தது.‘நாம்தான் சம்பளம் கொடுக்கிறோமே, செய்தியாளர்கள் இப்படியும் சம்பாதிக்க ஏன் இடமளிக்க வேண்டும்? நாமே சம்பாதிக்கலாமே?‘என்று முடிவு செய்து, ‘ஒரு கோடி கொடுங்கள், நான் ஒரு பேக்கேஜ் தருகிறேன்‘ என்று டீல் போடுகிறார்கள். ஒரு பத்திரிகையில் ‘‘வேட்பாளர் ‘ஏ‘ அமோக வெற்றி பெறுவார்‘‘ என்ற செய்தி மேலே; ‘‘அவருக்கு டெபாசிட் போய்விடும், ‘பி‘தான் ஜெயிப்பார்‘‘ என்று கீழே முதல் பக்கத்திலேயே பிரசுரமான விசித்திரத்தை பார்த்தோம். கண்ணை விற்று சித்திரம் வாங்கும் வேலை.
இந்த மாதிரி பிரச்னைகளுக்கு தீர்வு காண நீதிபதி வர்மா தலைமையில் நியூஸ் பிராட்காஸ்டர்ஸ் அசோசியேஷன் அமைத்து சுயமாக சில கட்டுப்பாடுகளை கொண்டுவர முயற்சிசெய்தார்கள்...
அதில் எந்த பலனும் ஏற்பட்டதாக தெரியவில்லையே. நீங்கள் தொழில் நடத்துவது ஏழைகள் வாழும் நாட்டில்; அதனால் அவர்களுடைய பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்தாக வேண்டும்; அதை விடுத்து ‘லேடி காகா வந்துவிட்டார்.. கரீனா கபூர் தனது மெழுகு சிலையை மிகவும் சிலாகித்தார்..’ இதெல்லாமா முக்கிய செய்தி ஆவது?
மீடியா ஏன் மாறவில்லை என நினைக்கிறீர்கள்?
அவர்களுக்கு எந்த பயமும் இல்லை. அது ஒரு காரணம். கொஞ்சமாவது பயம் இருக்க வேண்டும். தப்பு செய்தால் தண்டனை நிச்சயம் என்ற பயம்.
அதற்கு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்?
பத்திரிகைகளை மட்டும்தான் பிரஸ் கவுன்சில் இப்போது கேள்வி கேட்க முடியும். பிரஸ் கவுன்சில் பெயரை மீடியா கவுன்சில் என மாற்றி டீவி சேனல்களையும் அதன் வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். சொல்லி திருந்தாதமீடியா நிறுவனத்துக்கு அரசு விளம்பரங்களை நிறுத்துவது;லைசென்ஸை குறிப்பிட்ட காலத்துக்கு முடக்கி வைப்பது போன்ற தண்டனை அளிக்க அந்த கவுன்சிலுக்கு அதிகாரம் வேண்டும். பிரதமருக்கு எழுதியிருக்கிறேன்.
அது பத்திரிகை சுதந்திரத்தை பாதிக்கும் என்பார்களே?
ஜனநாயகத்தில் எல்லோரும் மக்களுக்கு பதில் சொல்ல கடமை பட்டவர்கள். எந்த சுதந்திரமும்எல்லையில்லாதது அல்ல. சில கட்டுப்பாடுகள் இருந்தாக வேண்டும். மீடியா இதை உணர்ந்து கொண்டால் நாட்டுக்கு நல்லது.
மீடியாவை உங்களுக்கு சுத்தமாக பிடிக்காது போலிருக்கிறதே?
நான் ரொம்பவும் மதிக்கிற சில மீடியாகாரர்களும் இருக்கிறார்கள். உதாரணமாக சாய்நாத்தைசொல்லலாம். அவர் மேல் எனக்கு ரொம்ப மரியாதை உண்டு. விவசாயிகள் தற்கொலை பற்றி நிறைய எழுதியிருக்கிறார். ஆனால் அப்படிப்பட்ட ஆட்கள் குறைவு. பெரும்பாலான செய்தியாளர்கள் அரைகுறையாகத்தான் இருக்கிறார்கள். எகனாமிக்தியரி, பொலிடிகல் சயின்ஸ், லிட்டரேச்சர், ஃபிலாசபி போன்ற விஷயங்களில் ஆழ்ந்த அறிவு இல்லாதவர்கள்.
திரு.மார்கண்டேய கட்ஜுவின், ஊடகங்கள் மீதான இவ்வளவு சிறப்பான சரியான கருத்துக்கள் கொண்ட ஆக்கபூர்வமான விமர்சனத்திற்கு வெட்கித்தலை குனிந்து தங்கள் தவறுணர்ந்து வருந்தி திருந்தி சரியான பாதையில் அல்லவா பயணிக்கவேண்டும் இனி..? ஆனால், அதைவிடுத்து... எதற்கு ஊடகத்தினர் கண்டனங்கள் தெரிவிக்கிறார்கள்..?
மீடியா என்றால் கொம்பு முளைத்தவர்களா..? மீடியாக்களுக்கு எந்த பயமும் கட்டுப்பாடும் பொறுப்புணர்ச்சியும் இல்லை. மக்களின் எதிர்கால வாழ்வு குறித்து மனசாட்சி உறுத்தல் இல்லை. தப்பு செய்தால் சட்டப்படி தண்டனை நிச்சயம் என்ற அச்சம் இல்லை.
வெறும் TRP Ratting-ம் பத்திரிக்கை விற்பனையும், இணைய வாசகர்கள் ஹிட்சும் அதனடிப்படையிலான விளம்பர வருவாயுமே இவர்களின் குறிக்கோளாகி விட்டது.
ஊடகங்கள் ஒன்றும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை அல்லவே..? ஒரு இந்திய குடிமகன்... அதுவும், உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து ஒய்வு பெற்றவர்... அதுவும், பிரஸ் கவுன்சில் தலைவர்... ஊடகத்தை விமர்சித்ததால்... அவருக்கு கண்டனம் என்றால்..?!? அதுவும் எப்படி..? நாட்டுக்கும் மக்களுக்கும் சரியான நல்ல கருத்து சொன்னதுக்கு கண்டனம் என்றால்..? என்னால் சும்மா இருக்க முடியவில்லை சகோ..!
இந்த பேட்டிக்காக நீதிபதி மார்கண்டேய கட்ஜுக்கு கண்டனம் தெரிவிக்கும் ஊடகத்தாருக்கு எனது வன்மையான கடும் கண்டனம் உரித்தாகட்டும்..!
ஊடகங்கள் ஒன்றும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை அல்லவே..? ஒரு இந்திய குடிமகன்... அதுவும், உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து ஒய்வு பெற்றவர்... அதுவும், பிரஸ் கவுன்சில் தலைவர்... ஊடகத்தை விமர்சித்ததால்... அவருக்கு கண்டனம் என்றால்..?!? அதுவும் எப்படி..? நாட்டுக்கும் மக்களுக்கும் சரியான நல்ல கருத்து சொன்னதுக்கு கண்டனம் என்றால்..? என்னால் சும்மா இருக்க முடியவில்லை சகோ..!
இந்த பேட்டிக்காக நீதிபதி மார்கண்டேய கட்ஜுக்கு கண்டனம் தெரிவிக்கும் ஊடகத்தாருக்கு எனது வன்மையான கடும் கண்டனம் உரித்தாகட்டும்..!
சபாஷ் கட்ஜு சார்..! நேர்மையான துணிச்சலான அருமையான பேட்டி..! முன்னாள் நீதிபதி மற்றும் இந்நாள் பிரஸ் கவுன்சில் தலைவர் அவர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றியும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.
42 ...பின்னூட்டங்கள்..:
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ. வாழ்த்துக்கள் கட்ஜ் சார். நான்காவது தூணுக்கு தான் பேஸ்மென்ட் வீக்காகி பல வருடங்கள் ஆகிவிட்டதே. கண்ணுக்கு முன்னால் தான் தினமல(ர்)த்தின் நாற்றம் தான் மூக்கை துளைக்கிறதே.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
”அவர்களுக்கு எந்த பயமும் இல்லை. அது ஒரு காரணம். கொஞ்சமாவது பயம் இருக்க வேண்டும். தப்பு செய்தால் தண்டனை நிச்சயம் என்ற பயம்.” என்பதைவிட அவர்களது பொறுப்பை அவர்கள் உணரவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
உண்ணாவிரதம், மவுனவிரதத்துக்கெல்லாம் படைதிரளும்.கொடி அசைக்கும்.
கட்ஜுபோன்றவர்களுக்கெல்லாம் நாம்தான் (அதாவது மீடியாக்கள் பாஷையில் தீவிரவாதிகள்)ஆதரவு குரல் எழுப்பவேண்டும்.
துணிச்சலாக உண்மைகளை வெளிக்கொணர்ந்த திரு.மார்கண்டேய கட்ஜு அவர்கள் பாராட்டப்பட வேண்டிய சிறந்த மனிதர்!
அவருக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை கூறி உள்ளார். இதற்கு எதற்கு கண்டனம்? ஊடகங்களின் நடவடிக்கைகளும் சட்டத்திற்கு உட்பட்டதே. ஊடகங்களுக்கு என்னுடைய கண்டனங்களையும், உங்களுக்கு நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன். நன்றி
You cannot expect anything more from the cash for news people.
ASSALAMU ALAIKKUM W.R.B.
DEAR MOHAMED ASHIK
WHOLE HEARTED I STRECH MY HANDS AND JOIN YOU IN THIS JUSTFUL CAUSE
இந்த பேட்டிக்காக நீதிபதி மார்கண்டேய கட்ஜுக்கு கண்டனம் தெரிவிக்கும் ஊடகத்தாருக்கு எனது வன்மையான கடும் கண்டனம் உரித்தாகட்டும்..!
இந்த பேட்டிக்காக நீதிபதி மார்கண்டேய கட்ஜுக்கு கண்டனம் தெரிவிக்கும் ஊடகத்தாருக்கு எனது வன்மையான கடும் கண்டனம் உரித்தாகட்டும்..!
இந்த பேட்டிக்காக நீதிபதி மார்கண்டேய கட்ஜுக்கு கண்டனம் தெரிவிக்கும் ஊடகத்தாருக்கு எனது வன்மையான கடும் கண்டனம் உரித்தாகட்டும்..!
.
@Ferozஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//நான்காவது தூண்//---ஹா..ஹா..ஹா.. நீதிபதி கட்ஜுவின் பேச்சுரிமை ஜனநாயகத்தை உடைக்கும் கடப்பாரையாகவல்லவா ஊடகம் இருக்கிறது இப்போது..?
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.ஃபெரோஸ்.
@மு.ஜபருல்லாஹ்அலைக்கும் ஸலாம் வரஹ்...
தங்கள் கருத்து அங்கே அவசியம் இடம்பெற வேண்டிய மிகவும் சரியான கருத்து சகோ.ஜபருல்லாஹ்.
//மீடியாக்களுக்கு எந்த பயமும் கட்டுப்பாடும் பொறுப்புணர்ச்சியும் இல்லை.//..என்று திருத்தி இருக்கிறேன்.
//கட்ஜுபோன்றவர்களுக்கெல்லாம் நாம்தான் (அதாவது மீடியாக்கள் பாஷையில் தீவிரவாதிகள்)ஆதரவு குரல் எழுப்பவேண்டும்.//---ஹா..ஹா...ஹா...
ஒருவேளை அவரையும் இனி... "பயங்கரவாதிகளின் கைக்கூலி" என்று மீடியாக்கள் கூறக்கூடும்..! ஹூம்..! அதையும் நான்குபேர் நம்பக்கூடும்..! வேற என்னத்த சொல்ல..!
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.ஜபருல்லாஹ்.
@R.Puratchimani
//அவருக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை கூறி உள்ளார். இதற்கு எதற்கு கண்டனம்?//---அதானே..! சரியாக சொன்னீர்கள் சகோ.புரட்சிமணி.
//ஊடகங்களின் நடவடிக்கைகளும் சட்டத்திற்கு உட்பட்டதே.//---இதுக்குத்தானே கட்ஜு வச்சிருக்கார் ஆப்பு..!
//////////////////////////////////
ஜனநாயகத்தில் எல்லோரும் மக்களுக்கு பதில் சொல்ல கடமை பட்டவர்கள். எந்த சுதந்திரமும்எல்லையில்லாதது அல்ல. சில கட்டுப்பாடுகள் இருந்தாக வேண்டும். மீடியா இதை உணர்ந்து கொண்டால் நாட்டுக்கு நல்லது.
பத்திரிகைகளை மட்டும்தான் பிரஸ் கவுன்சில் இப்போது கேள்வி கேட்க முடியும். பிரஸ் கவுன்சில் பெயரை மீடியா கவுன்சில் என மாற்றி டீவி சேனல்களையும் அதன் வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். சொல்லி திருந்தாதமீடியா நிறுவனத்துக்கு அரசு விளம்பரங்களை நிறுத்துவது;லைசென்ஸை குறிப்பிட்ட காலத்துக்கு முடக்கி வைப்பது போன்ற தண்டனை அளிக்க அந்த கவுன்சிலுக்கு அதிகாரம் வேண்டும். பிரதமருக்கு எழுதியிருக்கிறேன்.
//////////////////////////////////
--இதை வரவேற்கிறேன் நான்..!
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.புரட்சிமணி.
@vsankar
//the cash for news people.//
---இப்படித்தான் பேட்டியில் கட்ஜுவும் குற்றம் சுமத்தி சாடியுள்ளார்.
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.V.சங்கர்.
@VANJOORஅலைக்கும் ஸலாம் வரஹ்...
///இந்த பேட்டிக்காக நீதிபதி மார்கண்டேய கட்ஜுக்கு கண்டனம் தெரிவிக்கும் ஊடகத்தாருக்கு எனது வன்மையான கடும் கண்டனம் உரித்தாகட்டும்..!///
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நீதிக்காக உளப்பூர்வமாக என்னோடு கைகோர்ப்பதற்கும் நன்றி சகோ.வாஞ்சூர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு,
///அதை விடுத்து ‘லேடி காகா வந்துவிட்டார்.. கரீனா கபூர் தனது மெழுகு சிலையை மிகவும் சிலாகித்தார்..’ இதெல்லாமா முக்கிய செய்தி ஆவது?///
நெத்தியடி....நச் நச்...
எதற்காக குதிக்கின்றார்கள் ஊடகவியலாளர்கள்? உண்மை சுடும் என்ற உண்மை புரிந்ததாலா?
நானும் மீடியாவிற்கு எதிரான என்னுடைய கண்டனத்தை பதிவு செய்கின்றேன்...
வஸ்ஸலாம்,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
தெரியுமா? எத்தனை ஊடகங்களில் இது இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறது என்று.
ஹிட்லர் மோடியின் கொலை வெறியாட்டம் ஒவ்வொன்றாய் அம்பலத்துக்கு வருகிறது 4 பேர் என்கவுண்டரில் பலி!
சிறப்புப் புலனாய்வு குழு உறுதி செய்தது!
அகமதாபாத், நவ 7- குஜராத் மாநிலத்தை ஆண்டு கொண்டிருக்கும் மோடி ஆட்சியில் நடைபெற்ற படுகொலைகள் ஒவ்வொன்றாய் வெளிச்சத்துக்கு வந்து கொண்டுள்ளன. குஜராத் மாணவி இஸ்ரத் உட்பட நான்கு பேர் என் கவுண்டரில் கொல் லப்பட்டதை சிறப்புப் புலனாய்வு உறுதி செய்தது.
குஜராத்தில் அகமதாபாத் நகரம் அருகே கோதார்பூர் என்ற இடத்தில் கடந்த 2004இல் ஜூன் 15 ஆம் தேதி மும்பையைச் சேர்ந்த 19 வயது இஸ்ரத் ஜஹான் என்ற மாணவியுடன் ஜாவீத் ஷேக் என்ற பிரனேஷ் பிள்ளை, ஜீசங் ஜோஹர் மற்றும் அம் ஜத் அலி ராணா ஆகியே நால்வர் காவல்துறை என் கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இவர்கள் நான்கு பேரும் மும்பையிலிருந்து அகமதாபாத் வந்து, 2002 ஆம் ஆண்டில் குஜராத்தில் நடந்த இனப்படுகொ லைக்கு முதல்வர் நரேந்திரமோடியை கொலை செய்ய வந்ததாகவும், அவர்கள் குற்ற பிரிவு காவல்துறையினரிடமிருந்து தப்பித்துச் செல்ல முயன்ற போது காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதாகவும், அவர்கள் நால்வரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந் தவர்கள் என்றும் குஜ ராத் காவல்துறை மூலம் அப்போது அறிவிக்கப்பட்டது.
அவர்களின் பிணங்கள் வரிசையாக அருகருகே கிடந்தததால் காவல்துறையினர் அறிவித்த என்கவுண்டர் போலியானது என்று குற்றச்சாட்டு எழுந்தது.
மாஜிஸ்திரேட் விசாரணை
இந்த குற்றச்சாட்டு காரணமாக எஸ்.பி. தமாங் என்ற பெருநகர மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார். 2009 ஆம் ஆண்டில் அவர் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் அவர், காவல் துறை என்கவுண்டர் என்பது பொய்யாக புனையப்பட்டது என்றும், அந்த என்கவுண்டர் காவல்துறையினர் நடத்திய பச்சை இரத்த படுகொலை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
கொல்லப்பட்ட நான்கு பேரும் மிக அருகிலிருந்து சுடப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் சொல்லியிருந்தார். ஆவணங்களை ஆராய்ந்து பார்த்த போது அந்த நான்கு பேரும் குற்றப்பிரிவு காவல்துறையினர் வசம் பாதுகாப்பில் இருந்திருக்கிறார்கள் என்றும், அதன்பிறகு சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றும் கூறியிருந்தார்.
இந்த படுகொலைக்கு அந்த நேரத்தில் டி.ஜி.பி.யாக இருந்த கே.ஆர்.கவுஷிக் உட்பட குற்றப்பிரிவைச் சேர்ந்த 21 காவல்துறையினர் காரணமாக இருந்தார்கள் என்று குற்றம் சாட்டிய தாமங், பதவி உயர்வு பசி கொண்ட அதிகாரியால் இந்த போலி என்கவுண்டர் அரங்கேற்றப்பட்டது என்றும் தாமங் தனது விசாரணை அறிக்கையில் குற்றம் சாட்டியிருந்தார்.
சிறப்பு புலனாய்வு முழு
இந்த காவல்துறை என்கவுண்டர் பற்றி குஜராத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது என்கவுண்டர் பற்றி முழுமையாக விசாரிக்க ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும் என்றும், இந்த ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதிக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி, சிறப்பு புலனாய்வு குழு தனது விசாரணை அறிக்கையை தற்போது தாக்கல் செய்தது.
டில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவக் கழகம் மற்றும் மத்திய மரபணு சோதனை ஆய்வகம் ஆகியவற்றின் அறிக்கையின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வு குழு தனது விசாரணை நடத்தி தற்போது தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
மாணவி இஸ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் மிக அருகாமையிலிருந்து சுடப்பட்டு கொல்லப்பட்டதை பிரேதப்பரிசோதனை அறிக்கைகள் வெளிப் படுத்துகின்றன.
குஜராத் குற்றப்பிரிவு காவல்துறையினர் தயாரித்த முதல் தகவல் அறிக்கையில் கூறப் பட்டிருப்பதற்கு முரணாக ஆவண ஆதாரங்கள் உள்ளன.
இஸ்ரத் ஜஹான் உட்பட 4 பேர்கள் மிக அண்மையிலிருந்து சுட்டுக் கொல்லப்பட்டதாக மாஜிஸ்திரேட் தாமங் அறிவித்திருப்பதை பிரேத பரிசோதனை அறிக்கை போன்ற ஆவணங்கள் உறுதி செய்கின்றன.
இந்த 4 பேரும் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பாக குற்றப்பிரிவு காவல்துறையினரின் வசம் இருந்திருக்கிறார்கள் என்பதையும் ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன. அதையே வாய்மூல சாட்சியங்களும் உறுதி செய்கின்றன.
எனவே, பெருநகர நீதிபதி தமாங் சமர்ப்பித்த விசாரணை அறிக்கை சரிதான் என்பது சிறப்பு புலனாய்வு குழுவின் ஆய்வில் உறுதி செய்யப்படுகிறது.
மேற்கண்டவாறு சிறப்பு புலனாய்வு குழு அறிக்கையில் கூறப்பட் டிருக்கிறது.
THANKS TO VIDUTHALAI DAILY
//நீதிபதி கட்ஜுக்கு கண்டனம் தெரிவிக்கும் ஊடகத்தாருக்கு கடுங்கண்டனம்..//
nanum kandanathai therivethu kolgeren
//சபாஷ் கட்ஜு சார்..! நேர்மையான துணிச்சலான அருமையான பேட்டி..! முன்னாள் நீதிபதி மற்றும் இந்நாள் பிரஸ் கவுன்சில் தலைவர் அவர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றியும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.// nanum ethai vazhi mozhikeren.
Entha thagavalai pakirthamaiku nanri!
Oh sorry bro solla maranthuten
ASSALAMU ALIKUM
EID MUBARAK
||||||||ஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் ‘குண்டு வைத்தது நாங்கள்தான் என்று இந்தியன்முஜாஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘ என்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன. அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்ததுஎன்று காட்டுகிறார்கள். எஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும். யாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது?முஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள்என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா. எந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.
மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன். நிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.||||||||||
அப்படி போடு. வெளக்குமாரை எடுத்து ஊடகத்தினரின் மூஞ்சிலேயே அடிச்சு விளாசி இருக்கிறார் ஜட்ஜூ கட்ஜு.
இனியாவது மீடியாவுக்கு பொறுப்பும் புத்தியும் வந்தால் நம் நாட்டுக்கு நல்லது.
கடவுளுக்கு செய்ய வேண்டிய வணக்கங்களையும் ஒரு சாமியாரின் மூலமாகத்தான் அனைத்து சமுதாய மக்களும் செய்து வருகின்றார்கள். எனவே அவர்களை அன்றைய மன்னர்கள் வசப்படுத்தி வைத்துக்கொண்டு மக்களை மூடபழக்கங்களில் மூழ்கடிக்க வைத்து நிலையிலேயே ஆட்சியை தக்கவைத்து கொண்டிருந்தார்கள்.
அதே போல் இன்றைய மன்னர்களான அரசியல் வாதிகளில் அதிகமானோர் ஒட்டுக்காக இது போன்ற சாமியர்களை வசப்படுத்தி வைத்துக்கொண்டு மக்களை மூட நம்பிக்கைகளில் மூழ்கடிக்க வைத்து இன்றும் ஆட்சியை தக்கவைத்து கொண்டிருக்கின்றார்கள்.
எனவே அன்று திதரோ சொன்ன வார்த்தைகள் எவ்வளவு உண்மையானது என்பதை நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
//இந்த நாட்டிலுள்ள கடைசி சாமியாரின் குடலை உருவி அதை கடைசி மன்னனின் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கவிடும் வரையில் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்காது‘ என்று முழங்கினான் பிரஞ்சு சிந்தனையாளன் திதரோ.//
எனவே இத்தருணத்தில் இதை நினைவுபடுத்திய முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி திரு.மார்கண்டேய கட்ஜு அவர்களுக்கு நாம் நன்றியை தெரிவித்துக்கொள்வதோடு, இந்த நியாயமான பேட்டி அளித்த நீதிபதி அவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் அனைத்து ஊடகத்தாருக்கும், நமது இஸ்லாமிய சமுதாயத்தின் கடுங்கண்டனம் பதிவு செய்து கொள்கின்றேன்.
இப்படிக்கு
சிராஜ் ஏர்வாடி
அஸ்ஸலாமு அலைக்கும்
இந்த பேட்டிக்காக நீதிபதி மார்கண்டேய கட்ஜுக்கு கண்டனம் தெரிவிக்கும் ஊடகத்தாருக்கு எனது வன்மையான கடும் கண்டனம் உரித்தாகட்டும்..!
மிக மிக நேர்மையான பேட்டி. இப்படி ஒவ்வொருவரும் 'தனக்கு குடுக்கப்பட்ட மூளையை மட்டும்' நம்பி, கேள்விப்படுவதை எல்லாம் நம்பாமல் ஆராய்ந்தாலே போதும், மீடியாக்களின் உண்மை நிலை புரியும். என் தரப்பு கண்டனங்களையும் பதிவு செய்கிறேன், மீடியாக்களுக்கு எதிராக.
பதிவுக்கு மிக நன்றி சகோ.
வணக்கம்!தங்கள் பதிவின் மூலம் மார்க்கண்டேய கட்ஜுவின் பேட்டியை படித்தேன்.பேட்டியைப் பற்றிய உங்கள் விமர்சனம் சிறப்பாக இருந்தது. தங்களின்
//வெறும் TRP Ratting-ம் பத்திரிக்கை விற்பனையும், இணைய வாசகர்கள் ஹிட்சும் அதனடிப்படையிலான விளம்பர வருவாயுமே இவர்களின் குறிக்கோளாகி விட்டது.//
என்ற வரிகள் 100/100 உண்மை.
ASSALAMU ALAIKKUM W.R.B.
DEAR MOHAAMED ASHIK,
KINDLY ALLOW THE FOLLOWING
இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் உலகளாவிய அனைத்து முஸ்லீம் சமுதாயத்திலும் தொடர்ந்த தொடரும் உண்மை நிகழ்வுகளை சித்தரிக்கும் ஆழமான அழகிய முழு திரைகதையும் அடங்கிய விடியோ கீழுள்ள சுட்டியை சொடுக்கி காணுங்கள்.
**** ஆதாமின்டே மகன் அபு *****
.
ASSALAMU ALAIKKUM W.R.B.
DEAR MOHAMED ASHIK,
HERE IS A STRONG ECHO OF YOUR POST.
கீழே உள்ள சுட்டியை சொடுக்கி படிக்கவும்
நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.! ஊடகங்களை விளாசி தோலை உரித்து தொங்கப்போட்டு இருக்கிறார் உண்மை வார்த்தைகள் மூலம்..! நீதிபதி மார்கண்டேய கட்ஜு.
.
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரர் முஹம்மத் ஆஷிக்,
ஊடகத்தின் முகமூடியை கிழித்து தொங்க போட்டிருக்கிறார் நீதியரசர் மார்க்கண்டேய கட்ஜு அவர்கள். அதுவும் ஒரு காட்சி ஊடகத்தில். அவருடைய இந்த தைரியமான பேட்டிக்கே அவரை ஆயிரம் முறை வாழ்த்தலாம். டெவில்ஸ் அட்வகேட் கரன் தாப்பரையே வாயடைக்க வைத்த பேட்டி அது. கரன் தாப்பரை கண்டு மூன்று நிமிடத்தில் ஓட்டமெடுத்த நவீன ஹிட்லர், அவருடன் பேட்டியளித்த போது இடித்தபுளி போல முகத்தை வைத்த ஜெயா என்று பெரிய பட்டியல்களே உண்டு.அவரையே வாயடைக்க வைத்தார் எனில் அதற்கு காரணம் கட்ஜு அவர்கள் தைரியமாக உண்மையை பேசியது தான் காரணம். கட்ஜு அவர்களை சாடும் அனைத்து ஊடகவா(ந்)திகளுக்கும் என்னுடைய கடும் கண்டனங்கள்.
இதை எங்களுக்கு அளித்த உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் சகோ.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!
முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜுவின் கருத்துக்கள் அனைத்தும் சரியானவையே!
//விமர்சனத்திற்கு வெட்கித்தலை குனிந்து தங்கள் தவறுணர்ந்து வருந்தி திருந்தி சரியான பாதையில் அல்லவா பயணிக்கவேண்டும் இனி..? ஆனால், அதைவிடுத்து... எதற்கு ஊடகத்தினர் கண்டனங்கள் தெரிவிக்கிறார்கள்..? //
இதுவே என் கருத்தும். நானும் கண்டிக்கிறேன்!
வாசகர்களின் கனிவான பார்வைக்கு !
சுட்டியை சொடுக்கி படியுங்கள்.
*****
ஒட்டுமொத்த இந்திய இஸ்லாமியர்களையும் கொன்று குவிக்க அறிவாளியொருவர்……. விடியோ விளக்கம். ****
.
மிகவும் தெளிவான பதிவு............. நன்றி....
@Aashiq Ahamedஅலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் அநீதிக்கு எதிரான கண்டனம் தெரிவித்தலில் உளப்பூர்வமாக என்னோடு கைகோர்ப்பதற்கும் நன்றி சகோ.ஆஷிக் அஹமத்.
@s.jaffer.khan
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் அநீதிக்கு எதிரான கண்டனம் தெரிவித்தலில் உளப்பூர்வமாக என்னோடு கைகோர்ப்பதற்கும் நன்றி சகோ.ஜாஃபர் கான். wish u the same.
@neethimaan
வருகைக்கும் 'விளக்குமாறு விளாசல் பின்னூட்டத்திற்கும்' நன்றி சகோ.நீதிமான்.
@PEACE
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் அநீதிக்கு எதிரான கண்டனம் தெரிவித்தலில் உளப்பூர்வமாக என்னோடு கைகோர்ப்பதற்கும் நன்றி சகோ.ஏர்வாடி சிராஜ்.
@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் அநீதிக்கு எதிரான கண்டனம் தெரிவித்தலில் உளப்பூர்வமாக என்னோடு கைகோர்ப்பதற்கும் நன்றி சகோ.சுவனப்பிரியன்.
@அன்னுவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் அநீதிக்கு எதிரான கண்டனம் தெரிவித்தலில் உளப்பூர்வமாக என்னோடு கைகோர்ப்பதற்கும் நன்றி சகோ.அன்னு.
@தி.தமிழ் இளங்கோ
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.தமிழ் இளங்கோ.
@பி.ஏ.ஷேக் தாவூத்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//கரன் தாப்பரை கண்டு மூன்று நிமிடத்தில் ஓட்டமெடுத்த நவீன ஹிட்லர், அவருடன் பேட்டியளித்த போது இடித்தபுளி போல முகத்தை வைத்த ஜெயா//---ஹா...ஹா...ஹா... இவற்றை கண்டோர் யாரேனும் மறக்க இயலுமா..?
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் அநீதிக்கு எதிரான கண்டனம் தெரிவித்தலில் உளப்பூர்வமாக என்னோடு கைகோர்ப்பதற்கும் நன்றி சகோ.ஷேக் தாவூத்.
@Abdul Basithஅலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் அநீதிக்கு எதிரான கண்டனம் தெரிவித்தலில் உளப்பூர்வமாக என்னோடு கைகோர்ப்பதற்கும் நன்றி சகோ.அப்துல் பாஸித்.
@Mohamed Yasilவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.முஹம்மத் யாஸில்
@VANJOORஅலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும் பின்னூட்டங்கள் மூலம் பல்வேறு அரிய தகவல்களை, செய்திகளை, வீடியோ பதிவுகளை, சுட்டிகளாக இங்கே தொடர்ந்து பகிர்ந்து... அதன்மூலம் எனக்கும் மற்றும் பலருக்கும் பயனுள்ள வகையில் அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி சகோ.வாஞ்சூர்.
மிக்க நன்றி கட்ஜூ சார், எங்களின் ஆதங்கத்தை நீங்கள் சொல்லி இருகிறீர்கள் கட்ஜூ சார். மீடியாக்கள் இனியாவது உணர வேண்டும். assalamu alaikum
We Support Mr.Katju
@ABZALKHANஅலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.அப்சல்கான்.
@BAHAVUDEEN//We Support Mr.Katju//---இந்த விஷயத்தில் நிச்சயமாக..! வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.பஹவுதீன்.
உண்மையில் கட்ஜு அவர்களின் பேட்டி- அக்கிரமக்காரர்களின் முன்பு நீதியை எடுத்து சொன்னதே ஆகும் ... கண்டனத்தில் நானும் பங்கு கொள்கின்றேன். மீடியாவில் நல்லவர்கள் ஆதிக்கம் மலர து ஆ செய்வோம்
உண்மையில் கட்ஜு அவர்கள் அக்கிரமக்காரன் முன் நீதியை எடுத்து சொல்லி உள்ளார்கள் ... உங்கள் கண்டனகுரலுடன் எனது குரலும் ஓங்கி ஒலிக்கும் ..
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!