சென்னை தி.நகரில் உள்ள உஸ்மான் சாலையிலும், ரங்கநாதன் தெருவிலும் பல வருடங்களாக உள்ள மிகவும் பிரபலமான ஏகப்பட்ட வர்த்தக நிறுவனங்களில்... சரவணா ஸ்டோர்ஸ், தி சென்னை சில்க்ஸ், ரத்னா ஸ்டோர்ஸ், குமரன் தங்க மாளிகை, ஜெயச்சந்திரன், காதிம்ஸ்... உள்ளிட்ட 61 வர்த்தக நிறுவனங்களை நேற்று காலை தி.நகருக்கு வந்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும (CMDA) அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர்.
என்ன காரணமாம்..? முறையான கட்டட வரைபட அனுமதி இல்லாமல் கட்டியது, பார்க்கிங் வசதி செய்யப்படாதது, தீயணைப்பு வாகனங்கள் சென்று வர வசதியில்லாத இடங்களில் பல அடுக்கு மாடிக் கட்டடங்களைக் கட்டியது, பல்வேறு விதிமுறை மீ்றல்கள், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக என்று செய்திகள் கூறுகின்றன.
ஏற்கனவே... இந்த நிறுவனங்களுக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டும், எவ்வித உரிய நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எடுக்காது கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும், இதுதொடர்பாக வழக்குகளும் பெருமளவில் தொடரப்பட்டிருந்ததாகவும், இப்போதுதான் அவை எல்லாம் "பூட்டி சீல்"வைக்கும் அளவுக்கு செய்வல்வடிவம் எடுத்திருப்பதாகவும் செய்திகளை படிப்போர் மேலும் அறியலாம்.
சகோ..! ஒரு நிமிஷம்..! இப்போது நம்முள் எழும் சில முக்கிய வினாக்கள்.
- அரசுத்தரப்பு கூறும் மேற்படி குற்றங்களுக்காக ஒரு புதிய கட்டத்துக்கு எடுக்கப்படும் இதுபோன்ற நடவடிக்கை மிகவும் சரியானதே. ஆனால், உஸ்மான் சாலையிலும், ரங்கநாதன் தெருவிலும் பூட்டி சீல் வைக்கப்பட்ட மேற்படி 61 வணிக நிறுவனங்கள் பல வருடங்களாக அங்கே இருப்பதை நாம் அறிவோம். அவை ஒன்றும் நேற்று புதிதாக முளைத்தவை அல்லவே..?
- ஏன்... இந்த நிறுவனங்கள் கட்டப்படும் போதே... இவர்களிடம் "முறையான கட்டட வரைபட அனுமதி" இல்லை என்று தெரியாதா..?
- ஏன்... இந்த நிறுவனங்கள் கட்டப்படும் போதே... இவற்றில் "பார்க்கிங் வசதி செய்யப்படவில்லை" என்று தெரியாதா..?
- ஏன்... இந்த நிறுவனங்கள் கட்டப்படும் போதே... அவைகள் இருக்கும் 'சந்து'களில் தீயணைப்பு வாகனங்கள் சென்று வர வசதியில்லாதது குறித்தும், அதற்காக மாநகராட்சி எவ்வித "சாலைவிரிவாக்க முயற்சியோ-திட்டமோ" இல்லாத நிலையில்...அது போன்ற இடங்களில் பல அடுக்கு மாடிக் கட்டடங்களை கட்ட ஆரம்பிப்பது... கட்டுவது... கட்டி முடித்து கிரஹப்பிரவேசம் செய்வது எல்லாம் தவறென்றும் தெரியாதா..?
- ஏன்... இந்த நிறுவனங்கள் கட்டப்படும் போதே... பல்வேறு விதிமுறை மீ்றல்கள், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் எல்லாம் யார் கண்ணிலும் படவே இல்லை..?
- மேலேயுள்ள நியாயமான கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு காரணமான அப்போதைய கவனக்குறைவு அதிகாரிகள் யார் என்று கண்டுபிடித்து அவர்கள் மேல் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா..? அரிசி வேகவில்லை என்றால் அரிசிக்கு மட்டும் எதற்கு தண்டனை..? எரியாத அடுப்புக்கு ஏன் தண்டனை இல்லை..?
- ஏதோ, சென்னையில் மொத்தமே இந்த 61 கடைகளை மட்டுமே மக்கள் நம்பி இருப்பது போல... "தீபாவளி முடியட்டும்" என்றும் "மக்களுக்கு பாதிப்பு வரக்கூடாது" என்றும் 'காத்திருந்து'(?) நேற்று CMDA நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்திகள் கூறுவது எல்லாம் செம காமடி..! மெய்யாக, "யாருக்கு இதனால் ரொம்ப ரொம்ப நன்மை" என்று சிறு குழந்தையும் சொல்லுமே..?
- தீபாவளிக்காக காத்திருந்தோர் ஏன் இவ்வாரம் வரக்கூடிய பக்ரீத் வரை காத்திருக்க வில்லை..? பக்ரீத் கொண்டாடும் மக்கள் பாதிக்கப்படலாமா..?
- தீபாவளி முடிந்தும் ஐந்து நாள் வரை "மக்களுக்கு பாதிப்பு வரக்கூடாது" என்று காத்திருந்து "கவலைப்பட்ட மஹாத்மாக்கள்" எல்லாரும்... அந்நிறுவனங்களில் சிறு ஊதியங்களில் வேலை செய்யும் கடைநிலை ஊழியர்களின் சம்பள நாளான இன்றைய நவம்பர் ஒண்ணாம் தேதி வரை காத்திருந்தார்களா..?
- ஆயிரக்கணக்கான அந்த ஊழியர்களின் தற்போதைய நிலை பற்றி என்ன கவலை பட்டார்கள்..? அவர்களின் ஊதியத்துக்கும் கால்வயித்து கஞ்சிக்கும் என்ன வித மாற்று ஏற்பாடுகள் செய்துவிட்டு சீல் வைத்தனர் இந்த உத்தம மஹாத்மாக்கள்..?
- இந்த சீல் வைப்பிற்காக முன்னர் வழக்கு தொடுத்திருந்தவரும் நேற்று ராஜ் நியூசில் பேசியவருமான திரு.Traffic ராமசாமி உட்பட, சீல் வைக்கப்பட்ட வணிக நிறுவன உரிமையாளர்கள் தரப்பில் பலரும்... "சரியாய்-நேர்மையாய் செயல்பட்டு சீல் வைத்தவர்களை" சாடுகிறார்களே..! எப்படி தெரியுமா..? "அது ஏன் பொருக்கி எடுத்து, குறிப்பிட்ட 61 கடைகள் மட்டும் சீல் வைக்கப்பட்டன..? அதே குற்றங்களை செய்திருக்கும் மற்ற கடைகள் எல்லாம் என்னாச்சு..?" ...என்று ராஜ் தொலைகாட்சி செய்தி பேட்டியில் கேட்கின்றனரே..?
- ஆக, இந்த நிறுவன முதலாளிகள் தரப்பில் குற்றம் இருப்பதை ஒப்புக்கொள்கிறார்கள் எனில், அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை சரிதான் என்ற நிலையில், இனி இந்த வணிக நிறுவனங்கள் மீண்டும் ஒருநாள் இதேநிலையில் எவ்வித மாற்றமும் இன்றி இயங்க ஆரம்பிக்கும்கால்... நமக்கு அப்போது என்ன தோன்றும்..? "கேட்டது கிடைக்க வில்லை; எனவே, சீல் வைத்தனர்; உடனே கிடைத்து விட்டது; எனவே மீண்டும் திறக்கப்பட்டன"... என்றுதானே..?
- அப்படி என்றால் இதே குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்படும் சீல்வைக்கப்படாத மற்ற வணிக நிறுவனங்கள் எல்லாம் "கேட்டதை கொடுத்தவர்களா..?" அல்லது "கேட்பதை கொடுக்கும் அளவுக்கு பசை அற்ற பார்ட்டிகள் என்று விடப்பட்டவர்களா..?" ...என்ற ஐயம் வருகிறதே..!
- மேற்படி அதே காரணங்களுடன் பல அடுக்குமாடி குடி இருப்புகள் பல அதே சென்னை தி.நகரில் சந்து பொந்துக்குள் எல்லாம் உள்ளனவே..? அவைகள் மீது சீல் வைக்கவில்லையே..? இந்த 'சீல் சட்டங்கள்' எல்லாம் பலகோடி ரூபாய் இலாபம் பார்க்கும் வணிக நிருவனங்களுக்கு மட்டும்தானா..? எங்கே "கிடைக்குமோ" அதை நோக்கியே "அரக்கும், சீலும்" செல்வது போல புரிகின்றதே..!?
- ஒருவேளை அந்த 61 வணிக நிறுவனங்களும் 'எல்லாம் சரியாத்தான் இருக்கின்றன.. இவர்கள் குற்றமற்றவர்கள்' என்று வழக்கில் இருந்து நீதிமன்றம் மூலமாகவே மீண்டுவந்து தம் வணிகத்தை ஜெக ஜோதியாக ஆரம்பித்தால்... அப்போதைய விமர்சனம் எப்படி இருக்கும்..?
- சரி, இதுபோன்று அங்கொன்றும் இங்கொன்றுமாய் சாலையில் குறிப்பிட்ட 61 கடைகளுக்கு மட்டும் சீல் வைத்துவிட்டால் போதுமா..? உடனே, அந்த சாலை நெடுக தானாகவே தீ அனைப்பு வண்டி சென்றுவரும் அளவுக்கு "திடும்" என்று அகலமாகி... அப்புறம்... சாலையின் இருமருங்கிலும் பார்க்கிங் வசதிகளும் 'தொபுக்கடீர்' என்று தாமாக முளைத்து விடுமா..?
- டிஸ்கி: சிரிக்காதீர்கள் சகோ..! இந்த கேள்வி உட்பட மற்ற கேள்விகள் அனைத்துமே சீரியசாகத்தான் கேட்டு இருக்கிறேன்.
இறைநாடினால், மேற்கண்ட அனைத்து வினாக்களுக்கும் காலம் நிச்சயம் பதில் சொல்லி விடும். அப்போது... யார் யார்... எப்படி எப்படி; எங்கே எங்கே என்ன என்ன... நடந்திருக்கும்; என்றெல்லாம் தெளிவாக அறியும்போது...
The Govt. and Law are for the people... of the people... and by the people
....என்றா... அல்லது....
The Govt. and Law are far the people... off the people... and buy the people
....என்றா... என்று,
ர்ர்ர்ர்ர்ரோம்ப நல்ல்ல்ல்ல்லாவே நமக்கு வெ...ள...ங்...கி...ரு...ம் சகோ..!
ர்ர்ர்ர்ர்ரோம்ப நல்ல்ல்ல்ல்லாவே நமக்கு வெ...ள...ங்...கி...ரு...ம் சகோ..!
29 ...பின்னூட்டங்கள்..:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்.நகைச்சுவையாய் கேள்வி கேட்டு இருந்தாலும் நெற்றி அடி கேள்விகள். எல்லாம் விட்டமின் எம் செய்யும் மாயம். பொருத்து இருபோம் என்ன நடக்கிறது என்று.
தீவாளி வசுளுகாகதா இந்த டிராமா ல. லஞ்சம்! லஞ்சம்! லஞ்சம்! லஞ்சம்! லஞ்சம்! லஞ்சம்!லஞ்சம்!
Corporate முதலைககள், அரசியல் கொள்ளை கரகர்களிடம் இருந்து விடுதலை வேண்டும்!
¦(¯`v´¯)
¦ `•.¸.•`
¦¸.•´
¦(¸¸.•¨¯`•? SpeaK Non Stop !! ? No time restriction! Save Monthly Rs.1000
365 Days Free Unlimited Calls Click Here
Assalamu alikum(varh)
//அரிசி வேகவில்லை என்றால் அரிசிக்கு மட்டும் எதற்கு தண்டனை..? எரியாத அடுப்புக்கு ஏன் தண்டனை இல்லை..? // super lines bro! Keep it up!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நேற்று ராஜ்நியூஸ் பார்க்கும்போதே நினைத்தேன்.
நாளை இந்த கருதான் உங்களது பதிவாக இருக்கும் என்று!
இன்னும் சில தினங்களில்,
இயல்பு வாழ்க்கை திரும்பிவிடும்
எதிர்பார்த்தவர்களுக்கு?
அட இதெல்லாம் சகஜமப்பா......
அஸ்ஸலாமு அலைக்கும்!
நகைச்சுவையாய் கேள்வி கேட்டு இருந்தாலும் நெற்றி அடி கேள்விகள்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
உங்க கட்டுரை படிச்சதுக்கு பிறகு தான் நியூஸ் பார்க்கிறேன். ஆனாலும் அவரவர் தன் தலைவர் அறிக்கைகளை விடுவதில் தான் தலைப்பு செய்தியாக வந்து விழுகுது:-(
எது எப்படியோ....
இப்ப மட்டும் எப்படி இவிங்களுக்கு அறிவு வந்துச்சுன்னு கேள்வி கேட்காம இப்பவாவது அறிவு வந்துச்சுன்னு நெனச்சுட்டு போகவேண்டியது தான்.
தீவிபத்து நடந்து 2 பேர் இறந்த போதே இதற்கான வேலைகள் நடைபெற தொடங்கியது. அப்போது இருந்த திமுக தான் தீர்மானம் போட்டு சட்டம் ஒழுங்கு கெட்டுடும்னு தள்ளிபோட்டிருக்காங்க. அந்த வகையில் ஜெவை பாராட்டலாம்!
இந்த முடிவில் உறுதியாய் இறுதி வரை செயல்பட வேண்டும் என்பதே என் ஆசையும் கூட... பார்க்கலாம்
//ஆயிரக்கணக்கான அந்த ஊழியர்களின் தற்போதைய நிலை பற்றி என்ன கவலை பட்டார்கள்..? அவர்களின் ஊதியத்துக்கும் கால்வயித்து கஞ்சிக்கும் என்ன வித மாற்று ஏற்பாடுகள் செய்துவிட்டு சீல் வைத்தனர் இந்த உத்தம மஹாத்மாக்கள்..?//
இது புரியல சகோ
சீல் வைக்கப்பட்டதற்கு முன்பே பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கேமே.... அப்படியிருக்க மாற்று ஏற்பாடு எப்படி சீல் வைத்தவர்களும்/வைக்க சொன்னவர்களும் செய்ய முடியும்????
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ..
தொழிலாளர்களை நினைக்கும் போது மனதுக்கு வருத்தமாக இருக்கு
ஒருவர் இரண்டு பேர் அல்ல ஆயிரகணக்கில் இதை நம்பி இருக்கிறார்கள்
oooooops! ரொம்ப பெரிய கட்டுரை.. வாசிக்க ரொம்ப நேரம் ஆயிருச்சு..very clever..pointed the selected and important points. Explained both sides...
@Online Works For Allதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.
@Ferozஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//எல்லாம் விட்டமின் எம் செய்யும் மாயம். பொருத்து இருபோம் என்ன நடக்கிறது என்று.//---M,MM,MM,MM,MM,MMM.00
:-))
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.ஃபெரோஸ்
@henry J//Corporate முதலைககள், அரசியல் கொள்ளை கரகர்களிடம் இருந்து விடுதலை வேண்டும்!//---சரியாகச்சொன்னீர்கள் சகோ.ஹென்றி.
///லஞ்சம்! லஞ்சம்! லஞ்சம்! லஞ்சம்! லஞ்சம்! லஞ்சம்!லஞ்சம்!///---ஹி..ஹி..ஹி...
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.ஹென்றி.
@s.jaffer.khanஅலைக்கும் ஸலாம் வரஹ்...
:-)) தங்கள் வருகைக்கும் வாசிப்பிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.ஜாஃபர் கான்.
@மு.ஜபருல்லாஹ்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//நேற்று ராஜ்நியூஸ் பார்க்கும்போதே நினைத்தேன்.
நாளை இந்த கருதான் உங்களது பதிவாக இருக்கும் என்று!//---ஆஹா... இப்படி வேறையா..?!
//இயல்பு வாழ்க்கை திரும்பிவிடும்
எதிர்பார்த்தவர்களுக்கு?
அட இதெல்லாம் சகஜமப்பா......//---ஆமாம் சகோ..!
இப்படித்தான் இயல்பு வாழ்க்கை நடக்குது, எல்லோருக்குமே.....
நாமளும் போய்க்கிட்டே இருக்கோம் கடந்த 64 வருஷமா......
ம்ம்ம்....
இறைவன்தான் நல்லருள் புரியணும்.
தங்கள் வருகைக்கும் வாசிப்பிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.மு.ஜபருல்லாஹ்.
@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.சுவனப்பிரியன்.
@ஆமினாஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//இப்ப மட்டும் எப்படி இவிங்களுக்கு அறிவு வந்துச்சுன்னு கேள்வி கேட்காம இப்பவாவது அறிவு வந்துச்சுன்னு நெனச்சுட்டு போகவேண்டியது தான்.//---நானும் பதிவில் கேட்டிருக்கேன்... அது ஏன் அந்த சாலையில்/வீதியில் உள்ள அந்த 61 கடைகளின் மீது மட்டும் அந்த 'அறிவு' வந்தது என்று..!!!
//தீவிபத்து நடந்து 2 பேர் இறந்த போதே இதற்கான வேலைகள் நடைபெற தொடங்கியது. அப்போது இருந்த திமுக தான் தீர்மானம் போட்டு சட்டம் ஒழுங்கு கெட்டுடும்னு தள்ளிபோட்டிருக்காங்க. அந்த வகையில் ஜெவை பாராட்டலாம்!//---பாராட்டலாம்தான்... பதிவில் உள்ள மற்ற கேள்விகளுக்கும் சரியான நியாயமான பதில்கள் கிடைத்தால்...!!!
///இந்த முடிவில் உறுதியாய் இறுதி வரை செயல்பட வேண்டும் என்பதே என் ஆசையும் கூட... பார்க்கலாம்///---இன்ஷாஅல்லாஹ், பார்க்கத்தானே போகிறோம்..!
///சீல் வைக்கப்பட்டதற்கு முன்பே பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கேமே.... அப்படியிருக்க மாற்று ஏற்பாடு எப்படி சீல் வைத்தவர்களும்/வைக்க சொன்னவர்களும் செய்ய முடியும்????///---சூப்பர் கேள்வி..! ஆனால்...............
உங்களுக்கான பதில் :-
தொடர்புள்ள இந்த இடுகையின் இறுதியில்..!
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.ஆமினா.
@VANJOORஅலைக்கும் ஸலாம் வரஹ்...
தங்கள் வருகைக்கும் சுட்டியுடன் கூடிய பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.வாஞ்சூர்.
@ஹைதர் அலிஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//தொழிலாளர்களை நினைக்கும் போது மனதுக்கு வருத்தமாக இருக்கு
ஒருவர் இரண்டு பேர் அல்ல ஆயிரகணக்கில் இதை நம்பி இருக்கிறார்கள்//---இப்படித்தான் சகோ..!
நாலுவருஷம் பணம் கட்டி செலவழிச்சு படிச்சு முடிச்சு பட்டம் கொடுக்கும்போதுதான் சொல்வார்கள் "ஸாரி... இந்த பொறியியல் கல்லூரிக்கு இன்னும் அரசு அங்கீகாரம் வரவில்லை" என்று... படித்தவன் கதிதான் அதோகதி...
சரி, சரி,... இனி யாராச்சும் வேலைக்கு சேரும்போது... அந்த கம்பெனியின் நிலப்பட்டா, வில்லங்க பத்திரம், ப்ளான், கார் பார்க்கிங் கரக்ட் சைசில் இருக்கா, எத்தனை மாடி கட்டலாம் நகராட்சி அனுமதியுடன், அப்புறம் அந்த கம்பெனி இருக்கும் ரோட்டிலே தீ அணைப்பு வண்டி வருமா, வரதா.... இதெல்லாம் அவசியம் இண்டர்வியூவில் கேள்வி கேட்டுத்தான் வேலையில் சேரனும்போல...!!! என்ன பண்றது..? நாம் இந்தியர்கள் ஆயிற்றே..! எல்லாம் நம் விதி..!
தங்கள் வருகைக்கும் கவலையை பகிர்ந்து கொள்ளும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.ஹைதர் அலி.
@jiff0777//very clever..pointed the selected and important points. Explained both sides...//---தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஜிஃப்போ
//oooooops! ரொம்ப பெரிய கட்டுரை.. வாசிக்க ரொம்ப நேரம் ஆயிருச்சு..//----ஹி..ஹி..ஹி.. "இடத்தை அடைக்கும்" எட்டு படங்களையும் தூக்கிட்டா ரொம்ப சின்ன கட்டுரைதான் சகோ..! :-)
“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
தொழிலாளர்களை நினைக்கும் போது மனதுக்கு வருத்தமாக இருக்கு
ஒருவர் இரண்டு பேர் அல்ல ஆயிரகணக்கில் இதை நம்பி இருக்கிறார்கள்
யோசிக்க, யோசிக்க...
கேள்விகள், கேள்விகள்...
பதில்.... எங்கே?
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துகள்!!!!!!!!!!!
இனிய ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள் சகோ...!
@மாய உலகம்தங்கள் வருகைக்கும் ஈத் பெருநாள் நல்வாழ்த்து பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.மாய உலகம்.
@சார்வாகன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.சார்வாகன்,
நீங்கள் "இனிய தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்" என்று சொல்ல வந்து, மறதியில் "ஈகைத்திருநாள்" என்று சொல்லி விட்டீர்கள் என்று நினைக்கின்றேன். :-)
தங்கள் வருகைக்கும் வாழ்த்து பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.சார்வாகன்.
@NIZAMUDEENதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.நிஜாமுதீன்.
@Lakshmiதங்கள் வருகைக்கும் வருத்தத்தை பகிர்ந்து கொள்ளும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.லக்ஷ்மி.
@உலக சினிமா ரசிகன்தங்கள் வருகைக்கும் கோரிக்கை பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.உ.சி.ரசிகன்.
தங்களின் கோரிக்கையில் என்னையும் இணைத்துக்கொண்டு... தங்கள் பதிவில் பின்னூட்டம் இட்டு விட்டேன்.
===================================
///ஸலாம் சகோ.உ.சி.ர.
மிகவும் பயனுள்ள ஆக்கப்பூர்வமான கோரிக்கை சகோ. மருத்துவமனையும் அவசியமே. நூலகமும் அவசியமே. மக்கள் எளிதில் சென்றடையும் வண்ணம் ஊரின் மத்தியில் இவை இரண்டும் இருக்க வேண்டியது அவசியம்.
நோய் நிவாரணம் தேவைப்படும் மக்கள், மருத்துவமனையையாவது எப்படியேனும் தேடிக்கண்டு பிடித்து சென்று சேர்ந்து விடுவார்கள்.
ஆனால், கல்வி கற்பிக்கும் நூலகம் பலர் நன்கு அறிந்த இடத்தில் மக்கள் மத்தியில் இருப்பது மிகவும் அவசியம். அதன் இடம் புதிதாக மாறினால்கூட, தேடி அலைவதை விட்டுவிட்டு வேறு வேலை பார்க்க ஆரம்பித்து விடுவார்கள் மக்கள்.
நான் வாழ்ந்த அதிராம்பட்டினத்தில் முன்பு பலவருடங்களாக ஊருக்கு மத்தியில் இருந்த அரசு நூலகம், திடீரென எங்கோ ஊருக்கு வெளியே புறநகரில் மாற்றப்பட்டபோது... பின்னர் ஆளே வராமல் காற்றாடுகிறது. நான் கண்ணால் கண்ட உண்மை இது.
எனவே, மக்கள் பரிச்சயம் பெற்ற பயனடையும் "நூலகத்தினை மாற்றக்கூடாது" என்ற தங்களின் கோரிக்கையில் என்னையும் நான் இணைத்துக்கொள்கிறேன். மருத்துவமனையை வேறு இடத்தில் திறங்கள். நூலகம் அப்படியே இருக்கட்டும்.///
===================================
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!