அமெரிக்காவின் அணுகுண்டுகள், வெள்ளம், சூறாவளி, எரிமலை, நிலநடுக்கம், சுனாமி என தொடர்ந்து பல சோதனைகளை ஜப்பானியர் காண்பதும், அவர்கள் தொடர்ந்து அதிலிருந்து எல்லாம் மீண்டு வருவதும், அவர்களின் முயற்சியையும் முதிர்ச்சியையும் உழைப்பையும் உலகிற்கு நன்கு எடுத்துரைக்கிறது. பொதுவாக ஜப்பானியர், சோதனைகளிலும் மனம் தளராமால், எதிர்நீச்சலிட்டு முன்னேறுவதெப்படி என்று உலக மக்களுக்கு படிப்பினை பெறுவதற்கான நல்ல முன்னுதாரணம். இனி, ஃபீனிக்ஸ் பறவைக்கு யாரும் உதாரணம் கேட்டால் ஜப்பானியர்கள்தான் எனலாம்....!
ஆனால், சமீபத்தில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டு துயரத்திலிருக்கும் நம் ஜப்பானிய சகோதர்களுக்கு மேலும் அதிக துயரமாக இரு அணுஉலைகள் வெடித்து அதனால் ஏற்பட்ட அணுக்கதிர்வீச்சு கசிவால் மற்ற அனைத்து இயற்கை சோதனைகளை விட பெருத்த நஷ்டத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
அவர்களுக்கு பெருங்கவலையுடன் நம்முடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வோம். அவர்களும் அவர்கள் நிலை கண்டு நாமும் துயரத்தில் இருக்கும் இந்நேரத்தில், ஜப்பானில் ஏற்பட்ட அனைத்து சோதனைகளையும் அவர்களுக்கு இலகுவாக்கி, அவர்கள் நலன் பெறவும், அவர்களின் மன அமைதிக்காகவும், அதிலிருந்து மீண்டு பழையபடி அவர்கள் இன்புற்று வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம் சகோதரர்களே..!
மேலும், இயன்றவர்கள் Islamic Relief USA என்ற அமைப்பு நடத்தும் இதுபோன்ற Islamic Relief is responding. Donate today for Japanese வழியில் தேவை நோக்கி இருக்கும் ஜப்பானியர்களுக்கு பொருளாதார ரீதியிலும் உதவி புரியலாம். (உதவி செய்ய முற்படுவோர் அதற்கு முன் அந்த அமைப்பு பற்றி முதலில் சரியான தகவலை அறிந்து கொள்ளுங்கள்)
இந்த நேரத்தில் நாம் சில படிப்பினைகளை பெற வேண்டியுள்ளது. அவை என்ன..?
படிப்பினை-1
பொதுவாக இவ்வுலகில், 'இதுபோன்ற இயற்கை சீற்றங்களுக்கு முன்னாள் மனித சக்தி என்று ஒன்றுமே இல்லை' என்று இவை எல்லாம் ஏற்படும்போதுதான் மனிதன் உணருகிறான். இவற்றை எல்லாம் தம்மால் தடுத்துவிட முடியும் என எவ்வளவோ அறிவியல் மூலம் தான் முன்னேறி விட்டதாக தற்பெருமை கொண்டு இருக்கும் மனிதன் இதுபோன்று இயற்கைக்கு முன்னால் தோல்வி பெற்று நிற்கும்போதுதான் தன் மனித சக்தியின் இயலாமை குறித்தே அறிகிறான்.
படிப்பினை-2
இதுபோன்ற ஒரு இயற்கை சீற்றம் அறிவியலில் முன்னேறாத ஏழை ஆப்ரிக்க நாடுகளில் வந்து இருந்தால், ஜப்பானில் ஏற்பட்டதைவிட பலமடங்கு நாசம் ஏற்பட்டு இருந்திருக்கும். ஆனால், ஜப்பானில் வந்ததனால், 'இவ்வளவு அறிவியல் முன்னேற்றம் கண்டும், இவ்வளவு நவீன தொழில்நுட்பம் கொண்டும் இயற்கை சீற்றத்துக்கு முன்னால் மனிதன் தோற்கிறான்' என்பதே பல மனிதர்களின் அறிவியல் தற்பெருமையை தவிடு பொடியாக்கி உள்ளது.
படிப்பினை-3
முழு ஜப்பானும் அமைந்து இருப்பது நிலநடுக்கம் அதிகம் வரக்கூடிய Seismic Zones VII, VIII & IX --களில்..! 'அடிக்கடி நிலநடுக்கம் வரும் இதுபோன்ற நாட்டில் அணு உலைகள் பல திறப்பது சரியா' என்று ஏன் யாரும் யோசிக்கவில்லை. அப்படியே திறந்தாலும், அவை 7 ரிக்டார் அளவுக்கு மேல் தாங்காது என்று IAEA எச்சரித்தும் அதை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு இப்போது 8.9 ரிக்டார் நிலநடுக்கம் வந்தவுடன் அணு உலைகள் வெடிக்கின்றன. ஆட்சியாளர்களிடம் இவ்விஷயத்தில் என்றும் அசட்டை கூடாது.
படிப்பினை-4
9/11-ல் அமெரிக்காவில் இரண்டு கட்டிடங்கள் தாக்கப்பட்டதும் அது யாரோ (இன்றுவரை அது யாரென்று முன்னுக்குப்பின் குழப்பம் மிகுந்த புரியாத புதிராகவே உள்ளது) அரபியர் சிலரின் பயங்கரவாதம் என்று கூறப்பட்டதும் உலகின் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் பட்டம் குத்தப்பட்டனர். ஆனால், அதிகாரபூர்வமாக இரு நகரங்களின் ஜப்பானியர் தலையில் இரண்டு அணுகுண்டுளை அமெரிக்க அரசே போட்டு பயங்கரவாதம் நிகழ்த்தியும் இதுவரை ஒரு அமெரிக்கரோ அல்லது ஒரு கிருத்துவரோ பயங்கரவாதியாக ஜப்பானியரால் அறிவிக்கப்பட்டதில்லை. இவர்கள் மிகச்சிறந்த முன்னுதாரணம்.
படிப்பினை-5
நமது அறிவியல் கண்டுபிடிப்புகளே நமக்கு எதிரிகளாக ஆவது போல நாம் குறையுள்ள கண்டுபிடிப்புகளைத்தான் பெரும்பாலும் உருவாக்கி உள்ளோம்.
இந்த உலகம் மனிதனிடம் தரப்பட்டபோது இவ்வளவு சீரழிந்த நிலையில் தரப்படவே இல்லை. இவன்தான் ஓசோனில் ஒட்டை போட்டான்.
உலகை வெப்பமயமாக்கி துருவ பனிக்கட்டிகளை கரைத்தான். நீரை உயிர்கொல்லி ரசாயனங்களால் விஷமாக்கினான்.
தன் இயந்திர வாகனங்களின் புகையாலும், தொழிற்சாலைகளின் புகையாலும் காற்றை நச்சு வாயுக்களால் மாசுபடுத்தினான்.
இயற்கையான தாவர விதைகளின் மரபணுக்களை கேடுதரும் வகையில் மாற்றினான். ரசாயன உரங்கள் & பூச்சிக்கொல்லி மூலம் மண்ணை மலடாக்கினான்.
பற்பல கதிர்வீச்சு கற்றைகளை கண்டுபிடித்து அதன்மூலம் பற்பல புதிய புற்றுநோய்களையும், இயங்காத உறுப்புகளையும், புதுப்புது வடிவில், பிறவிக்குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்கும் காரணமாகினான்.
இயற்கையான மனித தேவைகளை விடுத்து, தீயது என்று நன்கறிந்தும் சிகரெட், மது, போதை மருந்து, விபச்சாரம், ஓரினச்சேர்க்கை என தேவையற்ற செயற்கையானவற்றுக்கும் அனுமதி அளித்து, ஊக்கம் அளித்து, அதன் மூலம் புதிய நோய்களை பெற்றுக்கொண்டான்.
தன்னைத்தானே அழித்துக்கொ(ல்ல)ள்ள பற்பல அதிநவீன WMD ஆயுதங்களை கண்டுபிடித்தான். (2010-ம் ஆண்டின் உலகின் முதன்மையான ஆயுத ஏற்றுமதி வியாபாரி அமெரிக்கா..! இவ்வாண்டின் முதன்மையான இறக்குமதி பயனீட்டாளர் மாண்புமிகு இந்தியா அவர்கள்..!)
நீங்கள் கேட்கலாம்.... இவை எல்லாம் மனித முன்னேற்றத்துக்குத்தானே என்று..! ஆமாம்...! ஆனால், இந்த அறிவியல் கண்டுபிடிப்புகளின் பின்னே பெரிய குறை ஒன்று இருக்கின்றதே..! அது ஏன் தெரியவில்லை...?
உதாரணமாக...
நான் ஒரு சமையல் அடுப்பு கண்டு பிடிக்கிறேன்... "ம்ம்ம்.. பற்றிக்கொள்" என்று நீங்கள் சொன்ன மாத்திரத்தில், எரிபொருள் தேவை இன்றி அது தானாக தீ பற்றிக்கொள்ளும்..! ஆனால், அதை உங்களால் அணைக்கவே முடியாது..! எறிந்து கொண்டே இருக்கும் எந்நேரமும்...! இது ஒரு சிறந்த கண்டுபிடிப்பா..?
நான் ஒரு கார் கண்டுபிடிக்கிறேன். அதற்கும் எரிபொருளே தேவை இல்லை...! உள்ளே ஏறி உட்கார்ந்து, "ம்ம்ம்.. போ" என்றால் போய்க்கொண்டே இருக்கும். ஆனால், அதில் பிரேக் கிடையாது...! இது ஒரு நல்ல கண்டுபிடிப்பா...?
இதுபோன்றுதானே இப்போது நம்முடைய பல நவீன கண்டுபிடிப்புகள் உள்ளன...?
வருங்காலத்தில் எண்ணெய், எரிவாயு, நிலக்கரி என எல்லாம் முடிந்த பின்னர் அணுமின் நிலையம்தானே ஒரே வழி.. என்று நீங்கள் கேட்கலாம். ஆமாம். ஆனால், அணுக்கதிர்வீச்சுக்கு உள்ளான ஜப்பானிய மக்களுக்கு என்ன மருந்தை கண்டு பிடித்து விட்டு நாம் அங்கே அணு உலை கட்டினோம்..? இது என்னுடைய அந்த பிரேக் இல்லாத கார் போன்று இல்லையா?
ஓசோன் ஓட்டையை அடைக்கும் வழி என்ன என தெரியாமலேயே, நாம் மேலும் மேலும் குளிர்சாதனம் தயாரித்து, விற்று, வாங்கி, CFC உமிழ உமிழ நாம் உபயோகிக்க வில்லையா..? இது எனது முந்தைய தீயை அணைக்க முடியாத அடுப்பு போல இல்லையா...?
உலக வெப்பமயமாதலுக்கு என்ன என்ன காரணம் என்று எல்லாம் அறிந்தும் அதை தடுப்பதற்கான முயற்சியில் நாம் என்றேனும் இறங்கினோமா?
அமேசான் காடுகளும் சைபீரிய காடுகளும்தான் உலகில் உள்ள 50% ஆக்சிஜனை நமக்கு தருகிறது (உருண்டை பூமியில்... ஒன்று பகலில் இருக்கும்; மற்றொன்று இரவில் இருக்கும்... சுபஹானல்லாஹ்..!) என்று நன்கு அறிந்திருந்தும் காடுகள் வளர்ப்பில் நாம் ஆர்வம் காட்டினோமா..?
பச்சையம் இல்லாத நட்டநடு சஹாரா பொட்டல் பாலைவனத்திலும்... அவ்வளவு ஏன்... பல லட்சக்கணக்கான சதுர மைல்கள் மரங்களே இல்லாத நட்டநடு பசிபிக் மஹா சமுத்திரத்திலும் மனிதன் சுவாசிக்கத்தேவையான ஆக்சிஜன் கிடைக்கிறதே...! எப்படி..? உலகம் முழுதும் காற்று வீசுவதால்தானே..! இதை மனிதனால் சாதிக்க முடியுமா..? முடியாது. ஆனால், மரவளர்ப்பு மனிதனால் முடியும் அல்லவா..?
'நீரின்றி அமையாது உலகு' என்று நன்கு அறிந்திருந்தும், நிலத்தடி நீரை பாதுகாக்க நாம் என்ன செய்தோம்..? அது குறைகிறது என்று தெரிந்தும், அதற்கு எந்த மாற்று ஏற்பாடுகளும் செய்யாமலும், மழை நீரை சேமிக்காமலும் தொடர்ந்து அதனை உறிஞ்சி எடுத்து உபயோகிக்கிறோம்..! ஆனால், நம் சந்ததிகள்..? அவர்களுக்கு தண்ணீர்...?
'கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் இருக்கு கண்ணூ' என்று யாரோ சைடில் கத்துவது என் காதில் விழாமல் இல்லை. (கடலே இல்லாமல் பல நாடுகள் உள்ளனவே..!) கடல் இருந்தாலும், ஆனால், அதற்கு முன்னரே எண்ணெய் வளம் மனிதனால் உறிஞ்சப்பட்டு தீர்ந்துவிடும். அப்புறம் மின்சாரம் இருக்காது. அதனால் டீசாலிநேஷன் பிளான்ட் எதுவும் ஓடாது..! உப்புத்தண்ணியை யார் குடிப்பது..? மன்னிக்குமா நம்மை நம் வருங்கால சந்ததி..?
மண்வளம், நீர்வளம், காற்றுவளம் இவற்றை காப்போம். இதனால், நாம், நம் மனிதவளத்தைக்காப்போம். இனியாவது படிப்பினை பெறுவோம்.

படிப்பினை-6
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் ஒரு கூட்டத்தார் மீது வேதனையை இறக்கி வைத்தால், அவ்வேதனை அக்கூட்டத்திலுள்ள நல்லோர் உட்பட அனைவரையும் பிடித்துக் கொள்ளும். ஆனால் அவர்கள் பின்னர் கியாமத்(இறுதி)நாளில் எழுப்பப்படும் போது அவரவர்களின் செயல்களுக்கேற்ப எழுப்பப்படுவர். (நல்லோர்கள் நல்ல அந்தஸ்துடனும், தீயோர் தீய நிலையிலும் எழுப்பப்படுவர்.) (புகாரி, முஸ்லிம்).
படிப்பினை-7
(மனிதனே!) உனக்கு ஏதேனும் ஒரு நன்மை ஏற்பட்டால் (அது) அல்லாஹ்வின் புறத்தில் நின்றும் கிடைத்ததாகும். உன்னை ஏதும் தீங்கு பிடித்தால் (அது) உன்னிலிருந்தே ஏற்பட்டதாகும். (அல் குர்ஆன்-4:79)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:காற்று அல்லாஹ்வின் கிருபையாகும். அது அல்லாஹ்வின் அருட்கொடையை கொண்டு வருகிறது. சிலவேளை அது அவனின் வேதனையையும் கொண்டு வருகிறது. ஆகவே நீங்கள் அதனைக் கண்டால் அதனை திட்ட வேண்டாம். அதில் நலவானதை அல்லாஹ்விடம் கேளுங்கள். அதில் தீங்கானதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுங்கள். (அபூ தாவூது)
படிப்பினை-9
நீங்கள் அறிந்துக் கொள்ளாத நிலையில் திடீரென வேதனை உங்களை வந்தடைவதற்கு முன்னர் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கி வைக்கப்பட்ட மிக அழகானவற்றை பின்பற்றுங்கள். (அல் குர்ஆன்-39-55)
படிப்பினை-10
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எந்த முஸ்லிமாவது ஒரு மரத்தை நட்டால் அல்லது எதையேனும் பயிரிட்டால் அதிலிருந்து மனிதனோ, பறவையோ,விலங்குகளோ சாப்பிட்டால் அது அவர் செய்த தர்மமாக கருதப்படும்.(திர்மதி)
18 ...பின்னூட்டங்கள்..:
நல்ல பதிவு நன்றி....
மனிதனின் சுயநலம் அனைத்து தீமைக்கும் காரனம்.
ஆனால் இறைவனின் படைப்பே இப்படி தான் உள்ளது...
@Vinoth தங்கள் வருகைக்கும் தக்க கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.வினோத்.
//ஆனால் இறைவனின் படைப்பே இப்படி தான் உள்ளது...//---சரியாகச்சொன்னீர்கள் சகோ.
உயிரை தந்த இறைவனே உயிரை எடுத்துக்கொள்ளும்போது யாருக்குத்தான் தடுக்க/மறுக்க உரிமை உண்டு...? எல்லோருமே ஒரு நாள் இறக்க வேண்டியவர்தானே..!
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ. நிறைய விளக்கங்கள், நல்ல பதிவு! மனிதனின் தேவை அதிகமாக அதிகமாக கண்டுபிடிப்புகளும் உற்பத்திகளும் அதிகமாவது சகஜமே. நபி(ஸல்)அவர்களே கூறிய முன்னறிவிப்பு அது! அவை அவசியம் என்பதால் யாராலும் தடுக்கவும் முடியாது.
//அல்லாஹ் ஒரு கூட்டத்தார் மீது வேதனையை இறக்கி வைத்தால், அவ்வேதனை அக்கூட்டத்திலுள்ள நல்லோர் உட்பட அனைவரையும் பிடித்துக் கொள்ளும்//
நபி(ஸல்)அவர்களின் இந்த எச்சரிக்கைதான் எப்போதும் என்னுள் அச்சத்தை ஏற்படுத்தும். இங்கு நடக்கும் அட்டூழியங்களுக்கு அல்லாஹ் தண்டனைக் கொடுத்தால் நாமும் அதில் மாட்டிக் கொள்வோமோ என்ற பயம், அல்லாஹ் காப்பாற்றணும்! (நஊது பில்லாஹி மின்ஹா!) அவனிடமே மன்றாடுவோம்.
@அஸ்மா
அலைக்கும் ஸலாம் வரஹ்...
//இங்கு நடக்கும் அட்டூழியங்களுக்கு அல்லாஹ் தண்டனைக்கொடுத்தால் நாமும் அதில் மாட்டிக் கொள்வோமோ என்ற பயம்//....எதற்கு நமக்கு சகோ.அஸ்மா..? என்றோ ஒருநாள் போக வேண்டிய இடத்திற்கு கொஞ்சம் சீக்கிரமாக போனால் என்ன அதனால்..?
//ஆனால் அவர்கள் பின்னர் கியாமத்(இறுதி)நாளில் எழுப்பப்படும் போது அவரவர்களின் செயல்களுக்கேற்ப எழுப்பப்படுவர். (நல்லோர்கள் நல்ல அந்தஸ்துடனும், தீயோர் தீய நிலையிலும் எழுப்பப்படுவர்.)//----இவ்வுலகில் சரியான நல்ல முஸ்லிமாக நாம் வாழ்ந்திருந்தால்... மடியில் கனமில்லை... எனில், வழியில் பயமெதற்கு..?
வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோ.அஸ்மா.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ். அன்பின் ஆஷிக். மிக அருமையான பதிவு. இறைவன் நமக்கு அமானிதாக கொடுத்த இந்த பரந்துபட்ட புவியை மனிதன் தன் பேராசையினால் அழிவுக்ககுள்ளாக்கி கொண்டிருக்கிறான் என்பதை அழகிய முறையில விளக்கியுள்ளீா்கள். இந்த நிகழ்வில் நீங்கள் அனைவரும் பொருப்பாளிகளே. மறுயைில் உங்கள் பொருப்புகள் பற்றி விசாாிக்க படுவீர்்கள் என்று ஹதீஸை் நினைவுக்கு வருகிறது. எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் தன் சோதனைியல் இருந்து காக்க வேண்டும். தோழமையுடன்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ். அன்பின் ஆஷிக் மிக அருமையான சிந்தனையை தூண்டும் பதிவு. அமானிதமாக ஒப்படைக்கப்பட்ட இந்த புவியை மனிதன் தன் பேராசையினால் பாழ் செய்து கொண்டிருக்கிறான். இந்த நிகழ்வில் நீங்கள் அனைவரும் பொருப்பாளிகளே. உங்களுடைய பொருப்புகள் பற்றி மறுமையில் விசாாிக்கப் படுவீா்கள் என்ற அண்ணல் நபியின் ஹதீஸ் நினைவுக்கு வருகிறது. ஜப்பானிய போிடரால் கணத்த இதயத்துடன்

அஸ்ஸலாமு அலைக்கும்!
முதலில் தொடர் பாதிப்பக்கு உள்ளாகியிருக்கும் நமது ஜப்பானிய சகோதர சகோதரிகளுக்கு நம்மின் ஆழ்ந்த அனுதாபங்கள்.
இவ்வளவு வசதியுடைய ஜப்பானே கதிர் வீச்சின் தாக்குதலை தடுக்க முடியாமல் கையை பிசைந்து கொண்டிருக்கிறது. மக்கள் தொகை அதிகம். வசதியும் குறைவான நம் நாட்டில் மேலும் மேலும் அணு உலைகளை கட்டிக் கொண்டு வருகிறோம். இதற்கு எதிர்ப்பும் நம் நாட்டில் அதிகம் எழக் காணோம். பாதிப்பு ஏற்பட்டவுடன்தான் எதையும் நம் நாடு சிந்திக்கும் போல் தெரிகிறது
மற்றுமொரு சிறந்த பதிவைத் தந்ததற்க்கு வாழ்த்துக்கள் சகோ. ஆஷிக்.
@Ferozஅலைக்கும் ஸலாம் வரஹ்...
"...நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்..."(புகாரி 2558)
மிகச்சரியான நேரத்தில் நல்லதொரு ஹதீஸை நியாபகப்படுத்திணீர்கள். சகோ.ஃபெரோஸ். பொறுப்பில் இருக்கும் நாம் நம்மை இவ்விசாரனைக்கு தயார்படுத்திக்கொள்ள வேண்டியது மிக அவசியம், சகோ.
தங்கள் வருகைக்கும், கொடுத்த நல்லதொரு ஹதீஸுக்கும் மிக்க நன்றி, சகோ.ஃபெரோஸ்.
@சுவனப்பிரியன் அலைக்கும் ஸலாம் வரஹ்...
//இதற்கு எதிர்ப்பும் நம் நாட்டில் அதிகம் எழக் காணோம்.//---எப்படி எழும் சகோ.சுவனப்பிரியன்...?
முதல் நாள் நம் பிரதமர் பிரஸ் மீட்டில் 'நம் நாட்டு அணுவுலைகள் எப்படி' என்று நம்மவர்களை பரிசோதிக்க சொல்ல வேண்டும் என்கிறார். அடுத்தநாள் அணுவுலை தரப்பில் 'எல்லா அணுஉலைகளும் நிலநடுக்கம் சுனாமி என்று எதையும் நன்றாக தாங்கும்' என்று பிரஸ்மீட்டில் பிரதமருக்கு விஞ்ஞானிகளின் பதில்..!
இவர்களுக்கிடையே தொலைபேசி, கைபேசி, மெயில், மேசென்ஜெர், தந்தி, தபால், புறா(!) என்று எல்லாமே இருந்தாலும்... பிரஸ்மீட் மூலம்தான் பேசிக்கொள்வார்கள் போலும்..!
விஷயத்தை மக்களுக்கு இப்படி எத்திவைக்கிறார்களாம்...!!!
//பாதிப்பு ஏற்பட்டவுடன்தான் எதையும் நம் நாடு சிந்திக்கும் போல் தெரிகிறது//---ஸாரி...நோ கமெண்ட்ஸ்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி, சகோ.சுவனப்பிரியன்..!
அஸ்சலாமு அலைக்கும்.
More than 3,600 people died and more than 7,500 others were missing after earthquake and tsunami hit Japan last week, according to local police reports on Wednesday (March 16, 2011).
ஜப்பானில் இடம் மாறி இருக்கும் மக்களை ஒன்று சேர்ப்பதற்காக கூகிள் உடனடியாக Person Finder 2011 Japan Earthquake என்ற தளத்தை உருவாக்கி கொடுத்துள்ளது,
ஜப்பானில் இருக்கும் யாரைப்பற்றிய தகவல் வேண்டுமோ அல்லது யாரைத்தேடுகிறீர்களோ அவர்களை பற்றிய தகவல்களை நொடியில் கொடுப்பதற்காக இந்தப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தபக்கம் உருவாக்கிய 2 மணி நேரத்திற்குள் 1200 பேர் தங்கள் பெற்றோர்களையும்,குழந்தைகளையும், உறவினர்களை தேடி கண்டுபிடித்துள்ளனர். ஆபத்து காலத்தில் கூகிள் செய்யும் இந்த உதவிக்கு அனைத்து மக்களின் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்கள் நண்பர்கள் அல்லதுஉறவினர்கள் யாராவது ஜப்பானில் இருந்தால் நீங்களும் இதைப்பயன்படுத்தி அவர்கள் எங்கு இருக்கின்றனர் என்று தெரிந்து கொள்ளலாம்.மேலும் பாதிப்புகள் தொடராமல் இருக்க ஏக இறைவனை பிரார்த்திப்போம்.
இணையதள முகவரி :
http://japan.person-finder.appspot.com/?lang=en
சுனாமியில் தப்பித்த பள்ளிவாசல் புகைப்படம்.
http://www.facebook.com/pages/MOSQUE-THAT-SURVIVED-THE-TSUNAMI/253246340119?sk=wall
ஜப்பானின் மஸ்ஜித்கள் பற்றி அறிய :
http://park.itc.u-tokyo.ac.jp/tuics/OldSite/mosques.htm
@இறைநேசச்செல்வன் அலைக்கும் ஸலாம் வரஹ்... மிக நல்ல சுட்டிகளை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி சகோ.
உண்மைதான் சகோ.
நாம் கண்டுபிடிப்பவற்றில் உள்ள ஆபத்துக்களை அறியாமல்(அல்லது அறிந்தே) பயன்படுத்துவது மனித குலத்திற்குத்தான் கேடு. மேலும் எவ்வளவுதான் மக்கள் எதிர்த்தாலும் அதை சமாளித்து அணு உலைகளை நிறுவி மக்கள் வாழ்க்கைக்கு உலை வைப்பது அரசுகள் தானே. மின்சாரம் இல்லாமல் வாழ முடியும் இதுக்கு முன்னரும் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் உயிர் இல்லாமல் எங்கணம் வாழ இயலும். (எங்க வீட்டில் சிம்னி விளக்கு வெளிச்சத்தில் சாப்பிட்டது இன்னும் ஞாபகமிருக்கிறது)
இயற்கை சீற்றத்தால் அழிந்ததை விட இந்த கதிர்வீச்சால் பாதிக்கப்பட போகும் சந்ததிகளை எண்ணி குலை நடுங்குகிறது. இது அனைத்து நாடுகளும் கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம்.
இந்த நேரத்தில் இதில் உயிர் இழந்த பாதிக்கப்பட்ட சகோதர சகோதரிகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். கண்டிப்பாக நம்மால் ஆன உதவிகளை செய்து நிராதரவாக நிற்கும் மக்களுக்கு உதவுவோம்.
இத்துயரில் இருந்து மீள இறைவன் அருள் புரிவானாக.
மிக நல்ல கருத்துக்களை எழுதியுள்ளீர்கள்.
@சிநேகிதன் அக்பர்
//இது அனைத்து நாடுகளும் கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம்.//--நிச்சயமாக.
//இத்துயரில் இருந்து மீள இறைவன் அருள் புரிவானாக.//--ஆமீன்.
தங்கள் வருகைக்கும் அழகிய கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.சிநேகிதன் அக்பர்.
வாழ்த்துக்கள் தோழரே........
முதலில் ஜப்பானில் பாதிக்கப்பட்ட சகோதர சகோதரிகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
அருமையான பதிவு!!!!! உண்மைகளை படிப்பினைகளை திறம்பட கூறினீர்கள். கார்பன் வாயுவின் வெளியேற்றத்தை கட்டுபடுத்தவென அறிமுகமானது தான் மின் அணு உலை முறை. தரவுகளின் படி 2000-2008 காலப்பகுதியில் 7% அணு உலை முறை மின் அதிகரித்ததாக கூறப்படுகிறது சமநேரத்தில் கார்பன் வாயுவின் வெளியேற்றம் 37% அதிகரித்திருக்கிறது. குறைந்தல்லவா இருக்க வேண்டும்? நாமெல்லாம் சிந்திக்க வேண்டிய விடயம் தான் தோழரே.
@அகல்யன் உங்கள் வலைப்பூவில் இது சம்பந்தமான தங்கள் பதிவையும்படித்தேன். மிக நல்லதொரு பதிவு சகோ. எடுத்துக்கொண்ட தலைப்பிற்கு சரியான பதிலை தரும்படியான ஆணித்தரமான கருத்தாழமிக்க மெய்யான வாதங்கள். வாழ்த்துக்கள்
மெய்ப்பொருளை எடுத்துக்காட்டியமைக்கும், வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.அகலயன்.
உங்கள் கருத்திற்கும் ஒத்துழைப்பிற்க்கும் மிக்க நன்றி சகோதரரே.
உங்கள் அன்பான சொல்லிற்க்கும் பண்பான செயலுக்கும் நிச்சயம் ஆண்டவன் உங்களுக்கு நற்கூலி வழங்குவார்.
@அகல்யன்//உங்கள் அன்பான சொல்லிற்க்கும் பண்பான செயலுக்கும் நிச்சயம் ஆண்டவன் உங்களுக்கு நற்கூலி வழங்குவார்.//--தங்கள் மீதும் இவ்வாறே உண்டாவதாக... சகோ.அகல்யன்.
மேலும், நம் மீது எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக..! பிறர்நலன் பேண, நம் அறிவை மென்மேலும் பெருக்கிக்கொள்ள தக்க வாய்ப்புகளையும் வழிகளையும் இறைவன் வழங்கட்டுமாக..!
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!