அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Thursday, March 3, 2011

10 காட்டுமிராண்டிகளின் தேசமா பாகிஸ்தான்...?

பாகிஸ்தானில் சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் ஷஹ்பாஸ் பட்டி (வயது 42) என்ற கிறிஸ்தவ அமைச்சரை அநியாயமாய்-அக்கிரமாய் சுட்டுக்கொன்ற காட்டுமிராண்டிகளை, அவர்கள் எவராக இருந்தாலும் உடனடியாய் கண்டுபிடித்து அரசே நடுரோட்டில் மக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும். ஆழ்ந்த துயரத்துடன் இப்படுகொலைக்கு எனது மிக மிக வன்மையான கண்டனங்களை இங்கே பதிகிறேன். 

தனது தாயாரின் வீட்டிலிருந்து காலையில் காரில் வெளியேறிய ஷஹ்பாஸை மூன்று அல்லது நான்குபேர் அடங்கிய கும்பல் மறைந்திருந்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், அவருடைய கார் டிரைவர் மீது அந்தக் கும்பல் தாக்குதல் நடத்தவில்லை. அமைச்சரின் உடலில் எட்டுக் குண்டுகள் துளைத்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். எதற்காம் இந்த படுகொலை? பாகிஸ்தான் அமைச்சரவையில் ஒரே கிறிஸ்தவ உறுப்பினரான ஷஹ்பாஸ் மத அவமதிப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டுமென கோரியிருந்தார். அவ்வளவுதான்..!

அதற்கு முன்னால், இதே காரணத்துக்காக குரல் கொடுத்த அதிபர் சர்தாரியின் ஆளும் PPP கட்சியை சேர்ந்த இஸ்லாமிய அடிப்படைவாதி முன்னாள் பஞ்சாப் ஆளுநர் சல்மான் தசீரை கொன்ற, தொப்பி போட்டு தாடி வைத்திருந்த - இஸ்லாம் பற்றி அறியாத - தம்மை முஸ்லிம் என்று கூறிக்கொண்ட கொலைகாரனான காட்டுமிராண்டியை உடனடியாக நடுரோட்டில் வைத்து அரசே தலையை சீவ வேண்டும். இப்படி செய்தால் அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கும் பாகிஸ்தான் மீளும். இல்லையேல் அது ஒரு 'காட்டுமிராண்டிகளின் தேசம்' என்று தான் இனிமேல் நான் அழைப்பேன். இந்த பஞ்சாப் ஆளுநர் சல்மான் தசீரின் படுகொலையை கண்டித்தும் முன்னர் ஒரு பதிவு எழுதியுள்ளேன். அதன் பின்னணியான இஸ்லாத்திற்கு எதிரான அந்த மத நிந்தனைச்சட்டத்திற்கும்  கண்டனம் தெரிவித்துள்ளேன்.

அவ்வப்போது அரசியல் தலைவர்கள் படுகொலை, மக்கள் குழுமி இருக்கும் பொது இடங்களில் மனித குண்டுவெடித்து அப்பாவி பெண்கள் குழந்தைகள் உட்பட ஏதுமறியா அப்பாவி மக்கள் படுகொலைகள், மஸ்ஜிதுகளில் கூட குண்டுவெடிப்புகள் நிகழ்த்தி தொழுகையாளிகளை படுகொலை செய்வது, நாடெங்கும் திருட்டு பயம், அவனவன் கையில் துப்பாக்கியுடன் அலைவது, இஸ்லாத்திற்கு எதிரான சட்டங்கள், ஹராமான விஷயங்களை ஆதரித்து சட்டங்கள் இயற்றுதல், சட்டம் ஒழுங்கு நிலை நாட்ட இயலாத சுயநல அமெரிக்க அடிவருடிகளின் ஆட்சி என வீணாய்ப்போய்க்கொண்டிருக்கும் ஒரு போலி ஜனநாயக நாடுதான் பாகிஸ்தான்.

ஏனெனில், அது ஒரு இஸ்லாமிய நாடு இல்லை என்று ஆகி... அறுபத்து மூன்றேகால் ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது.

"தன் கோடிக்கணக்கான சகோதரர்களின் நிலையை பற்றி கண்டுகொள்ளாமல், தான் மட்டும் பிரதமர் பதவியை அடைந்தால் போதும்" என்று... "ஆர்.எஸ்.எஸ். -- காங்கிரஸ் கூட்டு களவாணித்தன 'முஸ்லிம்களுக்கு தனிநாடு' என்ற சதி சூழ்ச்சியை" ஏற்றுக்கொண்டவரால் இஸ்லாமிய அரசை என்றுமே நிறுவ இயலவில்லை.

அதை அப்போதும் எப்போதும் எதிர்க்காத அந்நாட்டு பெரும்பாண்மை மக்களின் பச்சை துரோகம் என்றுமே அவர்களை இஸ்லாமிய அரசை நிறுவவும் விட வில்லை.

அன்று... இந்திய  முஸ்லிம் சகோதரர்களின் அக்கறை சிறிதும் இன்றி இங்கிருந்து பாகிஸ்தான் சென்ற இஸ்லாமிய சுயநலவாதிகளுக்கும் என்றுமே ஒரு உண்மையான இஸ்லாமிய ஷரியத் சட்டங்களை அமல்படுத்தும் நாட்டில் வாழ கொடுத்து வைக்க வில்லை.  "இது மதச்சார்பற்ற நாடு" என்று காவி சித்தாந்தத்தில் விழாத அன்றைய உண்மையான காங்கிரஸ் தலைவர்கள் சொல்லியும் இவர்கள் நம் நாட்டைத்துறந்து சென்றது எப்படி சரியாகும்..? இஸ்லாத்தை கடைப்பிடிக்க இயலாவிட்டால்தானே ஹிஜ்ரத் கடமையாகும்? (திருக்குர்ஆன் - 4:97)

அல்ஹம்துலில்லாஹ்... இன்று அவர்களை விட நாம் இஸ்லாமிய கருத்துக்களை மிகவும் தைரியமாக மேடை போட்டு பிரச்சாரம் செய்து வருகிறோம். நன்மையை ஏவுகிறோம். தீமையை தட்டிக்கேட்கிறோம். அங்கே அப்படி தீமையை தட்டிக்கேட்ட பஞ்சாப் ஆளுநர் சல்மான தசீர் கொல்லப்படுகிறார். அதே தீமையை எதிர்த்த பாக்.சிறுபாண்மை நல அமைச்சர் கொல்லப்படுகிறார்.

ஆனால், இங்கே சிறுபாண்மை முஸ்லிம்களால் தைரியமாக நடுரோட்டில் மேடை போட்டு கொலைகாரன் மோடியின் படத்தை செருப்பால் அடித்து... மத்திய அரசை நோக்கி... கிடைத்த ஏகப்பட்ட வீடியோ, ஆடியோ, வாக்குமூல ஆதாரங்களின் அடிப்படையில் மோடியை கைது செய்து விசாரித்து தூக்கில் இடச்சொல்லி மைக் வைத்து கோஷம்போட முடிகிறது.

முஸ்லிம்கள் எங்கே சுதந்திரமான முஸ்லிம்களாக உள்ளனர்? (பாஜக, சிவசேனா ஆளும் மாநிலங்கள் தவிர) இந்தியாவிலா? பாகிஸ்தானிலா? இதை 1947,  ஆகஸ்ட் 14--ற்குப்பின் ஓடிப்பொன பாகிஸ்தாநிய முஸ்லிம்கள் உணர வேண்டும்.

இந்தியாவிலும்...

தம்மை ஒரு "மதச்சார்பற்ற அரசு" என்று இங்கே சொல்லிகொள்பவர்கள், குஜராத்தில் இனப்படுகொலை செய்த காட்டுமிராண்டிகளை தூக்கில் இட வேண்டும். இதற்கு எண்ணற்ற ஆதாரங்கள் இருந்தும் இன்னும் ஏதும் செய்யாமல் இருந்தால், பாகிஸ்தானை பின்பற்றி  இந்தியாவும் அழிவுப்பாதையை நோக்கி முன்னேறுகிறது என சொல்லலாம்.

ஏற்கனவே மூவாயிரம் சீக்கியர்களை கொன்ற கொலைகார காட்டுமிராண்டிகள் மீது... நன்கு அறிந்திருதும், ஆறு ஆண்டுகள் ஆட்சி புரிந்த பாஜக எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. அதற்கு காங்கிரசின் பிரதியுபகாரம்தான்  இந்த சங்பரிவார கொலைகாரர்களுக்கு ஆதரவான போக்கோ என்று ஐயுற வேண்டியுள்ளது.

"உன்னை நான் கவனிச்சிக்கிறேன்... என்னை நீ கவனிச்சிக்க" என்றால் நீதியை எவன் கவனிச்சிக்கிறது..?

கோத்ராவில் நிகழ்ந்த அந்த கோர சம்பவம் மாபெரும் இனப்படுகொலைக்கு காரணமாக அமைந்தது. கோத்ராவில் நிகழ்ந்தது விபத்தே தவிர சதி செயல் அல்ல என நீதிபதி பானர்ஜி கமிஷன் தனது தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டது. அஹ்மதாபாத் சிறப்பு நீதிமன்றம் இந்த விபத்தை 'திட்டமிட்டசதி' (யாருடைய சதி?!?) என்று கூறிய மோடியால் நியமிக்கப்பட்ட  நானாவதிஷா கமிஷன் அடிப்படையில் மட்டுமே தீர்ப்பளித்தது. பானர்ஜி ஆணையத்தின் அறிக்கையை சம்பிரதாயத்திற்கு கூட நீதிமன்றம் பரிசீலிக்க வில்லை. மோடி அமைத்த கமிஷன் ஹிந்துத்துவா சக்திகளுக்கு ஆதரவாக நடந்த குஜராத் கலவரத்தை நியாப்படுத்த என்றே அமைக்கப்பட்டதாகும். மோடியின் ஆட்சியின் கீழ் உள்ள அதிகார வர்க்கம் முழுவதிலும் ஹிந்துத்துவா சிந்தனை படைத்த நீதிபதிகளே நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது நீதி பரிபாலனத்தில் கேலி செய்யும் தீர்ப்பு என சமூகநல ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இன்ஷாஅல்லாஹ்...கோத்ரா வழக்கு நிச்சயம் சுப்ரீம் கோர்ட்டு போகும். அங்கே, பானர்ஜி கமிஷன் அடிப்படையிலும் விசாரிக்கப்பட்டு ரயில் பெட்டிக்கு உள்ளேயிருந்து தீ வைத்து அப்பாவி கரசெவகர்களை கொன்ற சதிகார காவி பயங்கரவாதிகளுக்கு இன்ஷாஅல்லாஹ் நிச்சயம் தூக்கு கிடைக்கும் என்றும், இப்போது கொடுக்கப்பட்ட தண்டனைகள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தர்மம் மட்டுமே வெல்ல இறைவனிடம் தொடர்ந்து துவா செய்வோம்.

அதேநேரம், கோத்ரா வழக்கில் இத்தனை வருடம் விசாரனைக்கைதிகளாக குற்றம்சாட்டப்பட்டு 94 பேரை சிறையில் வைத்திருந்துவிட்டு இப்போது, 62 பேரை 'நிரபராதிகள்' என்று கோர்ட்டில் (அல்ஹ்மதுலில்லாஹ்) அறிவித்து... ஆனால், எந்தவித நஷ்ட ஈடும் இன்றி வெறுமனே விடுவித்தது என்ன விதத்தில் நீதியாகும்..? இதற்குப்பெயரா நீதி மன்றம்? இவர்களுக்கு நஷ்ட ஈடு ஒன்றும் தரப்படாதது படு பயங்கர அநீதி அல்லவா? எட்டாண்டு சிறை தண்டனைக்கு... இழந்த இளமைக்கு... அடைந்த துயரத்துக்கு... இதனால் அவதியுற்ற இவர்களின் குடும்பத்தாருக்கு... செலவழித்த பணத்துக்கு... நேர்ந்த தொல்லைகளுக்கு... கிடைத்த அவப்பெயருக்கு எல்லாம் என்ன பரிகாரம்? நீதி மன்றத்தில் என்ன பரிகாரம்? இந்த ஏழைதாயாரின் கண்ணீர் பேட்டியை படித்தால் உள்ளம் கணக்கும்.

இங்கே எரியும் ரயில் பெட்டியின் படத்தை பார்த்தாலே தெரியுமே..! எரிபொருள் உள்ளே இருந்திருக்குமா அல்லது ஓடும் ரயிலில் வெளியில் இருந்து தெளிக்கப்பட்டிருக்குமா என்று..! அப்படி இந்திருக்குமேயானால், (அப்போது உள்ளே இருந்த, இறந்த அந்த அப்பாவி கரசேவயாளர்கள் அனைவருக்குமே ஜன்னல் கண்ணாடிகளை உடனே எப்படி மூடுவது என்ற 'அதிநவீன தொழில்நுட்பம்' புரியவில்லை என்றே நம்புவோம்-?!). சரி... தெளிக்கப்பட்ட எரிபொருள் ஓடும் ரயில் பெட்டிக்கு உள்ளே சிறிதும் வெளியே நிறையவும் சிதறி, அதனால் பெட்டியின் ஜன்னலுக்கு கீழேயும் நிறைய எறிந்து இருக்கும். ஆனால், பெட்டியின் வெளியே ஜன்னலுக்கு கீழே எரிபொருளின் எந்த ஒரு சுவடையுமே காணோமே..! எரிபொருள் உள்ளே இருந்திருந்தால் மட்டுமே ரயில் பெட்டி இப்படி எரிந்திருக்க  சாத்தியம் என்கிறேன் நான். மேலும் இங்கே படியுங்கள்.

இப்படி இவர்களையும் அநியாயமாய் கொன்று, அந்த பழியை போட்டு மூவாயிரம் முஸ்லிம்களையும் அக்கிரமமாய் கொன்று குவித்த குஜராத் சங்பரிவார  காட்டுமிராண்டிகள், அவர்கள் அமைச்சர்களாக அல்லது முதலமைச்சராக இருந்தாலும் நடுரோட்டில் மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட வேண்டும். அதுதான் பாதிக்கப்பட்டோருக்கான சரியான நீதி.

அதற்கு முன்... சீக்கியர்களுக்கும் இதே போன்ற நீதி வழங்கப்பட வேண்டும்.  இந்த நீதிக்காக நேற்று அமெரிக்க கோர்ட்டு, இந்திய காங்கிரசிற்கு சம்மன் அனுப்பும் நிலை எல்லாம் நம் நாட்டின் மதச்சார்பின்மைக்கு... ஆக மகா கேவலம்...! இது, 'நம் நாட்டில் சிறுபான்மையினருக்கான நீதி எப்படி இருக்கிறது' என்று தெளிவாக உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது. பிரதமராக ஒரு சீக்கியரே இருந்தாலும் இதுதான் இன்றைய நம் நாட்டு நீதியின் நிலை என்றால் அது மிகவும் வேதனைக்குறியது.

இப்படி சிறுபான்மையினருக்கு சரியான நீதி செய்தால், அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கும் நம் நாடும்  மீளும். இல்லையேல்... இதுவும் 'ஒரு காட்டுமிராண்டிகளின் தேசம்' என்று மற்றவர் கூறும் நிலைக்கு நம்மை நாமே கேவலமான நிலையில் வைத்துக்கொள்ளக்கூடாது. 

ஆக, காவி மற்றும் பச்சை நிற காட்டுமிராண்டிகளின் பயங்கரவாதங்கள் ஒழிக..!

பாக். சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷஹ்பாஸ் பட்டியின்  படுகொலையை கண்டித்து பதிவு போட்டிருக்கும் சகோ.சுவனப்பிரியன் அவர்களுக்கு நன்றி. அப்பதிவில் சகோ.அன்னு அவர்களின் பின்னூட்டம் படித்தால் குஜராத்தில் சிறுபான்மையோர் நிலை என்ன என்று இன்னும் தெளிவாக விளங்கும்.


இப்போது இனி 'இந்த படுகொலையை கண்டிக்கிறேன்' பேர்வழி என்று இஸ்லாத்தை ஆதாரம் இன்றி தூற்ற முற்படுவோருக்காக:-

முஸ்லிமல்லாதார் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது. முஸ்லிம்களுடன் வாழும் முஸ்லிமல்லாதாரின் உரிமைகள், சலுகைகள் பற்றி இஸ்லாமிய சட்ட மூலாதாரங்கள் விரிவாகப் பேசுகின்றன. இவை வெறும் சித்தாந்தங்களாக வார்த்தையளவில் நின்று விடாமல், முஸ்லிம்களின் ஆட்சி உலகில் நிலவிய காலமெல்லாம் மிகச் சிறப்பாகச் செயற்படுத்தப்பட்டன என்பதற்கு வரலாறு சான்றாக விளங்குகின்றது.

முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் முழு மனித சமுதாயத்திற்கும் அருளாக வந்தவர்கள் என்ற வகையில் இன,மத,மொழி, பிரதேச வேறுபாடுகளையோ பாகுபாடுகளையோ பாராட்டாது எல்லோருக்கும் சமநீதியை வழங்க வேண்டுமென்பதில் விழிப்புடன் இருந்தார்கள். இதனால் எப்போதும் முஸ்லிம்களுடன், முஸ்லிமல்லாதாரின் பாதுகாப்பிற்கும் அன்னாரினால் பூரண உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

பின்வரும் சில நபிமொழிகள் இங்கு மேற்கோள் காட்டத்தக்கதாகும்.
  • "எவர் (முஸ்லிமல்லாத) உடன்படிக்கை செய்து கொண்டிருக்கின்ற ஒருவருக்கு அநீதியிழைக்கின்றாரோ அல்லது அவரின் உரிமையை குறைக்கின்றாரோ அலலது அவரது சக்திக்கு மேல் அவருக்கு பொறுப்புக்களை சுமத்துகின்றாரோ அல்லது அவரின் மனவிருப்பின்றி அவரிடம் இருந்து ஏதேனுமொன்றை பெறுகின்றாரோ அவருக்கு எதிராக மறுமையில் நான் வாதிடுபவனாக இருப்பேன்". (ஆதாரம்: அபூதாவூத்)
  •  "எவர் உடன்படிக்கை செய்து வாழும் ஒரு முஸ்லிமல்லாத ஒருவரைக் கொலை செய்கிறாரோ அவர் சுவனத்தின் வாடையைக் கூட நுகரமாட்டார்". (ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி)
  • "எவர் முஸ்லிமல்லாத சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை இம்சிக்கின்றாரோ நான் அவரது எதிரியாவேன். நான் எவரது எதிரியாக இருக்கின்றேனோ மறுமையில் அவருக்கெதிராக வாதிடுபவனாக இருப்பேன்". (ஆதாரம்: தாரீகு பக்தாத் – அல்கதீபுல் பக்தாதி)
  • "அநீதியிழைக்கப்பட்டவனின் பிரார்த்தனையைப் பயந்து கொள்ளுங்கள், அவன் ஒரு காபிராக இருப்பினும் சரியே. அதற்கும் அல்லாஹ்வுக்கு மிடையே எத்தகைய திரையுமில்லை". (ஆதாரம்: முஸ்னத் அஹ்மத்)
  • நாட்டில் சாதாரண பிரஜையான ஒரு யூதரிடம் அந்நாட்டை ஆளும் அரசரான நபி(ஸல்)அவர்கள், தன் போர்த்தளவாடங்களை அடமானம் வைத்து கடன் பெற்ற வரலாறு மிகவும் பிரபல்யமானது. (ஆதாரம்: புகாரி)
இனி இறுதியாக, முஸ்லிம்களையும் முஸ்லிம் அல்லாதவரையும் படைத்த அல்லாஹ் முஸ்லிம்களுக்கு சொல்வது...
  • ''நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்".  (அல்குர்ஆன்:5:32)
  • "ஒரு சமூகத்தின் மீதுள்ள வெறுப்பானது அவர்களுடன் நீங்கள் நீதியாக நடந்து கொள்வதற்கு தடையாக அமையக்கூடாது. நீங்கள் நீதியாக நடந்து கொள்ளுங்கள். அது தக்வாவுக்கு மிக நெருங்கிய நிலையாகும்". (அல்குர்ஆன்- 5:8)
  • "உங்களுக்கு எதிராக மார்க்க விடயத்தில் போராடாத, உங்கள் இல்லங்களை விட்டும் உங்களை வெளியேற்றாதவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதனையும் அவர்களுக்கு நீதி வழங்குவதனையும் அல்லாஹ் தடைசெய்யவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துபவர்களை விரும்புகிறான். நிச்சயமாக எவர் உங்களுக்கெதிராக மார்க்க விடயத்தில் போராடி உங்கள் இல்லங்களை விட்டும் உங்களை வெளியேற்றி, நீங்கள் வெளியேற்றப்படுவதற்கு உதவியும் செய்தார்களோ அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்வதனைத்தான் அல்லாஹ் தடுக்கின்றான்". (அல்குர்ஆன்- 60: 8 & 9)

10 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...