ஒரு குற்றம் நடந்த அன்றே, வெறும் வெற்று பரபரப்புக்காக ஊடகங்களே தம்
யூகத்தால் "முதல் தீர்ப்பை" நான் முந்தி நீ முந்தி என்று செய்தியாக எழுதி விடுகின்றன. முதல் நாள் சொன்ன தீர்ப்பை அடுத்தடுத்த நாள் ஊதி பெரிதாக்குகின்றன. பின்னர் அதன்மீதே மற்ற அனைத்து செய்திகளையும் 'ஆதாரங்களாக' கட்டமைக்கின்றன. இந்நிலையில்... பல
தரப்பு வாதங்கள், விசாரணைகள், சாட்சிகள், ஆதாரங்கள் அடிப்படையில் அலசி
ஆய்ந்து... ஒரு நீதிபதியால் அந்த ஆரம்ப 'ஊடக தீர்ப்பை'... sorry... 'ஊடக திரிபை' மாற்றி... இப்போது உண்மையை தீர்ப்பாக
எழுதி தர்மத்தை நிலைநாட்ட முடிவதில்லை..! இதற்கு அரசும் ஆதரவாக இருக்க முடிவதில்லை. It is really pathetic now a days..!
இதோ... மற்றுமோர் உதாரணம்..! கேரளாவில்... இருவாரம் முன்னர், பல ஊடகங்களில் ஒரு பரபரப்பு செய்தி வந்தது. அந்த செய்தி இதுதான்.
கல்லூரி மாணவி அம்ரிதா மோகன் |
திருவனந்தபுரத்தில் கல்லூரி மாணவி 'அம்ரிதா மோகன்' என்பவர் தன் தோழிகளுடனும், குடும்பத்தினருடனும் அருகில் உள்ள ஓட்டலுக்கு சென்றார். ஓட்டலில் குடும்பத்தார் வந்த ஜீப் மற்றும் தோழிகளுடன் வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். பார்க்கிங்கில் இருந்த இரு இளைஞர்கள் நடனம் ஆடி ஆபாச சொற்கள் பேசி ஈவ் டீசிங் செய்தனர். இதனால் ஆவேசமான அம்ரிதா விறுவிறு வென்று இளைஞர்களை நோக்கி பாய்ந்து சென்று அவர்களை தான் கற்றிருந்த கராத்தே மற்றும் களரி வித்தைகள் மூலம் அடித்தார். மாணவியுடன் தந்தையும், குடும்பத்தினரும், தோழிகளும் சேர்ந்து அவர்களை அடித்து விரட்டினார்கள். பின்னர் இளைஞர்கள் பற்றி அம்ரிதா போலீசில் புகார் செய்தார். கராத்தே / களரி தற்காப்பு கலை தக்க சமயத்தில் துணிச்சலை வரவழைத்து உதவி செய்ததாக மாணவி அம்ரிதா பெருமையுடன் ஊடக பேட்டியில் கூறினார். 20 வயதாகும் அம்ரிதா பி.ஏ. படித்து வருகிறார்.
பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோரிடம் இருந்து தன்னை காத்துக்கொள்வதில் கொலையே செய்து இருந்தாலும் நீதி மன்றம் அப்பெண்ணை மன்னிக்கத்தான் செய்யும்..! சமீபத்தில் டெல்லி மாணவி கொடூர கொலையை கண்டு வந்த மக்களுக்கு இந்த மாணவி நிச்சயமாக சாதித்த பெண்மணியாகத்தான் மனதில் பதிவார் என்பதில் சிறிதும் ஐயமில்லை..! இதனை நன்கு புரிந்து கொண்டண ஊடகங்கள்..! உடன் செய்தி சமைக்க ஆரம்பித்தன, டிஆர்பி எகிறியது..!
பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோரிடம் இருந்து தன்னை காத்துக்கொள்வதில் கொலையே செய்து இருந்தாலும் நீதி மன்றம் அப்பெண்ணை மன்னிக்கத்தான் செய்யும்..! சமீபத்தில் டெல்லி மாணவி கொடூர கொலையை கண்டு வந்த மக்களுக்கு இந்த மாணவி நிச்சயமாக சாதித்த பெண்மணியாகத்தான் மனதில் பதிவார் என்பதில் சிறிதும் ஐயமில்லை..! இதனை நன்கு புரிந்து கொண்டண ஊடகங்கள்..! உடன் செய்தி சமைக்க ஆரம்பித்தன, டிஆர்பி எகிறியது..!
அடுத்தடுத்த நாட்கள் இப்படியாக பல ஊடகங்களில் இந்த செய்திகள் வர வர இந்த கல்லூரி மாணவியின் புகழ் பாரெங்கும் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது.
ஈவ் டீசிங் பண்ணிய கொடூரர்களை, அரக்கர்களை, மனித மிருங்களை, பாலியல் வன்முறை யாளர்களை, பெண் தொல்லையர்களை (மீடியாவின் விதவிதமான இழிவு பட்டங்கள்தான்) அடித்து விரட்டியதால்... வீராங்கனை, இரும்பு பெண்மணி, அஞ்சா நெஞ்சி, பெண்ணுக்கு இலக்கணம், வீரத்திலகம், பாயும் புலி, சீறும் சிறுத்தை என்றெல்லாம் மீடியா தயவால் விதவிதமான சிறப்பு பட்டம் சேர்ந்து கொண்டது.
இந்த வீராங்கனைக்கு பள்ளி, கல்லூரி, மாதர்
சங்கம், ரோட்டரி கிளப் என எங்கும் பல பாராட்டு விழா கூட்டங்கள். மாநில
அமைச்சரே வீடு தேடி நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார். பல ஒளி ஊடகங்களின் ஸ்பெஷல் ஷோ பேட்டிகள், வார இதழ்கள் பேட்டிகள் என்று அவ்வாரம் இவர் புகழின்
உச்சத்தில் இருந்தார். கராத்தேயும் களரியும் கூட சைடில் புகழ்பெற்றது.
.
இப்படித்தான், இவரின் புகழை மீடியா உயர்த்த உயர்த்த... அந்த இளைஞர்கள் நாளுக்கு நாள் கேவலப்பட்டு பெரிய வில்லனாகிப் போனார்கள்.
இப்படித்தான், இவரின் புகழை மீடியா உயர்த்த உயர்த்த... அந்த இளைஞர்கள் நாளுக்கு நாள் கேவலப்பட்டு பெரிய வில்லனாகிப் போனார்கள்.
இதற்கிடையில், அவர்களுக்கு இந்த கராத்தே அடி எல்லாம் போதாது, சட்டப்படியும் தண்டனை தர வேண்டும் என்ற பலரின் ஊடக கோரிக்கை விளைவால், அவர்களை தேடும் பணி தொடங்கியது. ஒருவனை பிடித்துள்ளார்கள். விசாரிக்கிறார்கள். இன்னொருவனை தேடி வருகிறார்கள் என்று பல செய்திகள்.
இதோடு ஒருவழியாக பெரும்பாலான ஊடகங்களில் செய்தி முடிவு பெற போகும் சமயம்... அப்போதுதான், விஷயம் வேறு மாதிரி போனது..!
தேடிப்பிடிக்கப்பட்ட அந்த இளைஞர் மூலம் வந்த செய்தி யாதெனில், அவர் செமை அடி வாங்கி உள்ளார். மூக்கு எலும்பு உடைந்து உள்ளது. ஆஸ்பத்திரியில் இருந்த அவரை போலீஸ் விசாரித்ததில் அவர், அம்ரிதா மீது அவருடைய புகாரை அளித்தார். இப்போது, இவர் தரப்பு போலீஸ் செய்தியை பார்ப்போம்.
திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு இவரும் இவருடைய நண்பரும் சென்றார்கள். இவர்கள் இருவரும் அரசின் IT@School project இல் தற்காலிக வாகன ஓட்டுனர்கள். அப்போது அரசு வாகனத்தை அங்கு பார்க்கிங் செய்வதில் இவர்களுக்கும் அவருடைய பெற்றோருக்கும் சிறுவாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த அமிர்தா, தம் தந்தை சார்பாக அந்த இருவரையும் தான் கற்ற கராத்தே களரி வித்தை கொண்டு மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டு கடுமையாக தாக்கியுள்ளார். இதில் அவரது மூக்கு உடைபட்டு ரத்தம் கொட்டியுள்ளது. மற்றவருக்கு வேறு வகை காயம். காயமடைந்த இருவரும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த
பிரச்சனை விவகாரமாக உருவெடுக்கும் முன்னரே அமிர்தா உடனடியாக காவல்நிலையம் சென்று தன்னை இரண்டு பேர் பாலியல் தொந்தரவு செய்ததாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த போது
அவர்கள் தன்னையும் தன்னுடைய பெற்றோரை ஆபாசமாக திட்டியதாகவும் அடிக்க வந்தோரை தற்காப்பிற்காக
இருவரையும் தாக்கியதாகவும் புகார் செய்து அவர்களை முந்திக்கொண்டார்..!
வழக்கம்போலவே ஊடகங்களும் உண்மை நிலை அறியாமல், அம்ரிதாவின் ஒரு பக்க வாதத்தை மட்டுமே வைத்து, அதை மட்டுமே உண்மை என நம்பி சகட்டுமேனிக்கு அந்த பெண்ணை அளவில்லாமல் ஆதரித்து அவரை கதாநாயகியாக சித்தரித்தும் அந்த இளைஞர்களை அவர் தரப்பு வாதத்தை கேட்காமல், காமகொடூர வில்லன்களாகவும் சித்தரித்து செய்திகள் சமைத்து வெளியிட்டன. விளைவு இந்த இரு இளைஞர்களும் ஓட்டுனராக வேலை செய்து வந்த அரசுப்பணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தை விசாரிக்ககோரி அமிர்தாவிற்கு எதிராக இளைஞர்கள் காவல்நிலையத்தில் மேல்முறையீடு செய்ய இதனை விசாரிக்க தனிக்குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு அளித்த அறிக்கையில் தவறு முழுக்கமுழுக்க அமிர்தா தரப்பில் உள்ளதாகவும் அவர் தகுந்த காரணம் ஏதும் இல்லாமல் தன்னுடைய கராத்தே களரி பயிற்சியை அந்த இளைஞர்கள் மீது பிரயோகித்த தாகவும் தெரிவித்துள்ளனர்.
அந்த இரு சாதாரண இளைஞர்கள், தோழிகளுடன் குடும்பத்துடன் உள்ள ஒரு பெண்ணை பாலியல் சீண்டல்கள் செய்திருக்க வாய்ப்பு இருக்குமா என்ற ஐயம் இப்போது நமக்கு எழுகிறது அல்லவா..?
வழக்கம்போலவே ஊடகங்களும் உண்மை நிலை அறியாமல், அம்ரிதாவின் ஒரு பக்க வாதத்தை மட்டுமே வைத்து, அதை மட்டுமே உண்மை என நம்பி சகட்டுமேனிக்கு அந்த பெண்ணை அளவில்லாமல் ஆதரித்து அவரை கதாநாயகியாக சித்தரித்தும் அந்த இளைஞர்களை அவர் தரப்பு வாதத்தை கேட்காமல், காமகொடூர வில்லன்களாகவும் சித்தரித்து செய்திகள் சமைத்து வெளியிட்டன. விளைவு இந்த இரு இளைஞர்களும் ஓட்டுனராக வேலை செய்து வந்த அரசுப்பணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தை விசாரிக்ககோரி அமிர்தாவிற்கு எதிராக இளைஞர்கள் காவல்நிலையத்தில் மேல்முறையீடு செய்ய இதனை விசாரிக்க தனிக்குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு அளித்த அறிக்கையில் தவறு முழுக்கமுழுக்க அமிர்தா தரப்பில் உள்ளதாகவும் அவர் தகுந்த காரணம் ஏதும் இல்லாமல் தன்னுடைய கராத்தே களரி பயிற்சியை அந்த இளைஞர்கள் மீது பிரயோகித்த தாகவும் தெரிவித்துள்ளனர்.
அந்த இரு சாதாரண இளைஞர்கள், தோழிகளுடன் குடும்பத்துடன் உள்ள ஒரு பெண்ணை பாலியல் சீண்டல்கள் செய்திருக்க வாய்ப்பு இருக்குமா என்ற ஐயம் இப்போது நமக்கு எழுகிறது அல்லவா..?
இதனை நன்கு விசாரித்த நீதிபதி, அமிர்தா, அவரின் தந்தை மோகன், அவரின் நண்பர் வில்லியம், மற்றும் அம்ரிதாவின் இரு தோழிகள் ஆகிய ஐவர் மீதும், அரசுப்பணியாளர்கள் மீது கொலைவெறி தாக்குதல் தொடுத்தல், அரசுப்பணிக்கு இடையூறு விளைவித்தல் போன்றவற்றில் வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு அதிரடியாக
உத்தரவிட்டார்.
ஆனால், நேற்று வரை கதாநாயகியாக வலம் வந்தவரை இன்று வில்லியாக்குவதா...? நேற்று வரை கொடூர வில்லன்களாகவே சித்தரிக்கப்பட்டவர்களை இன்று கதா நாயகர்கள் ஆக்குவதா..? என்று ஊடகங்களுக்கு புது குழப்பம் வந்தது..!
எனவே, தமது தன்மானத்தை காக்கும் பொருட்டாக, இந்த விஷயத்தையும் ஊடகங்கள் ஜோடனை செய்து நீதிபதியை 'பெண்ணாடிமைத்தனத்தை ஆதரிப்பவர்', 'ஆணாதிக்கவாதி', 'பெண்ணுரிமைக்கு எதிரான தீர்ப்பு' என்று விமர்சனம் செய்ய ஆரம்பித்து விவாதம் நடத்தியது. மீண்டும் அதிக டிஆர்பி எகிறல்..! பெண்ணிய அமைப்புகள் எதிர்க்கின்றன..!
அரசும் ஏற்கனவே இந்த பெண்ணுக்கு கடும் ஆதரவு தெரிவித்து இருந்ததால்... விளைவு..? அந்த நீதிபதியும் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்..! ஊடகத்தால் சமைக்கப்பட்ட மக்கள் மன ஓட்டத்துக்கு மாற்றாக ஏதும் செய்ய முடியாத நிலையில்தான் அரசும் இருக்க வேண்டி உள்ளது..! மக்கள் ஓட்டு முக்கியமாயிற்றே..! இது மோசமானநிலை.
மிக மிக சில ஊடகங்கள் மட்டும்
விதிவிலக்காக உண்மை நிலையை ஆராய்ந்து வெளியிட்டு வருகின்றன என்பதை நாம் அறிவோம். ஆனால், பெருவாரியான முன்னணி ஊடகங்களின் இந்த விஷமச்செயலால்... அரசு வேலையும் போய், பாவம் ஒருபக்கம் பழி ஒரு பக்கம் என்று... காமகொடூரன் என்ற அவப்பெயரும் வாங்கி, அந்த இளைஞர்கள்
அவதிப்பட்டு வருகின்றனர்..! இவர்களுக்காக இவர்களின் தரப்பு நீதியை நிலைநாட்ட முயற்சித்த காவல்துறையினரும் நீதிபதியும் கூட அரசால் பந்தாடப்படுகின்றனர் என்றால்...
இதற்கெல்லாம் மூல காரணம் யார்..?
இதற்கெல்லாம் மூல காரணம் யார்..?
ஆகவே, நம் நாட்டில் எந்த ஒரு குற்றத்துக்கும், செய்தி என்ற பெயரில் முதல் தீர்ப்பை எழுதுவது ஊடகங்களே என்ற துர் நிலைக்கு நாம் வந்து விட்டோம்..! மக்கள் மனதில் நன்கு பதிந்து விட்ட இந்த செய்தியை... மன்னிக்கவும், 'நீதியை' மாற்ற ஒரிஜினல் நீதி மன்றமே எவ்வளவு கஷ்டப்படுகிறது... பாருங்கள் சகோஸ்..!
அப்சல் குருவுக்கு எதிரான 'கூட்டு மன சாட்சி' உருவாக்கப்பட்டது, நடுநிலை அற்ற ஒரு பக்க சார்பு ஊடகங்களால் தான்..! அதற்கு ஜீ தொலைக்காட்சி ஆவணப்படம் எடுத்து வாஜ்பாய் அத்வானி சப்போர்ட்டுடன் தலைமை தாங்கியது. அதனால்தான், அந்த நீதிபதியே கூட சட்டப்படி அல்லாது அந்த ஆவணப்படத்தின் பாதிப்பில் விளைந்த "இந்திய கூட்டு மனசாட்சியை திருப்திப்படுத்தும்" அடிப்படையில் தீர்ப்பு வழங்குவதாக கூறியிருக்கலாம்..! ஒருவேளை மாற்றி மட்டும் தீர்ப்பு சொல்லி இருந்தால்... 'பாக்கிஸ்தானின் கைக்கூலி', 'பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் துரோகி', 'தேசப்பற்று அற்றவர்' என்றெல்லாம் இந்த நாக்கில் நரம்பில்லாத ஒரு சார்பு ஊடகங்கள் அவரை நிச்சயமாக சொல்லி இருக்கும்..! ஆக, ஊடகம் சமைத்துவைத்த அரசு மற்றும் மக்கள் மனோவிருப்பப்படி உச்ச நீதி மன்றமும் தீர்ப்பு வழங்கும் காலமும் வந்தாயிற்று..! இது மிகவும் மோசமான நிலை.
ஒவ்வொரு குண்டு வெடிப்புக்கு பின்னரும் இப்படித்தான் ஒரு பக்க சார்பு செய்திகள், ஊடகங்களால் சமைக்கப்படுகின்றன. எப்படி நியூஸ் சொன்னால் போனியாகுமோ, எதை சொன்னால் தமது டிஆர்பி எகிருமோ அப்படித்தான் அதைத்தான் நியூஸ் சொல்கின்றன..! எது உண்மை எது பொய் என்பது பற்றி பெருவாரியான ஊடகங்களுக்கு கவலையே இல்லை..!
இறுதியில் அவர்கள் சொன்ன செய்திகளுக்கு முற்றிலும் மாற்றமாக அவர்களால் சித்தரிக்கப்பட்ட வில்லன்கள் எல்லாம் 'நிரபாராதிகள்' என்று ஒரு சில நேர்மையான சிறந்த நீதிபதிகளால் விடுவிக்கப்படும் போது, அதை அதேபோல தலைப்புச்செய்திகளில் சொல்ல வெட்கப்படுகின்றன. அல்லது நீதிபதியை அவதூறு செய்கின்றன..!
2000 துவக்கத்தில், முகத்தை மறைத்து கண்களை மட்டும் காட்டும் ஒரு கருப்பு புருக்கா போட்ட பெண் புகைப்படத்தை காட்டி... தமிழ்நாட்டில் "மனித வெடிகுண்டு ஆயிஷா, இவர்தான்..!" என்று தலைப்புச்செய்திகளில் ஊடகங்கள் அலறின. மொத்த நாடும் அது போன்ற ஆடை உடுத்திய முஸ்லிம் பெண்களை பயங்கரவாதிகளாக பார்த்தன. முஸ்லிம் பெண்களின் முகத்திரையை கழற்றிப்பார்த்துவிட்டு, கையில் உள்ள ஆயிஷாவின் முகத்திரை அணிந்த போட்டோவை வைத்துக்கொண்டு "சரி, போ... முகத்திரை இல்லாத நீ ஆயிஷா இல்லை" என்ற வயிறு எரியும் வேதனை காமடி கூத்துக்கள் ஒவ்வொரு போலீஸ் செக் போஸ்டிலும், டிராஃபிக் சிக்னலிலும் அரங்கேறின..! ஆனால், 'அது போலி நியூஸ்', 'மனித வெடிகுண்டு உண்மை அல்ல' என்று போலிஸே சொன்ன போது, அந்த உண்மையை ஊடகங்கள் சொல்ல வெட்கப்பட்டு அப்டியே அமுக்கின..!
இதோ... இந்த ஹைதராபாத் குண்டு வெடிப்பில் கூட...
முதன் முறையாக 'ஸ்லீப்பர் செல்கள்' வந்து விட்டனர். சினிமாவை சினிமாவாக பார்க்காத ஊடகங்கள் 'துப்பாக்கி' படத்தின் கதையை ஹைதராபாத் குண்டு வெடிப்பு செய்திகளில் ரீல் ஓட்டிக்காண்பிக்க ஆரம்பித்து விட்டனர்.
அந்த 'ஊடக துப்பாக்கியின்' முதல் ரீலே....... பிக் ஃப்ளாப்...!
பாகிஸ்தானில் பயிற்சி பெற்று இங்கே ஹைதராபாத் வந்து மக்களோடு மக்களாக வாழ்ந்து குண்டு வைத்த ஓர் 'இந்தியன் முஜாஹிதீன் ஸ்லீப்பர் செல்' என்று ஒருவரின் புகைப்படத்தை முஸ்லிம் என்று சொல்லி போட்டார்கள். பல ஊடகங்களில் இந்த ஃபோட்டோ வர...
அய்யகோ... அந்தோ பரிதாபம்..!
அந்த நபர் பாகிஸ்தானின் ஓர் அரசியல் கட்சியின்
தலைவர். சிந்து மாகாண சட்டமன்ற உறுப்பினர்..! ஆனால், இவர் சில மாதங்களுக்கு
முன்னரே ஒரு பாகிஸ்தானிய தலிபான் அமைப்பால் கராச்சியில்
சுட்டுக்கொல்லப்பட்டு, பப்ளிக்காக அடக்கம் செய்யப்பட்டு விட்டவர்..!!! (பாக். செய்தி தள சுட்டி)
"போனமாசம் எங்க நாட்டில் செத்து அடக்கப்பட்டவன், எப்படிடா உங்க நாட்டில் வந்து குண்டு வைப்பான்..? மயான குழியிலிருந்து எழுந்து வந்தா..?"
-----என்று அந்த கட்சியினர் கொந்தளிப்பு அடைய, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இந்தியாவை மன்னிப்பு கேட்க சொல்ல, உடனே தவறு உணர்ந்து நாம் மன்னிப்பு கேட்டு..... எதற்கு நமக்கு இந்த அவமானம் ஊடகங்களே..?
-----என்று அந்த கட்சியினர் கொந்தளிப்பு அடைய, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இந்தியாவை மன்னிப்பு கேட்க சொல்ல, உடனே தவறு உணர்ந்து நாம் மன்னிப்பு கேட்டு..... எதற்கு நமக்கு இந்த அவமானம் ஊடகங்களே..?
ஜனநாயகத்தின் ஒரு தூணாக உம்மில் பெரும்பாலோர் இல்லை..! மீதி தூண்களையும் வெட்டும் கோடரியாகத்தான் உம்மில் பெரும்பாலோர் இருக்கிறீர்கள்..! செய்திகளை நடுநிலையாக தாருங்கள். ஒரு பக்க சார்பாக சமைக்காதீர்கள். குற்றங்களில் தீர்ப்பு எழுதும் அதிகப்பிரசங்கி வேலை உங்களுக்கு இனி வேண்டாம்..! தயவு செய்து திருந்துங்கள் ஊடகங்களே..!
எப்பொருள் யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
---திருவள்ளுவர்
---திருவள்ளுவர்
செய்தியை சொல்லும் ஊடகம் அப்படி மெய்ப்போருள் காணாவிட்டால்...?
(உண்மையை ஆராயாமல்) ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(ஹதீஸ்நூல்: முஸ்லிம் 6)
18 ...பின்னூட்டங்கள்..:
ஊடகத்தினால்தான் என் வாழ்க்கையே கெட்டுப் போச்சு. ஆயிஷா சித்திகா (மனிதவெடிகுண்டு ஆயிஷா).
“என்னை சங்கீதா, ஆயிஷா, ஆயிஷா சித்திகான்னு எல்லாம் சொன்னா யாருக்கும் தெரியாது. கோவை மனிதவெடிகுண்டு ஆயிஷா சித்திகான்னு சொன்னாத்தான் எல்லோருக்கும் தெரியும்.
ஏன்னா அதுதான் என் பட்டப்பெயர்.
டிகிரி படிச்சு முடிச்சிருக்கேன். ஆனா அது என் பட்டமில்ல.
19 வயது முடிந்த பிறகு, சுய மரியாதையோடு வாழ்வதற்காக சுயமாக சிந்தித்து, இஸ்லாத்தை என்னுடைய மார்க்கமாக தேர்ந்தெடுத்ததற்காக ஓர் இறை கொள்கையை தேர்வு செய்ததற்காக, எனக்கு தமிழக அரசு வழங்கிய பட்டம்தான் "மனித வெடிகுண்டு'.
என் கணவரை நானே தேர்ந்தெடுத்ததற்கு இருந்த எதிர்ப்பின் காரணமாக, நானும் என் கணவரும் சென்னைக்கு குடிபெயர்ந்தோம். அங்கு என் கணவரின் நண்பர் ஒருவரது வீட்டில் அடைக்கலம் புகுந்தோம். பின் வேறொரு வீட்டிற்கு மாறிச் சென்றுவிட்டோம்.
அந்த நண்பர் பின் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடையவராக இருக்கலாம் என சந்தேகித்து அவரைத் தேடி வந்தார்கள்.
அவரின் வீட்டில் குடியிருந்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக, இன்றுவரை வாழ்க்கையில் துரத்தப்படுகிறோம்.
100 கிலோ வெடிகுண்டை தூக்கிக்கொண்டு மனித வெடிகுண்டாக அத்வானியைக் கொல்ல நான் போனேனாம். அதுவும் வெறும் 40 கிலோ எடை கொண்ட நான்!
எந்தவித வெளி உலக அறிவுமற்ற ஒரு ஜீரோவாகத்தான் நான் இருந்தேன், என்னை கைது செய்வதற்கு முன்.
இன்றைக்கு நினைத்தாலும் வயிறு பற்றி எரிகிறது.
முஸ்லிம்களென்றாலே தீவிரவாதிகள் என்ற போக்கு தற்போது மாறிவருகிறது. ஆங்கில ஊடகங்களை கவனித்தால் தெரியும்.
ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளெல்லாம் எந்த அளவிற்கு திட்டமிட்டு, எங்களை சிக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரியும்.
அவர்களை கைது செய்வதற்கோ, அவர்களை ஒடுக்குவதற்கோ இந்த அரசாங்கத்திடம் எந்த சக்தியும் இல்லை.
ஆயிரம் பீரங்கிகளுக்கு கூட நான் பயப்படமாட்டேன்; ஆனால் ஒரு பத்திரிகையைப் பார்த்தால் பயம் என்று ஹிட்லர் சொன்னான்.
அந்த பத்திரிகை என்னைப்படுத்திய பாட்டை சொல்லி மாளாது.
அன்று உங்கள் கற்பனைக்கெல்லாம் என்னை தீனியாக்கினீர்கள்.
அதனுடைய விளைவை இன்று வரை நான் சந்தித்து வருகிறேன். நிராதரவாக நிற்கிறேன்.
ஆனால் நான் தோற்றுப் போக மாட்டேன். நான் வாழ்ந்து காண்பிப்பேன். எந்த நாடு, எந்த சமூகம் என்னை இழிவுபடுத்தியதோ, இன்று எதைக்கொண்டு தோற்கடிக்க வேண்டுமென்று எனக்குத் தெரியும்.
எந்த சட்டம் என்னை ஒடுக்கியதோ, வருங்காலத்தில் என் மகனைக் கொண்டு இந்த சட்டத்தை சீர்தூக்கி, யாருக்கெல்லாம் நீதி கிடைக்க வேண்டுமோ அவர்களுக்கெல்லாம் கிடைக்கச் செய்வேன்.
என் கணவரை சென்னையில் சிறையில் அடைத்திருந்தனர். அவரைப் பிரிந்ததோடு, என் குழந்தையையும் சிறையில் வைத்திருந்தேன். சிறையில் குழந்தை இருக்க வேண்டாமென்று என் மாமியாரிடம் கொடுத்துவிட்டேன். ஆனால் நாங்கள் வெளியில் வந்தபோது, அக்குழந்தைக்கு தாய் தந்தையே அடையாளம் தெரியவில்லை.
இதைவிடக் கொடுமை என்ன இருக்க முடியும்?
ஊடகத்தினால்தான் என் வாழ்க்கையே கெட்டுப் போச்சு.
சட்டம் எந்தவித உதவியும் செய்யல.
சிறை வாழ்க்கையில் என் அளவிற்கு பாதிக்கப்பட்ட ஒரு முஸ்லிம் சகோதரி இந்த தமிழ்நாட்டில் இருக்க முடியாது.
என்னால பாதிக்கப்பட்டது இந்த முஸ்லிம் சமுதாயம்னு கூட சொல்லலாம்.
“நீதான் அந்த ஆயிஷாவா? உன்னாலதான் எங்களுக்கு இத்தனை தொல்லையா?
வீடெல்லாம் புகுந்து ரெய்ட் பண்ணாங்க. ட்ரெஸ் எல்லாம் கழட்டிப்பாத்தாங்க. மதர்ஷாவில் புகுந்து புர்கால்லாம் கழட்டிப்பாத்தாங்க. தனித்தனியா கூப்பிட்டு அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் திட்டியதெல்லாம் உன்னாலதானா'' என்று கேட்கிறார்கள். நான் என்ன பாவம் பண்ணேன்? எனக்குத் தெரியல. - ஆயிஷா சித்திகா
முஸ்லிம் இளைஞர்களை சிறையில் அடைத்தது தெரியாதாம்! –
மத்திய அரசு!
மத்திய அரசின் நிலைப்பாடு தேசத்திற்கு அவமானம்
27 Feb 2013
புதுடெல்லி:தீவிரவாதிகளாக முத்திரைக் குத்தி ஏராளமான முஸ்லிம் இளைஞர்களை சிறையில் அடைத்தது தெரியாது என்று மத்திய அரசு கூறுகிறது.
மத்திய அரசின் நிலைப்பாடு தேசத்திற்கு அவமானம் என்று முஸ்லிம் லீக் எம்.பி இ.டி.முஹம்மது பஷீர் தெரிவித்துள்ளார்.
நேற்று மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பியான பசுதேவ் பட்டாச்சார்யா இதுக்குறித்து கேள்வி ஒன்றை எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் கூறுகையில், “மத்திய அரசுக்கு இக்காரியம் தெரியாது.
உதாரணம் ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவேண்டும்” என்று தெரிவித்தார்.
இதுபோல ஏராளமான புகார்கள் கிடைத்துள்ளன என்று பட்டாச்சார்யா பதிலளித்தார்.
இவ்விவகாரத்தில் தலையிட முஸ்லிம் லீக் எம்.பியான இ.டி.முஹம்மது பஷீர் சபாநாயகருக்கு குறிப்பை வழங்கினார்.
இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி இதுக்குறித்து கூறியது: “அப்பாவிகளான ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாத முத்திரைக் குத்தப்பட்டு இந்தியாவின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இது தெரியாது என்று மத்திய அரசு கூறுவது தேசத்திற்கே அவமானம்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞர்கள் குறித்து ஏராளமான சம்பவங்கள் தெரியும். 20 வயது முதல் 30 வயது வரையிலான ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் மிகப்பெரிய தீவிரமான பிரச்சனையில் பதில் அளித்த அமைச்சரின் அணுகுமுறை என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
எனது தொகுதியில் கூட ஸக்கரியா என்ற 28 வயது முஸ்லிம் இளைஞரை கர்நாடகா போலீஸ் பிடித்துச் சென்று சிறையில் அடைத்து 4 ஆண்டுகள் ஆகிறது.
விசாரணை கைதிகளாக இந்திய சிறைகளில் வாடும் இத்தகைய நபர்களுக்கு 10 ஆண்டுகள் கழிந்த பிறகும் குற்றப்பத்திரிகை கூட அளிக்கப்படவில்லை.
நிரபராதிகளின் விவகாரத்தில் அரசு என்னச் செய்யப் போகிறது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.
மனித உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகளுக்கு சவால் விடுக்கும் பொடா, தடா போன்ற சட்டங்களில் உள்ள கடுமையான பிரிவுகள் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தில் உள்ளன என்று இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி கூறினார்.
இதனைத் தொடர்ந்து பதிலளித்த அமைச்சர், “ஆறுமாதத்திற்குள் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்காவிட்டால் ஜாமீன் வழங்க தகுதி உண்டு” என்று தெரிவித்தார்.
- See more at: http://www.thoothuonline.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af/#sthash.XqPiIXZa.dpuf
முஸ்லிம் இளைஞர்களை சிக்கவைக்க அரசு சதிச் செய்கிறது – பெங்களூர் தீவிரவாத ஜோடிப்பு வழக்கில் விடுதலையான முதீவுர் ரஹ்மான் சித்தீகி!
27 Feb 2013
பெங்களூர்:கல்வியாளர்களும், உயர் துறைகளில் பணியாற்றுவோருமான முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாத வழக்குகளில் சிக்க வைக்க அரசும், உளவுத்துறையும் சூழ்ச்சிச் செய்வதாக பெங்களூரில் நேற்று முன் தினம் விடுதலையான டெக்கான் ஹெரால்ட் பத்திரிகையாளர் முதீவுர் ரஹ்மான் சித்தீகி தெரிவித்துள்ளார்.
மூத்த பத்திரிகையாளர்கள் உள்பட சமூகத்தில் உயர் அந்தஸ்தில் உள்ளவர்களை கொலைச் செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி கர்நாடகா பா.ஜ.க அரசு முதீவுர் ரஹ்மான் சித்தீகி உள்பட 12 பேரை கைதுச் செய்து சிறையில் அடைத்தது.
தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய சேல்ஸ்மான் முஹம்மது யூசுஃப் நல்பந்தியும் சித்தீக்குடன் விடுதலையாகியுள்ளார்.
நேற்று குடும்பத்தினருடன் பெங்களூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் முதீவுர்ரஹ்மான் சித்தீகி கூறியது: என்னுடன் கைது செய்யப்பட்ட அனைவரும் நிரபராதிகள் என்று நான் கருதுகிறேன்.
போலீஸ் கஸ்டடியில் கடுமையான மனோரீதியான சித்திரவதைகளை சந்திக்க நேர்ந்தது.
கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி துப்பாக்கிகளுடன் எங்களை பிடித்ததாக போலீஸ் கூறியது.
ஆனால், இரவில் அறைக்குள் நுழைந்து போலீஸ் என்னையும் இதர நான்குபேரையும் கடத்திச் சென்றது.
சிறையில் யாரையும் சந்திக்க அனுமதிக்கவில்லை. என்.ஐ.ஏ உள்ளிட்ட புலனாய்வு ஏஜன்சிகள் விசாரணை நடத்தின.
ஆனால், அவர்களின் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய் என்று தெரியவந்தது.
பத்திரிகை துறையில் தொடருவீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த முதீவுர் ரஹ்மான் சித்தீகி கூறுகையில், “போலீசும், அரசும், பாசிச சக்திகளும் சேர்ந்து எங்களை வழக்கில் சிக்க வைத்துள்ளனர்.
தற்போது குடும்பத்தினருடன் செலவிட விரும்புகிறேன். மனித உரிமை கமிஷனின் உதவியுடன் சட்டரீதியான போராட்டம் தொடரும். இவ்வாறு சித்தீகி கூறினார்.
லஷ்கர்-இ-தய்யிபா, ஹுஜி போன்ற போராளிக் குழுக்களின் தலைமையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல்களுக்கு சதித் திட்டம் தீட்டினார்கள் என்று குற்றம்சாட்டி போலீஸ் கைதுச் செய்த 2 பேர் ஆறு மாத சிறைக்குப் பிறகு ஆதாரங்கள் எதுவுமில்லை என்று என்.ஐ.ஏ கண்டறிந்த பிறகு விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கில் கைதான டி.ஆர்.டி.ஒ விஞ்ஞானி இஜாஸ் அஹ்மத் மிர்ஸாவுக்கு எதிராகவும் ஆதாரங்கள் எதனையும் கண்டுபிடிக்க என்.ஐ.ஏவால் இயலவில்லை.
- See more at: http://www.thoothuonline.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/#sthash.3GcyULhx.dpuf
பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்த இந்தியா பணம் அளிக்கிறது: ஹகெல்! – இந்தியா எதிர்ப்பு! .
27 Feb 2013
வாஷிங்டன்:பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்களை நடத்த இந்தியா பணம் அளிக்கிறது என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ள சக் ஹகெல்(chuck hagel) கூறியுள்ளார்.
2011 ஆம் ஆண்டு ஒக்லஹாமா காமரன் பல்கலைக் கழகத்தில் ஹகெல் ஆற்றிய உரையின் வீடியோவை வாஷிங்டன் ஃப்ரீ பியாகன் வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் எல்லையில் பிரச்சனையை உருவாக்க இந்தியா பல வருடங்களாக ஆப்கானில் பணம் செலவழிக்கிறது என்று ஹகேல் கூறுகிறார்.
இக்குற்றச்சாட்டுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ள இந்திய தூதரகம், ஹகேலின் கூற்று உண்மைக்கு புறம்பானது என்று கூறியுள்ளது.
ஆப்கான் மக்களின் அமைதியும், நலனும்தான் இந்தியாவின் நோக்கம். அமெரிக்காவும்(?) இந்தியாவும் இந்த லட்சியத்திற்காகத்தான் செயல்படுகின்றனர். தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை அதிபர் ஒபாமா பல முறை பாராட்டியுள்ளார் என்று இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
பாரக் ஒபாமாவால் பாதுகாப்பு துறை செயலாளர் பதவிக்கு முன்மொழியப்பட்டவர் ஹகேல்.
இவருக்கு எதிராக குடியரசுக் கட்சிக்கு பெரிய ஆயுதம் கிடைத்துள்ளது.
இந்தியாவும், அமெரிக்காவும் சிறந்த உறவை பேணுவதாகவும், ஹகேலின் கூற்றின் நோக்கம் என்னவென்று தெரியவில்லை என்றும் குடியரசு கட்சியின் செனட்டர் ஜான் கார்னின் கூறுகிறார்.
இந்தியன் வம்சா வழியைச் சார்ந்த செனட் உறுப்பினர்களும் ஹகேலின் கூற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் பல ஆண்டுகளாக கூறிவரும் குற்றச்சாட்டுக்கு ஹகேலின் கூற்று பலம் சேர்த்துள்ளது.
பலுசிஸ்தான் மற்றும் ஆப்கானில் சில குழுக்களை பயன்படுத்தி பாகிஸ்தானில் பிரச்சனையை உருவாக்க இந்தியா முயலுவதாக பாகிஸ்தான் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தது.
ஆனால், அன்று இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுத்தது.
- See more at: http://www.thoothuonline.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%a4%e0%ae%be/#sthash.Gmd2FCsI.dpuf
அஸ்ஸலாமு அலைக்கும்.
நிதானமான நடை, தெளிவான கருத்து, எதிர்ப்பை இயல்பாகப் புரிய வைக்கும் எழுத்து.
வாழ்த்துகள் தம்பி!
செய்தி யை சொல்லும் சேனல்களே மிகவும் ஆபத்தானது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. பதிவு சொல்லவந்த கரு சொன்னவிதம் marvelous
//விளைவு..? அந்த நீதிபதியும் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்..! //
நீதிபதிகள் ஊடகங்களின் அழுத்தங்களுக்கு ஆளாகமாட்டார்கள்..
-(அப்சல் குரு வழக்கில்)உச்ச நீதிமன்றம்.
?
??
???
????
சலாம்!
சிறந்த பகிர்வு சகோதரரே!
ரொம்ப ஆரோக்கியமான பதிவு, நல்ல கருத்துக்கள் உள்ள பதிவு, நான் படித்ததில் மிக சிறந்த பதிவு.
வாழ்த்துகள்....வாழ்த்துகள்.....
Sheik Mujibur Rahman,
Oman
ஊடகங்களின் பொய்முகத்தைத் தோலுரிப்பது அவசியம்.. பராட்டுகள். தொடர்ந்து இப்படி அறிய செய்திகளை பகிருங்கள்..
@UNMAIKALஅரிய பல தகவல்களை பலர் அறிய இட்டமைக்கு நன்றி சகோ.உண்மைகள்.
@வஹ்ஹாபிஅலைக்கும் ஸலாம் வரஹ்...
ஜசாக்கல்லாஹு க்ஹைர் சகோ.
@Rabbaniஊடக ஆபத்து நாளுக்கு நாள் பெரிதாகி வருகிறது. விழிப்புணர்வே மருந்து. ஜசாக்கல்லாஹு க்ஹைர் சகோ.
@Saha, Chennai//நீதிபதிகள் ஊடகங்களின் அழுத்தங்களுக்கு ஆளாகமாட்டார்கள்..//---அப்படி என்றால், எந்த நீதிபதியும் ஊடகங்கள் சொல்வதை படிக்கவோ கேட்கவோ பார்க்கவோ கூடாது. அப்போதுதான் இது சாத்தியம் சகோ.
@சுவனப் பிரியன்அலைக்கும் ஸலாம். மிக்க நன்றி சகோ.
@Sheik Mujiburஜசாக்கல்லாஹு க்ஹைர் சகோ. மிக்க மகிழ்ச்சி சகோ.
@கையேடு//ஊடகங்களின் பொய்முகத்தைத் தோலுரிப்பது அவசியம்.//---மிகச்சரி. மிக்க நன்றி சகோ.
GOOD POST
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!