நாம் சொல்லும் கருத்தை பிறர் தவறாக சித்தரிக்கும் ஒரு துர்சூழ்நிலை,
நாம் சொல்ல வந்ததை சரியாக சொல்ல முடியாமல் போன ஆற்றாமை,
நம்மை வைத்தே தனது அரசியல் வியாபாரத்தை செய்வோரின் சூழ்ச்சி,
இவற்றுக்கு நடுவே...
//அப்படியே தவறாக முஸ்லிம்கள் பற்றி சினிமா & ஒலி/ஒளி/எழுத்து ஊடகத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தாலும் இதை பார்த்து எங்களுடன் பழகும் நம் முஸ்லிம் நண்பர்களை நாம் வெறுத்திடுவோம் என்ற வாதம் எத்துனை தூரம் சரியாகும்..? தேவையா முஸ்லிம்களின் இந்த விஸ்வரூப எதிர்ப்புகள்..?//
...என்று இன்னமும் கேட்டுக்கொண்டு இருப்போருக்காக கனத்த மனநிலையில்தான் இந்த இடுகையை எழுதுகிறேன் சகோஸ்.
என்னுடைய இந்த மனநிலை நிச்சயமாக முஸ்லிம் அல்லாதவர்களுக்கு தெரியாது. அதை புரிய வைக்கும் முயற்சியே இது.
காரணம், அமெரிக்க விமான நிலையத்தில் 'ஷாருக்கானுக்கு' இந்த மனநிலை புரிந்தது. அந்த ஆற்றாமையின் விளைவு : "My name is Khan, I'm not a terrorist" என்று அமெரிக்க எதிர்ப்பு படம் ஒன்றை தனது ஆற்றாமையாக பெரும் பொருட்செலவில் அழகாக வெளிப்படுத்தினார். இந்த வசனத்தை சுப்ரீம் கோர்ட்டே தனது தீர்ப்பு ஒன்றில் சுட்டிக்காட்டி பெருமை படுத்தியது.
அதே அமெரிக்காவில் 'அப்துல் கலாமுக்கு' அதே கசப்பான அனுபவம் ஏற்பட்டது. சிரித்த வாயுடன் ஆற்றாமையை மவுனமாக சகித்துக்கொண்டு ஆதரிக்கவோ எதிர்க்கவோ இன்றி சும்மா இருந்து விட்டார். இந்த மனநிலை புரிந்தாலும் மென்று விழுங்கி நல்ல பெயர் பெறுவது அவரின் சுபாவம் ..! (கூடங்குளம் மட்டும் விதிவிலக்கு)
அதே அமெரிக்காவில் அதே அனுபவம் 'கமால் ஹசன்' என்ற தவறான பெயர் உச்சரிப்பு புரிதலால் கமல் ஹாசனுக்கு ஏற்பட்டபோது.... அந்த மனநிலையை புரிபவராக அவர் இருக்கவில்லை. இன்னும் சொல்ல வேண்டுமானால்...
அந்த புரிதலை குத்தி குதறி பெரிதாக்கும் 'உன்னைப்போல் ஒருவனும்'... உலகில் உயிரிழந்த லட்சக்கணக்கான அப்பாவி முஸ்லிம் ஆண்-பெண் & குழந்தைகளின் வில்லனான ஜார்ஜ் புஷ்.. 'உலக நாயகன் நீ' என்ற புகழார பாடல் பின்னணியில் ஒலிக்க, ஸ்டைலாக மேடையில் ஸ்லோ மோஷனில் கோட் -டை பறக்க எழுந்து நடக்கும் 'தசாவதாரமும்', அதை தொடர்ந்த அமெரிக்காவை ஆபத்தில்(?!) இருந்து காப்பாற்றும் 'விஸ்வரூபமும்' அவரிடம் இருந்து அமோக அமெரிக்க ஆதரவாக வெளிப்பட்டு உள்ளது..!
ஆக, இந்த மூவருக்கும் ஏற்பட்ட ஒரே அனுபவத்தின் வெவ்வேறுபட்ட மூன்று விளைவுகளின் வித்தியாசங்களை படிக்கும் நீங்களே புரிந்து கொள்ளுங்கள் சகோஸ்..!
ஆகவே, எனதருமை சகோ, நீங்கள் இப்படி 'கமால் ஹசன்' நிலையில் இருந்து, உங்கள் முஸ்லிம் நண்பர்களிடம் வெறுப்பை காட்டோதாராக இருக்கலாம். ஆனால், உங்களை போன்றே எல்லாரும் நல்லவர்களாக இருப்பார்கள் என்று தப்புக்கணக்கு போட்டு விடாதீர்கள். எனக்கு ஏராளமான முஸ்லிம் அல்லாத அறிந்த/அறியாத நண்பர்கள் உண்டு.
உதாரணமாக, எனது நேர்முகத்தேர்வில் அறிவில் சிறந்த மெத்தப்படித்த சான்றோர் மூவர், என்னை முஸ்லிம் என்பதற்காக பொது சிவில் சட்டம், பாபர் மசூதி இடிப்பு, குண்டு வெடிப்பு என்று துளைத்து துளைத்து கேள்வி கேட்டபோது துணுக்குற்றேன். பாஸ்போர்ட் எடுக்கும்போதும் இப்படித்தான்.
ஒருமுறை, ஒரு செக் போஸ்டில் நானிருந்த பேருந்தை மறித்து பேருந்து உள்ளே ஏறிய போலிஸ், அப்பேருந்தில் பலர் தாடி வைத்து இருந்தாலும்... புருக்கா போட்ட எனது மனைவி அருகே நான் தாடி வைத்து அமர்ந்து இருந்ததால் என்னிடம் மட்டும் எனது புகைப்பட அடையாள அட்டை கேட்டனர், தன்னிடம் உள்ள தீவிரவாதியின் புகைப்படத்தோடு ஒப்பிட்டு பார்க்க..! அந்த பேருந்தில் அதற்கு பிறகு எங்களை கண்டோர் பார்வை வேறாக இருந்தது.
ஓவ்வொரு குடியரசு தினமும், சுதந்திர தினமும் ஏண்டா வருதுன்னு இருக்கிறது..! அந்த அளவுக்கு நோகாடிக்கிறது... அரசும் ஊடகங்களும். இதுபோல கசப்பான அனுபவம் நிறைய உண்டு..!
ஒருமுறை, ஒரு செக் போஸ்டில் நானிருந்த பேருந்தை மறித்து பேருந்து உள்ளே ஏறிய போலிஸ், அப்பேருந்தில் பலர் தாடி வைத்து இருந்தாலும்... புருக்கா போட்ட எனது மனைவி அருகே நான் தாடி வைத்து அமர்ந்து இருந்ததால் என்னிடம் மட்டும் எனது புகைப்பட அடையாள அட்டை கேட்டனர், தன்னிடம் உள்ள தீவிரவாதியின் புகைப்படத்தோடு ஒப்பிட்டு பார்க்க..! அந்த பேருந்தில் அதற்கு பிறகு எங்களை கண்டோர் பார்வை வேறாக இருந்தது.
ஓவ்வொரு குடியரசு தினமும், சுதந்திர தினமும் ஏண்டா வருதுன்னு இருக்கிறது..! அந்த அளவுக்கு நோகாடிக்கிறது... அரசும் ஊடகங்களும். இதுபோல கசப்பான அனுபவம் நிறைய உண்டு..!
யாரென்று அறியாத என்னை தெரியாத பிறர் நம்மிடம் எழுத்தால் பேச்சால் நடவடிக்கையால் இப்படி குத்துவதையாவது நான் சகித்துக்கொண்டு இருந்திருக்கிறேன்.
ஆனால், இப்படி வெறுப்புக்கு எவ்வித காரணமும் என்மூலமாக இல்லாத நிலையில், நம்மை நன்கு அறிந்த பல ஆண்டுகள் பழகியோரின் நட்புக்கண்ணோட்டம் சந்தேகக்கண்ணோட்டமாக திடீரென்று மாறும்போதுதான் என் மனம் மிகவும் ரணப்படும்.
ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஒவ்வொரு முறை இப்படி ஆருயிர் நண்பர்களால் பாதிக்கப்படும் போதும் இதயம் ஸ்தம்பித்து நின்று விட்டு பின்னர் மெல்ல வெறுப்பாக துடிக்க ஆரம்பிக்கும்.
'இந்த நண்பனின் மனமாற்றத்துக்கு காரணம் யார்' என்று யோசிக்கும் போது அவர்கள் எல்லார் மீதும் கோபம் கோபமாக வரும். அந்த கோபம் தன்னிடம் நட்பில்லாத முகமறியாத தீவிரவாதிகளிடம் வருவதை விட, தான் நீண்ட நாட்கள் நன்கு அறிந்த நட்புக்களிடம்தான் அதிக கோபம் வரும்.
அதாவது, உங்களின் ஒழுக்கத்தை பற்றி தவறாக யாரோ ஒருவர் சொன்னதை வைத்து, அதை நம்பி... உங்கள் வீட்டார் உங்களை சந்தேகப்பட்டால்... முதலில் நீங்கள் உங்கள் வீட்டார் மீது தான் கோபப்படுவீர்கள் அல்லவா..? அது போல..!
கோபத்தை நீங்கள் வெளிப்படுத்தும் போது..."பார்த்தியா, நான் அப்போவே சொல்லலை..? இவன் அப்படித்தான்..! இவனைப்பற்றி அவர் சொன்னது சரிதான் போல..! குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும்... கோபத்தை பாரேன்..!" என்று சொல்லும்போது அவர்களுடனான உறவும் நட்பும் முற்றாக அங்கே அன்றே முறியும்.
இந்த விஸ்வரூப விவகாரத்தில் அது போன்ற உயிர்க்கொல்லி நச்சுப்பேச்சுக்களை ஊடகத்தில் பதிந்தோரை என்னால் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது..!
சில உதாரணங்கள்.....
"தேசப்பற்று இல்லாத 'கலாச்சார தீவிரவாதிகள்'தான் எனது இப்படத்தை எதிர்க்கிறார்கள்".
"தீவிரவாதத்துக்கு எதிரான இப்படத்தை எதிர்ப்பதன் மூலம், 'என் அப்பன் குதிருக்குள் இல்லை' என்று சொல்லாமல் சொல்லி விட்டார்கள் முஸ்லிம்கள்."
"அஜ்மல் கசாப்பை எல்லாம் பார்த்து விட்டுத்தான் மக்கள் சகிப்புத்தன்மையோடு உங்களை எல்லாம் எம்.எல்.ஏ ஆக்கி இருக்கிறார்கள்"
"அரேபிய, ஆப்கானிய கைக்கூலிகள் இவர்கள்"
"ஜெ.விடம் பொட்டி வாங்கி விட்டார்களா.."
"அப்படி ...இருக்குமோ... என்னவோ.."
"இப்படி ...இருக்குமோ... என்னவோ.."
----என்று அடிக்கடி இப்படி இட்டுக்கட்டி சுடும் சந்தேக வாக்கியத்தை ஈவிரக்கமின்றி சொல்வோர்-எழுதுவோர், ஒரு நிமிஷம் தன்னையும் தான் சார்ந்த சமூகத்தையும் அந்த இடத்தில் வைத்து நிதாணிக்கவும்.
தேசப்பிதாவை சுட்ட கொலைகார்களாக காரணகர்த்தாவின் சமூக மக்கள் எல்லாரையும் சந்தேக கண் கொண்டு முஸ்லிம்கள் பார்க்க வில்லை.
தென்காசி, மாலேகான், சம்ஜோதா, ஹைதராபாத், அஜ்மீர், ஜெய்ப்பூர், அஹமதாபாத் உட்பட... இந்தியாவில் பல இடங்களில் குண்டு வைத்தவர்களாக காரணகர்த்தாவின் சமூக மக்கள் எல்லாரையும் முஸ்லிம்கள் பார்க்க வில்லை.
ஒரிசா, பாகல்பூர், அஸாம், குஜராத், மும்பை, கோவை கலவரங்களில் ஈடுபட்டு கணக்கின்றி சிறுபான்மையோர் மீது கொலைபாதக அக்கிரம் செய்தோரின் சமூக மக்கள் எல்லாரையும் சந்தேக கண் கொண்டு முஸ்லிம்கள் பார்க்க வில்லை.
மீனம்பாக்கம் விமான நிலையம், ராஜீவ் காந்தி படுகொலை இவற்றை செய்தோராக காரணகர்த்தாவின் சமூக மக்கள் எல்லாரையும் சந்தேக கண் கொண்டு முஸ்லிம்கள் பார்க்க வில்லை.
பாலஸ்தீன், இராக், ஆப்கான், லிபியா போன்ற நாடுகளில் நேசப்படை, நாசப்படையாக இருந்தபோது, அந்த நாட்டில் உள்ள மக்கள் எல்லாரும் அப்படித்தான் என்று காரணகர்த்தாவின் நாட்டு மக்கள் எல்லாரையும் துவேஷம் கொண்டு பார்க்க வில்லை முஸ்லிம்கள்.
நமக்கு தண்ணீர் தராத அண்டை மாநில மக்களை நமது எதிரிகளாக துவேஷத்துடன் நாம் பார்க்கவில்லை.
நமக்கு தண்ணீர் தராத அண்டை மாநில மக்களை நமது எதிரிகளாக துவேஷத்துடன் நாம் பார்க்கவில்லை.
இந்த நெறியான பார்வையை - இந்த சரியான புரிதலை எல்லாரும் எல்லா சமூகத்தினரோடும் பின்பற்றினால், சமூகம் நல்லிணக்கத்துடன் நட்போடு இருக்குமே என்பதே... எனது & முஸ்லிம்களின் ஆற்றாமை..!
''பொம்பளை கஷ்டம் பொம்பளைக்கு மட்டும்தான் புரியும்''. ---இது சிரிக்க வைக்கும் சீரியஸ் சினிமா டயலாக் அல்ல என்று திருமணம் ஆன பின்னர் மனைவியை நேசிக்க ஆரம்பித்த போதுதான் உணர்ந்தேன்.
இதுபோல, ''ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தால்தான் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டோரின் உள்ளக்குமுறலை உணர முடியும்'' என்பதை எப்படியோ யாரோ ஒரு சில ஆளுங்கட்சி அரசியல் தலைவர் புரிந்து கொண்டு சீத்திருத்தம் கண்டது போல...
''நம் நாட்டில் முஸ்லிமா வாழ்ந்து பார்த்தால்தான் ஒரு முஸ்லிமின் உள்ளக்குமுறலை உணர முடியும்'' என்பதை முஸ்லிம் அல்லாத ஆத்மாக்கள் புரிந்து கொள்ளுங்களேன் ப்ளீஸ்..!
---இது ஒவ்வொரு முஸ்லிமின் உள் மனக்குமுறல்..!
இறுதியாக,
இதை படிக்கும் முஸ்லிமல்லாதவர்களிடம் நான் கெஞ்சி கேட்டுக்கொள்வது இதுதான்...
தயவு செய்து,
தவறான ஊடக பொதுப்புத்தியால்,
நல்லவர்களையும் தீவிரவாதிகளாக்கிப் பார்த்து வக்கிர திருப்தியுறுவோர்களுடன் நயமாக பேசி, முடிந்த அளவுக்கு நம் நாட்டின் எதிர்கால நன்மைக்காக நாட்டின் இறையாண்மைக்காக அவர்களிடம் மனமாற்றம் ஏற்பட நீங்கள் முயற்சி செய்யுங்கள்..!
முஸ்லிம்களின் மேற்கொண்ட அது போன்ற முயற்சியில்,
அநாகரிக வார்த்தைகள், அவரசத்தில் தகாத சொற்கள், ஆத்திரத்தில் மரியாதை குன்றிய சுட்டல்கள் இருந்து விடுகின்றன என்பதால்... அவை பெற வேண்டியிருக்க வேண்டிய வெற்றியை- எதிர்கருத்து கொண்டோரின் மனதில் மனமாற்றத்தை தொற்றுவிக்காமல் செய்து விடுமோ என்று அஞ்சுவதாலுமே,
உங்களிடம் கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் சகோஸ்..!
அப்புறம் முடிந்தால் உங்களுக்கு தெரிந்த தமிழ் சினிமா காரர்களிடம் இதையும் சொல்லுங்கள். நூறு படங்களில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்ட ஆப்கான் பாகிஸ்தான் இராக் பாலஸ்தீனம் எல்லாம் கஷ்டப்பட்டு செல்பவர்களை, அடுத்த ஒரு படத்திலாவது... இதோ... இங்கே இருக்கும் தென்காசிக்கும் மாலேகானுக்கும் ஹைதராபாத்துக்கும் அஜ்மீருக்கும் புநேவுக்கும் ஜெய்ப்பூருக்கும் வாரனாசிக்கும் குஜராத்துக்கும் பாகல்பூருக்கும் அயோத்திக்கும் ஒரிசாவுக்கும் சென்று மிக இலகுவாக ஹிந்துக்களையும் தீவிரவாதிகளாக காட்டி, அவர்கள் சார்ந்த இயக்கம் மற்றும் கொடி இவற்றோடு அவர்கள் செய்த பயங்கரவாதங்களையும் தெள்ளத் தெளிவாக படமாக எடுத்து காட்ட சொல்லுங்கள். நூற்றுக்கு ஒரு பங்கு கணக்கு ஓரளவுக்காவது நேரான மாதிரியாகவும் இருக்கும். படத்தை படமாக பார்க்க முஸ்லிம்களுக்கு கற்றுக்கொடுத்தா மாதிரியும் இருக்கும்.
அப்புறம் முடிந்தால் உங்களுக்கு தெரிந்த தமிழ் சினிமா காரர்களிடம் இதையும் சொல்லுங்கள். நூறு படங்களில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்ட ஆப்கான் பாகிஸ்தான் இராக் பாலஸ்தீனம் எல்லாம் கஷ்டப்பட்டு செல்பவர்களை, அடுத்த ஒரு படத்திலாவது... இதோ... இங்கே இருக்கும் தென்காசிக்கும் மாலேகானுக்கும் ஹைதராபாத்துக்கும் அஜ்மீருக்கும் புநேவுக்கும் ஜெய்ப்பூருக்கும் வாரனாசிக்கும் குஜராத்துக்கும் பாகல்பூருக்கும் அயோத்திக்கும் ஒரிசாவுக்கும் சென்று மிக இலகுவாக ஹிந்துக்களையும் தீவிரவாதிகளாக காட்டி, அவர்கள் சார்ந்த இயக்கம் மற்றும் கொடி இவற்றோடு அவர்கள் செய்த பயங்கரவாதங்களையும் தெள்ளத் தெளிவாக படமாக எடுத்து காட்ட சொல்லுங்கள். நூற்றுக்கு ஒரு பங்கு கணக்கு ஓரளவுக்காவது நேரான மாதிரியாகவும் இருக்கும். படத்தை படமாக பார்க்க முஸ்லிம்களுக்கு கற்றுக்கொடுத்தா மாதிரியும் இருக்கும்.
ப்ளீஸ்..! டூ சம் ஃபேவர் ஃபார் அஸ்..! இட்ஸ் அன் அர்ஜென்ட் ரிகுவஸ்ட்..!
26 ...பின்னூட்டங்கள்..:
முஹம்மத் ஆஷிக் அஸ்ஸலாமு அலைக்கும்
மிக மிக அருமையான வார்த்தை பிரவாகம்
நன்றி
manam kanakkirathu,
pls try 2 understand our feeling.
உங்கள் ஆதங்கம் நான் உணருகிறேன்...
RSS /BJP போன்ற கட்சிகளை எதிர்த்தவன்..
என் உற்ற நண்பன் பீர்மொஹம்மத், 30 வருட பழக்கம்..
இது போல சில சம்பவங்கள் எங்களை பிரித்து விடுமோ என்று பயமாக உள்ளது.
என்னையும் மதவெறிக்கு ஆளாக்கிவிடுவார்களோ என அச்சமாக உள்ளது.
நீங்களும் PJ போன்ற மதவியபரிகளிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்...
நாகரிகமாக பேச சொல்லுங்கள்...
மனிதம் தழைக்கட்டும்.
நன்றி
.
.
CLICK >>>>>>> அனைத்து பிரச்சினைகளுக்கும் கமல் தான் காரணம் - முதல்வர் ஜெயலலிதா புகார். .
.
.
சகோ முகம்மத் ஆஷிக் !
மிக அற்புதமான சிந்தனை ...மூன்று பேருடைய நிகழ்வுகளை மேற்கோள் காட்டி உங்களின் அனுபவத்தையும் காட்டி இருப்பது வலுமிக்கது..! கமலுக்கு ஏற்பட்டது போன்று எத்தனை பேருக்கு இப்படி அடுத்தவர் கஷ்டங்களை அறியும் வாய்ப்பு அமையும் ..ஆனால் இதிலும் கமல் பாடம் பெறாதது வேதனை.!!! இதற்க்கு முன் இல்லாத அளவு தொழுகையோடும் குர் ஆனோடும் காட்ட முனைந்திருப்பதும் வேதனை.. !!
என்னையும் என்னுடைய கல்லூரி கால நண்பன் செல்லமாக கூப்பிடுவது " தீவிரவாதி " என்றுதான்..! என் ஒருவனை மட்டுமே பாதிக்கும் என்பதால் அதை நானும் கண்டு கொள்ளவில்லை.. ! ஆனால் அது போன்ற மோசமான அனுபவம் எல்லோருக்கும் உண்டு என்பதை உங்கள் பதிவு காட்டுகிறது...!!
மாற்றுமத அன்பர்கள் புரிந்து கொள்ள வேண்டுமே..! புயலுக்கு முன் காற்று தென்றலாக வீசிக்கொண்டிருந்ததே ! அதற்காக தென்றலாக தானே இருந்தாய் ஏன் இவ்வாறு கஷ்டத்தை உண்டாக்குகிறாய் என்று கேட்கமுடியுமா..? சூழலால் தான் மாற்றமே தவிர..தென்றலை குறை சொல்லி என்ன பயன் ???
அய்யா தங்கள் கூறுவது என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நீங்கள் செம்மறி ஆடுகளைப் போல் தாவாமல், சிறிது சகிப்புத் தன்மையோடு சிந்திக்க வீண்டும். உங்கள் மதத்தில் சகிப்புத்தன்மை இல்லை. கருணை இல்லை. கண்ணுக்கு கண். தலிபான்கள் தீவிரவாதிகள் இல்லையா
அல்ல்கொஇத தீவிரவாத இயக்கம் இல்லையா. கசாப் தீவிவதி இல்லையா. கிரிக்கட்டில் பாகிஸ்தான் ஜெயித்தால் பட்டாசு வெடித்து கொண்டாடவில்லையா. முதலில் எல்லா சமுக அவலங்களுக்கும் குரல் குடுத்து பாருங்கள் . அப்போது நம்புகிறோம் நீங்கள் எங்கள் சகோதரர் என்று.
தங்கள் மதம்தான் சிறந்தது என தம்பட்டம் அடித்துக் கொள்வதையும், விவாதம் விவாஅதம் என கோருவதையும் நிறுத்துங்கள் அல்லது நிறுத்தச் சொல்லுங்கள். இல்லையெனில் வரும் காலங்களில் விளைவுகள் விபரீதமாக இருக்கும்.
“மதம்“ பிடித்த அனைவருமே
மனிதர்கள் தான்!
ஒருவன் தலித் என்று தெரிந்த பிறகு தான், சாதியப் பார்வைக்கு ஆளாகிறான்; ஆனால் முஸ்லிம் முதல் பார்வையிலேயே மன தீண்டாமைக்கு ஆளாக்கப்படுகிறான்.
என் மீதான வெறுப்புப் பார்வைக்கு எனது புற அடையாளங்களையே தீவிரவாதி என சித்தரித்து தொடர்ச்சியாக பொது புத்திக்கு கல்வெட்டாய் பதிய வைத்த சினிமாவை கேள்வி கேட்கவும், அதற்கு எதிராக என் அடிப்படை உரிமையை நிலைநாட்டவும் எனக்கு மனிதன் என்ற முறையில் கூட உரிமையில்லையா?
முஸ்லிம்களின் எதிர்ப்பையும் போராட்டத்தையும் நுனிப்புல் மேய்வதைப் போல மேய்ந்து விட்டு, " ஆமா.. இவனுங்களுக்கு வேற வேலயே இல்ல" என்று அலட்சியப்படுத்துபவனுக்கு தெரியுமா? என் சமூகத்தின் வலியும் வேதனையும்.
இது வெறும் சினிமாவுக்கான போராட்டம் மட்டுமல்ல; ஒரு சமூக புறக்கணிப்பின் ஆழத்திலிருந்து பீறிட்டு எழும் மக்களின் சக்தி. இது என் மண். என் மண்ணிலேயே நான், என்னுடைய காலங்காலமாக பின்பற்றி வந்த புற அடையாளங்களோடு தனிமைப் படுத்தப்படுகிறேன். இது ஏன்? எப்படி விதைக்கப்பட்டது? என ஆராயும் போது, அதற்கு மிகப்பெரிய காரணமாக தெரிவது சினிமா.
புத்தகம் கூட பாரிய விளைவுகளை உடனடியாக சிந்தனை ரீதியாக ஆக்கிரமித்து விடாது. புத்தகத்தை ஒரே நேரத்தில் ஊரில் உள்ள அனைத்து நூலகங்களிலும் ஒரே நேரத்தில் படிப்பது கிடையாது. புத்தகத்தின் தாக்கத்தை விட சினிமாவின் வீச்சு அதிகம். சினிமா ஒரே நேரத்தில் 500 தியேட்டர்களில் ஒவ்வொன்றிலும் சுமார் 300 மக்களை கட்டிப் போட்டாற்போல சிந்தனையில் காட்சி அறையப்படுகிறது.
அதனால் சினிமா ஊடகத்தின் தாக்கம் சமூகத்தில் பல அடுக்குகளில் அலைகளையும் கொந்தளிப்புகளையும் ஏற்படுத்த வல்லமைக்கொண்டது.
நேற்று வரை என் உரிமைக்கும் சமூக அங்கீகாரத்திற்கும் வழிபாட்டு உரிமைக்கும் மத அடையாளத்திற்கும் பங்கமில்லாமல் வாழ்ந்து, இந்நாட்டில் சம உரிமைக்கும் சமத்துவத்திற்கு என் மார்க்கம் மூலம் மக்களை வென்று எடுத்து உயர்ந்த அந்தஸ்த்தில் இருந்த என்னைப் பார்த்து, நீ தீவிரவாதி என்றால் இது யாருடைய சூழ்ச்சி?
"தவித்து அழும் பிள்ளை தாயைக் கண்டவுடன் தாவி அணைத்துக்கொள்ளுமே" அப்படி தமிழர்களை அணைத்துக்கொண்டது இஸ்லாம்- என்றார் அண்ணாதுரை.
ஆமாம் என் முன்னோர்கள் தாவி அணைத்துக் கொண்டார்கள். அண்ணன் தம்பியாக மாமன் மச்சானாக முஸ்லிம்களும் இந்துக்களும் வாழ்ந்து வருகிறார்கள் என்பது வெறும் வாய் பேச்சு அல்ல. அண்ணன் இந்துவாக இருக்க, தம்பி முஸ்லிமானான். மாமன் இந்துவாக இருக்க மச்சான் முஸ்லிமானான். இது இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே இருக்கும் ரத்த பந்தத்தையும் பாசப்பிணைப்பையும் சொல்கிறது.
தமிழ் நாட்டில் ஒரு இனம் சுய அடையாளத்தைக் காக்க போராடுகிறது என்றும் மத அடையாளங்களோடு தவறாக சித்தரிக்கப்படும் தங்களை காத்துக் கொள்ள வீதிக்கு வந்து உரக்க கத்துகிறது. காதில் வாங்காமல் போனாலும் பரவாயில்லை; கொச்சைப் படுத்தாதீர்கள்.
சூப்பர்... சொல்லிகொண்டிருக்கும் போதே அண்ணன் ஜிகாத்துக்கு கிளம்பிட்டாரு...
சூப்பர்... சொல்லிகொண்டிருக்கும் போதே அண்ணன் ஜிகாத்துக்கு கிளம்பிட்டாரு...
சூப்பர்... சொல்லிகொண்டிருக்கும் போதே அண்ணன் ஜிகாத்துக்கு கிளம்பிட்டாரு...
சகோதரரே... எது எப்படி இருந்தாலும் மிக நாகரீகமான முறையில் உங்கள் எண்ணங்களை வெளிபடித்தியதற்கு முதலில் எனது பாராட்டுகள்....
//அபுபக்கர் January 31, 2013 7:47 PM
ஆதரிக்கின்றேன். முக்கியமாக தமுமுக, தவ்வீது அமைப்புகளை தடை செய்ய வேண்டும்.//
//தவ்வீது// ம்ம்க்கும் ....தவ்ஹீத் அமைப்புனே சொல்ல தெரியல..இதுல வக்கனையா அபுபக்கர்'னு பேரு வேற..! இது ஒரு பொழப்பு... :-))
I was really surprised your post was going well till I read the following...
"ஹிந்துக்களையும் தீவிரவாதிகளாக காட்டி, அவர்கள் சார்ந்த இயக்கம் மற்றும் கொடி இவற்றோடு அவர்கள் செய்த பயங்கரவாதங்களையும் தெள்ளத் தெளிவாக படமாக எடுத்து காட்ட சொல்லுங்கள்"...
These 3 lines defeat the purpose the previuos 100 lines...Sorry..
As a kid..we do the same often...During fights..at the time of compromise too... we want to give the last punch...That is human nature...
ஐயா .,
தீவிரவாதி என்ற பார்வை முஸ்லிம்கள் மீது அதிகமா இருக்க கரணம் என்ன என்று யோசித்தால் காரணம் பெரும்பாலான தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் முஸ்லிம்களே!! முஸ்லிம் அல்லாதவர்களுக்கு கோரிக்கை வைக்கும் இதே நேரத்தில் ஏன் அவர்களுக்கும் ஒரு கோரிக்கை வைக்கலாமே..??சில முஸ்லிம்கள் தவறு செய்யும் போது எந்த ஒரு எதிர்போ காட்டாமல் இப்போது சாதாரண பிரச்சினைக்கு கோரிக்கை வைப்பது எந்த விதத்தில் நியாயம்..?? அப்படி நீங்கள் வருங்காலத்தில் செய்வதானால் உங்கள் மதத்தின் மீதிருக்கும் மரியாதையும் மக்கள் மீதும் கூடுமே தவிரே குறைய வாய்ப்பே இல்லை..!!
Brother,
You have said it wonderfully.
We should let our brothers from other religion know that we are raising the issues which affects us the most !!!
நீங்கள் சொல்லுவது ஓரளவுக்கு சரிதான் தல. ஆனால் ஓர் விஷயம் தான் இடிக்குது .
மை நேம் இஸ் கான் படத்தை வெளியிட்டது ஓர் அமெரிக்க நிறுவனம் . அந்த படம் முற்றிலும் அமெரிக்கர்களுக்கு எதிரானது . அதனை எதிர்து யாரும் அமெரிக்காவில் போராடவில்லை. அதுவும் உங்களுக்கு தெரியும் . உங்களிடம் யாரும் விஸ்வருபதிற்கு எதிராக போராட வேண்டாம் என்று சொல்லவில்லை. ஜனநாயக ரீதியாக போராடத்தான் சொல்லுகிறார்கள் . உயிரை கொடுத்து தடுப்போம் என்று சொல்வதைத்தான் எதிற்கிரார்கள்.
மதத்தலைவர்கள் தம்முடன் கருத்து வேறுபாடு உடையவரை மிக கேவலமாக விமர்சிப்பதையே எதிர்க்கிறார்கள்.
அதைக்கூட உங்களில் சிலர் ஆதரிப்பதையே எதிர்க்கிறார்கள்.
படத்தை பாருங்கள். பிடிக்கவில்லையா . பார்க்கவருபவருக்கு துண்டுபிரசுரங்களை வினையோகியுங்கள். உங்கள் பக்கம் நியாயம் இருந்தால் அவர்கள் தங்களின் நண்பர்கள் உறவினர் இப்படத்தை பார்ப்பதை தடுப்பார்கள்.
எந்த ஓர் விடயமும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
அது விஸ்வரூபமாகவும் இருக்கலாம்.
குரானாகவும் இருக்கலாம்
பைபிளாகவும் இருக்கலாம்.
கீதையாகவும் இருக்கலாம்.
அத்துடன் உங்களின் சில நண்பர்கள் தாங்களே முஸ்லீம்களின் ஒரே பிரதி நிதி போல பேசி, மற்றயர்களை மட்டம்தட்டுவது கூட அவ்வளவு நல்லதல்ல.
அனைத்து முஸ்லீம்களுக்கும் தமிழ் நாட்டு முஸ்லீம் கழகங்களைப்பற்றி தெரிந்திருக்க வேண்டும் ஏன்று இல்லை.
மலேசியாவில் கூடத்தான் ஆயிரக்கணக்கில் தமிழ் முஸ்லீம்கள் உள்ளனர். அதுக்காக எல்லாம் அவர்களிற்கு தெரிந்திருக்க வேண்டுமென்றில்லை.
எல்லாம் சரி ஆஷீக்.
தனிப்பட்ட முறையில் உங்களிடத்தில் கேட்கிறேன்.
நீங்கள் ஏன் படத்தை பார்த்துவிட்டு எதிர்க்கக்கூடாது. உங்கள் தலைவர்கள் சொல்வதை அப்படியே கேட்கிறீர்களே.
மற்ற மாநிலங்களிளெல்லாம் படம் ஓடுகிறதே. அங்கெல்லாம் படம் பார்த்தபின்பும் முஸ்லிம்கள் ஒன்றும் சொல்லவில்லையே.
உங்களின் இந்த செயல் இத்தனை காலம் உங்களை ஆதரித்து வந்த மாற்றுமத நடுநிலையாளர்களையும் பாதித்தது என்பதை உணரமாட்டீர்களா?
இறுதியாக, நாங்கள் உங்கள் நிலையிலிருந்து சிந்திக்கிறோம். நீங்களும் எங்கள் நிலையிலிருந்து சிந்தியுங்கள்.
நன்றி.
என்னால் உங்கள் கஷ்டத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இதை மாற்ற நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? நீங்கள் செய்வதெல்லாம் உங்கள் மீது வெறுப்பையும் சந்தேகத்தையும் அதிகரிக்க மட்டுமே செய்கின்றன என்பதை என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா? I know how difficult it is to be a minority. I lived in a islamic country for several years. You must have faced at least a fourth of those difficulties that I faced as a minority. But ask yourself honestly. "Have I done enough to change the mentality of the majority?" I would say "NO" (capitals).
You dont have to agree what I say. But I quote here:
** பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல்.
** தீதும் நன்றும் பிறர் தர வாரா.
I have read many of your blog posts. I feel that (just my personal opinion) you are only spreading hatred. Sorry that I have to say this.
Just because you write a sentimental post, I am not going to believe that you have suddenly transformed.
PROVE YOURSELF. Then the first person to support you will be your so called enemies (aka tamils or Hindus or whatever you call ).
Dont want to prove yourself?
No issues. You will continue writing such sentimental posts, and noone is going to believe you.
இது வரை சரி.
// அப்புறம் முடிந்தால் உங்களுக்கு தெரிந்த தமிழ் சினிமா காரர்களிடம் இதையும் சொல்லுங்கள். நூறு படங்களில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்ட ஆப்கான் பாகிஸ்தான் இராக் பாலஸ்தீனம் எல்லாம் கஷ்டப்பட்டு செல்பவர்களை, அடுத்த ஒரு படத்திலாவது... இதோ... இங்கே இருக்கும் தென்காசிக்கும் மாலேகானுக்கும் ஹைதராபாத்துக்கும் அஜ்மீருக்கும் புநேவுக்கும் ஜெய்ப்பூருக்கும் வாரனாசிக்கும் குஜராத்துக்கும் பாகல்பூருக்கும் அயோத்திக்கும் ஒரிசாவுக்கும் சென்று மிக இலகுவாக ஹிந்துக்களையும் தீவிரவாதிகளாக காட்டி, அவர்கள் சார்ந்த இயக்கம் மற்றும் கொடி இவற்றோடு அவர்கள் செய்த பயங்கரவாதங்களையும் தெள்ளத் தெளிவாக படமாக எடுத்து காட்ட சொல்லுங்கள். நூற்றுக்கு ஒரு பங்கு கணக்கு ஓரளவுக்காவது நேரான மாதிரியாகவும் இருக்கும். படத்தை படமாக பார்க்க முஸ்லிம்களுக்கு கற்றுக்கொடுத்தா மாதிரியும் இருக்கும். //
பூனை பையில் இருந்து வெளியே வந்து விட்டது?
இப்போது உங்கள் வெறுப்பை காட்டி விட்டீர்கள். நான் மட்டும் உங்களை புரிந்து கொள்ள வேண்டுமா? நல்லா இருக்கு.
நீங்கள் திருந்தவும் போவதில்லை. நான் மீண்டும் கருத்து பதியவும் போவதில்லை. (என்னை பொருத்தவரை வீண் முயற்சி.)
///ஜாகிர் :
நான் 12ஆம் வகுப்பு படிக்கும்போது, எங்க காமர்ஸ் வாத்தியார் என்னை, அல் உம்மான்னு தான் கூப்பிடுவார். மனசுக்கு சங்கடமா இருக்கும். ஆனா, நான் 12ஆம் வகுப்பு முடிக்கும்போது என் பேர மறக்க முடியாத அளவுக்கு ஒரு காரியம் பண்ணிட்டுதான் வெளியே வந்தேன்.
பெருசா ஒன்னும் பண்ணல, இப்பவும் என் பேர் ஸ்கூல் போர்டுல இருக்குற மாதிரி, 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று பள்ளி முதல் மாணவன் ஆனேன்.
பிறகு பள்ளியில் வாத்தியர் செய்த செயல்களுக்கு மண்னிப்பு கேட்டுக்கொண்டர்///
என் நண்பனின் ஸ்கூலில் நடந்த சம்பவம்
மொத்த திரையுலகமும் எங்களை இழிவுபடுத்தி விட்டனர் என்று பிரமாண்டமான போராட்டங்கள் நடத்தினர்.
>>>>>>
விபச்சார வழக்கில் ஒரு கைதும்- ஊடகங்களின் கருத்து சுதந்திர விபசாரங்களும்.
.
முஸ்லீம்ஸ் பத்தி என்ன சொன்னாலும் கேட்டுக்கணும் - பதில் சொல்ல முயற்சி செஞ்சா உடனே பாகிஸ்தான் போய்ட வேண்டி தானேன்னு சொல்லுவாங்க
தப்பா நியூஸ் போட்ட ஆமாம்னு சொல்லணும்
முஸ்லீம்ஸ் எல்லாம் தீவிரவாதின்னு சொன்ன ஆமாம்னு சொல்லணும்
இஸ்லாத்துல தப்பு தப்பா இருக்குனு சொன்ன விளக்கம் கொடுக்க கூடாது-
அப்புறம் முக்கியமா விஸ்வரூபம் படம் பார்த்துடணும் இல்லன முஸ்லிம் மதவாதினு சொல்லிடுவாங்க
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!