அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Saturday, December 31, 2011

47 தனுஷ்-பிரதமர்: 'கொலவெறி' விருந்தின் பின்னணி

3 நாட்களுக்கு முன்னர்... இந்தியா வந்த ஜப்பான் பிரதமர் யோஷிஹிகோ நோடாவு-க்கு இந்தியப்பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அளித்த விருந்தில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் தனுஷ் அழைக்கப்பட்டு இருந்தது தனுஷ் உட்பட பலருக்கு ஆச்சரியமாகவும், ஏகப்பட்டோருக்கு எரிச்சலாகவும் இருந்தது..! எனக்கும்தான்..! காரணம்..?



நம் நாட்டில் கல்வியில், ஆராய்ச்சியில், பொருளாதாரத்தில், சமூக சேவையில், பொறியியலில், மருத்துவத்தில், இறையியலில், விளையாட்டில்... இப்படி எத்தனையோ ஆக்கப்பூர்வமான துறைகளில் சாதித்த எத்தனையோ இந்தியர்களுக்கு கிடைக்காத அழைப்பு இவருக்கு மட்டும் எப்படி கிடைத்தது..? ஏன் கிடைத்தது..?
அவ்வளவு ஏன்... இதே சினிமா துறையில்... இதே இசைத்துறையில் உள்ள படா படா ஜாம்பவான்களுக்கெல்லாம் கிடைக்காத அழைப்பு போயும் போயும் இந்த தனுஷுக்கா..?
எத்தனையோ சாதனைகளை தனுஷ் செய்திருக்க(!?)... அதுவும் 'தமிங்கல (taminglish) மொழி'யில் எழுதப்பட்டு, உளறல் டோனில் பாடப்பட்ட, கேடுகெட்ட நடையில், நற்கருத்துக்கள் அற்ற இந்த கொலைவெறி மசாலா குத்து பாடலா... அந்த இரு நாட்டு பிரதமர்கள் கலந்து கொள்ளும் விருந்தில் தனுஷை அழைப்பதற்கு தகுதி பெற வைத்தது..? ச்சே... தனுஷுக்கே இது கேவலம்..!
இதெல்லாம் ஒரு பாட்டு... இதை பாடியவருக்கெல்லாம் கவுரவமா..? பிரதமரும் இந்தியாவும் இப்படியான சாதனைகளுக்குத்தான் இனி முக்கியத்துவம் கொடுத்து விருந்தூட்டி ஊக்குவிக்கும் என்றால், இனி இந்தியா உருப்பட்டா மாதிரிதான்..! வருங்கால சந்ததிக்கு முற்றிலும் தவறான முன்னுதாரணம் அல்லவா இது..?
நாட்டில் என்னனவோ பிரச்சினைகள் எல்லாம் தலைமீது இருக்க... அதற்கெல்லாம் மெளனத்தை தவிர வேறு எந்த பதிலும் சொல்லக்கூட நேரமில்லா பிரதமருக்கு, போயும் போயும் இந்த டப்பாங்குத்து பாட்டை கேட்டு ரசிக்க மட்டும் நேரம் இருந்ததா..? 
சரி, நம்ம பிரதமருதான் இப்படி பொறுப்பில்லாம(?!) நடந்துக்கிட்டாருன்னா... இந்த பொறுப்பான(!?!?)புள்ள தனுஷ்... இவருக்கு என்ன ஆச்சு..?! இவருக்கு 'தமிழன்' என்ற உணர்வில்லையா..? அங்கே கேரளா பார்டரில் அவனவன் வாழ்க்கைக்கே அல்லாடும்போது... இவருக்கு காங்கிரஸ் காரருடன் விருந்து கேட்குதோ விருந்து..? "முல்லை பெரியாருக்கு சரியான பதில் சொல்லாட்டி நான் விருந்துக்கு வரமாட்டேன், மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்" என்று நறுக்கென்று சொல்லி இருக்கலாமே..? ச்சே... வடை போச்சே..! (வடை=முல்லை பெரியாறு)

ப்படியெல்லாம்... பல்வேறு கோணங்களில் இருந்தும் பப்ட்ட விமர்சனங்களை  பலர் கூறக்கேட்டும், எழுதப்படித்தும் இருப்பீர்கள் சகோ..!  

ஆனால்... பதிவுலகில் இதற்கான பின்னணியை யாரும் அலசியதாக எனக்கு தெரியவில்லை..! அதனால்தான் இந்த பதிவு எழுதுகிறேன் சகோ..!

நம் நலனுக்காக ஒருவரிடம் நாம் ஒரு அனுகூலத்தை பெறுகிறோம் என்றால், அவர் விருப்பப்படி நாம் நடந்துகொள்வோம். ஏன்..? அவர் அதை மறுத்து விடக்கூடாது என்று..! தமக்கென்று சில கொள்கைகள் கொண்டோர் அதற்குரிய எல்லை வரை வளைந்து கொடுப்பர். எக்கொள்கையும் இல்லாதார், தம் காரியம் நடக்கவேண்டி... எந்த தரத்துக்கும் இறங்கி சென்று விடுவர். ஆக, நமக்கு அனுகூலம் தருபவரின் கோரிக்கையை வைத்து அவரின் தரத்தையும் நாம் அறிந்துகொள்ளலாம். அதே நேரம், அக்கோரிக்கை அறத்துக்கு அப்பாற்பட்டு இருந்தாலும், அனுகூலம் அடைபவர் அதை மறுக்காமல் நிறைவேற்றுவாராயின் அவரின் தேவையின் அவசியத்தையும் புரிந்து கொள்வோம்.

தற்போது இந்திய ரூபாயின் மதிப்பு அதலபாதாளத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. அதை தூக்கி நிறுத்துவதே பொருளாதார மேதையாக மட்டுமின்றி ஒரு பிரதமராக டாக்டர் மன்மோகன் சிங்குக்கு மிக முக்கியம். இதற்கு  FII (Foreign Institutional Investors) அதாவது அந்நிய பண முதலைகள் நிறைய பணத்தை டாலர்களில் இந்திய சந்தையில் முதலீடு செய்ய வேண்டும். திறந்த பொருளாதார சந்தையில் இவர்கள் வரவு குறைந்தால் DII (Domestic Institutional Investors) ...அதாவது உள்நாட்டு இந்தியர்கள் என்னதான் ரூபாயில் கோடி கோடியாக சந்தையில் முக்கினாலும் ரூபாயின் மதிப்பு சரியாத்தான் சரிகிறது. 

ஆனால், ஒன்று மட்டும் தெளிவு : இவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் பங்குச்சந்தையில், விதையளவுக்கு போட்டதை இப்போது... மரமளவுக்கு எடுக்கிறார்கள். ஒரு நிறுவனத்தில் திடுமென லட்சம் பங்குகள் ஒரேநாளில் இவர்களால் விற்கப்படும்போது அந்த ஆயிரம் ரூபாய் பங்கு அடுத்தநாளே ஐம்பது ரூபாய் ஆனால் கூட இவர்களுக்கு அது பற்றி எந்தக்கவலையும் இல்லை. ஏனெனில், முந்நாளில் இதே நிறுவனத்தின் சில லட்சம் பங்குகளை ஒவ்வொன்றும் நூறு ரூபாய்க்கு வாங்கி அதில் பாதியை இருமடங்கு, ஐம்மடங்கு என  விற்று அப்போதே லாபம் சேர்த்து இருப்பார்கள். இந்த பங்கு வீழ்ச்சியினால் தூக்கில் தொங்குவது என்னவோ இறுதியாக வந்த DII-க்கள்தான்..! FII-க்களுக்கு என்றும் நஷ்டம் வராதபடிக்குத்தான் சட்டங்களும் சலுகைகளும் (high %, no circuit breaker போல...) காப்பாற்ற இருக்கின்றன. 

இவர்கள் திடீரென மொத்தமாக எதை வாங்குகிறார்களோ அதுதான் கிரீன் டாப் index. இவர்கள் திடீரென மொத்தமாக எதை விற்கிறார்களோ அதுதான் ரெட் டவுன் index. ஆனால், இவர்கள் எப்போது வருகிறார்கள், சந்தையில் எந்த கம்பெனியின் பங்குகளை எப்போது வாங்குகிறார்கள், எந்த கம்பெனியின் பங்குகளை எப்போது விற்கிறார்கள், தற்போது என்ன செய்கிறார்கள்... இனி என்ன செய்வார்கள்... என்பதெல்லாம் மர்மம்தான். இவர்கள் ஆடும் ஆட்டம் எல்லாம் ஆடிமுடிந்த பின்னர்தான், எல்லாருக்கும் எல்லாமும் புரிகிறது..! மொத்த மீடியாவும் இவர்கள் கையில் இருப்பதாக உணர்கிறேன். அதனால்தான் இது சாத்தியமாகிறது என்று நினைக்கிறேன்.

FII control our market..! Chart in red line is nifty and below in grey is FII

பல மீடியாக்கள் "இந்த பங்குகளை வாங்குங்கள்...", "இதை விற்பனை செய்யுங்கள்...", "இதை விற்காதீர்கள்...பொறுங்கள்..." என்றெல்லாம் DII-க்களை குழப்பி அல்லது தாங்கள் விரும்பும் வழியில் செல்லவைத்து 'FII-க்களுக்காக சேவை' செய்வதாகவே தெரிகிறது..! மொத்தத்தில் இவர்கள் கையில் இந்திய பொருளாதாரம் மாட்டிக்கொண்டு விழி பிதுங்குகிறது. பங்குச்சந்தை என்பது... பணம் பண்ணும் பணக்காரர்களின் பக்கா சூதாட்டம்... என்பது என் உறுதியான முடிவு..!

அதாவது, ஒரு தெருவில் பத்து இறைச்சிக்கடை இருந்தாலும், அசைவப்பிரிய மக்களிடம் அன்று ஒருசேர தேவை இருந்தால், பத்து பேரும் இலாபம் சம்பாதிக்கலாம். ஒருநாள், எல்லாரும் ஒருசேர அன்று சைவம் சாப்பிட விரும்பினால் அனைத்து இறைச்சி கடைகளுக்கும் நஷ்டம் வரலாம். இது நிகழ வாய்ப்பு அரிது அல்லது வாய்ப்பு இல்லை.  இங்கே ஒரு சிலர் முதலில் நஷ்டம் அடைந்தால்தான் வேறு சிலருக்கு இலாபம் என்றில்லாததால், இது வியாபாரம்.

ஆனால், பங்கு சந்தையில் யாராவது சிலர் இலாபமடைய வேண்டுமெனில், பல முதலீட்டாளர்கள் நஷ்டப்பட்டாக வேண்டும். இங்கே அதிக பங்குகளை கையாள்பவர்தான் இலாபம் அடைபவராக இருக்கிறார்..! இவர் எப்போதுமே இலாபம் அடைபவராகவும் அடுத்தவரின் நஷ்டத்தை நிர்ணயிப்பவராகவும் உள்ளார், அதற்கான அரசு அனுசரனைகளோடு..!

இந்த  சூதாட்டத்தில் மிகவும் நுண்ணிய அறிவுத்திறனோடு அனுபவமுள்ள DII-க்கள்.., FII-க்களின் நடவடிக்கைகளை குத்துமதிப்பாக கணித்து அவர்களுடன் முடிந்தவரை இயைந்து இலாபம் பார்க்கிறார்கள் :-) வினாடிக்கு வினாடி பங்குச்சந்தை கிராஃப் நோக்கும் கண்கொத்தி கணினி பாம்புகள் இவர்கள். :-) இவர்களை... 'ரம்மி கிங்ஸ் வித் FII ஜோக்கர் கார்ட்ஸ்' எனலாம்..!

FII-க்கள், தமக்குறிய இலாபம் குறைகிறது என்று அவதானித்தால், திடும் என்று வேறெங்கோ செல்கிறார்கள். எங்கு..? அதுவும் மர்மம்..! அது பின்னர் தங்கம் விலை, கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்தில் தெரியும்..! இவர்க்ளுக்குத்தான் அரசின் சலுகைகள் எத்தனை..? மேலும், என்னதான் சட்ட சலுகை காட்டினாலும் அவர்கள் திரும்பி வராவிட்டால்..? வலுக்கட்டாயப் படுத்த முடியாது..! அதற்கு ஒரே வழி ரூபாயின் மதிப்பு உயரவேண்டும். யாராவது டாலரை இந்தியாவில் வந்து பகிரங்கமாக கொட்ட வேண்டும். அப்போதுதான் புதிய FII-க்கள் வருவார்கள் அல்லது இருக்கும் FII-க்களை தக்கவைக்கலாம்  என்பது மட்டுமல்ல... உள்நாட்டு பங்கு முதலாளிகளையும் (Reliance, TATA, WIPRO, Birla, Bajaj... போன்ற பல share promoters) அவர்களின் வாடிக்கையாளர்களான DII-க்களையும் திருப்தியுரவைக்கும்..!

இந்த உதவிக்குத்தான் இதோ வந்துவிட்டார் ஜப்பான் பிரதமர்..!  15 பில்லியன் அமெரிக்க டாலர்களை  (சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய்)  கொண்டு வந்து இந்தியாவில் பகிரங்கமாக நிறைக்கிறார். ( $ 15 billion... as swap arrangement* to stabilize the value of the Indian rupee ). 

 
இப்பேர்பட்டவருக்கு என்ன தேவையோ, என்ன விருப்பமோ, என்ன ஆசையோ... அதை, அடம்பிடிக்காமல், கவுரவம் பார்க்காமல் மகிழ்ச்சியுடன் நாம் நிறைவேற்றி வைத்தால்... அவர் இன்னும் அதிக டாலர்களை தரக்கூடும் அல்லவா..!?  :-))

தற்போது, ஜப்பானின் காபரே நைட் கிளப்களில், டிஸ்கோத்தே ஹால்களில்  தனுஷின் 'கொலவெறி' பாட்டு மகா பிரபலமாம். அதனால், தனுஷும் ஜப்பானில் பிரபலமாம். அப்பேற்பட்ட அற்புதத்தை(!?) பாடிய அதிசயமனிதரோடு(?!) சேர்ந்து உணவருந்த இந்த 'ஜப்பானிய கொலவெறி ரசிகர்'(?!) அதாவது... இந்த ஜப்பான் பிரதமர் விரும்பி இருக்கலாம்..! (அட... நம்புங்க சகோ..!)

மேலும், இந்த தனுஷ்தான், முன்னர்... ஜப்பானில் சூப்பர் ஹிட் ஆன  "தில்லானா... தில்லானா... நீ...தித்திக்கின்ற தேனா...." குத்துப்பாட்டு புகழ்... 'முத்து' ரஜினிகாந்தின் மருமகன்..."---என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த(!?) கூடுதல் தகவல் அறிந்ததும், அவருக்கு தனுஷை சந்திக்கும் உற்சாகம் மிகவும் கூடி இருக்கலாம்...! தன் விருப்பத்தை இந்திய அரசிடம் பேச்சு வாக்கில் நயமாக வெளியிட்டு இருக்கலாம்..! அதை, சிரமேற்கொண்டு (உடனடியாக தனுஷுக்கு அழைப்பு விடுத்து) செய்து முடிக்கையில்... இப்பதிவில் மேற்கூறிய எவ்வளவு கேள்விகள்... எத்தனை விமர்சனங்கள்... எவர் கேட்டாலும், வழக்கம்போல இந்த காதில் வாங்கி அந்த காதில் வெளியே விட நம் சைலன்ட் கிங்-கிக்கு சொல்லியா தர வேண்டும்..? 

நல்லவேளை...!!! ஜப்பான் பிரதமரின் 'கொலவெறி' தனுஷோடு நின்றதே..!!!

*Swap arrangements
Short-term reciprocal lines of credit between the Federal Reserve and 14 foreign central banks as well as the Bank for International Settlements. Through a swap transactions, the Federal Reserve can, in effect, borrow foreign currency in order to purchase dollars in the foreign exchange market. In doing so, the demand for dollars and the dollar's foreign exchange value are increased. Similarly, the Federal Reserve can temporarily provide dollars to foreign central banks through swap arrangements.


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

'தானே' புயலால் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகள், பொருள்நாசம் மற்றும் பல இன்னல்களுக்கு உள்ளாகியிருப்போரின் சிரமம் அனைத்தும் குறைந்து, சோகம் நீங்கி  அவர்களுக்கு இயல்பு வாழ்க்கை திரும்ப அமைய ஏக இறைவனை பிரார்த்திக்கிறேன்..!

47 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...