3 நாட்களுக்கு முன்னர்... இந்தியா வந்த ஜப்பான் பிரதமர் யோஷிஹிகோ நோடாவு-க்கு இந்தியப்பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அளித்த விருந்தில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் தனுஷ் அழைக்கப்பட்டு இருந்தது தனுஷ் உட்பட பலருக்கு ஆச்சரியமாகவும், ஏகப்பட்டோருக்கு எரிச்சலாகவும் இருந்தது..! எனக்கும்தான்..! காரணம்..?
நம் நாட்டில் கல்வியில், ஆராய்ச்சியில், பொருளாதாரத்தில், சமூக சேவையில், பொறியியலில், மருத்துவத்தில், இறையியலில், விளையாட்டில்... இப்படி எத்தனையோ ஆக்கப்பூர்வமான துறைகளில் சாதித்த எத்தனையோ இந்தியர்களுக்கு கிடைக்காத அழைப்பு இவருக்கு மட்டும் எப்படி கிடைத்தது..? ஏன் கிடைத்தது..?
அவ்வளவு ஏன்... இதே சினிமா துறையில்... இதே இசைத்துறையில் உள்ள படா படா ஜாம்பவான்களுக்கெல்லாம் கிடைக்காத அழைப்பு போயும் போயும் இந்த தனுஷுக்கா..?
எத்தனையோ சாதனைகளை தனுஷ் செய்திருக்க(!?)... அதுவும் 'தமிங்கல (taminglish) மொழி'யில் எழுதப்பட்டு, உளறல் டோனில் பாடப்பட்ட, கேடுகெட்ட நடையில், நற்கருத்துக்கள் அற்ற இந்த கொலைவெறி மசாலா குத்து பாடலா... அந்த இரு நாட்டு பிரதமர்கள் கலந்து கொள்ளும் விருந்தில் தனுஷை அழைப்பதற்கு தகுதி பெற வைத்தது..? ச்சே... தனுஷுக்கே இது கேவலம்..!
இதெல்லாம் ஒரு பாட்டு... இதை பாடியவருக்கெல்லாம் கவுரவமா..? பிரதமரும் இந்தியாவும் இப்படியான சாதனைகளுக்குத்தான் இனி முக்கியத்துவம் கொடுத்து விருந்தூட்டி ஊக்குவிக்கும் என்றால், இனி இந்தியா உருப்பட்டா மாதிரிதான்..! வருங்கால சந்ததிக்கு முற்றிலும் தவறான முன்னுதாரணம் அல்லவா இது..?
நாட்டில் என்னனவோ பிரச்சினைகள் எல்லாம் தலைமீது இருக்க... அதற்கெல்லாம் மெளனத்தை தவிர வேறு எந்த பதிலும் சொல்லக்கூட நேரமில்லா பிரதமருக்கு, போயும் போயும் இந்த டப்பாங்குத்து பாட்டை கேட்டு ரசிக்க மட்டும் நேரம் இருந்ததா..?
சரி, நம்ம பிரதமருதான் இப்படி பொறுப்பில்லாம(?!) நடந்துக்கிட்டாருன்னா... இந்த பொறுப்பான(!?!?)புள்ள தனுஷ்... இவருக்கு என்ன ஆச்சு..?! இவருக்கு 'தமிழன்' என்ற உணர்வில்லையா..? அங்கே கேரளா பார்டரில் அவனவன் வாழ்க்கைக்கே அல்லாடும்போது... இவருக்கு காங்கிரஸ் காரருடன் விருந்து கேட்குதோ விருந்து..? "முல்லை பெரியாருக்கு சரியான பதில் சொல்லாட்டி நான் விருந்துக்கு வரமாட்டேன், மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்" என்று நறுக்கென்று சொல்லி இருக்கலாமே..? ச்சே... வடை போச்சே..! (வடை=முல்லை பெரியாறு)
இப்படியெல்லாம்... பல்வேறு கோணங்களில் இருந்தும் பலதரப்பட்ட விமர்சனங்களை பலர் கூறக்கேட்டும், எழுதப்படித்தும் இருப்பீர்கள் சகோ..!
ஆனால்... பதிவுலகில் இதற்கான பின்னணியை யாரும் அலசியதாக எனக்கு தெரியவில்லை..! அதனால்தான் இந்த பதிவு எழுதுகிறேன் சகோ..!
நம் நலனுக்காக ஒருவரிடம் நாம் ஒரு அனுகூலத்தை பெறுகிறோம் என்றால், அவர் விருப்பப்படி நாம் நடந்துகொள்வோம். ஏன்..? அவர் அதை மறுத்து விடக்கூடாது என்று..! தமக்கென்று சில கொள்கைகள் கொண்டோர் அதற்குரிய எல்லை வரை வளைந்து கொடுப்பர். எக்கொள்கையும் இல்லாதார், தம் காரியம் நடக்கவேண்டி... எந்த தரத்துக்கும் இறங்கி சென்று விடுவர். ஆக, நமக்கு அனுகூலம் தருபவரின் கோரிக்கையை வைத்து அவரின் தரத்தையும் நாம் அறிந்துகொள்ளலாம். அதே நேரம், அக்கோரிக்கை அறத்துக்கு அப்பாற்பட்டு இருந்தாலும், அனுகூலம் அடைபவர் அதை மறுக்காமல் நிறைவேற்றுவாராயின் அவரின் தேவையின் அவசியத்தையும் புரிந்து கொள்வோம்.
தற்போது இந்திய ரூபாயின் மதிப்பு அதலபாதாளத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. அதை தூக்கி நிறுத்துவதே பொருளாதார மேதையாக மட்டுமின்றி ஒரு பிரதமராக டாக்டர் மன்மோகன் சிங்குக்கு மிக முக்கியம். இதற்கு FII (Foreign Institutional Investors) அதாவது அந்நிய பண முதலைகள் நிறைய பணத்தை டாலர்களில் இந்திய சந்தையில் முதலீடு செய்ய வேண்டும். திறந்த பொருளாதார சந்தையில் இவர்கள் வரவு குறைந்தால் DII (Domestic Institutional Investors) ...அதாவது உள்நாட்டு இந்தியர்கள் என்னதான் ரூபாயில் கோடி கோடியாக சந்தையில் முக்கினாலும் ரூபாயின் மதிப்பு சரியாத்தான் சரிகிறது.
ஆனால், ஒன்று மட்டும் தெளிவு : இவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் பங்குச்சந்தையில், விதையளவுக்கு போட்டதை இப்போது... மரமளவுக்கு எடுக்கிறார்கள். ஒரு நிறுவனத்தில் திடுமென லட்சம் பங்குகள் ஒரேநாளில் இவர்களால் விற்கப்படும்போது அந்த ஆயிரம் ரூபாய் பங்கு அடுத்தநாளே ஐம்பது ரூபாய் ஆனால் கூட இவர்களுக்கு அது பற்றி எந்தக்கவலையும் இல்லை. ஏனெனில், முந்நாளில் இதே நிறுவனத்தின் சில லட்சம் பங்குகளை ஒவ்வொன்றும் நூறு ரூபாய்க்கு வாங்கி அதில் பாதியை இருமடங்கு, ஐம்மடங்கு என விற்று அப்போதே லாபம் சேர்த்து இருப்பார்கள். இந்த பங்கு வீழ்ச்சியினால் தூக்கில் தொங்குவது என்னவோ இறுதியாக வந்த DII-க்கள்தான்..! FII-க்களுக்கு என்றும் நஷ்டம் வராதபடிக்குத்தான் சட்டங்களும் சலுகைகளும் (high %, no circuit breaker போல...) காப்பாற்ற இருக்கின்றன.
இவர்கள் திடீரென மொத்தமாக எதை வாங்குகிறார்களோ அதுதான் கிரீன் டாப் index. இவர்கள் திடீரென மொத்தமாக எதை விற்கிறார்களோ அதுதான் ரெட் டவுன் index. ஆனால், இவர்கள் எப்போது வருகிறார்கள், சந்தையில் எந்த கம்பெனியின் பங்குகளை எப்போது வாங்குகிறார்கள், எந்த கம்பெனியின் பங்குகளை எப்போது விற்கிறார்கள், தற்போது என்ன செய்கிறார்கள்... இனி என்ன செய்வார்கள்... என்பதெல்லாம் மர்மம்தான். இவர்கள் ஆடும் ஆட்டம் எல்லாம் ஆடிமுடிந்த பின்னர்தான், எல்லாருக்கும் எல்லாமும் புரிகிறது..! மொத்த மீடியாவும் இவர்கள் கையில் இருப்பதாக உணர்கிறேன். அதனால்தான் இது சாத்தியமாகிறது என்று நினைக்கிறேன்.
பல மீடியாக்கள் "இந்த பங்குகளை வாங்குங்கள்...", "இதை விற்பனை செய்யுங்கள்...", "இதை விற்காதீர்கள்...பொறுங்கள்..." என்றெல்லாம் DII-க்களை குழப்பி அல்லது தாங்கள் விரும்பும் வழியில் செல்லவைத்து 'FII-க்களுக்காக சேவை' செய்வதாகவே தெரிகிறது..! மொத்தத்தில் இவர்கள் கையில் இந்திய பொருளாதாரம் மாட்டிக்கொண்டு விழி பிதுங்குகிறது. பங்குச்சந்தை என்பது... பணம் பண்ணும் பணக்காரர்களின் பக்கா சூதாட்டம்... என்பது என் உறுதியான முடிவு..!
FII control our market..! Chart in red line is nifty and below in grey is FII |
பல மீடியாக்கள் "இந்த பங்குகளை வாங்குங்கள்...", "இதை விற்பனை செய்யுங்கள்...", "இதை விற்காதீர்கள்...பொறுங்கள்..." என்றெல்லாம் DII-க்களை குழப்பி அல்லது தாங்கள் விரும்பும் வழியில் செல்லவைத்து 'FII-க்களுக்காக சேவை' செய்வதாகவே தெரிகிறது..! மொத்தத்தில் இவர்கள் கையில் இந்திய பொருளாதாரம் மாட்டிக்கொண்டு விழி பிதுங்குகிறது. பங்குச்சந்தை என்பது... பணம் பண்ணும் பணக்காரர்களின் பக்கா சூதாட்டம்... என்பது என் உறுதியான முடிவு..!
அதாவது, ஒரு தெருவில் பத்து இறைச்சிக்கடை இருந்தாலும், அசைவப்பிரிய மக்களிடம் அன்று ஒருசேர தேவை இருந்தால், பத்து பேரும் இலாபம் சம்பாதிக்கலாம். ஒருநாள், எல்லாரும் ஒருசேர அன்று சைவம் சாப்பிட விரும்பினால் அனைத்து இறைச்சி கடைகளுக்கும் நஷ்டம் வரலாம். இது நிகழ வாய்ப்பு அரிது அல்லது வாய்ப்பு இல்லை. இங்கே ஒரு சிலர் முதலில் நஷ்டம் அடைந்தால்தான் வேறு சிலருக்கு இலாபம் என்றில்லாததால், இது வியாபாரம்.
ஆனால், பங்கு சந்தையில் யாராவது சிலர் இலாபமடைய வேண்டுமெனில், பல முதலீட்டாளர்கள் நஷ்டப்பட்டாக வேண்டும். இங்கே அதிக பங்குகளை கையாள்பவர்தான் இலாபம் அடைபவராக இருக்கிறார்..! இவர் எப்போதுமே இலாபம் அடைபவராகவும் அடுத்தவரின் நஷ்டத்தை நிர்ணயிப்பவராகவும் உள்ளார், அதற்கான அரசு அனுசரனைகளோடு..!
இந்த சூதாட்டத்தில் மிகவும் நுண்ணிய அறிவுத்திறனோடு அனுபவமுள்ள DII-க்கள்.., FII-க்களின் நடவடிக்கைகளை குத்துமதிப்பாக கணித்து அவர்களுடன் முடிந்தவரை இயைந்து இலாபம் பார்க்கிறார்கள் :-) வினாடிக்கு வினாடி பங்குச்சந்தை கிராஃப் நோக்கும் கண்கொத்தி கணினி பாம்புகள் இவர்கள். :-) இவர்களை... 'ரம்மி கிங்ஸ் வித் FII ஜோக்கர் கார்ட்ஸ்' எனலாம்..!
ஆனால், பங்கு சந்தையில் யாராவது சிலர் இலாபமடைய வேண்டுமெனில், பல முதலீட்டாளர்கள் நஷ்டப்பட்டாக வேண்டும். இங்கே அதிக பங்குகளை கையாள்பவர்தான் இலாபம் அடைபவராக இருக்கிறார்..! இவர் எப்போதுமே இலாபம் அடைபவராகவும் அடுத்தவரின் நஷ்டத்தை நிர்ணயிப்பவராகவும் உள்ளார், அதற்கான அரசு அனுசரனைகளோடு..!
FII-க்கள், தமக்குறிய இலாபம் குறைகிறது என்று அவதானித்தால், திடும் என்று வேறெங்கோ செல்கிறார்கள். எங்கு..? அதுவும் மர்மம்..! அது பின்னர் தங்கம் விலை, கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்தில் தெரியும்..! இவர்க்ளுக்குத்தான் அரசின் சலுகைகள் எத்தனை..? மேலும், என்னதான் சட்ட சலுகை காட்டினாலும் அவர்கள் திரும்பி வராவிட்டால்..? வலுக்கட்டாயப் படுத்த முடியாது..! அதற்கு ஒரே வழி ரூபாயின் மதிப்பு உயரவேண்டும். யாராவது டாலரை இந்தியாவில் வந்து பகிரங்கமாக கொட்ட வேண்டும். அப்போதுதான் புதிய FII-க்கள் வருவார்கள் அல்லது இருக்கும் FII-க்களை தக்கவைக்கலாம் என்பது மட்டுமல்ல... உள்நாட்டு பங்கு முதலாளிகளையும் (Reliance, TATA, WIPRO, Birla, Bajaj... போன்ற பல share promoters) அவர்களின் வாடிக்கையாளர்களான DII-க்களையும் திருப்தியுரவைக்கும்..!
இந்த உதவிக்குத்தான் இதோ வந்துவிட்டார் ஜப்பான் பிரதமர்..! 15 பில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய்) கொண்டு வந்து இந்தியாவில் பகிரங்கமாக நிறைக்கிறார். ( $ 15 billion... as swap arrangement* to stabilize the value of the Indian rupee ).
இந்த உதவிக்குத்தான் இதோ வந்துவிட்டார் ஜப்பான் பிரதமர்..! 15 பில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய்) கொண்டு வந்து இந்தியாவில் பகிரங்கமாக நிறைக்கிறார். ( $ 15 billion... as swap arrangement* to stabilize the value of the Indian rupee ).
இப்பேர்பட்டவருக்கு என்ன தேவையோ, என்ன விருப்பமோ, என்ன ஆசையோ... அதை, அடம்பிடிக்காமல், கவுரவம் பார்க்காமல் மகிழ்ச்சியுடன் நாம் நிறைவேற்றி வைத்தால்... அவர் இன்னும் அதிக டாலர்களை தரக்கூடும் அல்லவா..!? :-))
தற்போது, ஜப்பானின் காபரே நைட் கிளப்களில், டிஸ்கோத்தே ஹால்களில் தனுஷின் 'கொலவெறி' பாட்டு மகா பிரபலமாம். அதனால், தனுஷும் ஜப்பானில் பிரபலமாம். அப்பேற்பட்ட அற்புதத்தை(!?) பாடிய அதிசயமனிதரோடு(?!) சேர்ந்து உணவருந்த இந்த 'ஜப்பானிய கொலவெறி ரசிகர்'(?!) அதாவது... இந்த ஜப்பான் பிரதமர் விரும்பி இருக்கலாம்..! (அட... நம்புங்க சகோ..!)
மேலும், இந்த தனுஷ்தான், முன்னர்... ஜப்பானில் சூப்பர் ஹிட் ஆன "தில்லானா... தில்லானா... நீ...தித்திக்கின்ற தேனா...." குத்துப்பாட்டு புகழ்... 'முத்து' ரஜினிகாந்தின் மருமகன்..."---என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த(!?) கூடுதல் தகவல் அறிந்ததும், அவருக்கு தனுஷை சந்திக்கும் உற்சாகம் மிகவும் கூடி இருக்கலாம்...! தன் விருப்பத்தை இந்திய அரசிடம் பேச்சு வாக்கில் நயமாக வெளியிட்டு இருக்கலாம்..! அதை, சிரமேற்கொண்டு (உடனடியாக தனுஷுக்கு அழைப்பு விடுத்து) செய்து முடிக்கையில்... இப்பதிவில் மேற்கூறிய எவ்வளவு கேள்விகள்... எத்தனை விமர்சனங்கள்... எவர் கேட்டாலும், வழக்கம்போல இந்த காதில் வாங்கி அந்த காதில் வெளியே விட நம் சைலன்ட் கிங்-கிக்கு சொல்லியா தர வேண்டும்..?
மேலும், இந்த தனுஷ்தான், முன்னர்... ஜப்பானில் சூப்பர் ஹிட் ஆன "தில்லானா... தில்லானா... நீ...தித்திக்கின்ற தேனா...." குத்துப்பாட்டு புகழ்... 'முத்து' ரஜினிகாந்தின் மருமகன்..."---என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த(!?) கூடுதல் தகவல் அறிந்ததும், அவருக்கு தனுஷை சந்திக்கும் உற்சாகம் மிகவும் கூடி இருக்கலாம்...! தன் விருப்பத்தை இந்திய அரசிடம் பேச்சு வாக்கில் நயமாக வெளியிட்டு இருக்கலாம்..! அதை, சிரமேற்கொண்டு (உடனடியாக தனுஷுக்கு அழைப்பு விடுத்து) செய்து முடிக்கையில்... இப்பதிவில் மேற்கூறிய எவ்வளவு கேள்விகள்... எத்தனை விமர்சனங்கள்... எவர் கேட்டாலும், வழக்கம்போல இந்த காதில் வாங்கி அந்த காதில் வெளியே விட நம் சைலன்ட் கிங்-கிக்கு சொல்லியா தர வேண்டும்..?
நல்லவேளை...!!! ஜப்பான் பிரதமரின் 'கொலவெறி' தனுஷோடு நின்றதே..!!!
*Swap arrangements
Short-term reciprocal lines of credit between the Federal Reserve and 14 foreign central banks as well as the Bank for International Settlements. Through a swap transactions, the Federal Reserve can, in effect, borrow foreign currency in order to purchase dollars in the foreign exchange market. In doing so, the demand for dollars and the dollar's foreign exchange value are increased. Similarly, the Federal Reserve can temporarily provide dollars to foreign central banks through swap arrangements.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
'தானே' புயலால் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகள், பொருள்நாசம் மற்றும் பல இன்னல்களுக்கு உள்ளாகியிருப்போரின் சிரமம் அனைத்தும் குறைந்து, சோகம் நீங்கி அவர்களுக்கு இயல்பு வாழ்க்கை திரும்ப அமைய ஏக இறைவனை பிரார்த்திக்கிறேன்..!
47 ...பின்னூட்டங்கள்..:
அஸ்ஸலாமு அலைக்கும்,
யாரும் சிந்திக்காத விதத்தில் சிந்தித்து கட்டுரை எழுதியமைக்கு பாராட்டு.
//நல்லவேளை...!!! ஜப்பான் பிரதமரின் 'கொலவெறி' தனுஷோடு நின்றதே..!!!//
நக்கலான நல்ல கேள்வி
www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-1), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி..அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....
Assalamu alikum bro!
'econamics'' student'ana enakey padam eduthullirgal!
Nan ariyatha pala visayangal ariya thanthamaiku
"jazakallahu kair"
நல்ல பதிவு.வாழ்த்துக்கள்
Assalamu Alaikum,,
Good Post.
பதிவு நல்ல ஆழமான அலசல். நன்றி. {{{வழக்கம்போல இந்த காதில் வாங்கி அந்த காதில் வெளியே விட நம் சைலன்ட் கிங்-கிக்கு சொல்லியா தர வேண்டும்..?}}} ம்ம்ம்! ஆமாங்கோ. அவரு மவுன மன்னர்தான். இதல்லாம் கேட்டுக்க வேண்டிய தேவை என்ன அவருக்கு? தமிழ்நாட்டுக்கே வந்துட்டு அணை பத்தி ஒண்ணுமே சொல்லாமே திரும்பி போனாரே. அதங்காட்டியுமா? அவருக்கின்னாங்கோ, ஒரு வார்டு கவுன்சிலர் தேர்தலில் கூட நிக்கணுமா, உச்சி வெயிலில் பிரச்சாரம் பண்ணனுமா, ஜெயிச்சாகனுமேங்கிற டென்ஷனா, ஓட்டு போயிருமேன்ன கவலையா? டேரக்ட் பைனான்ஸ் மினிஸ்டர். அப்பால அதேபோல டேரக்ட் பிரதமர். என்ஜாய் பன்றாரு.
Jazaakallahu hairr. . Bro. . Nalla aalamana karuthai thelivaaga padhivu seidhullirgal. .
Idhai menmealum thodara veandum ena ungalai vaazhthukirean. Allah ungaluku seivanaga. . Aameen
Jazaakallahu hairr. . Bro. . Nalla aalamana karuthai thelivaaga padhivu seidhullirgal. .
Idhai menmealum thodara veandum ena ungalai vaazhthukirean. Allah ungaluku seivanaga. . Aameen
சலாம் சகோ,
இந்த சந்திப்ப, இந்த பின்னணில அலசுவீங்கன்னு நெனச்சுக்கூட பார்க்கல. வொண்டர்புல்.... பங்கு சந்தை பற்றி நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை. இன்று பங்கு வர்த்தகம் முதல், பெட்ரோல், உணவு தானியங்கள், தங்கம் இத்யாதி இத்யாதி அனைத்தின் விலையேற்றங்களும் போலியானவையே. இடைத்தரகர்கள் பண்ற வேலை சகோ இது. பாதிக்கப்படுபவர்கள் ஏழை மற்றும் நடுத்தர மக்களே. இப்படி போலியான விலையேற்றத்தை நடத்தி ஏழை மக்கள் வயிற்றில் அடித்து ஏன் தான் காசு சம்பாதிக்கிராங்கன்னு தெரியல. உலகச் சட்டங்கள் அனைத்தும் இவர்களை காப்பாற்றவே இருக்கிறது சகோ. இறுதித் தீர்ப்பு நாளில், அந்த ஏக இறைவன் முன்னிலையில் இவர்கள் படப்போகும் பட்டைப் பாருங்கள்.
every action has an equal and opposite reaction!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
நியாமான அலசல்
என்று இரண்டே வார்த்தைகளில் சொல்லி முடிக்க விருப்பமில்லை...
ஆக ஒரே வார்த்தையில் சொல்கிறேன் பதிவு
நச்!
புயலில் பாதிக்கப்பட்டோர்கள் அமைதியுடன் கூடிய இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் திரும்ப இறைவனிடம் இறைஞ்சியவனாய்!
@திருவாளப்புத்தூர் முஸ்லீம்அலைக்கும் ஸலாம் வரஹ்... (அழைப்பிற்கு நன்றி சகோ)
@s.jaffer.khanஅலைக்கும் ஸலாம் வரஹ்... ஏதோ இதை மட்டும் தெளிவாக படித்தேன்... பங்குச்சந்தை 'ஹலாலா... ஹராமா...' என அறிந்து கொள்ள... பித்தலாட்டம்+சூதாட்டம்+மோசடி+சூழ்ச்சி என்றும் ஆக மொத்தம் இது ஹராம் எனவும் அறிந்தேன்... தெளிந்தேன்... அவ்ளோதான் சகோ. சரியாக இருந்தால், எல்லா புகழும் இறைவனுக்கே..!
@சார்வாகன் 'வாழ்த்துகள்' என்பதே சரி..! "து" விற்கு அடுத்து "க்" வராதாம்... குற்றியலுகரம் எனும் தமிழ் இலக்கண விதிப்படி..!
@Riyasஅலைக்கும் ஸலாம் வரஹ்...
@முன்னாள் பிரதமர்கள் கூட்டணிஇதென்ன புதுக்கூட்டணி..? கலக்குங்க..!
@Unknownதுவாவிற்கு நன்றி. ஆமீன்.
@சிராஜ்அலைக்கும் ஸலாம் வரஹ்... மிகச்சரியான அருமையான கருத்துக்கள் கூறியுள்ளீர்கள் சகோ..!
@ஷர்புதீன்
@G u l a mஅலைக்கும் ஸலாம் வரஹ்...
அனைவரின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் கருத்துக்களுக்கும் நன்றி சகோதரர்களே..!
சலாம் சகோ
ஹா ஹா ஹா தமிழனுக்கே தமிழ் இலக்கணம் பிழையா ..............
@Rabbaniஅலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.ரப்பானி.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
பங்கு சந்தையில் சூதாட்டம்தான் நடக்கிறது என்பதை எளிய முறையில் அழகாக விளக்கியுள்ளீர்கள் சகோதரரே.
இதுபோன்ற எளிமையான விளக்கங்கள் எல்லா விஷயங்களிலும் வரவேண்டும்.
பதிவு இறுதிவரை நன்றாக வந்துள்ளது. ஆனால், இறுதியில் தனுசைப் பிரதமர் அழைத்ததன் பின்னணியாக ஆதாரமில்லாத பல "லாம்"களை அனுமானமாக போட்டு முடித்துள்ளீர்கள்.
யூகங்களை அடிப்படையாக வைத்து ஒரு விஷயத்தை அணுகுவதும் அதிலிருந்தே அவ்விஷயத்தை விமர்சனம் செய்வதும்...
கிட்டத்தட்ட இன்றைய அறிவியல் உலகை ஒத்துள்ளது - அனுமானங்கள் கோட்பாடுகளாகவும் அந்தக் கோட்பாடுகளை மையமாக்கி ஆராய்ச்சிகளும் அக்கோட்பாட்டிற்கு எதிரானவைகளையெல்லாம் பிழையானது என்ற விமர்சனமும்..... பின்னர் தம் கோட்பாடு பிழை என அறியவரும்போது, முந்தையதை இலகுவாக தூக்கிப்போட்டுவிட்டு புதியதைக் கோட்பாடாக அறிவித்துவிடும்.
ஆனால்,
யூகங்களை அடிப்படையாக வைத்து ஒன்றைக் கூறும் நமக்கு, பின்னர் அந்த யூகம் தவறு என தெரியவந்தால் அதைப்போன்று இலகுவாக தூக்கிப்போட்டு சென்றுவிடமுடியுமா? அல்லாஹ்விடம் மறுமையில் பதிலளிக்கக்கடமைப் பட்டுள்ளோமே?
ஆகவே, இதுபோன்ற அழகான, ஆழமான அலசல்களில் வெறும் யூகங்களுக்கு இடம் அளிக்காதீர்கள்.
தவறாக ஏதும் சொல்லியிருந்தால் மன்னியுங்கள்.
@இறை நேசன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.இறைநேசன்,
மிக நல்லதொரு பார்வையில் உங்கள் நேரிய விமர்சனம் அமைந்துள்ளது வரவேற்கத்தக்கதே. ஆனால், வேறேனும் சீரியஸ் விஷயமாக இருந்திருந்தால்..!
இவ்விஷயத்தை பொறுத்தமட்டில், விருந்தழைப்பிற்கு பின்னர் அந்த "15 பில்லியன் டாலர் ஸ்வப் அற்றேஞ்மென்ட்" தான் மிக முக்கியம். அதுதான் செய்தி. அங்கே... 'லாம்' எல்லாம் நான் போடவே இல்லை. லிங்க் உள்ளது.
அங்கே தனுஷுக்கு என்ன வேலை என்று யாருக்கும் எவ்வித ஐயமும் எழாவண்ணம் பிரதமர் அலுவலகம் மக்களுக்கு தெளிவுறுத்த வேண்டியது மிகவும் அவசியம்.
அறிவுக்கு ஏற்புடைய காரணம் சொல்லாவிட்டால் அதுவும் தவறுதான். அப்போது, 'லாம்கள்' வரத்தான் செய்யும்.
ஆனால், இந்த 'லாம்' கள் எல்லாம் பிந்திய உண்மை செய்திக்கு அஸ்திவாரம் இல்லை என்பதால் இப்பதிவில் பாரதூரமான பாவம் அல்லது குற்றம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை சகோ.இறைநேசன்.
எந்த குறுக்கு விசாரணைக்கும் நிற்கும் அளவுக்கு... தனுஷ் விருந்து அழைப்பிற்கு மெய்யான காரணம் தெரிந்தால் நீங்கள் கூறுங்கள் சகோ.
மற்றபடி, சீரியஸ் சந்திப்புகளுக்கு நீங்கள் சொல்வதை நான் பின்பற்றியாகத்தான் வேண்டும்.
ஆனால், இந்த மேட்டர் நீங்கள் அறிவியல் அளவுக்கெல்லாம் ஒப்பிடும் அளவுக்கு ஒர்த் இல்லை சகோ.இறைநேசன்.
வருகைக்கும் சிறந்த கருத்துக்கும் பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி சகோ.இறைநேசன்.
//தவறாக ஏதும் சொல்லியிருந்தால் மன்னியுங்கள்//--தேவை இல்லை சகோ. இதுபோன்ற விமர்சனங்களை நான் வரவேற்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்புச் சகோதரர் ஆஷிக்,
எந்த ஒரு சிறு விசயமாக இருந்தாலும் அது குறித்து १०० சதவீதம் உறுதியாக தெரியாத நிலையில் ஊகங்களின் அடிப்படையில் பேசுவது இஸ்லாமிய அடிப்படையில் பாவமானது என நான் விளங்கி வைத்துள்ளேன். அதன் அடிப்படையிலேயே இங்கு என் கருத்தைப் பதிந்தேன். அவ்வாறு ஊகங்களின் அடிப்படையில் பேசுவது பாவமான காரியமில்லை என நீங்கள் கருதினால் என் கருத்தைத் திரும்பப்பெற்றுக் கொள்கிறேன்.
என் கருத்தை அனுமதித்ததோடு பதில் விளக்கமும் தந்தமைக்கு ஜஸாக்கல்லாஹ்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
@இறை நேசன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
தனுஷ் விருந்தழைப்புக்கு, சம்பந்தப்பட்ட ஜப்பான் பிரதமரும், இந்திய பிரதமரும்... ஆதாரத்துடன் மக்கள் ஏற்றுக்கொள்ளும் படியான தகுந்த காரணம் ஒன்றை சொல்லியிருந்தால்... எனது இந்த ஆய்வுக்கும் அலசலுக்கும் வேலை இருந்திருக்காது.
//எந்த ஒரு சிறு விசயமாக இருந்தாலும் அது குறித்து १०० சதவீதம் உறுதியாக தெரியாத நிலையில் ஊகங்களின் அடிப்படையில் பேசுவது இஸ்லாமிய அடிப்படையில் பாவமானது என நான் விளங்கி வைத்துள்ளேன்.//---எந்த ஒரு சிறு விஷயமாக இருந்தாலுமா..?
சகோ.இறைநேசன்,
29 ரமலான் நோன்பு திறந்துவிட்டு அன்று இரவு மேகமூட்டமாக இருந்தால் பிறையை பார்க்காமலேயே 30க்கு போனார்களா அல்லது மேகத்துக்கு மேலே பறந்து போய் பிறை பார்க்க போனார்களா..?
இஸ்லாமிய நாடுகளில் துப்பறியும் இலாகாவே இல்லையா..? துப்புகளை வைத்து சரியாக யூகித்து துலங்கி குற்றவாளியை பிடிப்பது பாவமா..? சம்பவத்தை நேரில் பார்த்தவர் மட்டுமேதான் துப்பறிய வேண்டுமா..?
எங்கே ஆதாரம் இன்றி பேசக்கூடாது என்று குர்ஆன் சுன்னா கட்டளை நமக்கு இருக்கிறதோ அங்கே ஆதாரம் இன்றி நாம் பேசமாட்டோம்.
நேரிலேயே நீங்கள் ஒரு 'குற்றத்தை' பார்த்து இருந்தாலும் கூட.... 'இங்கே இத்தனை சாட்சி இருந்தால்தான் இவர் மேல் குற்றம் சாட்டலாம்' என்றால், 'அந்த வழக்கில்'- அங்கே- அவருக்கு எதிராக -அத்தனை சாட்சி கண்டிப்பாக நீங்கள் கொண்டு வந்தாக வேண்டும். இல்லையேல் மவுனிக்க வேண்டும்.
எங்கே...
யாருக்கு எத்தனை சாட்சி,
என்ன சந்தர்ப்பம்,
சரியான துப்புகள்,
உடைக்க முடியாத ஆதாரங்கள்,
காரணத்துடன் கூடிய அனுகூலங்கள், தீர அலசி ஆராய்ந்த வாதங்கள் ...எல்லாம் பொருந்தி உண்மையை வெளிக்கொண்டு வருமோ அங்கே அதை அப்படி 'உண்மையாக இருக்கும்' என்று முடிவு செய்வோம்.
(இதைக்கூட நான் எச்சரிக்கையாக 'லாம்' என்றுதான் போட்டுள்ளேன் சகோ..! நேரில் பார்த்தது போல சொல்லவில்லையே..?)
"தனுஷ் விருந்துக்கு சென்றதால்தான் 15பில்லியன் வந்தது(!?)" என்று "லாம்"க்கு மேலே ஆதாரக்கோட்டை எழுப்பவில்லையே நான்..? அப்படி சொல்லி இருந்தால், உங்களின் வாதம் சரி..! ஆனால், அப்படி நான் சொல்லவில்லையே..?
சகோ. இறைநேசன்,
நமது இஸ்லாம் மார்க்கம் நம் வாழ்க்கைக்கு மிக மிக எளிதானது. நம் இறைவன் மனம் திருந்தி மன்னிப்பு கேட்பவர்களை மன்னிகின்ற இறைவன். மனம் அறிந்து பாவம் செய்வோரை தண்டிக்கும் இறைவன்.
'இங்கே உண்மையை திரித்து பொய் கூறவேண்டும்' என்று நான் என் மனம் அறிந்து வேண்டுமென்றே பொய் ஏதும் கூறவில்லை. எனக்கு இங்கே இதில் அது அவசியமும் இல்லை.
பல கோணங்களில் அழைப்பின் காரணத்தை அலசிய பின்னர், இறுதியாக 'அது என்னுடைய முடிவு'. அவ்வளவுதான்.
முந்தைய முல்லை பெரியாறு பதிவில்... பிரவோம் இடைத்தேர்தல்தான் இந்த திடீர் அளப்பறைக்கு காரணம் என்று அரசியல் ரீதியாக அலசி ஆராய்ந்துதான் சொன்னேன். அந்த அரசியல் வாதிகளுடன் வாழ்ந்து பார்த்தா வந்து சொன்னேன்..?
என் கருத்தைத்தானே ஒரு வாரம் கழித்து அமைச்சர் ப.சிதம்பரம் கூட சொன்னார்..?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
அன்புச் சகோதரர் முஹம்மது ஆஷிக்,
இவ்விசயம் தொடர்பாக ஒரு வாதப் பிரதிவாதத்தை நான் கிளப்பவில்லை. உங்கள் இப்பதிவில் தனுஷின் அழைப்புக்குப் பல்வேறு காரணங்களை அலசி, இறுதியில் ஒரு முடிவுக்கு நீங்கள் வருவதாக முடித்திருந்தால் நீங்கள் கூறும் நியாயம் எனக்கு விளங்குமாக இருக்கும். ஆனால் நீங்கள் நேரடியாக இப்படியாக இருக்கலாம் என ஒன்றையே குறிப்பிட்டதால் எனக்கு அத்தகைய சந்தேகம் எழுந்திருக்கும்.
இதற்காக நபி(ஸல்) அவர்கள் நேரடியாக நமக்குக் கட்டளையிட்டுச் சென்றுள்ள பிறை பார்த்தலைப்போய் ஒப்பிட்டுவிட்டீர்களே! 30 க்கு மேக மூட்டமாக இருந்தால் இப்படி செய்து கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கட்டளையே போட்டப்பின்னர் கூடுதலாக மேகத்துக்கு மேலே செல்ல வேண்டிய தேவை நமக்கு இல்லையே சகோதரரே.
எனக்குப் பிழையாக தோன்றுவது மற்றவர்களுக்குச் சரியாக தோன்றலாம். எனக்குச் சரியாக தோன்றுவது மற்றவர்களுக்குப் பிழையாக தோன்றலாம்.
ஆகவே, இவ்விஷயத்தில் அநாவசியமான ஒரு வாதப்பிரதி வாதத்துக்கு நான் இல்லை சகோதரரே.
என் புரிந்து கொள்ளல் பிழையாக இருப்பின் அல்லாஹ் என்னை மன்னிக்கட்டும். என் கருத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
@இறை நேசன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
///உங்கள் இப்பதிவில் தனுஷின் அழைப்புக்குப் பல்வேறு காரணங்களை அலசி, இறுதியில் ஒரு முடிவுக்கு நீங்கள் வருவதாக முடித்திருந்தால் நீங்கள் கூறும் நியாயம் எனக்கு விளங்குமாக இருக்கும். ஆனால் நீங்கள் நேரடியாக இப்படியாக இருக்கலாம் என ஒன்றையே குறிப்பிட்டதால் எனக்கு அத்தகைய சந்தேகம் எழுந்திருக்கும்.///---கலர் கலராக.... பதிவின் முதல் பாதியே இதுதானே சகோ..?
//100 சதவீதம் உறுதியாக தெரியாத நிலையில் ஊகங்களின் அடிப்படையில் பேசுவது இஸ்லாமிய அடிப்படையில் பாவமானது//...ஒன்றும் இல்லையே.. என்பதற்காகவே, நபி(ஸல்) அவர்கள் கட்டளையான பிறை உதாரணம்...!
மற்றபடி,
//என் புரிந்து கொள்ளல் பிழையாக இருப்பின் அல்லாஹ் என்னை மன்னிக்கட்டும். என் கருத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்.//---நானும்தான்.
அலைக்கும் ஸலாம் வரஹ்...
அன்பு நானா ஆஷிக் அவர்களக்கு,
முதலில் தங்களின் பங்கு சந்தை பற்றிய புரிதல் மற்றும் இக்கட்டுரையை தர தங்கள் மேற்கொண்ட சீரிய முயற்சிகள் என்பவற்றிற்கு தலை வணங்குகிறேன் ...
ஆயினும் பொருளாதாரம் படிக்கும் மாணவன் என்ற வகையில் நான் உங்களின் கருத்துடன் முரண்படுகிறேன்...தாங்கள் அந்நிய முதலீடு மற்றும் பங்கு சந்தை விபரங்களை சரியான முறையில் கூறி விட்டு கொலை வெறி பாடல் தான் இந்தியாவின் நாணய மதிப்பை உயர்த்த போகிறது என கூறியது.பொருந்தவில்லை ...என் எனில் ஒரு நாட்டில் முதலீடு பெருக அவசியமான சில காரணிகளாக,
1 .அரசியல் ஸ்திரதன்மை.
2 .தனியாரை ஊக்குவிக்கும் பொருளாதார கொள்கை.
3 .சட்டம் நீதி ஒழுங்கு
4 .பொருளாதார உட்கட்டமைப்பு வசதிகள்.
5 .கைத்தொழில்/முதலிட்டு வலயங்கள் இன்னும் ....
ஒரு நாடு இக்கட்டான சூழ்நிலைகளில் பிற நாடுகளிடம் உதவி கோருவது பண்டைய காலம் தொட்டு இருந்து வருவது,அதனை அரசியல் ரீதியான நகர்வு ராஜதந்திர பார்வையில் பார்க்காமல்,கொலைவெறி பாடலை பாடிய தனுஷை இதில் இழுத்து விடுவது அவர் இந்து என்பதால் தனிப்பட்ட ரீதியில் தாக்குவது போல உள்ளது.பொருளாதார வளர்ச்சியை எட்ட இலங்கை போன்ற சிறிய நாடுகள் பெரிதும் நம்பி இருப்பது வெளி நாட்டு உதவிகளையே,அவ்வப்போது இந்திய போன்ற கைத்தொழில் நாடுகளும் இந்நிலைக்கு தள்ளப்படும் ..இது பொருளாதார சகட ஓட்ட நிலை..அண்மையில் கூட இலங்கையில் நாணய மதிப்பிறக்கம் செய்ய பட்டது...டொலர் மதிப்பு கூடும் எனினும் இலங்கையின் ஏற்றுமதி விலை குறைய கேள்வி கூடும் என எதிர்பார்க்க படுகிறது..ஆயினும் இந்திய போன்ற வல்லரசு பாதையில் இருக்கும் நாடிட்கு இது சற்று ஒவ்வாத தந்திரோபாயம்..எனவே ஜப்பானின் முதலீடு ஒரு வகையில் பாதிப்பு எனினும்,வேலை வாய்ப்பு பெருகல்,வளப்பயன்பாடு,அறியபடாத சந்தைகளின் வெளிப்பாடு போன்ற நன்மைகலயும் கொண்டு வரும் என்பதை மனதில் வைத்து கொண்டு வீண் பூச்சண்டிகழி ஒளித்து வைக்கவும்.
தனுஷின் கொலைவெறி பாடல் சரியான ராகத்தில் இல்லாததால் தான் பலகோடி மக்கள் அதனை கேட்கின்றனர்.தமிழ் மொழியை திரும்பி பார்கின்றனர்.மற்றும் தனுஷ் மன்மோகன் சிங் உடன் 2 வார்த்தை மட்டுமே பேசி உள்ளார்.இது அவரே பேட்டியில் குறிப்பிட்டது..கற்பனை குதிரைக்கு கடிவாளம் இடுங்கள் ...
http://youtu.be/YR12Z8f1Dh8
@Colombo Vijaiy
//கொலை வெறி பாடல் தான் இந்தியாவின் நாணய மதிப்பை உயர்த்த போகிறது என கூறியது.//---இப்படியோ
அல்லது
இந்த பொருள் வரும்படியோ
நான் எங்கே கூறியுள்ளேன்..?
எடுத்துக்காட்ட முடியுமா..?
சவால்..!
மணல்கயிறு திரிக்க வேண்டாமே..!
@Colombo Vijaiy//கொலைவெறி பாடலை பாடிய தனுஷை இதில் இழுத்து விடுவது அவர் இந்து என்பதால் தனிப்பட்ட ரீதியில் தாக்குவது போல உள்ளது.//---ஹா...ஹா...ஹா...
உங்கள் குற்றச்சாட்டில் கொஞ்சமும் உண்மை இல்லை என்பதற்கு எனது இந்த பதிவே ஆதாரம். நடுநிலையுடன் படித்துப்பாரத்தால் அறிந்து அதனை கொள்வீர்கள்.
@Colombo Vijaiy//வீண் பூச்சண்டிகழி ஒளித்து வைக்கவும்.//---ராய்ட்டார் செய்தி சுட்டி, மற்றும் பங்குச்சந்தை வரைபட ஆதாரங்களுடன் கூடிய பதிவு இது. இதற்கு ஹிந்துத்துவா பூச்சாண்டி காட்டுவது நீங்கள்தான்.
//தனுஷ் மன்மோகன் சிங் உடன் 2 வார்த்தை மட்டுமே பேசி உள்ளார்.//--அவர் ஒன்றுமே பேசாமல் வந்தாலும் ஒருநாள் முழுக்க உட்கார்ந்து பேசி இருந்தாலும்... இந்த பதிவுக்கு அது தேவையற்றது என்பது புரிகிறதா..?
பதிவு புரியவில்லை என்றால், எந்த இடத்தில் புரியவில்லை என்று கேட்பதை விடுத்து உங்களின்....//கற்பனை குதிரைக்கு கடிவாளம் இடுங்கள்...//---இது அப்படியே உங்களுக்குத்தான் பொருந்தும்.
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.விஜய்.
ஆனால், இனி குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் கூறுங்கள்..!
@Colombo Vijaiy//தனுஷின் கொலைவெறி பாடல் சரியான ராகத்தில் இல்லாததால் தான் பலகோடி மக்கள் அதனை கேட்கின்றனர்.தமிழ் மொழியை திரும்பி பார்கின்றனர்.//---ஆஹா.... இந்த கருத்தை படித்து, உங்கள் இசை அறிவை கண்டு அப்டியே... புல்ல்ல்ல்ல்ல்ல்ல்லரிக்குது இப்னு பகடு... ஸாரி, சகோ. கொலொம்பொ விஜய்.
இக்கட்டுரையின் பின்னணியே dhanush விருந்துக்கு அழைக்கப்பட்டது ஜப்பான் பிரதமரை ஐஸ் வைக்கத்தான் என்று கட்டுரை முழுதும் இழையோடி உள்ளது கண்கூடு..பங்கு சந்தை தொடர்பான தங்களின் கூற்றுக்களை நான் பிழை கூறினேனா???? தனுஷை இதற்கு முடிச்சு போடுவதன் நோக்கம் தான் என்ன? எப்போதுமே அந்நிய முதலீடு அதிகரிப்பது சாதகம் எனினும் மிதமிஞ்சிய வெளி நாட்டு தலையீடு நாட்டின் பொருளாதரத்தை " தங்கி இருக்கும் நிலை" பொருளாதராமாக மாற்றி விட வாய்ப்பு உண்டு,இதை பற்றி மட்டும் தங்களின் இந்த வாந்தி ...சாரி..... உவகை வரும் கட்டுரை அமைய பெற்றிருக்கும் எனின் சரி ...ஆனால் இந்த வசனம் எதை இணை கற்பிக்கிறது .....achahchooo ....அர்த்தம் கற்பிக்கிறது??
//அதே நேரம், அக்கோரிக்கை அறத்துக்கு அப்பாற்பட்டு இருந்தாலும், அனுகூலம் அடைபவர் அதை மறுக்காமல் நிறைவேற்றுவாராயின் அவரின் தேவையின் அவசியத்தையும் புரிந்து கொள்வோம்.//
//இப்பேர்பட்டவருக்கு என்ன தேவையோ, என்ன விருப்பமோ, என்ன ஆசையோ... அதை, அடம்பிடிக்காமல், கவுரவம் பார்க்காமல் மகிழ்ச்சியுடன் நாம் நிறைவேற்றி வைத்தால்... அவர் இன்னும் அதிக டாலர்களை தரக்கூடும் அல்லவா..!? :-))//
இதை தான் நான் தேவை இல்லாத ஒரு உள்நுழைப்பு என்கிறேன்....அப்படினா ஈரான் ,சென்ற வருடம் கொழும்பில் என்னை சுத்திகரிப்பு ஆலையில் புதிய தொகுதியை தன செலவில் திறந்து வைத்தது.அதற்கும் இலங்கையில் ஏதும் விருந்து வைத்து,ஏதும் supply ஆகிருக்குமோ??? உலகம் முழுதும் இப்பாடலை இன,மொழி வேறு பாடின்றி பாட்கின்றனர்,பல இந்திய பிரபலங்களும் இப்பாடலை பற்றி பேசி உள்ளனர்.இந்நிலையில் அப்பாடலை பாடிய பாடகனக்கு ஒரு சிறிய கெளரவம் கிடைப்பதில் "முஹம்மது ஆசிக்குகுகுகுகுகு " என்ன குடைச்சல்???
இங்க பாருங்களேன் பகடு மேல முஹம்மது நானாக்கு இருக்குற பாசத்த...துங்கும் போதும் பெற சொல்லிட்டே துங்குவிங்க போல???
ராகத்தில் உள்ளதோ தாளத்தில் உள்ளதோ ...பாடல் அனைவராலும் பார்க்க பட்டுள்ளது.மேலும் ஆபாச வசனங்களோ,அரை குறை வசனங்களோ,எப்படி தண்ணி குடிக்கணும்,எப்படி உச்சா போகணும்னு எல்லாம் இந்த பாட்டு சொல்லல..அது மட்டும் தான் பாடலின் ஒரே குறை ..
இது இஸ்லாமிய தளம் தானே??
உங்களின் FII குற்றசாட்டுகளில் கச்சா என்னை விலை ஏற்றத்துக்கு காரணம் தாங்களின் ஆனானப்பட்ட அரபு நாடுகள் தான்..
எத்தனையோ சாதனைகளை தனுஷ் செய்திருக்க(!?)... அதுவும் 'தமிங்கல (taminglish) மொழி'யில் எழுதப்பட்டு, உளறல் டோனில் பாடப்பட்ட, கேடுகெட்ட நடையில், நற்கருத்துக்கள் அற்ற இந்த கொலைவெறி மசாலா குத்து பாடலா... அந்த இரு நாட்டு பிரதமர்கள் கலந்து கொள்ளும் விருந்தில் தனுஷை அழைப்பதற்கு தகுதி பெற வைத்தது..? ச்சே... தனுஷுக்கே இது கேவலம்..///
தனுஷை vambukku இழுக்கவே illai ...நாடு நிலைமை ..............நாயகம் நீங்க தான்
பதிவு புரியவில்லை என்றால், எந்த இடத்தில் புரியவில்லை என்று கேட்பதை விடுத்து உங்களின்....//கற்பனை குதிரைக்கு கடிவாளம் இடுங்கள்...//---இது அப்படியே உங்களுக்குத்தான் பொருந்தும்.
பதிவு புரயுற மாதிரி இருந்தா என்ன இதுக்கு டவுட் கேக்க போறோம்????இக்கட்டான சூழ் நிலைகளில் வெளி நாட்டு உதவியும் பெற கூடாது,அல்லது மூடிய பொருளாதரத்தை நோக்கியும் செல்ல கூடாது..ஆயினும் வெளி நாட்டு முதலீட்டின் நல்ல பக்கத்தை தொடவே இல்லையே ...முழுக்க முழுக்க தனுஷ ஏண்டா விருந்துக்கு கூப்பிடாங்கநு நல்லா கறுவி வச்சுருக்கீங்க ...
ற்போது, ஜப்பானின் காபரே நைட் கிளப்களில், டிஸ்கோத்தே ஹால்களில் தனுஷின் 'கொலவெறி' பாட்டு மகா பிரபலமாம். அதனால், தனுஷும் ஜப்பானில் பிரபலமாம். அப்பேற்பட்ட அற்புதத்தை(!?) பாடிய அதிசயமனிதரோடு(?!) சேர்ந்து உணவருந்த இந்த 'ஜப்பானிய கொலவெறி ரசிகர்'(?!) அதாவது... இந்த ஜப்பான் பிரதமர் விரும்பி இருக்கலாம்..! (அட... நம்புங்க சகோ..!) ///
ஜப்பான் பிரதமருக்கு தாங்கள் தான் மின்சார விளக்கு supply செய்கிரிர்களோ..இதைதான் பொருமல் ணு சொல்லுவாங்க
ஏக்க இறைவனின் சாந்தியும் சமாதானமும் neengal போக போகும் சுவனத்தில் பரவுவதாக ....
கேக்க மறந்துட்டேன் ,
இப்போது இந்தியா தற்போது இந்தியா நோக்கி எதிர் நோக்கிஉள்ள பொருளாதார சிக்கலக்கு இஸ்லாமிய வங்கி முறைமை சரியாக அமையுமா?? அறிந்து கொள்ளும் ஆவலில் தங்களிடம் கேக்ட்கிறேன் ...
@Colombo Vijaiyஇப்னு ஷாகிர் என்ற பெயரில் வந்தால் கமென்ட் ரிலீஸ் பண்ண மாட்டேன் என்று இப்படி வேறு பெயரில் வருவதும் கேவலம்தான். பயந்தாங்கோளித்தனம்தான்.
சிந்தை தெளிவற்ற உங்கள் கேனத்தனமான இஸ்லாமியோபோபியா 'பாடி சோடா கொண்டை' எழுத்துக்களே காட்டிகொடுத்து விடுகின்றன.
சரி,
இப்போது நீங்கள் உளறிக்கொட்டி வைத்து இருக்கிறீர்களே... அதனை மூக்கை பொத்திக்கொண்டு பார்த்தால்...
//தனுஷை இதற்கு முடிச்சு போடுவதன் நோக்கம் தான் என்ன?//---தனுஷின் விருந்து அழைப்புக்கான காரணத்தை... முடிந்தால் அந்த காரணத்தை... நீங்கள்தான் லாஜிக்குடன் சொல்லுங்களேன்..! சொல்லித்தான் பாருங்களேன்...!
@Colombo Vijaiy///இந்த வாந்தி ...சாரி..... உவகை வரும் கட்டுரை அமைய பெற்றிருக்கும் எனின் சரி ...ஆனால் இந்த வசனம் எதை இணை கற்பிக்கிறது .....achahchooo ....அர்த்தம் கற்பிக்கிறது??///
அடடா.. என்ன ஒரு சிந்தை வறட்சி...!
உங்களிடம் ஒரே ஒரு கேள்வி...
ஜப்பான் பிரதமர் வருகை முடிவானது முன்பா...
அல்லது தனுஷ் அழைக்கப்பட்டது முன்பா...?
இதை வேறுமாதிரி கேட்டால்....
$ 15 billion... as swap arrangement* to stabilize the value of the Indian rupee தர ஜப்பான் பிரதமர் ஒத்துக்கொண்டது முதலிலா..?
அல்லது...
தனுஷ் விருந்துக்கு போனது முதலிலா..?
இன்னும் தெளிவாக...
ஜப்பான் பிரதமர் வரார் என்ற நியூஸ் ஃபர்ஸ்டா..?
அல்லது
தனுஷ் விருந்து அழைப்பு ஃபர்ஸ்டா..?
சிந்தித்தால் விடை கிடைக்கும்.
@Colombo Vijaiy//அதே நேரம், அக்கோரிக்கை அறத்துக்கு அப்பாற்பட்டு இருந்தாலும், அனுகூலம் அடைபவர் அதை மறுக்காமல் நிறைவேற்றுவாராயின் அவரின் தேவையின் அவசியத்தையும் புரிந்து கொள்வோம்.//----இங்கே 'அனுகூலம்' முதலிலா...? 'கோரிக்கை' முதலிலா...?
//இப்பேர்பட்டவருக்கு என்ன தேவையோ, என்ன விருப்பமோ, என்ன ஆசையோ... அதை, அடம்பிடிக்காமல், கவுரவம் பார்க்காமல் மகிழ்ச்சியுடன் நாம் நிறைவேற்றி வைத்தால்... அவர் இன்னும் அதிக டாலர்களை தரக்கூடும் அல்லவா..!? :-))//---அதாவது... நமக்கு ஸாரி, எங்களுக்கு (இந்தியர்களுக்கு) $ 15 billion... as swap arrangement* to stabilize the value of the Indian rupee தந்ததால்.... தனுஷ் வரவழைக்கப்பட்டாரா.... அல்லது தனுஷ் வந்ததற்காக... வந்த இடத்தில் திடீரென்று இந்த பணத்தை தந்தாரா..?
சிந்திக்க தெரிந்தவராயின்...
அப்படி ஏதும் சித்தித்து அனுபவமிருந்தால்...
சிந்தித்து இதற்கு பதில் கூறவும்..!
கூறினால், உங்கள் பின்னூட்ட கழிவுகளை நீங்களே அள்ள வேண்டி வரும் என்றால்... சிந்திக்க வேண்டாம்..!
@Colombo Vijaiy///உலகம் முழுதும் இப்பாடலை இன,மொழி வேறு பாடின்றி பாட்கின்றனர்,பல இந்திய பிரபலங்களும் இப்பாடலை பற்றி பேசி உள்ளனர்.இந்நிலையில் அப்பாடலை பாடிய பாடகனக்கு ஒரு சிறிய கெளரவம் கிடைப்பதில் "முஹம்மது ஆசிக்குகுகுகுகுகு " என்ன குடைச்சல்???///
புரிகிறது.... உங்கள் ப்ரோபைல் பார்த்தேன்.... இந்த பாடல் மீது எவ்வளவு பற்றும பாசமும் இருந்தால் இதன் பெயரில் வலைப்பூக்கள் ஆரம்பித்து இருப்பீர்கள்...
சரி, ஒரு தீவிர கொலைவெறி ரசிகனாக இருக்கும் உங்களிடம் இதுபற்றி நடுநிலையுடன் சிந்திக்க சொல்வது கஷ்டம்தான்...
என்ன செய்ய...
நீங்களும் தற்போதைய வெறி நிலையிலிருந்து நார்மல் மனநிலைக்கு ஒருநாள் திரும்பலாம் அல்லவா..?
@Colombo Vijaiy//பகடு மேல முஹம்மது நானாக்கு இருக்குற பாசத்த...//உங்க ப்ரோபைலில் அந்த தளத்துக்கு பால்லோவர் போட்ட நீங்கள் மட்டுமல்ல... அங்கே பின்னூட்டமிடும் எவருக்குமே முகமோ, மெயில் முகவரியோ, ஐபி அட்ரசோ இல்லை...
அனேகமா அந்த இஸ்லாமொபோபியா கழிவுக்குட்டையில் ஊறிக்கொண்டு போலி நாத்திக வேடம் போட்டுக்கொண்டு கிடக்கும் ஹிந்துத்துவாக்கள் நீங்கள் அனைவருமே...
...ஒரே நபராக இருக்கலாம்...
என்பது இப்போது தெள்ளத்தெளிவாகி விட்டது.
@Colombo Vijaiy//உங்களின் FII குற்றசாட்டுகளில் கச்சா என்னை விலை ஏற்றத்துக்கு காரணம் தாங்களின் ஆனானப்பட்ட அரபு நாடுகள் தான்..//---தப்பு.. தப்பு... உங்களுக்கு இன்னும் பதிவு புரியலை...
இதையும் பதிவில் தெளிவாகவே சொல்லி இருக்கிறேன்...
//FII-க்கள், தமக்குறிய இலாபம் குறைகிறது என்று அவதானித்தால், திடும் என்று வேறெங்கோ செல்கிறார்கள். எங்கு..? அதுவும் மர்மம்..! அது பின்னர் தங்கம் விலை, கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்தில் தெரியும்..!//..என்று..!
அந்த FII க்கள் தங்கள் பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்களோ அது ஏறும்..!
OPEC OIL COMPANYஸ்-களில் பணத்தை போட்டு அதை வாங்கினால் அதன் விலை ஏறும்..!
அதிலிருந்து எடுத்து தங்கத்தை டன் டன் னாய் வாங்கிப்போட்டால் அது ஏறும்..!
அங்கிருந்து பணத்தை எடுத்துவந்து இந்தியன் மார்கெட்டில் போட்டால் இன்டெக்ஸ் ஏறும்..!
புரியுதா...?
புரியாது...
ஏனெனில், நீங்கள் பொருளாதாரம் படிக்கும் அக்கவுண்டன்சி மாணவராக நீங்கள் இருக்கலாம்... ஆனால், இஸ்லாமொபோபியா உங்கள் சிந்தையை சிந்திக்க விடாது..!
@Colombo Vijaiy///ஜப்பான் பிரதமருக்கு தாங்கள் தான் மின்சார விளக்கு supply செய்கிரிர்களோ..இதைதான் பொருமல் ணு சொல்லுவாங்க///----ஹா...ஹா... இதற்கும் பதிவினூடே இதற்கு விக்கிபீடியா சுட்டி ஆதாரம் கொடுத்து இருக்கேன்... அதுகூட... அது சரியா என்று, விக்கி தந்த பல செய்தி சுட்டிகளை சரிபார்த்த பின்னாடி தான்..!
பொய் புளுகும் புருடா மன்னரே...!
இது ஒன்றும் நான் விட்ட புருடா இல்லை..!
அந்த சுட்டி இஸ்லாமோ போபியா கண்ணாடியை கழட்டி விட்டு படித்தால் தான் உங்கள் கண்ணுக்கு தெரியும்..!
@Colombo Vijaiy
//கேக்க மறந்துட்டேன்//...என் மறந்தீரு..?
போன வருஷமே கேரள கம்யூனிச கவர்மென்ட் இஸ்லாமிய வங்கியை கேரளாவில் இந்தியாவிலேயே முதன் முறையாக கொண்டுவரும் போது முதலவர் அச்சுதனனை கேட்டு இருக்க வேண்டியதுதானே..?
//அறிந்து கொள்ளும் ஆவலில் தங்களிடம் கேக்ட்கிறேன் ...//---சத்தியமாக உங்களுக்கு இதைப்பற்றி அறிந்து கொள்ளும் ஆவல் இல்லை என்கிறேன்..!
இருந்திருந்தால் கூகுளில் தேடி அறிந்திருப்பீர்..! இங்கே வந்து உங்களின் வில்லன் ஆன என்னிடம் வந்து கேட்டுக்கொண்டு இருக்க மாட்டீர்.
ஒரு முக்கிய அறிவிப்பு:
ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நாட்டு ஐபி-யில் ப்ராக்ஸி சாப்ட்வேர் மூலம் வந்தாலும்...
அல்லது ஐபியே இல்லாமல் வந்தாலும்....
பொய்யான அரபி புனைப்பெயரிலும் வந்து...
ஆரம்பத்தில் பின்னூட்டம் வெளியிட வேண்டாம் என்று கூறிவிட்டு...
இங்கிலாந்தின் இஸ்லாமொபோபியா வில் நான் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் சொல்ல திராணியின்றி...
இறைவனை பழித்து ஆரம்பித்து பின்னர் என்னையும், இஸ்லாமையும் கண்ணா பிண்ணா என இட்டுக்கட்டி அவதூறு வார்த்தைகளுடன் பின்னூட்டம் இட்ட...
'இப்ணு ஷாக்கிர்' ....என்ற உலகமகா 'தைரியசாலியே'...!
இப்போது...
நீர் "கொலொம்பொ விஜய்ய்" என்ற புதுப்பெயரில் வந்தாலும்...
இன்னும் பையர்பாக்ஸ், தி குவிக் பாக்ஸ், UNNNNMAI, அபு லஹப், தமிழன், ஆங்கிலன், ராஜன், அப்துல் ஹக்கீம், பகடு... என்று இன்னும் எத்தனை புனைப்பெயரில் வந்தாலும்...
ப்ராக்ஸி ஐபியில் வந்தாலும்... முகவரி இல்லாமல் வந்தாலும்... கேள்விகள் என்ற பெயரில் ஆபாச அருவருக்கத்தக்க உமது அதே நடையில் திட்டினாலும்...
உமக்கு நான் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்....
நீர் மனம் திருந்தி நல்ல பண்புள்ள மனிதனாக மாற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்..!
தமிழ் தான் தங்களின் பிரச்சனையோ???
சரி வருகிறேன் ...தனுஷ் இவ்விருந்துக்கு அழைக்கப்பட்டதன் நோக்கம் தான் என்ன? அண்மையில் முரளிதரன் 800 விக்கெட்டுக்களை(there no tamil word for wicket ) கைப்பற்றி சாதனை படைத்த போது,முரளிதரன் பாராளுமன்றதிட்கு அழைக்கப்பட்டு மரியாதை செலுத்த பட்டார்.கிரிக்கெட் உலகில் அம்மரியாதையை பெற்ற முதல் வீரரும் அவரே ஆவார்...அதே போலவே வெகுசன தொடர்பு சாதனமாகிய ஒரு இனைய தளத்தில் ஒரு ஒரு இந்தியன் சாதனை புரிந்தது அவனது துறையில் அவனால் அடையபெற்ற அதி உச்ச மேதகு நிலை ஆகும்.அவ்வேளையில் நாட்டின் பிரதமரக்கு இது தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை..ஆப்பாடகனை ஊக்குவிக்க ஒரு சிறு நடவடிக்கையாக இது அமைந்து இருக்கலாம்.அதனால்தான் என்னவோ தாங்கள் கூறிய சி.என்.என்,பி.பி.சி தொலைகாட்சிகள் கூட இந்த விடயத்தை ஒரு சிறு விடயமாக பார்க்கும் அதே வேளை தங்களின் பரிணாம வளர்ச்சிக்கு உட்படாது,படைக்கும் போதே வியத்தமுடயதாய் படைக்க பட்ட அபார மூளை தான் இவ்வாறு எல்லாம் சிந்தித்து கொண்டு இருக்கிறது....
@Colombo Vijaiyஎன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னாது..???
மறுபடியும் மோதலேர்ந்தா...?
ஹலோ...தனுஷை அழைத்து பாராட்டி வைக்கப்படும் விருந்தில்.... சப்பான் பிரதமருக்கு என்னங்காணும் வேலை...?
@Colombo Vijaiy///முரளிதரன் 800 விக்கெட்டுக்களை(there no tamil word for wicket ) கைப்பற்றி சாதனை படைத்த போது,முரளிதரன் பாராளுமன்றதிட்கு அழைக்கப்பட்டு மரியாதை செலுத்த பட்டார்.கிரிக்கெட் உலகில் அம்மரியாதையை பெற்ற முதல் வீரரும் அவரே ஆவார்...///----அப்போது எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை திறந்து வைத்த ஈரான்காரர்களும் முரளிதரனுடன் சேர்ந்து விருந்து சாப்பிட்டனரா..?
@Colombo Vijaiy//ஆப்பாடகனை ஊக்குவிக்க ஒரு சிறு நடவடிக்கையாக இது அமைந்து இருக்கலாம்.//
----இத்த்த்த்த்த்தே 'லாம்' ஐத்தான் நானும் பதிவில் ஆங்காங்கே உபயோகித்துள்ளேன்...!
நீங்கள் உடைத்தால் காற்றுக்குடம்..
நான் உடைத்தால் பொற்குடமா..?
என்னங்க லாஜிக் இது...?
நன்றாக ஊக்குவிக்கட்டும்.... அந்த ஊக்கை சப்பான் பிரதமர் முன்னாடி விற்றது ஏன்..?
இதுக்கு பதில் உண்டா...?
'லாம்' இலலாமல் சொல்லலாமே..?
@Colombo Vijaiy//தங்களின் பரிணாம வளர்ச்சிக்கு உட்படாது,படைக்கும் போதே வியத்தமுடயதாய் படைக்க பட்ட அபார மூளை தான் இவ்வாறு எல்லாம் சிந்தித்து கொண்டு இருக்கிறது....//---மிக்க நன்றி..!
எல்லா புகழும் இறைவனுக்கே..!
தனுசை பிரதமர் விருந்தில் கலந்து கொண்டது என்னவோ
உண்மைதான் ..ஆனால்.., அவருடன்
தனுஸ் சந்திக்க வாய்ப்பே கிடைக்கவில்லையாம்
இதனை தனுஸ் தனது பேட்டியில் கூறியிருந்தார்..,
விஜய் அவர்கள் அரபு நாட்டின் செயல்பாடுகளை
உங்கள்* என்று குறிப்பிடுவது தவறு ..,நாம் மொழியால்
தமிழர்.., தேசியத்தால் இந்தியன்..., நம்பிக்கையால் இஸ்லாமியர்...,
அரபியர்களின் நடவடிக்கை எதுவும் எம்மை சாராது ..,
அரபியர்கள் தனது நாட்டை அமெரிக்காவிடம் ஒப்படைத்து விட்டு
ஓட்டாண்டியாய் நிற்பது உங்களுக்கு தெரியாதா ..,
கச்சா என்னை விலை நிர்ணயிப்பது எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பது
குறைப்பது எல்லாம் அரபு அய்யா கையில் இல்லை ..விஜய் விளங்காமல்
எழுத கூடாது .. நம்பிக்கை அவரவர் விருப்பம்
ஐரோப்பாவில் நடக்கும் அட்டகாசத்துக்கு
தமிழக கிருத்துவர்கள் பொறுபேற்க முடியாது அதே போன்றுதான் நாங்களும்
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!