இனவெறி என்றால் என்ன தெரியுமா சகோ..?
"ஒருவர் தன் சமுதாயத்தை நேசிப்பது இனவாதமாகுமா?" என்று முஹம்மது நபி(ஸல்)யவர்களிடம் தோழர்கள் கேட்டார்கள்.
அப்படித்தான், பாபர் மசூதி விவகாரத்தில் பெரும்பான்மை நடுநிலை இந்து மக்கள் முதல்... உ.பி.போலிஸ், இந்திய ராணுவம், மத்திய அரசு... வரை, கரசேவை கொடுமைகளை மவுனமாக வேடிக்கை பார்த்தது..! அலஹாபாத் ஹைக்கோர்ட் சொன்ன தீர்ப்பும் இதைத்தான் உணர்த்துகிறது..! காரணம்... 'ராமஜென்ம பூமி அரசியல்' என்பது தனது சமுதாயக்கடவுளுக்கு சாதகம் என்பதால்..! இது மதவெறி..!
இதேபோலத்தான்... முல்லை-பெரியாறு விவகாரமும். நடுநிலை மக்களுக்கு நன்கு புரியும். என்றாலும், தாங்கள் கேரளாக்காரர்கள் என்பதால் அவர்கள் கேரள அரசும், மலையாள ஊடகமும் செய்து வரும் கொடுமைகளுக்கு துணை போகிறார்கள். காரணம்... முல்லை-பெரியாறு ஒழிந்தால் அது தனது மொழிக்காரர்களுக்கு சாதகம் என்பதால்..! இது மொழிவெறி..!
நான், தமிழ் மொழி பேசுகிறேன் என்பதால் தமிழர்களுக்கு ஆதரவாக இங்கே எழுதவில்லை சகோ..! எனக்குப்பட்ட நியாயத்தை மட்டுமே எழுதுகிறேன்..!
மலையாளிகளை பொறுத்தமட்டில் நடுநிலையாளர்கள் குறைவு. நேற்று என்னுடன் பணியாற்றும் ஓர் அரபி என்னிடம் வந்து... "எதுக்குங்க... நீங்க உங்க விரிசல் விட்ட ஓட்டை டேமில் ஃபுல்லா தண்ணீர் நிரப்பி வைத்து கேரளா மக்களை கொல்ல பார்க்குறீங்கலாம்..?" என்றதும், அரண்டுவிட்டேன்..! இத்தனைக்கும் எங்கள் துறையில் மலையாளியே கிடையாது. "யாருங்க உங்களுக்கு இப்படியெல்லாம் சொன்னது..?" என்றேன். முந்தாநாள் முடிவெட்ட சென்ற இந்த அரபியிடம், முடிவெட்டிக்கொண்டே இந்த நச்சுக்கருத்தை சேர்ப்பித்து இருக்கிறார் அந்த மலையாளி..! அடப்பாவமே..! Why this மொழிவெறி கேரள சகோஸ்..?
ஆறிப்போன இந்த மேட்டர், ஏன் இப்படி திடீரென்று மீண்டும் சூடுபிடிக்கிறது..? என்னகாரணம்..?
இவ்வருடம், கடந்த ஏப்ரல் மாதம் நடந்த கேரள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான UDF, 72 இடங்களையும், CPM தலைமையிலான இடதுசாரிகளின் LDF 68 இடங்களையும் கைப்பற்றியது. இதனால், காங்கிரஸ் கட்சியிலிருந்து உம்மண் சாண்டி என்ற ஒருவர் முதல்வராக்கப்பட்டார்.
ஆளும் கூட்டணியில் உள்ள 'கேரளா காங்கிரஸ்' என்ற கட்சியின் தலைவர் அமைச்சர் T.M.ஜேக்கப் (food and civil supplies minister) கடந்த அக்டோபர் 30ல் இறந்ததால், அத்தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இவர் இறந்ததால், 140 இடங்களைக்கொண்ட கேரள சட்டமன்றத்தில் காங்கிரஸ் ஆளும் கூட்டணியின் பலம் 71 இடங்கள் என்றாகிவிட்டது. சட்டமன்றத்தில் ஏதேனும் ஒரு வாக்கெடுப்பு என்றால்... இதில் ஆளும் கட்சியின் சட்டசபைத் தலைவர் ஒருவர் போக காங்கிரஸ் கூட்டணியின் ஓட்டு பலம் இப்போது 70 என்றாகிறது அல்லவா..?
வரக்கூடிய இடைத்தேர்தலில் ஒருவேளை காங்கிரஸ் தோற்றுவிட்டால், இடதுசாரிகளின் பலம் சட்டமன்றத்தில் 69 ஆகிவிடும். ஆளும் கூட்டணியில் யாராவது ஒருத்தர் லீவு போட்டாலும் எதிரணியினர் சமபலம் பெற்றுவிடுவார்கள். அதனால் எப்படியும் இந்த இடைத்தேர்தலில் ஜெயித்தே ஆகவேண்டும் என்ற இக்கட்டான நிலையில் இருக்கிறார் முதல்வர் உம்மண் சாண்டி. (அரசியல் விபரங்களுக்கு மிக்க நன்றி : நாக இன்து)
கேரளா காரர்களே காசு வசூலித்து எடுத்த ஹாலிவுட் படமான DAM-999 இந்த நேரம்பார்த்து அதிர்ஷ்டவசமாக ரிலீசாக... அந்த படம் ஹிட் ஆகவேண்டுமானால் அதுபற்றிய மொழிவெறியை தூண்டிவிட்டால்தான் படம் எடுத்தவருக்கு பணம் குவியும் என்பதால்... அதன் டைரக்டர் கன்னாபின்னா என்று மொழிவெறியை தூண்டிவிட ஏதுவாக பிரஸ்மீட் ஏற்பாடு செய்து பேட்டியளிக்க... உடனே, ஊடகங்கள் காசுபார்க்கவேண்டி, இதனை பெரிய விஷயமாக்க... பதிலுக்கு தமிழக திரைத்துனையினர் கொந்தளிக்க... தமிழகத்தில் அந்த படம் வெளியாக தடைபோடப்பட... கேரள திரைத்துறையினர் மெழுகுவர்த்தி ஏந்தும் போராட்டம் அறிவிக்க... தமிழக ஐயப்பன் பக்தர்கள் சபரிமலையில் தாக்கப்பட.... ஆஹா... 'பழம் நழுவி பாலில் விழுந்தது' அரசியல்வாதிகளுக்கு...!
ஏன்..? எப்படி..? எதனால்..?
.
.
இங்கேதான் மிக முக்கியமான ஒரு விஷயம் உள்ளது சகோ..! நடைபெற உள்ள இடைத்தேர்தல் எங்கே..? மந்திரி ஜேக்கப் இறந்த பிரவோம் (PIRAVOM) என்ற தொகுதியில்தான்..! சரி, அது எங்கே இருக்கிறது தெரியுமா..? "முல்லை பெரியாறு அணை உடைந்தால் கேரளாவின் ஒரு பகுதியே கடலில் மூழ்கி அழிந்துவிடும்" என்று எந்தப்பகுதியை காட்டி மக்களை பயமுறுத்து கிறார்களோ அந்த பகுதியில் தான் இந்த தொகுதியும் வருகிறதுங்கோ சகோ..! புடிச்சிட்டோம்ல அரசியல் ஆணிவேரை..?
Piravom இடைத்தேர்தல் : மலையாளிகளின் மார்ஃபிங் & கிராஃபிக்ஸ் இணைய பயங்கரவாதம் |
முல்லைப்பெரியாறு விஷயம் காட்டுத்தீயாக மீண்டும் மக்களிடம் பற்றிக்கொள்ள, உடனே, கேரள முதல்வர் ஒரு அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய... கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், நடக்கவே முடியாத நிலையிலும் வந்து முல்லை பெரியாறு அணையை பார்வையிட்டுவிட்டு, 'கேரள மக்களின் உயிருக்கு ஆபத்து' என்று பொய்ப்பிரசாரம் செய்து ஒருநாள் (டிசம்பர் 7) உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.
எனக்கு இப்போது என்ன நியாபகத்துக்கு வருகிறது என்றால்.... இப்படித்தான் கர்நாடகா தேர்தலுக்கு முன்னாடி, பெங்களூரில் இருந்து ஓடிவந்து ஒக்கேனக்கலில் கொடிநட்டுவிட்டு... "வெற்றி..வெற்றி..." என்று "ஒக்கேனேக்கல் கொண்டான்" போன்று ஏதோ ஒரு நாட்டை வென்ற மன்னனை போல... பெங்களூர் ஓடி தேர்தலில் வென்று முதல்வரானதும் ஒகேனக்கல் என்ற வார்த்தையையே மறந்த ஊழல் மன்னன் எட்டியூரப்பாதான் நியாபகத்துக்கு வருகிறார்.)
பதிலுக்கு கேரள சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மத்திய நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ஜோசப் (மத்திய மந்திரிக்கு இங்கே என்ன வேலை...? இதுதான் மொழிவெறி..!) உள்ளிட்டோர் வந்து அணையை பார்வையிட்டுவிட்டு, (ஏம்பா... நீங்கள் எல்லாம் இதற்கு முன்னாடி இந்த அணையை பார்த்ததே இல்லையோ..?) 'அணையில் நீர்க் கசிவு, விரிசல், நிலநடுக்கம்’ என்று அவரவர்களின் முறைக்கு அவரவர்கள் ஒருமுறை பொய்ப்பிரசாரம் செய்கிறார்கள்.
உண்மையில் அணையில் எந்த ஓட்டையும் விரிசலும் இல்லை. இதை நான் சொல்லவில்லை. இந்திய உச்சநீதிமன்றமே சொல்லிவிட்டது. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு பல ஆண்டுகள் ஆகியும் அந்த உத்தரவை கேரள அரசு உதாசீனப்படுத்தி வருகிறது. மத்திய அரசும், உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அணையை பரிசோதித்த அனைத்து நிபுணர் குழுக்களும் அணை பலமாக இருப்பதாகவே சான்றிதழ் கொடுத்து உள்ளனர். அதை பொறுக்க முடியாத கேரள அரசியல் கட்சிகள் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
Mullai Periyaru Dam--What a strong..! Kerala Politics --What a weak..! |
இப்போது அணையின் உறுதித்தன்மை குறித்து ஆராய அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான நிபுணர் குழுவினர் உச்சநீதிமன்றத்தில் நாளை (டிசம்பர்- 12, திங்கட்கிழமை) அறிக்கை அளிக்க உள்ளனர். அதுவும் தமிழ்நாட்டுக்கு சாதகமாகத்தான் இருக்கும் என கருதியே கேரள அரசு மீண்டும் பிரச்சினையை தீவிரப்படுத்துகிறது.
மேலும், கேரளக்காரர்கள் சொல்வதெல்லாம் உண்மையல்ல என்றும் அணையால் ஆபத்தல்ல என்றும், தொழில்நுட்ப ரீதியாக அணை உறுதியாகவே உள்ளது என்றும் அதிரை தண்டர் மற்றும் நாஞ்சில் மனோ பதிவுகளில் விளக்கமாக உள்ளது. அணை பற்றிய வரலாறுக்கு விக்கிபீடியா உள்ளது. படித்துக்கொள்ளுங்கள் சகோஸ்..!
மேலும், கேரளக்காரர்கள் சொல்வதெல்லாம் உண்மையல்ல என்றும் அணையால் ஆபத்தல்ல என்றும், தொழில்நுட்ப ரீதியாக அணை உறுதியாகவே உள்ளது என்றும் அதிரை தண்டர் மற்றும் நாஞ்சில் மனோ பதிவுகளில் விளக்கமாக உள்ளது. அணை பற்றிய வரலாறுக்கு விக்கிபீடியா உள்ளது. படித்துக்கொள்ளுங்கள் சகோஸ்..!
கேரள அரசியல் கட்சிகள்தான் ரொம்ப மோசம். ஆனால், முல்லை பெரியாறு அணையின் உண்மை நிலை தெரியும் என்பதால், ஒரு சில கேரள உயர் அதிகாரிகள் நடுநிலையுடன் எதிர்கருத்தும் சொல்கின்றனர். கடந்த வாரம் இப்படி ஒரு காமெடி கலாட்டா நடந்தது கேரள உயர் நீதிமன்றத்தில்..!
என்னவெனில்....
"அணை உடையப்போகிறது... அணை உடையப்போகிறது... என்கிறீர்களே, மக்களைப் பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்..?" என்று அரசைப்பார்த்து கேள்வி எழுப்பியது கேரள உயர்நீதிமன்றம்..! (அப்படிப்போடு... செம கேள்விமா..). அப்போது, "அணை உடைந்தால் 480 வீடுகள்தான் பாதிக்கும்" என்று பதில் தந்தது கேரள அரசு. "அணை உடைந்தால் ஐந்து மாவட்டங்கள், 45 லட்சம் மக்கள் கொல்லப்படுவார்கள்" என்று கூறப்பட்ட கருத்தை கேரள அட்வகேட் ஜெனரல் தண்டபாணி நிராகரித்த காரணத்தால்தான், அவரது உருவ பொம்மையை எரித்து வருகின்றனர் கேரள அரசியல்வாதிகள். இதுதாண்டா மொழிவெறி..!
"அணை உடையப்போகிறது... அணை உடையப்போகிறது... என்கிறீர்களே, மக்களைப் பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்..?" என்று அரசைப்பார்த்து கேள்வி எழுப்பியது கேரள உயர்நீதிமன்றம்..! (அப்படிப்போடு... செம கேள்விமா..). அப்போது, "அணை உடைந்தால் 480 வீடுகள்தான் பாதிக்கும்" என்று பதில் தந்தது கேரள அரசு. "அணை உடைந்தால் ஐந்து மாவட்டங்கள், 45 லட்சம் மக்கள் கொல்லப்படுவார்கள்" என்று கூறப்பட்ட கருத்தை கேரள அட்வகேட் ஜெனரல் தண்டபாணி நிராகரித்த காரணத்தால்தான், அவரது உருவ பொம்மையை எரித்து வருகின்றனர் கேரள அரசியல்வாதிகள். இதுதாண்டா மொழிவெறி..!
முல்லைப் பெரியாறு அணை இரு புறமும் மலைகளால் சூழ்ந்துள்ளது. அதனால் அணை உடைந்தால், உப்புத் துறையில் 420 குடும்பங்களும், சப்பாத்துப்பகுதியில் 580 குடும்பங்களும் மட்டுமே பாதிப்பு அடையும். அந்த இரண்டு கிராமங்களுக்கும்கூட, பாதுகாப்பாக 36 அடி உயரத்தில் கரை கட்டப்பட்டு உள்ளது. இந்த உண்மையை எடுத்துக்கூறிய பொறியாளர்களையும், கேரள அரசியல்வாதிகள் கடுமையாக விமர்சிக்கிறார்கள். முன்பு அணை உடைவது போலவும், வெள்ளத்தால் மக்கள் அடித்துச் செல்லப்படுவதாகவும் குறும்படம் இயக்கினார்கள். இப்போது அதையே DAM-999 என்ற பெயரில் (அதாவது.... தமிழக-கேரள குத்தகை ஒப்பந்த வருடங்களான 999 வருடங்கள்... இங்கே உள்குத்து) ஹாலிவுட் படம் எடுத்து, உலகெங்கும் உள்ள கேரள மக்களின் உணர்வுகளை தூண்டுகிறார்கள்.
போதாக்குறைக்கு இந்த பதிவில் முல்லை பெரியாறு அணை பற்றி புகைப்படம் போடுவதற்காக கூகுள் இமேஜசில் தேடினால்... மலையாளிகளின் கிராஃபிக்ஸ் மற்றும் ஃபோட்டோ மார்பிங் தொழில்நுட்ப பொய்ப்பிரச்சார கைங்கர்யம் களைகட்டுகிறது.
போதாக்குறைக்கு இந்த பதிவில் முல்லை பெரியாறு அணை பற்றி புகைப்படம் போடுவதற்காக கூகுள் இமேஜசில் தேடினால்... மலையாளிகளின் கிராஃபிக்ஸ் மற்றும் ஃபோட்டோ மார்பிங் தொழில்நுட்ப பொய்ப்பிரச்சார கைங்கர்யம் களைகட்டுகிறது.
நாம் ஏற்கனவே, எடியூரப்பா பற்றி பார்த்தோம். இங்கே, அத்வானி தலைமையிலான சங்பரிவார ஹிந்துத்துவா இயக்கங்கள்தான் என் நியாபகத்துக்கு வருகின்றன. மக்கள், ஊடகம், போலிஸ், ராணுவம், உச்சநீதி மன்ற உத்தரவு என அத்தனையையும் துச்சமாக எண்ணி தூக்கி எறிந்துவிட்டு நீதியை கடப்பறை கொண்டு இடித்தெறிந்து 'கொலைசேவை' செய்தார் அல்லவா அத்வானி..? அப்புறம், "ராமர் கோவில் கட்டியே தீருவோம்" என்று சொல்லி சொல்லியே மக்களை ஏமாற்றி ஓட்டுவாங்கி ஆட்சியையும் பிடித்தார்கள் அல்லவா பாஜக..? ஆனால், ஆட்சியை பிடித்தவுடன் ஆறுவருஷம் ராமரை (மீண்டும்..?) வனவாசம் அல்லவா அனுப்பி வைத்தார்கள் ..? பிறகு ஆட்சியை இழந்ததும் மீண்டும்..! கூடவே... ராமர் பாலம் வேறு..!
இதேபோலத்தான்... எல்லாமே இந்த பிரவோம் இடைத்தேர்தல் வரைதான்..! அதன் ரிசல்ட் - காங்கிரஸ் வெற்றி என்றால்... முல்லைப்பெரியாறு அடுத்த நான்கரை ஆண்டுகளுக்கு கேரளாவால் மறக்கப்படும்..! அவ்ளோதான் மேட்டர்..!
கேரளா சொல்லும் வாக்குறுதி..!
இப்போது... இவர்கள் 'ஊசலாடிக்கொண்டு?' இருக்கின்ற முல்லை பெரியாறு அணையை இடிப்பார்களாம்..! அப்புறம் வேறொரு படு உறுதியான புதிய அணை கட்டுவார்களாம்..! அங்கிருந்து தமிழகத்துக்கு நிறைய தண்ணீர் தருவார்களாம்..!
இது எப்படி இருக்கிறது தெரியுமா..?
1992-டிசம்பர் 6 அன்று காணாமல் போன பிரதமர் நரசும்மாராவ், அடுத்த நாள் வந்து... "அதே இடத்தில் மீண்டும் பாபர்மசூதி கட்டிதத்ரப்படும்" என்று வாக்குறுதி அளித்தார் அல்லவா..? அதையே டிசம்பர் 5ம் தேதி...: "அவங்க நாளக்கி இடிக்கட்டும்... அப்புறம் நான் நாளன்னிக்கி புதுசா கட்டித்தாரேன்" என்று சொல்லி இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்...? அப்படித்தான் இருக்கிறது, கேரள அரசு இப்போது சொல்வதும்..!
ஹா...ஹா...ஹா... ஏற்கனவே ஆந்திரா... கர்நாடகா... இவர்களிடம் தண்ணீர் பிரச்சினையில் நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் எல்லாம் நம் பக்கம் இருந்தும் ஏமாளிகளாகி அனுபவப்பட்டுவிட்டோம்.
ஒருவேளை நாளை, ஏதேனும் ஒரு கேரள கட்சிக்கு, ஆட்சிக்கு வரவேண்டுமானால், முல்லை பெரியாறு அணை உடைக்கப்பட்டால்தான் முடியும் என்ற மொழிவெறி முற்றிய நிலை வருமானால், அப்போது அணையை நோக்கி கேரள கரசேவைகள் உடைக்கச்சென்றால்... நேற்று பாபர்மசூதியில் ஏமாந்தது போல நல்லெண்ணம் கொண்ட நடுநிலையாளர்கள் நாளையும் ஏமாந்துவிட வேண்டாம்..!
இதோ நபியவர்களின் கூற்று "ஓர் இறைநம்பிக்கையாளன் (விஷஜந்துள்ள) ஒரே பொந்தில் இரு முறை கொட்டப்படமாட்டான்" (அனுபவம் அவனை அப்படி கை நுழைக்க வைக்காது) (புஹாரி : 6133) (முஸ்லிம் :2998)
இந்த ஹதீஸ் உதாரணம் தமிழகத்தை பொறுத்தமட்டில் தண்ணீர்-அணை விகாரங்களுக்கும் நன்றாகவே பொருந்தும்.
அனைத்து தமிழர்களும் கட்டாயம் பார்க்கவேண்டிய குறும்படம்..!
32 ...பின்னூட்டங்கள்..:
அணை உடையப் போகுதென்று இரவெல்லாம் கை வைத்து நீரை அடைத்ததாக நாம் கதை படித்த உன்னத நாட்டில் தான் அணையை வைத்து அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள்
நதிகள் இணைப்பு பற்றி பேசிய கூட்டம் எங்கே???????
சலாம்! அரசியல் எதில்தான் செய்வது என்பது விவஸ்தையில்லாமல் போய் விட்டது. இதனால் எத்தனை பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்பதைப் பற்றிய புரிதல் யாருக்கும் இல்லை.
நேற்று தமிழக முதலமைச்சர் கொடுத்த விளம்பரத்தில் உள்ள செய்தியையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்... முல்லைப் பெரியாறு நீர்பிடிப்பு பகுதியில் , பல ரிசார்ட்டுகள் கட்டப் பட்டுள்ளது என்றும்... நீர் மட்டம் உயர்த்தப் பட்டால் அந்த ரிசார்ட்டுகள் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதால் தான் கேரளா அரசியல்வாதிகள் கூக்குரல் இடுவதாக கூறியுள்ளது, கேரளா மக்களின் மனதை கொஞ்சம் தொட்டு தான் இருக்கிறது என்பது கேரளா அரசு கொடுத்த பதில் விளம்பரத்தால் தெரிகிறது ... இந்த பிரச்சினையால் பல முக்கிய பிரச்சினைகள் மறந்தே போய் விடுகிறது
சலாம் சகோ
இந்த அணை விவகாரத்தில் உங்களின் நடுநிலையான பார்வை இனிது சகோ
kerela government இந்த அணையை இடித்து புதிய அணை கட்டமுனைவது தண்ணீர் க்காக அல்ல அங்கு தண்ணீர் தேவைக்கு அதிகமாக உள்ளது மேலும் பூ கோள ரீதியில் அங்கு சமதளம் மிகவும் குறைவு மலைகள் அதிகம் ஆகையால் அவர்களுக்கு அதிகப்படியான தண்ணீரால் பயன் இல்லை. இருந்தாலும் அவர்கள் புதிய அணை கட்ட முனைவது அணை யை தங்களின் கட்டுப்பாடுகளில் கொண்டுவர பின்பு தமிழ்நாடு அரசு தற்போது உள்ள விலைக்கு தண்ணீர் வாங்க இயலாது. கிடைக்கும் தண்ணீருக்கான விலையாக பல ஆயிரம் கோடி கொடுக்க வேண்டியது வரும்
நன்கு தோலுரித்துக் காட்டியிருக்கிறீர்கள் மலையாள இனவெறியைத் தூண்டி விடுபவர்களை. இந்தப் பதிவில் ஒரு விடயத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். ராம ஜென்ம பூமியில் சிறுபான்மையினருக்கெதிராக பெரும்பான்மை வெறியைத் தூண்டி பேயாட்டம் போட்ட கடப்பாரைக் கட்சிக்காரர்கள் தான் கேரளாவைக் காக்க தமிழர்க்கு எதிராக மலையாள இனவெறியைத் தூண்டவும் செய்கிறார்கள் இத்தனை வன்முறைக்கும் கரணம் இந்திய தேசியம் காப்பவர்களான இவர்கள் தத்தமது மாநிலங்களில் என்ன செய்கிறார்கள் என்பதுதான் சிறப்பே. சிபிஎம், காங்கிரஸ், பாஜக என எல்லோரும். கூடங்குளம் பிரச்சனை தமிழ்நாட்டில் பிரபலமானதைக் காட்டிலும் கேரளாவில் முல்லைப் பெரியாறு பெரிதாக்கப்படுவதும் எதோ வேறு உள்நோக்கமிருப்பதையே காட்டுகிறது.
இந்த வாரத்திற்கு வலைசரத்தில் ஆசிரியராக இருக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. தினமும் வருகை தந்து கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும். மிக்க நன்றி
padhivu arumai thiru mohammed aashiq avargale
surendran
surendranath1973@gmail.com
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இந்த முறையேனும் கொட்டுபடாமல் அறிவாளியாய் செயல்படுமா தமிழக அரசு :-(
அருமையான நடுநிலை கட்டுரை சகோ.
பல விஷயங்கள் புரிந்துக்கொள்ள முடிந்தது
click and read the link
**** தினமணிதான் இந்துமுன்னணி! – வைத்தி மாமாவின் ஒப்புதல் வாக்குமூலம்!! தினமலர் மக்கள் விரோத பார்ப்பனியப் பத்திரிகை, தினமும் மலத்தை தள்ளுகிற பத்திரிகை என்பது ஊரறிந்த ஒன்று. ஆனால் தினமணி என்றால் நடுநிலைமையான பத்திரிகை என்று பல மிடில் கிளாஸ் மாதவன்கள் கருதுகிறார்கள். அது உண்மையல்ல என்பதற்கு சமீபத்திய சான்று. ****
.
சலாம்
என்னா சொல்றதுன்னு தெரில
நம்மை இழிச்ச வநாயிக்கும் E-Codes மாதிரி இருக்கு ... இந்த
போஸ்ட்ல தெரியாம நம்மள ஏமாத்துராணுக ..
முல்லை பெரியாறு - கேரளாவின் ராமஜென்மபூமி..! இந்த
போஸ்ட்ல தெரிஞ்சு நம்மள ஏமாத்துராணுக ..
சுயநலமே பொதுலம் ... இந்த உலகம் ..
அஸ்ஸலாமு அழைக்கும்.
பிரச்சினையை வித்தியாசமான கோணத்தில் அலசி இருக்கிறீர்கள். அருமை. இந்த கட்டுரையில் தவறில்லை. ஆனால் தலைப்பில் மட்டும் எனக்கு தவறாக பட்ட ஒரு விஷயம். ஒட்டு அரசியலுக்காக அணை இடிபட வாய்ப்பு உள்ளது என்று சொல்லிவிட்டு அப்புறம் எதற்கு அதை பாபர்மசூதி என்று சொல்லாமல் ராமஜன்மபூமி என்று சொல்லி இருக்கிறீர்கள்?
@VANJOORவரிக்கு வரி விளாசி இருக்கிறார் பழனி பாபா... மிக மிக நீ...........ண்ட இடுகை. பாதியில் நிறுத்த முடியாத அளவுக்கு ஆணித்தரமான ஆதாரங்களுடன் அமர்க்களமான செம சூடான பதில்கள்...!
இதை பொறுக்க முடியாமல்தான் கொலை செய்து விட்டார்களா..?
வருகைக்கும் சுட்டி பகிர்விற்கும் நன்றி சகோ.வாஞ்சூர்.
@இறைநேசச்செல்வன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
யோசித்து வைத்த தலைப்புதான்..!
///அப்போது அணையை நோக்கி கேரள கரசேவைகள் உடைக்கச்சென்றால்...///---இந்த வரி உங்களை இப்படி கேட்குமாறு குழப்பி விட்டது என்று நினைக்கிறேன். :-))
ஆனால், நீங்கள் பார்க்கும் கோணமும் நான் பார்த்த கோணமும் வேறு. (மெய்யாலுமே)
பதிவில் நான் சொல்லியுள்ளபடி,
எடியூரப்பாவுக்கு... 'ஒகேனேக்கல்' விவகாரம் ஒரு தேர்தலுக்கான ஓட்டு அரசியல்.
அத்வானிக்கு... 'ராமஜென்மபூமி' ஒரு தேர்தலுக்கான ஓட்டு அரசியல்.
அதேபோல, கேரள அரசியல்வாதிகளுக்கு... 'முல்லை பெரியாறு' ஒரு தேர்தலுக்கான ஓட்டு அரசியல்.
இப்படித்தான் சொல்ல விரும்பி அப்படியே சொல்லியும் இருக்கிறேன்.
இப்படி புரிந்து கொள்ளுங்களேன் சகோ..!
அதாவது,
"உடைக்க வேண்டும்" என்ற அலப்பறை 'ராமஜன்மபூமி-ஓட்டு அரசியல்....',
உடைக்கப்பட்டால்... அது 'பாபர்மசூதி-சோகம் மற்றும் கண்டனம்'...!
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திகும் என்னை சற்று நேரம் குழப்பி விட்டமைக்கும்(?!) மிக்க நன்றி சகோ.இறைநேசச்செல்வன்.
@இலக்கை நோக்கிஅலைக்கும் ஸலாம் வரஹ்...
///தெரிஞ்சு நம்மள ஏமாத்துராணுக ..///---ஆமாம் சகோ. இந்த கூட்டணியில் முஸ்லிம் லீக்கும் இருக்கிறது. கேரளாவில் கால்வாசி முஸ்லிம்கள். அவர்களுக்காகத்தான் முதல் பாராவை எழுத வேண்டி இருந்தது..! வேதனை..!
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திகும் மிக்க நன்றி சகோ.இலக்கை நோக்கி.
@ஆமினாஅலைக்கும் ஸலாம் வரஹ்...
///இந்த முறையேனும் கொட்டுபடாமல் அறிவாளியாய் செயல்படுமா தமிழக அரசு :-(///
---செயல்பட்டாக வேண்டும்..!
பொறுத்திருந்து பார்ப்போம் சகோ.ஆமினா.
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திகும் மிக்க நன்றி சகோ.ஆமினா.
@விழித்துக்கொள்தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திகும் மிக்க நன்றி சகோ.சுரேந்திரன்.
@thariq ahamedவருகைக்கும் அழைப்பிற்கும் இப்பதிவை வலைச்சரத்தில் பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி சகோ.தாரிக் அஹமத். தொடர்ந்து வருகிறேன்.
@thariq ahamedவருகைக்கும் அழைப்பிற்கும் இப்பதிவை வலைச்சரத்தில் பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி சகோ.தாரிக் அஹமத். தொடர்ந்து வருகிறேன்.
@தமிழானவன்///ராம ஜென்ம பூமியில் சிறுபான்மையினருக்கெதிராக பெரும்பான்மை வெறியைத் தூண்டி பேயாட்டம் போட்ட கடப்பாரைக் கட்சிக்காரர்கள் தான் கேரளாவைக் காக்க தமிழர்க்கு எதிராக மலையாள இனவெறியைத் தூண்டவும் செய்கிறார்கள்///----அடடா..! இவர்களும் உண்டா ஆட்டத்தில்..!? தொலைஞ்சுது.
///கூடங்குளம் பிரச்சனை தமிழ்நாட்டில் பிரபலமானதைக் காட்டிலும் கேரளாவில் முல்லைப் பெரியாறு பெரிதாக்கப்படுவதும் எதோ வேறு உள்நோக்கமிருப்பதையே காட்டுகிறது.///---ம்ம்ம்... இப்படியும் இருக்கலாம்..!
அரசியலில் நிறைய அறிய வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர்.
வருகைக்கும் அருமையான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சகோ.தமிழானவன்.
@Rabbaniஅலைக்கும் ஸலாம் வரஹ்... மிகச்சரியான கருத்து சகோ.ரப்பானி.
தற்போது இந்த முல்லை பெரியாறு அணையில் 110 அடி வரை நிரம்பியே இருக்கும் விதமாக dead storage... வைத்து கர்னல் பென்னி குயிக் கட்டி இருக்கிறார். இதற்கு பின் நிரம்பும் நீரே திறப்பு மூலம் திறக்கப்பட்டு கீழே... 7மடங்கு பெரிய இடுக்கி அணைக்கு வழிந்தோடுகிறது.
அநேகமாக புதிய அணை கட்டி அதன் ஒண்ணாவது(!?)அடியிலேயே திறப்பு வைத்து... இடுக்கியை நிறைப்பார்கள்.
பின்னர், "ஹி... ஹி... தண்ணீர் இருந்திருந்தால் நிச்சயம் கொடுத்திருப்போம் தமிழர்களே..! என்ன செய்வது அணை நிரம்ப வில்லையே..."--என்பார்கள்... கர்நாடகா...ஆந்திரா... மாதிரியே...
வருகைக்கும் அருமையான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சகோ.
@suryajeeva///முல்லைப் பெரியாறு நீர்பிடிப்பு பகுதியில் , பல ரிசார்ட்டுகள் கட்டப் பட்டுள்ளது என்றும்... நீர் மட்டம் உயர்த்தப் பட்டால் அந்த ரிசார்ட்டுகள் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதால் தான் கேரளா அரசியல்வாதிகள் கூக்குரல் இடுவதாக கூறியுள்ளது,///---அடி சக்கை..!
இதுதான்... 'பாம்பின் கால் பாம்பறியும்' என்பது..!
சில தமிழக அரசியல்வாதிகளும் அமைதியாக இருப்பதை கண்டால் அவர்களுக்கும் அங்கே ரிசார்ட்... தோட்டம் எல்லாம் இருக்கும் போல..!
//இந்த பிரச்சினையால் பல முக்கிய பிரச்சினைகள் மறந்தே போய் விடுகிறது//---இதுவும் முக்கியம்தானே சகோ.சூர்யா ஜீவா.
வருகைக்கும் அருமையான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சகோ.சூர்யா ஜீவா.
@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//இதனால் எத்தனை பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்பதைப் பற்றிய புரிதல் யாருக்கும் இல்லை.//---இது போன்ற அரசியல்வாதிகள் இருப்பது ஜனநாயகத்தில் அவலம்.
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.சுவனப்பிரியன்.
@சாதிக்
///நதிகள் இணைப்பு பற்றி பேசிய கூட்டம் எங்கே???????/// ----வா....வ்வ்வ்வ்...!
அந்த கூட்டத்தின் தலைவர் சொல்றார்...
"அணைகளை எல்லாம் ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும்" என்று..!
அப்படியென்றால் ராணுவத்தை யார் வசம் ஒப்படைப்பது..? அது மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தானே இருக்கும்..?
எனில், அங்கே கேரளாவில் ஆளும் ஏதோ ஒரு தேசிய கட்சி தானே ஆட்சியில் அமரும்..? தமிழ்நாட்டில் அவற்றுக்கு ஆளும் வாய்ப்பே இல்லையே..? அப்புறம், இப்பிரச்சினைக்கு ராணுவம் மட்டும் எங்கிருந்து எப்படி தீர்வு காணும்..?
குழப்புகிறார் அப்துல் கலாம்..!
வருகைக்கும் உள்குத்தை நியாபகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.சாதிக்..!
@rufina rajkumar//அணையை வைத்து அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள்//---எது ஓட்டுக்களை பெற்றுத்தருமோ அது...!
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.ரூஃபினா ராஜ்குமார்.
very good article. thank you.
* வெத்து வேட்டு விஜயகாந்து! எத்தனை படத்தில் தேசபக்தி பேசி தீவிரவாதிகளை அடக்கி இந்தியாவை காப்பாற்றினீர்களே! பாவம் சார் நீங்கள்!
* முல்லை பெரியாறு, கூடங்குளம் ஒருங்கிணையும் தமிழர்கள்! தமிழர் எழுச்சி ஓங்கட்டும்!
* மோதல்களை தடுத்து நிறுத்துங்கள் SDPI ! சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் கோரிக்கை
* தமிழர்களின் எழுச்சியும், ஹிந்துத்துவாவின் ஆர்ப்பாட்டமும்! கூடங்குளம் அணுமின் நிலயத்தை உடனே திறக்க வேண்டும் இந்து மகாசபா ஆர்ப்பாட்டம்!
கேரளா அரசு தண்டிக படவண்டும் தமிழ் நாடு முல்லை அன்னையை விட்டு கொடுக்க கூடாது கேரளா மக்க்களை தமிழ் நாடை விட்டு கேரளா செல்ல வஆண்டும் கேரளாவிற்கு அத்யாவசிய பொருட்கள் தரக் கூடாது ஓவொரு தமிழனும் சிந்திக்க வண்டும
@PUTHIYATHENRAL//very good article. thank you.//---வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நல்ல சுட்டிகளுக்கும் மிக்க நன்றி சகோ.புதியதேன்றல்.
@Unknown//ஓவொரு தமிழனும் சிந்திக்க வண்டும//---நிச்சயமாக... ஆனால், நீங்கள் சொன்னமாதிரி பிரிவினை போக்கில் அல்ல.
எல்லா மலையாளிகளும் அநியாயக்காரர்களாக இருக்க முடியாது. நாம் அப்படியெல்லாம் செய்தால்... பாவம், அவர்களும் பாதிக்கப்படுவார்களே சகோ.unknown.
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.
@Benzene International Pte Ltdவருகைக்கு மிக்க நன்றி சகோ.
இந்தனை செய்திகளை ஒன்றாக தந்த்மைக்கு மிக்க நன்றி நன்றி
@chandrasekarவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.சந்திரசேகர்.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!