ஆங்கிலேய கவர்னர் ஜென்ரல் லார்ட் டல்ஹவுசி பற்றியும், 1857 -ல் நடந்த முதலா'இரண்டாம்' இந்திய சுதந்திரப்போராட்டம் குறித்தும் பள்ளியில் வரலாற்று பாடத்தில் தவறாமல் படித்து இருப்பீர்களே சகோ..? அப்போது, ஆங்கிலேயர்களிடம் வேலை பார்த்த இந்திய சிப்பாய்களுக்கு புதிதாக வழங்கப்பட்ட என்ஃபீல்ட் துப்பாக்கிகளுக்கான தோட்டாக்கள் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வழங்கப்பட்டன அல்லவா..? ஈரப்பதத்துடன் உப்புக்காற்று வீசும் கடல் பயணத்தை, மாதக்கணக்கில் கப்பலில் கடந்து வரும் தோட்டாக்கள், வீணாகாமல் அதே புதுப்பொலிவுடன் வந்து சேர வேண்டும் என்பதற்காக, (தற்போது கடையில் கதவு 'கீல்', தாழ்ப்பாள், பூட்டு போன்ற இரும்பு இயங்கு சாதனங்கள் வாங்கும்போது அவை கிரீஸ் எண்ணெய் பிசுக்குடன் இருப்பதை கண்டிருப்பீர்கள். அது அவற்றின் பாதுகாப்பிற்காக என்பது உங்களுக்கு தெரியும்) அந்த புதிய தோட்டாக்கள் மீது பன்றிக்கொழுப்பை தடவி, கொண்டு வந்தார்கள்.
அவற்றை உபயோகிக்கும் இந்திய சிப்பாய்கள், கைகளில் கனமான ரைஃபிளை ஏந்தியவாறு அந்த இறுகிய கொழுப்பு உறையை தம் பல்லினால் கடித்து பிய்த்து எறிந்துதான் தோட்டாவை உபயோகிக்க பணிக்கப்பட்டனர். இப்போதுதான், அந்த கொழுப்பு உறை பற்றி சிப்பாய்கள் கேள்வி கேட்க, அவை 'பன்றிக்கொழுப்பு' என்று சொல்லப்பட, ஆங்கிலேயே ஏகாதிபத்திய அடக்குமுறையை எதிர்க்க ஏதோ ஒரு காரணம் தேடிக்கொண்டு இருந்த சிப்பாய்களுக்கு கிடைத்தது ஓர் அற்புத வாய்ப்பு..!
உடனே இந்திய முஸ்லிம் சிப்பாய்கள் அவற்றை உபயோகிப்பதை புறக்கணிக்க, அதிர்ந்த ஆங்கிலேயே தளபதிகள்... அவை ஆட்டு மாட்டு கொழுப்புகள் எனக்கூறி சமாளிக்கப்பார்க்க, "அப்படியெனில் பசுவின் கொழுப்பும் உண்டா..?" என்று இந்து சிப்பாய்கள் வினவ ஆரம்பிக்க, அனைத்து வகை விலங்கு கொழுப்புகளும் இருப்பதாக பதில் வர, உடனே தெய்வமாக புனிதப்பசுவை வணங்கும் அவர்களும் சுதந்திர போராட்டக்களத்தில் முஸ்லிம் சிப்பாய்களுடன் இணைய... இப்படியாகவும் வெடித்ததுமுதல்'இரண்டாம்' இந்திய சுதந்திரப்போர்..!
இது ஒருபுறமிருக்க, துப்பாக்கி ரவையில் பன்றிக்கொழுப்பு ஏன்..? தோட்டாக்களை பாதுகாக்க கொழுப்பிற்காக பன்றிகளை கொன்றார்களா..? இல்லை..! இங்கிலாந்து உட்பட பல ஐரோப்பிய நாடுகளில், இறைச்சி உண்ண என்றால் முதல் இடம் பிடிப்பது பன்றி இறைச்சிதான். இறைச்சிக்காகவே ஏகப்பட்ட பன்றிப்பண்ணைகள் அங்கே உண்டு. உதாரணமாக பிரான்சில் மட்டுமே சுமார் 42,000 பன்றிப்பண்ணைகள் இருக்கின்றன சகோ..! அப்படியெனில், மொத்த ஐரோப்பாவில் எத்தனை பன்றிகள் ஒருநாளைக்கு இறைச்சிக்காக கொல்லப்படும்..?
பன்றி இறைச்சியில்தான் மிக மிக அதிக கொழுப்புகள் உள்ளன என்பதால் அவற்றை நீக்கி விட்டுத்தான் ஐரோப்பியர் இறைச்சி விற்பனை செய்வார்கள். அப்படியெனில், மொத்த ஐரோப்பாவிலும் எத்தனை டன் கொழுப்பு சேரும் ஒரு நாளைக்கு..? எனவே, இப்படி நீக்கப்பட்ட கொழுப்புகளை அப்புறப்படுத்துவது நாளடைவில் மிகக்கடினமான காரியமாக மாறியது. ஆரம்ப காலத்தில் அவற்றை தீயிட்டு எரித்தனர். அப்போது அவை எண்ணெயாக உருகி ஓடியதை கண்டபோது, சூடு ஆறியபின் இருகுவதை கண்டபோது, ஐடியா பிறந்தது. அப்படித்தான் பன்றி இறைச்சி அந்த தோட்டாக்களை பாதுகாக்கும் உறையாகவும், சோப்புக்கட்டிகள் செய்யவும், சோள எண்ணெய்க்கு மாற்றாகவும் இன்னும் பலவாறாகவும் பயன்படுத்தப்பட்டன.
பின்னாளில், ஐரோப்பியர்கள் கடும் கொலஸ்டிரால் மூலம் பாதிக்கப்பட, அது பற்றியெல்லாம் அறிவியல் வளர்ந்து, அதன் காரணமாக மருத்துவ ரீதியில் உடல்நலக்குறைபாடு பிரச்சினை பற்றி அறிய ஆரம்பிக்க, இப்போது ஐரோப்பிய நாடுகள், ஒரு சட்டம் போட்டன. அதாவது, உணவுப்பண்டங்களில் பன்றிக்கொழுப்பை சேர்த்தால் அதனை பாக்கெட்டின் மீது எழுதவேண்டும் என..! அது மட்டுமில்லாது, அந்த விற்பனைக்குறிய பண்டத்தில் வேறு என்னன்ன மூலப்பொருட்கள் எல்லாம் சேர்க்கப்பட்டு உள்ளடங்கி உள்ளன என்பதையெல்லாம் ஒரு பட்டியலாக உறைமீது எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு போனது அந்த சட்டம். அதன்படி அப்படியே எழுதி உலகெங்கும் ஏற்றுமதி செய்ய ஆரம்பித்த ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்களின் தலையில் அப்போதுதான் அந்த இடி இறங்கியது..!
அதாவது, உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒருபங்கு கொண்ட முஸ்லிம்கள், அந்த பொருட்களை புறக்கணிக்க ஆரம்பிக்க, அப்படிப்பட்ட பெரிய நஷ்டத்தை அந்த நிறுவனங்கள் தாங்கிக்கொள்ள இயலவில்லை. அதற்காக, மலிவான பன்றிக்கொழுப்பை விட்டுவிட்டு, கிராக்கியான தாவர எண்ணெய் உபயோகித்து லாபத்தை இழக்கவும் மனதில்லை. புறக்கணிக்கும் அந்த எண்ணெய் வள நாடுகளின் வணிகமும் அவசியம் வேண்டும். என்ன செய்யலாம்..?
உடனடியாக ரூம்போட்டு அதிதீவிர சிந்தனையில் யோசித்த அவர்களின் மூலையில் உதித்தது ஓர் உபாயம்..! அதாவது, இனி... எந்தெந்த மூலப்பொருட்களையெல்லாம் உணவுப்பொருட்களின் உறைமீது எழுதினால் பிரச்சினை/எதிர்ப்பு வருமோ அதையெல்லாம் பெயராக எழுதாமல்... சங்கேத வார்த்தைகளாக எழுதுவது என்று..!
அந்த ஐடியாதான்... (E codes) ஈ கோடுகள்...! இதில் 'E' என்பது Europe..! 'ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்களின் மண்டையில் உதித்த கள்ளத்தனம்' என்பதை பேட்டன்ட் போட்டு பெருமையாக பறைசாற்றிக்கொள்கிறார்கள்..! வெட்கக்கேடு..! வேதனை..!
தற்போது சர்வதேச அளவில் பொருட்கள் சந்தைபடுத்தப்பட்ட நிலையில் நீங்கள் இந்திய மார்க்கெட்டில் கிடைக்கும் பல பாக்கெட்/பாட்டிலில் அடைக்கப்பட்ட உணவுப்பொருளை ஒவ்வொன்றாக எடுத்துப்பாருங்களேன் சகோ..! அதில், ingredients என்ற பகுதியில், E-210, E473, E-904 என்று இப்படி சில ஈ கோட்ஸ் எழுதப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம். அவையெல்லாம் என்ன என்று எப்போதேனும் சிந்தித்ததுண்டா சகோ..?
---இப்படியாக இவற்றில் பல வகை உண்டு. இதில் எதெல்லாம் சாப்பிடக்கூடாத ஹராம்... எதெல்லாம் சாப்பிடத்தகுந்த ஹலால் என்று பயனாளருக்கு எப்படி தெரியும்...?
மேற்கண்ட இரண்டு பட்டியல்களில்,
பன்றிக்கொழுப்பும் உண்டு. இது ஹராம் (Haram) என்று சுட்டப்பட்டுள்ளது.
அது மட்டுமில்லாது, ஆடு/மாடு போன்ற பல்வேறு கால்நடைகளின் கொழுப்பும் உண்டு. இவை 'ஹராமான முறையில் தலைவேறு உடல்வேறு என வெட்டப்பட்டனவா' அல்லது 'ஹலாலான முறையில் தக்பீர் கூறி இரத்தம் ஓட அறுக்கப்பட்டனவா' என்பது தெரியாது. அப்படி என்றால் 'ஐயத்திற்கு இடமுள்ளது' அதாவது Mushbooh எனத்தரப்பட்டிருக்கிறது.
சில அயிட்டங்கள் விலங்கின் மூலமின்றி தாவர மூலப்பொருள் ஆகவும் இருக்கலாம். அவை Depends என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இவைமட்டுமின்றி, வேறுசில போதையூட்டும் ஆல்கஹால் அயிட்டங்களும், இன்னபிற உடலுக்கு கேடுசெய்யும் ரசாயணங்களும், கொடிய விஷப்பூச்சிகளிலிருந்து பெறப்படும் பொருட்களும், பலத்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு ஹராம் Haram அல்லது Mushbooh என்று சுட்டப்படுள்ளன.
இவை அல்லாத பெரும்பாலான ஏனையவை ஹலால் Halal என்றும் சுட்டப்படுள்ளன.
ஹராம் மற்றும் சந்தேகத்துக்கு இடமானவை இரண்டையும் ஒன்றிணைத்து தொகுத்த ஒரு கையடக்க அல்லது சூப்பர்மார்க்கெட்டில் உடனே எடுத்து பயன்படுத்தத்தக்க மணிப்பர்ஸ் அடக்க அட்டவணை இதோ..!
ஆகவே, பெயரை சொல்லாமல் இப்படி வெறும் சங்கேத குறியீட்டு எண்களை கொண்டு E-Codes என்று எழுதி நம்மை இளிச்சவாயர்களாக்கி பணம் பார்க்கும் பன்னாட்டு ஏகபோக வணிக நிறுவனங்கள்....
அவற்றிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு சாமரம் வீசிக்கொண்டிருக்கும் அரசுகள்/அரசர்கள்/ஷேக்குகள்/அதிபர்கள்/பிரதமர்கள்/முதலமைச்சர்கள்....
இவற்றைப்பற்றி எல்லாம் விழிப்புணர்வு ஊட்டாமல், வேண்டுமென்றே மறைத்து, அதற்காக அவர்கள் வீசியெறியும் எலும்புத்துண்டை லஞ்சமாக பொறுக்கிக்கொண்டு, சினிமா கவர்ச்சி நடிகைகள் மூலம் நம்மிடமும் வஞ்சமாக காசு பார்த்துக்கொண்டிருக்கும் பெரும்பான்மை ஊடகங்கள்....
என நம்மைச்சுற்றி இப்படி சுயநல ஓநாய்கள் நிறைந்து இருக்கும்போது... இனி நாம்தான் நம்மிடையே இப்படி வலைப்பூ - முகநூல் - கூகுள் பிளஸ் மூலம் இவற்றை பற்றிய விழிப்புணர்வை எழுதி பகிர்ந்துகொள்ள வேண்டும் சகோ..!
'தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. கழுத்து நெறிக்கப் பட்டவை, அடிபட்டவை, (மேட்டிலிருந்து) உருண்டு விழுந்தவை, (தமக்கிடையே) மோதிக்கொண்டவை, மற்றும் வன விலங்கு கள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றில் (உயிர் இருந்து) நீங்கள் முறையாக அறுத்தவை தவிர (மற்றவை தடை செய்யப்பட்டுள்ளன.) பலி பீடங்களில் அறுக்கப்பட்டவையும், அம்புகள் மூலம் குறி கேட்பதும் (உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.) இவை குற்றமாகும். (ஏக இறைவனை) மறுப்போர், உங்கள் மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பது) பற்றி இன்று நம்பிக்கை இழந்து விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'. (அல் குர்ஆன் 5 : 3)
அவற்றை உபயோகிக்கும் இந்திய சிப்பாய்கள், கைகளில் கனமான ரைஃபிளை ஏந்தியவாறு அந்த இறுகிய கொழுப்பு உறையை தம் பல்லினால் கடித்து பிய்த்து எறிந்துதான் தோட்டாவை உபயோகிக்க பணிக்கப்பட்டனர். இப்போதுதான், அந்த கொழுப்பு உறை பற்றி சிப்பாய்கள் கேள்வி கேட்க, அவை 'பன்றிக்கொழுப்பு' என்று சொல்லப்பட, ஆங்கிலேயே ஏகாதிபத்திய அடக்குமுறையை எதிர்க்க ஏதோ ஒரு காரணம் தேடிக்கொண்டு இருந்த சிப்பாய்களுக்கு கிடைத்தது ஓர் அற்புத வாய்ப்பு..!
உடனே இந்திய முஸ்லிம் சிப்பாய்கள் அவற்றை உபயோகிப்பதை புறக்கணிக்க, அதிர்ந்த ஆங்கிலேயே தளபதிகள்... அவை ஆட்டு மாட்டு கொழுப்புகள் எனக்கூறி சமாளிக்கப்பார்க்க, "அப்படியெனில் பசுவின் கொழுப்பும் உண்டா..?" என்று இந்து சிப்பாய்கள் வினவ ஆரம்பிக்க, அனைத்து வகை விலங்கு கொழுப்புகளும் இருப்பதாக பதில் வர, உடனே தெய்வமாக புனிதப்பசுவை வணங்கும் அவர்களும் சுதந்திர போராட்டக்களத்தில் முஸ்லிம் சிப்பாய்களுடன் இணைய... இப்படியாகவும் வெடித்தது
இது ஒருபுறமிருக்க, துப்பாக்கி ரவையில் பன்றிக்கொழுப்பு ஏன்..? தோட்டாக்களை பாதுகாக்க கொழுப்பிற்காக பன்றிகளை கொன்றார்களா..? இல்லை..! இங்கிலாந்து உட்பட பல ஐரோப்பிய நாடுகளில், இறைச்சி உண்ண என்றால் முதல் இடம் பிடிப்பது பன்றி இறைச்சிதான். இறைச்சிக்காகவே ஏகப்பட்ட பன்றிப்பண்ணைகள் அங்கே உண்டு. உதாரணமாக பிரான்சில் மட்டுமே சுமார் 42,000 பன்றிப்பண்ணைகள் இருக்கின்றன சகோ..! அப்படியெனில், மொத்த ஐரோப்பாவில் எத்தனை பன்றிகள் ஒருநாளைக்கு இறைச்சிக்காக கொல்லப்படும்..?
பன்றி இறைச்சியில்தான் மிக மிக அதிக கொழுப்புகள் உள்ளன என்பதால் அவற்றை நீக்கி விட்டுத்தான் ஐரோப்பியர் இறைச்சி விற்பனை செய்வார்கள். அப்படியெனில், மொத்த ஐரோப்பாவிலும் எத்தனை டன் கொழுப்பு சேரும் ஒரு நாளைக்கு..? எனவே, இப்படி நீக்கப்பட்ட கொழுப்புகளை அப்புறப்படுத்துவது நாளடைவில் மிகக்கடினமான காரியமாக மாறியது. ஆரம்ப காலத்தில் அவற்றை தீயிட்டு எரித்தனர். அப்போது அவை எண்ணெயாக உருகி ஓடியதை கண்டபோது, சூடு ஆறியபின் இருகுவதை கண்டபோது, ஐடியா பிறந்தது. அப்படித்தான் பன்றி இறைச்சி அந்த தோட்டாக்களை பாதுகாக்கும் உறையாகவும், சோப்புக்கட்டிகள் செய்யவும், சோள எண்ணெய்க்கு மாற்றாகவும் இன்னும் பலவாறாகவும் பயன்படுத்தப்பட்டன.
பின்னாளில், ஐரோப்பியர்கள் கடும் கொலஸ்டிரால் மூலம் பாதிக்கப்பட, அது பற்றியெல்லாம் அறிவியல் வளர்ந்து, அதன் காரணமாக மருத்துவ ரீதியில் உடல்நலக்குறைபாடு பிரச்சினை பற்றி அறிய ஆரம்பிக்க, இப்போது ஐரோப்பிய நாடுகள், ஒரு சட்டம் போட்டன. அதாவது, உணவுப்பண்டங்களில் பன்றிக்கொழுப்பை சேர்த்தால் அதனை பாக்கெட்டின் மீது எழுதவேண்டும் என..! அது மட்டுமில்லாது, அந்த விற்பனைக்குறிய பண்டத்தில் வேறு என்னன்ன மூலப்பொருட்கள் எல்லாம் சேர்க்கப்பட்டு உள்ளடங்கி உள்ளன என்பதையெல்லாம் ஒரு பட்டியலாக உறைமீது எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு போனது அந்த சட்டம். அதன்படி அப்படியே எழுதி உலகெங்கும் ஏற்றுமதி செய்ய ஆரம்பித்த ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்களின் தலையில் அப்போதுதான் அந்த இடி இறங்கியது..!
அதாவது, உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒருபங்கு கொண்ட முஸ்லிம்கள், அந்த பொருட்களை புறக்கணிக்க ஆரம்பிக்க, அப்படிப்பட்ட பெரிய நஷ்டத்தை அந்த நிறுவனங்கள் தாங்கிக்கொள்ள இயலவில்லை. அதற்காக, மலிவான பன்றிக்கொழுப்பை விட்டுவிட்டு, கிராக்கியான தாவர எண்ணெய் உபயோகித்து லாபத்தை இழக்கவும் மனதில்லை. புறக்கணிக்கும் அந்த எண்ணெய் வள நாடுகளின் வணிகமும் அவசியம் வேண்டும். என்ன செய்யலாம்..?
உடனடியாக ரூம்போட்டு அதிதீவிர சிந்தனையில் யோசித்த அவர்களின் மூலையில் உதித்தது ஓர் உபாயம்..! அதாவது, இனி... எந்தெந்த மூலப்பொருட்களையெல்லாம் உணவுப்பொருட்களின் உறைமீது எழுதினால் பிரச்சினை/எதிர்ப்பு வருமோ அதையெல்லாம் பெயராக எழுதாமல்... சங்கேத வார்த்தைகளாக எழுதுவது என்று..!
அந்த ஐடியாதான்... (E codes) ஈ கோடுகள்...! இதில் 'E' என்பது Europe..! 'ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்களின் மண்டையில் உதித்த கள்ளத்தனம்' என்பதை பேட்டன்ட் போட்டு பெருமையாக பறைசாற்றிக்கொள்கிறார்கள்..! வெட்கக்கேடு..! வேதனை..!
தற்போது சர்வதேச அளவில் பொருட்கள் சந்தைபடுத்தப்பட்ட நிலையில் நீங்கள் இந்திய மார்க்கெட்டில் கிடைக்கும் பல பாக்கெட்/பாட்டிலில் அடைக்கப்பட்ட உணவுப்பொருளை ஒவ்வொன்றாக எடுத்துப்பாருங்களேன் சகோ..! அதில், ingredients என்ற பகுதியில், E-210, E473, E-904 என்று இப்படி சில ஈ கோட்ஸ் எழுதப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம். அவையெல்லாம் என்ன என்று எப்போதேனும் சிந்தித்ததுண்டா சகோ..?
E 100-199 | food colors |
E 200-299 | preservatives |
E 300-399 | antioxidants, acidity regulators, phosphates, and complexing agents |
E 400-499 | thickeners, stabilizers, gelling agents, phosphates, humectants, emulsifiers |
E 500-599 | acidity regulators, anti-caking agents, salts and related compounds |
E 600-699 | flavor enhancers |
E 700-899 | antibiotics, not used for food additives (used for feed additives) |
E 900-999 | surface coating agents, gases, sweeteners |
E1000-1399 | miscellaneous additive |
E 1400-1499 | starch derivative, additional chemicals |
---இப்படியாக இவற்றில் பல வகை உண்டு. இதில் எதெல்லாம் சாப்பிடக்கூடாத ஹராம்... எதெல்லாம் சாப்பிடத்தகுந்த ஹலால் என்று பயனாளருக்கு எப்படி தெரியும்...?
- "இங்கே" ஈ கோடு மற்றும் அவற்றின் பெயர்கள் அடங்கிய ஒரு விபரமான 'ஹலால்/ஹராம் பட்டியல்' இருக்கிறது.
- "இங்கே" இன்னும் விளக்கமான மென்பொருளில் (E Codes / ingredients names: in drop down selection) தனித்தனியே வகைப்படுத்தி பிரித்துத்தரப்பட்ட பட்டியல் ஒன்றும் இருக்கிறது.
மேற்கண்ட இரண்டு பட்டியல்களில்,
பன்றிக்கொழுப்பும் உண்டு. இது ஹராம் (Haram) என்று சுட்டப்பட்டுள்ளது.
அது மட்டுமில்லாது, ஆடு/மாடு போன்ற பல்வேறு கால்நடைகளின் கொழுப்பும் உண்டு. இவை 'ஹராமான முறையில் தலைவேறு உடல்வேறு என வெட்டப்பட்டனவா' அல்லது 'ஹலாலான முறையில் தக்பீர் கூறி இரத்தம் ஓட அறுக்கப்பட்டனவா' என்பது தெரியாது. அப்படி என்றால் 'ஐயத்திற்கு இடமுள்ளது' அதாவது Mushbooh எனத்தரப்பட்டிருக்கிறது.
சில அயிட்டங்கள் விலங்கின் மூலமின்றி தாவர மூலப்பொருள் ஆகவும் இருக்கலாம். அவை Depends என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இவைமட்டுமின்றி, வேறுசில போதையூட்டும் ஆல்கஹால் அயிட்டங்களும், இன்னபிற உடலுக்கு கேடுசெய்யும் ரசாயணங்களும், கொடிய விஷப்பூச்சிகளிலிருந்து பெறப்படும் பொருட்களும், பலத்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு ஹராம் Haram அல்லது Mushbooh என்று சுட்டப்படுள்ளன.
இவை அல்லாத பெரும்பாலான ஏனையவை ஹலால் Halal என்றும் சுட்டப்படுள்ளன.
ஹராம் மற்றும் சந்தேகத்துக்கு இடமானவை இரண்டையும் ஒன்றிணைத்து தொகுத்த ஒரு கையடக்க அல்லது சூப்பர்மார்க்கெட்டில் உடனே எடுத்து பயன்படுத்தத்தக்க மணிப்பர்ஸ் அடக்க அட்டவணை இதோ..!
ஆகவே, பெயரை சொல்லாமல் இப்படி வெறும் சங்கேத குறியீட்டு எண்களை கொண்டு E-Codes என்று எழுதி நம்மை இளிச்சவாயர்களாக்கி பணம் பார்க்கும் பன்னாட்டு ஏகபோக வணிக நிறுவனங்கள்....
அவற்றிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு சாமரம் வீசிக்கொண்டிருக்கும் அரசுகள்/அரசர்கள்/ஷேக்குகள்/அதிபர்கள்/பிரதமர்கள்/முதலமைச்சர்கள்....
இவற்றைப்பற்றி எல்லாம் விழிப்புணர்வு ஊட்டாமல், வேண்டுமென்றே மறைத்து, அதற்காக அவர்கள் வீசியெறியும் எலும்புத்துண்டை லஞ்சமாக பொறுக்கிக்கொண்டு, சினிமா கவர்ச்சி நடிகைகள் மூலம் நம்மிடமும் வஞ்சமாக காசு பார்த்துக்கொண்டிருக்கும் பெரும்பான்மை ஊடகங்கள்....
என நம்மைச்சுற்றி இப்படி சுயநல ஓநாய்கள் நிறைந்து இருக்கும்போது... இனி நாம்தான் நம்மிடையே இப்படி வலைப்பூ - முகநூல் - கூகுள் பிளஸ் மூலம் இவற்றை பற்றிய விழிப்புணர்வை எழுதி பகிர்ந்துகொள்ள வேண்டும் சகோ..!
'தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. கழுத்து நெறிக்கப் பட்டவை, அடிபட்டவை, (மேட்டிலிருந்து) உருண்டு விழுந்தவை, (தமக்கிடையே) மோதிக்கொண்டவை, மற்றும் வன விலங்கு கள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றில் (உயிர் இருந்து) நீங்கள் முறையாக அறுத்தவை தவிர (மற்றவை தடை செய்யப்பட்டுள்ளன.) பலி பீடங்களில் அறுக்கப்பட்டவையும், அம்புகள் மூலம் குறி கேட்பதும் (உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.) இவை குற்றமாகும். (ஏக இறைவனை) மறுப்போர், உங்கள் மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பது) பற்றி இன்று நம்பிக்கை இழந்து விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'. (அல் குர்ஆன் 5 : 3)
'உமக்கு திட்டவட்டமான அறிவு இல்லாத விஷயங்களை நீர் பின்பற்ற வேண்டாம்' (அல்குர்ஆன் 17:36)'
"உனக்கு சந்தேகமானவற்றை விட்டுவிடு, உனக்கு சந்தேகமற்ற உறுதியான விஷயங்களின் பால் சென்றுவிடு" என நபி (ஸல்...) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).
Courtesy : Sources & References
Dr. M. Amjad Khan, Medical Research Institute, United States.
Dr M Liaqat (PhD Food Biochemistry), MA CONSULTING, UK.
http://www.deccainfo.com/why-pig-fat-is-not-mentioned-but-codes-are-printed.html
http://www.guidedways.com/halalfoodguide.php#
http://special.worldofislam.info/Food/numbers.html
http://www.classicalislam.com/pages/articles/haramfood.htm
http://en.wikipedia.org/wiki/E_number
20 ...பின்னூட்டங்கள்..:
ஸலாம்
அருமையான விளக்கம் .. மாஷா அல்லாஹ் .. இது பற்றிய அறிவு இல்லாமல் இருந்தேன் ... அல்லாஹ்வின் உதவியால் இந்த விளக்கத்தையும் கற்று கொண்டேன் ..
எதிர்குரல் ப்ளாக் உங்க இத ... இரண்டு ஆஷிக் இருக்காங்க
ஜஜாகல்லாஹ் ....
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்பின் முஹம்மத் ஆஷிக் !
சிறந்த விழிப்புணர்வூட்டும் வழிகாட்டி பதிவு.
தொடரட்டும் உங்கள் சேவை.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
மாஷா அல்லாஹ்!
"e- code " முற்றிலும் அறியாத புதுச்செய்திகள்!
பகிர்ந்தமைக்கு நன்றி சகோ!
//சில அயிட்டங்கள் விலங்கின் மூலமின்றி தாவர மூலப்பொருள் ஆகவும் இருக்கலாம். அவை Depends என வகைப்படுத்தப்பட்டுள்ளன.//
இது மட்டும் சற்று தெளிவாக புரியவில்லை சகோ.,
assalamualikkum
சமுதாயத்திற்க்குத் தேவையான தகவல் பகிர்வுக்கு நன்றி சகோ
ஜஸாக்கல்லாஹு கைரன்
ஆஹா...
இவிங்க கூட நம்மள விட்டு வைக்கலையா????
எச்சரிக்கை பதிவுக்கு நன்றி சகோ
JazakkALLAHu khairan Brother
@sulthanஅலைக்கும் ஸலாம் வரஹ்...
அல்லாஹ்வின் உதவியால் நானும் இந்த விளக்கத்தை சிறிது நாட்களுக்கு முன்னர்தான் பெற்றுக்கொண்டேன் சகோ.சுல்தான்.
வருகைக்கும் வாசிப்பிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.
@VANJOORஅலைக்கும் ஸலாம் வரஹ்...
அல்லாஹ்வின் உதவியால் தொடரட்டும் நம் சேவை.
வருகைக்கும் வாசிப்பிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.வாஞ்சூர்.
@G u l a mஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//இது மட்டும் சற்று தெளிவாக புரியவில்லை சகோ.,//---ரொம்ப சிம்பிள் சகோ.குலாம்.
உதாரணமாக,
ஒரு இறக்குமதி தின்பண்டத்தில் உள்ள 'கொலஸ்டிரால் கன்டென்ட்' மீனிலிருந்து பெறப்பட்டது என்றால்... நோ பராப்ளம். ஹலால்.
அதுவே,
ஒரு விலங்கிலிருந்து வந்திருந்தால்..?
அது ஹலாலான முறையில் அறுக்கப்பட்டதா என்ற பிரச்சினை வருகிறது. ஹலாலான முறைப்படி தக்பீருடன் அறுக்கப்பட்டதாயின் அது ஹலால். இல்லையேல் ஹராம் என்றாகிறது.
மேற்கத்திய நாட்டிலிருந்து வரும் தின்பண்டம் என்பதால் இந்த விஷயம் நமக்கு சந்தேகத்துக்கு உரியதாக இருக்கும் நிலை. மஷ்பூஹ். தெளிவில்லாத போது தவிர்க்க வேண்டியதுதான்.
இங்கே, அவர்கள் animal fat என்று கூறி பன்றியின் கொழுப்பிலிருந்து அந்த கொலஸ்டிரால் கன்டென்ட் தந்திருந்தால் அது ஹலாலான முறைப்படி தக்பீர் கூறி அறுக்கப்பட்டது(!?) என்று அவர்கள் சொன்னாலும் ஹராம்தான் என்பதை அறிவோம்.
அடுத்து,
சில தாவரங்களில் பூக்கள், விதைகள், வேர்கள் இவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்பட்டு அதிலிருந்து வந்தது அந்த கொலஸ்டிரால் கன்டென்ட் என்றால்... ஹலால். அதனால்தான் depends/மஷ்பூஹ் என்கிறார்கள்.
உதாரணமாக,
E422-Glycerol(Sugar Alcohols) Mushbooh,
Depends up on the source.
Halal if it is from plant fat, Haraam if it is from pork fat,
இதே கோடுடன் ஒரு இஸ்லாமிய சட்டங்களை பின்பற்றும் நாட்டில் தயாரான பொருள் என்றால்... நம்பலாம்.
அதுவே ஃபிரான்ஸ் தயாரிப்பு என்றால்... டவுட்டு.
வருகைக்கும் வாசிப்பிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.குலாம்.
@abdul hakkimஅலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும் வாசிப்பிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.அப்துல் ஹக்கீம்.
@ஆமினா//இவிங்க கூட நம்மள விட்டு வைக்கலையா????//---மத்தளத்துக்கு ரெண்டு பக்கம் மட்டுமே இடி... ஆனால் நமக்கோ...? எல்லா பக்கமும்..!
வருகைக்கும் வாசிப்பிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.ஆமினா.
@அரபுத்தமிழன்வருகைக்கும் வாசிப்பிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.இப்னு ஜுபைர்.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் முஹம்மது ஆஷிக்,
அல்ஹம்துலில்லாஹ்..மிக அருமையான விழிப்புணர்வு ஊட்டும் பதிவு. இந்த E-codes பத்தியெல்லாம் எனக்கு எதுவும் இதுவரை தெரிந்திருக்கவில்லை. ஜசாக்கல்லாஹ்...
@ சுல்தான்,
//எதிர்குரல் ப்ளாக் உங்க இத ... இரண்டு ஆஷிக் இருக்காங்க ///
நாங்கள் இரு ஆஷிக் இருக்கின்றோம். நான் ஆஷிக் அஹ்மத், எதிர்க்குரல் தளம் என்னுடையது. இவர் முஹம்மது ஆஷிக்...
வஸ்ஸலாம்,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
@Aashiq Ahamedஅலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும் வாசிப்பிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.ஆஷிக் அஹமத்.
//நாங்கள் இரு ஆஷிக் இருக்கின்றோம்//--என்று நீங்கள் சொல்லுவதைத்தான்...
//இரண்டு ஆஷிக் இருக்காங்க//--என்று சகோ.சுல்தானும் சொல்கிறார்.
அப்புறம், எதற்கு எக்ஸ்ட்ரா விளக்கம் சகோ..?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சமுதாயத்திற்க்குத் தேவையான தகவல் பகிர்வுக்கு நன்றி சகோ
@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும் வாசிப்பிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.சுவனப்பிரியன்.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!
மிகவும் அவசியமான விழிப்புணர்வு பதிவு. சில வருடங்களுக்கு முன்பு E-codes பற்றி அறிந்து மொபைலில் E-codes மென்பொருள் வைத்து வாங்கும் பொருட்களில் சரி (நண்பர்களுடன் சேர்ந்து)பார்த்திருக்கிறோம். அதன் பின் அதனை மறந்துவிட்டோம். இறைவன் நாடினால் இனி மீண்டும் அதனை தொடர்கிறேன்.
நல்லதொரு பதிவிற்கு அல்லாஹ் தங்களுக்கு நற்கூலியை தருவானாக!
@Abdul Basithஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//மொபைலில் E-codes மென்பொருள்//---இதுவும் இணையத்தில் கிடைக்கிறது சகோ. டவுன்லோட் பண்ணிக்கொண்டால் நல்லதுதான்.
வருகைக்கும் வாசிப்பிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.அப்துல் பாஸித்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சிறந்த விழிப்புணர்வூட்டும் வழிகாட்டி பதிவு.
தொடரட்டும் உங்கள் சேவை.
அஸ்ஸலாமு அலைக்கும் ஆஷிக்
தங்களின் பதிவை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் .அல்லாஹு அக்பர்
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!