சகோ..! ஒரு நிமிஷம்..! நான் சாதிவெறிக்கு எதிரானவன் மட்டுமல்ல. சாதி மீது நம்பிக்கை இல்லாதவன் மட்டுமல்ல. சாதியை ஒழித்து அதை முற்றுமாய் மறந்து வாழ்ந்துவரும் சமூகத்தில் பிறந்து வளர்ந்து அப்படியே வாழ்பவன் மட்டுமல்ல. என் சமூகம் போலவே என் மொழி பேசும் இதர மக்களும் சாதியிலிருந்து விடுபட வேண்டும் என்று பேராவல் கொண்டவன். ஆதலால், நான் யாருக்கும் சார்பாகவோ அல்லது யாருக்கும் எதிராகவோ இந்த கோரிக்கையை இங்கே வைக்கவில்லை. சாதி வெறி மூலம் மக்கள் உயிருக்கும் உடமைக்கும் அமைதிக்கும் குந்தகம் நேரும் இந்நேரத்தில் நாம் சற்று நிதானமாகவும் ஆழமாகவும் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
நம் நாடு மதச்சார்பற்ற சட்டங்களை கொண்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து சமயத்தவரும் அவரவர் சமய கருத்துக்களை பிரச்சாரம் செய்யலாம்; கடைப்பிடிக்கலாம்; பிடித்த சமயத்துக்கு மாறிக்கொள்ளலாம். அடுத்தவர் அதனை தடுக்க முடிலாது. காரணம்: இது அடிப்படை உரிமை. தற்போது தமிழகத்தில் அதிகரித்து வரும் சாதித்தலைவர்களுக்கான குருபூஜைகள் ஏதோ ஒரு சமய வழிபாடு போல... பிரச்சாரத்துடன் வெளிப்படையாக நடந்து வருகிறது. இது ஏதோ அடிப்படை உரிமை போல... அரசின் பாதுகாப்பும் மக்கள் ஆதரவும் கோரப்படுகிறது. இது சரியா..?
யாருக்காக குருபூஜைகள் நடக்கின்றனவோ அந்த தலைவர்கள் யாரும் அவரவர் வாழ்வில் வேறு யாருக்கும் குருபூஜை செய்தது இல்லை. "இந்த சாதி அமைப்பு முறையே ஒழியவேண்டும்" என்று நினைப்பவர்கள்... "அதை சார்ந்த இந்த குருபூஜைகளும் ஒழிக்கப்பட வேண்டியன" என்பதில் மாற்றுக்கருத்து கொள்ள இயலாது அன்றோ..?
யாருக்காக குருபூஜைகள் நடக்கின்றனவோ அந்த தலைவர்கள் யாரும் அவரவர் வாழ்வில் வேறு யாருக்கும் குருபூஜை செய்தது இல்லை. "இந்த சாதி அமைப்பு முறையே ஒழியவேண்டும்" என்று நினைப்பவர்கள்... "அதை சார்ந்த இந்த குருபூஜைகளும் ஒழிக்கப்பட வேண்டியன" என்பதில் மாற்றுக்கருத்து கொள்ள இயலாது அன்றோ..?
ஆக, நமது நூற்றாண்டில் நம் கண் முன்னே ஆரம்பிக்கப்பட்ட இந்த குருபூஜைகள்... 'நம் சமூகத்துக்கு நல்லதா', 'இதனால் மக்களுக்கு பயன் உண்டா', 'இவை நடக்கவில்லையென்றால் அதனால் சமுதாயத்துக்கு கேடு ஏதும் நேருமா'... என்று நாம் அலசி ஆராய்கிறோம். முடிவெடுக்கிறோம். இதில் தவறேதும் இல்லை என்றே நான் நம்புகிறேன்.
இந்த குருபூஜைகள் எதோ ஒரு சாராரின் 'உரிமைப்பிரச்சினை' எனவும்... அதை தடுப்பது போன்ற கருத்துக்கள்... 'உரிமைகளை நசுக்குகின்றன' என்றும் சாதியை எதிர்க்கும் சில முற்போக்காளர்களே எண்ணுவதுதான் கவலை தருகிறது..! எனவே, 'எது உரிமை' என்று நாம் தெளிவாக சிந்திக்க வேண்டும்.
சமூகத்துக்கு கேடுதரும் லாட்டரி சீட்டுகள், பான் பராக், ஜர்தா, பீடா, குட்கா அனைத்தும் முன்பொரு நாள் நம் தமிழகத்தில் தடை செய்யப்பட்டன. இவ்வளவுக்கும்... அப்போது "தமிழ்நாடு அரசு பரிசுச்சீட்டு" என்று தமிழக அரசே லாட்டரி விற்பனை சூதாட்டம் நடத்திக்கொண்டு இருந்த சமயத்தில்தான் அந்த தடை வந்தது. அப்போது மக்கள் நலன் கணக்கில் கொள்ளப்பட்டு அரசின் வருவாய் துச்சமாய் புறந்தள்ளப்பட்டது.
மேற்கண்ட அதிரடி நடவடிக்கை எடுத்த அதே முதல்வர் ஜெ. தான் இப்போதும் ஆட்சியில்..! இறைநாடினால்...மீண்டும் அதே போன்றதொரு நிலைப்பாடு நாளை அவருக்கு 'டாஸ்மாக்' விஷயத்திலும் தோன்றி, தமிழகம் முழுதும் டாஸ்மாக் மூடப்பட்டு பூரண மதுவிலக்கு அமலுக்கு வரும் அப்பொன்னான நாளும் வரலாம்..! அப்போது, 'குடிகாரர்கள் உரிமை போச்சு' என்று நீதிமன்றம் செல்வீர்களா... அல்லது... தூரநோக்கில், சமூக நலன்... வருங்கால சந்ததி உடல்நலன் என்று பார்ப்போமா..? ஆக, ஒரு 'சமூக தீமை' எப்போதும் 'உரிமை' என்ற வட்டத்திற்குள் வரவே வராது என்பது தெளிவு..!
அப்படி என்றால்... இறைவன் படைத்த ஒரே மனிதப்படைப்பை பல வர்ணங்களாக பிரித்து அடிமைப்படுத்தும் முறையான இந்த சாதி - உரிமையா..? சமூகத்தீமையா..? சாதிவெறி... சாதித்தலைவர்களுக்கான குருபூஜை இதெல்லாம் அந்தந்த சாதியினர் உரிமையா அல்லது சமூகக்கேடா..? இவை ஒழிக்கப்பட வேண்டியவையா..? அல்லது 'உரிமை' என்று கூறி பாதுகாக்கப்பட வேண்டியவையா..? சற்று சிந்தியுங்கள் சகோ..! மேலும் உங்கள் சிந்தனைக்கு.....
சில வருடங்களுக்கு முன்னர்... நம் பெரும்பாலான மாவட்டத்தின் பெயர்கள் எல்லாம் தலைவர்கள் பெயரில் அல்லவா இருந்தன..? இப்போது ஓடும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் எல்லாமே தலைவர்கள் அல்லது மன்னர்கள் பெயரில் அல்லவா ஓடின..? எதனால்..?
சில ஓட்டுக்கட்சிகள்... ஒருசில குறிப்பிட்ட சாதியினரின்/கட்சியினரின் ஓட்டுக்களை பெற அவர்கள் அதிகம் வாழும் இடமாக பார்த்து ஏற்கனவே இருக்கும் மாவட்டத்தை பிரித்து சாதித்தலைவர்/அரசியல் தலைவர் பெயரை சூட்டினர். இதைப்பார்த்த பிற சாதியினர்/கட்சியினர்... 'எனக்கும்...' 'எனக்கில்லையா...' என்றதால்... பல மாவட்டங்கள் பிரிக்கப்பட்டனவே... அல்லது பெயர்மாற்றம் பெற்றனவே..! எத்தனை மாவட்டத்தின் பெயரைத்தான் மாற்றுவது..? அதனால்... சேர/சோழ/பாண்டிய/பல்லவ மன்னர்கள் பெயரில் ஓடிக்கொண்டிருந்த அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகள் சில சாதியினர்/பிரிவினர் ஓட்டுக்காக சாதித்தலைவர்கள் பெயரிலும் அரசியல் தலைவர்கள் பெயரிலும் அல்லவா ஓட ஆரம்பித்தன..!
ஒரு கட்டத்தில் ஒவ்வொரு சாதியும், தனக்கு ஒரு கட்சி & ஒரு கொடி என்று புற்றீசல் போல கிளம்பி... மாவட்ட பெயர், பேருந்து பெயர் ஆகிய இதற்காக அடிதடி... கலவரம்... வன்முறை... துப்பாக்கிச்சூடு என்று சாதிவெறி வளர ஆரம்பிக்க... அந்த சமயத்தில்தான் அந்த தடைக்கு அவசியம் வந்தது. அப்போது மக்கள் நலன் & சமூக அமைதி கணக்கில் கொள்ளப்பட்டு... சமூக தீமையான சாதி புறந்தள்ளப்பட்டது. "அனைத்து மாவட்டங்களின் பெயரும் அந்தந்த மாவட்ட தலைநகர் பெயரிலேயே அழைக்கப்படும்" என்றும்... "அனைத்து அரசு பேருந்துகளும் இனி... 'தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்து' என்றே அழைக்கப்படும்" என்ற நற்செய்தி ஒரு மிகச்சிறந்த உத்தரவாக அப்போதைய முதல்வர் கருணாநிதியிடமிருந்து வந்தது.
அப்போது யாரும் இதற்காக கொந்தளிக்கவில்லை. "எங்கள் உரிமை போச்சே" என்று கதறவில்லை. அனைவரும் அமைதியாக ஏற்றுக்கொண்டனர். காரணம்..? 'சாதி ஒரு சமூகக்கொடுமை' என்று அனைவருமே உணர்ந்து இருந்தனர் என்பது மட்டுமல்ல... பெயர் தூக்கப்பட்டதில் அனைவருக்கும் சமநீதி(!) என்ற ஒன்று இருந்ததாலேயே அன்று இது அனைவராலும் ஏற்கப்பட்டது.
குறிப்பிட்ட சாதியினர் குருபூஜைக்கு அந்தந்த சாதி அரசியல்வாதிகள், சாதி அதிகாரிகள், சாதி நடிகர்கள், சாதி பிரபலங்கள் செல்வதும்... தங்கள் இருப்பை சாதி பலத்தை நிலைநாட்டும் ஒரு மாநாடாகத்தானே குருபூஜை நடக்கிறது..? இதைக்கண்ட மற்ற அனைத்து சாதியினரும் தத்தம் இருப்பை நிலைநாட்ட தங்கள் சாதியில் பிரபலம் ஒருவரை தெரிந்தெடுத்து அவருக்கு குருபூஜை ஒன்றை ஆரம்பிக்கிறார்களா இல்லையா..? அதற்கு முதல்வர், எதிர்கட்சித்தலைவர், அரசு அதிகாரிகள், நட்சத்திரங்கள்... மற்றும் பல முக்கியஸ்தர்கள் வரவில்லை எனில்... சாதி பாகுபாடு உண்டாகிறதல்லவா..?
இவை வளரும்போது என்னவாகிறது..? வீதி முதல் இணையம் எல்லாம்... சாதிப்பிரிவினையும் சாதிதுவேஷமும் தானே வளருகிறது..? இதுபோன்ற சாதி அரசியலை விதைக்கும் வேலையைத் தானே இந்த குருபூஜைகள் செய்கின்றன..? அப்படி நடக்கும் குருபூஜைகளில் அமைதி நிலவுகிறதா..? வெறி கிளப்பும் வார்த்தைகள், வன்மம், கொலை, வன்முறை, அடக்குமுறை, துப்பாக்கிச்சூடு, ஊரடங்கு உத்தரவு, பொது அமைதிக்கு நாசம், சட்டம் ஒழுங்கு பாழ்... என்றுதானே முடிகிறது..!
ம்ம்ம்... இப்படியும் ஆரம்பித்து விட்டார்கள்..! "எங்கள் குருபூஜைக்கு அரசு விடுமுறை விடு...", "இதை அரசு விழாவென அறிவி..." என்றெல்லாம்..! அன்று, 'மாவட்ட பெயர்கள்... அரசுப்பேருந்து பெயர்கள்...' இருந்த இடத்தைத்தானே இன்று குருபூஜைகள் பிடித்திருக்கின்றன..?
சாதி ஒரு சமூகக்கேடு எனில், அது சார்ந்த அனைத்தும் சமூகக் கேடுதானே..? ஆம் எனில், இந்த குருபூஜைகள் சமூகக்கேடுகள் தானே..?
இவை எப்படி உரிமைகள் ஆகும்..? மதத்திற்கு அப்பாற்பட்ட இந்த குருபூஜைகள் தற்போது மக்களிடம் சாதிவெறியூட்டி பொது அமைதியை குலைக்கின்றனவா இல்லையா..??
"சமூகக்கேடு"களுக்கு அரசின் ஆதரவையோ, அனுமதியையோ, பாதுகாப்பையோ கேட்பது குற்றம் ஆகாதா..???
ஆகவே... எல்ல்லா சாதியினரின் குருபூஜைகளும் நிறுத்தப்பட வேண்டும்..!!!
அவை நிகழ்கால சமூகத்துக்கு அவசியமற்றவை என்று உணரவேண்டும் & உணர்த்தப்பட வேண்டும்.
இந்திய அரசியல் சாஸனத்தில் குருபூஜைகளுக்கு அனுமதி உண்டா..?
This is aptly clear from the statement of Pandit Jawahar Lal Nehru made by him on the floor of the Lok Sabha on 13.6.1951. He said :
"……After all the whole purpose of the Constitution as proclaimed in the Directive principles is to move towards what I may say a casteless and classless society……" (Lok Sabha Debates Vol XII-XIII (Part II) Page 9830-31)
குருபூஜைகள் தேச நலனுக்கு உகந்ததா..? அல்லது... எதிரானதா..?
This is aptly clear from: On 25th November, 1949, in Constituent Assembly, Dr. B. R. Ambedkar spoke:
"………….In India there are castes. The castes are anti-national. In the first place because they bring about separation in social life. They are anti-national also because they generate jealousy and antipathy between caste and caste."
"மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; ... ...." ---(குர்ஆன் 49:13 -ல் இறைவன் )
"சாதிகள் இல்லையடி பாப்பா...
குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்..." ---பாரதியார்.
"தீண்டாமை ஒரு பாவச்செயல்...
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்...
தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்" ---தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம்.
தொடர்புடைய பதிவு:-
34 ...பின்னூட்டங்கள்..:
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...
மாஷா அல்லாஹ்...மிக தெளிவான பார்வை சகோதரர் முஹம்மது ஆஷிக்.
அப்படியே, சமூகத்தில் மூட நம்பிக்கையை வளர்க்கும் தர்காக்கள், கந்தூரி விழாக்கள், ஷியாக்கள் தங்கள் உடம்பில் ரத்தம் வழிய அடித்துக்கொண்டு அழுது ஊர்வலம் போகும் அந்த பழக்கவழக்கங்கள் என்று இந்த முட்டாள்தனங்களையும் தடைச் செய்ய சொல்லி ஒரு கோரிக்கை வைத்திருக்கலாம். :)
பகிர்விற்கு ஜசாக்கல்லாஹு க்ஹைர் சகோதரர்....
வஸ்ஸலாம்,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
@Aashiq Ahamedஅலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.ஆஷிக் அஹமத்,
நீங்கள் சொன்னவை அனைத்தும் இஸ்லாமிய மார்க்கத்துக்கு முரணான மூட நம்பிக்கைகள் என்பதும்...
அரசே முன்னின்று ஒழித்துக்கட்ட வேண்டியன என்பதிலும்...
துளியும் மாற்றுக்கருத்து இல்லை சகோ.
விபரம் அறிந்த முஸ்லிம்கள் தங்கள் பிரச்சாரம் மூலம் இதனை தொடர்ந்து எதிர்த்து-சிறுகச்சிறுக ஒழித்துக் கொண்டுதான் வருகிறோம்.
விஷயம் என்னவென்றால்...
'தர்ஹா வழிபாடும் கிட்டத்தட்ட குருபூஜை மாதிரிதான்' என்றாலும்... அதில் 'சாதி' கலக்காததால் இப்பதிவில் அதை சொல்லவில்லை.
இன்ஷாஅல்லாஹ், இவற்றை தனியாக வேறொரு நாள் 'ஸ்பெஷலாக கவனித்து தாளித்து வறுத்தெடுக்க' வாய்ப்பு வரட்டும்.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
நல்லதோர் ஆக்கம்
சாதி வெறி தமிழ் ( ஹிந்து) சமூகத்தில் முன்பைவிட தற்போது பலமடங்கு அதிகரித்துள்ளது என்றே நினைக்கிறேன்.படித்தவர்களிடம் சாதிவெறி கொஞ்சம் தூக்கலாக தெரிகிறது. ஆதிக்க சாதியினரால் ஒடுக்கப்பட்டவர்கள் நாங்கள் அவர்களின் அடக்கு முறையிலிருந்து விடுபட போராடுவதாக சொல்லிக்கொள்ளும் தலித் என்ற அணியிலே பல சாதி அதில் ஒருவர் மற்றவரைவிட உயர்ந்தவர் என்ற நம்பிக்கை என்னத்த சொல்ல................
ஒட்டு மொத்த மனித சமுதாயமும் ஒரே ஒரு மனிதனிடமிருந்துதான் வந்தோம் என்ற நம்பிக்கையாளர்கள் பெருகும்போதுதான் இந்த சாதி முறை அகலும்.
மிக அருமையான பதிவு ,என்னுடைய எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளீர் , வாழ்த்துக்கள்
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.
உங்கள் ஆதங்கத்தை அழகாக சொல்லியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்.
கல்வியை கற்றுகொள் ஒன்று சேர் ஒற்றுமையாக இரு என்றார் Dr.அம்பேத்கர்
ஆனால் மற்ற மேல் ஜாதியினரை போல இந்த அப்பாவி மக்கள்கள் கல்வி கற்று கொள்ளவோ கல்வியை பற்றி அறிந்து கொள்ளவோ கொஞ்சம் கூட முயற்சி எடுக்க வில்லை காரணம் பொருளாதர வர்க்கத்தில் மிகவும் பின் தங்கிய உள்ள சமுதாயம் என்பதால் ஆளும் வர்க்கமும் இவர்களை நாயை விட கேவலமாக பார்த்தது.
தேவர்களும் வன்னியர்களும் நாடார்களும் மற்றும் இன்னும் என்னற்ற ஜாதியினரும் சமுதாயத்தில் நல்லதொரு அந்தஷ்த்தை கிடைக்கப் பெற்றாலும் மனிதர்களுக்கு அடிமையாக இருக்கும் இன்றைய தலித்தினர்களை அரவனைப்பது எத்தனை ஜாதிகள்?
அரசியல் வாதிகளும் ஆன்மீக குருக்களும் "தீட்டு" என்று ஒதுக்கி தள்ளிய இந்த தலித் மக்கள்களை கரை சேர்க்கப் போவது யார்?
படிப்பறிவற்ற இந்த ஜனங்கள் எங்களுக்கும் உரிமை வேண்டும் போராடியால் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி இதுதானே மேல் வர்க்கத்தின் கட்டளை?
நீங்கள் சொல்லுவது போல எல்லா குரு பூஜைகளும் நிறுத்தப் படவேண்டும்.
மக்கள்களுக்கு விழிப்புனர்வை ஏற்ப்படுத்துவதற்கு ஒவ்வொரு சமுதாய மக்கள்களிருந்து ஒவ்வொரு குழுவை அரசு நியமிக்கனும்.
பார்ப்பானியர் மக்கள்களுக்கு கிடைக்க கூடிய சழுகைகள் அனைத்தும் தேவர்களில் தொடங்கி தலித்துகள் வரை கிடைப்பதற்கு சட்டம் கொண்டு வருவதற்கு மசோதா தாக்கல் செய்யப் படவேண்டும்.
இதுதான் இந்துக்கள் ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக் காட்டாகும்.
ஜாதிகள் கூடாது தீண்டாமையும் ஆகாது என்று கூறும் தமிழக அரசுதான் கல்வி சான்றிதலில் ஜாதியினை எழுதியுள்ளது.
ஜாதி வேறுபாடுகள் நாட்டின் கொள்கை அல்ல!
அவர்கள் சார்ந்துள்ள மதத்தின் கொள்கை.
அன்றாட காரியங்கள் முதல் அவ்வப்போது நடக்கும் மதச் சடங்குகள், நல்ல நிகழ்ச்சிகள் அனைத்திலும் தலித்துகள் ஜாதியின் பெயரால் ஒதுக்கப்பட்டனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால், எது எதுவெல்லாம் மனித சமுதாயத்திற்கு தீங்கு தருமோ, பாவமான காரியமோ, அந்த அனைத்திலும் ஜாதி வேறுபாடுகள் எங்கோ பறந்துவிட்டன.
உதாரணமாக, தியேட்டரில் சினிமா பார்க்கும் ஒரு மேல்சாதிக்காரன் தன் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருப்பவன் என்ன ஜாதி என்று பார்ப்பதில்லை.
மதுக்கடைகளில் மது அருந்துபவர்கள் ஜாதிப் பாகுபாடு இல்லாமல் கிண்ணங்களை மோதவிட்டு மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்வதைப் பார்க்கிறோம்.
விபச்சாரம் செய்யும் ஆணும், பெண்ணும் தங்களுக்குள் என்ன ஜாதி என்று கேட்டுக்கொள்வதில்லை.
ஆனால் இதுவே நல்ல காரியங்களில் காணவே முடிவதில்லை.
ஆகா... என்னே சமத்துவம்...!!! - நன்றி : சமூக நல்லிணக்க மையம் (CESH)
பிறப்பால் உயர்வு தாழ்வு போக்கி மனிதன் மனிதனாக வாழ வழி செய்த முஹம்மதைப் புகழ என்னிடம் வார்த்தைகள் கிடையாது. - டாக்டர் அம்பேத்கார்.
சமத்துவத்தை ஒரு மதம் பாராட்டத்தக்க வகையில் அனுகியிருக்கிறதேன்றால் அது இஸ்லாம் மட்டுமே என்று நான் அனுபவப்பூர்வமாய் கூறுகிறேன். - சுவாமி விவேகானந்தர்.
முஹம்மது நபியின் வெற்றிக்கு முதல் காரணம், அவர்கள் கொண்டிருந்த உறுதியும் ஊக்கமும். இத்தகைய உறுதி அந்தக் காலச் சூழ்நிலையில் ஏற்படுவது எளிதன்று. இரண்டாவது காரணம். இஸ்லாம் போதிக்கும் சமத்துவமும் சகோதரத்துவமுமாகும். - ஜவஹர்லால் நேரு.
சமத்துவ மார்க்கம்
இஸ்லாத்தில் ஒரு சிறப்பு, இஸ்லாத்தில் யார் சேர்ந்தாலும் சாதியை நீக்கிவிடுகிறது.
முதுகுளத்தூரில் ஒருவர் தலையை ஒருவர் சீவிக்கொள்ளும் தேவர், தாழ்த்தப்பட்ட மக்களானாலும் சரி, மற்றும் யார் சேர்ந்தாலும் சரி, சாதியை நீக்கிவிடுகிறது, இஸ்லாத்தின் கொள்கை. அதனால் அது என்னை மிகவும் ஈர்க்கக்கூடிய கொள்கையாக இருக்கிறது.
இதையெல்லாம் அறிந்து தான், எதையும் துருவித்துருவி ஆராயும் பண்பு படைத்த
அறிஞர் பெர்னாட்ஷா அவர்கள்,
‘உலகில் கடைசிவரை நிலைத்திருக்கக் கூடிய மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் ஒன்றுதான்’ என்று எழுதியிருக்கிறார். - அறிஞர் அண்ணா.
.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
நல்லதொரு ஆக்கத்திற்கு ஜஸக்கல்லாஹ் ஹைர்
முன்னுரையிலிருந்து முடிவு வரைக்கும் தொய்வில்லாமல் சொல்லவேண்டியதை, உணர்த்தப்பட வேண்டியதை சரியாக சொல்லிவிட்டீர்கள்....
இது பற்றி நிறைய பேச ஆவல். இன்ஷா அல்லாஹ் என் ப்ளாக்கில் சில வேலைகளை முடித்துவிட்டு வருகிறேன் :-)
மீண்டுமொருமுறை அழகான அற்புதமான ஆக்கத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
குரு பூஜைகள் வேண்டாம். அதைவிட இதில் அரசியல்வாதிகள் கலந்து கொள்வது மிகக் கேவலம். இதைத் தடுத்து நிறுத்த ஒரு கையெழுத்துப் பதிவு ஒன்றிட்டு அதனை தலைவர்களுக்கு அனுப்பினால் என்ன? செய்யலாமா?
//VANJOOR said...
ஜாதி வேறுபாடுகள் நாட்டின் கொள்கை அல்ல!
அவர்கள் சார்ந்துள்ள மதத்தின் கொள்கை//
சட்டத்தின் மூலம்தான் எல்லா ஜாதியினருக்கும் பிறர் மதத்தினருக்கும் சழுகைகள் வழங்கப் படுகிறது என்பதை தற்பொழுது எல்லோரும் பார்க்கலாம்.
@அந்நியன் 2அலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.வாஞ்சூர் அவர்களின் கருத்துக்கு பதிலாக...//சட்டத்தின் மூலம்தான் எல்லா ஜாதியினருக்கும் பிறர் மதத்தினருக்கும் சழுகைகள் வழங்கப் படுகிறது என்பதை தற்பொழுது எல்லோரும் பார்க்கலாம்.//...என்கிறீர்கள்.
உடன்கட்டை, தேவதாஸி, விதவை விவாக மறுப்பு, பெண் சொத்துரிமை மறுப்பு, பால்ய விவாகம், வரதட்சினை... போன்றன இந்து மதத்தில் முன்பு இருந்தாலும் அவை பல சீர்திருத்த வாதிகளால் ஒழிக்கப்பட்டு அதற்கு எதிரான சட்டங்களை அரசு அதிகாரபூர்வமாக இயற்றிவிட்டது.
இதே வரிசையில்... இந்த வர்ணாசிரம் எனும் சாதிக்கு... அதில் தீண்டாமைக்கு எதிரான சட்டம் உள்ளது. அதனால், பெயருக்கு பின்னே பள்ளி சான்றிதழில் யாரும் சாதியை இப்போது இணைப்பதில்லை.
சாதியை அறவே ஒழிக்கத்தான் இந்த சாதி அடிப்படையிலான அரசின் இட ஒதுக்கீடு சலுகைகள் ஏற்படுத்தப்பட்டன.
சாதிகள் முற்றிலும் ஒழிந்த நிலை ஒன்று எதிர்காலத்தில் ஏற்பட்டுவிட்டால்... இந்த அனைத்து சலுகைகளும் நீக்கப்பட்டுவிடும் என்பது அரசியல் சாசனம்.
ஆகவே...
//ஜாதி வேறுபாடுகள் நாட்டின் கொள்கை அல்ல!
அவர்கள் சார்ந்துள்ள மதத்தின் கொள்கை//
---என்பது சரியே..!
ஆனால்... சாதிக்கு ஆதரவாக அரசு இருப்பது போல தோன்ற காரணம்... அதற்குரிய நோக்கத்துடன் சரியாக அச்சட்ட வரைமுறைகள் நடைமுறை படுத்தப்படவில்லை.
உதாரணமாக, 'community certificate' (இனியாவது 'சமூகச்சான்றிதழ்' என்போமே..!) என்பது 'caste certificate'-ஆக, 'சாதிச்சான்றிதழ்' என நடைமுறையில் அமலில் உள்ளது.
முறைப்படி அதில் SC /ST /BC /MBC /FC என்று மட்டுமே இருந்திருக்க வேண்டும். அதில் சாதி எழுதப்படக்கூடாது. அதற்கு பதில் ஒவ்வொரு சாதிக்கும் ஏதாவது ஓர் எண் கொடுக்கப்பட்டிருக்கலாம். சான்றிதழில் அல்ல; அரசு பதிவேட்டில். இதனால் ஜாதி ஒழிவதற்கு பதிலாக வளர்க்கப்படுகிறது என்பதுதான் துயர்.
மேலும்...
ஒருவர் (உதாரணமா SC) இந்த சலுகையை அரசிடம் பெற்று கல்வி மற்றும் பொருளாதாரத்தில் முன்னேறிவிட்டால்... அவரின் அடுத்த தலைமுறை முன்னேறிய தலைமுறையாக (MBC என) மேம்படுத்தி அறிவிக்க எந்த முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. இதேபோலத்தான் பிற வகுப்பாருக்கும்.
அன்பின் ஆஷிக் இது போன்ற காலங்கடந்த தத்துவங்கள் ஒரு பக்க சார்பையே உறுதிப்படுத்தும்.எல்லாச்சமூகத்து தலைவர்கள் பெயரிலும் பேர் வைக்கும்போது சீராகஓடிய பேருந்துகள்.ஒரு கீழ்ச்சாதி தலைவன் பெயர்வைக்கும்ப்பொது மட்டும் கலாட்டா செய்வதன் பொருள் ஒன்றே ஒன்றுதான்.பாப்பாப்பட்டி கீரிப்பட்டி பிரச்சினையின் போது இரண்டு மூன்றுமுறை செருப்பால் எரியப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அப்போது வீரம் இல்லாமல் போனதா இல்லை துப்பாக்கிகள் இல்லாமல் போனதா ? இன்னொரு குருபூஜை நடக்கும் போது திண்டாடும் காவல்துறையின் அவலங்களை நாளிதழ்கள் எழுதுவதில்லை.காரணம் அவர்கள் ஆளப்பிறந்தவர்கள்.கொடியங்குளம்,தாமிரவரணி,இப்போது பரமக்குடி இவை எல்லாம் சொல்லுகிற சேதி என்ன தெரியுமா ?.உங்களைப்போன்ற நடுநிலைவாதிகள் மறைமுகமாக சொல்லுவதை துப்பாக்கிகள் மூலம் சொல்லுகின்றன.நடந்த நிகழ்வு பற்றி ஒருவரிகூட விமர்சிக்க முடியாத யாரும் வரலாறுகள் நீதிகள் பற்றிப்பேச
Jaathiyum madhamum samoohathin iru kankal antha nelamayila than poitrukku. Naama mudinja alavu poraadalam but result?
வெல்டன் காமராஜ்!
இந்த முசுலீம்கள் கூட பாரபட்சம்தான் பார்க்கிறார்கள்.
தேவருக்குக் குருபூஜை நடக்கும்போது பரமக்குடியில் பள்ளர்கள் எப்படி உயிருக்குப்பயந்து வாழந்தார்கள் என்று விலாவரியாக எழுதமாட்டார்கள். தேவர்களுக்கு எப்படியெல்லாம் அரசியல் தலைவர்கள் வருகிறார்கள். பூஜை செய்கிறார்கள் என்று எழுதவில்லை. ஆனால் சேகரனின் குருபூஜை மட்டும் இவர்கள் கண்களை உறுத்துகிறது. குருபூஜைகள் அவசியமா என்று பதிவு போடுகிறார்கள்
மாஞ்சோலைப் படுகொலைகள், தாமிரபரணிப் படுகொலைகள், கொடியன்குளம் படுகொலைகள் தெரியாது. ஏனென்றால், அங்கு கொல்லப்பட்டவர்கள் தலித்துகள். தேவர்கள் கொலைசெய்யப்பட்டிருந்தால் உடனே இவர்கள் பதிவுகள் போடுவார்கள்: "இக்கொலைகளை தலித்துகள் செய்வது சரியா ? அவர்களைக் தடுக்க என்ன செய்யலாம்? என்றெல்லாம்.
இந்து மதத்திலிருந்து விலகி இசுலாத்தில் சேர்ந்தாலும் இவர்கள் அடிப்படை இந்துக்குணம் போக மாட்டேன் என்கிறதே ஏன்?
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்...
சிறந்த சிந்தனை, இன்னும் இதனுடன் அரசு அலுவலகங்களில் நடக்கும் பூஜைகளைப் பறியும் கண்டித்து இருக்கலாம். அரசு சட்ட திட்டங்கள் எல்லாம் ஏட்டில் மட்டுமே இருக்கின்றன, நடைமுறையிலும் கூட ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் வலைந்து நெளிந்து தான் செல்கிறது. படித்தவர்களை ஆட்சியிலும், அதிகாரத்திலும் கொண்டு வந்தால் சிந்தித்து செயல்படுவார்கள் என்றால், வந்தபின் அவர்களை வளப்படுத்திக் கொள்வதிலே முழு நேரத்தையும், சிந்தனையும் செலவழித்துக் கொள்கிறார்கள். காரணம் அவர்களுக்கு மேல் யாரும் இல்லை என்ற என்னம் தான், இதில்தான் இஸ்லாம் போதிக்கின்ற மறுமையில் இங்கு தப்பித்தவர்கள் அங்கு இறைவனிடத்தில் கண்டிப்பாக தண்டனை கிடைக்கும் என்ற பயத்தினால் இவ்வுலகில் நீதியாக நடப்பார் என்று மனிதர்களுக்கு போதிக்கிறது. மறுமையை நம்பி வாழ்பவனே உண்மை முஸ்லிம், பெயர் தாங்கிகள் அல்ல!!!
மேலே சகாக்கள், காமராஜ், காவ்யாவின் பின்னூட்டத்தில் அவர்களுடைய கோபம் பரமக்குடி நிகழ்ச்சியில் நியாயமானதாக இருந்தாலும் பொதுவாக கட்டுரையாளர் எல்லா குருபூஜைகளையும் தான் கண்டித்திருக்கிறார். மேலும் இது போல் நிகழ்வுகள் கடந்த சில வருடங்கலாக இல்லாமல் இருந்தது. இது போல் நிகழ்வுகள் அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே நடைபெறுகிறது என்பதை கருத்தில் கொண்டு இளைஞர்கள் சிந்தித்து உணர்ச்சிகளூக்கு அடிபனியாமல் செயல்பட வேண்டும்.
@ அன்பின் சகோ. காமராஜ்,
என்னது..? ஒரு பக்க சார்பா..? நீங்கள் உங்கள் பார்வையில் உணர்ச்சிவசப்பட்ட நிலையில்தான் இப்பதிவை படித்துள்ளீர்கள் என்றே அறிகிறேன். நான் என்ன சொல்கிறேன் என்று தங்களால் கூட உணர இயலவில்லையா சகோ.காமராஜ்..?
பேருந்துக்கு பெயர் வைப்பதாலும்... மாவட்டத்துக்கு பெயர் சூட்டுவதாலும் ஒடுக்கப்பட்ட மக்கள் நிலை மறுமலர்ச்சி அடைந்து முன்னேறி விடுவார்கள் என்று நீங்களும் நம்புகிறீர்களா..? 'காயிதே மில்லத் பெயரை மாவட்டத்துக்கு வைத்தால் முஸ்லிம்கள் மேம்பட்டுவிட்டனர்' என்று நான் நம்பினால் அது மூடத்தனம் என்று உணர்கிறேன். இதன் பின்னால் இருக்கும் ஒட்டு அரசியல் உங்களுக்குமா தெரியவில்லை சகோ.காமராஜ்..?
//பாப்பாப்பட்டி கீரிப்பட்டி// போன்ற இடங்களில் இன்னும் சுமுகமான தேர்தலை நடத்தக்கூட முடியாத நிலையில் நாம் இருப்பது வெட்கக்கேடு மட்டுமல்ல... 64 வருட நம் ஜனநாயகத்துக்கு அவமானம் என்பதில் சந்தேகம் இல்லை.
"நான் பரமக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டிற்கும் அம்மக்களின் தலைவர் கைதுக்கும் வன்மையான கண்டனங்களை பதிகிறேன்". இவ்வரியை பதிவில் இணைக்காததற்கு காரணம்.. இது பொதுவான பதிவு. எக்காலத்துக்கும் பொருந்தும்படி அவ்வப்போது மீள்பதிவு போடுவதற்கு ஏற்றவாறு எழுதியுள்ளேன் சகோ.
நீங்கள் சொன்ன மற்ற கொடுமைகள் நடந்தபோதெல்லாம் என்னிடம் வலைப்பூ கிடையாது என்பதை அறியத்தருகிறேன். அதற்கும் பலதடவை நண்பர்களுடன் பேசும்பொழுது கண்டனம் தெரிவித்துதான் இருக்கிறேன்.
அடிபட்டு ரத்தம் சொட்டச்சொட்ட நிற்கிறவனிடம் கீதை,பைபிள்,குர்ர்ரான் மேற்கோள்கள் சொல்லுகிற உங்களது அறிவார்ந்த தன்மை தெரிகிறது தோழா ?
@ சகோ.காவ்யா,
தங்கள் பின்னூட்டத்தை படித்து வேதனை அடைகிறேன் சகோ. காவ்யா.
ரத்தக்கண்ணீரே வரும்படியான வார்த்தைகளை எழுதியுள்ளீர்கள். அவ்வளவுதானா நீங்கள் என்னை புரிந்து கொண்டது..?
ஒடுக்கப்பட்ட முஸ்லிம்கள் ஆதிக்க வர்க்க ஆர் எஸ் எஸ் - ஹிந்துத்துவாவினரால் எந்த அளவுக்கு நாடெங்கும் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர் என்று... உங்களுக்கு தெரியாததல்ல..!
உதாரணமாக...
பாபர் மசூதியில் அதன் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட இந்திய ராணுவம், உத்தர் பிரதேஷ் காவல்துறை, உலக ஊடகங்கள் எல்லாம் நிற்க எந்த விதமான பதட்டம் அவசரம் குற்ற உணர்ச்சி பயம் சிறிதும் இல்லாமல் மிக நிதானமாக ஒரு பழம்பெரும் பள்ளிவாசலை உச்சநீதி மன்றத்தீர்ப்பை துச்சமென மதித்து.. அரசியல் சாசனத்தை கேவலப்படுத்திவிட்டு இடித்து தரை மட்ட மாக்கினரே ஒரு பயங்கரவாத கும்பல்...!
'அது அநியாயம்' என்று கூறி இன்னொரு கும்பல்... அதேபோல ரதயாத்திரை... கரசேவை... என்று ஒரு இந்து கோவிலை இடிக்க கிளம்பினால்... "அது சரிதான் நீதிதான்" என்பது போலத்தான் உங்களுக்கு தோன்றும்..!
அந்நேரம்... என்னைப்போல ஒருவர் "இனி சமய வழிபாட்டுத்தலங்களை இடிக்கும் கொடூரம் வேண்டாம்" என்று பதிவுபோட்டால்... அநீதியாக தோன்றும் உங்களுக்கு.
ஆனால்... எனக்கு அப்படி தோன்றாது. காரணம், சட்டத்தை கையில் எடுத்து செய்யப்பட ஒரு குற்றத்துக்கு இன்னொரு அதே போன்ற கேவலமான குற்றம் பிராயச்சித்தமாக ஆகாது என்று நம்புவதால். ---அது சட்டத்தால் அளிக்கப்படும் தீர்ப்பாக இல்லாத வரை..!
நாம், சகோ.ஆமினா பதிவிலேயே நிறைய விவாதித்து விட்டோம்... உங்களுக்காகத்தான் இப்பதிவே. இங்கும் நீங்கள் இன்னும் அதே மனநிலையில் இருந்தால்... ம்ஹூம்... இதற்கு மேல் ஒன்றும் கூற நான் விரும்பவில்லை சகோ.காவ்யா.
@காமராஜ்காயம்பட்ட உங்கள் உணர்வையும் வலியையும் மதிக்கிறேன் சகோ.காமராஜ்.
ஆனால், நான் சொல்லும் விஷயம் நல்ல விஷயம் என்று நூறு சதவிகிதம் நம்புகிறேன். யாருக்கும் சார்பாகவோ எதிராகவோ எதுவும் சொல்லவில்லை. நீங்களும்...
'சொல்லும் விஷயம் நல்லதுதான் என்றாலும் நேரம் தெரியாமல் சொல்லி விட்டேன்' என்கிறீர்கள்.
வருடம் முழுக்க எங்காவது ஏதாவது ஒரு ஆதிக்க வர்க்கம் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை நசுக்கிக்கொண்டுதான் இருக்கிறது. அதை எதிர்த்துக்கொண்டும் உள்ளோம்.
ஆனால்... அதேநேரம்... நல்ல பொதுவான கருத்துக்களை எப்போதுதான் நாம் நமக்குள் சொல்லிக்கொள்வது சகோ.காமராஜ்..?
நீங்களே ஒரு நாள் குறிச்சு சொல்லுங்கள்.
@M. Farooqஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//இது போல் நிகழ்வுகள் அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே நடைபெறுகிறது என்பதை கருத்தில் கொண்டு இளைஞர்கள் சிந்தித்து உணர்ச்சிகளூக்கு அடிபனியாமல் செயல்பட வேண்டும்.//--மிக நல்ல கருத்து சகோ.ஃபாரூக்.
இன்னும் மக்கள் இதில் தெளிவடையவில்லையே என்று வேதனையாக உள்ளது சகோ.ஃபாரூக்.
@கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் )இறைநம்பிக்கையுடன் முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்.
@தருமிஅருமையான கருத்து. விழிப்புணர்வூட்டும் நல்ல யோசனை சகோ.தருமி...!
ஆனால், செயல்படுத்துவதற்கு முன்னர் இதன் பின்னால் உள்ள நேர்மையை முடிந்தவரை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டி இருக்கிறது. இல்லையேல்... சாதி சார்பு முத்திரை குத்துகிறார்கள். மனம் வலிக்கிறது.
@ஆமினாஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//இது பற்றி நிறைய பேச ஆவல். இன்ஷா அல்லாஹ் என் ப்ளாக்கில் சில வேலைகளை முடித்துவிட்டு வருகிறேன் :-)//---வாருங்கள் சகோ.ஆமினா.
@VANJOOR
//எது எதுவெல்லாம் மனித சமுதாயத்திற்கு தீங்கு தருமோ, பாவமான காரியமோ, அந்த அனைத்திலும் ஜாதி வேறுபாடுகள் எங்கோ பறந்துவிட்டன.//
//ஆனால் இதுவே நல்ல காரியங்களில் காணவே முடிவதில்லை.//
---நெத்தியடி கருத்து..!
@tamilkurinji.com News//என்னுடைய எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளீர்//---நம் எண்ணங்கள் ஒன்றுதானா..? மிக்க மகிழ்ச்சி.
@Rabbaniஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//ஒட்டு மொத்த மனித சமுதாயமும் ஒரே ஒரு மனிதனிடமிருந்துதான் வந்தோம் என்ற நம்பிக்கையாளர்கள் பெருகும்போதுதான் இந்த சாதி முறை அகலும்.//---இது நிரந்தர தீர்வு.
நான் இப்பதிவில் "தற்காலிக தீர்வுகளில் ஒன்றை" பற்றி மட்டுமே கூறியுள்ளேன் சகோ.ரப்பானி.
பதிவின் கடைசியில் 'நிரந்தர தீர்விற்கான' சுட்டி கொடுத்துள்ளேன்.
இது... இப்பதிவின் பின்னூட்ட விவாதத்தின் நீட்சி அங்கேயும் இதே கருத்துக்களை சொல்லியுள்ளேன்... சுருக்கமாக.
தனக்கிணையாக நாற்காலியில் உட்கார்ந்தார் என்பதற்காகக் களப்பலியிடப்பட்டவர் தியாகி இம்மானுவேல் சேகரன்.தான் கற்ற கல்வியைத்தன் சமூகத்தின் உரிமையை மீட்பதற்காகச்செலவழித்தவர். ஆனால் குருபூஜை யாருக்கு முதலில் நடந்தது எத்தனை வருடங்கள் நடக்கிறது.அதற்கு நடக்கும் அரச மரியாதை.பேருந்துகளுக்கு மாற்ரு வழித்தடங்கள்.அத்துமீறல்களுக்கு கொடுக்கப்படுகிற சமாதானம் எத்தனை அப்போதெல்லாம் அரசும் உங்களைப்போன்ற நடுநிலைவாதிகளும் வாளாவிருந்துவிட்டு இப்போது தேவையா தேவையில்லையா என்கிற ஆராய்ச்சி கொஞ்சம் அதிகமாகப்படவில்லை.
சகமனிதனின் குருதிகொட்டும் போது துடிக்கிற மனிதாபிமானம் மட்டுமே இப்போது தேவையாக இருக்கிறது. அது மணிப்பூர் மாநிலத்து மக்களுக்ககட்டும்.இல்லை காஷ்மீரில் அழைத்துக்கொண்டுபோய் இன்னும் இருக்கின்றனரா செத்துப்போனார்களா எனத்தெரியாமல் விட்டு மூடிமறைக்கிற ராணுவத்திமிராகட்டும் எல்லாவற்றுக்கும் ஆராய்ச்சி பண்ணாமல் ஆதரவு நீட்டுகிற மனிதாபிமானம் மட்டுமே இப்போது உடனடித்தேவை.
@காமராஜ்//சகமனிதனின் குருதிகொட்டும் போது துடிக்கிற மனிதாபிமானம் மட்டுமே இப்போது தேவையாக இருக்கிறது.//---நீங்கள் சொல்வது எல்லாம் உங்கள் தற்போதைய மனநிலையில் சரிதான் சகோ.காமராஜ். அமைதி அடைந்த பின்னர் பொறுமையாக சிந்தியுங்கள் சகோ.
இந்த குருதி கொட்டுதலுக்கு உரிய காரணங்களைப்பற்றி அதை நிறுத்தி மருந்திட்டபின்னர் கூட நாம் அலசக்கூடாதா..?
இனி எதிர்காலத்தில் குருதி கொட்டாமல் இருக்க அதை தடுக்கும் முயற்சியினை நாம் எடுக்கக்கூடாதா..?
குருதி கொட்டிய செப்படம்பர் 11 அன்றேவா இந்த பதிவு வந்திருக்கிறது..?
ஐந்து னால் கழித்து வந்தது கூட தவறு என்றால்... அப்புறம் எப்போது இதை வெளியிடலாம் என்று //நீங்களே ஒரு நாள் குறிச்சு சொல்லுங்கள்// என உங்களிடம் கேட்டேனே..! நீங்கள் பதில் சொல்லவே இல்லையே சகோ.காமராஜ்..!
பின்னூட்டம்#17 ஐ ... "ஒடுக்கப்பட்ட...
...தீர்ப்பாக இல்லாத வரை..!"
---ஒரு முறை படியுங்கள் சகோ.
@Aashiq Ahamed
@Rabbani
@tamilkurinji.com News
@அந்நியன் 2
@VANJOOR
@ஆமினா
@தருமி
@காமராஜ்
@கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் )
@காவ்யா
@M. Farooq
தங்கள் அனைவர் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோஸ்.
நடு நிலைமை என்கிற ஒன்று உலகத்தில் கிடையவே கிடையாது. ஒரு அரசு திமிங்கலபலத்துடன் நடத்தப்படும் குருபூஜையை ஒழுங்குபடுத்துகிற எடுபிடி வேலைகளுக்காக காவல்துறைய நிறுத்திவைக்கிறது.ஆனால் அதே காவல்துறையை எங்கெல்லாம் ஒதுக்கப்பட்டவர்கள் நியாயம்கேட்கிறார்களோ அங்கேயெல்லாம் முரட்டு கொலைகாரர்களாக்குகிறது. இதுதான் எமது இரண்டாயிரம் வருட அனுபவம். எதாவதொரு புள்ளியில் இந்த அவலம் தீர்ந்துவிடாதா என்கிற ஆதங்கம்.1930 வாக்கில் சௌதாக்குளத்துக்கு நீர்குடிக்க ஒரு பெரும்படை திரட்டிக்கொண்டு போனார் அம்பேத்கர்.அதற்குமுன்னர் அந்தக்குளத்தில் ஆடுமாடுகள் பன்றிகள் உட்பட பல்லாயிரக்கணக்கான விலங்குகள் பறவைகள் பூச்சிகள் புழுக்கள் நீர்குடித்துக்கொண்டிருந்தன அவற்றோடு தலித்துகள் தவிர்த்த எல்லா இனங்களும்.
அப்போது அது கலவராமானது. அதுபோன்ற நூற்றுக்கும் மேற்பட்ட படுகொலைகள் இந்தியாவில் நடந்தது ஜாதியின் பேரால்.அப்புறம் மதத்தின் பேரால்.
இதன் இழைகளை இன்னும் பாதுகாத்துக்கொண்டுவருகிற இந்துத்துவம் அதற்கு பாதுகாப்புக்கொடுக்கிற அரசு,ஊடகம்,அப்புறம் நடுவுநிலைக்காரர்கள்.
ஜாதி இருக்கிறது மிகக்கொடூரமாக அரசு எந்திரத்தின் கோரப்பற்களுக்கிடையில்.
என் எண்ண ஓட்டத்தில் தோன்றியவற்றில் பலவற்ரை நன்றாக அலசி ஆராய்ந்து இருக்கிறீர்கள்.
சகோ ஆமினா சொன்னது தான் ஞாபகத்திற்கு வருகிறது. கலவரம் செய்ய தேவையான கற்கள், மற்றும் மண்ணென்னை எப்படி ஆயத்தமாக வைக்கப்பட்டது. ஆக ஒரு மாணவன் இறந்ததற்காக திட்டமிட்டு தங்களுடைய சாதி வலிமையை காக்கவே இந்த கல்வரம் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக என்னுடைய கணிப்பு. இது தான் பலபேருடைய கணிப்பும். காவல்துறையை சேர்ந்தவர்களும் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதும் செய்தி தான். அவர்களும் மணிதர்கள் தானே. அது பலபேருக்கு புரியவில்லை.
இதையே சாக்காக வைத்து ஜான் பாண்டியன் உள்ளாட்சி தேர்தலில் சீட்டு கேட்டாலோ அல்லது வரும் சட்டமன்ற தேர்தலில் சீட்டு கேட்டாலோ ஆச்சர்யபடுவதற்கு ஒன்னுமில்லை. துப்பாக்கி சூடு நடத்தாமல் மக்களை தாக்காமல் தாக்கும் மக்களை அடக்குவது எப்படி என்பதை இந்த தாக்குதலை ஞாயப்படுத்தும் சகோக்கள் சொல்லட்டும்.
ஜாதி ஒழிந்தால் தான், ஜாதியை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்கள் ஒழிந்தால் தான் தமிழ்நாடு உறுப்பட ஒரே வழி
@காமராஜ்
//இதன் இழைகளை இன்னும் பாதுகாத்துக்கொண்டுவருகிற இந்துத்துவம் அதற்கு பாதுகாப்புக்கொடுக்கிற அரசு,ஊடகம்,அப்புறம் நடுவுநிலைக்காரர்கள்.//
---கடைசியில் சொல்லி இருக்கிறீர்கள் இப்படி..!
ஆனால்... முதலிலேயே...
//நடு நிலைமை என்கிற ஒன்று உலகத்தில் கிடையவே கிடையாது.//
---என இப்படியும் சொல்லிவிட்டீர்கள்..!
//இதுதான் எமது இரண்டாயிரம் வருட அனுபவம். எதாவதொரு புள்ளியில் இந்த அவலம் தீர்ந்துவிடாதா என்கிற ஆதங்கம்//---மிகவும் நியாயமான ஆதங்கம் சகோ.காமராஜ்.
ஆனால், இதில் எனது நிலைப்பாட்டில் தங்களுக்கு உடன்பாடில்லையெனில்... 'இந்த அவலம் நீங்க சரியான நிரந்தர தீர்வு என்ன' என்று இனி நீங்களே சொல்லிவிடுங்கள் சகோ.காமராஜ்.
@ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)
//இதையே சாக்காக வைத்து ஜான் பாண்டியன் உள்ளாட்சி தேர்தலில் சீட்டு கேட்டாலோ அல்லது வரும் சட்டமன்ற தேர்தலில் சீட்டு கேட்டாலோ ஆச்சர்யபடுவதற்கு ஒன்னுமில்லை.//---ம்ம்ம்... இப்படித்தான் காசுக்கு விற்கிறார்கள் மக்களின் உணர்ச்சிகளை..!
//தமிழ்நாடு உறுப்பட ஒரே வழி//---'உருப்பட வேண்டும்' என்றாவது குறைந்த பட்ச எண்ணம் வேண்டும் சகோ.அபுநிஹான்..!
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.
//தேவருக்குக் குருபூஜை நடக்கும்போது பரமக்குடியில் பள்ளர்கள் எப்படி உயிருக்குப்பயந்து வாழந்தார்கள் என்று விலாவரியாக எழுதமாட்டார்கள்.//
அடடா...........அப்படியா??? சொல்லவே இல்ல :-)
"அடுத்த மாசம் வருதுல?? அப்ப வச்சுக்குவோம் கச்சேரியையை" , அவனுங்க வந்தா சும்மா விட்டுட்டு போறதுக்கு நாங்க என்ன $@??!!$ என இரு சமுதாய மக்கள் சொல்வது நேரடியாகவே இப்போது வரை கேட்டுக்கொண்டிருக்கிறேன். இது தான் பரமக்குடி சேகரன் குருபூஜையை தனக்கு அரசியல் ஆதாயமாக்க நினைத்தவர்களின் குறிக்கோள். ஒரு சின்ன தீப்பொறி வச்சு ஊரையே கொளுத்த பாத்தாங்க. பாத்துட்டாங்க. எங்கோ ஒரு ஏசி ரூம்ல உக்கார்ந்துட்டு முதலை கண்ணீர் வடிக்கிறாங்க. ஆனா நம்மல வச்சு அவங்க லாபம் பாக்குறாங்கன்னு தெரியாத அளவுக்கு மக்களின் மனத்தில் இருந்த ஜாதி வெறி தான் காரணம் என்பது உங்களனைவருக்கும் புரிகிறதா??? 1997 ஜாதி கலவரத்துக்கு பின்பு 2011 பரமக்குடி கலவரம் போல் இது வரை நடந்ததாக எனக்கு தெரியல....வருடா வருடம் நடக்கும் தேவர் குருபூஜையில் மதுரை மண்டபம் ரோட்டில் போகும் வாகனங்களில் உள்ள இளைஞர்களின் கூச்சல்,சத்தம் மட்டுமே இடைஞ்சல்........ பரமக்குடியில் நடந்த இந்த கலவரம் சத்தியமாக தேவர்க்கும் பள்ளர்க்கும் நேரடியாக நடந்த கலவரம் அல்ல சகோ. அரசியலாக்க சில விஷமிகளுக்கு தற்போது எந்த மேட்டரும் கிடைக்காததுனால இந்த குருபூஜையை கலவரமாக்கியுள்ளனர். அவ்வளவு தான் மேட்டர்.
//மேலும் இது போல் நிகழ்வுகள் கடந்த சில வருடங்கலாக இல்லாமல் இருந்தது. இது போல் நிகழ்வுகள் அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே நடைபெறுகிறது என்பதை கருத்தில் கொண்டு இளைஞர்கள் சிந்தித்து உணர்ச்சிகளூக்கு அடிபனியாமல் செயல்பட வேண்டும். //
உண்மை..........உண்மை............உண்மை............
ஜாதி சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகள் கண்டிப்பாக வன்முறையை தான் தூண்டும். அன்னைக்குன்னு பார்த்து எதார்த்தமாக ஒரு பஸ் ஆக்சிடன் ஆனாலே அவனுங்க தான் பண்ணியிருப்பாங்கன்னு எவனோ ஒரு அரசியல் வாதி தூண்டிவிட்டாலே போதும். உணர்ச்சி பெருக்கில் மீண்டும் ஒரு கலவர பூமி தோன்றும்.
13 வயசு பையனுக்கு என்ன தெரியும்? ஆனா விடிய விடிய தன் ஜாதியின் பெயரை கொண்டு ஆவலோடு பண்டிகை போல் வேலை செய்கிறான். ஜாதிகள் இல்லையடி பாப்பான்னு ஸ்கூல்ல சொல்லி கொடுத்த வாக்கியம் சில ஜாதி பேய்களின் மூளை சலவையால் ஜாதி தான் உயிர் என்று சொல்லும் அளவுக்கு மாற்றியிருப்பது வேதனைக்குரிய விஷயம் இல்லையா??? இதற்கு ஒரே நிரந்தர தீர்வு "பொதுமக்களை பாதிக்கும், மக்களை முடக்கும், இளைஞர்களை சீரழிக்கும் ஜாதிகள் சார்ந்த மூடநம்பிக்கைகள் ஒழிக்கப்பட வேண்டும்.
துப்பாக்கி சூடு கண்டித்து தொல் திருமா தலைமையில மதுரைல பேரணி நடத்த போராங்களாம். ஹும்....... மக்களே மறந்தாலும் அரசியல்வாதிங்க மறக்க விடமாட்டாங்கன்னு நெனைக்கிறேன் :-(
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!