தற்கொலையை 'போராட்டம்' என்பதை நான் ஒவ்வொரு முறையும் எதிர்த்துள்ளேன். எந்த காரணத்துக்காகவும் யார் செய்தாலும் எதிர்த்துள்ளேன். இப்படி தன்னைத்தானே மாய்த்துக்கொண்டு போராடுவது போராட்டம் அல்ல. எதிரியால் கொல்லப்படாத அது வீரமரணமும் அல்ல. தற்கொலை என்பது... 'போராட்டத்தில் எங்கே நாம் தோல்வி அடைந்து விடுவோமோ' என்று அஞ்சும் கோழைகளின் செயல்..! தற்கொலை என்பது... ஒருவேளை தோல்வி ஏற்பட்டுவிட்டால் அதிலிருந்து தப்பிக்க எண்ணி முன்பே எடுத்து வைத்துக்கொள்ளும் முன்ஜாமீன்..! ஒரு வீரருக்கு வெற்றியை அனுபவிக்க உயிர் மிக அவசியம்.
சுமார் இரண்டரை வருடங்களுக்கு முந்திய... முத்துக்குமரனுக்கும்... இவ்வார செங்கொடிக்கும் இடைப்பட்ட கடந்த சுமார் இரண்டரை ஆண்டுகளில்தான் பதிவுலகில் எவ்வளவு பெரிய சிந்தனை மாற்றம்..! எத்தனை விவேகம்..! அணுகுமுறையில்தான் எவ்வளவு அறிவுப்பூர்வமான முன்னேற்றம்..! தற்போது ஏகப்பட்ட பதிவர்கள் செங்கொடியின் தற்கொலை பற்றி மிக நல்ல ஆக்கப்பூர்வமான கருத்துகளை எழுதுகின்றனர். அழகாய் சிந்திக்கின்றனர்.
.
ஆனால், அதேநேரம்... சகோ.வினவு போன்றவர்களின் தற்கொலை மற்றும் கொலை செய்ய ஆதரவு தேடும் பிற்போக்கான பயங்கரவாத பதிவுகளும் வந்திருக்கின்றன..! தங்கள் கருத்தை ஐடி அற்ற பல அனானிகளாக பின்னூட்டங்களில் வந்து தெரிவிப்பார்கள் என்று ஏற்கனவே "வினவின் பித்தலாட்டம் அம்பலம்..." மற்றும் "திருந்த மாட்டீர்களா வினவு..?" ஆகிய பதிவுகளில் 'எதிர்க்குரல்' சகோ.ஆஷிக் அஹமத் ஆதாரங்களுடன் வெளியிட்டுவிட்டார். இப்போது இவர்களின் துப்பாக்கிக்குண்டு கருத்துகளை பதிவிலேயே "ஓர் அனானி(?)பெரியவர்" மேலே எல்லாம் ஏற்றிக்கூறி அப்பாவிகளை கொலை செய்ய தூண்டி விடுவதை பாருங்கள்..!
(மேலுள்ள 'snip shot' வினவின் இடுகையிலிருந்து...) |
சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்...
சிங்கள ராணுவத்தின் ஈழத்தமிழின அழிப்புக்கு எதிராக தமிழகத்தில் நடந்த போராட்டத்தில் முத்துக்குமார் செய்த தற்கொலையை ஒரு பதிவர் கூட எனக்குத்தெரிந்து அந்த தற்கொலையை விமர்சித்து பதிவிட்டதாக நியாபகம் இல்லை. அதேநேரம் பெரும்பாலோனோர் அத்தற்கொலையை 'வீரமரணம்' என்றும் அவரை 'தமிழினத்தியாகி' என்றும் பதிவுலகிலும் வெளியிலும் வினவும் அவர் போன்றோரும் பலரும் போற்றிப்புகழ்ந்தனர்.
அன்று -- முத்துக்குமார் |
அப்போது வலைப்பூ இல்லாத வெறும் பின்னூட்டவாதியான நான் அவர்களிடம் திரும்பத்திரும்ப பின்னூட்டங்களில் கேட்டவை எல்லாம் இவைதான்..!
அச்சமயம் வந்த செய்திகளை வைத்து அதன் அடிப்படையில்...
"அடுத்தநாள் அரைஇறுதித்தேர்வை வைத்துக்கொண்டு இன்று லைவ் டெலிகாஸ்ட் கிரிக்கெட் மேட்ச் பார்த்துக்கொண்டு இருந்த மகனை கண்டித்து கேபிள் வயரை துண்டித்த தந்தையின் 'அடக்குமுறை- அத்துமீறல்- அராஜகத்தை' கண்டித்து தற்கொலை செய்துகொண்ட மகனை 'மாணவர் குலத்தியாகி' என்றும் அவன் செயலை 'வீரமரணம்' என்றும் சொல்வீர்களா..?"
"அப்போது சில நாட்களுக்கு முன்னர் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகும் தலைவர் படம் ரசிகர் ஷோவுக்கு டிக்கட் வாங்க ஆயிரம் ரூபாய் தரமறுத்த ஏழைத்தாய்க்கு எதிராக மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்ட மகனின் செயலை 'வீரமரணம்' என்றும் மகனை 'ரசிகர் குலத்தியாகி' என்றும் சொல்வீர்களா..?"
"இனி எப்போதுமே கிரிக்கெட் மேட்ச் / தலைவர் படம் காண இயலாத நிலை... காதல் தோல்வி தற்கொலை... கண்டதற்கெல்லாம் தற்கொலை... இதன்மூலம் தற்கொலை என்பது வெற்றியை ருசிக்க முடியாத தோல்வி... எனில்... ஒருபோதும் அது போராட்டம் ஆகாதே..?"
"முத்துக்குமார் செய்த இச்செயலை... 'தற்கொலை போராட்டத்தை'... முன்பு வல்லாதிக்க எதிர்ப்பில் ஃபிடல் கேஸ்ட்ரோ, ஆங்கிலேய ஏகாதிபத்திய எதிர்ப்பில் காந்தி, ஹிந்தி எதிர்ப்பில் கருணாநிதி, அவ்வளவு ஏன்... இதே சிங்கள இனவாத எதிப்பில் வேலுப்பிள்ளை பிரபாகரன் செய்திருந்தால் அதை 'போராட்டம்' என ஏற்றுக்கொண்டு பாராட்டி புகழ்ந்து இருந்திருப்பீர்களா..? அல்லது... 'போய்யா கோழை' என்று தூற்றி இருப்பீர்களா..?"
...என்ற கருத்துக்களில் நான் கேட்டவுடன்...
"" இல்லை இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது. அவை மூடத்தனங்கள். முத்துக்குமரனின் தற்கொலை நல்ல நோக்கத்துக்கான உயர்வான நற்செயல் - போராட்டம் - தியாகம்"
...என்பது போல சொன்னார்கள்...! உடனே நான்...
"இது சரியான செயல் என்றால்...
இது தியாகம் என்றால்...
இதுவும் ஒரு வகை சிறந்த போராட்டம் என்றால்...
இதுதான் தமிழகமெங்கும் நடந்து கொண்டிருக்கும் போராட்டத்திற்கு ஓர் உந்தாற்றலை வழங்கியிருக்கிறது என்றால்...
இதை ஏன் இப்பதிவை எழுதிய நீங்கள் செய்யக்கூடாது..?
உங்கள் குடும்பத்தினர் ஏன் செய்யக்கூடாது..?
இந்த நல்ல செயலை உங்கள் தலைவர் ஏன் செய்யவில்லை..?
தன் கட்சி தோழர்களை/தொண்டர்களை செய்ய ஏன் வலியுறுத்தவில்லை..?
உங்கள் கட்சியினர் ஏன் இந்த 'அறப்போராட்டத்தை' முதலில் செய்யவில்லை..?"
...என்ற கருத்துக்களில் நான் கேட்டவுடன்...
என் கருத்துக்களை பல பதிவர்கள் வெளியிடவில்லை. வெளியிட்ட சிலரோ... ஈழத்தமிழனின் உயிர்காக்க தாய்த்தமிழனின் உயிர் போய் விட்ட வருத்தத்தில் 'உணர்வுப்பூர்வமாக' பதிவுகள் இட்டவர்கள். இப்படியெல்லாம் அறிவுப்பூர்வமாக கேள்விகள் கேட்ட என்னை 'தமிழினத்துரோகி' என்றனர்..!
இன்னும் ஒரு பிரபல வலைத்தளத்தினரிடம் இதுபோன்று நான் 'வினவி'யவற்றை எல்லாம் தங்கள் பதிவின் கருத்துக்கு ஒத்துவராதவை (???) என்று கூறி "ஒத்துவராத மறுமொழிகள்" என்ற பாழும் மரணக்கிணற்றில் என் பின்னூட்டங்களை எல்லாம் 'நல்லடக்கம்' செய்தனர்...!
அப்போதும், அங்கிருந்து அதனை படித்துவிட்டு...
பாலஸ்தீனில், இராக்கில், ஆப்கனானில், காஷ்மீரில் நடக்கும் போராளிகளின் தற்கொலை தாக்குதல் பற்றியெல்லாம் கூறி, "இதை ஜிஹாத் என்கிறதே இஸ்லாம்...? இதை மட்டும் 'சரி' என்கிறீர்களே..?" என்றனர் வேறு சிலர்.
நான் இவற்றை எங்கே... எப்போது... என்றைக்கு... 'சரி' என்றேன்..?
இஸ்லாம் இதனை வன்மையாக கண்டிக்க அல்லவா செய்கிறது..!
பிறரை கொலை செய்தால் அனைத்து நாட்டு சட்டத்திலும் அதற்கு தண்டனை உண்டு. தன்னையே கொலை செய்யும் தற்கொலைக்கு சட்டத்தில் என்ன தண்டனை..?
உங்கள் கைகளாலேயே நீங்கள் அழிவை தேடிக்கொள்ளதீர்கள்.
--அல் குர்ஆன் (2:195)
உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள். அல்லாஹ் உங்கள் மீது மிக கருணை உள்ளவனாக இருக்கிறான்.
-- அல் குர்ஆன் (4:29)
நமது உயிருக்கு சொந்தக்காரன் இறைவன் மாத்திரமே. அதனை கொடுத்த இறைவனுக்கே மட்டுமே எடுக்கும் உரிமையும் உண்டு. இறைவனால் தடுக்கப்பட்ட செயலான தன்னைக்கொல்லும் இந்த கொலையை செய்த குற்றத்துக்கு இறைவன் அளிப்பது மிகப்பெரும் தண்டனையான நிரந்தர நரகம் என்பதல்லவா இஸ்லாமிய அடிப்படைவாதம்..!
"(போர்க்களத்தில்) ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத்தாங்க முடியாமல்) அவர் தற்கொலை செய்துகொண்டார். உடனே அல்லாஹ், 'என் அடியான் அவனது மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்திவிட்டான். எனவே அவனுக்குச்சொர்க்கத்தை நான் விலக்கிவிட்டேன்" என கூறியதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜுன்துப் (ரலி) நூல்: புஹாரி-1364)
இதுபோன்று தற்கொலை செய்த நபித்தோழருக்கு இறுதி ஜனாஸா தொழுகை/பிரார்த்தனை செய்யவில்லை நபி(ஸல்) அவர்கள். ஏனெனில், 'நிரந்தர நரகம்' என்று அறிவிக்கப்பட்டவருக்கு என்ன பிரார்த்தனை..?
தன்னிடம் பிக்பாக்கெட் அடித்தவனிடம் இருந்து அதை மீட்க எடுக்கும் முயற்சி... தன்னை பாலியல் வல்லாதிக்கம் செய்ய முனையும் கொடியவனுடன் தன் கற்பை காக்க ஒரு பெண் போராடுதல்... தன் வீட்டை சொத்தை வஞ்சகமாக சூறையாடிய, நாட்டை அபகரித்த வேற்றுநாட்டு வல்லாதிக்க அடக்குமுறை சக்திக்கு எதிராக புரியப்படும் போர் முயற்சி வரை 'ஜிஹாத்' என்பது ஒரு விரிவான விஷயம். இஸ்லாத்தில் மிக உன்னதமான காரியமாக கருதப்படுவது இந்த 'ஜிஹாத்' எனப்படும் "அநியாயத்துக்கு எதிரான புனிதப்போர்". ஆனால்... இதில் கூட தற்கொலை படை தாக்குதலுக்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை.
தன்னிடம் பிக்பாக்கெட் அடித்தவனிடம் இருந்து அதை மீட்க எடுக்கும் முயற்சி... தன்னை பாலியல் வல்லாதிக்கம் செய்ய முனையும் கொடியவனுடன் தன் கற்பை காக்க ஒரு பெண் போராடுதல்... தன் வீட்டை சொத்தை வஞ்சகமாக சூறையாடிய, நாட்டை அபகரித்த வேற்றுநாட்டு வல்லாதிக்க அடக்குமுறை சக்திக்கு எதிராக புரியப்படும் போர் முயற்சி வரை 'ஜிஹாத்' என்பது ஒரு விரிவான விஷயம். இஸ்லாத்தில் மிக உன்னதமான காரியமாக கருதப்படுவது இந்த 'ஜிஹாத்' எனப்படும் "அநியாயத்துக்கு எதிரான புனிதப்போர்". ஆனால்... இதில் கூட தற்கொலை படை தாக்குதலுக்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை.
ஒரு போர்க்களத்தை பொருத்தவரை, 'நாம் உயிருடன் வெற்றி அடைய வேண்டும்; வெற்றி கிடைக்காவிட்டால் வீர மரணம் அடைவதற்கு தயாராக இருக்க வேண்டும்' என்பதுதான் போர்க்களத்தில் உள்ள எதிர்பார்ப்பு.
ஆனால் தற்கொலைத்தாக்குதலில் நாம் உயிரைக்காத்துக்கொண்டு எதிரிகளை அழித்தல் என்பது அறவே இல்லை. முற்றிலும் சாவு என்ற ஒரே எதிர்பார்ப்பு தான் உள்ளது. அதாவது... இலாபம்/நஷ்டம் என்று இரு சாத்தியமும் உள்ள ஹலால்-வியாபாரத்துக்கும், இலாபம் ஒன்றே சாத்தியமான ஹராம்-வட்டிக்கும் உள்ள வேறுபாடு போல..!
'ஆனாலும்... மதத்தின் பெயரால்தானே தற்கொலை தாக்குதல் செய்கின்றனர்..?' ...என்றனர் மீண்டும் சிலர் விடாமல்..!
இஸ்லாமிய வாழ்வியல் நெறியை மக்களுக்கு சொல்லி... சொல்லிய வண்ணம் வாழ்ந்துகாட்டிய முஹம்மத் நபி (ஸல்) அவர்கள்... 'தற்கொலை போராட்டமும் ஒரு சொர்க்கம் செல்லும் நற்செயல்' என்றிருக்குமேயானால் அதையல்லவா முதலில் செய்துகாட்டி இருப்பார்கள்..!?! அவரின் நபித்தோழர்கள் அனைவரும் அவ்வழியை தேர்ந்தெடுத்து இருப்பார்களே..!
'இல்லை... தற்கொலை போராட்டம் என்பதும் 'ஜிஹாத்' தான் என்றும் அதில் உயிர் நீத்தால் நிரந்தர சொர்க்கம்' என்றும் அறியாத அப்பாவி இளைஞர்களை மூளைச்சலவை செய்து தங்கள் உலக காரியத்தை நயவஞ்சகமாக சாதித்துக்கொள்கின்றனர்... சில அரசியல் பிழைப்புவாதிகள். இதுதான் 'நிரந்தர சொர்க்கத்துக்கு' வழி என்றால்... இதை சொல்பவர்கள் எதற்காக இந்த பெல்ட் பாமை தங்கள் இடுப்பில் கட்டிக்கொண்டு சொர்க்கம் செல்ல முதலில் தாங்கள் முயல்வதில்லை..?
தான் செய்யும் நல்லவற்றை அடுத்தவருக்கு பரிந்துரைப்பதுதான் அறிவுரை.
'தவறு' என்று தமக்கு நன்கு அறிந்ததை சுயநலமியாக சொந்த அனுகூலத்துக்கு தான் செய்யாமல் பிறருக்கு மட்டும் பரிந்துரைப்பதுதான் மூளைச்சலவை.
---இப்படித்தான் நாம் சிந்திக்க வேண்டும் என்று கேள்வி கேட்டவர்களை சிந்திக்க சொன்னேன்..!
தான் செய்யும் நல்லவற்றை அடுத்தவருக்கு பரிந்துரைப்பதுதான் அறிவுரை.
'தவறு' என்று தமக்கு நன்கு அறிந்ததை சுயநலமியாக சொந்த அனுகூலத்துக்கு தான் செய்யாமல் பிறருக்கு மட்டும் பரிந்துரைப்பதுதான் மூளைச்சலவை.
---இப்படித்தான் நாம் சிந்திக்க வேண்டும் என்று கேள்வி கேட்டவர்களை சிந்திக்க சொன்னேன்..!
பதிவர்களே..!
முத்துக்குமரன், செங்கொடி போன்றவர்களின் தீக்குளிப்பு தற்கொலையை 'தியாகம்', 'வீரமரணம்', 'தீரம்மிக்க போராட்டம்', 'தியாகி' என்று பிரேம் போட்ட போட்டோவுக்கு குங்குமம் இட்டு மாலையிட்டு மரியாதையுடன் அவர்களை வாழ்த்தி பதிவுகள் போட்டு... சில அரசியல்வாதிகள் உடனடியாக சென்கொடிக்கு சிலை திறப்பதையும் பதிவுகளாய் போட்டு... இவற்றை படிக்கும் சில அப்பாவி இளைஞர்களை 'தற்கொலை செய்தல் மிகவும் போற்றத்தக்கது' என மூளைச்சலவை செய்கிறீர்களா..?
இன்று - செங்கொடி |
இந்த செங்கொடி தீக்குளிப்புக்கு... 'தற்கொலை & கொலை அதரவு பதிவு' எழுதும் வினவு போன்ற பதிவர்களோ தற்கொலைக்கு தயார் இல்லை..! கொலைக்கும் தயார் இல்லை..! யாராவது ஒரு அப்பாவி இளைஞன் அல்லது இளைஞி செய்தால் இல்லையேல் ஓர் 'அனானி பெரியவர்' செய்தால் கூட போதும், இல்லையா..? தாங்கள் செய்ய பிரியப்படாத ஒன்றை பாராட்டி போற்றி பதிவுகள் எழுதுவது ஏன் சகோ..?
தங்கள் இயக்க கொள்கை கோணத்தில் மட்டுமே பார்ப்பதும், இறந்தவரின் குடும்பசூழலில் சிந்திக்காமையும் இருத்தல் சரியா..? அப்படியெனில், இது ஒரு கடைந்தெடுத்த சுயநல பிழைப்புவாத மூளைச்சலவை அரசியல் அல்லவா..?
மதத்தின் பெயரால் தவறான நச்சு அறிவுரை கூறி பயங்கரவாதிகளை உருவாக்கும் அந்த அரசியல் இலாப குறிக்கோள் கொண்ட பிழைப்புவாதிகளின் மூளைச்சலவைக்கும்...
இனத்தின் பெயரால் இதுபோல தீக்குளித்து தற்கொலை புரியும் மூடர்களை இங்கே உருவாக்கும் சில பதிவர்களின் மூளைச்சலவை பதிவுகளுக்கும்...
அப்படி என்ன பெருத்த வித்தியாசம்..?
முத்துக்குமாரின் - செங்கொடியின் தற்கொலையை இனியும் 'போராட்டம்' என்போரிடம் கடைசியாக ஒன்றே ஒன்றை கேட்கிறேன் நான்..!
தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக இதே தீக்குளிப்பு தற்கொலை போராட்டத்தை...
பேரறிவாளன்
சாந்தன்
முருகன்
---ஆகிய இம்மூன்று சகோதரர்களும் செய்திருந்தால்... 'மரண தண்டனைக்கு எதிராக போராடி மரண தண்டனையையே நிறைவேற்ற விடாத வீர தியாகிகள்' என அவர்களின் செயலை ஏற்றுக்கொள்வீர்களா..?
அப்படி அவர்கள் செய்திருந்தால்... அப்போது அவர்களுக்காக அவர்களின் உயிர் மீட்புக்காக போராடிய - போராடும் உங்கள் நிலைப்பாடு எப்படி இருந்திருக்கும்..?
பாசிஸ கொலைகளுக்கு எதிரான பகுத்தறிவற்ற தற்கொலைகளும், முறையற்ற மரணதண்டனைகளுக்கு எதிரான சிந்தையற்ற 'சுய-மரணதண்டனை'களும் இனி நம்மை விட்டு ஒழிய வேண்டும்..! இவற்றுக்கு என் வருத்தத்துடன் கூடிய கண்டனங்கள்.
இவற்றுக்கு எதிராக குரல் கொடுக்கும் பெருவாரியான அனைத்து பதிவர்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்..! இனி... இவற்றை ஆதரிப்போருக்கு எதிராகவும் நாம் குரல் எழுப்புவோம் சகோ..!
டிஸ்கி:
சுமார் 20 ஆண்டுகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய சகோதரர்கள் சிறைதண்டனை அனுபவித்துள்ளனர்.
பொதுவாக, நேரடி கொலைக்குற்றத்துக்கு நம் நாட்டில் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை என்றுதான் நீதி மன்றத்தில் தீர்ப்பு கொடுப்பார்கள்.
ஒருவேளை அவர்கள் கொலையே செய்ததாகவே வைத்துக்கொண்டாலும்...
இந்நேரம் அவர்கள் ஆயுள் தண்டனையையும் தாண்டி அனுபவித்து விட்டனரே..!
இவ்வளவு பெரிய தண்டனையை வழங்கிய பின்னரும் மரண தண்டனை கொடுப்பது என்பது எவ்வகையில் நீதியாகும் என்றுதான் எனக்கு புரியவில்லை.
அப்படி மரண தண்டனைதான் தர வேண்டும் என்றால்... அதை 2000க்கு முன்பே தந்திருக்க வேண்டும்.
இனிமேல் மரணதண்டனை என்பது ஒரு கொலைக்குற்றத்துக்கு ஆயுள்தண்டனை + மரணதண்டனை என்றாகிறது.
ஒரு குற்றத்துக்கு இரண்டு அதிகபட்ச தண்டனைகளா..!? இதற்கு சட்டத்தில் இடம் உண்டா..? சட்டப்படி இது செல்லுமா..?
ஆக, இந்த மரணதண்டனைகள் நீதிக்கு எதிரானது. முற்றிலும் அநீதியானது என்பதில் ஐயம் இல்லை. இன்ஷாஅல்லாஹ் இந்த மரணதண்டனைகள் நிறைவேறாது என்பதில் நான் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளேன்.
55 ...பின்னூட்டங்கள்..:
என்னைப்பொறுத்தவரை இந்த தற்கொலைகள் தவறான முன்னுதாரனங்களே...பிரச்னை என்றால் பொங்குதல் மனிதர்க்கு எப்போதும் வாய்த்த குணமே....அதை விடுத்து தம் உயிரை மாய்த்துக்கொள்ளுதல் என்றுமே தவறான விஷயமே....பகிர்வுக்கு நன்றி நண்பா!
முத்துக்குமரன், செங்கொடி மரணங்கள் வேதனை தருபவை என்றால், அவர்களது விபரீத முடிவை புனிதப்படுத்த பல அரசியல் கட்சிகளும், சில பதிவர்களும் முயல்வது அதிர்ச்சியூட்டுவதாய் இருக்கிறது. தீக்குளிப்புகள் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வல்ல என்பதை ஒப்புக்கொள்ளுகிற சிலரே, தீக்குளித்தவர்களுக்கு ஒரு விதமான இறைமையை அளிக்க முயல்வது முரண்பாடாய்த் தெரிகிறது.
வழமைபோல, ஆணித்தரமான இடுகை!
மிக அருமையான, அவசியமான பதிவு சகோ. அதுவும் சரி்யான தருணத்தில்.
பாராட்டுக்கள்!
//மதத்தின் பெயரால் தவறான நச்சு அறிவுரை கூறி பயங்கரவாதிகளை உருவாக்கும் அந்த அரசியல் இலாப குறிக்கோள் கொண்ட பிழைப்புவாதிகளின் மூளைச்சலவைக்கும்...
இனத்தின் பெயரால் இதுபோல தீக்குளித்து தற்கொலை புரியும் மூடர்களை இங்கே உருவாக்கும் சில பதிவர்களின் மூளைச்சலவை பதிவுகளுக்கும்...
அப்படி என்ன பெருத்த வித்தியாசம்..? //
இந்த கருத்தோடும், மூவரின் தூக்கு தண்டனை பற்றிய தங்களின் எண்ணங்களோடும் நூறு சதவீதம் ஒத்துப்போகொறேன்
a
நல்லதோர் விளக்கப் பகிர்வு பாஸ்,
அதுவும் பதிவுலகில் தற்கொலையினை ஆதரிப்போரை நன்றாக உற்று நோக்கி எழுதியிருக்கிறீங்க.
என்னுடைய பதிவினையும் சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி பாஸ்
உண்மையில் தற்கொலையினை ஆதரிப்பது என்பது முட்டாள்தனம். உணர்ச்சிகரமாகப் பேசவல்ல அரசியல்வாதிகளும், மேடைப்பேச்சாளர்களும் தான் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து, இவ்வாறான நிகழ்வுகள் எதிர்காலத்தில் இடம்பெறா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தற்கொலைகளுக்கு எதிரான அவசியமான பதிவு.
கோழைத்தனமான தற்கொலையை வீர மரணம் என்று போற்றுவது தமிழ்நாட்டை தவிர உலதில் வேறு எங்கே நடக்கும்? அதில் வேறு அந்த பெண்மணி புரட்சிகர இயக்கத்தை சேர்ந்தவராம்.
உசுப்பேத்தல்கள் நன்றாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் தற்கொலைகு எதிரான உங்கள் கருத்தை, உங்கள் சமூக அக்கறையை மனதார பாராட்டுகிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.
அழகிய பதிவுகள் மூலம் சவுக்கடி கொடுத்துள்ளிர்கள்.
தற்கொலை என்பது கோழைத்தனம்தான் மறுப்பதற்கு இல்லை அதே சமயத்தில் இளைஞர்கள் மத்தியில் நல்லதொரு தலைமையகம் இல்லாத காரணத்தால் ஆவேச ரத்தங்கள் தடால் புடால் என்று முடிவு எடுத்து விடுகிறார்கள்.
இது தவறு என்பது எல்லோருக்கும் தெரிந்தாலும் அனானி போன்றவர்கள் ஊக்கம் அளிப்பது விஷமத்தனமே தவிர வேறு ஒன்றும் இல்லை.
வாழ்த்துக்களும் தமிழ் மணம் ஓட்டுக்களும்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
“என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக; நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக; உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக; நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும்(அல்-குர்ஆன் 31:17 )
உங்களின் ஆக்கபூர்வமான பனி தொடர வாழ்த்துக்கள்
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.
"இப்படி தன்னைத்தானே மாய்த்துக்கொண்டு போராடுவது போராட்டம் அல்ல. எதிரியால் கொல்லப்படாத அது வீரமரணமும் அல்ல. தற்கொலை என்பது... 'போராட்டத்தில் எங்கே நாம் தோல்வி அடைந்து விடுவோமோ' என்று அஞ்சும் கோழைகளின் செயல்..!"
உங்களின் ஆக்கபூர்வமான பனி தொடர வாழ்த்துக்கள்.
ஈழத்தமிழின அழிப்புக்கு எதிராக தமிழகத்தில் நடந்த போராட்டத்தில் முத்துக்குமார் செய்த தற்கொலையை ஒரு பதிவர் கூட எனக்குத்தெரிந்து அந்த தற்கொலையை விமர்சித்து பதிவிட்டதாக நியாபகம் இல்லை. அதேநேரம் பெரும்பாலோனோர் அத்தற்கொலையை 'வீரமரணம்' என்றும் அவரை 'தமிழினத்தியாகி' என்றும் பதிவுலகிலும் வெளியிலும் வினவும் அவர் போன்றோரும் பலரும் போற்றிப்புகழ்ந்தனர்.
http://pudukai.blogspot.com/2011/04/blog-post_19.html
அஸ்ஸலாமு அளக்கும் சகோ
அவசியமான பதிவு சகோ .
//இது சரியான செயல் என்றால்...இது தியாகம் என்றால்...
இதுவும் ஒரு வகை சிறந்த போராட்டம் என்றால்... இதுதான் தமிழகமெங்கும் நடந்து கொண்டிருக்கும் போராட்டத்திற்கு ஓர் உந்தாற்றலை வழங்கியிருக்கிறது என்றால்...இதை ஏன் இப்பதிவை எழுதிய நீங்கள் செய்யக்கூடாது..? உங்கள் குடும்பத்தினர் ஏன் செய்யக்கூடாது..?இந்த நல்ல செயலை உங்கள் தலைவர் ஏன் செய்யவில்லை..?தன் கட்சி தோழர்களை/ தொண்டர்களை செய்ய ஏன் வலியுறுத்தவில்லை..? உங்கள் கட்சியினர் ஏன் இந்த 'அறப்போராட்டத்தை' முதலில் செய்யவில்லை..?" //
சரியான சவுக்கடி சகோ .தொடரருங்கள் ...
வரவேற்கிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.
நடுநிலையோடு எழுதிய காத்திரமான பதிவு. இதுவும் இதற்கு முன் வந்த நான்கு பதிவு களின் மூலம் சமூகத்தின்பால் நீங்கள் கொண்டுள்ள அக்கறை,தெளிவான சிந்தனையை அறிய முடிந்தது தொடரருங்கள்............
இன்ஷா அல்லா காத்திருக்கிறோம் ( பின்னூட்டம் மூலம் ஊக்கம் தர)
வளைவு நெளிவில்லாத நேர்க் கோட்டில் உங்கள் சிந்தனை இருப்பது மகிழ்வளிக்கிறது!
இடையிடையே நிஜமான பகுத்தறிவுக் கேள்விகளும் புருவங்களை உயர்த்த வைக்கின்றன.
தெளிவான பதிவு; வாழ்த்துகள்!
@விக்கியுலகம்//இந்த தற்கொலைகள் தவறான முன்னுதாரனங்களே...//---சரியாக சொன்னீர்கள் சகோ.விக்கி. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.
@சேட்டைக்காரன்
//முத்துக்குமரன், செங்கொடி மரணங்கள் வேதனை தருபவை என்றால், அவர்களது விபரீத முடிவை புனிதப்படுத்த பல அரசியல் கட்சிகளும், சில பதிவர்களும் முயல்வது அதிர்ச்சியூட்டுவதாய் இருக்கிறது.//
---சரியாக சொன்னீர்கள் சகோ.சேட்டைக்காரன்.
//தீக்குளிப்புகள் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வல்ல என்பதை ஒப்புக்கொள்ளுகிற சிலரே, தீக்குளித்தவர்களுக்கு ஒரு விதமான இறைமையை அளிக்க முயல்வது முரண்பாடாய்த் தெரிகிறது.//
---நிச்சயமாக முரண்பாடுதான் சகோ.
மொத்தத்தில் இவர்கள் தவறான முன்னுதாரணத்துக்கு துணை போகிறார்கள் என்பது தெளிவு..!
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.
@Karikal@ன் - கரிகாலன்
//மிக அருமையான, அவசியமான பதிவு சகோ. அதுவும் சரி்யான தருணத்தில். இந்த கருத்தோடும், மூவரின் தூக்கு தண்டனை பற்றிய தங்களின் எண்ணங்களோடும் நூறு சதவீதம் ஒத்துப்போகொறேன்//
---தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.கரிகாலன்.
@நிரூபன்
//தற்கொலையினை ஆதரிப்பது என்பது முட்டாள்தனம். உணர்ச்சிகரமாகப் பேசவல்ல அரசியல்வாதிகளும், மேடைப்பேச்சாளர்களும் தான் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து, இவ்வாறான நிகழ்வுகள் எதிர்காலத்தில் இடம்பெறா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.//
---சரியாக சொன்னீர்கள் சகோ.நிரூபன்.
இதே பதிவுலகில் இரண்டரை வருடங்களுக்கு முன் சொல்லப்பட்ட கருத்துக்கள்தான் இங்கே இப்பதிவில் சொல்லப்பட்டவை..! அப்போது எனக்கு விழுந்த திட்டுக்கள் இப்போது விழவில்லை என்பதே மிகவும் ஆரோக்கியமான சூழல். இச்சூழ்நிலை மாற்றத்திற்கு உங்களைப்போன்ற பதிவர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தவை.
---தங்களின் பதிவிற்கும் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.நிரூபன்.
@baleno
///கோழைத்தனமான தற்கொலையை வீர மரணம் என்று போற்றுவது தமிழ்நாட்டை தவிர உலதில் வேறு எங்கே நடக்கும்? அதில் வேறு அந்த பெண்மணி புரட்சிகர இயக்கத்தை சேர்ந்தவராம். உசுப்பேத்தல்கள் நன்றாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில்...///
---அருமையாயான கருத்தினை சொன்னீர்கள் சகோ.பாலனோ.
தற்கொலையில் என்ன புரட்சியோ..!
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.
@அந்நியன் 2அலைக்கும் ஸலாம் வரஹ்...
//இளைஞர்கள் மத்தியில் நல்லதொரு தலைமையகம் இல்லாத காரணத்தால் ஆவேச ரத்தங்கள் தடால் புடால் என்று முடிவு எடுத்து விடுகிறார்கள்.//
---ஆமாம் சகோ.அய்யூப்...இதுதான் நமக்கு பயமாக இருக்கிறது.
நல்ல கருத்தினை நவீன்றீர்கள். தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.
@வ.அன்சாரிஅலைக்கும் ஸலாம் வரஹ்...
@Mohamed Himas Nilarஅலைக்கும் ஸலாம் வரஹ்...
தங்கள் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி சகோதரர்களே.
@புதுகைச் சாரல்தங்கள் வருகைக்கும் சுட்டிக்கும் மிக்க நன்றி சகோ.புதுகைச்சாரல்.
@ஆயிஷா அபுல்.அலைக்கும் ஸலாம் வரஹ்...
//சரியான சவுக்கடி//
//தொடரருங்கள்...//
@MANASAALI
//வரவேற்கிறேன்//
தங்கள் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி சகோதரர்களே.
@Rabbaniஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//...சமூகத்தின்பால் நீங்கள் கொண்டுள்ள அக்கறை,தெளிவான சிந்தனையை அறிய முடிந்தது தொடரருங்கள்............
இன்ஷா அல்லா காத்திருக்கிறோம் (பின்னூட்டம் மூலம் ஊக்கம் தர)//
---அல்ஹம்துலில்லாஹ்...
நமது அம்முயற்சிகளுக்கு இறைவன் வெற்றியை அளிக்க பிரார்த்திப்போம்.
தங்கள் வருகைக்கும் ஊட்டம் நிறைந்த பின்னூட்ட ஊக்கத்திற்கும் மிக்க நன்றி சகோ.ரப்பானி.
@வஹ்ஹாபி
//வளைவு நெளிவில்லாத நேர்க் கோட்டில் உங்கள் சிந்தனை இருப்பது மகிழ்வளிக்கிறது!//
---அல்ஹம்துலில்லாஹ்.
மிக்க நன்றி சகோ.வஹ்ஹாபி.
//இடையிடையே நிஜமான பகுத்தறிவுக் கேள்விகளும் //---ஆம் சகோ..!
"வீர வணக்கம்"...
"தியாகச்சுடர்"...
"சிலை திறப்பு"...
...என்றெல்லாம் ஒரு தற்கொலை போற்றப்படுதல் என்பது, 'எதிர்காலத்தில் இதுபோன்ற அபாயங்கள் தொடருமோ' என்றே வேதனை கலந்த அச்சம் கொள்ள வைக்கிறது சகோ.
"தற்கொலை சமூகத்துக்கு தீமை" என்று எனக்கு நன்கு புரிந்ததால்தான் இதை தடுக்க ஏதோ என்னால் ஆன ஒரு முயற்சி... இந்த "தற்கொலை போராட்ட எதிர்ப்பு பதிவு"..!
தங்கள் வருகைக்கும் பின்னூட்டக்கருத்திற்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ.வஹ்ஹாபி.
செங்கொடியின் மரணம் என்னை பொருத்தவரை அர்த்தமற்ற மரணம் தான்
உயிரை காப்பாற்ற உயிர் விடுவது முட்டாள்தனம் இல்லையா? தன் உயிர்க்கு மட்டும் மதிப்பில்லையா?
(எப்படி மனசுல உள்ளத கொட்டணும்னு தெரியல. அப்படியே இங்கே இப்போது எழுத்துக்களில் சொன்னாலும் சரியான புரிதலா இருக்காது)
நச் பதிவு!!!
@ஆமினா
//உயிரை காப்பாற்ற உயிர் விடுவது முட்டாள்தனம் இல்லையா? தன் உயிர்க்கு மட்டும் மதிப்பில்லையா?//
---நச் கமென்ட்!!! !!!
தங்கள் வருகைக்கும் பின்னூட்டக்கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஆமினா.
//(எப்படி மனசுல உள்ளத கொட்டணும்னு தெரியல.)//
---"குட்டி சுவர்க்கம்" அப்படீன்னு வலைப்பூ இருக்கிறது சகோ.ஆமினா.
அதில் உள்ள பதிவுகளுடன் பின்னூட்டங்களையும் தொடர்ந்து வாசித்து வாருங்கள் சகோ.
அப்புறம் இப்படில்லாம் சொல்லவே மாட்டீர்கள்..!
இந்தப்பதிவின் பின்னுட்டங்கள் உங்கள் பார்வைக்கு,
http://kadayanallur.org/2011/08/senkodi/
செங்கொடி
@senkodi
இரண்டரை வருடங்களுக்கு முன்னால் இதே கேள்விகளை கேட்டபோது திட்டித்தீர்த்து முடியாமல் போய் "ஒத்துவராத மறுமொழிகள்" என்ற பாழுங்கிணற்றிலே என் கேள்விகளை அடைத்து சமாதி கட்டினீர்கள்.
இப்போதோ...
முன்பு கேட்கப்பட்ட அதே கேள்விகளுக்கு சம்பந்தமே இல்லாமல்...
இஸ்லாமிய நம்பிக்கை பற்றி தங்களின் வழக்கமான தவறான புரிதலின் விளைவாக ஏற்பட்ட தத்து பித்துவங்களாக பாரா பாராவாக உங்களின் புதிய தளத்தில் பல்லவி பாடுகிறீர்கள்.
அதில் ஒரு பாரா பல்லவி...
///உங்கள் கேள்விகளுக்கு வருவோம். முஸ்லீம்கள் அடக்கத்தலங்களை வழிபடுகிறார்கள், பூவைக்கிறார்கள், குறி கேட்கிறார்கள் என்றால் என்ன கூறுவீர்கள்? அவர்கள் இஸ்லாத்தை அறியாமல் செய்கிறார்கள். அவர்கள் போலிகள் என்று கூற மாட்டிர்களா? அதே போல எல்லா கொள்கைகளிலும் போலிகள் இருக்கிறார்கள்.////
----சரிதான்..!
போலிகள் இருப்பதை ஒத்துக்கொண்டதற்கு நன்றி.
நாங்கள் போலிகளை மேடைபோட்டு கண்டிக்கிறோமே...! அந்த போலிகளுக்கு நரகம் என்கிறோமே..!
அதேபோல....
போலிகலான செங்கொடி மற்றும் முத்துக்குமரனுக்கு எதிரான உங்கள் கண்டனங்கள் எங்கே எங்கே எங்கே..???
மாறாக நீங்களோ....
போலிகள் என்று நன்கு அறிந்த பின்னும் எதற்காக போலிகளுக்கு செலுத்துகிறீர்கள் வீரவணக்கம்..???
@senkodiஇரண்டரை வருடங்களில் இன்னும் இன்னும் பிற்போக்கான சிந்தனை குவியலில் வீழ்ந்து அமிழ்ந்து இறைவனைத்தவிர மீட்பார் இன்றி அழுத்தமாக செருகிக்கிடக்கிறீர்களே செங்கொடி..!
அப்போதைய வினவின் முத்துக்குமரன் கட்டுரையில்...
////மரணத்தை ஆயுதமாகத் தந்து போராடு என்றவனுக்கு உயிரோடு இருப்பவர்கள், வாழ்க்கையை நேசிப்பவர்கள் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற எண்ணம் என்னைச் சித்திரவதை செய்கிறது. தோற்கடிக்கப்பட்டவனின், ஏமாற்றப்பட்டவனின் மனச்சாட்சியாய் உள்ளுக்குள் இப்போதும் குமைந்து கொண்டிருக்கிறேன்.
முத்துக்குமார் எங்களை மன்னித்துவிடு………///...என்று எழுதிய்வர்கள்...
...ஒவ்வொரு முறை போராட்டத்தின் போதும் மன்னிப்பு மட்டுமே கேட்பீர்களா...? செயலில் இறங்க மாட்டீர்களா செங்கொடி...?
ஆனால்... இப்போதும் நீங்களும் 'செயலில்' இறங்காமல்... ஓர் அப்பாவி பேதை தீக்குளிக்க வேண்டுமா..? யாரோ ரோட்டில் நிற்கும் ஓர் அப்பாவி பெரியவர் துப்பாக்கி தூக்க வேண்டுமா...?
உங்கள் கொள்கைதான் என்ன...?
முதலில் இதை தெளிவு படுத்துங்கள் சகோ.செங்கொடி..!
மூன்று வருஷமாக கேட்டுக்கொண்டே இருக்கிறேன். இன்னும் பதிலை மட்டும் காணோம்... பிழைப்புவாத சல்லிக்கு சுட்டி கொடுப்பதை தவிர..!
என் ஜி மெயில் ஐடிக்கு சகோ.செங்கொடி அனுப்பி வைத்த மறுமொழி.
===========================================================================
சகோ. ஆஷிக்,
உங்களின் தளத்தில் என்னுடைய மறுமொழியை பதிய முயன்றேன். மீண்டும் மீண்டும் தோல்வியே கிடைக்கிறது. இயன்றால் நீங்களே பதிவு செய்ய முயலவும். நன்றி.
*******************************************************************
நண்பர் முகம்மத் ஆஷிக்,
உங்களின் அறவுணர்ச்சியை நடிப்புணர்ச்சி விஞ்சி நிற்கிறதே அறியவில்லையா? வேறொரு தளத்தின் விவாதங்களை இங்கே பதிவு செய்ய வேண்டாம் என்று தான் நான் அன்று குறிப்பிட்டிருந்தேன். மட்டுமல்லாது உங்கள் கேள்விகளுக்கு பதில் வேண்டுமென்றால் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளுங்கள் பதிலளிக்கிறேன் என்றும் குறிப்பிட்டிருந்தேன். கடந்த இரண்டரை ஆண்டுகளாக பதிலை தேடிக்க் கொண்டிருக்கும் உங்களை ஒரு மின்னஞ்சல் செய்யவிடாமல் தடுத்தது எது என்பதை கொஞ்சம் அறியத் தரலாமா?
நான் கொடுத்த சுட்டியிலிருக்கும் பின்னூட்டங்களை கவனத்துடன் படித்தீர்களா என்பது தெரியவில்லை. இல்லையென்றால் முதலில் இன்னொருமுறை படித்துவிடுங்கள். உங்களின் இரண்டு பின்னூட்டங்களிலும் வழமையான வழமையான திரித்தல் முத்திரை தான் காணப்படுகிறது. அது உங்கள் கேள்விகளுக்கான பதிலாக அத்தளத்தில் பதியப்பட்டதல்ல (கவனம்: அது என்னுடைய வலைதளமல்ல). ஒரே தலைப்பு எனும் அடிப்படையில் ஒரு தொடக்கத்திற்காகவே அந்த சுட்டி தரப்பட்டிருந்தது.
தற்கொலை சரியானது, ஆதரிக்கப்படவேண்டியது, அது ஒரு போராட்ட வழிமுறை என நாங்கள் எங்கும் சொன்னதில்லை. அதேநேரம் தற்கொலை ஒரு தவறான முடிவு என்ற போதிலும் அதற்கான காரணத்தில் இருக்கும் உணர்ச்சியை இழிவுபடுத்துவதும் இல்லை. இதை சுட்டிக்காட்டப்பட்டஅந்த பின்னூட்டங்கள் துல்லியமாகவே உணர்த்துகின்றன. ஆனால் இஸ்லாம் தற்கொலைகளை ஏற்றுக் கொள்வதில்லை என்னும் ஒரே காரணத்தினால் மத அடிப்படையிலான இழிவுபடுத்தலை ஏற்றுக்கொள்ள முடியுமா? மதம் எனும் ஒற்றை அடிப்படையிலிருந்து தான் நீங்களும் மறுக்கிறீர்கள் என்றாலும் அதனை சமூகத்தளத்திலிருந்து எழுப்பப்படுவதைப் போல் பாவிக்கிறீர்கள், அதை மறுக்க வேண்டியதிருக்கிறது. சுயநலமான பேடித்தனமான ஒரு தற்கொலைக்கும், பொதுநலனின் உந்துதலில், எழுச்சிக்காக பயன்படட்டும் எனும் உறுதியுடன் செய்யப்படும் தற்கொலைக்கும் இடையில் ஒரு வித்தியாசமும் இல்லையா? இரண்டும் ஒரே செயல் என்பதால் அதில் தொழிற்பட்ட காரணத்தை உதாசீனப் படுத்த வேண்டுமா?
இது அதே மெயில் மறுமொழியின் தொடர்ச்சி....
===========================================================================
மதத்தைக் கட்டிப்பிடித்துக்கொண்டு எதையும் சுகிப்பது தானே உங்களின் (இது தனிப்பட்ட உங்களை அல்ல) வழக்கம். அங்குள்ள பின்னூட்டங்களும் அப்படித்தானே இருக்கின்றன. அதனால் தான் அதற்கான பதிலும் மதத்திலிருந்தே தரப்பட்டிருக்கிறது. ஆனால் அதை நீங்கள் திரிக்கிறீர்களே. சிலைக்கு மாலை மரியாதை, செத்த உடலுக்கு மாலை இத்யாதிகளை செய்யும் உங்களிடம் இருப்பது பகுத்தறிவா எனும் தட்டையான கேள்விக்கு பதிலாகத்தான் போலிகள் குறிப்பிடப்பட்டிருக்கிறதேயன்றி நீங்கள் குறிப்பிட்டிருப்பதைப்போல் முத்துக் குமார் செங்கொடியை போலிகளாக குறிப்பிடப்படவில்லையே. உங்களின் கூற்றில் நீங்கள் உண்மையானவராக இருந்தால் அதை எடுத்துக் காட்டுங்கள். போலிகள் போலிகள் தான் அவர்களுடன் எந்த சமரசத்திற்கும் நாங்கள் இடம் தருவதில்லை. ஆனால் நீங்களோ, யாரை போலிகள் என்கிறீர்களோ, யாருக்கு நரகம் என்று மேடை போடுகிறீர்களோ அவர்களை வேறொரு புறத்திலிருந்து முஸ்லீம் என்று சமரசம் ஆகிக் கொள்கிறீர்கள். இது போன்று எந்த சமரசத்திற்கும் நாங்கள் இடம் தருவதில்லை, அறியவும்.
எங்கள் கொள்கதான் என்ன? நிச்சயமாக தற்கொலைகளை ஆதரிப்பது எங்கள் கொள்கையல்ல, அதேநேரம் நல்ல நோக்கங்களை இழிவுபடுத்துவதும் எங்கள் கொள்கை அல்ல. இது தெளிவாகவே அங்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது காண்ணுறவில்லையோ. \\நாங்கள் தற்கொலைகளை ஏற்றுக் கொள்வதில்லை. போராட்டத்தில் மடிவதே சரியானது. ...........நீங்கள் கொச்சைப்படுத்துகிறீர்கள் என்பது தான் பிரச்சனை// ஆனால் அன்றும் இன்றும் உங்கள் கேள்வி இதுவாகவே இருக்கிறது. நீங்கள் ஏன் தற்கொலை செய்யவில்லை? எளிமையான பதில்தான், அது எங்கள் வழிமுறை அல்ல. ஆனால் உங்கள் நோக்கம் பதிலோ விளக்கம் பெறுவதோ இல்லை, மாறாக மருதையன் ஏன் தற்கொலை செய்யவில்லை என்று கூப்பாடு போடுவது.
இன்னொரு முக்கியமான விசயம், இது போன்ற தற்கொலைகளை அவர்களின் சொந்த குடும்ப உறுப்பினர்களின் மனநிலையில் இருந்து பார்க்க வேண்டும் என்பது. எந்தவகை மரணமும் குடும்ப உறுப்பினர்களுக்கு இழப்பையும் துன்பதையுமே தரும். ஒரு குற்றவாளியின் தண்டனை மரணம் கூட குடும்பத்தின் பார்வையில் இழப்பும் துன்பமும் தான். இதை இழப்பாகவும் துன்பமாகவும் பார்ப்பதைவிட அதன் பின்னணியிலிருக்கும் காரணத்தோடு உரசிப்பார்த்து நேர்காண்பதே சரியானதாக இருக்க முடியும்.
போதும் என எண்ணுகிறேன். உங்களின் பதிலைப்பார்த்து தேவைப்படின் மீண்டும் வருகிறேன்.
செங்கொடி
--
தோழமையுடன்
செங்கொடி
சகோ.செங்கொடி,
பெரும்பாலும் பிளாக்கரில் நீளமான மறுமொழிகள் அனுப்ப முடிவதில்லை. நீளமான பின்னூட்டங்களாக இருப்பின் அதை இரண்டாகவோ மூன்றாகவோ சிறு சிறு துண்டுகள் போட்டு இப்படி "தொடர்ச்சி" போட்டு அனுப்பினால் பிளாக்கர் ஏற்றுக்கொள்கிறது..! பிறகுக்கு அதிகமாக பின்னூட்டங்கள் போடும் ஒரு பின்னூட்டவாதியாக தாங்கள் இல்லாததாலும், அடிப்படையில் தாங்கள் ஒரு 'வேர்ட்பிரஸ்' பதிவராக இருப்பதாலும் இது பற்றி அறிந்திருக்கவில்லை.
//கடந்த இரண்டரை ஆண்டுகளாக பதிலை தேடிக்க் கொண்டிருக்கும் உங்களை ஒரு மின்னஞ்சல் செய்யவிடாமல் தடுத்தது எது என்பதை கொஞ்சம் அறியத் தரலாமா?//----பலர் அறிய போடப்பட்ட பதிவில் பலர் அறிய மறுமொழிகள் வெளியிடப்பட்டு பலர் அறிய பதில் அளிக்கப்பட வேண்டும் என்பதே காரணம். நான் மட்டும் பதில் பெற்றால் போதுமா..?
///அது உங்கள் கேள்விகளுக்கான பதிலாக அத்தளத்தில் பதியப்பட்டதல்ல///---அப்புறம் எதற்கு என்னை அங்கே பின்னூட்டங்களை பார்வையிட சொன்னீர்கள்...?
///ஒரே தலைப்பு எனும் அடிப்படையில் ஒரு தொடக்கத்திற்காகவே அந்த சுட்டி தரப்பட்டிருந்தது.///---இல்லை..! நீங்கள் அதற்காக நீங்கள் தரவில்லை.
//இந்தப்பதிவின் பின்னுட்டங்கள் உங்கள் பார்வைக்கு,
http://kadayanallur.org/2011/08/senkodi/
செங்கொடி //
---பின்னூட்டங்களை படிக்க சொல்லித்தான் தந்தீர்கள்..! எதற்கு இந்த முரண்..?
///இதை சுட்டிக்காட்டப்பட்டஅந்த பின்னூட்டங்கள் துல்லியமாகவே உணர்த்துகின்றன.///---'அவை என் கேள்விக்கான பதில் அல்ல' என்று சற்று முன்னர் சொல்லிவிட்டு... இப்போது எதையோ உணர்த்துவதாகவும் சொல்கிறீர்களே சகோ...! இப்போது மீண்டும் முரண்..!
சகோ.செங்கொடி,
//தற்கொலை சரியானது, ஆதரிக்கப்படவேண்டியது, அது ஒரு போராட்ட வழிமுறை என நாங்கள் எங்கும் சொன்னதில்லை.//---ஓ..! அப்படியா..?
அப்புறம் ஏன்...
இந்த இரண்டு தற்கொலைகளையும் போற்றி, பாராட்டி,
அதை செய்தவர்களுக்கு 'வீரவணக்கம்' செலுத்தி...
'தியாகி' என்று பிரேம் போட்ட ஃபோட்டோ போட்டு விளம்பரப்படுத்தி...
"தற்கொலை என்பது சரியானது, ஆதரிக்கப்படவேண்டியது" என்ற மாயையை உருவாக்குகிறீர்கள்..?
"அது ஒரு போராட்ட வழிமுறை" என்றுதானே அதை செய்தவர்களை "போராளிகள்..." "வீரமரணம் அடைந்தவர்கள்..." என்றெல்லாம் சொல்கிறீர்கள்..!
அடடா...! எவ்வளவு முரண்..! அடிப்படையிலேயே இவ்வளவு முரணா..?
இது விரிசல் விட்ட களிமண் அஸ்திவாரம் போலக்கூட இல்லையே சகோ..! உலர் மணலால் எழுப்பப்பட்ட 'அஸ்திவாரத்திற்கு'(?) மேல் எப்படி உங்களால் 'புரட்சிக்கற்கோட்டை'யை எழுப்ப முடியும்..?
பேசாமல்... மணல் வீடு கட்டி விளையாடுங்கள் சகோ.செங்கொடி..!
இங்கே யாரும் அவர்களை இழிவு படுத்தவில்லை..! புரிந்து கொள்ளுங்கள். தவறான ஒன்று என்று உங்களால் ஒத்துக்கொள்ளப்பட்ட ஒன்றையே... அது செய்யப்படும் போது ஏன் நீங்கள் கண்டனம் செய்யவில்லை என்றேதான் திருப்பி திருப்பி கேட்கிறோம்..!
இன்னுமா புரியவில்லை..? இல்லை, புரியாதது போலவே நடிக்கிறீர்களா..?
சகோ.செங்கொடி,
///சுயநலமான பேடித்தனமான ஒரு தற்கொலைக்கும், பொதுநலனின் உந்துதலில், எழுச்சிக்காக பயன்படட்டும் எனும் உறுதியுடன் செய்யப்படும் தற்கொலைக்கும் இடையில் ஒரு வித்தியாசமும் இல்லையா?///---அடடா..! இதற்குப்பெயர்தான் உங்கள் கொள்கையில் "உருண்டையான புரிதலோ"..!
இதை புரியவைக்கத்தான்...
இதுதான் தமிழகமெங்கும் நடந்து கொண்டிருக்கும் போராட்டத்திற்கு ஓர் பொதுநல உந்தாற்றலை வழங்கியிருக்கிறது என்றால்...
எழுச்சிக்காக பயன்படுகிறது என்றால்...
"இதை ஏன் இப்பதிவை எழுதிய நீங்கள் செய்யக்கூடாது..?
உங்கள் குடும்பத்தினர் ஏன் செய்யக்கூடாது..?
இந்த நல்ல செயலை உங்கள் தலைவர் ஏன் செய்யவில்லை..?
தன் கட்சி தோழர்களை/தொண்டர்களை செய்ய ஏன் வலியுறுத்தவில்லை..?
உங்கள் கட்சியினர் ஏன் இந்த 'அறப்போராட்டத்தை' முதலில் செய்யவில்லை..?"
----மீண்டும் மீண்டும் இப்படியெல்லாம் கேட்கிறேன்...!
///எளிமையான பதில்தான், அது எங்கள் வழிமுறை அல்ல. ஆனால் உங்கள் நோக்கம் பதிலோ விளக்கம் பெறுவதோ இல்லை, மாறாக மருதையன் ஏன் தற்கொலை செய்யவில்லை என்று கூப்பாடு போடுவது.///
---உங்கள் பதிவுகளில் உள்ள கொள்கை முரண் மற்றும் தவறான முன்னுதாரணம் ஆகிய இவற்றை புரியவைக்கவே இப்படியெல்லாம் கேட்கிறேன். இதுதான் நோக்கமே அன்றி... நீங்கள் எல்லாரும் மரணிக்க வேண்டும் என்ற கேவலமான மனிதாபிமானமற்ற நோக்கத்தில் நான் இவற்றை கேட்கவில்லை சகோ.செங்கொடி.
///நல்ல நோக்கங்களை இழிவுபடுத்துவதும் எங்கள் கொள்கை அல்ல.///
---மேற்படி தற்கொலைகளில் நல்ல நோக்கம் உள்ளது என்றும் சொல்லிவிட்டு அதை செய்ய நீங்கள் முன்வரமாட்டீர்கள். வேறு ஒருத்தர் செய்யவேண்டும். காரணம் என்ன..?
அந்த 'பெரியவரின்' துப்பாக்கி தூக்கும் வரிகளும் நல்ல நோக்கம்தானா...?
அதையும் தெளிவுபடுத்தி விடுங்கள் சகோ.செங்கொடி.
///மதத்தைக் கட்டிப்பிடித்துக்கொண்டு எதையும் சுகிப்பது தானே உங்களின் (இது தனிப்பட்ட உங்களை அல்ல) வழக்கம். ...அதனால் தான் அதற்கான பதிலும் மதத்திலிருந்தே தரப்பட்டிருக்கிறது.///
சரி... என்னை விடுங்கள். மேற்படி என் கேள்விகளை எல்லாம்... "கடவுள் இல்லை, மதமே இல்லை" என்று நம்பும் ஒரு 'அக்மார்க் நாத்திகன்' உங்களிடம் எடுத்துக்கொண்டு வந்து கேட்கிறான் என்றால்....
அதற்கான உங்கள் பதில் என்ன..? சொல்வீர்களா...?
தங்கள் மெயிலுக்கும் கருத்துப்பரிமாற்றத்துக்கும் மிக்க நன்றி சகோ.
சகோ.செங்கொடி,
கடையநல்லூர் பிளாக்கில் உங்களின் "உருண்டையான(?)புரிதல்கள்" பற்றிய அலசல்:
///விரைந்து வரும் சுமையுந்து எதிரே சிக்கிக் கொண்ட குழந்தையை காக்க நினைத்த ஒருவன் சென்றால் சுமையுந்து மோதி தாம் கொல்லப்படுவோம் என்பதை அறிந்தே குழந்தையை காப்பாற்ற வேண்டும் எனும் நோக்கில் குழந்தையை காப்பாற்றி தான் மரணமடைந்தால் அதை கொலை என்பீர்களா? தற்கொலை என்பீர்களா?///---குழந்தையை காப்பாற்றி விட்டான். அம்முயற்சியில் மரணம்.
///அது போல தான் தோழர் செங்கொடியும் தான் வாழாமல் போனாலும் அநீதிக்கு எதிரான எழுச்சி தக்கவைக்கப்பட வேண்டும் எனும் உயர்ந்த நோக்கில் தன்னை கொழுத்திக் கொண்டார். இதை மட்டும் எப்படி தற்கொலையாக பார்க்கிறீர்கள் நீங்கள்.///---"மூன்று பேரின் தூக்குதண்டனை ரத்தாகி அவர்களின் உயிர் வேண்டுமானால் தோழர் செங்கொடி உயிர் எங்களுக்கு வேண்டும்" என்று அரசு கேட்டதா..? இல்லை... அதுபோன்ற நிர்பந்த சூழலாவது இங்கே நிலவியதா..?
"தானும் தப்பித்து குழந்தையையும் காப்பாற்றும் வழியே" இங்கே இல்லவே இல்லையா..? என்ன பிதற்றல் உதாரணம் இது சகோ.செங்கொடி..?
சகோ.செங்கொடி,
கடையநல்லூர் பிளாக்கில் உங்களின் "உருண்டையான(?)புரிதல்கள்" பற்றிய அலசல்:
///ஏதோ கனவு கண்டேன் என்று கூறி, பெற்ற மகனையே கொலை செய்யத் துணிந்த ஒரு நிகழ்வை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தியாகம் என்று கூறி கொண்டாடிக் கொண்டிருக்கும் முஸ்லீம்களா, கண்ணெதிரே நடந்த இந்த தியாகத்தைக் கொச்சைப்படுத்துவது?///---ப்பூ... இவ்ளோதானா உங்கள் புரிதல்..?
நமது உயிருக்கு சொந்தக்காரன் இறைவன் மாத்திரமே. அதனை கொடுத்த இறைவனுக்கே மட்டுமே எடுக்கும் உரிமையும் உண்டு. கொடுத்த உயிரை இறைவன் கேட்டால் மறுக்கும் உரிமை அந்த தந்தைக்கும் இல்லை... மகனுக்கும் இல்லை. யாருக்குமே இல்லை. இதை உணர்ந்து உயிரை தர சம்மதித்த அந்த செயலே... அத்தகைய ஒரு புரிதலே... அவர்களிருவரின் தியாகம் என்று போற்றப்படுகிறது. மாறாக... இறுதியில் அங்கே கொலையோ தற்கொலையோ எதுவுமே நடைபெறவே இல்லியே..! இருவரையும் காப்பற்றி நீண்டநாள் வாழ வைத்த இறைவனுக்கு நன்றி.
சரி... இதற்கும் தோழர்.செங்கொடியின் தற்கொலைக்கும் என்ன சம்பந்தம்..? இவரின் உயிர் யாரால் கேட்கப்பட்டது..? மரண தண்டனை பெற்ற அந்த மூன்று பேரும் கேட்டார்களா? அல்லது அரசு கேட்டதா..? அல்லது... நீங்கள் தரச்சொன்னீர்களா..? அவரின் உயிர் மேல் அவர்களின் குடும்பத்தினருக்கு உரிமை இல்லையா..? அவரின் சக குடிமகனான எனக்கு உரிமை இல்லையா..?
என்ன ஒரு பொருத்தமற்ற அர்த்தமற்ற வாதங்கள் சகோ.செங்கொடி..!
சகோ.செங்கொடி,
கடையநல்லூர் தளத்தில் உங்களின் "உருண்டையான(?)புரிதல்கள்" பற்றிய அலசல்:
///சரி, அநீதியாக நடைபெறவிருக்கும் இந்த தூக்கை தடுத்து நிறுத்த வேண்டும், என்ன செய்யலாம்? நான்கு நாட்கள் விடாமல் துஆ கேட்டால் தண்டனை நிறுத்தப்பட்டு விடுமா? கூறுங்கள், போராட்டங்களை நிறுத்திவிட்டு துஆ கேட்க தொடங்குகிறோம். எத்தனை ரக் அத்துகள் தொழுதால் இந்த கோரிக்கை ஏற்கப்படும்? கூறுங்கள் போராட்டங்களை நிறுத்திவிட்டு தொழுகைக்கு அணி சேர்கிறோம்.///----???
எந்த ஒரு செயலிலும் முயற்சிகள் இல்லாமல் வெறும் பிரார்த்தனை மட்டுமே செல்லுபடியாகுமா இஸ்லாத்தில்..? இதுதான் நீங்கள் புரிந்த இஸ்லாமா..? ஒருபோதும் இஸ்லாம் இப்படி சொல்லவே இல்லையே சகோ.செங்கொடி..!
"முதலில் ஒட்டகத்தை கட்டு. கட்டு அறுந்து ஒட்டகம் ஓடாமல் இருக்க அப்புறம் இறைவனிடம் பாதுகாப்பு தேடு" என்று தெளிவாக உரைக்கும் இஸ்லாம் பற்றி... 'விரிசல் விழுந்த கற்பனை கோட்டைகள்' கட்டும் உங்களுக்கு இதெல்லாம் தெரியாதா..?
///சமூகமும் தெரியாமல் அரசியலும் புரியாமல் வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம் என்று எல்லாவற்றுக்கும் மதத்தை இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கும் வீணர்களைவிட செங்கொடிகள் ஒன்றும் குறைந்தவர்கள் அல்லர்.///
---இவர்கள் இருவரும் தங்கள் உயிர் விஷயத்தில் அவசரப்பட்டது தவறானது. தடுக்கப்பட வேண்டியது. இனி யாரும் செய்யாதிருக்கவேண்டி கண்டனம் தெரிவிக்கப்பட வேண்டியது. இதில் எனக்கு மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. இதுதான் எனது சமூக மற்றும் அரசியல் புரிதல்.
இதற்கும் உங்களிடம் இப்பதிவில் நான் கேள்வி கேட்டுள்ளேன்...
"முத்துக்குமார் & செங்கொடி செய்த இச்செயலை...
'தற்கொலை போராட்டத்தை'...
முன்பு வல்லாதிக்க எதிர்ப்பில் ஃபிடல் கேஸ்ட்ரோ,
ஆங்கிலேய ஏகாதிபத்திய எதிர்ப்பில் காந்தி,
ஹிந்தி எதிர்ப்பில் கருணாநிதி,
அவ்வளவு ஏன்... இதே சிங்கள இனவாத எதிப்பில் வேலுப்பிள்ளை பிரபாகரன் செய்திருந்தால்...
அதை 'போராட்டம்' என ஏற்றுக்கொண்டு பாராட்டி புகழ்ந்து இருந்திருப்பீர்களா..? அல்லது... 'போய்யா கோழை' என்று தூற்றி இருப்பீர்களா..?"
இறுதி வரை போராடி பெற்றி பெறாமல்... பாதியிலேயே அல்லது ஆரம்பத்திலேயே தற்கொலை புரிந்து எல்லோரும் போராட்டத்திலிருந்து வெளியேறி விடலாமா?
அப்படி அல்லாமல்... பலர் போராட வேண்டும். சிலர் தற்கொலை புரிய வேண்டும் என்கிறீர்களா..? இப்படித்தான் விதி செய்பவரா நீங்கள்..?
ஈழத்தமிழரின் பெயரைச் சொல்லி அரசியல் நாடகம் நடத்தும் அரசியல்வாதிகளுக்கு இப்பதிவு ஒரு நல்ல சவுக்கடி. அரசியல்வாதிகளே தயவுசெய்து உங்கள் கட்சியை வளர்க்க அப்பாவிகளை பலிகடா ஆக்காதீர்கள். எந்த அரசியல்வாதியாவது தற்கொலை செய்ததாக வரலாறு இல்லை. தற்கொலை செய்யும் அப்பாவிகள் இதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
@sivalingamtamilsource
//அரசியல்வாதிகளே தயவுசெய்து உங்கள் கட்சியை வளர்க்க அப்பாவிகளை பலிகடா ஆக்காதீர்கள்.//---நல்ல அறைகூவல்..!
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.சிவலிங்கம்.
சகோ.செங்கொடியின் அடுத்த மெயில்...
===========================================================================
நண்பர் ஆஷிக்,
நீங்கள் கூறியபடியே என்னுடைய மறுமொழியை மூன்று பகுதிகளாக பிரித்து இட்டுள்ளேன். ஆனால் ஏற்றுக் கொள்ளப்பட்டதா என்பது தெரியவில்லை, வெளிவரவும் இல்லை. எனவே மீண்டும் மின்னஞ்லாக அனுப்புகிறேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்.
--
தோழமையுடன்
செங்கொடி
படம்
நண்பர் முகம்மத் ஆஷிக்,
வேறொரு தளத்தின் விவாதத்தை இங்கு வைக்க வேண்டாம் என்பது தான் அன்று செங்கொடி தளத்தின் நிலைபாடு, விமர்சனங்களை மறுப்பதல்ல. அதனால் தான் தேவைப்படின் மின்னஞ்சலில் கேட்கலாம் எனும் தெரிவும் தரப்பட்டிருந்தது. அந்தப் பதில்கள் பொதுவில் வைக்கப்பட வேண்டும் என்பது உங்கள் விருப்பமாக இருந்திருந்தால் அதையும் அப்போதே வெளிப்படையாக கேட்டிருக்கலாமே. ”வேறொரு தளத்தின் விவாதங்கள் இங்கு தொடர வேண்டாம் என்றால், இந்த தளத்திற்கான கேள்வியாக முன்வைக்கிறோம், பதில் தாருங்கள்” என்று ஏன் உங்களால் கேட்டிருக்க முடியாது? ஏனென்றால், உங்கள் நோக்கம் அதுவல்ல.
\\ அது உங்கள் கேள்விகளுக்கான பதிலாக அத்தளத்தில் பதியப்பட்டதல்ல///---அப்புறம் எதற்கு என்னை அங்கே பின்னூட்டங்களை பார்வையிட சொன்னீர்கள்...? ///ஒரே தலைப்பு எனும் அடிப்படையில் ஒரு தொடக்கத்திற்காகவே அந்த சுட்டி தரப்பட்டிருந்தது.///---இல்லை..! நீங்கள் அதற்காக நீங்கள் தரவில்லை. ---பின்னூட்டங்களை படிக்க சொல்லித்தான் தந்தீர்கள்..! எதற்கு இந்த முரண்..?// இதில் என்ன முரண் இருக்கிறது என்பதை கொஞ்சம் தெளிவு படுத்துங்களேன். உங்கள் பதிவில் எழுப்பப்பட்டிருப்பதற்கான பதிலல்ல. ஆனால், உங்கள் பதிவின் நோக்கமும், அங்கிருக்கும் பின்னூட்டங்களின் நோக்கமும் ஒன்றே எனும் அடிப்படையில்; இப்பதிவில் என்னுடைய பதிலைத் தொடங்குவதற்கான ஒரு முனோட்டமாக அதை உங்கள் பார்வைக்கு தந்திருந்தேன். இது எந்த விதத்தில் முரண்பட முடியும்.
உங்கள் கேள்விக்கான பதிலாக தரப்பட்டவையல்ல என்றபோதிலும், செயலை மட்டுமே எடுத்துக்கொண்டு காரணத்தைப் புறந்தள்ளும் உங்களது இழிவை மறுப்பதை துல்லியமாக்குகிறது. இதில் என்ன முரண் இருக்கிறது? முதலில் வாக்கியங்களை பிய்த்துப் பார்ப்பதை விட அந்த வாக்கியம் கூறும் பொருளை உய்த்துப் பார்ப்பது எப்படி என்பதை கற்றுக் கொள்ள முன்வாருங்கள்.
தற்கொலைகள் ஆதரிக்கப்பட, பின்பற்றப்பட வேண்டிய ஒன்றல்ல. ஒரு மனிதனின் முடிவு எனும் நிலையில் அது தவறு. அதேநேரம் அந்த தவறான முடிவுக்கான நோக்கம் ஒரு பொது நலம் சார்ந்து, அரசுக்கு எதிரான கலகமாக இருப்பதால், இந்தத் தன்மையை உணர்ந்து அந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதால் அதை வெறும் தற்கொலை எனும் செயலாக மட்டும் சுருக்கிப் பார்க்க முடியாது. இது தான் முத்துக்குமார், செங்கொடிக்கான வீரவணக்கமாக கட்டுரைகளில் பயணப்பட்டிருக்கிறது. மட்டுமல்லாது. அவர்களின் முடிவு தவறானது என்பதும் கட்டுரைகளில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. நீங்கள் மேற்கோள் காட்டியிருக்கும் பெரியவரின் கருத்து கூட அந்த முடிவு தவறு என்பதையே சுட்டிக் காட்டுகிறது. இதில் எங்கிருந்து வருகிறது முரண்? முன்முடிவுகளை கண்ணாடியாக அணிந்து கொண்டு வாசிப்பதை விட அதில் உள்ளாடும் பொருளைப் புரிந்து கொண்டு எதிர்வினையாடுவது உங்களுக்கு கடினமாகவே இருக்கும் என்பது எனக்கு புரிந்ததுதான்.
சகோ.செங்கொடியின் அந்த மெயிலின் தொடர்ச்சி...
==========================================================================
\\ இங்கே யாரும் அவர்களை இழிவு படுத்தவில்லை….. ஏன் நீங்கள் கண்டனம் செய்யவில்லை என்றேதான் திருப்பி திருப்பி கேட்கிறோம் // அல்ல, அவர்களின் முடிவு தவறானது என்பது அந்த கட்டுரைகளில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. ஆனால், மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் காரணங்களால் அதை கண்டனம் செய்ய வேண்டிய அவசியமில்லை. நீங்கள் இழிவுபடுத்தவில்லை எனக் குறிப்பிட்டிருந்தாலும் உங்களின் கட்டுரை அவர்களை இழிவுபடுத்தவே செய்கிறது. \\ எந்த காரணத்துக்காகவும் யார் செய்தாலும்// என்று நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்களே அது இழிவுபடுத்தல் தான். அதாவது காரணத்தை, நோக்கத்தை முன்வைத்து செய்யப்பட்ட ஒரு செயலை அந்த நோக்கத்தை நீக்கிவிட்டு செயலை மட்டும் தான் பார்ப்பேன் என்பது இழிவு படுத்தல் தான். \\ இறைவனை நம்பிக்கை கொண்ட ஒருமுஸ்லிம் இது போன்ற பகுத்தறிவு இல்லாத இழிசெயலை ஒருபோது செய்யமாட்டான்// \\ மூடர்கள் கூட இந்த இழி செயல் செய்வார்களா? // இந்த பின்னுட்டங்களுக்கும் உங்களின் இடுகைக்கும் உள்ள வித்தியாசம் அவர்கள் பயன்படுத்தியிருப்பது போன்ற சொற்களை நீங்கள் பயன்படுத்தவில்லை என்பதது தானேயன்றி, இரண்டின் நோக்கமும் இழிவு படுத்துவது தான். சரி இப்போது நீங்கள் கூறுங்களேன், மதம் என்பதைத்தவிர செங்கொடிகளின் தற்கொலைகளை எதிர்ப்பதற்கு என்ன தான் காரணம்?
\\ நல்ல நோக்கம் உள்ளது என்றும் சொல்லிவிட்டு அதை செய்ய நீங்கள் முன்வரமாட்டீர்கள்……..பெரியவரின்' துப்பாக்கி தூக்கும் வரிகளும் நல்ல நோக்கம்தானா...? அதையும் தெளிவுபடுத்தி விடுங்கள் // நீங்கள் புரியாதது போல் நடித்துக் கொண்டிருக்கும் விசயம் இது தான். நாங்கள் அதைச் செய்ய முன்வராததன் காரணம், நல்ல நோக்கம் மட்டும் போதாது, நல்ல வழிமுறையும் வேண்டும். நோக்கமும், வழிமுறையும் சரியாக இருக்கும் ஒன்றைத்தான் நாங்கள் பின்பற்ற முடியும். நோக்கம் மட்டும் நல்லதாக இருந்தால் அதை இழிவு படுத்தவும் முடியாது செயல்படுத்தவும் முடியாது. இதைத்தான் நீங்கள் தலைவர்கள், தொண்டர்கள், பிரபாகரன், பிடல் காஸ்ட்ரோ என்றெல்லாம் நீட்டி முழக்கிக் கொண்டிருக்கிறீர்கள். ஆம், பெரியவரின் துப்பாக்கி தூக்கும் வரிகளும் நல்ல நோக்கம் தான்.
சகோ.செங்கொடியின் அந்த மெயிலின் தொடர்ச்சி...
==========================================================================
தட்டையான புரிதல் என்றால் அதற்கு எதிரான பதங்களை பாவிப்பதால் மட்டும் உங்கள் புரிதல் உருண்டையாகிவிடும் என எதிர்பார்க்க முடியுமா? சுமையூந்து நிகழ்வுக்கும் செங்கொடி நிகழ்வுக்கும் உள்ள பொருத்தப்பாடு, இருவரும் தங்களை இழக்கத் துணிகிறார்கள் சுயநலமற்ற ஒரு காரணத்திற்காக. சுமையூந்து என்பது உருவமாக இருக்கிறது, அதனால் தடுக்கும் வழிகளும் வெளிப்படையாக இருக்கிறது. இதுவே செங்கொடி விசயத்தில் அருவமாக இருக்கிறது. தமிழகம் தழுவிய போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும், உண்ணாவிரதங்களும் சரியான பலனைத் தருமா எனும் ஐயம் எழுகிறது. அந்த தூக்கு குறித்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இரண்டு நாட்களுக்கு முன் நிறைவேற்றப்பட்டிருந்தால் ஒருவேளை செங்கொடி காப்பாற்றப்பட்டிருக்கலாம். எனவே இது வெறும் தற்கொலை மட்டுமல்ல அரசு தாமதத்தால் விளைந்த கொலையும் கூட. ஏனென்றால், செங்கொடியின் முடிவு மக்களின் போராட்டங்களை அரசு கண்டுகொள்ளாததை பாற்பட்டும் இருக்கிறது. உருண்டை என கேலி செய்வதால் மட்டும் உங்களுக்கு பருண்மையான புரிதல் வந்து விடாது.
நீங்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக தியாகம் என கொண்டாடிக் கொண்டிருக்கும் நிகழ்வில் என்ன பொதுநலம் இருக்கிறது? இறைவன் சொந்தக்காரன் என்று உங்கள் நம்பிக்கையை கூறுகிறீர்கள். வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் சுயநலமாக ஒரு தற்கொலைக்கு தயாராவதையே தியாகம் என்று பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடிக் கொண்டிருக்கும் நீங்கள், ஒரு பொது நலனுக்காக பிரமாண்டமான அரசு எந்திரத்தின் அநீதிக்கு எதிராக எந்த ஆயுதத்தை எடுப்பது என்று புரியாமல், பயன்படவேண்டுமே எனும் பதைப்பில் மேற்கொண்ட முடிவை இழிவு படுத்துகிறீர்கள். எந்த விதத்தில் இது சரி கூறமுடியுமா?
உங்களின் சமூக மற்றும் அரசியல் புரிதல் தவறானது. உயிர் என்பதை வெறும் இருத்தலுக்கான சாரம் என்பதாக புரிந்து கொள்ளக் கூடாது. கொள்ளைகளும் கொலைகளும் புரிந்து வயிறு வளர்ப்பதை மட்டுமே வாழ்க்கையாக கொண்டவனுக்கு இருப்பதும், சமூகத்துடிப்புடன் போராட்டக் களத்தில் நிற்பதையே வாழ்க்கையாகக் கொண்டவனுக்கு இருப்பதும் தன்மையில் உயிர் தான். ஆனால் இரண்டையும் ஒன்றாக மதிப்பிட முடியுமா? வாழ்க்கை என்பது யாரோ தருவதற்கும், அதை திருப்ப ஒப்படைப்பதற்கும் இடைப்பட்ட புனிதமல்ல. இருப்பதின் அடையாளமே அதை எதற்காக செலவிட தயாராக இருக்கிறோம் என்பதில் பொதிந்திருக்கிறது. இறைவன் தந்த உயிர், அதை அவன் தான் எடுக்க வேண்டும் நாமே போக்கக் கூடாது எனும் மத விழுமியங்களில் இருந்தே தற்கொலைகளுக்கு எதிரான உங்களின் அறச்சீற்றம் எழும்புகிறது. மெய்யில் இது அறச்சீற்றமே அல்ல. இது உங்கள் அகச்சீற்றம். அதை சமூகத்தளத்தில் இருந்து எழுப்பப்படும் கேள்விகள் போலக்காட்டி அகச்சீற்றத்தை அறச்சீற்றமாக மொழிமாற்றம் செய்கிறீர்கள் என்பதைத்தவிர வேறொன்றுமில்லை.
செங்கொடி
@ சகோ.செங்கொடி...
விபச்சாரம் தவறு. ஆனால், வயிற்றுப்பிழைப்புக்காக செய்யலாம் என்பது உங்கள் கொள்கை.
குடிப்பது தவறு. ஆனால், உழைத்து களைத்து உடல்வலியை போக்க குடிக்கலாம் என்பது உங்கள் கொள்கை.
கொலை/தற்கொலை தவறு. ஆனால், நல்ல நோக்கத்துக்காக அதாவது உங்கள் மகஇக வளர்ச்சிக்காக இதை பிறர் செய்யலாம் என்பது உங்கள் கொள்கை.
"இதை நீங்கள் ஏன் செய்யவில்லை" என்று மீண்டும் மீண்டும் நான் கேட்பதற்கு பதிலாக...
///நல்ல நோக்கம் மட்டும் போதாது, நல்ல வழிமுறையும் வேண்டும். நோக்கமும், வழிமுறையும் சரியாக இருக்கும் ஒன்றைத்தான் நாங்கள் பின்பற்ற முடியும்.///---என்று சொல்லி முடித்திருக்கிறீர்கள்.
///நோக்கம் மட்டும் நல்லதாக இருந்தால் அதை இழிவு படுத்தவும் முடியாது, செயல்படுத்தவும் முடியாது.///---என்றும் சொல்லிவிட்டு... 'இது தீய வழிமுறை' என்று நன்கு அறிந்திருந்தும் அதையே ஊக்கப்படுத்தி அதை தொடர்ந்து ஆதரித்தும் வருகிறீர்கள்.
இதுபோன்று கொள்கை என்ற எதுவும் இல்லாமல், கொள்கைவேஷம் போடும் 'பக்கா பிழைப்புவாத கோமா கும்பலுடன்' இனியும் விவாதிப்பது ஒரு மண்ணுக்கும் பிரயோஜனப்படாது என்று எப்போதோ புரிந்து கொண்டேன்..!
உங்கள் தவறான புரிதலில் இருந்து வெளிவந்து பகுத்தறிவோடு சிந்தித்தால் ஒருவேளை நீங்கள் சிந்தை தெளிவு பெறக்கூடும்.
உங்களுக்கு நல்ல சிந்தையை கொடுக்க எல்லாம் வல்ல ஏக இறைவனிடம் இறைஞ்சுகிறேன்..!
இதற்கு மேல் சொல்ல வேறொன்றும் இல்லை சகோ.செங்கொடி.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோதரர் அஷிக் நண்பர் செங்கொடி அவர்கள் தொடர்ச்சியாக தங்களுக்கு பின்னூட்டம் இட்டதாகவும் நீங்கள் அதனை வெளியிட மறுத்து மட்டுறுத்தியாதகவும் சொல்கிறார்
அவர் பின்னூட்டம் அனுப்புவது எப்படி உங்களின் தளத்தில் வெளிவரமால் போகும்?
வலையுகலில் அவர் பழைய பதிவர் பின்னூட்டத்தை பதிவது பற்றி அவர் அறியாமல் இருக்க முடியாது அல்லது தொழில்நுட்பமும் தெரியதர் அல்ல
நீங்கள் இதற்கு விளக்கம் அளிக்கவும்
@ஹைதர் அலிஅலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.ஹைதர் அலி,
தாங்கள் தவறாக விளங்கிக்கொண்டீர்கள் என நினைக்கிறேன்.
///சகோ. ஆஷிக்,
உங்களின் தளத்தில் என்னுடைய மறுமொழியை பதிய முயன்றேன். மீண்டும் மீண்டும் தோல்வியே கிடைக்கிறது. இயன்றால் நீங்களே பதிவு செய்ய முயலவும். நன்றி.///---இது முதல் மெயில்.
நானே என் ஐடியில்... இந்த மெயிலை இரண்டு (துண்டுகளாக) பின்னூட்டங்களாக... 32 & 33 ...வெளியிட்டுள்ளேன்.
மீண்டும் அதே பழைய மொக்கை பல்லவி என்றாலும் இரண்டு வருடங்களில் ஏதேனும் சிந்தை தெளிவு ஏற்பட்டு இருக்கலாம் என்று பல கேள்விகளுடன் மீண்டும் பதில் விளக்கம் கொடுத்துள்ளேன். பின்னூட்டங்கள் 34, 35, 36 -ல் பாருங்கள்.
அப்புறம், அவர் கொடுத்த சுட்டியில் அவரின் பின்னூட்டங்களில் உள்ள 'உருண்டையான புரிதல்களை' எடுத்து எழுதி...
'உருண்டை' மீது உணவு போட்டு குழம்பு ஊற்றி பிசைந்து சாப்பிட இயலாது... வழிந்தோடிவிடும் என்பதால் 37, 38, 39 உணவு பின்னூட்டங்களை 'தட்டை'யில் வைத்து உண்ணத்தந்துள்ளேன். அதையும் பாருங்கள்.
@ஹைதர் அலி தொடர்ச்சி....
//வலையுகலில் அவர் பழைய பதிவர் பின்னூட்டத்தை பதிவது பற்றி அவர் அறியாமல் இருக்க முடியாது அல்லது தொழில்நுட்பமும் தெரியதர் அல்ல
நீங்கள் இதற்கு விளக்கம் அளிக்கவும்//
---அவர் ஏதோ சொல்கிறார்... வழக்கம்போல இதுவும் புளுகுமூட்டைதானா..? எத்தனையோ பேர் இங்கே பின்னூட்டம் இருக்கிறீர்கள்... ஏதும் வராமல் போய் இருக்கிறதா..?
நீளமான பின்னூட்டங்களை எப்படி வெளியிடுவது என்றும் சொல்லிக்காட்டி விட்டேன். இருந்தும் பிரச்சினை என்றால்... அது அவரிடம்தான்.. அவர் சைடில்தான் இருக்க முடியும்.
அவ்வளவு விளக்கம் கொடுத்த பின்னும்... மீண்டும் அதே பழைய குருட்டு புரிதல்கள்... வறட்டு வாதங்கள்... மெயிலை படித்துவிட்டு... ஒரே ஆயாசமாக... 'இதற்கு எல்லாம் பதில் சொல்லி இன்னும் சகோ.செங்கொடியின் மொக்கைத்தனம் வெளிப்பட வேண்டுமா... போகட்டும்.. விட்டு விடுவோம்...' என்று விட்டுவிட்டேன்.
ஆனாலும், அவர் விடாமல்... எதிர்பதிவு போட்டு ஆப்பை தேடி வந்து அமர்வதை போல... ஏதோ ஊருக்கும் உலகுக்கும் சொல்லப்பட்ட நல்ல கருத்தை நான் மட்டுறுத்தியது போல படம் காட்டி இருக்கார்.
அதனால்... விதி யாரை விட்டது... என்று... அவரின் அந்த 'பொன்னான(?)சிந்தனைகளை உள்ளடக்கிய' அந்த சற்று நீளமான இரண்டாம் மெயிலையும்... மூன்று (துண்டுகளாக) பின்னூட்டங்களாக வெளியிட்டுள்ளேன் சகோ.ஹைதர் அலி. (பார்க்க:பின்னூட்டங்கள் 42,43,44)
அதே பழைய பல்லவி பாடி இருக்கும் இதற்கும் பதில் சொல்லி என்னத்த ஆகப்போகுது என்று சலிப்புதான் வருகிறது.
இருந்தும்... அதில் உள்ள ஒரே 'புதிய' விஷயத்திற்கு பதில் சொல்லிவிட்டேன்... (பார்க்க:பின்னூட்டம்-45).
@ஹைதர் அலி
தொடர்ச்சி....
விவாதத்திற்கு வந்தால் விவாதிக்க தயாராகத்தான் உள்ளோம்.
ஆனால்... ஒரே ஓரு கண்டிஷன்...
வைக்கப்படும் வாதங்களில் அர்த்தம் இருக்க வேண்டும். அரைத்த மாவையே அரைக்கும் பொருளற்ற வறட்டு மொக்கைகளாக வாதங்கள் அமையக்கூடாது. அவ்வளவுதான்.
இவர்களை பற்றி 'எப்போதோ' நாம் நன்கு விளங்கிக்கொண்டாலும்...
இன்னும் சிந்தை தெளியலாம் என்ற நம்பிக்கை இருக்கப்போயத்தான் இவர்களுக்காக துவா கேட்கிறோம்...
ஆனாலும், மீண்டும் 'அதே பழைய குருடி கதவை திறடி' கதை என்றால்... சலிப்பே மிஞ்சுகிறது.
ஆனாலும்,
அப்போதும் மீண்டும் இவர்களின் சிந்தை தெளிவுக்காக துவா கேட்போம்...
'ஹிதாயத்' எப்போது வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் இறைநாடினால் கிடைக்கலாம்
என்ற நம்பிக்கை நமக்கு எப்போதும் உண்டு என்பதால்... ஆக்கப்பூர்வமான வாதங்களுக்கு நம் வாசல் என்றுமே வரவேற்புடன் திறந்தேதான் உள்ளது சகோ.ஹைதர் அலி.
மேலும் விளக்கம்:
சகோ.செங்கொடி...
//பதிலளிக்க முடியாத கேள்விகளை எழுப்பினால் அதை
வெளியிடாமல் கள்ள மவுனம் சாதிப்பது,//
---இப்படி உங்கள் முதுகில் நீங்களே பெருமையாக தட்டிக்கொடுத்துக் கொள்வதுதான் உங்களின் பெருத்த பின்னடைவுக்கு காரணமா..?
///அம்பலப்படுத்தப்ட்டு
விட்டால் கோபத்தை வெளிப்படுத்துவது, தூற்றுவது. நம்புங்கள்....
இவர்கள் நேர்மையாளர்கள் தான்.///---இரண்டு வருடங்களுக்கு பின்னரும் நீங்கள் இன்னும் அதே பழைய செங்கொடிதான். உங்கள் நோக்கம் அறிந்து நொந்து கொள்வதைத்தவிர வேறென்ன எனக்கு பலன் தந்தீர்கள் எனக்கு..?
வந்தமைக்கு மிக்க நன்றி சகோ.செங்கொடி.
----------------------------------
பிளாக்கரில் டெக்னிக் பதிவுகள் எழுதுவோர் கவனத்திற்கு..:
'பின்னூட்டம் போடுவது எப்படி' என்று யாராவது ஒரு பதிவு போடுங்க சகோ..! ஒரு சீனியர் பதிவருக்கு தேவைப்படுகிறது..!
அஸ்ஸலாமு அலைக்கும்
//பிளாக்கரில் டெக்னிக் பதிவுகள் எழுதுவோர் கவனத்திற்கு..:
'பின்னூட்டம் போடுவது எப்படி' என்று யாராவது ஒரு பதிவு போடுங்க சகோ..! ஒரு சீனியர் பதிவருக்கு தேவைப்படுகிறது..! //
பின்னூட்டவாதியே இப்படி கேட்கலாமா?
:) :) :)
@ Abdul Basit
அலைக்கும் ஸலாம் வரஹ்...
நான் என்ன எனக்காகவா கேட்டேன்..?
பிளாக்கரில் டெக்னிக் பதிவுகள் எழுதும் 'பிளாக்கர் நண்பனே' இப்படி கைவிரித்தால்...!?!
பாவம் பின்னூட்டம் போடத்தெரியாதோர்... நிலை... பரிதாபம்... அல்லவா..?
கொஞ்சம் மனசு வைக்க கூடாதா சகோ..?
தேவையான சவுக்கடி.
@ சகோ. கார்பன் கூட்டாளி
//தேவையான சவுக்கடி.//
ஆனாலும், இன்னும் சிலருக்கு புரிய மாட்டேங்குதே சகோ..!?
அலைக்கும் ஸலாம் வரஹ்...
சரியான சவுக்கடி
பாராட்டுக்கள் சகோ
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!