அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Wednesday, March 30, 2011

16 நீ...ண்டநேரம் Bluetooth Headset/Cordless Phone உபயோகிக்கிறீர்களா சகோ..?

"உங்களிடம் Cell Phone இருந்தால் அவசியம் இதை படியுங்கள் சகோ." என்ற என் சென்ற பதிவில், செல்ஃபோனை காதோடு ஒட்டிவைத்தவாறு நீ.....ண்டநேரம் (1/4, 1/2, 1 மணிநேரம் என்று) மணிக்கணக்கில் அடிக்கடி செல்ஃபோனில் பேசுவோருக்கு என்னென்ன ஆபத்துக்கள் வரலாம் என்று பார்த்தோம். அதில் இருந்து என்னென்ன வழிகளில் அவர்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும் பார்த்தோம். அதில், Speaker-phone, Ear-phone, Landline-phone ஆகியன உபயோகித்தல் நலன் பயக்கும்  என்றும் குறிப்பிட்டு இருந்தேன்.

விஷயம் என்னவென்றால், Bluetooth Earphone உபயோகிக்கலாமா..? Cordless Landline Phone உபயோகப் படுத்தலாமா என்று கேள்விகள் பிறந்துள்ளன. இரண்டுமே  Bluetooth wireless technolgy வகையை சேர்ந்த மிகவும் அரிய மகத்தான சிறப்பான அறிவியல் கண்டுபிடிப்புகள்தான். இவற்றையும் செல்ஃபோன் போல காதோடு ஒட்டிவைத்தவாறு நீ.....ண்டநேரம் மணிக்கணக்கில் அடிக்கடி பேசுவதற்காக உபயோகிக்கும்போது அதே ஆபத்துக்கள் வரலாம் என்கின்றனர் சிலர், வராது என்கின்றனர் பலர்..! எது சரி..? ஏனெனில், இவை தருவதும் அதே microwave radiation தான் என்கின்றனர் சிலர்..! இல்லை... இல்லை... பாதிப்பு இல்லாத Radio Waves-களைக்கொண்டு ப்ளூடூத் இயர்/ஹெட்ஃபோன்கள்  செயல்படுவதால் எவ்வித பாதிப்பும் இல்லை என்கின்றனர் பலர்..! எது சரி..? தற்போது ப்ளுடூத் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் அலைகள் எவை..? இதுதான் இப்போது எல்லா குழப்பத்துக்கும் முக்கிய பிரச்சினை. 

ஆகவே, Microwave என்றால் எவை..?
Radio wave என்றால் எவை..?
இதற்கு விடை தெரிந்தால் அனைத்தும் புரிந்துவிடும் அல்லவா..?

Microwave :  இவை 300 MHz (0.3GHz) முதல் 300 GHz வரை frequency கொண்ட சக்திமிக்க மின்காந்த அலைகள். 

Radio Wave :   இவை 3 KHz  (0.003 MHz) முதல்  300 GHz  வரை (Microwave அலைக்கற்றைகளையும் உள்ளடக்கிய...) frequency கொண்ட சக்தி குன்றிய மற்றும் சக்தி மிக்க மின்காந்த அலைகள்.  அதாவது, Radio wave-ன் மற்றொரு கடைக்கோடியில் இருப்பவைதான் சக்திமிக்க Microwave..!


ஆக, நாம் இங்கே அறிந்து கொள்ளவேண்டிய முக்கிய விஷயம், நமது Bluetooth  Headset (Speaker+Mic) / Blutooth Earphone (only speakers for mp3) அல்லது Cordless land line Phone முதலியன எந்த frequency-ல் செயல்படுகிறன என்பதைத்தான்..! அது சக்தி குன்றிய ரேடியோ frequency-ல் இருந்தால் ஒரு பிரச்சினையும் இல்லை.  பிரச்சனைக்குறிய Microwave Frequency-ல் இருந்துவிடக்கூடாது..! சரிதானே..?

 
2G Cell phones இயங்கும் frequency : 900 MHz (0.9 GHz)  to 1.8 GHz (1800 MHz)...! 
3G, 4G Cell phones இயங்கும் frequency : 1.8 GHz (1800 MHz)  to 2.4 GHz (2400 MHz)...! 
WLAN, WiFi, WiMax இயங்கும் frequency : 2.1 GHz (2100 MHz) to 2.4 GHz (2400 MHz)...!  

Bluetooth Headset இயங்கும் frequency : 900 MHz (0.9 GHz)  to 2.4 GHz (2400 MHz)..!
 
ஆக, ப்ளூடூத் கருவிகள் பயன்படுத்தும் ரேடியோ அலைகள்... மைக்ரோவேவ் frequency-ல் விழுகின்றன.  இருந்தாலும், செல்ஃபோன் அளவுக்கு இது பாதிக்காது என்கின்றனர் வல்லுனர்கள். காரணம்... இங்கே Bluetooth Receiver-க்கும் Bluetooth Transmitter-க்கும் உள்ள தூரம், செல்ஃபோன் டவருக்கும் (Base Station) செல்ஃபோனின் சிக்னல் Receiver-க்கும் உள்ள தூரம் போன்றது அல்ல என்பதால் அதில் அந்த அளவுக்கு சக்தி இருக்காது என்கின்றனர்.

ஒவ்வொரு செல்ஃபோனுக்கும் ஒரு Specific Absorption Rate (SAR) வெளியிட்டது போல, ப்ளூடூத் கருவிகளுக்கு அதன் உற்பத்தியாளர்களோ அரசுகளோ இதற்கான SAR அளவை ஏனோ சொல்ல வில்லை..! இது ஏன் என்று "கவனிக்கப்படவேண்டிய" ஒரு விஷயம்..!
 
ப்ளூடூத்  கருவிகளிலேயே மூன்று வகை சக்தி கொண்டவை உள்ளன. சில தளங்களில் இயங்கும் பெரிய அலுவலக கட்டிடங்களில் பல கணிணி மற்றும் பிரிண்டர்களை இணைக்க,  நீண்டதூர செயல்பாட்டிற்கு அதிக சக்தி கொண்ட class 1 ப்ளூடூத் கருவிகளும், சாதரணமாக நமது செல்ஃபோன் ஹெட் செட்டுக்களில் class 2 வகை  ப்ளூடூத் கருவிகளும் உபயோகிக்கப் படுகின்றன.  கணிணி திரையிலிருந்து ஒரு மீட்டருக்குள் உபயோகிக்கப்படும், ப்ளூடூத் மவுஸ், ப்ளூடூத் கீ போர்ட் போன்றவைக்கு class 3 வகை  ப்ளூடூத் கருவிகளும் உபயோகிக்கப்படுகின்றன.   


இதில், நமது ப்ளூடூத் ஹெட் செட்டுகள், ஒருவேளை class 1 வகையினை சார்ந்ததாகவே வைத்துக்கொண்டாலும், அது செல்ஃபோன் (250mW-2W) தரும் பாதிப்புக்களில் சராசரியாக பத்தில் ஒரு மடங்குதான் தருகிறதாம். எனில், நாம் செல்ஃபோனுக்காக உபயோகிக்கும் class 2 வகை  ப்ளூடூத் கருவிகள், class 1 வகையைவிட மேலே உள்ள அட்டவணைப்படி 40 மடங்கு தீங்கு குறைவு. எனில், செல்ஃபோன் தரும் தீங்கைவிட class 2 வகை ப்ளூடூத் கருவிகளின் தீங்கு...  நானூறு மடங்கு குறைவு..! அப்பாடா..! இனி இதை உபயோகிப்பவர்கள் தான் முடிவு செய்து கொள்ளவேண்டும். செல்ஃபோனை காதில் வைத்து பேசுவோரை பொறுத்தமட்டில் இது எவ்வளவோ தேவலாம்தானே..?

அதேநேரம், Cordless Phone-ஐ நீண்ட நேரம் பயன்படுத்தவேண்டாம். அவசரத்துக்கு வந்த அழைப்பை  உட்கார்ந்திருந்தவாறே உடனே ஏற்றுக்கொண்டு சுருக்கமாய் பேசிவிட்டு வைக்கலாம். தொடர்ந்து நீண்டநேரம் பேசவேண்டுமானால், அலுப்பு பார்க்கமால கொஞ்சம் எழுந்து சிறிது தூரம் வீட்டில் நடந்து சென்று landline-க்கு மாறிவிடுவதே உடலுக்கும் மூளை நலனுக்கும் ஆரோக்கியம் என்று அறியமுடிகிறது.

'இந்த ப்ளூடூத் தொழில்நுட்பம் எப்படி செயல்படுகிறது' என்றால்... அருகருகே உள்ள... மொபைல், லேப்டாப், டெஸ்க்டாப், டிஜிட்டல் கேமரா, பிரிண்டர்கள், டிஜிடல் ஆடியோ பிளேயர், டிஜிடல் வீடியோ பிளேயர்... இப்படி சில மின்னணு சாதனங்களுக்கு இடையே வயர்கள், கேபிள்கள் என்று எந்தவித இணைப்பும் இல்லாமல் செய்திகள், புகைப்படங்கள், பாடல்கள், ஒலி/ஒளிக்காட்சிகள், கோப்புகள் போன்ற எந்த தகவல்களையும் பரிமாற்றம் செய்ய உதவும் ஒரு வயர்லெஸ் டெக்னாலஜிதான் நம்முடைய நவீனயுகத்தின் மற்றுமொரு மகத்தான கண்டுபிடிப்பான இந்த ப்ளுடூத் டெக்னாலஜி..! நமக்கு வேலைகளை மிகவும் எளிதாக்குகின்றன.


­­
ப்ளுடூத் மூலம் தகவல் பரிமாற்றம் செய்வது என்பது மிக எளிதான காரியம் என்பதாலும், வயர் தொல்லை இல்லை என்பதாலும் இது செல்ஃபோனின் இயர்ஃபோனிலும், லேண்ட்லைன் ஃபோனில் கார்ட்(வயர்)லஸ் ஃபோனாகவும் சுலபமாக உருமாறி விட்டது. லேட்டஸ்டாக Car steering kit மூலம் காரை ஒட்டிக்கொண்டே... அதேநேரம்  பேசிக்கொண்டும் செல்லாம்..!

Bluetooth Earpiece மூலம் mp3 ஆடியோ மட்டும் கேட்பவர்களுக்கு ஒரு விஷயம் : --
இது ஒரு ப்ளூடூத் ரிசீவர் மட்டும்தான். காரணம், இதில் Mic இல்லாததால்... இதில் Bluetooth Headset அளவுக்கு பாதிப்பு இருக்காது. ஆனால், பாதி(!)பாதிப்பு உண்டு எனலாம். Bluetooth Headset-ல் Mic-ம் இருப்பதால், ப்ளூடூத் ரிசீவர் & ப்ளூடூத் டிரான்ஸ்மிட்டராகவும் இது செயல்படுவதை கவனிக்கவும். டபுள் ஆக்டிவ்..!

பதிவின் இறுதியாக... நம் தலைக்கு ஏற்படும் இந்த செல்ஃபோன் கதிர்வீச்சு பாதிப்பை கிட்டத்தட்ட 100% குறைக்க தற்போது நவீன கண்டுபிடிப்பு ஒன்று வந்துள்ளது. சாதாரன Earphone மூலம் கூட சிறிதளவு வெப்பபாதிப்பு  உலோக(wire) கம்பிகளின் conduction heat மூலம் காதுக்கு சென்று பின் வெப்பக்கதிர்வீச்சு பாதிப்பும் இருப்பதால், அதையும் இயன்றவரை முற்றிலும் இல்லாமல் ஆக்குவதற்காக, "Air-tube Headset" அல்லது "Bluetube Headset" என்று அழைக்கப்படுகின்ற (கீழே காட்டப்பட்டுள்ள) இந்த சாதனத்தை இனி வரக்கூடிய அனைத்து செல்ஃபோன் பெட்டிகளிலும் பார்க்கலாம். அந்தஅளவுக்கு இதற்கு இப்போது வரவேற்பு இருக்கிறது.

http://products.mercola.com/blue-tube-headset/
http://www.wisegeek.com/do-bluetooth-headsets-cause-cancer.htm
http://www.emfnews.org/are_bluetooths_headsets_safe.html
http://ezinearticles.com/?Will-Bluetooth-Headphones-Cause-Health-Problems?&id=4550489
http://www.emfblues.com/Bluetooth-EMF-Safety-Health-Effects-Dangers-Bluetooth-Headsets-Dangerous-Radiation.html


-----------------------------------------------------------------------------------------------------------------------

16 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...