'இது'...இப்படி இருந்தால்...இதில், "இது" என்பது 'எது' என்றால் அதுதான் நீங்கள் இங்கே பார்ப்பது..! சகல வசதிகளுடன் கூடிய பெரிய கட்டிடம். இது ஆஸ்ட்ரியாவில் கட்டப்பட்டு உள்ளது..!
இதில், யார் யார் எல்லாம் வசிக்கலாம்? அரசு யாரை அனுமதிக்கிறதோ அவர்கள் மட்டுமே இங்கே தங்கலாம். வெறும் 205 பேருக்கு மட்டுமே இங்கே தங்க அனுமதியாம். அதனால், இங்கே இடம் பெற கடும் போட்டி. வெயிட்டிங் லிஸ்டில் நின்று ஆவலுடன்..!
மிக அழகிய முறையில் நிறைய பொருட்ச்செலவுடன் கண்கவர் கண்ணாடி மாளிகையாக அனுபவித்து கட்டி இருக்கிறார்கள். மிக உன்னத வேலைப்பாடுகளுடன் நவீன முறையில் அதி நுட்ப கட்டடக்கலையுடன் நிறைய பொறியியல் வல்லுனர்களின் சிந்தனையின் ஒரு செயல் வடிவமாக இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
இரு கண்ணாடிச்சுவர் கட்டிடங்களுக்கு இடையே ஒரு கண்ணாடி பாலம் கட்டி, அங்கு நின்ற வாறே நகரை சுற்றிப்பார்த்து ரசிக்கும் ஒரு நல்ல சுகமான வசதியை இங்கே தங்கி இருப்பவர்கள் அணுபவிப்பார்கள்.
இதன் உள்ளே மிகரம்மியமான முறையில் சோபா செட்டுகள், நாற்காலிகள், மேசைகள் எல்லாம் போட்டு... குரோட்டன்ஸ் செடித்தொட்டிகள் வைத்து மிக நேர்த்தியுடன் வடிவமைத்துள்ளார்கள்.
இங்கே தங்கி இருப்பவர்கள் வெளியே அவ்வப்போது 'வாக்கிங்' போக-வர... மிக நல்ல பாதைகள், இதமான சூழல், என்று மனதை கொள்ளை கொள்ளும் இடமாக இது உள்ளது.
இக்கட்டிடத்தில் மிக உயர் ரக அரங்கம் ஒன்றும் உள்ளது. மிகச்சிறந்த பிரபல பேச்சாளர்கள் இவர்கள் இருக்கும் இடம் தேடி வந்து அவ்வப்போது இவர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்கள். இதே மேடையின் பின்புற திரையில் அவ்வப்போது திரைப்படங்களும் திரையிடப்படும். மிக அதிநவீன ஒலி, ஒளி அமைப்புகளுடன் கூடிய சிறந்த அரங்கம்.
மிகவும் உயர்தரமான ஒளி விளக்குகளுடன் அமைந்த அதிநவீன கூடைப்பந்தாட்ட உள்ளரங்கு மைதானம் ஒன்றும் இங்கே தங்கி இருப்பவர்கள் தங்கள் விளையாட்டுத்திறனை வளர்த்துக்கொள்ள வசதியாக உள்ளது.
அந்த விளையாட்டு பிடிக்க வில்லை என்றால் தனக்குப்பிடித்த நண்பருடன் இங்கே தங்கி இருப்பவர்கள் மேசை டென்னிஸ் ஆடலாம். போரடித்தால் அங்கேயே அமர்ந்து தொலைகாட்சி நிகழ்ச்சிகளையும் பார்க்கலாம்.
நம் உடல்நலனில் அக்கறை கொண்டு உடலை கட்டுமஸ்தானாக வைத்திருக்க, தசைகளை நன்கு முறுக்கேற்ற மிகவும் உயர்தர அதிநவீன 'ஜிம்' ஒன்றும் இங்கே தங்கி இருப்பவர்களுக்காக உள்ளது.
இப்படியெல்லாம் விளையாடி, உடற்பயிற்சி செய்துவிட்டு ஓய்வாக பால்கனியில் அமர்ந்து சூடாய் காஃபி சாப்பிட்டிக்கொண்டே தன்முன்னே தெரியும் இயற்கையான சூழலில் மெய்மறந்து இதுபோல இங்கே தங்கி இருப்பவர்கள் அமர்ந்திருக்கலாம்.
மிக நல்ல தரமான உயர்தர உணவுகள் தரப்படுகின்றன. அரட்டை அடித்துக்கொண்டே உண்டு மகிழலாம். பொதுவாய் இங்கு இல்லாமல் வெளியே இருப்போர், கடைகளில் வாங்கும் சரக்குகள், காய்கறிகள், பழங்கள் இவை பழசாக இருக்கக்கூடும். ஆனால், இங்கே அதற்கு வேலையே இல்லை. மிக மிக ஃப்ரஷ் அயிட்டங்களே இங்கே வாங்கப்படுகின்றன. சமைக்கப்படுகின்றன. அதனால் உடல் ஆரோக்கியம் மற்றும் ருசி எல்லாமே அமோகம்..!
அப்படியே சாப்பிட்டுவிட்டு இந்த காரிடாரில் காலாற நடந்து வந்தால்... அப்படி நடந்து வரும்போது கால் வலித்தால் உடனே சற்றுநேரம் அமர்ந்து தம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஆங்காங்கே மிக அழகிய உள்ளம் கவரும் மெத்தை திண்ணைகள். அதுவும் போரடித்தால் அவரவர் தம் அறைக்கு சென்று நன்றாய் தூங்கலாம்.
சரி... இங்கே தங்கி இருப்பவர்களின் மனதைக்கவர்ந்தவர்களுக்கு இங்கே இடமில்லாத நிலையில் அவர்களுடன் எப்படி கொஞ்சி குலாவி படுத்துறங்கி மகிழ்ந்திருப்பது? அதற்கும் இந்த நிர்வாகம், விரும்பும்போது விரும்பியவர்களுடன் 'மகிழ்ச்சியாக' அவரவர் அறைகளிலேயே இவர்கள் இருக்க அனுமதி அளிக்கிறது..!
பொதுவாக இங்கே தங்கி இருக்கும் ஒவ்வொருவருக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கே ஒரு தனி அறைக்கு வேண்டிய அனைத்து அத்தியாவசிய வசதிகளும் உள்ளன. அறையை நன்றாக நோட்டமிடுங்கள். ஒன்று உங்கள் கண்ணை உறுத்தலாம். அறைக்கதவு..! அது ஏன் வெளியில் உள்ளவர்கள் உள்ளே பார்க்ககூடியதாய் உள்ளது..? மேலும் அந்த கண்ணாடி கதவின் வெளிப்புறம் எதற்கு கம்பி ஜன்னல்..? ஏதோ ஒன்று உங்களுக்கு தோன்றுகிறதா..?
அது சரிங்க... இந்த இடத்தின் பெயர் என்னங்க.. என்கிறீர்களா...? நீங்களே படிங்களேன்...! ஆஸ்திரிய மொழியில்... " Justizzentrum Leoben "... என்றால் ...(திருட்டு, கற்பழிப்பு போன்ற) "சிறு குற்றங்களை(!?) செய்த குற்றவாளிகளுக்கான சிறை" என்று அர்த்தமாம்..! ஆக,இது ஒரு ஜெயில்..! நம்புங்க சகோ.! குற்றவாளிகளுக்கான கட்டிடம்தான் நீங்கள் இதுவரை பார்த்தது.!
...a 5 STAR grade 'JAIL'(?) of Austria...!!!
ஆஸ்திரியாவில் உள்ள இந்த சிறையில், பெருங்குற்றம் செய்தவர்களுக்கு இடம் இல்லை..! 'இது'...---அதாவது சிறை, இப்படி இருந்தால், 'அது '...அதாங்க...(திருட்டு, கற்பழிப்பு போன்ற) சிறுகுற்றங்கள்(!?) கூடுமா..? குறையுமா..? 'குற்றத்துக்கு தண்டனை குறைந்தாலே குற்றங்கள் கூடும்' எனும்போது, குற்றம் செய்தவருக்கு சொகுசு வாழ்க்கை எனும் வெகுமதியையும் அளித்தால் என்னாகும்..? இதை பார்ப்பவர்களுக்கு, 'அங்கே போய் நாமும் தங்கவேண்டும்' என்ற ஆசை வருமா? வராதா?
இன்றைய உலகில் பொதுவாக அனைத்து குற்றங்களும் மிக அதிகமாக நடக்கும் நாடு அமெரிக்கா என்றாலும் ஆஸ்திரியாவிற்கு இதில் 22-ம் இடம்தான்..! கொலை, மாந்திரிகம்(?), பிறர் மீது தாக்குதல், child abuse போன்ற 'பெருங்குற்றங்கள்' ஆஸ்திரியாவில் குறைவு. ஏனெனில், இவைக்கு அதிக ஆண்டுகள் சிறை..! அதிக ஆண்டுகள் சிறை தண்டனை பெருகிறவர்களுக்கு இந்த "சொகுசு மாளிகையில்" தங்க அனுமதி இல்லை என்பதால்..! அதேநேரம், திருட்டு மற்றும் பாலியல் வன்புணர்வு என இரண்டிலும் உலகில் ஆஸ்திரியா இரண்டாமிடம்..! காரணம், இவை இரண்டுக்கும் மிக குறைந்த தண்டனை..! அதனால், இந்த சொகுசு மாளிகையில் தங்கவும் அனுமதி..! (குற்றம் முதல் முறை என்றால்... தண்டனை ஏதும் இல்லை..!)
இந்த காரணத்தினால்தான், இன்றைய உலகில் திருட்டு, பாலியல் வல்லுறவு ஆகியன மிக அதிகமாக நடக்கும்(இரண்டாம்)நாடு ஆஸ்திரியா..! ஆனாலும், இதேபோன்ற சிறைச்சாலைதான் மற்ற பெரியகுற்றங்களை செய்த குற்றவாளிகளுக்கும் தரப்பட வேண்டும் என்று இந்நாட்டின் 'மனிதஉரிமை'(?!) அமைப்புகளும் பல அரசியல் கட்சிகளும் கூறி வருகின்றன. அதாவது, பாதிக்கப்பட்ட நல்லவனின் வரிப்பணத்திலேயே, அவனை அப்பாதிப்புக்கு உட்படுத்திய குற்றவாளிக்கு சொகுசு வாழ்க்கை..! பலே..! ஆஸ்திரிய அரசும், நீதிமன்றமும் இக்கருத்துக்களை அங்கீகரிக்கும் மனநிலைக்கு வந்துவிட்டதாகவே தெரிகிறது.
எனில், சிறைச்சாலை என்பது... இப்படி சொகுசாக இருந்தால் இனி சந்தேகமேயின்றி ஆஸ்திரியாதான் குற்றங்களுக்கு வருங்கால நம்பர் ஒன்..!
ஆஸ்திரிய நீதிமன்றத்தின் ஒரு சில வினோத தீர்ப்புகள் உங்கள் பார்வைக்கு..!
12 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு கொண்ட 26 வயது காமுகன் ஒருவனை கோர்ட் விடுதலை செய்தது..! காரணம், அவன் 'அச்சிறுமிக்கு வயது 16-க்கு மேல் இருக்கும் என்று நினைத்து வன்புணர்வு செய்துவிட்டேன்' என்று கூறியதால்..! (இல்லாவிட்டால் child abuse என்று பெருங்குற்றம் ஆகிவிடுமே..!)
சிறைவாசிகள் விரும்பியவாறு நீலப்படங்கள் பார்க்க அனுமதி அளித்து தீர்ப்பு கூறியது கோர்ட்.
தன்னை பாலியல் வன்புணர்வு செய்த, அதற்காக ஏற்கனவே தண்டனை பெற்ற கொடூர குற்றவாளியைப்பற்றி ஊடகத்துக்கு பேட்டி அளித்தது கண்டு கோபமடைந்தவன் சிறையிலிருந்தவாறே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தான். அவனுடைய மானம்(!?) பாதிக்கப்பட்டதற்காக அப்பெண்ணுக்கு 200 யூரோ தண்டத்தொகை கட்டுமாறு கோர்ட் தீர்ப்பளித்தது. இந்த மண்ணாய்ப்போக வேண்டிய "மானம் மிக்கவனுக்கு"(?) இது, ஆஸ்திரிய கோர்ட் அளித்த, இவனுடைய, 21-வது கற்பழிப்பு குற்றத்திற்கான தண்டனையாம்...!!!!!!!!!!!!!!!!!!!!!
திருட்டுக்கு தண்டணையாக திருடியவரின் கையை வெட்டச்சொல்கிறது இஸ்லாம். "கையா, திருட்டா... எது முக்கியம்...?" என்று திருடர்கள் யோசிக்கும்போது, திருட்டு தானாக ஒழிந்துவிடும். இரண்டு லட்சம் கோடி ரூபாய் ஊழல் எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை..! 'கை' -- 'விலைமதிக்க முடியாதது' என்று திருடர்கள் முடிவெடுத்தால்..!
பாலியல் வல்லுறவு செய்தவனுக்கு மரணதண்டனை அளிக்கச்சொல்கிறது இஸ்லாம். "உயிரா... மனஇச்சையா... எது முக்கியம்...?" என்று காமகொடூரன்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் அதுதான் பெண்களுக்கான உண்மையான மகளிர் தினம்..!
"கைவெட்டு, தலைவெட்டு இதெல்லாம் மனித உரிமைக்கு எதிரானது அல்லவா..?" , "குற்றவாளிகள்தான் மனிதர்கள். அவர்களுக்குத்தான் மனித உரிமையில் முன்னுரிமைகள்"---முற்றிலும் இவை நமது தவறான புரிதல்..!
மாறாக,
பாதிக்கப்பட்டவர்களுக்கே மனித உரிமையில் முன்னுரிமை அளிக்கப்படல் வேண்டும். குற்றம் செய்யாதவர்கள்தான் மனிதர்கள். அவர்களுக்குத்தான் மனித உரிமைகள். அவர்களுக்கே அனைய்ய்ய்ய்ய்ய்த்து உரிமைகளிலும் முன்னுரிமைகள்..!---இதுவே மிகச்சரியான சரியான புரிதல்..!
23 ...பின்னூட்டங்கள்..:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
மாஷா அல்லாஹ்
இந்த பதிவ அந்த மாதிரி எழுதுவீங்கன்னு நான் எந்த மாதிரியும் நினைத்து பார்க்க வில்லை
திடீர் திருப்பம் எப்புடி இந்த மாதிரி யோசிக்கிறீங்க
சகோதரர் முஹம்மது ஆஷிக்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
அப்படி போடுங்க அருவாள. இஸ்லாம் பிராக்டிகலான தீர்வை தருகின்றது. இது இன்னும் சிலருக்கு புரியாதது ஆச்சர்யமளிக்கின்றது.
(நீங்கள் கொடுத்த லிங்கில்) குற்றங்கள் அதிமாக நடைபெறும் நாடுகளின் பட்டியலில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருக்கக்கூடிய முதல் மூன்று நாடுகளான இந்தோனேசியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் மிஸ்ஸிங். இது யோசிக்கப்பட வேண்டிய முதல் பாய்ன்ட் (இத்தனைக்கும் அவை அதிகம் மக்கள் தொகையை கொண்டவை).
சவூதி அரேபியா 48வது இடத்தில் இருப்பது யோசிக்க வேண்டிய இரண்டாவது பாய்ன்ட்.
இவை அனைத்திற்கும் மேலாக, கற்பழிப்பு குற்றங்களில் எந்த ஒரு முஸ்லிம் நாடும் இடம் பெறவில்லை. இது நன்கு யோசிக்கப்பட வேண்டிய மூன்றாவது பாய்ன்ட்.
இந்த முடிவுகளை எப்படி எடுத்து கொள்ள வேண்டும்? புரிய வேண்டியவர்களுக்கு புரியுமா...
கடைசியாக, குற்றங்கள் அதிமாக நடைபெறும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவிற்கும், பிரிட்டனுக்கும் முதல் இரண்டு இடங்கள். இதுலயும் ஜோடி போட்டு தான் இருக்காங்க....இது யோசிக்கப்பட வேண்டிய இல்லை இல்லை ஆராயப்பட வேண்டிய கடைசி பாய்ன்ட்...
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
இவை அனைத்தும் உரம் போட்டு வளர்கின்றார்கள். அவர்களுடைய கலாசாரத்தில் இது ஒரு சாதாரண விஷயம்.
இது போன்ற செய்திகளை படித்து விட்டு ஆகா இஸ்லாத்தின் குற்றவியல் தண்டணைகள் ஸுப்ஹானல்லாஹ் எவ்வளவு அருமையானது என இப்போது புரிகின்றது.....தொடரட்டும் உங்கள் பணி நன்றி...
மாஷா அல்லாஹ் அருமையான ஆக்கம் சகோ...
குற்றங்கள் அதிமாக நடைபெறும் நாடுகளின் பட்டியல் குறித்த லிங்க்-கிற்கு கோடி நன்றிகள்...
எதர்க்கெடுத்தாலும் முஸ்லிம் நாடுகளை குறை கூறும் மடயர்களுக்கு இனியாவாது விளங்கட்டும்.....
அஸ்ஸலாமு அழைக்கும் சகோ
கற்பழிப்பு சிறுகுற்றமா ?
தப்பு பண்ணுகிறவர்களுக்கு இவ்வளவு சொகுசா.
ஏன் பண்ண மாட்டார்கள்.
சகோ சொன்ன மாதிரி
//அவர்களுடைய கலாசாரத்தில் இது ஒரு சாதாரண விஷயம்.//
அஸ்ஸலாமு அலைக்கும்!
இஸ்லமிய குற்றவியல் சட்டங்களை குறை கூறுவோர் சிந்திக்க வேண்டிய பதிவு. சிறந்த பதிவை தந்ததற்க்கு வாழ்த்துக்கள் சகோ.
மாஷா அல்லாஹ், ஒரு சாதரண ஃபார்வார்டு மெயில் போல் தோற்றமளித்தாலும், சொல்ல வேண்டிய சரியான கருத்தை இதோடு இனைத்தி சொல்லி இருப்பது அழகு. அதிலும் இஸ்லாம் சொல்லக்கூடிய எல்லோராலும் பெரிதும் எதிர்க்கக்கூடிய குற்றவியல் தண்டனை பற்றி அழகாக ஆணித்தரமாக விளக்கிய சகோ அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரியட்டும்.
//'கை' -- 'விலைமதிக்க முடியாதது' என்று திருடர்கள் முடிவெடுத்தால்..//
எப்பூடி இப்படில்லாம், பார்கிறவுங்க நீங்க அதிமுக ஆளுன்னு நினைச்சுக்க போறாங்க
கட்டிடத்தைப் பார்த்துக் கொண்டே வரும்போது, இவ்வளவு கண்ணாடியாக இருக்கிறதே, குளிரூட்ட மின்சாரம் அதிகம் செலவாகுமே என்று யோசித்துக் கொண்டே வந்தேன். அதைப் பற்றித்தான் எழுதுவீர்கள் என்று நினைத்தேன். ஆனால்...
நீங்கள் சொல்றது யோசிக்க வேண்டிய விஷயம் - நமக்கல்ல; குற்றவாளிகளுக்காகப் பரிந்து பேசுகிறவர்களுக்கு. ஊதுற சங்கை ஊதி வைப்போம்!!
@ஹைதர் அலிஅலைக்கும் ஸலாம் வரஹ்.., //அந்த மாதிரி... எந்த மாதிரி... இந்த மாதிரி...//---கலக்குறீங்க சகோ.... என் வயிற்றில் புளியை...!
இதன்மூலம், இது இன்னொரு 'அலிபாபா விவகாரமாகி' விடக்கூடாதே..! ஏதோ பார்த்து செய்யுங்க... சகோ.
@Aashiq Ahamedஅலைக்கும் ஸலாம் வரஹ்..,
//இஸ்லாம் பிராக்டிகலான தீர்வை தருகின்றது. இது இன்னும் சிலருக்கு புரியாதது ஆச்சர்யமளிக்கின்றது.// ---இது எல்லாருக்கும் புரிகிறது,
அத்வானி உட்பட..! ஆனால், சகோ ஆஷிக் அஹ்மத், ஒருநேரம் பாராட்டிவிட்டு, இன்னொருநேரம் சுயநலன் கருதி எதிர்க்கிறார்கள். அதுதான் புரியவில்லை.
//சவூதி அரேபியா 48வது இடத்தில் இருப்பது யோசிக்க வேண்டிய இரண்டாவது பாய்ன்ட்.//---காரணம் இருக்கிறது. இங்கே சவுதிகள், சாலை விதிகளை மதித்து பொறுமையாக விபத்துக்கள் இன்றி கார் ஓட்டுவது மிக அரிது. ஒரு சிறு உரசல் என்றாலும் பெரிய விபத்தாக பதியப்படுகிறது. ஸ்பீட் லிமிட் 120 Km/Hr என்றாலும் பொதுவாக 140-160 Km/Hr-ல் தான் பறக்கின்றனர். இதனால் தினமும் ஏகப்பட்ட விபத்துக்கள். இதில், பல கொலைக்குற்றம் என்றுகூட பதிவு செய்யப்படுகிறது.
அடுத்து, நம்மூரில் இருந்து செல்லும் ஹஜ் பயணிகள் 'கசகசா' என்ற ஒரு சமையல் பொருளை எடுத்துச்சென்றாலும் கூட, 'போதை மருந்து கடத்தல் குற்றவாளியாக்கப்பட்டு' மரணதண்டனை வரை செல்கிறார்கள். இதனால், பொதுவாக பிரிஸ்கிரிப்ஷன் இல்லாத மாத்திரைகளை இந்தியாவிலிருந்து வாங்கி வரச்சொன்னால், நான் யாருக்கும் வாங்கி எடுத்துச்செல்வது இல்லை. அதில் ஆல்கஹால் (இருமல் மருந்து..?) என்று ஒரு சிறு சதவீதம் இருந்தாலும் என்பாடு தொலைஞ்சுது.
இதுபோல, பிற நாடுகளில் பதிவு செய்ய அருகதையே இல்லாத பல குற்றங்களும் இங்கே பதிவாவதால்தான் 48வது இடத்தில் சவூதி இருக்க வேண்டும்.
@இளம் தூயவன்//இவை அனைத்தும் உரம் போட்டு வளர்கின்றார்கள்.//
---'ஆணாதிக்கம்' எனும் உரம். Nude Sun bath on the beach is 'பெண்ணுரிமை' என்போர், ஒரு பெண் தான் விரும்பி ஹிஜாப் அணிவதற்கான ரியல் பெண்ணுரிமைக்கு தடை விதித்து சட்டம் போடுகிறார்கள்..!
//அவர்களுடைய கலாசாரத்தில் இது ஒரு சாதாரண விஷயம்.//---செம 'கலாச்சார காவலர்கள்தான்..!'
மேற்குலகத்தினர் பண்டைய (ஜாஹிலியா)காட்டுமிராண்டி காலத்துக்கு திரும்புகின்றனர் போல தெரிகின்றது..! ஹ்ம்ம்... சகோ.இளம்தூயவன், அவர்களாவது, ஆடை கண்டுபிடிக்கப்படாத அக்காலத்தில் இலை/தழைகளையாவது உடையாக அணிந்திருந்தார்களே..!
@Sadikeen///இஸ்லாத்தின் குற்றவியல் தண்டணைகள் ஸுப்ஹானல்லாஹ் எவ்வளவு அருமையானது என இப்போது புரிகின்றது.....///--அல்ஹம்துலில்லாஹ். மிக்க நன்றி சகோ.
@ஆயிஷா அபுல்.அலைக்கும் ஸலாம் வரஹ்...
//கற்பழிப்பு சிறுகுற்றமா? தப்பு பண்ணுகிறவர்களுக்கு இவ்வளவு சொகுசா.ஏன் பண்ண மாட்டார்கள்.//---முதல்முறை மாட்டிக்கொண்டு நிரூபிக்கப்பட்டுவிட்டால் தண்டனையே இல்லையாம்... முதல்முறை என்பதால்..!
இன்றைய உலகின் நவீன 'பெண்ணுரிமை காவலாளி(?)களிகளின்' சட்டங்கள் எல்லாம்... இப்படித்தான் பண்டையகால நாகரிகம் கூட இல்லாமல் இருக்கின்றன, சகோ ஆயிஷா அபுல்.
@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்... இனியாவது அவர்கள் சிந்திக்கட்டும்... சகோ சுவனப்பிரியன். மிக்க நன்றி.
@ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) தங்கள் துவாவிற்கு மிக்க நன்றி சகோ.அபுநிஹான்.
ஆனால்...
//எப்பூடி இப்படில்லாம், பார்கிறவுங்க நீங்க அதிமுக ஆளுன்னு நினைச்சுக்க போறாங்க//---அடடா...இவங்க பண்ணாத ஊழலா...?
ஏன்... ஏன் இப்படி எல்லாம்..கண்டுபிடிக்கிறீங்க..? என்னமோ சகோ. பக்கத்து ஊர்க்காரர் நீங்க... ஏதோ போனாப்போவுதுன்னு இறக்கப்பட்டு நம்மையும் கவனிச்சுக்குங்க...
@முஸ்லிம் அல்ஹம்துலில்லாஹ்... நன்றி.சகோ.ஹசன்.
இதென்ன திடீரென்று இன்னொரு பிளாக்?
@ஹுஸைனம்மா நன்மையை ஏவியும் தீமையை எதிர்த்தும் எழுதியாச்சு...//ஊதுற சங்கை ஊதி வைப்போம்!!//...எவரேனும் திருந்தினால் உலகத்திலும் நன்மை. இல்லையேல்.. இறைநாடினால் மறுமையில் நன்மை நிச்சயம்..! அம்புட்டுத்தான் சகோ.ஹுசைனம்மா...!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
"அப்படி இப்படினு" எது எப்படி இருந்தாலும் தரமான கருத்துக்களுக்காக. பின்னூட்டவாதியின் தளத்திற்கு தாராளமாக வருகை தரலாம் அது எப்டீங்க... இதே மாதிரி நியுஸ்லாம் தேடி எடுக்கிறிங்க... ஜஸாகல்லாஹ் கைரன்., எப்படியோ தமிழ் பேசும் நல்லுலகத்திற்கு இஸ்லாம் மீதான தவறான எண்ணம் நீங்கி தரமான செய்திகள் கிடைத்தால் சரி.,
இந்த கட்டிடத்தை ஏற்கனவே மெயிலில் பார்த்திருக்கிறேன். அதை விட உங்கள் பதிவு அருமை. இது எல்லோரையும் சென்றடையனும், கண்வரை காது வரை அல்ல, மனிதம் வரை. அப்பொழுதுதான் இஸ்லாத்தின் மேல் இகழ்பவர்கள் புரிந்து கொள்வார்கள். நல்ல பதிவு சகோ.
@G u l a m அலைக்கும் ஸலாம் வரஹ்... தங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி சகோ.குலாம். ஜஸாகல்லாஹ் கைரன்.
@அன்னு//இது எல்லோரையும் சென்றடையனும், கண்வரை காது வரை அல்ல, மனிதம் வரை//---மிக்க நன்றி சகோ.அன்னு. புரிந்தவர்கள் ஹிதாயத் பெற இறைவனிடம் இறைஞ்சுவோம்.
சிறப்பான பதிவு ,
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!