அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Sunday, March 3, 2013

18 சவூதியில் எனது பாதுகாப்புக்காக, இப்பதிவு.


அன்று ஒருநாள் என் நிறுவனத்தில் பணியில் இருந்த சமயம், ஒரு SMS வந்தது சகோ. சவூதி அரசு தொலை தொடர்பு நிறுவனமான STC யின் ALJAWAL - SAWA சிம் நிறுவனத்திலிருந்துதான், அந்த SMS..!

அதில்... 
//
Dear Customer
Thank you for choosing STC and we confirm that your SAWA 25 - ???-25 ???? ????? Phone # 509133278 has been successfully registered.
//
என்று இருந்தது.

குழம்பினேன். நான் இங்கே எப்போ சிம் தேர்ந்தெடுத்தேன்..? யாரோ ஏதோ ஒரு SIM நம்பர் பதிவு செய்தால், அந்த குறுந்தகவல் எனக்கேன் வருகிறது..? 'எப்படியோ எங்கோ தவறு நடந்துள்ளதே...' என்று யோசித்துக்கொண்டு இருக்கும் போதே... அடுத்த SMS... வந்தது. அதிலும் அதே வாசகங்கள்... ஆனால், வேறு ஒரு SIM எண் பதிவாகிய தகவல்..! உடனே, இன்னொரு SMS, அதை தொடர்ந்து இன்னொன்று... மேலும் இன்னொன்று... இப்படியே 7 SMS வந்தது..! ஏழு சிம் நம்பர்கள் பதிவான குறுந்தகவல்கள் ஒன்றன் பின் ஒன்றாக எனக்கு ஏன் வர வேண்டும்..? அப்படியெனில் அவை எனது பெயரில் எனக்கே தெரியாமல் பதிவு செய்யப்படுகின்றவையா..? உடனே... மொபைல் கஸ்டமர் கேரிடம் பேசலாம் என்றால்... பணிகளுக்கு இடையில் பல முறை முயன்றும் தொடர்பு பெற முடியவில்லை.

பின்னர், சிந்தித்த போது பல பின்னணி விஷயங்களை யூகித்தேன். 
அதாவது, கடந்த  எட்டு வருடம் முன்னர், நான் சவூதி வந்த போது, இகாமா (Saudi Govt's photo id card cum work permit) இருந்தால் மட்டுமே ஒருவர் சிம் வாங்க முடியும். அதற்கான மனு வாங்க, பூர்த்தி செய்த மனுவை கொடுக்க நீண்ட வரிசைகள். 200 ரியால் கட்ட வேண்டும். அது சிம்மில் டாக் டைம் ஆக கிரெடிட் ஆகும். சிம் வாங்க அடுத்த நாள் வர வேண்டும். அதற்கு அடுத்த நாள் ஆக்டிவேட் ஆகும்... இப்படி சிம் வாங்குவதற்கு ஏக கெடுபிடிகள்.

இன்னொரு தனியார் நிறுவனம் (Mobily) போட்டிக்கு வந்த உடன், அதுவரை இருந்த மோனோபோலி தாண்டவம் எல்லாம் போய், காலப்போக்கில் அனைத்தும் எளிதானது. '25 ரியால் ஒரு சிம்' என்று குறைந்தது. இகாமா இல்லாமலேயே எல்லா கடைகளிலும் சிம்கள் சல்லிசாக கிடைக்க ஆரம்பித்தன. இதனால் புதிய பிரச்சினைகள் அரசுக்கு ஏற்பட்டன. மிரட்டல் / ஆபாச கால் வந்த சிம் யார் வைத்திருந்தார்கள். சிம்மின் சொந்தக்காரன் யார், போன்ற... சிம் கார்ட் சார்ந்த குற்றங்களுக்கு, சட்ட மீறல்களுக்கு உரியவர்களை கண்டு பிடிக்க முடியாதபடிக்கு ஏக குளறுபடி. 

இந்நிலையில் அரசு மீண்டும் கெடுபிடி போட ஆரம்பித்தது. அது... கடந்த சில மாதங்கள் முன்னர், இகாமா காட்டித்தான் எந்த சிம்மையும் வாங்க முடியும் என்று ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ். அப்புறம், இதுவரை யார் யார் எல்லாம் இகாமா காட்டாமல் கடைகளில் வாங்கி தற்போது உபயோகித்து வருகிறார்களோ அவர்கள் உடனடியாக தங்கள் சிம்மை இகாமா காட்டி பதிவு செய்து கொள்ள வேண்டும். இல்லையேல் குறிப்பிட்ட கெடுவுக்கு பின்னர் அதுபோன்ற unregistered SIM cards கணக்கு முடக்கப்பட்டு விடும்..! எனவே, எல்லாரும் தங்கள் சிம்மை பதிந்தார்கள். நான் எனது இரண்டு சிம்களையும் வெகுகாலம் முன்னரே பதிந்துதான் வைத்திருந்தேன். As you know, I'm a simple law abiding citizen of world..!

அப்படி எல்லாரும் பதிந்த பின்னர், இவ்வருடம் முதல் அடுத்த அதிரடி சட்டம் போடப்பட்டது. 


இனி மொபைல் ரீ சார்ஜ் பண்ண வேண்டும் என்றாலோ, சார்ஜ் ட்ரான்ஸ்ஃபர் பண்ண வேண்டும் என்றாலோ ரீ சார்ஜ் கார்ட் நம்பருடன் ஸ்டார் சேர்த்து அந்த சிம்முக்கு உரிய இகாமா நம்பரையும் இணைத்து அடிக்க வேண்டும்..! அப்போது தான் சிம் அக்கவுன்ட் ரீ-சார்ஜ் ஆகும்..! சிம் விட்டு சிம் பேலன்ஸ் ட்ரான்ஸ்பர் ஆகும்..! இது, ரீ சார்ஜ் கார்டின் வேலிடிட்டி, போனஸ், கிதாஃப் பாய்ன்ட் போன்ற ஆஃபரை அனுபவித்துக்கொண்டு, அதை பல சிறு ரீ சார்ஜாக உடைத்து பலருக்கும் SMS இல் சிம் டு சிம் ரீ சார்ஜ் ட்ரான்ஸ்பர் பண்ணி இலாபம் பார்க்கும் சைடு பிசினெஸ் செய்வோரை கட்டுப்படுத்த..!

ஆக, இகாமா நம்பர் போட்டால்தான் ரீ சார்ஜ் அல்லது ட்ரான்ஸ்பர் கூட பண்ண முடியும் என்றால்... இப்போது என்னாகும்..? STC - சாவா நிறுவன குறிக்கோளுக்கு எதிராக இந்த வியாபாரத்தை செய்து கஸ்டமருக்கு போக வேண்டிய ஆஃபரை தமதாக்கி இலாப பிசினஸ் பார்ப்போரை இகாமா நம்பர் வைத்து சுலபமாக பிடித்து விசாரித்து விடலாம்.

இந்த பின்னணியில்தான், எனக்கு வந்த அந்த ஏழு SMS களும் முக்கியத்துவம் பெறுகின்றன. யார் ஒருவரோ/சிலரோ இகாமா இல்லாமல் எனது இகாமாவில் ஏழு சிம் வாங்கி இருக்க வேண்டும். அல்லது, ஏழு சிம்கள் தவறுதலாக எனது இகாமாவில் பதிய பட்டு இருக்க வேண்டும். அதெப்படி, எனது இகாமா என்னிடம் இருக்க... பதிய முடியும்..? ஊழலா..? திருட்டுத்தனமா..? அந்த ஏழு சிம்கள் செய்யும் ஏதேனும் தீய குற்றங்களுக்கு (சப்போஸ் அப்படி செய்தால்) நான் பொறுப்பேற்க வேண்டி வருமோ..? என்னைத்தானே வந்து பிடிப்பார்கள்..?

உடனே, உஷார் ஆனேன்..! ஜுபைல் நகர் சென்று (என் இருப்பிடத்தில் இருந்து சுமார் 15 km) STC அலுவலகத்தில் விபரம் சொல்லி, எனது இரு எண்கள் தவிர்த்து மீதி அனைத்து ஏழு சிம் எண்களையும் எனது இகாமாவில் இருந்து பதிவு நீக்கம் செய்ய சொன்னேன். அந்த அரபிக்கார சவூதி அலுவலர் எனது இகாமாவை ஒரு காபி எடுத்துக்கொண்டு அதில் எனது இரு எண்களை எழுத சொன்னார். பின்னர் மற்றவை அனைத்தும் நீக்கப்பட்டு விட்டது என்றார். நன்றி சொல்லி வந்து விட்டேன்.

இருந்தாலும்... 'நீக்கி விட்டார்களா' என்று எப்படி அறிவது..? சில நாட்களாக உறுதி செய்து கொள்ளாமல் நிம்மதி இல்லை என்றானது. எனவே, நெட்டில் தேடியபோது... தகவல் கிடைத்தது. 

நமது இகாமாவில் எத்தனை சிம் எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று பார்க்க... 9988 என்ற எண்ணை 902 என்ற STC-SAWA எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும். இலவசம்..!

அனுப்பினேன். உடனே, பதில் வந்தது..! அதிர்ந்தேன்..! அதே 7 எண்கள் அப்படியே இருந்தன. பதிவு நீக்கம் செய்யப்படவில்லை..! இரண்டு தடவை நீக்கிட்டீங்களா ன்னு கேட்ட போதும்... மண்டையை மண்டையை ஆட்டினாரே அந்த அலுவலர்..! எனில், இதில் அலுவலர்களுக்கே பங்கு இருக்குமோ என்று இப்போது ஒரு டவுட்..! எனில், இது ஊழல் ஆயிற்றே..! 

எனவே, மேற்படி விபரத்தை என்னுடம் பணியாற்றும் சக சவூதியிடம் சொல்ல, "அஜ்னபி (வெளிநாட்டுக்காரர்) என்பதால் 'அலிபாபா வேலை' செய்கிறார்களா..? சவூதியிடம் இப்படி செய்தால் என்னாகும் தெரியுமா..?" என்று அவர் கடுப்பாகி... 'உடனே இதை போலீசில் சொல்லி இதற்கு யார் காரணம் என்று கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வைக்க வேண்டும்; ஊழலை அனுமதிக்க முடியாது' என்றார்.

நான், 'அதெல்லாம் எனக்கு இப்போது அவசரமில்லை. ஏனெனில், எனது நோக்கம், அந்த 7 எண்கள் உடனே நீக்கப்பட வேண்டும் எனபது தானே அன்றி... ஊழல் குற்றவாளியை துப்பறிய வேண்டும் என்பதல்ல' என்றேன். 

மேலும், 'யாரோ வாங்கிய 7 சிம்கள், அவரின் இகாமாவில் பதிவாவதற்கு பதில், தவறுதலாக கூட எனது இகாமாவில் நம்பர் டைப்பிங் எர்ரர் மூலம் பதிவாகி இருக்கலாம். எனவே, நாம் STC மேலாளருக்கு ஒரு கடிதம் எழுதி நடவடிக்கை எடுக்க வைப்போமே' என்றேன்.

'அதுவும் நல்ல முடிவுதான்' என்று, உடனே நான் ஆங்கிலத்தில் சொல்ல அவரே அரபியில் எனக்கான ஒரு கடிதம் எழுதினார். 


இதை இன்ஷாஅல்லாஹ் நாளை சென்று... STC அலுவலக மேலாளரிடம் தரலாம் என்று உள்ளேன்.

நான் அவரிடம் சொன்ன அதன் ஆங்கில மூலம். (ஏறக்குறைய)

In the name of Allaah, the most beneficent and the most merciful.

To : The Manager, STC -Sawa, Jubail.

Peace be upon you with God's mercy and blessings.

I, Mohamed Ashik Habib Mohamed, Iqama number # 2213067800, Indian, working in SWCC Al-Jubail, a customer of STC-Sawa recently came to know (from 9988 SMS to 902) that, there are 7 more unknown SIM numbers, apart from my own 2 registered SIM numbers (0557350246 & 0508281682)  have been registered wrongly by mistake on my Iqama number which numbers are no way connected to me. I request you to De-register and delete those 7 SIM numbers from my Iqama. 

The list of those 7 SIM numbers to be removed are as follows:
1----------0509133278
2----------0509132623 
3----------0509131520 
4----------0509132038 
5----------0509129327 
6----------0509130662 
7----------0509130728

Two days after receiving 7 SMS for SIM Registering in few minutes, i visited Jubail STC - Sawa office on 25-2-2013 and clearly explained the matter and the above request to the customer care employee by words. After working in system, he told me those 7 numbers were removed from my Iqama. But, even after a week i find those 7 SIM numbers are still on my Iqama. Please, kindly De-register them.

Thanking you,
Yours faithfully,
Mohamed Ashik Habib Mohamed.

நீக்குகிறார்களோ... இல்லையோ, அல்லது நீக்கும் முன்னர், இனி இங்கே ஏதும் அதனால் எனக்கு பிரச்சினை என்று வந்தால், 'அப்போவே இது பத்தி சொல்லியிருக்கேன் பாருங்க' என்று இதை எனது பாதுகாப்புக்காக ஒருசாட்சி போல பகிர்ந்துள்ளேன் என்பது முக்கிய காரணம் ஆயினும், இதே போல பாதிக்கப்பட்டால் வேறு எவருக்கேனும் இப்பதிவு உதவக்கூடும், அல்லது இது விஷயத்தில் தொடர்புடையோருக்கு விழிப்புணர்வு ஊட்டுமே... அதற்காகவும்தான்..!

18 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...