ஓர் ஆணும் ஒரு பெண்ணும் பரஸ்பர சம்மதத்துடன் தமக்குள் நடத்தும் உடலுறவுக்கான (Consensual Sex) வயது வரம்பை, 18-ல் இருந்து 16 ஆக குறைக்கும் விபச்சாரத்துக்கான புதிய சட்டத்துக்கு, நேற்று மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டதாம்..!
'குழந்தை விபச்சார ஆதரவு சட்டம்' (?) |
'மைனர் விபச்சாரத்துக்கான(?) இந்த புதிய மேஜர் சட்ட திருத்தம்(!) ஏன் வந்தது' என்பதற்கு ஒரு பின்னணி உள்ளது.
சமீபத்தில், டெல்லியில் ஓடும் பேருந்தில் ஒரு மருத்துவ மாணவியை கொடூரமாக பாலியல் வல்லுறவு கொண்டு பின்னர் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி, அப்பெண் உயிர் கொலையில் முடிந்ததை தொடர்ந்து, அதில் ஈடுபட்ட ஐவர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவன் 17 வயது ஆன 'மைனர்' என்பதால் அவனை தண்டிக்க முடியாமல் இருந்தது..!
எனவே, பாலியல் வன்கொடுமைக்கு எதிரான தண்டனையை கடுமையாக்கும் அவசர சட்டமொன்றை மத்திய அரசு கொண்டு வந்தது. பல தரப்பில் இந்த சட்டம் குறித்து கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன. ஒருவழியாக ஒருமித்த முடிவு எட்டப்பட்டு, புதிய சட்டத்திற்கு அமைச்சர்கள் குழு ஒப்புதல் வழங்கியது.
இந்த மசோதாவின் முக்கிய அம்சமான, பரஸ்பர சம்மதத்துடன் நடைபெறும் பாலியல் உடலுறவுக்கான வயது வரம்பை 18-ல் இருந்து 16 ஆக குறைக்கும் அம்சத்தில்தான், பல சிக்கல் உள்ளது..! 16 வயது மைனர்கள் இனி மேஜர்கள். அவர்கள் செய்யும் பாலியல் வல்லுறவு அட்டூழியத்துக்கு கடும் தண்டனை தேவைதான்.
ஆனால், அதோடு நிற்காமல்...
'பெண் விரும்பாவிட்டால்தான்... அது பாலியல் வல்லுறவு..! விரும்பிவிட்டால்...? அது பரஸ்பர சம்மத உடலுறவு..!'
'எனில், இதற்கான வயது வரம்பையும் குறைக்கத்தானே வேண்டும்'
...என்பது பல அறிவு ஜீவிகளின்(?) ஆர்கியூமென்ட்..!
இதன்படி, பரஸ்பர ஒப்புதலின் பேரில் உடலுறவு கொள்வதற்கான... அதாவது விபச்சாரத்துக்கான வயது வரம்பு இனி 16 வயதுக்கு குறைகிறது. 'இதனால், இவ்வயதுடைய பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு மென்மேலும் அதிகரிக்கும்' என்று... பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. நியாயமான எதிர்ப்பு தான்..!
ஆனால், இதற்கு எதிர் வாதமாக... இதன்மூலம், 'பொய்யான கற்பழிப்பு புகார்களை தடுக்க முடியும்' (?!) என்பது, வயது வரம்பை குறைக்க வேண்டும் என்பவர்களின் வாதமாக இருந்தது..! அடப்பாவமே..!
இதுபோன்ற அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த பின்னர்... முடிவில், உடலுறவு வயது வரம்பை 16 ஆக குறைக்கும் முடிவு, சட்ட திருத்த மசோதாவில் ஏற்கப்பட்டது. அதேபோல், மற்றொரு சர்ச்சைக்குரிய அம்சமான ‘பாலியல் பலாத்காரம்' என்ற பொதுவான வார்த்தைக்கு பதிலாக, 'கற்பழிப்பு' என்ற வார்த்தையை மசோதாவில் சேர்ப்பது குறித்தும் உடன்பாடு ஏற்பட்டது..!
இந்த சட்ட மசோதா, வரும் திங்கட்கிழமையன்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட இருக்கிறது.
இச்சட்டத்தில் என்னவெல்லாம் ஓட்டைகள் உள்ளன என்று பார்ப்போம்..! 'கற்பழிப்பு' என்ற வார்த்தை... ஏதோ பெண்ணுக்கு மட்டும் கற்பு என்பது போல சொல்லப்படும் ஆணாதிக்க வார்த்தை அது..! ஒரு ஆண் பாலியல் வல்லுறவு கொண்டால்... அங்கே ஆண் தான் கற்பிழக்கிறான்..! அப்புறம், திருமண உறவு இன்றி பரஸ்பர சம்மதத்தின் பேரில் இருவரும் கள்ள உடலுறவு கொண்டால்... இருவருமே ஒரு சேர கற்பிழக்கின்றனர்..! 'கற்பழிப்பாம்'... ஹூம்... இதற்கு சாத்தியமே இல்லை..! என்ன புரிதலோ..!
சரி, இதை விட அடுத்த பெரிய ஓட்டை என்ன என்றால்... குழந்தை தொழிலாளர்... பால்ய விவாகம்... சிறுவர் சீர்த்திருத்த பள்ளி... என்று பலவற்றுக்கு... மேஜர் வயது 18 என்று ஐநாவில் ஒப்பந்தம் போட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இனி இதெல்லாம் என்னாகுமோ தெரியவில்லை..!
அப்புறம் இதை விட இன்னொரு மிகப்பெரிய ஓட்டை ஒன்று இச்சட்டத்தில் உள்ளது.
அதாவது... தற்போது... வீட்டை விட்டு... ஸாரி.... ஒரு மேல் நிலைப்பள்ளி காதல் ஜோடி ஒன்று... பள்ளிக்கூடத்தை விட்டு ஓடி வந்து... மாலையும் கழுத்துமாக... பேனாவும் கையுமாக... எந்த ரிஜிஸ்டர் ஆஃபீஸ் முன்னால் திருமணம் செய்ய எண்ணி நின்றாலும்... ஆணின் வயது 21 ம், பெண்ணின் வயது 18 ம் ஆவணமாக அவர்களிடம் இருந்தால் தான்... பதிவு திருமணம் நடத்திவைக்க பதிவாளர் பதிவு புத்தகத்தை திறப்பார்..! அதாவது... இந்திய சட்டப்படி... ஆணுக்கு 21 ம் பெண்ணுக்கு 18 ம் பூர்த்தி ஆனால்தான் "சட்டப்படி" அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடியும்..!
இனி...?
16 வயது இருந்தாலே போதுமாம்... பரஸ்பர சம்மதத்தின் பேரில் சட்டப்படி உடலுறவு கொள்ளலாமாம்..! விபச்சாரம் பண்ணலாமாம்..! ஆனால்... அதே சட்டப்படி திருமணம் மட்டும் இவர்கள் பண்ண முடியாதாம்..! விபச்சாரம் செய்யும் போது மேஜர்கள்... கல்யாணம் என்றால் மைனர்கள்..! அடப்பாவிகளா..! என்னய்யா சட்டம் இது..?
'16 வயதில் திருமணம் செய்து கொள்ளலாம்' என்றல்லவா முதலில் முன்பக்க முகப்புக்கதவு சட்ட திருத்தத்தை செய்ய வேண்டும்..? அதற்கு பிறகு அல்லவா... உங்கள் வசதிக்காக... 'கள்ள உறவுக்கும்', 'விபச்சாரத்துக்கும்' கொள்ளை புற கதவு திறக்கும், இந்த அபச்சார சட்டத்தினை போட வேண்டும்..!?
பாராளுமன்றத்தில் உட்காந்து கொண்டு இவர்கள் என்ன வேலை செய்கிறார்கள் என்றுதான் எனக்கு புரியவில்லை..! நமது நன்மைக்காக அறிவோடு சட்டம் இயற்றுவார்கள் என்று நம்பி நாமும் வாழ்கிறோம்..! ஹூம்ம்ம்ம்..!
இறைவா..! இனி, ப்ளஸ் ஒன் ப்ளஸ் டூ மாணவர்களை எல்லாம் நீ தான் காப்பற்ற வேண்டும்..!
உடல் அளவில் திருமண வயதை எட்டி 16 வயதில் பெற்றோரால் திருமணம் செய்வித்தால்... அதை 'குழந்தை திருமணம்' என்று கூறி எதிர்ப்போர்தான்... இப்போது, 'குழந்தை விபச்சார ஆதரவு சட்டம்' கொண்டு வருகிறார்கள்..!
சகோஸ்..!
நாம் வாழும் இக்காலத்தில் மானக்கேடான அனைத்து வாயில்களும் சட்டப்பூர்வமாகவே திறந்துவிடப்படுகின்றன. ஷைத்தான் தனது சூழ்ச்சியால் தனது பாதையை அவனது நண்பர்களுக்கு மிகவும் எளிதாக்கிவிட்டான். அவனை பின்பற்ற பாவிகளும் மோசடிக்காரர்களும் அதிகரிக்க தொடங்கிவிட்டனர்.
'பெண்விடுதலை' 'பெண்ணுரிமை' எனும் வஞ்சக பெயரில்... ஆண்களின் வக்கிரத்துக்கு இறையாக... பெண்களின் அரைநிர்வாணமும், அட்ஜஸ்ட்மெண்டும் எங்கும் பெருகிவிட்டது. கண்களுக்கு கவர்ச்சியும், தீயபார்வைகளும் நீக்கமற ஆண்களுக்கு எங்கும் நிரம்பிவிட்டது. ஆண் பெண் உடலளவில் ஒன்றாகக்கலப்பது சங்கோஜமின்றி எங்கும் சகஜமாகிவிட்டது.
பச்சையான பேச்சுக்களும், மஞ்சள் பத்திரிக்கைகளும், நீலப்படங்களும், சிகப்பு விளக்கு விடுதிகளும் படித்த மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுவிட்டன. இதனை சுகிக்க கிராமத்தவர்களும் நகரங்களுக்கு பயணம் செய்வது அதிகரித்து விட்டது.
பாவப் பொருட்களின் வியாபார நிறுவனங்கள் மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டன. ஆண்களின் கற்பிழப்பும், பெண்களின் கற்புபிழைப்பும் சாதாரணமாகிவிட்டன. இதன் விபச்சாரவிளைவான 'சிசுக்கொலைகளும்', 'குப்பைத்தொட்டி குழந்தைகளும்' மலிந்துவிட்டன.
நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள். நிச்சயமாக அது மானக்கேடானதாக இருக்கிறது. மேலும் அது (மனிதகுலத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும்) வழியால் மிகக்கெட்டது. (அல்குர்ஆன் 17:32)
============================
பிற்சேர்க்கை..!
திங்கள் கிழமை மாலை..!
சம்மதத்துடன் கூடிய உடலுறவுக்கான வயதை 18-லிருந்து 16-ஆக குறைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட்டு விட்டது..! பல்வேறு கட்சிகளின் கடும் எதிர்ப்பைத்தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது..! At last a Good news..! பட்ட பின்னர் திருந்தினாலும்...Thanks Central Govt..! Thanks for all who opposed this anti-social law..! அல்ஹம்துலில்லாஹ்..! சொல்லப்போனால் 18 என்ற சட்டமும் கூட தவறுதான்..! ஒரு பையன் 18 வயசில் சட்டப்படி கல்யாணம் செய்ய முடியாது..! 21 இல்தான் சட்டப்படி கல்யாணம் செய்ய முடியும். ஆனால்... 18 லேயே அவன் விபச்சாரம் செய்ய சட்டப்பூர்வ அங்கீகாரம் முன்னாடியே உள்ளது..! அதை 16 ஆக்கும் முடிவை மட்டுமே வாபஸ் பெற்றுள்ளது அரசு..! இதெல்லாம்.... என்ன கோமாளித்தன சட்டமோ..!
============================
பிற்சேர்க்கை..!
திங்கள் கிழமை மாலை..!
சம்மதத்துடன் கூடிய உடலுறவுக்கான வயதை 18-லிருந்து 16-ஆக குறைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட்டு விட்டது..! பல்வேறு கட்சிகளின் கடும் எதிர்ப்பைத்தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது..! At last a Good news..! பட்ட பின்னர் திருந்தினாலும்...Thanks Central Govt..! Thanks for all who opposed this anti-social law..! அல்ஹம்துலில்லாஹ்..! சொல்லப்போனால் 18 என்ற சட்டமும் கூட தவறுதான்..! ஒரு பையன் 18 வயசில் சட்டப்படி கல்யாணம் செய்ய முடியாது..! 21 இல்தான் சட்டப்படி கல்யாணம் செய்ய முடியும். ஆனால்... 18 லேயே அவன் விபச்சாரம் செய்ய சட்டப்பூர்வ அங்கீகாரம் முன்னாடியே உள்ளது..! அதை 16 ஆக்கும் முடிவை மட்டுமே வாபஸ் பெற்றுள்ளது அரசு..! இதெல்லாம்.... என்ன கோமாளித்தன சட்டமோ..!
12 ...பின்னூட்டங்கள்..:
வெளங்கிடும்... :(
சலாம்,
ரொம்ப கஷ்டம் :( :(
வேடிக்கை வினோதம் - வாழ்க பாரதம்
இந்நேரம் - தலையங்கம் .
மண உறவுக்கு அப்பால் , கணவன் மனைவி எனும் உரிமை இன்றி ஆண் பெண் இருபாலரும் பரஸ்பர சம்மதத்துடன் உடலுறவு கொள்ளுவது இந்தியாவில் சட்டப்படி குற்றமில்லை.
இப்படி உடலுறவு கொள்ள இப்போது நடைமுறையிலுள்ள வயது வரம்பை 18 வயதிலிருந்து 16 ஆகக் குறைக்கும் புதிய சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
பல்வேறு கருத்து வேறுபாடுகளுக்கிடையே இந்த மசோதாவுக்கு அமைச்சர் குழு அனுமதி அளித்ததற்கு , பொய்யான பாலியல் புகார்கள் குறையும் என்ற முறையற்ற ஒரு காரணம் முன்வைக்கப் படுகிறது.
ஆனால் பொய்யான பாலியல் புகார்கள் குறையுமா என்பது தான் கேள்விக் குறி. இந்திய அரசு அவசர கதியில் ஒப்புதல் வழங்கிய இந்த மசோதாவால் பல்வேறு சமுதாயச் சீர்கேடுகள் ஏற்படுவதோடு இந்தச்சட்ட மசோதா பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் வேலையும் செய்யும்.
அவசர கதியில் ஒப்புதல் தரப் பட்டுள்ள இந்த மசோதாவால் ஏற்படும் முதல் சமுதாயச் சீர்கேடு விபச்சாரத்தின் பெருக்கம். இந்திய திருமணச் சட்டப்படி ஆண்கள் குறைந்த பட்சம் 21 வயதும், பெண்கள் குறைந்த பட்சம் 18 வயதும் பூர்த்தி அடைந்திருந்தால் அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம்.
18 வயதுக்கு முன்னர் திருமணம் செய்து கொள்ளக் கூடாது. ஆனால் உடலுறவில் மட்டும் ஈடுபடலாம்.
ஒரு அரசாங்கத்தின் எதிர்காலத்தலைமுறைக்கான திட்டமிடலின் நிலை எப்படி உள்ளது?
அரசாங்கமே நீங்கள் திருமணம் செய்து கொள்வதற்கு முன்னர் உடலுறவு கொள்வதில் தவறில்லை என்று கூறி அங்கீகாரமும் வழங்குகிறது என்றால் இதை விடக் கொடுமை என்னவாக இருக்க முடியும்.
அதோடு மட்டுமல்லாமல் பாலியல் குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் இந்தச் சட்டத் திருத்த மசோதாவால் பள்ளிச் சிறுமிகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தும் ஆசிரியர்களும், திருமண ஆசை காட்டி உடலுறவு கொள்ளும் காதல்( ? ) மன்னர்களும், பேத்தி வயதில் உள்ள சிறுமிகளைக் கற்பழிக்கும் காமுகத் தாத்தாக்களும் இனி இருவர் சம்மதத்துடனேயே நடைபெற்றது எனக் கூசாமல் வழக்கு விசாரணையில் பொய் சொல்லுவர்.
ஏற்கனவே காவல்துறை அதிகாரிகளும், நீதிபதிகளும் கேட்கும் கேள்விகளால் துவண்டு போகும் பாதிக்கப் பட்டவர்கள் இது போன்ற கேவலங்களையும் சந்திக்க வேண்டுமா எனப் பயந்து புகார் கொடுக்க முன்வரவே தயங்கும் சூழ்நிலையும் ஏற்படும்.
மேலும் இதன் மூலம் விபச்சாரத்தில் ஈடுபடும் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிகையும் கணிசமாக அதிகரிக்கும். தற்போதைய நிலைப் படி சுமார் 1.2 மில்லியன் குழந்தைத் தொழிலாளர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
ஆக்கப் பூர்வமாகச் சிந்தித்தால் திருமண வயதைக் குறைப்பதே சரியான ஒன்றாக இருக்க முடியும். பாலியல் தேவை 16 வயதில் ஆரம்பிக்கிறது என்ற அரசின் வாதம் சரியெனில் திருமண வயதுக்கான குறைந்தபட்ச வயதாக 16வயதை நிர்ணயிப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? ஆரம்ப கால கட்டத்தில் திருமணச் சட்டத்தில் ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18 ஆகவும், பெண்களுக்கான குறைந்தபட்ச வயது 15 ஆகவுமே இருந்தன.
அதில் தான் திருத்தம் செய்து ஆண்களுக்கான குறைந்த பட்ச வயது 21 ஆகவும் பெண்களுக்கான திருமண வயது 18 ஆகவும் மாற்றப் பட்டது. அரசு நேர்மையைச் சொல்லி தர வேண்டுமே தவிர குறுக்கு வழியில் திருமணத்துக்கு முன் உடலுறவு வைத்துக் கொள்ளுங்கள் என்பதை வலியுறுத்தி வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழக் கூடிய தம்பதியினரிடையே ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தி விடக் கூடாது.
பரஸ்பர சம்மதத்துடன் உடலுறவு கொள்ளும் வயதை 16 ஆகக் குறைத்தால் 10 ஆம் வகுப்புப் படிக்கும் மாணவ மாணவியர் கூட சட்டப் படி பாதுகாப்பு பெற்று விடுவர். எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. 18 வயதுக்குக் குறைந்தவர்களுக்கு எங்காவது திருமணம் நடந்தால் ஓடிச் சென்று தடுக்கும் வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இனி இதற்கு என்ன செய்யப் போகிறார்கள்?
இந்தச் சட்ட மசோதாவுக்கு அனுமதி வழங்கும் முன் சமூகவியலாளர்கள் பெண்கள் அமைப்புகள் மற்றும் மனோதத்துவ நிபுணர்கள் மகப்பேறு மருத்துவர்கள் போன்றோரைக் கலந்தாலோசித்திருக்க வேண்டும். அந்த நடைமுறை மேற்கொள்ளப் பட்டதா எனத் தெரியவில்லை.
பணத்துக்காக விபச்சாரத்தில் ஈடுபடுவது தவறில்லை. தெரு, கடை வீதிகளில் நின்று கொண்டு அழைப்பதும் விபச்சாரத் தரகராக செயல்படுவதும் விபச்சார விடுதி நடத்துவதும் குற்றம்.18 வயதுக்கு முன்னர் திருமணம் செய்து கொள்வது சட்டப்படி தவறு. ஆனால் இருவர் மனமொத்து ஈடுபடும் உடலுறவு சட்டப் படி குற்றமில்லை.
வேடிக்கையாகவும் விநோதமாகவும் சட்டங்களை இயற்றுவதில் நமக்கு நிகர் நாமே தான்.
வாழ்க பாரதம்.
தலையங்கம் at www.inneram.com
.
@Abdul Basithவெளங்காமபூடும். :-(
@Aashiq Ahamedஅலைக்கும் ஸலாம்
ரொம்ப ஈஸியாக்குறாய்ங்க. :-( :-(
// வேடிக்கை வினோதம் //
அசிங்கம் அவமானம்
//வாழ்க பாரதம்.//
இனி,
நிறைய வாழும்..!
குப்பை தொட்டிகளில்
இனிஷியல் இல்லாமல்..!
Indian Law ... Always funny ...!!!
This Year 2013 Best! law ...!!! Indha offer Life time valitity ?
Vilangum...
ஸலாம் சகோ. விளக்கமாக எழுதியுள்ளீர்கள் நன்றி.
//16 வயது இருந்தாலே போதுமாம்... பரஸ்பர சம்மதத்தின் பேரில் சட்டப்படி உடலுறவு கொள்ளலாமாம்..! விபச்சாரம் பண்ணலாமாம்..! ஆனால்... அதே சட்டப்படி திருமணம் மட்டும் இவர்கள் பண்ண முடியாதாம்..! விபச்சாரம் செய்யும் போது மேஜர்கள்... கல்யாணம் என்றால் மைனர்கள்..! // :( ... இனி இதை மாற்ற பாரளுமன்றத்தில் மறுபடியும் கூடுவார்கள், பிறகு அதை மாற்ற மறுபடியும் கூடுவார்கள் இப்படியே இவர்கள் மாற்றி கொண்டே இருப்பார்கள்.
@sulthan mydeen//Always//---not always, but most of the times.
// Life time valitity//---for 2 years female, 5 years male..!
@Nizamஅலைக்கும் ஸலாம் சகோ. //இப்படியே இவர்கள் மாற்றி கொண்டே இருப்பார்கள்//---ஹா...ஹா...ஹா... அப்படின்னா, இவர்களின் தவறான புரிதலை நாம் சரியாக்க வேண்டும்..!
என்ன கருமாந்திரமோ போங்க !
இன்றைய நாட்களில் மண முறிவுக்கு காரணம் கலச்சார முறையே என்பது எனது தாழ்வான கருத்து. தொலைகாட்சி, சினிமா போன்ற ஊடகங்களால் ஈர்க்கபடும் மக்கள் அது போலவே தனது வாழ்கை முறையை மாற்றி கொள்ள முயற்சி மேற்கொள்கிறார்கள். அதன் விளைவு ஆசை, சந்தேகம் போன்ற எதிர்வினைகள். இன்னும் மணமாகாத பலரும் காதல், செக்ஸ் என தனது வாழ்க்கையை வீணாக்கி கொள்கின்றனர்.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!